வினவு
அம்பேத்கர் தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-க்கு என்ன வேலை ? களச்செய்திகள்
தற்போது ‘டிசம்பர் ஆறு வெற்றித்திருநாள்’ என்று சுவரெழுத்து மயிலாடுதுறை நகரில் முளைத்திருக்கின்றன. இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் பகுதியைத் தேர்ந்தெடுத்து பார்ப்பன இந்து மதவெறியர்கள் குறிவைக்கிறார்கள்.
ஃபிடல் காஸ்ட்ரோ – சிறப்புக் கட்டுரை !
சர்வதேசப் பாட்டாளி வர்க்க உணர்வு என்பதை ஒரு அறம் சார்ந்த விழுமியமாகவும், சேவை மனப்பான்மையாகவும் கொண்டிருந்த காஸ்ட்ரோவின் அரசியல், கியூபாவின் தேசிய நலனை மையப்படுத்தியதாகவும், திருத்தல்வாதத்தின் புதிய வடிவமாகவுமே இருந்தது.
விடாது கருப்பு – மோடியின் கபட நாடகம் : புதிய கலாச்சாரம் டிசம்பர் 2016
4ஜி ஆண்டிராய்டு போன், ஆதார்அட்டை, கடன்அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின்கண்காணிப்புக்கும் உட்படுத்துவது இதுதான் மோடியின் டிஜிடல் இந்தியா அல்லது டிஜிட்டல் பாசிசம்.
விருதை பு.மா.இ.மு தோழர் மணிவாசகன் கைது ! களச்செய்திகள்
தோழர் மணிவாசகனை 6 போலிசு (அதில் இருவர் மது குடித்திருந்தனர்) கொலை குற்றவாளியை மடக்கி பிடிப்பதை போல் பிடித்து சட்டை, செருப்பு கூட போடவிடாமல் விருதை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அம்பேத்கர் : கலவரங்களில் மட்டுமே இந்து ஒற்றுமை – கருத்துச் சித்திரம்
இந்து ஒற்றுமை என்பது கலவரங்களின் போது மட்டுமே சாத்தியம். சாதாரண நாட்களில் சாதியவாதியாக பிரிந்து ஒரு இந்து மற்றவருடன் மோதிக் கொண்டிருப்பான். - டாக்டர் அம்பேத்கர்
ஜெயலலிதா – Live Updates
எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சிப்பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார்.
துறையூர் வெடிமருந்து விபத்து – அரசு நடத்திய நரபலி ! நேரடி ரிப்போர்ட்
சிதறிய சதைத்துண்டுகளை இரண்டாவது நாளாக 1 கி.மீ சுற்றளவில் பொறுக்கி எடுத்த வண்ணம் இருகின்றனர்.இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினரின் ஒரு பாகத்தைக் கூட கண்டறிய முடியாத மக்கள் செய்வதறியாது அந்த இடத்தின் மண்ணை அள்ளிச்சென்று இறுதிச்சடங்கு செய்யுதுள்ளனர்.
விதியே என்று வாழ்பவர்களே ! வீதிக்கு வாருங்கள் !! அழைக்கிறார் மோடி !!!
உண்மையில் இது கருப்புப்பணத்தை,கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையா? இல்லவே இல்லை. யாரெல்லாம் கருப்புப்பணத்தின் ஊற்றுக்கண்களாக இருக்கிறார்களோ அவர்களுக்காக மோடி அரசு மக்கள் மீது நடத்தும் மாபெரும் தாக்குதல் தான் இந்தச் செல்லா நோட்டு நடவடிக்கை.
நீதிமன்றத்தை நடுங்க வைக்கும் சகாரா முதலாளி – கேலிச்சித்திரம்
600 - கோடி ரூபாய் செலுத்து- சகாரா முதலாளியிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு ! கேலிச்சித்திரம்
கருப்புப் பணம் = ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் – லைக்கா
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா மொபைல் எனும் திருட்டுக் கம்பெனி குறித்தும், அந்த திருட்டுக் கம்பெனியிடம் காசு வாங்கிய எழுத்தாளர் ஜெயமோகனையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் வினவின் நீண்ட ஆய்வுக் கட்டுரை!
டாஸ்மாக் பாரில் தேசிய கீதம் – காளமேகம் அண்ணாச்சி
ரேசன் கடையில தேசிய கீதத்த பாடிக் காமிச்சாத்தான் இலவச அரசின்னு ஒரு அறிவிப்பு போட்டீங்கன்னா அடடே மானியத்த வெட்டுறுதக்கு இப்புடி ஒரு ரோசனையான்னு உலக வங்கிக்காரனே ஒரு ஆச்சரியக்குரியோட வாயப் பொளப்பானுகல்லா!
நல்ல நோட்டு அடிக்க முடியாதவன் கள்ள நோட்ட எப்படி பிடிப்பான் ?
ரிசர்வ் வங்கி சொந்தமாக இரண்டு அச்சகங்களை அங்கே தொடங்கி 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சடிக்கிறது. ஆனால் அச்சில் தரம் இல்லை. பணத்தாள் காய்வதற்குக் கூட எங்களுக்கு அவர்கள் நேரம் கொடுக்கவில்லை.
மோடியின் தாக்குதலால் பிணத்தை அடக்கம் செய்ய முடியவில்லை
“எங்கள் சொந்த பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு அதை திரும்ப கேட்கும்போது எங்களால் எடுக்க முடியவில்லை. நாங்கள் சண்டையிட்டால் வங்கி அதிகாரிகள் அதை எங்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது அதனால் எதுவும் செய்ய முடியவில்லை”
பெண் கல்வி : பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா !
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்விக்கென பெண்கடவுளையும் சரஸ்வதி பூஜையையும் இருப்பதாக மேச்சிக்கொள்ளும் பார்ப்பனியத்தின் கள்ளப் பரப்புரைகளை இந்த புள்ளிவிவரம் கேலிக்குள்ளாக்குகிறது.
என்.டி.சி ஆலைகளை மூட சதி – பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம் !
மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித் துள்ளது. எவையெல்லாம் விற்பனைக்கு வரும் என்பதை ஏலத்திற்கு வரும் போது தெரிந்து கொள்ளலாம் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பீதி கிளப்பி உள்ளார்.














