பீமா கோரேகான் வழக்கு: தலோஜா சிறையில் ஒடுக்கப்படும் கவுதம் நவ்லகா!

கவுதம் நவ்லாக உட்பட சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் சமூக செயற்பாட்டாளர்களையும், முற்போக்காளர்களையும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசிடமிருந்து மீட்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

0
கவுதம் நவ்லகா கைது செய்யப்பட்டபோது...

ன்னை வீட்டுக் காவலில் வைக்கக் கோரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகா தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்வதிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகஸ்ட் 29 அன்று விலகினார் என்று பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு புனே அருகே ஒரு கிராமத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான பீமா கோரேகான் வழக்கில் நவ்லகா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். வன்முறைக்கு சதி செய்ததாக பதினாறு பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

நவி மும்பையில் உள்ள தலோஜா மத்திய சிறையில் நவ்லகா அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்து போன் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி நவ்லகா மனு தாக்கல் செய்துள்ளார். மகாராஷ்டிர அரசின் வழக்கறிஞர் சங்கீதா ஷிண்டே, அவர் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதால் கோரிக்கையை ஏற்க முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

படிக்க : நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிரந்தர மருத்துவ பிணை பெற்றார் வரவர ராவ்!

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 84 வயதான ஸ்டான் சுவாமி, சிறையில் இருந்தபோது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்த போதிலும் பலமுறை ஜாமீன் மறுக்கப்பட்டது. 70 வயதான ஆர்வலர் நவ்லகா, பழங்குடியின உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமி, ஜூலை 2021 இல் காவலில் இருந்தபோது இறந்ததை அடுத்து இந்த மனுவை தாக்கல் செய்தார்.

தலோஜா சிறையில் கழிவறைகள் அசுத்தமாக இருப்பதாகவும், சிறையில் இருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் நவ்லகா தனது மனுவில் கூறியிருந்தார். மருத்துவ உதவி மற்றும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்த நவ்லகா அளித்த மனுவை, “தவறானவை” என்று பம்பாய் உயர் நீதிமன்றம் கூறியது.

அதாவது, “மனுதாரரின் வழக்கு எந்த அளவுகோலுக்கும் பொருந்தாது. தனக்கு மருத்துவ உதவி வழங்கப்படவில்லை என்றும், சுகாதாரமற்ற சூழல் சிறைக்குள் இருக்கிறது என்றும் மனுதாரர் கூறுவது தவறானது போல் தெரிகிறது” என்று உயர்நீதிமன்றம் கூறியது.

சிஆர்பிசியின் 167வது பிரிவின் கீழ், தகுந்த வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வயது, உடல்நலம் ஆகிய காரணங்கள் அடிப்படையில் வீட்டுக் காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று நவ்லகா உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இருப்பினும் அவரது மனுவை ஏப்ரல் 26 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது பம்பாய் உயர்நீதிமன்றம். 70 வயதான ஆர்வலர் பம்பாய் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

நவ்லகாவின் மேல்முறையீட்டு மனுவின் விசாரணையில் தலைமை நீதிபதி “இந்த வழக்கு நீதிபதி பட் கொண்ட பெஞ்ச் முன் பட்டியலிடப்படக் கூடாது. இந்த வழக்கை நீதிபதி ஜோசப் பெஞ்ச் முன் பட்டியலிடுவோம்” என்று கூறினார்.

***

நவ்லாகாவின் மனு பம்பாய் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்துள்ளது. இதனை உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய எடுத்து சென்றுள்ளார்.

படிக்க : பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !

தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்டான் சுவாமிக்கு முறையாக மருத்துவம் வழங்காமல் அவரை கொன்றது சிறை துறை. அதே போல், வரவர ராவ், பேராசிரியர் சாய் பாபா, ஆனந்த் தெல்தும்டெ போன்று பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள பல முற்போக்காளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சிறையில் சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர். சமீபத்தில், 82 வயதான ஆர்வலர் பி. வரவர ராவுக்கு பலமுறை போராடியதன் விளைவாக உச்ச நீதிமன்றம் மருத்துவ ஜாமீன் வழங்கியது.

மோடி ஆட்சியில் காவி பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டு சுதந்திரமாக திரிகிறார்கள். ஆனால் உழைக்கும் மக்களுக்கான செயல்படும் முற்போக்காளர்களை சிறையில் அடைத்து ஒடுக்கி வருகிறது.

கவுதம் நவ்லாக உட்பட சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் சமூக செயற்பாட்டாளர்களையும், முற்போக்காளர்களையும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசிடமிருந்து மீட்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க