Sunday, July 6, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
704 பதிவுகள் 1 மறுமொழிகள்

மத்திய பட்ஜட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் | மக்கள் அதிகாரம்

45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மையைப் போக்க, புதிய வேலைவாய்ப்பை உருவாக்க ஒதுக்கியிருக்கும் தொகை ரூ. 4,583 கோடி. இது எத்தனை பேருக்கு வேலை வழங்கும் என்பது நிர்மலாவுக்கே வெளிச்சம்.

குட்கா – போதை வஸ்துக்களை பறிமுதல் செய்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் !

பெங்களுருவில் இருந்து கடத்திவரப்பட்ட குட்கா, பான்மசாலா, போதை சாக்லெட் ஆகியவற்றை பறிமுதல் செய்த மக்கள் அதிகாரம் தோழர்கள். இது குறித்து ஆட்சியரிடமும் புகாரளித்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் : தி. நகர் பணிமனை ஊழியர்கள் கருத்து !

”உயர் அதிகாரிகளுக்கு ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் எங்களை போன்ற கீழ்நிலை ஊழியர்களுக்கு தான் சம்பளம் வழங்கப்படவில்லை.”

திருச்சி : கஞ்சா வியாபாரிகளுடன் கை கோர்த்த காஜா பேட்டை போலீசு !

கஞ்சா விற்பனையைத் தடுக்கவேண்டிய ‘காவல் ஆய்வாளரே’ கஞ்சா விற்பனைக்கு எதிராக போராடுவோரை ஒடுக்கி கஞ்சா விற்பனையை ஊக்கப்படுத்துகின்றார்.

மழையில் கரையும் தார் சாலை ! | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம்

மக்கள் வரிப்பணம் ரூபாய் 40 லட்சம் செலவு செய்யப்பட்டு போடப்பட்ட சாலை, ஒரு நாள் மழைக்கே தாங்காமல் காணாமல் போயுள்ளது. ஊழல் அதிகாரிகள் - காண்ட்ராக்டர்களின் திருட்டு கூட்டு.

நாசகாரத் திட்டங்களை கைவிடு ! கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

தமிழகத்தை வேட்டைக்காடாக மாற்றி அம்பானி, அதானி, வேதாந்தா, என கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க பா.ஜ.க. மத்திய அரசு துணைநிற்கிறது.

” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” | விழுப்புரம் பொய்க் கேஸ்...

ஜெயிலர் “சிறைக்கென்று மேனுவல் உண்டு” என்றார். எந்த மேனுவலாக இருந்தாலும் சட்டத்திற்குட்பட்டதுதான் என்று தோழர்கள் சொன்னதும் கடுப்பாகினார்.

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ! அரசே இதற்குக் காரணம் !

பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என்ற முக்கூட்டு கும்பல் தான் நமது நீர் ஆதாரங்களையெல்லாம் அழித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றியது.

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !

குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார்தான் விழுப்புரம் எஸ்.பி. ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல, மக்கள் பிரச்சினையை யார் பேசினாலும், போஸ்டர் ஒடினால் கூட, ரிமாண்ட்தான் செய்கிறார்.

மீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் கைது - சிறை ! தமிழகத்தை தாரைவார்க்க அனுமதியோம் !

நீட் தற்கொலைகள் : தீர்வு என்ன? | மக்கள் அதிகாரம்

சாதாரண, எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் இனி அறவே வரக்கூடாது என்பதுதான் மோடி அரசின் திட்டம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை !

நினைவேந்தல் கூட்டத்தை வழிநடத்திய பகுதி் ஒருங்கிணைப்பாளர் பாலாஜியை போலீசு மிரட்டி பேனரை எடுக்குமாறு எச்சரித்தது, இல்லையென்றால் குண்டாசில் கைது செய்து விடுவோம் என மிரட்டியது.

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி !

பல இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் தடுப்புக் காவல் என நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தடைகளைத் தாண்டி பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்டம் - போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?

நினைவேந்தலைக்கண்டு போலீசார் இந்தளவிற்கு ஏன் அச்சப்பட வேண்டும்? எதற்கு இந்த பேயாட்டம்?

மக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ! ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி !

மே 22 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையிலும் மக்கள் அதிகாரம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி கூட்டத்திற்கு செல்லவிடாமல் முன்னணியாளர்களை நள்ளிரவில் கைது செய்திருக்கிறது போலீசு !