privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஜெயலலிதா – Live Updates

-

ப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, 75 நாட்களுக்குப் பிறகு மரணமடைந்திருக்கிறார். அவரது ஆட்சி எவ்வளவு மர்மங்கள் நிறைந்திருந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் இந்த அப்பல்லோ அத்தியாயமும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. 1987 டிசம்பர் 24 –ல் எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். அதே டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா மரணமடைந்திருக்கிறார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சி பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார்.

அவரது இறுதி ஊர்வலம் டிசம்பர் 7, 2016 அன்று நடைபெற்றது. அன்றைய தினத்தில் வினவு செய்தியாளர்கள் சென்னை நகரெங்கும் சுற்றி வந்து சேகரித்த படங்கள் – செய்திகள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் இங்கே, அதே தினத்தில் நேரலையாக தொகுக்கப் பட்டிருக்கிறது.

(முழு தொகுப்பையும் பார்ப்பதற்கு “Load more entries” பொத்தானை அழுத்தவும்)

  1. இது வினவுக்கு புதுமையான முயற்சி. வாழ்த்துக்கள். பதிவுகள் நச்நச்சென்று இருக்கின்றன.

  2. பதவியில் இருக்கும் ஒருவன் எவ்வளவு வேண்டுமானாலும் அநியாயமும் அக்கிரமங்களை புரியலாம். அப்படி செயது அடிபொடிகளை உருவாக்கிக்கொண்டால், அவன் இறக்கும்போது அடிப்பொடிகள் உருகி மருகி கண்ணீர்விட்டால் அவன் புனிதனாகிவிடுகிறான். இந்த மயிறு கூஒத்துகளை எல்லாம் பார்க்கும் எவன் திருந்துவான்?

  3. மெய்யான விஷயங்களை எடுத்துச்சொல்வதை அதிகாரம் தடுக்கிறது. இறந்தபிறகு நமது பண்பு தடுக்கிறது. உண்மையை எப்போதும் பேசமுடிவதில்லை.

  4. தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயங்களை எப்போதுமே விமரிசிக்க கூடாது! ஆனால் பொதுமக்கள்நலன் சம்பந்தபடும்போது விருப்பு வெறுப்பு கூடாது!

  5. டாஸ்மாக் மூலம் ஒரு தலைமுறையையே சீரழித்தது,
    சமச்சீர் கல்விக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்றது
    அண்ணா நூலகத்தை திருமண மணடபம் ஆக்க முயற்சி செய்தது
    ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளின் மேல் வழக்கு போடாமல் இருக்க சட்டம் இயற்றியது
    போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று மேம்போக்காக ஈழத்த தமிழர் படுகொலையை கடந்து சென்றது
    அதே வாயின், தான் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைத்து தருவேன் என்று உதார் விட்டு, கொடநாடு எஸ்டேட்டில் பாதி நாட்களை கழித்தது,
    தோழிகளை ஊக்குவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் வரிசையில் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளியது,
    நிலக்கரி ஊழல், மின்கொள்முதல் ஊழல், தொழில் தொடங்க விண்ணப்பித்தால், முதலீட்டு தொகையில் இருபது சதம் முன்னதாகவே கமிஷனாக கொடுத்துவிட வேண்டும் என்று அடாவடி செய்தது, தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, எல்லா தொகுதிகளிலும் பண பட்டுவாடாவை கச்சிதமாக முடித்துவிடுவது, தமிழத்தை மின்-மிகை மாநிலமாக ஆக்குவேன் என்று உதார்விட்டது, எந்த முயற்சியும் எடுக்காமலே மிகை மின் மாநிலம் ஆகிவிட்டதாக வாயில் வடை சுட்டது,…இன்னும் எவ்வளவோ அடுக்கலாம்…

  6. Communist ideology will never raise in Tamilnadu because of people like you. You are disgrace to the communism. Communism always have room for some humanity. I challenge you again, You will run this site and ur party always like this. You will never gte poeple support. You will realize when you look back.

  7. ஜெயலலிதா இறந்து விட்டார். ஏன், இறந்தவரை போய் இவ்வளவு வறுத்தெடுக்கிறீர்கள். அவருக்கு ஏற்பட்டது மிகவும் பரிதாபமானதொரு மரணம். வேண்டாம் விட்டு விடுங்களேன் ப்ளீஸ்..

    • கண் முன்னே ஒரு சமூகமே, மாநிலமே சீரழிந்து கிடக்கிறது. சமூகத்தை உயர்ந்த, அன்றாடங்காய்ச்சிகளின் நிலையை மேம்படுத்த, ஐந்து முறை வாய்ப்பு கிடைத்தபோதும் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்காக பயன்படுத்திவிட்டு (தன காலில் விழும் அமைச்சர்களை முகம் மலர்ந்து, பூரிப்புடன் நோக்கும் அந்த ஒரு படம் போதுமே )இறந்துபோய்விட்டால், “அடப்பாவமே!” என்று என்னால் நினைக்க முடியவில்லை. ஏனென்றால், தினமும் கண்முன்னால் நிற்பது ஒரு சமூகத்தின் கேவலமான நிலை.

      • யாராலும் எந்த மாற்றமும் நிகழாது என்பதே நிதர்சனம்.சீரழிவை நோக்கியே உலகம் செல்லும்.அதை யாராலும் தடுக்க முடியாது.தடுப்பதாக சிலர் சொல்லித்திரியலாம் அது அவரவர் விருப்பம்!

      • ஆதவன் அவர்கள் கூறிய கருத்தில் எனக்கும் உடன்பாடே… குடியால் இந்த சமூகம் சீரழிந்தது என்றால் அதற்க்கு ஜெயலலிதா மட்டுமா பொறுப்பு. இதற்க்கு முன்பு ஆட்சி செய்த கருணாநிதிக்கு இதில் பங்கில்லையா. அப்போதெல்லாம் நீங்கள் என்ன செய்தீர்கள். மதுவை நாடி செல்லும் மக்களிடமும் தான் தவறு இருக்கிறது.

        //(தன காலில் விழும் அமைச்சர்களை முகம் மலர்ந்து, பூரிப்புடன் நோக்கும் அந்த ஒரு படம் போதுமே )//

        தவறு தான்… இருந்தாலும் அது அவரின் கட்சி சார்ந்த விடயம். காலில் விழுவது ஒன்றும் அப்பாவி மக்கள் அல்ல, ஜெயாவின் பெயரை வைத்து கோடி கோடியாக சுருட்டிய கும்பல் அவ்வாறு செய்கிறது. ஆதாயம் கருதி செய்கிறது. இதையெல்லாம் ஒரு பெரிய குறையாக சொல்லவே கூடாது. ஆரம்பம் முதலே எவ்வளவோ ஆணாதிக்க கொடூரங்களை சந்தித்து வந்தவர் அப்படி தான் இருப்பார். அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக பக்குவம் அடைந்து வந்து கொண்டிருக்கும் பொழுதே, எதிர்பாராத விதமாக மரணம் அடைந்து விட்டார். ஒரு மாபியா கும்பல்களின் பிடியில் இருக்கும் அவரால் என்ன நல்லது செய்ய முடியுமோ, அதை செய்தார். ஒட்டு பொறுக்கி அரசியலாக இருந்தாலும், ஒப்பீட்டளவில் கருணாநிதிக்கு இவர் பரவாயில்லை… அதனால் தான் மக்கள் தொடர்ச்சியாக 2 முறை அவரை முதல்வர் ஆக்கினார்கள்.

        எது எப்படியோ, அவரு இன்று இல்லை. போய் சேர்ந்து விட்டார். இறந்து போனவரை பற்றி அடிக்கடி விமர்சனம் செய்வது நாகரீகம் கிடையாது.

        • டாஸ்மாக்கிற்கு இவர் மட்டும் காரணமல்ல …உண்மைதான் … ஆனால் இவர் ஆட்சியில் டாஸ்மாக்கிற்கு எதிரான எத்தனை எத்தனை தீவிரமான போராட்டங்கள்? எத்தனை உயிர்கள் பலியாயின? இவர் ஒரு அறிக்கையானது வெளியிட்டாரா? மாறாக போலீஸ் படையை ஏவி கொடூரமாக அடக்குவதில்தான் குறியாக இருந்தார். டாஸ்மாக்கிற்கு எதிரான குரல்களை கேட்கவும் அவர் முயற்சிக்கவில்லை. தனக்கென தான் நிர்மாணித்துக்கொண்ட ஒரு தனி உலகத்தில் அல்லவா வாழ்ந்துவந்தார்?

