.பி.யின் வினைபூரில் இஸ்லாமியர் ஒருவர் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள வினைபூரில் சுமார் ஐந்நூறு பேர் வாழ்கின்றனர். இதில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏறக்குறைய சமம். கிராமத்தில் உள்ள இந்துக்கள் பெரும்பாலும் குஜ்ஜர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பாலும் தியாகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி தாவூத் அலி தியாகி தனது வீட்டின் முன்பு கட்டிலில் ஃபோன் பேசிக்கொண்டு இருந்தபோது, இரவு பத்து மணிக்கு அங்கு தீடீரென ஏழு எட்டு பைக்குகளில் வந்த கும்பல் கத்தி, மண்வெட்டி ,உருட்டு கட்டையாலும், சைக்கிள் செயினாலும் எந்தவொரு வார்த்தையும் பேசாமல் அந்த முதியவரை சரமாரியாகத் தாக்கியது. அவர் ஃபோன் பேசிக்கொண்டிருந்த அந்த கையை உடைத்தனர். உடல் முழுவதும் சரமாரியாக அடித்த அந்தக் கும்பல், தூப்பாக்கியில் வானை நோக்கிச் சுட்டு ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோசமிட்டபடி அவரைத் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அவரைக் கூட்டிச் சென்றாலும், தியாகியால் ஒரு  வார்த்தைக் கூட பேசமுடியவில்லை. மறுநாளே அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்தத் தாக்குதலையொட்டி செப்டம்பர் 3ம் தேதி கெக்ரா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, செப்டம்பர் 5ம் தேதி தியாகி கொலை வழக்கில் நான்கு பேரைக் கைது செய்தது காவல்துறை. ஆனால் அந்த நான்கு பேரை விசாரித்த காவல்துறை தாக்கியவர்களுக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்கள் இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர்.

இந்த சம்பவம் நடைப்பெற்ற கிராமத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருப்பதால் முஸ்லிம் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதற்காக அங்குள்ள இளைஞர்கள் ஒரு கோவிலில் கூட்டம் ஒன்றை நடத்தினர். அங்கு தாக்குதலில் பங்கேற்க பல இளைஞர்களை அழைத்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவர், சமூக ஊடகங்களில் தாக்குதலைத் தூண்டும் வகையில் பதிவுகளைப் பகிர்ந்துள்ளார்.

படிக்க : முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!

ஒரு மாதம் ஆகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருப்பதால் தியாகியின் மகனான ஷாருக், ஒரு விதமான பதட்டத்துடன் இருக்கிறார். ஷாருக்கின் தம்பியும், அவரது மாமாவும் வயலுக்கு போகும் போது மிரட்டப்பட்டு இருக்கின்றனர். ”அந்த கும்பல்களால் நாங்கள் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்தோம். மீண்டும் எதுவும் நடந்தால் என்ன செய்வதென்று தெரியமால் நாங்கள் இருக்கிறோம்” என்றார் ஷாருக். தியாகியின் மகளான லூப்னா, ”என்னுடைய அப்பா யாரிடமும் சண்டை போட்டது இல்லை. வீட்டை விட்டு கூட வரமாட்டார். என்னுடைய அப்பா என்ன குற்றம் செய்தார் என்று யாராவது சொல்லமுடியுமா?அவருக்கு ஏன் இப்படி நேர்ந்தது!” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஷாருக்கின் அப்பாவை கொலை செய்த கும்பல் பாஜகவிடம் தொடர்பில் உள்ளவர்கள் தான் என்று அப்பகுதியில் உள்ள மக்கள்  கூறுகிறார்கள். அப்பகுதியில் உள்ள  போலீஸ் அதிகாரிகள் இக்கொலைக்கு மதம் காரணமில்லை என்று கூறினாலும் இது மத அடிப்படையில் நடந்த ஒரு கொலை தான்.

அந்த பகுதியில் உள்ள இந்துத்துவா தலைவர் அங்கித் படொலே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான  ரட்டால் கிராமத்தில் (Rataul) இந்து சிறுமிகள் மற்றும் அவர்களது சகோதரர்கள் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டதாகவும், காவல்துறை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். அதனால் தான் தாங்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறுகிறார்.

படொலே கூறுவதைப் போல எந்தப் புகாரும் வரவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைப்பதற்காக பாஜக முன்னெப்பதையும் விட இன்னும் கூர்மையாக மக்கள் மத்தியில் வெறுப்பைப் பரப்பிக் கொண்டு இருக்கிறது.

படிக்க: உ.பி : முஸ்லீம் மக்களை சித்திரவதை செய்யும் காவி போலீசு !

“அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்த நிதியுதவியும் வரவில்லை. என்னுடைய வீட்டில்  என்னுடைய தம்பியும், தங்கையும் இன்னும் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருப்பதால், எனது தந்தையின் சொற்ப வருமானத்தை நம்பியிருந்தோம். எங்களுக்கு வயல்களை உழுவதற்கோ மண்வெட்டியைப் பிடிக்ககவோ கூட தெரியாது” என்று தியாகியின் மகனான ஷாருக் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இந்திய பாராளுமன்றத்திலிருந்து  நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாக்பத்தின் வினைபூர் கிராமத்தில் நடந்ததுள்ளது. ஆனால், எந்த ஊடகமும் இச்செய்தியை வெளியிடவில்லை; யாரும் இது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை; எங்கும் விவாதம் கூட நடைபெறவில்லை. நாட்டின் தலைச்சிறந்த ஆட்சி என்று யோகி ஆதித்யநாத் ஆட்சியை காவிகள் குறிப்பிடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. சிறுபான்மை முஸ்லிம் மக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முகமது அக்லக் முதல் தியாகியின் மரணம் வரையிலான சம்பவங்கள் நமக்குக் கூறுவது ஒன்றே ஒன்றுதான்; “முஸ்லிம்கள் என்பதால் கொல்லப்பட்டார்கள்” என்பதே அது!


ரோகித் வெமுலா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க