பாசிச ஹிட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலின் பிறந்தநாள் – மதுரையில் எழுச்சிகரமாக நடைபெற்ற அரங்கக் கூட்டம்!

மதுரை மாட்டுத்தாவணி அருகில் ராமசுப்பு அரங்கத்தில், டிசம்பர் 21 பட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்தநாளன்று ”ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆவணப்படம் உருவாக்கிய எழுச்சியில் கூட்டம் நடைபெற்றது.

ஹிட்லர் – முசோலினியின் பாசிசத்தை வீழ்த்திய தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை நெஞ்சிலேந்துவோம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!

அரங்கக் கூட்டம்

துரை மாட்டுத்தாவணி அருகில் ராமசுப்பு அரங்கத்தில் சரியாக நான்கு முப்பது மணி அளவில் கூட்டம் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக ஸ்டாலின் சகாப்தம் வினவு ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆவணப்படம் உருவாக்கிய எழுச்சியில் கூட்டம் தொடங்கியது.

மக்கள் அதிகாரம் மாநில இணைச் செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் தலைமையை முன்மொழிந்து பாசிசத்தை முறியடிக்க ஸ்டாலின் பிறந்தநாளில் உறுதி ஏற்போம்,பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் அதுதான் இந்த கூட்டத்தின் நோக்கம் என பேசி முடித்தார்.

தியாகிகளுக்கு வீரவணக்க பாடலுடன் கூட்டம் தொடங்கியது.

அடுத்ததாக வரவேற்புரை நிகழ்த்திய தோழர் சிவகாமு மக்கள் அதிகாரம் மதுரை மண்டல பொருளாளர் இதுவரை தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை அரங்க கூட்டமாக முன்னெடுத்ததில்லை இப்போது முன்னெடுக்க வேண்டிய தேவை பாசிசத்தை வீழ்த்த வேண்டிய கடமை நம் முன் உள்ளது. தோழர் ஸ்டாலின் அதற்கு மிகச் சிறந்ததோர் ஆயுதம் என்பதை உதாரணங்களுடன் பேசி முடித்தார். வந்திருந்த பல்வேறு அமைப்பினரையும் மேடையில் வரவேற்ற அமரச் செய்தார்.


படிக்க : தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு!


அடுத்ததாக இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர் ராமலிங்கம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளை  காங்கிரஸ் அமல்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டார்கள்.அந்த சிக்கலை தீர்த்து வைக்கத்தான் மூலதனம் ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலை தேர்ந்தெடுத்துள்ளது. அவர்கள் அதை தீவிரமாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தோழர் ஸ்டாலினின் சோசியலிச நிர்மாணம் அதை உடைக்க ஹிட்லர் போன்ற பாசிஸ்டுகளின் முயற்சி உலக அளவில் அன்றைய சூழ்நிலையில் இருந்த பொருளாதார நெருக்கடி பல நாடுகளின் அடிமை நிலை அவை அனைத்திற்கும் சோசியலிச ரஷ்யா தான் வழிகாட்டியாக நின்றது என்பதையும், பல்வேறு நாடுகளை ஐக்கிய படுத்தி பாசிச நாடுகளை ஸ்டாலின் முறியடித்தார்.அதேபோல நாமும் இங்கே ஐக்கியப்பட்டு பாசிச  ஆர்எஸ்எஸ் பிஜேபி அம்பானி அதானி கும்பலை முறியடிப்போம் என்ற அடிப்படையில்  தலைமை உரையில் பேசினார்.

அடுத்ததாக பேசிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் வின்சென்ட் அவர்கள் காவி கார்ப்பரேட் பாசிசம் எப்படி நீதித்துறையை ஒடுக்குகிறது. நல்லவர்கள் நீதிபதியாக இருந்தாலும் அவர்களை முடக்குகிறார்கள். முதலாளித்துவ சமூகம் மக்களுக்கு தொண்டு செய்ய விரும்புவதில்லை.தொண்டு நிறுவனங்களும் இறுதித் தீர்வு இல்லை. மக்களை அரசியல் படுத்தி அமைப்பாக்க வேண்டும் அதன் மூலமே காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த முடியும் என விரிவாக பேசினார்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட பொருளாளர் சிக்கந்தர் அவர்கள் உரையில் ஸ்டாலினுக்கு விழா எடுக்கிறோம். ஆனால் பாசிசத்தை வீழ்த்த நாம் எப்போது ஸ்டாலின் ஆக மாறப்போகிறோம் என்று கேள்வி எழுப்பினார்.நம்மிடம் ஒரு சோர்வு நிலவுகிறது கௌரிலங்கேஷ் கல்புர்க்கி என சுட்டுக்கொன்றவுடன் அமைதியாகி விட்டோம். பாசிசம் இந்தியா முழுவதும் ஊடுருவியுள்ளது. போராடினால் அடிப்பார்கள் உதைப்பார்கள் கொல்லுவார்கள் அந்த தியாகத்திற்கு நாம் தயாராகாமல் நமது வருங்கால சந்ததியை காப்பாற்ற முடியாது. கூட்டமைப்பு கட்டுகிறோம் ஆனால் தொடர்ச்சியாக போராடுகிறோமா என்றால் இல்லை. ஆகவே பாசிசத்தை வீழ்த்த தொடர்ந்து பணி செய்ய வேண்டியுள்ளது என்பதன் அவசியத்தை உணர்த்தினார்.

