Monday, October 21, 2019
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் நல்ல நோட்டு அடிக்க முடியாதவன் கள்ள நோட்ட எப்படி பிடிப்பான் ?

நல்ல நோட்டு அடிக்க முடியாதவன் கள்ள நோட்ட எப்படி பிடிப்பான் ?

-

மராட்டிய மாநிலத்தின் நாசிக் நகரில் இருக்கும் நாணய அச்சகம்.
மராட்டிய மாநிலத்தின் நாசிக் நகரில் இருக்கும் நாணய அச்சகம்.

500 ரூபாய் நோட்டு காணாமல் போன மர்மம்:
யார் காரணம்? அரசா அல்லது இந்தியன் ரிசர்வ் வங்கியா?

ங்கே புதிய 500 ரூபாய் நோட்டு? பணத்தை இழந்த பிறகு அனைவரும் கேட்கும் கேள்வியிது. நாம் அனைவரும் வாட்ஸப்பிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அதைப் பார்த்திருக்கிறோம் ஆனால் உண்மையில் நம்மில் பெரும்பாலானோர் அதைத் தொட்டுப் பார்த்ததில்லை. காரணம் இன்றியமையாத அந்தப் பண மதிப்பை அச்சிடுவதில் இருக்கும் மொத்த நிர்வாகக் குளறுபடிகள்.

  • மொத்தமாக 1660 கோடி 500 ரூபாய் பணத்தாள்கள் புழக்கத்தில் இருந்தன.
  • இதுவரை 1 கோடி பணத்தாள்கள் மட்டுமே அதாவது வெறும் 06% மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.
  • ஒட்டுமொத்த இந்திய நாணய மதிப்பில் பாதி அளவு 500 ரூபாய் பணத்தாள்களாக இருந்தது.
  • 500 ரூபாய் அச்சடிக்கும் நிறுவனத்திற்கு முழுநேரத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (Chairman and Managing director) கிடையாது.
  • அந்நிறுவனத்திற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஒரு தொடர்ச்சியான பூசல் நடந்து கொண்டிருக்கிறது.
  • நவீன இயந்திரங்களைக் கொண்டிருக்கும் நாணய அச்சகங்களுக்கு 500 ரூபாய் பணத்தாள்கள் அச்சிட கொடுக்கப்படவில்லை.
  • அச்சடிப்பதில் நிர்வாகக் குளறுபடி இருப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் கூறுகிறார்.

தாமதத்திற்கான காரணத்தை ஆராயும் முன் 500 ரூபாய் பணத்தாளின் இன்றியமையாமையைப் பார்த்து விடுவோம். செல்லாக்காசுத் திட்டத்தை நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவிக்கும் முன்னர் 500 ரூபாய் மதிப்பிலான 1,660 கோடி பணத்தாள்கள் இருந்தன. ஒட்டுமொத்த நாணய மதிப்பில் பாதிக்கும் அதிகமாகப் புழக்கத்திலிருந்த அதன் மதிப்பு 8.3 இலட்சம் கோடி ரூபாயாகும். எனவே அது புழக்கத்தில் இருந்த இன்றியமையாத ஒரே நாணய மதிப்பாகும்.

அதிர்ச்சியூட்டும் விதமாக மோடியின் அறிவிப்பிற்குச் சற்று ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் புதிய 500 ரூபாய் பணத்தாள் அச்சடிக்கும் பணித் தொடங்கியது. இரண்டு அச்சகங்களால் கடந்த மூன்று வாரங்களில் 1 கோடி பணத்தாள்கள் மட்டுமே அச்சடிக்க முடிந்தது. இயல்பு நிலைமைக்குத் திரும்பக் கூடுதலாக ஒரு 1,659 கோடி பணத்தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் பணத்தாள்களில் வெறும் 0.06% மட்டுமே ரிசர்வ் வங்கியால் மாற்ற முடிந்தது. இவ்வளவு பணத்தாள்களையும் அச்சடிக்க எத்தனை காலமாகும் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.

ஏன் தாமதம்?

