privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்என்.டி.சி ஆலைகளை மூட சதி – பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம் !

என்.டி.சி ஆலைகளை மூட சதி – பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம் !

-

ntc-election-campaign-5
தேசிய பஞ்சாலை தொழிற்சங்க தேர்தல் மே, 2014-ல் பு.ஜ.தொ.மு பிரச்சாரம் (கோப்புப் படம்)

ntc-election-campaign-1மிழ்நாடு தேசிய பஞ்சாலைக் கழகத்துக்குச் சொந்தமான ஏழு மில்களிலும் 150 கோடி ரூபாய் மதிப்பிலான நூலும் துணியும் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இனிமேல் உற்பத்தி ஆகும் நூலும் துணியும் இதனுடன் சேர்ந்து நெருக்கடியை கூடுதலாக்கப் போகிறது.

இதனால் வாரத்தில் ஒருநாள் (ஞாயிறு) விடுமுறை விடப்பட்டு உள்ளது. சனிக்கிழமை லே ஆப் விடப்பட்டு இரண்டு நாட்கள் விடலாம் எனும் கருத்தில் நிர்வாகம் உள்ளது.

ஏறத்தாழ நூற்றுக் கணக்கான தினக்கூலிகள், கேசுவல் அப்ரண்டீஸ் என பல்வேறு பெயர்களில் உள்ள, பல பத்தாண்டுகள் வேலை செய்த ஆண் – பெண் தொழிளாளர்கள் வேலை இல்லாமல் அனாதைகள் போல தெருவில் நிற்கின்றனர். திரும்பப் பெற முடியாத தங்களது இளமையை உழைப்பை என் டி சி-க்கு அர்ப்பணித்தவர்கள். இருண்ட எதிர்காலத்தில் உள்ளனர். மண்டல சங்கம் இவர்களுக்காக போராடத் தயாராக உள்ளது.

மோடி அரசின் 500 / 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததின் மூலம் நூல் விற்பனை மேலும் சரிந்துள்ளது. அடுத்து வரவிருக்கின்ற GST வரிவிதிப்பின் மூலம் என் டி சி – யின் நூல் விற்பனை அதல பாதாளத்துக்கு போக உள்ளதை அனைவரும் அறிவோம். இதனால் என் டி சி-யில் வேலை செய்யும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஆபத்து வந்து விட்டது. மொத்தமாக மூன்று மாதத்திற்கு மூடப்படலாம். நூல் மேலும் தேக்கமடைந்தால் ஆறு மாதத்திற்கும் மூடப்படலாம். இதன் அடுத்த கட்டமாக ஆலை மூடலும் வர வாய்ப்பு உள்ளது. நிரந்தரத் தொழிலாளர்களும் கேசுவல் தொழிலாளர்களும், அலுவலக ஊழியர்களும் இணைந்து புரட்சிகர சங்கமாக அணி திரண்டால் இதனை மாற்றி அமைக்க முடியும்.

ஆலைகள் மூடினால் நல்லபடியாக VRS வாங்கி நைசாக வெளியே செல்லலாம் என சில பேர் நினைக்கலாம். சங்கம் பலமாக இருந்து போராட்டம் தீவிரமாக நடந்தால் தான் மேற்படி மதியூகிகளும் பலன் பெற முடியும் என்பதை அறிந்து கொள்வது நல்லது.

28.10.2016 அன்று மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித் துள்ளது. எவையெல்லாம் விற்பனைக்கு வரும் என்பதை ஏலத்திற்கு வரும் போது தெரிந்து கொள்ளலாம் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பீதி கிளப்பி உள்ளார்.

ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற் சாலை மூடல் , சேலம் உருக்காலையின் கழுத்தில் கத்தி தொங்குவது, LIC-யை விற்பது, வங்கிகளை மூடுவது போன்ற அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள் என் டி சி-க்கு வரவிருக்கும் ஆபத்தை உறுதிப்படுத்துகிறது. ஆலை மூடல் எல்லாம் வராது என்று திண்ணை தூங்கிகள் ஜல்லி தட்டுவதைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை.

ஆலை மூடல் ஆபத்தை ஒட்டுக் கட்சிகளால் தடுத்து நிறுத்தவே முடியாது. தொழிலாளர்களுக்கு ஏற்படும் எந்த வித ஆபத்தையும் தடுத்து நிறுத்த முடியாது. தென்னிந்தியாவின் மான்செஸ்டராம் நமது கோவையில் அத்துனை ஆலைகளும் மூடப்படுவதற்கு இவர்களே காரணம்.

என் டி சி-யில் உறுப்பினர் சேர்க்கைக்காகவும் அங்கீகாரத் தேர்தலில் ஒட்டுக்காகவும் பிரியாணி, பிராந்தி, பால்குக்கர், வேட்டி, சேலை கொடுத்தது யார்? தொழிற் சங்கத்தை கேவலப்படுத்தியது யார்? டாஸ்மாக் பார்களில் உறுப்பினர் சேர்க்கையும் ஒட்டு வேட்டையும் நடத்தியவர்களுக்கு உரிமைகள் பறிப்பு குறித்து போராட முடியுமா? முடியாது.