தமிழ் தேச மக்கள் முன்னணியின் தலைவர், மீ.த.பாண்டியன் அவர்கள் ஹிட்லர் முசோலினியின் கூட்டு அவர்கள் நிகழ்த்திய படுகொலைகள் ஹிட்லரின் இனவெறியைப் பற்றியும்  ஹிட்லரையும் ஸ்டாலினையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் கயவர்களையும் அம்பலப்படுத்தினார். அம்பேத்கரிய பெரியாரிய பல்வேறு ஜனநாயக சக்திகளையும் புரிந்துகொண்டு பாசிசத்திற்கு எதிராக ஐக்கிய படுத்துவோம் அதுதான் மார்க்சிய பார்வை என ஆழமாக பேசினார்.


படிக்க : ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – Documentary


ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் ஜாகிர் உசேன் அவர்கள் பேசும்போது உறவுகளாக உள்ள நம்மை பிரித்தாள்கிறார்கள் இதே வேலையை தான் பிரிட்டிஷ்காரர்களும் செய்தார்கள்.

பூர்வ குடிகளாக இருந்த மக்கள் தான் இஸ்லாமிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்தனர். ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலும் இஸ்லாமியர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கு குடியேறியதைப் போல பேசி மக்களை பிரிக்கிறார்கள். ஆகவே பாசிசத்தை வீழ்த்த எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்போம் என பேசி முடித்தார்.

புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த குமரன் அவர்கள்  பாசிசம் குறித்தும் அதற்கு மாற்று என்ன என்பது குறித்தும் நாம் ஆழமாக கற்க வேண்டியுள்ளது என்பது பற்றியும்,இந்துராஸ்டிர லட்சியத்தை ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல் எப்படி வந்தடைந்தது என்பதைப் பற்றியும்,

பல்வேறு பாசிச சட்டங்களை கொண்டு வருவதைப் பற்றியும் முதன்மை எதிரிகளை தாக்க தோழர் ஸ்டாலினிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் பாசிசத்தை முறியடிக்க கூட்டமைப்பாக செயல்படுவோம் தொடர்ந்து வினையாற்றுவோம் என்பது பற்றியும் பேசி முடித்தார்.

அடுத்ததாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன் அவர்கள் பேசும்போது போராட்டத்தின் மூலமாகத்தான் அனைவரையும் ஒன்றுபடுத்த முடியும் கற்பி போராடு ஒன்று சேர் என்பதுதான் அம்பேத்கர் முன்வைத்தது.அதேபோல் பாசிசத்திற்கு எதிராக கற்பித்துக் கொண்டு போராடினால் தான் மக்களை ஒன்றுபடுத்த முடியும் என பேசி முடித்தார்.

மனிதநேய மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட இணைச் செயலாளர் பிலால் அவர்கள் பேசும் போது அனைத்து துறைகளையும் கார்ப்பரேட்டுகளின் பிடியில் கொண்டு போய் கொண்டிருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக மெக்கானிக் கடைகளை எப்படி கார்ப்பரேட் மயமாக்குகிறார்கள் என்பது குறித்து பேசினார். பாசிசத்தையும் கார்ப்பரேட்டுகளையும் எதிர்த்து முறியடிக்க ஒன்று பட்டு நிற்போம் பேசி முடித்தார்.