          • ஜெயாவுக்கு ஆதரவாக முட்டு கொடுத்துகொண்டு விவாதத்துக்கு வந்த மேரி அவர்கள் துப்பிருந்தால் நண்பனின் மேலுள்ள கேள்விகளுக்கு பதில் கூறட்டும்………

        • சகோதரி ரெபெக்காமேரியின் கருத்தோடு உடன்படுகிறேன்.ஒப்பீட்டளவில் கருணாநிதியோடு ஆயிரம் மடங்கு மேல் ஜெயலலிதா.இன்றைய காலத்தில் எப்படிப்பட்ட அரசியல்வாதிகளைத்தான் எதிர் பார்க்கிறீர்கள்?இன்றைய சமூக அமைப்பில் நாம் தேடும் தகுதிகள் கொண்ட அரசியல் வாதிகள் கிடைப்பது காணல்நீர்தான்.நீங்கள் ஜெயலலிதா மீது என்ன விமர்சனம் வைத்தாலும் அதன் கருப்பொருளாய் கருணாநிதிதான் வீற்றிருப்பார்.நீண்டஆயுள் அனுபவம் நினைவாற்றல் சொல்லாற்றல் என்று அனைத்து வரங்களும் பெற்றவராக இருந்தும் அது அனைத்தையும் சுயநலன் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு வாழ்பவர்.அவர் ஒழுங்காய் இருந்திருந்தால் ஜெயலலிதா இவ்வளவு தூரம் வளர்ந்தே இருந்திருக்க மாட்டார். அதே வேளை இறந்தவர்களை விமர்சிக்க கூடாது என்ற ரெபெக்காமேரி கருத்தோடு முரண்படுகிறேன்.இறந்தவர் ஒருபெரும் அரசியல் தலைவர்.அவரின் செயல்கள் ஒரு மாநிலத்தையே தாக்கம் ஏற்ப்படுத்துபவை.இனி வரக்கூடிய மக்களுக்கும் வரலாறாய் இருக்க போபவை.அவர் தனி மனிதர் அல்ல.அவரின் நல்லது கெட்டதிலிருந்து பாடம் படிக்க வேண்டிய தேவை வருங்கால சமூகத்திற்க்கு உண்டு.ஆகவே அவர் ஒவ்வொருவரின் பார்வையிலிருந்தும் விமர்சிக்க படுவது அவசியமே

          • முசுலிம்களை பொறுத்தவரை கருணாநிதியை விட ஜெயலலிதா மேல் என்ற pj, பாக்கர் போன்றவர்களின் பரப்புரைகளுக்கு பலியாகியிருக்கும் முசுலிம்களில் மீரான் சாகிப்பும் அடக்கம் என்று தெரிகிறது.

            சகதி நிரம்பிய குட்டையில் ஊறிக்கிடக்கும் எருமையை போல பார்ப்பனிய,இந்துத்துவ கொள்கைகளில் வெறியுடன் ஊறித்திளைத்த ஜெயலலிதாவுக்கும் பார்ப்பனிய,எதிர்ப்பு திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த கருணாநிதிக்கும் பெரும் வேறுபாடு உள்ளது.

            கருணாநிதியும் பா.ஜ.க வுடன் கூட்டணி கட்டி பதவி சுகம் கண்டவர்தான்.அந்த அற்பத்தனத்துக்கும் ஜெயா கொள்கை ரீதியாகவே பா.ஜ.க வுடன் ஒத்துப்போனதற்க்கும் உள்ள வேறுபாட்டை மீரான் சாகிப் போன்றவர்கள் உணரவேண்டும்.ஆனால் இந்துத்துவ கொள்கைகளை வளர்க்கும் நோக்கம் கருணாநிதிக்கு என்றைக்கும் இருந்ததில்லை. ஜெயாவோ அதை எப்போதும் மறைத்ததில்லை.அதனால்தான் இன்றைக்கு வெங்காய நாயுடு அ.தி.மு,க,கொள்கை ரீதியில் பா.ஜ.க வுக்கு நெருக்கமான கடசி என்கிறார்.மறுத்து முணு முணுக்க கூட அந்த கடசியில் ஆளில்லை.

            மீரானுக்கு சில கேள்விகள்.

            பாபர் மசூதியை இடிக்க கரசேவையை ஆதரித்து அதை அனுமதிக்க கோரி தேசிய ஒருமைப்பாட்டு கூட்டத்தில் பேசியது கருணாநிதியா ஜெயலலிதாவா

            கரசேவைக்கு தமிழகத்திலிருந்து ஆள் அனுப்பியது கருணாநிதியா ஜெயலலிதாவா.[அதற்க்கு ஆதாரம் இருக்கிறது அதனால் 1999-ல் முசுலீம்களின் வாழ்வுரிமை மாநாட்டுக்கு ஜெயலலிதா வந்து செல்லும்வரை நான் மேடையேற மாட்டேன் என pj மேடைக்கு பின்னாலே அமர்ந்திருந்ததை நினைவூட்டுகிறேன்]

            ராமருக்கு இந்தியாவில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது என்று RSS குரலில் பேசியது கருணாநிதியா ஜெயலலிதாவா

            ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி முசுலிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்தபோது மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று RSS குரலில் பேசியது கருணாநிதியா ஜெயலலிதாவா

            தமிழ்நாட்டில் முசுலிம்களுக்கு 3.5-விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தது கருணாநிதியா ஜெயலலிதாவா

            முசுலிம்களுக்கு இட ஒதுக்கீடு விழுக்காட்டை உயர்த்துவேன் என வாக்குறுதி கொடுத்து 2011-சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று வந்து அந்த வாக்குறுதியை குப்பை கூடையில் வீசிய வாக்கு தவறா உத்தமர் கருணாநிதியா ஜெயலலிதாவா .

            கோவை கலவரம்,குண்டு வெடிப்பு அதை தொடர்ந்த முசுலிம்கள் மீதான காவல்துறை ஒடுக்குமுறை என்று இதை காட்டியே கருணாநிதியை முசுலீம்களின் எதிரியாக காட்டும் வேலையை pj, பாக்கர் போன்ற பிழைப்புவாதிகள் திட்டமிட்டு செய்கிறார்கள்.அதற்க்கு மீரான் போன்றவர்களும் பலியாக கூடாது.

            • சகோதரர்திப்பு இன்றைய நம்முடைய 56இஞ்ச் பாரதபிரதமர் அன்று குஜராத் முதல்வராக இருக்கும் பொழுது அவரின் முழு பலத்தோடு குஜராத் முஸ்லிகளை கருவறுக்கும் போது அன்றைய பஜக வுக்கு முட்டு கொடுத்து இருந்தவர் இந்த தமிழின தலைவர்தான்.இவரைவிட்டால் சிறுபான்மையினர் நாதியற்று போவார்கள் என்று சொல்லப்பட்டவர்தான் அன்று வார்த்தையற்று இருந்தார்.இடதுசாரிகள் குஜராத அரசுக்கு எதிராக நாடாளுமன்ற்த்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது கருவருத்த மோடிக்கு ஆதரவு வாக்களித்தார்.தயவு செய்து ஜெயலலிதாவை தாக்க வேண்டும் என்று இவரை தூக்காதீர்கள்.ஜெ யின் குறைகளை சொல்லவேண்டுமா நானும் உங்களைப்போல் பட்டியல் போடுகிறேன்.கருணாநிதியை புனிதராக்க ஜெயலலிதாவை இகழ்வாதாயிருந்தால் நான் அம்மா புகழ்தான் பாடுவேன்

              • அப்ப மீரானுக்கு உண்மை பற்றி கவலை இல்லை… எதிராளி பேசும் பேச்சுக்கு ஏற்ப நெளிவு சுளிவுகளுடன் தான் பேசுவார் இந்த மீரான்… என்னா ஒரு நியாயம் ! என்னா ஒரு நீதி! அதுவும் எதிராளி ஜெயாவின் மீது குற்றங்களை அடுக்கும் போது மீரானுக்கு சுர் என்று சாட்டையால் அடிபது போன்று வலிக்கின்றது. அதனால அம்மா புகழ் பாடுவாராம் இந்த மீரான்…! பாடுங்க மீரான் பாடுங்க! அம்மாவின் புகழ் பாடுங்க! நீங்க வணங்கும் அல்லா சாமி கூட உங்களை மன்னிக்க மாட்டார்….

