நெல்லை: சுரண்டை கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை – மாணவர்கள் போராட்டம்!

பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கும், அரசுக்கும் உள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதாக இல்லை.

சுரண்டை கல்லூரி பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த
பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் போராட்டம்!

சுரண்டை கல்லூரியில் ஆய்வு மாணவி ஒருவருக்கு தொடர்ந்து ஆறு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த வணிகவியல் துறைத்தலைவர் அஜித் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று(02.03.23) போராட்டம் நடத்தினர்.

பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கும், அரசுக்கும் உள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதாக இல்லை.

கடந்த ஆறு மாதங்களாக பேராசிரியர் தொல்லை தந்தும் மாணவியால் அதை கல்லூரி நிர்வாகத்திடம் எடுத்துச் செல்ல முடியாத அளவுக்குதான் அந்த கல்லூரி நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் போராட்டம் நடத்திய பின்னர்தான் அரசு இயந்திரமும் பெயரளவில் செயல்படுகிறது.

மாணவர்கள் என்றால் பொறுப்பு இல்லாமல் திரிபவர்கள் என்ற எண்ணத்தை இது மாதிரியான போராட்டங்கள் உடைத்தெறிகின்றன. இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் ஜல்லிக்கட்டு வரை மாணவர்கள் பங்கெடுத்து கொண்ட போராட்டம்தான் சமுதாயத்தில் குறிப்பிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் நெல்லை டவுண் ஆர்ச் பள்ளிக்கு அருகில் உள்ள இடத்தை, சமூக விரோதிகள் டாஸ்மாக் போல பயன்படுத்திக் கொண்டிருக்கையில் போலீசும், மாவட்ட நிர்வாகமும் அதை தடுக்காத போது, பள்ளி மாணவர்கள் திரண்டு வந்து டவுண் பொருட்காட்சி திடல் அருகே சாலை மறியல் செய்துதான் நடவடிக்கை எடுக்க வைத்தனர். மாணவர்களுக்கு சமூக உணர்வும், சமூக அக்கறையும் இருக்கிறது என்பதை இம்மாதிரியான போராட்டங்கள் நமக்கு உணர்த்துகிறது.

ஆனால் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் தெரிந்தே மாணவர்களை ஏமாற்றுவதை நாம் அறிய முடிகிறது. கல்லூரி முதல்வர் சின்னத்தாய் கூறுகையில், கல்லூரி முதல்வர் தலைமையில் நடந்த ஆட்சி மன்ற கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை அறிக்கையின் படி, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குரிய பேராசிரியரால் கல்லூரியின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என்கிற அடிப்படையில், அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவை தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இது மாணவர்கள் திரண்டு வந்து வெளியில் போராட்டம் நடத்தியதால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கிற போலீசின் அறிக்கையை மறுவாசிப்பு செய்வது போலவே உள்ளது. விசயம் என்னவோ மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை தந்தார் என்பதே.

இந்த அடிப்படையில் இருந்து விசாரணையை தொடங்குவது, இதை பாலியல் வன்முறை புகாராக பதிவு செய்வது என்று இல்லாமல், இதை வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது தெரிந்தே பிரச்சினையை மடை மாற்றுவதாக உள்ளது.

இது மாதிரியான பிரச்சினைகளுக்கு மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் அனைவரும் அமைப்பாக திரண்டால்தான் தீர்வு காண முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க