சீரழிந்து வரும் அரசு மருத்துவ கட்டமைப்பு! பலியாகும் அப்பாவி உழைக்கும் மக்கள்!

ஆண்டிற்கு 100 கோடிக்கு மேல் காப்பீடு என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளுக்கு கோடிகளை அள்ளி கொட்டி கொண்டிருக்கிறது  தமிழக அரசு.  அதில் பாதி தொகையை அரசு மருத்துவ கட்டமைப்பிற்கு செலவு செய்து இருந்தால் கூட அரசு மருத்துமனையின் தரம் சிறிதாவது உயர்ந்து இருக்கும்.

ழை எளிய உழைக்கும் மக்கள் உயிர்பிழைத்துக் கொள்ள இருக்கும் ஒரே கடைசி வாய்ப்பு அரசு மருத்துவமனைகள் தான். அங்கு சென்றாவது எப்படியாவது உயிர்பிழைத்து கொள்ளலாம் என்று வரும் உழைக்கும் மக்களுக்கும் முறையான சிகிச்சை அளிக்க மருத்துவர்களோ சரியான உபகரணங்களோ அரசு மருத்துமணைகளில் கிடையாது. தேவையான மருத்துவர்கள், கருவிகள் இல்லாத காரணத்தால் முறையான சிகிச்சை பெற முடியாமல் தினம்தோறும் அப்பாவி உழைக்கும் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் இல்லை அரசே இலவசமாக அவர்களை கொலை செய்துக் கொண்டிருக்கிறது.

02-01-2023 அன்று திருவாரூர் அரசுப் பொது மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் பவித்ரா என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இணைந்து பிரசவம் அறுவை சிகிச்சை செய்ததில் பவித்ரா மூச்சி திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி பவித்ராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள நாகை அரசுப் பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பவித்ராவிற்கு சிகிச்சை அளிக்கப்போதியா மருத்துவ வசதிகள் இல்லாததால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.


படிக்க : திருநெல்வேலி: மருத்துவமனை பணியார்களுக்கு ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்!


02-01-2023 திங்கள் அன்று அதிக காலையில் திடீரென்று பவித்ராவிற்கு மூச்சி திணறல் ஏற்பட்டுள்ளது. அருகில் மருத்துவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை அறைக்குக் கூட அழைத்து செல்லாமல் பவித்ரா படுக்க வைக்கப்பட்ட சாதரண வார்டிலே மற்ற கர்ப்பிணி பெண்களுக்கு தெரியாமல் திரைசீலை இட்டு செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்கள் இணைந்து பிரசவ அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளனர். பிரசவத்தின் போது அதிக மூச்சி திணறல் ஏற்பட்டுள்ளது அதை சரி செய்யும் உபகரணங்களும் அதை முறையாக கையாளும் மருத்துவர்களும் அருகில் இல்லாததால் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலே பவித்ரா இறந்துள்ளார். இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் பிறந்த உடன் ஒரு குழந்தையும் சில மணி நேரத்திற்கு பிறகு மற்றொரு குழந்தையும் இறந்துள்ளது. பவித்ரா இறந்த சில மணி நேரத்திலே சம்பவம் வெளியே தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று போலீஸை மருத்துவ நிர்வாகம் வரவைத்து பவித்ரா உடலில் ஏற்கெனவே உடல் நிலை பிரச்சனை இருந்தது அதனால்தான் அவர் இறந்து விட்டார் என்று போலீஸை வைத்து சமாளித்துள்ளது.

பிரசவத்தின்போது அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணத்தலே பவித்ரா உயிரிழந்துள்ளார் என்று பவித்ராவின் தம்பி கூறியுள்ளார். அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து செல்லாமல் அலட்சியமாக சாதரண வார்டில் வைத்து பவித்ராக்கு அறுவை சிகிச்சை செய்ததும், அதனுடன் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் யாரும் இல்லாததுமே பவித்ரா இறப்பிற்கு முக்கிய காரணமாகும். இவ்வளவு அலட்சிய போக்காக செயல்பட்ட மருத்துவர்களையும் செவிலியர்களை கைது செய்யாமல் அவர்களை பாதுகாத்து வருகிறது போலீசுத்துறை.

பிரசவத்தின்போது இறப்பு நடப்பது இந்த மருத்துவமணையில் இது முதல் முறை அல்ல. இதுபோல் பல இறப்புகள் பிரசவத்தின்போது நடந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பிரசவத்தின் போது மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மற்றும் பயிற்சி இல்லாத மருத்துவ மாணவர்கள் இணைந்து  பிரசவம் பார்ப்பதாலும் அதை முறைபடி கையால திறனற்ற அலட்சிய போக்கால் நடந்துள்ளது.