                //கருணாநிதியை புனிதராக்க ஜெயலலிதாவை இகழ்வாதாயிருந்தால் நான் அம்மா புகழ்தான் பாடுவேன்//

              • மீரான் அவர்களே! , ஜெயாவா ,கருணாவா என்ற விவாதத்தை இந்த கட்டுரைக்கு தொடர்பின்றி தொடங்கி வைத்தது நீங்களும் , மேரியும் தானே! அப்படி இருக்க நீங்க கருணாவை ஜெயாவுடன் ஒப்பிட்டு கருணா கேட்டவர் என்று நீங்கள் முடிவு செய்து பேசும் தருணத்தில் கருணாவுக்கு ஆதரவா யாராவது(திப்பு) பேசும் போது எதுக்கு உங்களுக்கு அம்புட்டு கோபம் வருது? உடனே அம்மா புகழ் பாடுவேன் என்று எதற்காக ஒப்பாரி வைக்கின்றீர்கள்!? மனசுக்குள்ள அம்மாவின் மீதான அடிமைத்தனம் இருந்தால் அதனை நேரடியாகவே பேசலாமே! அம்மாவின் அடிமைகளுக்கா தமிழ் நாட்டில் பஞ்சம்! அந்த அடிமைகளுடன் சேர்ந்து நீங்களும் கும்மி அடிக்லாமே!

          • கருணாநிதியையும் ஜெயாவையும் ஒப்பிடுவதற்க்கு முன் மீரான் போன்றோரின் பார்வைக்கு சில செய்திகள்.

            கலைஞர் மீது அரசியல் ரீதியாக விமரிசனங்கள் இருந்தாலும் தமிழின நலனை கருத்தில் கொண்டு பார்த்தால் கலைஞர் தமிழர்கள் தவிர்க்க முடியாத அரசியல் ஆற்றலாக திகழ்கிறார் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.வாக்கு அரசியலில் பார்ப்பனிய எத்தணிப்புகளுக்கு சவாலாக மக்கள் செல்வாக்கு உள்ள தலைவராக அவர் மட்டுமே களத்தில் நிற்கிறார்.அவர் போன்ற ஒரு தலைவர் இல்லாமலிருந்திருந்தால் பார்ப்பனியத்தின் முழுமையான வேட்டைக் காடாக தமிழகம் மாற்றப்பட்டிருக்கும்.

            சிற்றூர்ப்புற மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்,பார்ப்பனிய சதியான தொழிற் கல்லூரி நுழைவு தேர்வை ரத்து செய்தது,சிறிய நகரங்களிலும் கல்லூரிகள் துவங்கியது, முசுலிம்களுக்கும் அருந்ததியருக்கும் உள் ஒதுக்கீடு என தமிழர் நலனில் அக்கறை கொண்டு ஆட்சி செய்தவர் அவர் என்பதையும்

            70-களின் பிற்பகுதியில் இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு எனும் பார்ப்பனிய சதியை MGR அரங்கேற்றிய போது அதை கடுமையாக எதிர்த்து போராடி திரும்ப பெற வைத்தார் கலைஞர்,அவரது பரப்புரையால் தமிழின எதிரியாக அம்பலப்பட்டு போன MGR மக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்க பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டை 31 லிருந்து 50 விழுக்காடு ஆக உயர்த்த வேண்டியிருந்தது.ஆக இன்று இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமுலில் இருப்பதற்கு கலைஞர்தான் காரணம் என்பதையும்

            பார்ப்பனியத்தின் பிரதிநிதியாக தமிழக அரசியலில் திட்டமிட்டு திணிக்கப்பட்ட செயலலிதா கூட சமூக நீதி காக்க பாடுபடுவதாக காட்டிக் கொள்ள வேண்டியிருப்பது கலைஞர் தலைமையில் தமிழின அணி வலுவாக இருப்பதால்தான்,காங்கிரசோ அல்லது பொதுவுடைமை கட்சியினரோ செயாவுக்கு மாற்றாக தி.மு.க.வின் இடத்தில் இருந்திருந்தால் தமிழகத்தில் சமூக நீதி சவக்குழியில் தள்ளப்பட்டிருக்கும் என்பதையும்

            நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

            • சகோதரர் திப்பு,நீங்கள் ஜெயலலிதா மேல் அளித்த புகார் பட்டியல் அனைத்தும் நான் அறிந்ததே.நான் மட்டுமல்ல மொத்த தமிழ்நாடும் முழு இந்தியாவும் அறிந்ததே.இதில் எதையும் அவர் ரகசியமாகவோ மூடி மறைத்தோ சொல்லவில்லை செய்யவில்லை.இதையும் அனைவரும் அறிவோம்.இதைவைத்து ஜெயலலித்தாவை நீங்கள் வெறுப்பதாக இருந்தால் கருணாநிதியிடம் இதைப்போல் வண்டி வண்டியாக சொல்லிக்கொண்டு போகலாம்.சொல் ஒன்று செயல் ஒன்றாக இருப்பவர் கருணாநிதி.அவரிடம் எந்த கொள்கை கோட்பாடும் கிடையாது.சுய ஆதாயம் ஒன்றுதான் குறி.பகுத்தறிவு சுயமரியாதை தமிழ் கண்ணியம் கட்டுப்பாடு இவை அனைத்தும் வெற்று வாய்ஜாலம்.முழு ஏமாற்று.சாய்பாபாவை கூப்பிட்டு வீட்டில் உட் காரவைத்து அவர் மனைவி சாஷ்ட்டாங்கமாய் காலில் விழுந்து வணங்குவார்.அவரின் வலது கரம் துரைமுருகன் பாபாவின் வாயிலிருந்து லிங்கம் வாங்குவார்.இவர் சிரித்து ரசித்து புலங்காகிதம் அடைவார்.இன்னொரு சந்தர்ப்பத்தில் இந்து என்றால் திருடன் என்பதும் தீ மிதித்த தன் அப்பாவி கட்சிக்காரனை கட்சியிலிருந்து விலக்கி பகுத்தறிவு என்று பசப்புவதும் இதுதான் கருணாநிதி.வாஜ்பேய் நல்லவர் பஜக தான் மோசம் என்று விசித்திர விளக்கம் கொடுத்து கூட்டணி சேர்வது.”ஊழல்வாதமா மதவாதமா என்றால் ஊழல்தான் கொடியது.ஊழலை ஒழிக்கத்தான் பஜகவோடு கூட்டு.”இந்த சுத்தசூபி பஜவை வலுவாக தமிழகத்தில் காலூன்ற வைத்துதான் தன் தொழில் சாம்ராஜியத்தை விண்ணுக்கு உயர்த்தியது.ஜெயலலிதாவையோ அவரின் குரு எம்ஜியாரையோ தமிழக முஸ்லிகள் ஒரு போதும் நம்பவும் இல்லை.ஆதரிக்கவும் இல்லை.இவரையே நம்பினார்கள்.இவரையே ஆதரித்தார்கள்.ராஜிவ்காந்தி கொல்லப்பட்டு அந்த கொலையில் திமுக மேல் சந்தேகப்பட்டு ஒட்டு மொத்த தமிழகமும் திமுகவை நிராகரித்த போதும் இவர் மட்டும் “துறைமுகத்தில்” கரை ஒதுங்கினார்.அது முஸ்லிம்களின் ஓட்டினால்தான்.இவ்வளவு பற்றுவைத்த அந்த ச்முதாயத்திற்க்கு இவர் ஆற்றிய நன்றி கடன் என்ன? கோயம்புத்தூர் குண்டு வெடிப்பும் அதை தொடர்ந்து நடந்த சூரையாடல். 19 அப்பாவிகள் இவரின் காவல் துரையால் சுட்டு கொல்லப்பட்டார்கள். எங்கேயோ இருக்கிற பாபர் பள்ளிக்கு இங்கு என்னடா ஊர்வலம் என்று கேட்டவரும் இந்த சிறுபான்மை இன காவலர்தான்.முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு என்ற கோரிக்கையையெல்லாம் இவர் காதிலேயே வாங்கவில்லை. அந்த பெண்மணி பரிசீலிக்கிறேன் அரசானை போடுகிறேன் என்று சொன்ன பிறகு வேறு வழியில்லாமல் யானை பசிக்கு சோளப்பொறி போல இந்த 3.5 சதவீதத்தை தந்தார்.உளறுவாயனாக இருந்தாலும் டி.ராஜேந்தர்,ஜெயேந்திரர் கைது செய்யப்படும்போது ஒன்றை சொன்னார் அதாவது “கருணாநிதியாக இருந்தால் சங்கரமடத்தின் வாட்ச்மேனை கூட கை வைத்திருக்க முடியாது” என்று.கைதுக்கான காரணம் எதுவாகவும் இருந்து விட்டு போகட்டும்.ராஜேந்தர் சொன்னது உண்மை.இப்போது பாருஙக்ள்..காலம் முழுக்க கருணாநிதியை வசைபாடுவதையும் கருணாநிதியை கருவருப்பதையுமே நோக்கமாக கொண்டு இருந்த சோ வுக்கு இதையம் நொந்த அஞசலி.இது ஏதோ இறந்த பிறகு உள்ள நாகரிகம் என்று நினைக்காதீர்கள்.போன வருடம் இதே சோ மருத்துவமனையில் இருக்கும்பொழுது சக்கரநாற்காலியோடு முடியாத நிலையிலும் போய் பார்த்து வந்தார்.அதே கால கட்டத்தில் இறந்து போன நாகூர்கனிபாவை பார்க்க மகனை அனுப்பி வைத்தார்.அந்த மனிதர் கடைசிவரை கலைஞர் கலைஞர் என்றே செத்தார்.கருணாநிதியை நாங்கள் விமர்சித்தால் அது பாக்கரோ பிஜேயோ சொல்லித்தந்ததாகத்தான் இருக்க வேண்டுமோ? இதுதான் கருணாநிதி மயக்கம்.எங்களுக்கும் இருந்தது இந்த கருணாநிதி மயக்கம்.தெளிந்து விட்டோம்.ஜெயலலிதா சந்தர்ப்பவாதியா சந்தர்ப்பவாதிதான் ஆனால் கருணாநிதிக்கு அடுத்துதான்.ஜெயலலிதா பேராசை பேயா? பேய்தான் ஆனால் கருணாநிதிக்கு அடுத்துதான்.ஜெயலலிதா ஊரை அடித்து உலையில் வைப்பவரா? உண்மை.ஆனால் கருணாநிதிக்கு அடுத்துதான்.தமிழ்நாட்டின் பல அரசியல் சீர்கேடுகளுக்கு அடித்தளமிட்டவர் இந்த கருணாநிதிதான்.நீங்கள் என்ன முட்டு கொடுத்தாலும் மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்தவர் கருணாநிதி.அதை நிசர்சனமாய் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

