கடந்த ஜூன் 10 அன்று இஸ்லாத்திற்கு எதிரான பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது. அதை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் கைதுகளும் பிற போலீஸ் நடவடிக்கைகளும் அரங்கேறியது.
ஜூன் 11 அன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வெளிவந்தது. அது அதிகம் பகிரப்பட்டது. அதில், போலீஸ் காவலில் சில இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதை காட்சிப்படுத்தியது. வீடியோ சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி போலீசு நிலையத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் காணப்பட்டவர்களின் உறவினர்கள் அந்த வீடியோ உண்மையில் சஹரன்பூரிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். இந்தக் கூற்றுக்களை போலீசுத்துறை தொடர்ந்து மறுத்து வந்த போதிலும் – வீடியோ சித்தரிப்பது போல – காவலில் தங்கள் உறவினர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
படிக்க :
♦ யோகி ஆதித்யநாத்-ஐ எதிர்த்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டாலே கைது !
♦ உ.பி.யில் அரங்கேறும் பாசிசம் : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களமிறங்குவோம்! | வீடியோ
காவலில் வைத்து தாக்கப்பட்டவர்களில் ஒருவர் சஹாரன்பூரில் உள்ள பீர்காலியில் வசிக்கும் முகமது அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அலி போலீசுக்காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் அலியின் தாயார் கூறினார்.
வீடியோவில் உள்ள மற்றொரு நபர் முகமது சைஃப். சைஃப்பின் சகோதரி, “சிறையில் அவரை சந்தித்தபோது, அவரது கைகள் வீங்கியிருப்பதையும், கால்களில் காயங்கள் இருந்ததையும் பார்த்தோம். அவர்களுக்கு தண்ணீர் மற்றும் சிகிச்சை மறுக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வைரலான வீடியோ கடந்த ஜூன் 11 அன்று ட்விட்டரில் வெளிவந்தது. இதை உத்தரப்பிரதேசத்தில் உள்ள தேவரியாவின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஷலப் திரிபாதி பகிர்ந்துள்ளார். இவர் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் எம்.எல்.ஏ.வும் முன்னாள் ஊடக ஆலோசகராகவும் உள்ளார். தனது ட்விட்டர் பதிவு போலீசுத்துறையின் நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு “எதிர்வினை பரிசு” என்று விவரிக்கிறது.
Since @shalabhmani has deleted his tweet. Here is a recording of it, from his Twitter. Watch 👇
The video is reportedly from Saharanpur. pic.twitter.com/4KjBe9HvOQ
— Sumedhapal (@Sumedhapal4) June 11, 2022