ந்தக் கேள்விக்கு விடை தேடும் பொருட்டு நாசிக்கில் 500 ரூபாய் பணத்தாள் அச்சடிக்கும் நாணய நோட்டு அச்சகத்திற்கு(CNP) சென்றோம். CNP ஐ தவிர மத்தியப்பிரதேசத்தின் தேவாஸில் உள்ள நாணய நோட்டு அச்சகத்திலும் 500 ரூபாய் பணத்தாள் அச்சிடப்படுகிறது. இரண்டு அச்சகங்களும் நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியப் பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகத்தை (Security Printing and Minting Corporation of India) சேர்ந்தவை.

மேலும் 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சடிக்கும் இரண்டு அச்சகங்களையும் ரிசர்வ் வங்கி இயக்குகின்றது. நவம்பர் 8-ம் தேதி அறிவிப்பிற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தப் பணத்தாள்களை அச்சிடும் பணித் தொடங்கியது. நவீன இயந்திரங்களைக் கொண்டிருக்கும் இந்த அச்சகங்கள் வேகமாக அச்சிடும் திறன் படைத்தவை. 2000 ரூபாய் பணத்தாளை அச்சிட நல்ல இயந்திரங்களைக் கொண்ட இந்த அச்சகங்கள் முன்கூட்டியே பணிக்கப்பட்டதால் மோடி அறிவிப்பிற்குப் பிந்தைய 48 மணி நேரத்திற்குள் வங்கிகளுக்கு அந்தப் பணத்தாள்கள் கிடைத்தன.

பிறகு அதே போல 500 ரூபாய் பணத்தாளை அச்சிட ரிசர்வ் வங்கியையும் நிதியமைச்சகத்தையும் தடுத்தது எது? 7 வாரங்களுக்குப் பிறகே 500 ரூபாய் பணத்தாள்கள் அச்சிடத் தொடங்கப்பட்டது ஏன்? மிக இன்றியமையாத நாணயப் பணத்தாள்களை அச்சிடும் பணி பழைய தொழில்நுட்பங்களைக் கொண்ட இரண்டு அச்சகங்களுக்குக் கொடுக்கப்பட்டது ஏன்? யார் அந்த முடிவை எடுத்தது?

ரிசர்வ் வங்கி மற்றும் நாணய அச்சகத்திற்கு இடையேயான முரண்பாடு

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன். மக்களுக்கு பணக் கொடுக்காமல் சிரமப் படுத்திய குற்றவாளிகள்!
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன். மக்களுக்கு பணக் கொடுக்காமல் சிரமப் படுத்திய குற்றவாளிகள்!

CNP அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்றாலும் 500 ரூபாய் அச்சடிப்பில் ஈடுபடும் சில ஊழியர்கள் பேரை வெளியிடாத பட்சத்தில் பேச ஒத்துக் கொண்டனர். ரிசர்வ் வங்கியின் உத்தரவை வெறுமனே தாங்கள் நிறைவேற்றியதாக வேலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு கூறினர். காலதாமதத்திற்கும் அதைத் தொடர்ந்தக் குழப்பத்திற்கும் ரிசர்வ் வங்கிதான் காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.

வடிவமைப்பு, தாள் மற்றும் அனுமதி எங்களுக்குக் கிடைத்த பின்னர் புதிய நோட்டிற்கான வேலையைத் தொடங்கினோம். கள நிலவரங்கள் ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளுக்குத் தெரியாது. ரிசர்வ் வங்கி சொந்தமாக இரண்டு அச்சகங்களை அங்கே தொடங்கி 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சடிக்கிறது. ஆனால் அச்சில் தரம் இல்லை. பணத்தாள் காய்வதற்குக் கூட எங்களுக்கு அவர்கள் நேரம் கொடுக்கவில்லை. பணத்தாள்களை வடிவமைத்தல் மற்றும் அச்சடிக்கும் தொழிலில் 1925-லிருந்து நாங்கள் இருக்கிறோம்.. ஆனால் வடிவமைப்பு முதல் அச்சிடுதல் வரை அனைத்தையும் ரிசர்வ் வங்கியே செய்ய இப்போது விரும்புகிறது. ஆனால் அது கட்டுப்படுத்தும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்.