              • பார்பனியம் பாப்பாத்தி என்ற பூச்சாண்டி காட்டி கருணாநிதிக்கு வக்காலத்து வாங்காதீர்கள்.ஜெயலலிதா பாப்பாத்தியா பள்ளச்சியா துளுக்கச்சியா என் கிற ஆராய்ச்சியெல்லாம் எனக்கு தேவையில்லாதது.அது என்னங்க அது பார்ப்பணர்கள மட்டும் ஜாதி வச்சி குணத்தை பார்க்கலாம்.மற்ற ஜாதி காரர்களையெல்லாம் ஜாதி பார்க்க கூடாது.நான் சொல்கிறேன் கருணாநிதியை தூக்கி பிடிக்கத்தான் ஜெயலலிதா பாப்பாத்தி என்ற பூச்சாண்டி.ஜெயலலிதா தன்னை பாப்பாத்தி என்று பகிரங்கமாக சட்டசபையிலேயே அறிவித்துக்கொண்டவர்.அவரிடம் பார்ப்னீயம் வெளிப்பட்டாலும் அதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை.ஆனால் திருவாளர் கருணாநிதி உதட்டில் பார்ப்பண குரோதம் காட்டிவிட்டு எல்லா பார்ப்பணர்களோடும் நெருங்கி பல்லிளிப்பதும் அதில் ஒரு பூரிப்பு அடைவதும் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் தெரியும்.எப்படி பார்த்தாலும் ஜெயலலிதா கருணாநிதிக்கு மேம்பட்டவராகத்தான் தெரிகிறார்.

                • @ திப்பு ……

                  //சகதி நிரம்பிய குட்டையில் ஊறிக்கிடக்கும் எருமையை போல பார்ப்பனிய,இந்துத்துவ கொள்கைகளில் வெறியுடன் ஊறித்திளைத்த ஜெயலலிதாவுக்கும் பார்ப்பனிய,எதிர்ப்பு திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த கருணாநிதிக்கும் பெரும் வேறுபாடு உள்ளது.//

                  ஐயோ.. திப்பு அண்ணா .. அப்படிங்களானா.. உங்கள் பார்ப்பன எதிர்ப்பு திராவிட இயக்க பரம்பரையின் யோகியதையை கொஞ்சம் கீழ இருக்கும் லின்க்கு சென்று பாருங்கண்ணோய். இப்படி போலி பகுத்தறிவுவாதம் பேசி பொழப்பு நடத்துவதற்கு, சட்டசபையில் தன்னை வெளிப்படையாக பாப்பாத்தி என்று அறிவித்து கொண்ட ஜெயா எவ்வளவோ தேவலாம்..

                  • முக நூலில் திராவிட கழகத்தை சேர்ந்த பெரியாரிஸ்ட்டான மதிமாறனின் கலைஞரை மன்னிக்கவும் பார்ப்பனிய,எதிர்ப்பு திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த கருணாநிதியை பற்றிய பதிவு

                    “90 வயதை தொட்டப் பிறகு அதிக பயணங்களை குறைத்துக் கொண்டு முக்கியமானவற்றிக்குக்கூட கலைஞர் நேரில் செல்வதில்லை.
                    அதனால் தான் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியின் பிறந்த நாளுக்கு அவரால் நேரில் சென்று வாழ்த்துச் சொல்ல முடியவில்லை. அவ்வளவு ஏன் பெரியார் பிறந்த நாளுக்குக் கூட பெரியார் திடலுக்கு போக முடியாத கலைஞர்,

                    ..அதுவும் வயதானவர்களுக்கு கொஞ்சமும் ஒத்துக் கொள்ளாத கடும் குளிர் நிலவிய நேற்று, (6-12-2013) டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதைக் கூட தவிர்த்து விட்டு, தன் உடல்நலத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் நடிகர் சோ மகனின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திருக்கிறார்.
                    மகன்கள் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மகள் கனிமொழி எவ்வளவு ஒத்துமையா எல்லோரும் கலந்து கொண்டு கல்யாணத்தை சிறப்பித்திருக்கிறார்கள்.

                    சொல்லுங்க பிராமின்.. சொல்லுங்க..
                    இவரா உங்களுக்கு எதிரி?

                    உங்கள் மீது இவ்வளவு அன்போடு இருக்கிற அவருக்கு நீங்கள் ஒரு ‘செல்லாத ஓட்டு’ கூட போட்டதில்லை என்பது கூட பரவாயில்லை.. அவரை சாபம் விட்டு சபிக்காமலாவது இருக்கக் கூடாதா?

                    இன்னும் என்ன செய்தால் இவரை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்.. உங்களுக்காக எதையும் செய்யக் காத்திருக்கிறது அந்தக் குடும்பம். இனி வசவுகளைத் தவிர்த்து உங்கள் கோரிக்கைகளை மட்டும், (ஜெயேந்திரன் விவகாரம்போல் ரகசியமாக கூட) சொல்லுங்கள்… முடிந்தவரை முடித்து வைப்பார் தலைவர் கலைஞர்.”