படிக்க : இன்றைய பாசிச சூழலில் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார்! | தோழர் அமிர்தா | வீடியோ


அடுத்ததாக பேசிய தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் பேசும்போது மோடியை பிரதமர் ஆக்கியது அம்பானி அதானி தான் ஆதலால் இது அம்பானி அதானிகளின் தேசம் நாம் சொல்லிக் கொள்வது பெயரளவிற்கு தான். எப்படி பெரியாரின் பெயர் கேட்டால் சங்கிகள் அலறுகிறார்களோ அதே போல் தான் ஸ்டாலின்  பெயர் கேட்டால் உலக முதலாளித்துவம் அலறுகிறது. செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைவர் ஆனார்.சிறுவயதிலேயே மார்க்சியம் படித்ததற்காக தண்டிக்கப்பட்டார். பாசிசத்தை வீழ்த்தி சோசியலிசத்தை நிருவிக்காட்டினார் அதேபோல் இந்திய பாசிஸ்டுகளை நாம் வீழ்த்த வேண்டும். ஹிட்லரின் படுகொலைகளை நேரடியாக ஆதரித்தவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பல். பல்வேறு பாசிச படைகளையும் வைத்துக்கொண்டு கார்ப்பரேட்டுகளுக்கு தரவு ஏஜென்ட் வேலை பார்ப்பது தான் இவர்களின் வேலை. ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல் இந்தியாவை சூறையாடிக் கொண்டுள்ளார்கள் இவர்கள் அனைவரையும் நாம் ஒன்றுபட்டு வீழ்த்துவோம் என பேசி முடித்தார்.

 

இறுதியாக பேசிய மக்கள் அதிகாரத்தின் மாநில செய்தி தொடர்பாளர் மருது அவர்கள் பேசும்போது ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி அம்பானி அதானி பாசிசம் எப்படி எல்லாம் மக்களையும் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒடுக்குகிறது என்பதை பற்றியும், இஸ்லாமியர்கள் தாக்கப்படும் போது நாம் என்ன செய்தோம் என அனைவரிடமும் கேள்வி எழுப்பினார். இஸ்லாமியர்கள் தவறான வழிக்கு போகிறார்கள் என்றால் நாம் ஏதாவது செய்தால் தானே அப்படி போகாமல் இருப்பார்கள். இனிமேல் நாம் இப்படி உட்கார்ந்து பேச முடியுமா? ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்கி கும்பலுக்கு எதிரான  ஒவ்வொரு நடவடிக்கையும் அனைவரும் ஒன்றிணைந்து களத்தில் எதிர்த்து நிற்க வேண்டும். அதைத்தான் சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை போட வந்த அர்ஜுன் சம்பத் கும்பலை விரட்டி அடித்தார்கள். இதே போல் மற்ற மாநிலங்களில் நடப்பதில்லை ஆதலால் இதே தமிழக மரபை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும். இதேபோல் ஆர் எஸ் எஸ் பிஜேபி கும்பலுக்கு எதிரான நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் உலக பொருளாதார நெருக்கடி அதன் விளைவாக உலகம் முழுவதும் பாசிசம் தோன்றி வளர்வது அது இந்தியாவிலும் காவி கார்ப்பரேட் பாசிசமாக வளர்ந்துள்ளது என்பது பற்றியும். ஏன் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் அவசியம் என்பதைப் பற்றியும் கோழைகளுக்கு வாழ்வில்லை வீரர்களுக்கு சாவில்லை என பேசி முடித்தார்.


படிக்க : ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – டீசர்


சிபிஎம் கட்சியின் மாநில குழு உறுப்பினர் விஜயராஜன் அவர்கள் கலந்துகொண்டு தவிர்க்க முடியாத வேறொரு அவசர வேலையால் அடுத்த முறை பேசுவதாக தெரிவித்துவிட்டு சென்றார்.

எஸ்.கே.எம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தானம் அவர்கள் மக்கள் அதிகாரம் சார்பாக திருமங்கலத்தில் நடத்திய தெருமுனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். தவிர்க்க முடியாத காரணத்தால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

 

இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து ரவி நன்றி உரையாற்றினார்.


படிக்க : பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை உயர்த்திப்பிடிப்போம்! | கவிதை – ஓவியம்


பாசிசத்திற்கு எதிரான இம்மாதிரியான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் களத்திலும் இறங்க வேண்டும் அதற்கு இந்த கூட்டம் உத்வேகம் கொடுத்துள்ளது என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

தோழர்களும் ஜனநாயக சக்திகளும் இளம் வழக்கறிஞர்களும் மாணவர்களும் தோழர்களின் குடும்பத்தினரும் என பலரும் கலந்து கொண்டு ஸ்டாலின் பிறந்த நாளை நெஞ்சில் ஏந்தினர். வந்திருந்த ஜனநாயக சக்திகள் அனைவரும் பாசிசத்தை வீழ்த்திய தோழர் ஸ்டாலின் படங்களை நெஞ்சில் குத்திக் கொண்டனர்.

இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேச கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

தகவல்:
மக்கள் கலை இயக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்
தொடர்புக்கு : 9791653200, 7826847268

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க