பல்வேறு ஊழியர்களைச் சந்தித்த பிறகு SPMCIL ற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே முரண்பாடு இருந்தது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நீண்டக்காலமாகவே சண்டை நடந்து வந்ததாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைத் தலைவரரான கே.சி.சக்ரபர்த்தி     தி குயன்ட் ஊடகத்திடம் (The Quint) உறுதிபடக் கூறினார். 500 ருபாய் பணத்தாள்களை அச்சடிப்பதில் உள்ள காலதாமதத்திற்கு நிதியமைச்சரை அவர் குற்றம் சாட்டினார்.

SPMCIL ன் அச்சகங்கள் திறமைக்குப் பெயர் பெற்றவை அல்ல. அவை சற்று மந்தமான அச்சகங்கள். ஆனால் SPMCIL நிறுவனத்திற்குத் தலைமை நிர்வாக இயக்குனர் இல்லை என்பதுதான் முக்கியமான விடயம். இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தலைவர் இல்லாமல் எப்படி அவர்கள் இருக்க முடியும்? விரைவான முடிவுகளை எடுக்க யார் இருக்கிறார்கள்?
கே.சி.சக்ரபர்த்தி, முன்னாள் துணைத் தலைவர், இந்தியன் ரிசர்வ் வங்கி.

2016, ஜூலையில் எம்.எஸ்.ராணா அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய தலைமை இயக்குநர் நியமனம் செய்யப்படும் வரையில் அந்நிறுவனத்திற்குப் பொறுப்பாளராக நிதியமைச்சகத்தில் இணைச் செயலாளராக உள்ள பிரவீன் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனம் மற்றும் ஒட்டுமொத்தக் குழப்பத்திற்கு யார் காரணம் என்று கேட்டபோது பெயர்களைச் சொல்ல மறுத்துவிட்டார் சக்ரபர்த்தி. ஆனால் நிதியமைச்சரை குற்றம் சாட்டினார்.

யார் காரணம் என்று நமக்குத் தெரியவில்லை. அஃது ஆய்வுக்குரியது. நியமனம் செய்யும் பொறுப்பில் இருப்பவர்களைத் தான் கேள்வி கேட்க வேண்டும். ஒட்டுமொத்த நடவடிக்கையையும் சரியான வழியில் செய்ய அவர்கள் திட்டமிட்டிருக்க வேண்டும்.
கே.சி.சக்ரபர்த்தி, முன்னாள் துணைத் தலைவர், இந்தியன் ரிசர்வ் வங்கி.

அதே கேள்வியை நிதியமைச்சகத்திடம் தி குயன்ட் கேட்ட போது அவர்கள் பதிலைத் திருப்பிப் போட்டார்கள்.

பணி நியமன நடைமுறை நடந்து கொண்டிருக்கிறது. நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நிலைமைகளைச் சமாளிக்கும் திறமை இருக்கிறது. அறிவிப்பு திடீரென்று வந்தது. சூழ்நிலைகள் படிப்படியாகச் சீராகி வருகின்றன. சில பகுதிகளில் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் பெரிய அளவிற்குப் பிரச்சினைகளைச் சமாளித்து விட்டோம்.
டி.எஸ்.மாலிக், செய்தித் தொடர்பாளர், நிதியமைச்சகம்.

ரிசர்வ் வங்கி பேசுமா?

ரிசர்வ் வங்கிக்கும் 500 ரூபாய் பணத்தாள் அச்சடிக்கும் அச்சகத்திற்கும் ஒரு வெளிப்படையான முரண்பாடு இருக்கிறது. பணத்தாள்களை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு முழுநேரத் தலைமை நிர்வாக இயக்குனர் இல்லை. இன்னும் நிறையக் கேள்விகள் இருக்கின்றன. தகவல் தொடர்பு இடைவெளிப் பிரச்சினை இருந்ததா? இந்தப் பணத்தாள்களை அச்சடிக்க மந்தமான அச்சகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? இந்த முடிவுகளுக்குப் பொறுப்பானவர் யார்?