                    மேலும் போட்டோ ஆதாரங்களுடன்:https://www.facebook.com/mathimaranv/posts/10201145477061128?pnref=story

                    • There is nothing wrong in Kalaignar attending the marriage at Cho’s house.Kalaignar is against Brahmanism only and not against individual brahmins.Rebecca Mary writes as if she has found something like Scotland yard.Mary should spend time and energy to read about Dravidian movement deeply.She proves that her understanding of Dravidian ideals is very shallow.Kalaignar had many brahmin IAS officers as his personal secretaries and he has personally helped many brahmins.Mary,you know something.Have you heard of Chinnakuthusi,the person tirelessly lashed at Brahmanism.He,himself was a Brahmin.Mary,try to dig out any worth while allegation against Kalaignar,if you can.This allegation is simply laughable.Rajaji,who was described as the architect of KULAKKALVI THITTAM was a close friend of Periyar.Rajaji’s policies were very bitterly fought by Periyar.But they were friends till their life time.

                    • Once Kundrakkudi Adigalar stayed at Periyar’s house for a brief while.After Adigalar took bath in the morning,Periyar (even though a staunch atheist himself)offered THIRUNEERU to Adigalar.His deed was like Voltaire who said,”Your ideal may be different from mine;But I will give my life to help you to talk about your ideal without any fear”

                    • சூரியன்…….

                      நான் கூறிய ஆதாரம் இது மட்டுமல்ல.. மேலும் கருணாநிதி தொடர்பான மேலும் ஒரு காணொளி ஆதாரத்தையும் அனுப்பி வைத்தேன். அதை வினவு ஏன் வெளியிடவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கின்றது. திருப்பதி தேவஸ்தானமே அவர் வீட்டிற்க்கு வந்து மந்திரம் முழங்கி வழிப்பாடு நடத்துவதும் அவர் மிகவும் மகிழ்ச்சியாக ரசிப்பதையும் கூறும் விதமாக நான் அனுப்பிய யு ட்யூப் காணொளியை வினவு வெளியிடவில்லை, தடை செய்துள்ளது. கருணாநிதியை குறித்து ஒரு உண்மையான விடியோவை அனுப்பினால் அதை ஏன் இவர்கள் தடை செய்ய வேண்டும். ம.க.இ.க விற்கும் கருணாநிதிக்கும் அப்படி என்ன பெருந்திணை உறவோ எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் விளங்கி கொண்டேன். நன்றி

                    • மேரி, பொதுவில் வீடியோ லிங்குகளை வெளியிடுவதில்லை, அது தொடர்பான தொழில்நுட்பம் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் சில தடவை அவை வெளியாகிவிடுகிறது. மறுமொழி விவாதங்களில் கூடுமானவரை தமது சொந்த கருத்தால் பேசுவது இரு தரப்பினரிடத்திலும் புரிதல் மேம்படுவதற்கு உதவி செய்யும். இரவல் சிந்தனைகள் இரண்டாம் பட்சமானவையாக இருக்கலாம். நன்றி.

                    • //She proves that her understanding of Dravidian ideals is very shallow.Kalaignar had many brahmin IAS officers as his personal secretaries and he has personally helped many brahmin …..//

                      கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டவில்லையாம்.அப்படி தான் இருக்கிறது உங்களின் பேச்சும். பார்ப்பனர்களுக்கு பரிதாபப்பட்டு உதவி செய்வது என்பது வேறு, அவர்களை ஏற்றுக் கொள்வது என்பது வேறு. கருணாநிதி செய்தது இரண்டாவதை தான். ஏற்கனவே கருணாநிதியை பற்றி குறிப்பாக கருணாநிதியின் பிழைப்பு வாத அரசியலை பற்றி திரு. மீரான் அவர்கள் கிழித்து தொங்க விட்டு விட்டார். இதற்க்கு மேல் நான் கூற ஒன்றுமில்லை.

                      அப்பல்லோ மருத்துவமனைக்கே சென்று சோவை நலம் விசாரித்த பின்பும், சோ தான் நடத்தியே துக்ளக் மாநாட்டில்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் கருணாநிதிக்கு வாக்களிக்காதீர்கள், ஜெயாவுக்கே உங்களின் ஓட்டுக்களை போடுங்கள் என்று தான் கூறினாரே ஒழிய அவருக்கு ஆதரவாக ஒரு முறை கூட பேசியது கிடையாது. இது வரை ஒருநாள் கூட கருணாநிதியையோ அல்லது திராவிட கொள்கைகளையோ மதித்து ஒரு வார்த்தை கூட துக்ளக் பத்திரிக்கையில் வந்தது கிடையாது. திராவிட இயக்க அரசியலை பற்றி வெறுப்பும், காழ்ப்பும் மட்டுமே தான் பக்கம் பக்கமாக நிரம்பி வழிந்திருக்கிறது. இருந்த போதிலும், கருணாநிதி சோவின் வீட்டு திருமணத்திற்கும், மருத்துவமனைக்குமாக ஓடோடி அலைகிறார் என்றார் இதில் அவருடைய மாண்பு ஏதும் வெளிப்படவில்லை. பார்ப்பனர்களுக்கு அவர் போடும் கூழை கும்பிடு மட்டுமே தான் தெரிகிறது.

                      எனக்கு திராவிட இயக்க வரலாற்றை சென்று படி என்று அறிவுறுத்துவதை விட , நீங்கள் கலைஞரின் இல்லத்திற்கு சென்று “மதியாதார் தலை வாசல் மிதியாதே” என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னதை அவருக்கு அறிவுறுத்துங்கள் . இதில் பெரியார், ராஜாஜி ஒப்புமை வேறு. சகிப்புத்தன்மைக்கும், பிழைப்புவாதத்திற்கும் மிக பெரிய வேற்றுமை இருக்கிறது. முதலில் புரட்சி துறவி குன்றக்குடி அடிகளையும் சோ என்கிற இழிந்த ஜந்துவையும் ஒரே தட்டில் வைப்பதே மிக பெரிய அபத்தம். இதில் ஒப்புமை வேறு. ராஜாஜியிடமும், குன்றக் குடி அடிகளின் விடயத்திலும் பெரியாருக்கு ஏற்பட்டது சகிப்பு தன்மை. கலைஞரிடம் இருப்பதோ சந்தர்ப்பவாதம் மட்டுமே. இன்னும் வினவின் பாணியில் கூற வேண்டுமானால்”பிழைப்புவாத பொறுக்கிதனம்” மட்டுமே. இரண்டையும் குழப்பி கொள்ள வேண்டாம் நன்றி.

                    • Rebecca Mary has double standard in defining friendship between Dravidian leaders and the brahmins.She has hatred against THAMIZHINATHIN THANITTHALAIVAR KALAIIGNAR the brim up to her neck.So she will not see the reason.Kalaignar,being the leader of non-brahmins need not have the mercy of brahmins.Kalaignar, as well as his followers are well aware of the insinuations/mis-propaganda being made by the Indian media generally controlled by Paarppana-baniya vested interests against them.By the by,what is your reaction to my comment in 13.1.3.Why you are silent?

                    • வினவு நிர்வாகத்தினருக்கு ……

                      உண்மை தெரியாமல் தங்களை தவறாக புரிந்து கொண்டமைக்காக நான் என் வருத்தங்களை தெரிவித்து கொண்டு அதற்கான மன்னிப்பினையும் கேட்டு கொள்கிறேன்..

                      //மறுமொழி விவாதங்களில் கூடுமானவரை தமது சொந்த கருத்தால் பேசுவது இரு தரப்பினரிடத்திலும் புரிதல் மேம்படுவதற்கு உதவி செய்யும். இரவல் சிந்தனைகள் இரண்டாம் பட்சமானவையாக இருக்கலாம். //

                      இரவல் கருத்துக்களில் உண்மை இருந்தால் மட்டுமே நான் அதை பதிவிடுவது. இருந்தாலும் உங்களின் இந்த கருத்துக்களை நிச்சயம் நான் பரிசீலிக்கிறேன். நன்றி

                • MGR உடனான நெருக்கத்தையும் திரைப்பட கவர்ச்சியையும் வைத்து முதலில் கடசியை கைப்பற்றினார்.அதன்பின் இவற்றை வைத்தே அரசியல் நடத்த முடியாது.அவரது சொந்த திறமையால் முன்னேறினார் என்று ரெபேக்கா மேரி சொல்வதை படித்திருப்பீர்கள்.பார்ப்பன ஊடகங்கள்,பார்ப்பனிய ஆற்றல்களின் கள்ளப்பரப்புரைகள் ஆதரவால் ஜெயலலிதா இப்போதிருந்த இடத்தை அடைந்தார்,அதில் தொடரவும் அந்த ஆதரவு காரணமாக இருக்கிறது.