பிரசவ வார்டிற்கு பொறுப்பாளராக இருக்கும் பிரபாவதி என்ற மருத்துவரும் இதை கண்டு கொள்ளாமல்  விட்டுவிடுகிறார். இவ்வளவு இறப்புகள் நடந்து இருந்தாலும் அதற்காக நடவடிக்கை எடுக்கபடாமல் இருக்கிறது. அவர் பெரும்பால நேரம் இந்த பிரசவ வார்டிற்கு வருவதே கிடையாது. மற்ற மருத்துவர்களும் வீடியோ கால் மூலம்தான் மருத்துவ மாணவர்களுக்கும், செவிலியர்களுக்கு பிரசவம் பார்க்க சொல்லி தருகிறார்கள். மருத்துவர்கள் இங்கு வந்து கர்ப்பிணி பெண்களை பார்ப்பது சிகிச்சை அளிப்பது என்பது அறிதாக இருக்கிறது. இந்த மருத்துவ நிர்வாகமும் முதல்வரும் இதை துளியும் கண்டுகொள்வது கிடையாது.

முதல்வர் ஜோசப் அவர்களும் உடலில் சிறு பிரச்சினை என்றவுடன் TMC தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்த்துவிட்டு வருகிறார். முதல்வரோ இந்த அரசு மருத்துவமனையை நம்பாமல் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அப்பொழுது இந்த மருத்துவமனை எந்த கதியில் இருக்கிறது என்பது நமக்கு திரை கிழித்து காட்டுகிறது. இதில் அப்பாவி உழைக்கும் மக்கள்தான் மாட்டி கொள்கிறார்கள்.

ஒரு குழந்தை பிறப்பது என்பது அந்த குழந்தைக்கு மட்டும் அல்ல, அந்த தாய்க்கும் மறு பிறப்புதான். ஆனால், அந்த உயிர் போகும் வலி கொண்ட நேரத்தில் கூட பிரசவம் பார்த்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை என்பது திருவாரூர் அரசு மருத்துவமனையின் அவல நிலையை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இது திருவாரூர் என்ற ஒற்றை அரசு மருத்துவமனையின் அவல நிலை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனையின் நிலையும் இதுதான்.

திருவாரூர் அரசு மருத்துவமணையில் போதிய மருத்துவர்களோ, செவிலியர்களோ கிடையாது மிக மிக குறைந்த எண்ணிகையிலே மருத்துவர்களும், செவிலியர்களும் உள்ளனர். அவர்களிலும் பாதி பேர் தற்காலிக பணியாளர்கள் தான், அவர்களாலும் எல்லா நோயாளிகளையும் பார்த்து சிகிச்சை அளிக்க முடிவதில்லை. மருத்துவர்கள் எழுதி கொடுக்கும் முக்கியமான மருத்துகள் வாங்க கூட வெளியில்தான் செல்லவேண்டி இருக்கிறது. ஒரு  MRI SCAN  எடுக்கனும் என்றால் கூட வெளியில் 6000 செலுத்திதான் எடுக்க வேண்டியிருகிறது. மருத்துவமனைக்கு காலை 8 மணிக்கு வரும் மருத்துவரும் கூட நோயாளியை தொட்டு கூடா பார்க்காமல் சும்ம நோயாளியின் அட்டையை பார்த்துவிட்டு சென்று விடுவதாகவும் வரக்கூடியவர்களில் யார் உண்மையான மருத்துவர்? யார் மருத்துவ கல்லூரி மாணவர்?  என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று நோயாளிகள் புளம்புகின்றனர்.

போதிய மருத்துவர் வசதி இல்லாததால் அதிக நேரம் மருத்துவக் கல்லூரி மாணவர்களே நோயாளிகளை பார்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பயிற்சி நேரம் போக அதிகபடியான நேரம் மருத்துவ மாணவர்களே இந்த வேலையை செய்வதால் மாணவர்களும் மன உளைச்சல் அடைகின்றனர். 2022 ஆகஸ்டு மாதம் 5 ஆம் ஆண்டு மருத்துவம் படித்துவந்த காயத்திரி என்ற மாணவி அதிக வேலை சுமை காரணமாக மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதையும் இந்த மருத்துவ நிர்வாக முறையாக விசாரிக்காமல் வேறு காரணத்தால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று அந்த மாணவியின் மரணத்தை மூடி மறைத்துள்ளது.