உறுப்பினர் சேர்க்கைக்கும் , ஓட்டு வாங்குவதற்கும் பணம் கொடுக்காத ஒரே சங்கம் நமது சங்கம் மட்டும் தான். புரட்சிகரமான தத்துவத்தால் ஒளியூட்டப்பட்டு வர்க்கப் போராட்டத்தை செயல் துடிப்புடன் நடத்தும் சங்கம் நமது சங்கம் மட்டும் தான்.

தமிழ் நாட்டிலேயே இந்த ஆண்டும் கூடுதலான சதவீத போனசை கோவையில் பெற்றுத் தந்தது நமது சங்கம் தான். நான்கு ஆண்டுகளாக நமது சாதனையை முறியடிக்க யாரும் இல்லை. என் டி சி-யில் போனஸ் அரியர்ஸ் வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ஒரே சங்கம் மண்டல சங்கம்தான்.

தென் இந்தியாவிலேயே நமது சங்கம் மட்டும் தான் அரியர்ஸ் கேட்டு வழக்கு போட்டுள்ளோம் . வழக்கு எண் W.P. NO.1 7395/2016 – Date : 07-04-2016. தொழிற்சங்கப் பாரம்பரியம் எனப் பேசுகின்ற கேரளாவும் வழக்கு போடவில்லை.

இதில் நாம் அடையப் போகும் வெற்றி தென் இந்தியாவில் உள்ள எல்லா என் டி சி தொழிலாளர்களுக்கும் கூடுதலாக ரூ.3500/- கிடைக்கும். தினக்கூலித் தொழிலாளர்களுக்கு மீண்டும் என் டிசி-யில் வேலை வாய்ப்பு பெற முடியுமா எனக் கேட்டால் முடியும் என்கிறோம். தேங்கி நிற்கும் நூலையும் துணியையும் விற்க முடியுமா எனக் கேட்டால் விற்க முடியும் என்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமையும் என் டி சி மில்களை மூடுவிழா நடத்தாமல் ஒட்ட முடியுமா என்றால் முடியும் என்கிறோம். என் டி சி ஆலை மூடல் சதியை முறியடிக்க முடியுமா எனக் கேட்டால் நிச்சயம் முடியும் என்கிறோம். மத்திய அரசை எதிர்த்து வெற்றி கொள்ள முடியுமா எனக் கேட்டால் முடியும் என்கிறோம்.

இது எப்படி சாத்தியமாகும் என்று நல்ல உள்ளம் படைத்த போராட்டக் குணம் கொண்ட தோழர்கள் கேட்கலாம். அவர்கட்கு எமது பணிவான பதில் இதுதான். டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களை பாலைவனமாக்க வந்த மீத்தேன் எடுக்கும் திட்டத்தை விவசாயிகள், அமைப்புகள், தமிழக மக்கள் ஆகியோர் இணைந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு மத்திய அரசை பின் வாங்க வைத்தனர். இதன் விளைவாக 10-11-2016 அன்று தமிழகத்தில் மீத்தேன் திட் டம்
ரத்து என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

18.04.2016 அன்று இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரில் கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் மத்திய அரசை எதிர்த்து போராடி வென்றார்கள். தொழிலாளர்களது பி.எப். சேமிப்பை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க சட்ட விதிமுறைகளை திருத்தம் செய்தது மோடி கும்பல். இதற்கெதிராக போர்க் கோலம் பூண்டனர் பெங்களூர் தொழிலாளர்கள். துப்பாக்கி சூடு , தடியடி, அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் களமிறங்கினர். மோடி + கார்ப்பரேட் முதலாளிகளின் கூட்டுச் சதியை முறியடித்தனர்.

போராடினால் மட்டுமே உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்பதை என் டி சி தொழிலாளர்களாகிய நாமும் உணர்வோம்.

ஆகவே என் டிசி-யில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள், கேசுவல் தினக்கூலித் தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் அனைவரும் இணைந்து போராட்டக் களம் காண்போம் என அறைகூவல் விடுக்கிறோம்.

  • என்.டி.சி ஆலைகளை மூடல் சதியை முறியடிப்போம்!

  • புரட்சிகர சங்கமாய் அணிதிரள்வோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

  • இடம்: தென்மண்டல அலுவலகம், தேசிய பஞ்சாலைக் கழகம், காட்டூர்
  • நாள்: 30.11.2016

நிகழ்ச்சி நிரல்:

  • தலைமை: தோழர் மோகன்ராஜ், செயலர், கம்போடியா மில்

உரைகள்:

  • தோழர் ஜெகநாதன், முருகன் மில்
  • தோழர் முருகேஷ் CSW மில்
  • தோழர் ரங்கநாதன், செயலர் SRV மில்
  • தோழர் கோபால், செயலர், பங்கஜா மில்
  • தோழர் ரங்கசாமி, தலைவர், முருகன் மில்
  • கண்டன உரை: தோழர் விளவை இராமசாமி
    மாநில துணை தலைவர், பு.ஜ.தொ.மு.

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.
தொடர்புக்கு 96297 30399

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க