ஆரவல்லி – உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்று – டெல்லியில் இருந்து தென்மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இருப்பினும், இந்த பழைய மலைகள் சட்டவிரோத சுரங்கங்களின் காரணமாக படிப்படியாக மறைந்து வருகின்றன.
2002-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆரவல்லி பகுதி முழுவதும் சுரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதித்த போதிலும், கடந்த ஆண்டில் பல சட்டவிரோத சுரங்கங்கள் இயங்கியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் உள்ள ஆரவல்லிகளின் பந்தலா மலைகளில், 2021-2022-ம் ஆண்டில் (மலையேறுபவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் செல்லாத) எட்டு மாத கால இடைவெளியில் 30 முதல் 40 அடி வரை குன்றுகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
“ஏழு முதல் எட்டு மாதங்களில், ஒரு முழு மலையும் அழிக்கப்பட்டு, தின்று பல மீட்டர்கள் பின்னால் தள்ளப்பட்டது” என்று ஆரவல்லி பச்சாவ் இயக்கத்தின் நிறுவனர் – நீலம் அலுவாலியா மற்றும் இயக்கத்தின் மற்றொரு உறுப்பினரான ஜோதி ராகவன் கூறினார்.
படிக்க :
♦ ஆரவல்லியை கூறுபோட்டு விற்கும் பா.ஜ.க !
♦ அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !
வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன், குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது ஆரவல்லி பச்சாவ் இயக்கம். கடந்த ஆண்டில் சட்டவிரோத சுரங்கம் தொடர்பான புகார்களுக்கு போலீசுத்துறை உள்ளிட்ட உள்ளூர் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இயக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த மே 23 அன்று, ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோத சுரங்கத்தை கண்காணிக்கவும் தடுக்கவும் தவறியதற்காக அரியானா மற்றும் மத்திய அரசுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டித்தது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தங்கள் பதில்களை தாக்கல் செய்யுமாறு பல அரசுத் துறைகளுக்கு உச்ச பசுமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அரியானா வனத்துறை, சுரங்கம் மற்றும் புவியியல் துறை மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை அடங்கும்.
