ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யாமல் விளையாடிக் கொண்டிருக்கும் தமிழக அரசு!

ஆன்லைன் கேம் மூலம் பலர் இறந்துவரும் நிலையிலும் நடிகர்களை கொண்டு ஆன்லைன் கேம்கள் விளம்பரம் செய்யப்படுகிறது.

0

ன்லைன் ரம்மி விளையாடியதால் ஏற்பட்ட இழப்புகளால் மாநிலம் முழுவதும் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஆன்லைன் கேம்களை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது குறித்து பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஆன்லைன் கேம் மற்றும் சூதாட்டத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து, அரசியல் கட்சித் தலைவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

முன்னதாக, ஆன்லைன் கேமிங் தொடர்பான சிக்கல்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. நீதிபதி சந்துரு கமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பித்து, ஆன்லைன் கேம்களை தடை செய்ய பரிந்துரைத்தது, ஏனெனில் இந்த விளையாட்டுகள் எந்த திறமையையும் உள்ளடக்குவதில்லை; அது போதைக்கு மட்டுமே வழிவகுக்கும் என்றது.

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தேசிய அளவில் ஆன்லைன் கேம்களுக்கு எதிரான சட்டம் இயற்றப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் 4 பேர் கொண்ட குழு பரிந்துரைத்துள்ளது.


படிக்க : உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 1


இந்தப் பின்னணியில் அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் உள்ளீடுகளைப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. “பொது மக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆன்லைன் கேமிங் சேவை வழங்குநர்கள்” ஆன்லைன் கேம்கள் குறித்த உத்தேச சட்டம் குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

பங்குதாரர்களின் ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 11, 2022 அன்று நடைபெறும் மற்றும் பிரதிநிதித்துவம் செய்ய ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு தனித்தனி நேர இடைவெளிகள் வழங்கப்படும். ஆன்லைன் சூதாட்டத்தால் இறந்த 20 பேரில், சென்னையில் ஏழு பேர்; கோவை, சேலம், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் 8 பேர் தற்கொலை செய்து கொண்டனர். திருப்பத்தூரில் நான்கு மரணங்கள்; மற்றும் வேலூர், தூத்துக்குடி மற்றும் தருமபுரியில் தலா ஒரு மரணம்.

ஆன்லைன் கேம் மூலம் பலர் இறந்துவரும் நிலையிலும் நடிகர்களை கொண்டு ஆன்லைன் கேம்கள் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆன்லைனில் பணம் கட்டி விளையாடுங்கள் உங்களுக்கு அதிக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டுகிறது டி.வி விளம்பரங்கள். பணம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பலர் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமைகளாகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்டங்கள் ஒருபோதும் திறமையை வளர்க்காது போதைக்கு அடிமையாவதை போல இந்த கேம்களுக்கு அடிமைப்படுவார்கள் என்று தமிழக அரசு அமைத்த குழுவே அறிக்கை சமர்ப்பித்துவிட்டது. ஆனால் இன்னும் ஆன்லைன் சூதாட்டங்கள் தடைசெய்யப்படவில்லை.


படிக்க : உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 2


தொலைக்காட்டிகளிலும், இணையதளங்களிலும், யூடியூப் வீடியோக்களிலும் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு திரை நடிகர்கள் விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்த விளம்பரங்களும் தடைசெய்யப்படவில்லை. தற்போகை எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கார்ப்பரேட் இலாபம் கொழிக்கும் நிறுவனங்களை கார்ப்பரேட் நல அரசு ஒருபோது ஒழிக்காது என்பதற்கு நல்ல உதாரணம் தான் இந்த நடவடிக்கை. அதாவது பிரச்சினை அதிகரித்து கொண்டுவருகிறது என்று அரசு குழுவே கூறினாலும், மக்களிடமும், ஆன்லைன் சூதாட்ட பங்குதாரர்களிடமும் கருத்து கேட்க வேண்டும் என்று நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

காவி-கார்ப்பரேட் நலனுக்காக செயல்படும் தமிழக அரசை எதிர்த்து போராட்டங்களை கட்டியமைக்காமல் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க முடியாது!

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க