                  இதைத்தான் பார்ப்பனியத்தின் பிரதிநிதியாக தமிழக அரசியலில் ஜெயா இருக்கிறார் என்று சொல்கிறேன்.அதில் உங்களுக்கு என்ன பிரச்னை.ஏன் இவ்வளவு கோபம்.

                  • ஜெயலலிதாவை எந்த ஒரு மீடியாவும் ஆதரித்தது இல்லை, கருணாநிதிக்கு இருக்கும் மீடியா ஆதரவில் ஒரு பங்கு கூட ஜெயலலிதாவுக்கு கிடையாது. துக்ளக் சோ கூட முதலில் ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்து தான் திமுக தமாகா கூட்டணியை உருவாக்கினார்… ஜெயலலிதாவை போல் மீடியா எதிர்ப்பை வேறு எந்த இந்திய அரசியல்வாதியும் சந்தித்து இருக்க மாட்டார், மீடியா ஆதரவை அவர் எதிர்பார்க்கவும் இல்லை.

                    அதேபோல் அரசு அதிகாரிகளை ஒரே அடியாக வேலையை விட்டு நீக்கி அவர்களின் எதிர்ப்பையும் சந்தித்தவர் தான் ஜெயலலிதா.

                    தமிழகத்தில் பிஜேபியோடு கூட்டணி வைக்க அனைத்து கட்சிகளும் தயங்கிய போது அவர்களோடு கூட்டணி வைத்தவர் ஜெயலலிதா இதன் மூலம் சிறுபான்மையினர் எதிர்ப்பை சந்தித்தார்.

                    கோவில்களில் ஆடு கோழிகளை பலியிட கூட்டத்து என்று சொல்லி ஹிந்து மக்களின் சிலர் எதிர்ப்பையும் சந்தித்தார்.

                    எல்லோரும் விடுதலை புலிகளை ஆதரித்து அவர்களை போராளிகள் என்று பொய் பிரச்சாரம் செய்த போது ஜெயலலிதா மட்டும் தான் அந்த பொய் பிரச்சாரங்களை சரியாக எதிர் கொண்டார்… போர் என்றால் மக்கள் மடிய தான் செய்வார்கள் என்று சொன்னதற்காக காரணம் புலிகளின் பொய் பிரச்சாரங்களை எதிர்க்க சொல்லப்பட்ட வார்த்தைகள்.

                    ஆனால் தமிழகத்தில் எந்த ஒரு மீடியாவும் இலங்கை போர் பற்றி நேர்மையாக பேசியதே இல்லை…

                    இப்படி பல எதிர் மறை அரசியல் செய்தாலும் மக்களின் ஆதரவு ஜெயலலிதாவிற்கு இருந்தது, அதிமுக வாக்கு வங்கி கடைசி வரையில் கரையாமல் அப்படியே அவருக்கு இருந்தது, அதனால் தான் அவரால் கூட்டணி கூட வைக்காமல் தனித்து வெற்றி பெற முடிந்தது.

                • சகோதரர் மீரான்.,

                  நான் செயா மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை நாடறியும் நானும் அறிவேன் என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கிறீர்கள்.

                  அப்படியானால் முசுலிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த கருணாநிதியை விட இட ஒதுக்கீடு விழுக்காட்டை கூட்டுவதாக வாக்களித்து ஏமாற்றிய செயா மேல் என்று நீங்கள் சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது.அப்பாவித்தனம் என்றா.நெஞ்சறிந்து சொல்லும் பொய் என்றா.

                  90-களிலிருந்தே இட ஒதுக்கீடு கேட்டு முசுலிம்கள் குரல் எழுப்பி வந்தனர்.2001-ல் ஆட்ச்சிக்கு வந்த செயா ஐந்தாண்டுகள் அது பற்றி எதுவுமே சொல்லாமல் இருந்து விட்டு ஆட்ச்சிக்காலம் முடியும் தருவாயில் இட ஒதுக்கீடு அளிக்க ஆணையம் அமைப்பதாக போக்கு காட்டினார்.2006-தேர்தல் அறிக்கையிலும் இட ஒதுக்கீடு அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.கருணாநிதியும் அவ்வாறு வாக்குறுதி கொடுத்தார்.கருணாநிதி ஆட்ச்சிக்கு வந்தார்.இட ஒதுக்கீடு அளித்தார்.செயா வந்திருந்தால் ஏமாற்றியிருப்பார்.சான்று தேடி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.2004-ல் ஆந்திரா இடஒதுக்கீட்டை எதிர்த்தது ,2011-ல் வாக்களித்து ஏமாற்றியது .இவையெல்லாம் அவரது இந்துத்துவ சார்பு முசுலிம் வெறுப்பை காட்டுகிறது.நீங்களோ ”அம்மா ”புகழ் பாடுவேன் என மிரட்டுகிறீர்கள்.

                  கோவை கலவரத்தை எடுத்துக்கொண்டால் கருணாநிதியின் ஒடுக்குமுறையை நான் மறைக்கவில்லை.அதனை நியாயப்படுத்தவும் இல்லை.ஆனால் அந்த கால கட்டத்தில் அல் உம்மா இயக்கம் தனது முட்டாள்தனமான செயல்பாடுகளால் கருணாநிதியை இக்கட்டான நிலைக்கு தள்ளியது .அதை வைத்து பார்ப்பன ஊடகங்களும் ஆற்றல்களும் கொடுத்த அழுத்தத்திற்க்கு பணிந்து ஒடுக்குமுறைகளை ஏவினார் அவர்.அப்படியான அழுத்தங்களுக்கு பணிந்து போகிறவர் கருணாநிதி,என்பதால்தான் அவரால் சங்கர மட காவலாளியை கூட தொட முடியாமல் போகிறது.

                  உங்கள் வீரமங்கையும் சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் என இலேசாக கூட முணுமுணுக்கவில்லை . பார்ப்பன கும்பல் சாட்ச்சிகளை மிரட்டி உருட்டிபிறழசாட்ச்சியாக மாற்றியபோதும் அதை கண்டும் காணாமல் ஆடசியில் வீற்றிருந்தார் வீர மங்கை.தான் முன்னெடுத்த வழக்காயிற்றே என்று கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை.இது என்ன வகை நேர்மை.அதனையும் புகழ்ந்து பாட உங்களை போன்றோர் கிளம்பினால் என்ன சொல்வது.

                  இன்னும் நிறைய இருக்கிறது.பிறகு பேசுவோம்.

