‘வீட்டில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள்’- இந்துமதவெறியை கக்கும் பாஜக எம்.பி. பிரக்யா!

மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளியான பிரக்யா, மோடி ஆட்சியமைந்த பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் பல்வேறு இடங்களில் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரங்களையும், இந்துமதவெறி பிரச்சாரங்களையும் பகிரங்கமாகவே பேசித்திரிகிறார்.

0

த்தியப்பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க எம்.பி.பிரக்யா சிங் தாக்கூர் இந்துக்கள் தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கியுள்ளார்.

கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் இந்து ஜகாரன வேதிகி என்ற இந்துமதவெறி அமைப்பு சார்பில் டிசம்பர் 25,2022 அன்று ஓர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்று பேசினார்.

அவர் பேசுகையில், “உங்கள் (இந்துக்கள்) வீடுகளில் ஆயுதங்களை வைத்துக்கொள்ளுங்கள். எதுவும் இல்லையென்றால் காய்கறி வெட்டும் கத்திகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போது, என்ன நடக்கும் என்று தெரியாது. தற்காத்து கொள்ள தயாராக இருங்கள். யாரேனும் அத்துமீறி நமது வீட்டிற்குள் நுழைந்து நம்மை தாக்கினால் பதிலடி கொடுங்கள். லவ் ஜிகாத், ஜிகாத் செய்யும் பாரம்பரியத்தை அவர்கள் (முஸ்லீம்கள்) கொண்டுள்ளனர். அவர்கள் காதல் செய்தாலும் அதிலும் ஜிகாத் செய்கின்றனர். நாமும் காதல் செய்கிறோம், கடவுளை காதல் செய்கிறோம். ஒரு சன்யாசி தனது கடவுளை காதல் செய்கிறான். கடவுளால் படைக்கப்பட்ட இவ்வுலகில் எல்லா பாவங்களையும் ஒழிக்க வேண்டும் என்கிறான்.”


படிக்க : ‘இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்’ – காவி பயங்கரவாதி பிரக்யா சிங் !


“பெற்றோர் தங்கள் குழந்தைகளை மிஷினெரி கல்வி நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டாம். மிஷனரி நிறுவனங்களில் கல்வி கற்பதன் மூலம் குழந்தைகள் உங்கள் கலாச்சாரத்திற்குறியவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் முதியோர் இல்லத்தின் கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு சுயநலவாதிகளாக மாறுகிறார்கள். உங்கள் மகள்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள், உங்கள் வீட்டில் பூஜைகள் செய்யுங்கள், மனுதர்மம் மற்றும் சாஸ்திரங்களை படித்து உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். இதனால் குழந்தைகள் நமது கலாச்சாரம் – மதிப்புகளை பற்றி அறிந்து கொள்வார்கள்” என்று முஸ்லீம் வெறுப்பை பொதுவெளியில் பேசியுள்ளார்.

கடந்த மே 2019-ல், லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது, ​ “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர், அப்படித்தான் இருப்பார். அவரை பயங்கரவாதி என்று கூறுபவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பதில் அளிக்கப்படும்” என்றார் ​பிரக்யா.

கடந்த நவம்பர் 2019-ல், காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவை ‘தேசபக்தர்’ என்று பிரக்யா குறிப்பிட்டார்.

ஜூன் 2022-ல் “இது இந்தியா, இது இந்துக்களுக்கு சொந்தமானது, சனாதன தர்மம் இங்கேயே இருக்கும். அதை உயிருடன் வைத்திருப்பது எங்கள் பொறுப்பு, நாங்கள் அதை செய்வோம்” என்றார் காவி பயங்கரவாதி பிரக்யா.

தற்போது டிசம்பர் 25 அன்று கர்நாடகாவில் இந்துமதவெறி பிரச்சாரம் செய்துள்ளார் பிரக்யா.


படிக்க : மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு !


மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளியான பிரக்யா, மோடி ஆட்சியமைந்த பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் பல்வேறு இடங்களில் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரங்களையும், இந்துமதவெறி பிரச்சாரங்களையும் பகிரங்கமாகவே பேசித்திரிகிறார். ஏற்கனவே, ஹிஜாப் தடையில் துவங்கி பல்வேறு வகையில் முஸ்லீம், கிறித்துவ சிறுபான்மை மக்கள் மீது ஒடுக்குமுறைகள் அரங்கேற்றப்பட்டுவரும் நிலையில், காவி பயங்கரவாதிகள் வெளிப்படையாகவே மதவெறியூட்டும் இந்நிகழ்வு கர்நாடகா இந்து ராஷ்டிரத்தின் மற்றுமொறு சோதனைச்சாலையாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதையே புலப்படுத்துகிறது.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க