ரிசர்வ் வங்கி பேசினால் இந்தக் கேள்விகளில் பெரும்பாலானவைக்கு விடை கிடைத்து விடக் கூடும். எனினும் ரிசர்வ் வங்கிக்கு தி குயன்ட் அனுப்பிய கேள்விப்பட்டியலுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

(புதிய பணத்தாள் அச்சடிக்கும் பணியில் இருக்கும் கூத்துக்குளைப் பார்த்தால் இதில் ஏதோ சதித்திட்டம் இருக்க வேண்டும். அல்லது இவர்கள் அடி முட்டாள்களாக இருக்க வேண்டும். செலவழிக்கவே முடியாத 2000 ரூபாய் நோட்டு கிடைத்து, செலவழிப்பிற்கு அத்தியாவசியமான 500 ரூபாய் நோட்டு கிடைக்கவில்லை. ஒரு சதவீதம் கூட புதிய பணத்தை அளிக்காமல் மோடி அரசு நாட்டு மக்களை எப்படி சித்திரவதை செய்கிறது என்பதற்கு இந்த செய்தி ஒரு சான்று
– வினவு)

  1. மோடி அரசு இரண்டு தவறுகளை ஒரே சமயத்தில் செய்துவிட்டு , ஆப்பசைத்த குரங்கு போல விழிக்கிறது! ஒன்று பொது மக்கள், குறிப்பாகநடுத்தர, ஏழை மக்கள் பயன்படுத்தும் குறைவான முகமதிப்புள்ள 500, 1000 நோட்டுகளை மதிப்பிழக்க செய்தநம்பிக்கை துரோகம்! இரண்டாவது, பதுக்கல் காரர்களுக்கும் , பொட்டிகளில் லஞ்சப்பணம் பரிமாறிக்கொள்ளவும் ஏதுவாக 2000 ரூநோட்டை கொண்டு வந்ததும் ஆகும்!

    மூன்றாவதாக ஒரு தவறும்நடந்திருக்க வாய்ப்புள்ளது. அதாவது உண்மையில் இது கறுப்பு பண முதலைகளுக்கு எதிரான செயல் திட்டமா? அல்லது முன்பே பேரம் பேசப்பட்டு அதிக முக மதிப்புள்ளநோட்டுகள் மாற்றி தர ஏற்பாடா?

    தேச துரோகிகளெ அதிக அளவுக்கு தேச பக்த கோஷம் போடுகிறார்கள் !

  2. 500 ரூ அச்சடிப்பதைக் காலதாமதப்படுத்தியது மோடி-ஜெட்லி-உர்ஜித் திட்டமிட்ட கூட்டுச் சதி!இப்படி சிக்கலாகும் என்று தெரியாமல் மோடி மாட்டிக்கொண்டார் என்று சிலர் சொல்கிறார்கள்.இது மோடியின் அறியாமையா?இல்லவே இல்லை.கள்ளப் பணத்தையும் கருப்புப் பணத்தையும் ஓடிக் கவ்விப் பிடிக்கிறதாக ஒரு பம்மாத்து.வங்கி நுகத்தடியில் எளிய மக்களைச் சிக்கவைப்பதும்,அவர்களுடைய சேமிப்பைப் பறிப்பதுவும் தான் நோக்கம்.மேலும் மக்களின் சகிப்புத்தன்மையைச் சோதிப்பது,செத்தாலென்ன நட்டம் என்று கருதுவது,வெளிப்படுத்துவது இது எல்லாம் பாசிஸ்டுகளின் தன்மை.

  3. முன் ஏற்பாடு இன்றி பணத்தை முடக்கி தான் கருப்பு பணத்தை ஒழிக்கவந்த தேவதூதன் காட்டிகொள்ளும் தலைகணம் கொண்டவர் நம் பிரதமர் வெளி நாட்டில் உள்ள கருப்பு பணத்தை எடுக்க, துப்பில்லதவர் இந்திய ஏழை நடுத்தர மக்களை ஆதானியிடமும் அம்பானியிடம் விற்று வந்த கார்பேட் தரகர்

  4. பணத்தட்டுப்பாடு இருக்கும் போது எலக்ட்ரானிக் ட்ரான்ஸ்பர்கள் பெருகும்….எனவே இது ஒரு விதத்தில் நல்லதே பயக்கும் எதிர்காலத்தில். பணத்தை அடிக்க அடிக்க மக்கள் பதுக்குவது நடந்தேதான் தீரும்….எனவே பணம் குறைவாக அச்சடிப்பது நாட்டுக்கு நல்லதே!