                  • திப்பு, நான் என்னவோ ஜெயலலிதாவை மனிதகுல மாணிக்கம் தமிழரை உய்விக்க வந்த உத்தம புத்திரி என்று வாதாடுவது போல மடைமாற்றி மீண்டும் பக்ககம்பக்கமாய் பட்டியலிடுகிறீர்களே..என்னுடைய அடிப்படை வாதம் என்னவென்றே அறியாமல்தான் கருணாநிதி மயக்கத்தில் பதறுகிறீர்கள்.உங்களைப்போலவே அவரை நம்பி ஏமாந்து பிறகு தெளிந்தவனின் உளக்குமுறலே அவரைப்பற்றிய என் விமர்சனம்.கருணாநிதியின் கபடவேடங்களை தோலுரித்தால் உடனடியாக பதறி ஜெயலலிதாவை பாருங்கள்..என்று பட்டியலிடுவது என்ன வகை வாதம்?இதில் திப்புசுல்தான் உதாரணம் வேறு.நான் ஜெயலலிதா புகழ் பாடுகிறேனா? நீங்கள் வரம்பு மீறி கருணாநிதி போதையில் தள்ளாடுகிறீர்களா?பதவிக்கும் அதிகாரத்திற்க்கும் தன் வயது அனுபவம் அறிவு அனைத்தையும் மற்ந்து ஆளாய் பறக்கும் அவரின் செயல்களின் மிகச்சிலதை தான் நான் குறிப்பிட்டுருக்கிறேன்.அதற்க்கு உங்களிடம் பதிலே இல்லை.எந்த முன் அன்பவமும் இல்லாமல் எம்ஜியாரோடு சில வெற்றி படங்களின் கதாநாயகியாய் நடித்ததை மட்டுமே தகுதியாய் கொண்டு அரசியலுக்கு வந்த ஒரு பெண்ணின் செயல் பாடுகளைத்தான் குறையாய் கூறி கருணாநிதிக்கு ஒரு பலவீனமான முட்டைகொடுக்கிறீர்கள்.”பதிமூன்று வயதில் செங்கொடியை பிடித்தேன்.பெரியாரையும் அண்ணாவையும் பார்க்கவில்லை என்றால் கம்யூனிஸ்ட்டாக இருந்திருப்பேன்.பதவி என்பது என் தோளில் கிடக்கும் துண்டு கொள்கை என்பது மானம் காக்கும் என் வேட்டி(பல நேரங்களில் வேட்டியை அவிழ்த்துவிட்டு வெறும் தோள் துண்டோடுதான் நின்றிருக்கிறார்)இதுமாதிரி வாய்ஜாலத்தைதவிர வேறு என்ன உருப்படியாய் செய்தார்.நான் அவருடைய கொள்கை கோட்பாட்டு செயல்பாடுகளையே பேசுகிறேன்.அதற்க்கு பதிலாக நீங்கள் ஜெயலலிதாவின் அரசு நிர்வாக தவறுகளையே பெரும்பாலும் சுட்டிக்காட்டுகிறீர்கள்.இது திமுக அதிமுக தொண்டர்களின் சண்டையை போல மாறும்.இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தினாரா என்று கேட் கிறீர்கள்.நான் கேட் கிறேன் முஸ்லிகளுக்கான இடஒதுக்கீட்டை ஜெயலலிதா ஏன் தரவேண்டும்? ஜெயலலிதாவா முஸ்லிம் ஓட்டு வாங்கி கொளுத்தார். ஜெயலலிதாவா” காயிதேமில்லத் சாகும் பொழுது என் கையை பிடித்துக்கொண்டு,”கருணாநிதி உன்னை விட்டால் என் சமுதாயத்திற்க்கு வேறு நாதியில்லை நீதான் அவர்களுக்கு காவல்”என்று சொன்னதாக சொன்னார்.முழு இந்தியாவிலும் ஒரு முழு சமூதாயமே ஒரு அரசியல் கட்சியை அதன் தலைவரை இந்த அளவிற்க்கு ஆதரித்தது இல்லையே. இதோ இவ்வளவுக்கு பிறகும் இன்னும் உங்களைப்போன்றவர்களுக்கு மயக்கம் தெளியாமல்தானே பித்துபிடித்து பேசுகிறீர்கள். அந்த நன்றி அவ்ருக்கு இருக்குமா?கிஞ்சித்தும் கிடையாது.முஸ்லிகள் என்று இல்லை அவரால் எந்த சமுதாயமும் பலனடைந்ததில்லை. அவர் குடும்பம் தவிர.எம்ஜியார் அமெரிக்காவில் இருக்கும் பொழுது “ஓட்டு எனக்கு போடுங்கள் அவர் வந்தவுடன் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன்” என்று சொன்னவர்தானே அவர்.அவருக்கு இருந்த ஆரோக்கியம் அறிவு அனுபவம் சாதுர்யத்திற்க்கு கொஞ்சமாவது பொதுநல எண்ணத்தோடு இருந்திருந்தால், இன்று இந்துத்துவம் எட்டி பார்த்து நாக்கில் எச்சியூற காத்துக்கொண்டிருக்கிறதே.. அது இந்த பக்கமாக தலை வைத்து படுக்ககூட நினைத்த்கிருக்காது.அன்பவகுறைவு ,அவசரகுடுக்கை,ஆணவப்போக்கு அதிகாரத்திமிர் என்று எவ்வளவோ இருந்தாலும் இந்த மாநில நலனை விட்டுக்கொடுக்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவராகத்தான் ஜெயலலிதா இருந்தார்.தன் கடைசி காலத்தில் ஒரு முதிர்ச்சியும் பக்குவமும் அவரிடம் தெரிந்தது.வேறு வழியில்லமலேயே எங்களைப்போன்றவர்கள் ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டியும் இருந்தது. கருணாநிதியில் வஞ்சிக்கப்பட்டோம் ஏமாற்றப்பட்டோம்.வ்ழியற்று ஜெயலலிதாவை ஆதரித்தோம்.

              • \\எங்கேயோ இருக்கிற பாபர் பள்ளிக்கு இங்கு என்னடா ஊர்வலம் என்று கேட்டவரும்//

                இதனை ஆதாரத்தோடு உங்களால் மெய்ப்பிக்க முடியுமா.மெய்ப்பியுங்கள்.மேற்கொண்டு பேசுவோம்.அதொடு இந்த சுட்டியையும் படித்து விட்டு வாருங்கள்.

