நெல்லையில் மே தின ஆர்ப்பாட்டம்!

138-வது மே தினத்தை உயர்த்தி முடிப்போம் என்கிற தலைப்பில் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 01/05/23 அன்று மாலை மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

138-வது மே தினத்தை உயர்த்தி பிடிப்போம் என்கிற தலைப்பில் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 01/05/23 அன்று மாலை மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிட தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, பூர்வீக தமிழர்கள் கட்சி ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். மழையின் காரணமாக கூட்டம் தாமதமாக தொடங்கியபோதிலும் தோழர்களின் உணர்வு குன்றவில்லை. முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது.

நெல்லை மண்டலம் செயலாளர் தோழர் செல்வம் தலைமையேற்று கூட்டத்தை நடத்தினார்.  அவர் தனது தலைமை உரையில், “மே தினம் என்பது கொண்டாடப்பட வேண்டிய நாளல்ல, அது போராட்டமே வாழ்க்கையாக கொண்ட பாட்டாளி வர்க்கத்திற்கான நாள். அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடி கோரல் ஆலை தொழிலாளர்களின் போராட்டம், வ.உ.சி வந்த பின்னர் எழுச்சி அடைந்தது. தொழிலாளி வர்க்கம் போராடி தனது உரிமைகளை பெற்றது. அதை பற்றியும் எட்டு மணி நேரம் வேலைக்காக இந்தியாவில் முதல் போராட்டம் அன்றைய புதுச்சேரியில் நடைபெற்றது. பிரெஞ்சு அரசாங்கம் இதனை ஒடுக்க துப்பாக்கி சூடு நடத்தி ஆறு தொழிலாளர்களை படுகொலை செய்தது. இதை கண்டித்து பிரான்சில் தொழிலாளி வர்க்கம் களத்தில் இறங்கி போராடியது. இப்படியாக தொழிலாளிகள்  ஒற்றுமையாக இரத்தம் சிந்தி தமது உரிமை உரிமையை பெற்ற நாள் இந்த மே நாள். இன்று இந்த உரிமைகளை மோடி அரசு காலில் போட்டு மிதிக்கிறது. இந்த நாட்டை சூழ்ந்துள்ள காவி- கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு அமைக்க நாம் போராடுவோம்” என்று முழங்கினார்.

படிக்க : உலகைக் உலுக்கிய 138-வது மே தினம் | படங்கள் !

அடுத்து பேசிய விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செய்தி தொடர்பாளர் தோழர் முத்துவளவன் இந்த பாசிச கும்பல்களை,  சனாதானத்தை எதிர்த்து மலைவாழ் மக்கள், சமவெளியில் இருப்பவர்கள், கடலோர மீனவர்கள் என அனைத்து பிரிவு மக்களும் போராடி வருகிறார்கள். 2024 ல் இந்த கும்பல்களை வீழ்த்த மக்கள் அனைவரும் முன் வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஆதி தமிழர் கட்சி தோழர் இளையராஜா சட்டமன்றத்தை கூட்டி 12 மணி நேர வேலை நேரத்தை அறிவித்தது போல, அதே சட்டமன்றத்தை கூட்டிதான் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று தனது உரையில் பதிவு செய்தார்.

திராவிட தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் தோழர் கதிரவன் தனது உரையில் துப்புரவு பணியாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் எவ்வளவோ உழைத்தும் மேன்மை அடைய முடியவில்லை. மேலும் மேலும் உரிமைகளை தான் இழக்க வைக்கப்படுகிறார்கள். சீமான் போன்றவர்கள் உழைக்கும் மக்களிடையே சாதி, மத, இன பிரிவுகளை உண்டாக்கி பாசிஸ்ட்டுகளுக்கு சேவை செய்கிறார்கள். ஜனநாயக சக்திகள் அனைவரும் திமுகவுக்காக வீடு வீடாக ஓட்டு கேட்டோம். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் கார்ப்பரேட்டுக்கு சேவை செய்ய திமுக சட்டங்களை மாற்றுகிறது. கார்ப்பரேடக்கு் ஆதரவான சட்டங்களை மக்களை திரட்டி முறியடிப்போம் என்றும் மக்கள் அதிகாரத்தின் தொடர் நடவடிக்கைகளுக்கு திராவிட தமிழர் கட்சி உறுதுணையாக என்றைக்கும் நிற்கும் என்பதை நிறைவாக பதிவு செய்தார்.

திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் திருக்குமரன் பேசிய போது, இந்தியாவில் எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கு பாதுகாப்பு ஆகிய சட்டங்களை அம்பேத்கர் இயற்றினார். இன்றைக்கு மத்திய, மாநில அரசுகள் அவற்றை திருத்துகின்றன. சட்டத்தை திருத்துவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது என்ற கேள்வியை எழுப்பினார்.

படிக்க : மே தினம் குறித்து தோழர் லெனின்

சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரம் மண்டல இணைச் செயலாளர் தோழர் கின்ஷன் எட்டு மணிநேர வேலைக்காக சிகாகோவில் நடந்த போராட்டம்,  புரட்சியின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய லெனின்  தலைமையிலான ரசிய தொழிலாளி வர்க்க அரசு உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலையை சட்டபூர்வமாகியது. தங்கள் நாட்டு தொழிலாளர்களும்  புரட்சியில் இறங்கி விடுவார்களோ என்ற பயத்தில் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் கல்வி, மருத்துவம் போன்றவற்றில் சில சலுகைகளை  கொடுத்தன. தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் வந்த பின் இன்று  இவை அனைத்தும் காசிக்கு விற்கப்படுகின்றன. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் அனைத்தையும் தனியார் மையப்படுத்தி வருகின்றன. தனியார் நிறுவனத்திற்கு ஆள் சேர்க்கும் விதமாக திமுக அரசு பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது. அதையே ஒரு சாதனையாக அறிவித்தது வெட்கக்கேடு. அனைத்தும் தனியார் மையம் என்றானபின்  தொழிலாளர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு 8000, 10,000 சம்பளத்திற்கு குடும்பம்  நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் திமுக அரசு எம்எல்ஏவுக்கு சம்பளத்தை உயர்த்துகிறது.  எம்எல்ஏ,  எம்பிக்கள் இந்த பத்தாயிரம் ருபாயில் குடும்பம் நடத்த தயாரா? அவர்கள் தயார் என்றால்  தொழிலாளிகளும் நடத்துகிறோம். தனியார்மயத்தை காவி கும்பல் விரைவுபடுத்தி இந்த நாட்டை நாசம் செய்கிறது. ஆர்எஸ்எஸ்- பாஜக; அம்பானி- அதானி பாசிச கும்பல்களை உழைக்கும்  மக்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கி மோதி வீழ்த்துவதுதான் தீர்வாக இருக்க முடியும் என சூளுரைத்தார்.

இறுதியாக மண்டல பொதுக்குழு உறுப்பினர் தோழர் முத்து தொடர்பு மே தின சூளுரையை முழங்கி, வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

எல்லா நாட்களையும் போல இந்த நாள் சாதாரணமாக கடந்து போக வேண்டிய நாளல்ல. தொழிலாளி வர்க்கம் தமது உரிமையை போராடி பெற்ற நாள். அது அதிகாரத்திற்கு வர நீண்ட நெடும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளதை இந்த கூட்டம் பதிவு செய்தது. பகுதிவாழ் உழைக்கும் மக்கள், பேருந்துக்காக காத்திருந்தவர்கள், கடைக்காரர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கவனித்து ஆதரவளித்தனர்.  தாங்களும் உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் என்ற உணர்வையும், தங்கள் உரிமையை அடைய ஒன்றிணைய வேண்டியுள்ளதையும்  இந்த ஆர்ப்பாட்டம் அவர்களுக்கு உணர்த்தியது.

தகவல்:
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க