உடலில் எதாவது நோய் என்று வரும் நோயாளிகளையும் இங்கு சிகிச்சைக்கான கருவிகள் இல்லை தனியார் மருத்துவமனைக்கு செல்ல மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். எலுப்பு முறிவு சிகிச்சை என்றால் கூட மருத்துவர் நேரில் வராமல் வாட்சப் மூலம் வீடியோ அனுப்பி அதனை பார்த்து சிகிச்சை அளிக்கின்றனர். மற்ற மருத்துவர்களும் மருத்து கல்லூரியோடு சேர்ந்து இயங்கிவரும் மருத்துவமனையே போதிய வசதிகள் இல்லாமல் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.

அதிக மருத்துவமனைகளும், அதிக மருத்துவக் கல்லூரிகளும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்று பெருமைபட்டு கொள்கிறார்கள். ஆனால் அந்த மருத்துவமனைகளின் உண்மை நிலை என்பது வேறாக இருக்கிறது. மருத்துமனைகளில் போதிய மருத்துவர்களோ போதிய செவிலியர்களோ கிடையாது. எந்த அரசு மருத்துவமனைக்கு சென்றாலும் இது இல்லை அது இல்லை என்று மக்களை வேறு வேறு மருத்துவமனைக்கு அலைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

20 பேர் படுக்க வைக்கும் அறையில் 40 மேற்பட்ட நோயாளிகளை ஆட்டு மந்தையை போல் அடைத்து வைத்து இருக்கின்றார்கள். பெரும்பால மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எலிகள் மற்றும் பூச்சிகள் மத்தியில் தான் அரசின் அதி நவீன சிகிச்சையை அப்பாவி மக்கள் பெற வேண்டி இருக்கிறது.


படிக்க : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை: நோயாளிகளை அல்லாடும் நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு!


உலகளவில் சுகாதாரத்துறைக்கு குறைந்த நிதி ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.3 சதவீதம் மட்டுமே சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கி உள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்ற ஆண்டு 2021-2022 மக்கள் நல்வாழ்வுதுறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.18,931.60 கோடி. ஆனால் இந்த ஆண்டு 2022-2023 அதை ரூ.17,901.73 கோடியாக குறைத்துள்ளது தி.மு.க அரசு. அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறைக்கு ரூ.19.420 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அதை ரூ.18,931 கோடியாக குறைத்துள்ளது. தமிழ்நாட்டின் GDP-யில் வெறும் 0.6 சதவீதம் மட்டுமே சுகாதாரத்துறைக்கு என்று நிதி ஒதுக்கப்படுகிறது.

கல்வியும், சுகாதாரமும்தான் தி.மு.க-வின் இரண்டு கண்கள் என்று பேசிவரும் இவர்கள்தான் குறைந்த நிதியை மருத்துவக் கட்டமைப்புக்கு ஒதுக்கி திட்டமிட்டே மருத்துவக் கட்டமைப்பை சீரழித்து வருகின்றனர்.

மக்களின் அடிப்படை தேவையான மருத்துவமனைகளிலும் நிரந்திர மருத்துவர்கள், நிரந்திர செவிலியார்களை நியமிக்காமல் எல்லவற்றையும் தனியாரிடம் ஒப்படைப்பதன் தொடர்ச்சியேதான் கால்பாந்து வீரங்கனை மற்றும் பவித்ராவின் மரணம்.

ஆண்டிற்கு, ரூ.100 கோடிக்கு மேல் காப்பீடு என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளுக்கு கோடிகளை அள்ளி கொட்டி கொண்டிருக்கிறது தமிழக அரசு. அதில் பாதி தொகையை அரசு மருத்துவ கட்டமைப்பிற்கு செலவு செய்து இருந்தால் கூட அரசு மருத்துமனையின் தரம் சிறிதாவது உயர்ந்து இருக்கும். ஆனால், தனியார் முதலாளிகளில் சேவகனான இவர்கள் அரசு மருத்துவக் கட்டமைப்பை முழுவதும் தனியாரிடம் ஒப்படைக்க திவீரமாக வேலை செய்துவருகிறார்கள். மக்களின் அடிப்படை தேவையான கல்வி, மருத்துவம், சுகாதாரம் என்ற மூன்றில் ஒன்றை  கூட சரியாக தரமுடியாமல் வக்கற்று நிற்கிறது இந்த தமிழக அரசு.

பாவெல் கார்க்கி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க