“மணிப்பூர் வன்முறைக்கு பிஜேபி ஆதரவு” – மிசோரம் பிஜேபி தலைவர் ஒப்புதல் வாக்குமூலம்!

மணிப்பூர் வன்முறை கட்டுப்படுத்தாமல் இருக்கும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் மூலம் அம்பலப்பட்டுபோய் இருக்கும் நிலையில், அந்த கட்சியை சார்ந்தவரே மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளார்.

0

மிசோரம் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) துணைத் தலைவர் ஆர்.வன்ராம்சுவாங்கா, மணிப்பூரில் உள்ள தேவாலயங்கள் எரிக்கப்படுவதற்கு மத்திய மற்றும் மணிப்பூர் அரசாங்கங்கள் ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டி, தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

இதுவரை மொத்தம் 357 தேவாலயங்கள், போதகர்களின் குடியிருப்புகள் மற்றும் வெவ்வேறு தேவாலயங்களின் அலுவலக கட்டிடங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

“கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்தவ மதத்துக்கும் இழைக்கப்படும் இந்த குற்றச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மிசோரம் பிரதேச பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்,” என்று அவர் மிசோரம் பாஜக தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

படிக்க : விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!

தேவாலயங்கள் எரிக்கப்பட்டதைக் கண்டித்து மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றார். தேவாலயங்கள் எரிக்கப்பட்டதற்கு மத்திய அரசிடமிருந்து ஒரு கண்டனமும் வரவில்லை. “எனவே மணிப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிப்புக்கு மாநில மற்றும் மத்திய அதிகாரிகள் ஆதரவு அளித்தனர் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் நடந்த சம்பவங்கள் “பாஜக ஒரு ‘கிறிஸ்தவ விரோத கட்சி’ என்ற குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மை அளித்தது” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் வன்ராம்சுவாங்கா கூறினார்.

“மாநிலத் தலைவர்களும், மத்தியத் தலைவர்களும், குற்றவாளிகளின் செயல்களுக்கு தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும், மேலும் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைக் காக்க அல்லது ஆறுதல்படுத்த ஏதாவது செய்ய வேண்டும். ஒரு திருச்சபை மூப்பர் என்ற முறையில், எனது மக்கள், எனது திருச்சபை மக்களின் கருத்துகளை நான் மதிக்க வேண்டும். ஒரு சர்ச் தலைவராக, நான் பாஜகவுடன் தொடர்பு கொள்ளக் கூடாது” என்று அவர் பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்ளும் முடிவை விளக்கினார்.

மணிப்பூரில் உள்ள மெய்டிஸ் மற்றும் குக்கிகளுக்கு இடையேயான மோதல் மே 3 அன்று வெடித்ததில் இருந்து, 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல தேவாலயங்கள் இடிப்பக்கட்டுள்ளது மற்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான மிசோரமின் ஆதிக்க மிசோ சமூகம் மணிப்பூரின் குக்கி-ஜூமி சமூகத்துடன் இன உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது. மணிப்பூரில் 41.39% இந்துக்கள், 41.29% கிறிஸ்தவர்கள் மற்றும் 8.4% முஸ்லிம்கள் உள்ளனர். மிசோரமின் மக்கள் தொகையில் 87%-க்கும் அதிகமானோர் கிறிஸ்தவ சமூகம். மணிப்பூரில் இருந்து இடம்பெயர்ந்த 12,000 குக்கி-ஜோமி மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.

படிக்க: மகாராஷ்டிரா: சங்கிகளின் பேச்சைக்கேட்டு நமாஸ் செய்வதைத் தடை செய்த கலெக்டர்!

பாஜகவின் இரட்டை எஞ்சின் என்பது என்ன என்று மிசோரம் பிஜேபியின் துணை தலைவர் ஆர்.வன்ராம்சுவாங்காயின் ராஜினாமா கடிதம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்றால் அங்குள்ள இருசமூகத்தினரிடையே மோதலை உருவாக்கவேண்டும் என்ற உத்தியையே மணிப்பூரில் பாஜக செய்துவருகிறது. மணிப்பூர் வன்முறை கட்டுப்படுத்தாமல் இருக்கும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் மூலம் அம்பலப்பட்டுபோய் இருக்கும் நிலையில், அந்த கட்சியை சார்ந்தவரே மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக உள்ளிட்ட அதன் சங் பரிவார அமைப்புகளும் கிருத்துவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கும் எதிரானது என்பதே மணிப்பூர் வன்முறையை பற்றிய மிசோரம் பாஜக தலைவரின் கூற்றுக்கள் மீண்டும் நமக்கு உணர்த்துகின்றன.

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க