    • பாலா , மளிகைக்கடை அண்ணாச்சிக்கு ரூ 1800 எப்படிங்க பணமா கொடுப்பது? ரூ 4500 வீட்டு வாடைகையை வீட்டு உரிமையாளருக்கு எப்படிங்க பணமா கொடுப்பது? பால்காரர்…, பேப்பர்காரர், என்று பணத்துக்கு க்யூவில் வந்து நிற்பார்களே! நீங்க என்னா சொல்லுவிங்க…! மளிகையை posமிசினில் மோர் ,ரிளையன்ஸ் சூப்பர் மார்கட்டில் வாங்க சொல்லுவீங்க! அங்க வாங்கினால் எல்லாமே MRP ரேட் தான். நான் வாங்கும் ரூ 1800 மளிகைக்கு ௨௦௦ ரூபா அதிகமா வரும்… நம்ம அண்ணாச்சி கடைஎன்றால் MRP யை விட நான் வாங்கும் பொருட்களுக்கு குறைந்து ௨௦௦ ரூபா MRP யை விட குறையும். மேலும் வீட்டு உரிமையாளர் 2000 ரூபா நோட்டா கொடுத்தா அழுவுறாரு… என்படிங்க பணத்தை மாத்துவேன் என்று புலம்பறாரு…. என்ன ஒன்னு உங்களை மாதிரியான ஆளுங்களுக்கு MRP ரேட்டில் பொருட்களை வாங்குவது என்றால் பெரிய மேட்டரே இல்லாமல் இருக்கலாம்… ஆனா பாருங்க எங்களை போன்ற நடுத்தர …, கீழ் நடுத்தர வர்கத்து மக்களுக்கு MRPயில் இருந்து குறைத்து வாங்கும் ஒவ்வொரு ரூபாவும் ஒஸ்தி தாங்க…

      எங்களுக்கு அட்வைஸ் பண்றத விட்டுட்டு மோடிக்கு அட்வைஸ் பண்ணி 500 ரூபா 100 ரூபா நோட்டுகளை கொஞ்சம் அதிகமா அடிக்கச் சொல்லுங்க பாலா சார்… பணமில்லா வர்த்தகத்தை நாங்களும் முடிந்த அளவுக்கு lic பணம் கட்ட ,நகை கடன் கட்ட என்ற செக் போட்டு பயன் படுத்திக்கொண்டு தான் இருக்கோம்.. ஆமாம் பணமில்லா வர்த்தகம் பற்றி பக்கம் பக்கமா மக்களுக்கு அட்வைஸ் செய்து பேசும் பிரதமர் மோடி கிட்ட ரூபா 89,000 பணம் கையில் ரொக்கமா இருக்காமே! அது எதுக்கு என்று கேட்டுச் சொல்லுங்க பாலா! நிதி அமைச்சர் 65லச்சம் வரைக்கும் ரொக்கமா வைத்து உள்ளாராமே! அதுவும் எதுக்கு என்று கேட்டுச்சொல்லுங்க பாலா!

  5. இது தேச துரோக சதிவேலைதான் போலிருக்கிறது, இது நாட்டுக்கு நன்மை இல்லை என்பது நன்றாக புரிகிறது,எலக்ட்ரானிக் டிரான்செக்ஷன் நல்லது தான் ஆனால் அதை முறைபிரகாரம் செய்யவேண்டும், எதற்கு 2௦௦௦ ருபாய் நோட்டு என்றுதான் புரியவில்லை, எனவே இது நாட்டுக்கு நன்மை இல்லை என்பது நன்றாக புரிகிறது, இது முட்டாள் தனத்தோடு ஒரு மொள்ளமாரித்தனம், மக்கள் கொஞ்சகாலம் கஷ்டப்படவேண்டுமாம், எதற்காக கஷ்டப்படவேண்டும்? மக்களுக்காக பிரதமரா அல்லது பிரதமருக்காக மக்களா? மக்களுக்காக தான் பிரதமர் கஷ்டப்படவேண்டும், ஊர் சுத்தும் பிரதமர் எப்படி மக்களுக்கு நன்மை செய்யமுடியும்? இதற்கு வக்காலத்து வாங்கும் முட்டாள் பசங்களுக்கு என்ன பேர் வைப்பது? ஜாதி மத வெறிபிடித்த சனியன்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க