தெலுங்கானா: ரேஷன் கடையில் மோடி புகைப்படம் வைக்க சொல்லும் நிர்மலா சீத்தாராமன்!

கேஸ் விலை உயர்வை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோடியின் புகைப்படத்தை பற்றி கவலைப்படுகிறார் நிம்மி மேடம்.

0

நியாய விலை ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்காத காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 3 அன்று கடுமையாக சாடியுள்ளார்.

பாஜகவின் நாடாளுமன்ற “பிரவாஸ் யோஜனா” திட்டத்தின் ஒரு பகுதியாக காமரெட்டி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், பான்ஸ்வாடாவில் உள்ள பிர்கூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு செப்டம்பர் 2 அன்று சென்றார்.

ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை என்பதை அறிந்த அவர், மாவட்ட ஆட்சியரை அழைத்து அரிசிக்கான மானியம் வழங்குவதில் மத்திய அரசின் பங்களிப்பை சுட்டிக்காட்டி, ஏன் பிரதமரின் படத்தை வைக்கவில்லை என்று கேட்டார்.

படிக்க: உ.பி: இலவச ரேஷனை நிறுத்தி உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் யோகி அரசு!

“இவ்வளவு பெரிய தலைவரின் போட்டோவை வைக்க, உங்களுக்கு ஏன் ஆட்சேபனை? தயவு செய்து பிரதமரின் ஃப்ளெக்ஸ் கொண்டு வந்து இங்கே வைக்கவும். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோவிட்-19 இருந்தபோது, ​​ரேஷன் வாங்குவதற்கு மக்களிடம் பணம் இருக்குமா என்பது நிச்சயமற்ற நிலையில், போக்குவரத்து அல்லது சேமிப்புச் செலவு இல்லாமல் முற்றிலும் இலவசமாக ரேஷன் வழங்கப்பட்டது. ஆனால், இந்தப் பகுதியில் மட்டுமல்ல, தெலுங்கானாவிலும் பிரதமரின் ஃப்ளெக்ஸ் வைக்கச் சொன்னால், அவர்கள் அனுமதிக்கவில்லை. நம்மவர்கள் போட முயலும் போது, ​​தடுத்து நிறுத்தி, ஃப்ளெக்ஸை கிழித்து எறிந்து விடுகின்றனர்” என, மாவட்ட அதிகாரிகளிடம் நிர்மலா கூறினார்.

“நாட்டு மக்களுக்காக இந்த திட்டத்தை பிரதமர் செய்து வருகிறார். நான் இன்று சொல்கிறேன், நாளை நம்மவர்கள் பிரதமரின் ஃபிளக்ஸ் வைப்பார்கள். அதை அகற்றவோ, கிழிக்கவோ கூடாது என்பதை மாவட்ட நிர்வாகியாக நீங்கள் உறுதி செய்யவேண்டும். மக்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்த பிறகு, அவர்கள் (பாஜகவினர்) ஒரு புகைப்படத்தை வைக்கச் சொன்னால், ஏன் ஆட்சேபனை? … அவர் இலவசமாக ரேஷன் அனுப்புகிறார். இவ்வளவு பெரிய தலைவரின் போட்டோ போட உங்களுக்கு ஏன் ஆட்சேபனை? ஃப்ளெக்ஸ் இல்லாவிட்டால் நானே மீண்டும் இங்கு வருவேன்” என்று நிர்மலா கலெக்டரிடமும் மற்றவர்களிடமும் கூறினார்.

மத்திய அரசின் பங்களிப்பு ஒரு கிலோ ரேஷன் அரிசிக்கு ரூ.29 ஆக இருக்கும் போது, ​​மாநிலம் ரூ.4 மட்டுமே செலவழிக்கிறது. 2020 மார்ச்-ஏப்ரல் முதல், மாநில அரசு மற்றும் பயனாளிகள் எதையும் பங்களிக்காமல், ரூ.30-ரூ.35 விலையில் அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது என்று கூறினார் நிர்மலா.

கமாரெட்டி மாவட்டம் மற்றும் பான்ஸ்வாடா தொகுதிக்கு சென்ற செய்தபோது, ​​கலெக்டருக்கு மத்திய அமைச்சர் அளித்த உத்தரவு, மாநில அரசுக்குப் பிடிக்கவில்லை.

நிதியமைச்சர் டி ஹரிஷ் ராவ் மற்றும் சட்டமன்ற சபாநாயகர் போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் நிர்மலா சீத்தாராமனின் செயலை கண்டித்தனர். ஹரிஷ் ராவ், மத்திய அமைச்சர், கலெக்டரிடம், மோடியின் புகைப்படத்தை எடுத்துச் செல்லும்படி, விவரங்களை வழங்குவது எப்படி? கேட்பதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்றார்.

தெலுங்கானாவில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஃபிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்திய மறுநாள், செப்டம்பர் 3 அன்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவாளர்கள் எல்பிஜி சிலிண்டர்களில் பிரதமரின் புகைப்படத்தை ஒட்டினர். சமையல் சிலிண்டர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் மோடியின் புகைப்படங்களும், ஒவ்வொரு சிலிண்டரின் விலையும் ரூ.1,105 என குறிப்பிடப்பட்டிருந்தது.

படிக்க: ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க மறுக்கும் டெல்லி அரசு !

மோடி அரசு ஆட்சியில் அமரும்போது, 400 ரூபாய் இருந்த கேஸ் சிலிண்டர் விலை தற்போது 1100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கான அரசின் மானியத்தை படிப்படியாக குறைத்து முழுமையாக மானியத்தை வெட்டிவிட்டது மோடி அரசு. உழைக்கும் மக்களின் வீட்டில் எரிந்த அடுப்பில் மணல் அள்ளி போட்டுவிட்டு, நியாய விலைக்கடையில் வந்து மோடியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று சில்லரைத்தனமாக சண்டையிடுகிறார் நிர்மலா.

மக்களின் வரிப்பணத்தில் உணவு உண்ணும் நிர்மலா, தன் அப்பன் விட்டு பணத்தில் இருந்து நியாய விலை கடையில் பொருட்கள் வழங்குவது போல, திமிராக நடந்து கொள்கிறார். கேஸ் விலை உயர்வை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோடியின் புகைப்படத்தை பற்றி கவலைப்படுகிறார் நிம்மி மேடம். மோடியின் ஸ்டிக்கரை நாடுமுழுவது நீங்களே எடுத்து சென்று ஒட்டுங்கள்! மாமி! உழைக்கும் மக்கள் தங்களுக்கு தகுந்த வரவேற்பு தருவார்கள்!


சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க