                http://tamil.oneindia.com/amphtml/news/2003/02/13/karuna.html

                • திப்பு, கருணாநிதியோடு ஜெயலலிதாவை ஒப்பிட ஆரம்பித்துவிட்டாலே கருணாநிதி ஜெயலலிதாவிடம் தோற்றுவிட்டார்.அவ்ரின் அனுபவம் பின்னணி என்ன ஜெயலலிதாவின் பின்னணி என்ன? தமிழகத்தின் மிகப்பெரும் தலைவர்களால் வளர்க்கப்பட்டவர் கருணாநிதி.ஜெயலலிதா இப்படித்தான் வளர்ந்தாரா?ஆரம்ப காலங்களில் அந்த தலைவர்களின் தாக்கம் கருணாநிதியிடம் இருந்திருக்கலாம்.அண்ணாதுரை இறந்ததோடு மிக சாதுர்யமாக அதற்க்கு அடுத்த கட்ட தலைவர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு கட்சியை கைப்பற்றியதை ராஜதந்திரம் என்று வர்ணிக்கலாம்.பெரியாரின் மரியாதை கருதி தலைவரே இல்லாமல் பொதுச்செயலாளர் மட்டும் இருந்த கட்சிக்கு பெரியார் இருக்கும் பொழுதே தலைவர் பதவியை ஏற்ப்படுத்தி தானே தலைவரானதையும் சாணக்கியம் என்று உருகலாம்.ஆனால் எந்த அனுபவமும் அறிவு கூர்மையும் பேச்சாற்றலும் இல்லாத எம்ஜியாரிடம் அவர் சாணக்கியம் தோற்றுத்தான் போனது.அவ்ர் பாடம் படித்த பெரியாரின் கொள்கைகள் அவருடைய மேடை பேச்சு அலங்காரத்திற்க்குத்தான் பயன்பட்டதே ஒழிய அவரின் செயல் பாடுகள் அரசியல் போட்டியாளர்களை வேரறுப்பதில்தான் குறியாக இருந்தது.இன்று சூம்பிய மாங்கொட்டையாய் பிதற்றி திரியும் வைகோவும் அவரால் வஞசிக்க பட்டவர்தான்.இருந்தாலும் ஏதோ கொள்கை என்பது அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருந்தது.உலகமயமாக்களுக்குப்பின் ஏற்ப்பட்ட அரசியல் மாற்றம் மத்தியில் தொடர்ந்து உறுதியற்ற கூட்டணி அரசு.அதில்தான் அவர் யார் என்பதை உலகுக்கு காட்டினார்.எந்த அரசு மத்தியில் வந்தாலும் ஏதாவது ஒன்றை சொல்லி கூட்டணியில் இடம் பெறுவது.வெட் கமே இல்லாமல் பேரம்பேசி தனக்கு பிடித்த துறைகளை வாங்கி கொள்வது மீண்டும் அந்த அரசு வரும் என்பது போல் தெரிந்தால் தொடர்வது.இல்லையென்றால் சந்தர்ப்பம் பார்த்து விலகி கொள்வது இதுதான் நடந்தது.அற்ப நாட் களில் பஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுகவின் இடத்தை நிரப்ப “நாடு இப்போது இருக்கும் நிலையில் தேர்தலை தாங்குமா” என்று தேசநலனில் ஊறியவரைப்போல பிஜேபியோடு சேர்ந்து நன்றாக அனுபவித்துவிட்டு தன் மருமகன் மாற்னின் வைத்திய செலவுகளையும் மத்திய அரசின் தலையில் கட்டி மருமகன் ஆயுள் முடிகிறது மத்திய அரசின் ஆயுளும் முடிகிறது.பெசன்ட்நகர் மயானத்தில் தகனம். மத்திய அமைச்சர்களும் வந்திருக்கிறார்கள்.இறுதி சடங்கு முடிந்து அவ்ர்களை வழி அனுப்பிய கையோடு கூட்டணிக்கும் கைகழுவி விட்டார்.மறு தேர்தலில் காங்கிரசோடு கூட்டணி.மருமகனின் மகனை மகனை(தயாநிதி)தேர்தலில் நிறுத்துகிறார்.வேறு யாரும் இல்லையா என்று செய்தியாள்ர்கள் கேட் கிறார்கள்.”என் பேரன் Hந்தி நல்லா பேசுவான் என் கிறார்.அப்பாவி தொண்டனை மொழி போராட்டத்தில் தூண்டிவிட்ட காலத்தில் தன் பேரனை கிந்தியில் படிக்க வைத்திருக்கிறார் என்று பொருள்.தேர்தலில் வெற்றியும் பெற்றாகி விட்டது.ஐக்கியமுன்ன்ணி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என் கிறார்.சோனியா த்லைமையிலான அரசு பூரிக்கிறது.இலாகா ஒதுக்க படுகிறது.தகப்பன் இருந்த துறையான தொழில்துறை மகன் மாறனுக்கு தரப்படுகிறது.சென்டிமென்டாக மகன் இதைத்தான் விரும்புவார் என்று சோனியா நினைத்தது நியாயம்தான்.கருணாநிதிக்கு ஏது சென்டிமென்ட்?ஆதாயம் ஒன்றுதானே குறி.”தகவல் ஒலிபரப்பு துறை தந்தால் தாருங்கள் இல்லையேல் வாபஸ்” என்று மிரட்டி தனக்கு எது தேவையோ அதை வாங்கித்தான் சன் குழுமம் இமாலய வளர்ச்சி கண்டது.2G ஊழல் சந்தி சிரித்தது.இதோ இன்றைக்கு பி எஸ் என் எல் விஷய்மாய் வழக்கு வந்திருக்கிறது.

                  • மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவது கொச்சைப்படுத்துவது என்பதை ஒரு பொழுதுபோக்காகவே செய்பவர் கருணாநிதி.சேதுசமுத்திர திட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தார்.அது நல்ல திட்டமா இல்லையா என்பது தனி விவாதம்.சரி கொண்டு வந்தார்.அதை மதவெறியை கிளப்பி தடுக்க நினைக்கிறது ஒரு வானர கூட்டம்.இதை எப்படி எதிர் கொள்வது?அந்த வானர கூட்டத்தின் நோக்கம் மத நம்பிக்கையை பயன்படுத்தி புரட்டுகளை அவிழ்த்துவிட்டு மக்களை திரட்டி அந்த திட்டத்தை தடுத்துவிடவேண்டும் என்பதுதான்.மக்களை இந்த சூழ்சிக்கு பலியாகாமல் எப்படி தடுப்பது?எவ்வளவோ வழிகள் இருக்கிறது.” ஏம்பா இதே ராமரின் பெயரை சொல்லித்தான் கண்ணுக்கு முன்னால் கம்பீரமாய் நினற பள்ளிவாசலை இடித்து தள்ளி ரத்த ஆற்றை ஓட்டுனீர்கள்.அதே ராமரின் பெயரை சொல்லி கண்ணுக்கும் தெரியாத கருத்துக்கும் விளங்காத ராமர் பாலம் இருக்கிறது என்று சொல்லி மறுபடியும் ஒரு வரலாற்று தவறை நிகழ்த்தப்போகிறீர்களே இது என்ன நியாயம்?” என்று கேட்டால் நிச்சயம் நடுநிலை மக்கள் சிந்திப்பார்கள்.அதை விடுத்து “ராமர் எந்த காலேஜில் படித்தார் எப்போது எஞசினீயரிங்க் பட்டம் வாங்கினார்”என்ற நக்கலெல்லாம் எதற்க்கு?ராமர் மேல் பற்று இல்லாத மக்களுக்கு கூட முகசுழிப்பும் ஆத்திரமும் வரும்.இது எதிரிக்குதான் சாதகமாக முடியும்.இப்படி நைய்யாண்டி செய்வதைத்தான் பகுத்தறிவு என்றும் நினைத்துக்கொள்கிறார்.பெரியார் செய்தார் இதைவிட தீவிரமாக கடவுளாக நம்பபட்ட சிலைகளையே போட்டு உடைத்தார்.செயல் அள்வில் இதையும் நான் ஆதரிக்கவில்லை.ஆனாலும் இவ்வளவு கடுமையாக நடந்தும் அன்று சமூகம் கொந்தளிக்கவில்லை.காரணம் பெரியாரிடம் இருந்த சமூக கோபம்.அடக்குமுறைக்கும் ஆதிக்கத்திற்க்கும் எதிரான அவருடைய அறச்சீறம்.அதே பெரியார் கடவுள நம்பிக்கைக்கு எதிரான கடுமையான விமர்சனங்களையும் நிலைப்பாட்டையும் எடுத்துவிட்டு மக்களை திரட்டி அழைத்துக்கொண்டு போய் கோயிலில் போய் சாமி கும்பிடு என் கிறார்.நேர் முரணான செயல்.ஆனாலும் அது பைத்தியக்காரத்தனாமாய் பார்க்கபடவில்லை.அந்த செயலுக்கு பின் இருந்த சமூக அக்கறை தெளிவாக சமூகத்திற்க்கு தெரிந்திருந்தது.இந்த நேர்மை கருணாநிதியிடம் உண்டா?ஒரு சமூகத்தை தாஜா செய்ய இன்னொரு சமூக மக்களின் நம்பிக்கையை கொச்சைபடுத்தலை பெரிய சீர்திருத்தம் என்று பகடி செய்வது எப்படி வெற்றி பெறும்.இதை எந்த சமூகமும் விரும்பாது.அவர் பேரன் கள் நடத்தும் டிவிக்களை பாருங்கள்.எல்லா கூத்துகளும் அரங்கேறும். ஜெயலலிதா இப்படியெல்லாம் நடிக்கவே இல்லை. அவர் அவர் சமய நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.அதை மறைக்கவில்லை.ஒளிக்கவில்லை.எந்த சமூக மக்களின் நம்பிக்கைகளையும் அவர் எள்ளிநகையாடவில்லை.நான் அதை விரும்புகிறேன்.ஒரு முஸ்லிமாக நானும் அவ்வாறே இருக்கிறேன். எந்த நிலையிலும் என் மார்க்க கொள்கைகளை நான் விட்டு கொடுப்பதில்லை.காவி கூட்டம் என் சங்கை அறுத்தாலும் வந்தேமாதரம் என்றோ பாரதமாதாகீ ஜே என்றோ கூறமாட்டேன்.மீண்டும் கூறிக்கொள்கிறேன் கருணாநிதியை விட ஆயிரம் மடங்கு மேல் ஜெயலலிதா. கருணாநிதியை தூக்கிநிறுத்த்வே பாப்பாத்தி பார்ப்பானீயம் என்ற பயம் காட்டி கொண்டிருக்கிறார்கள்.தன் ஆதாயத்திற்க்காக எதனோடும் சமரசமாவார் கருணாநிதி.ஜெயலலிதா அவ்வளவு வேகமாக விழுந்துவிட மாட்டார்.சீர்கேட்டின் பெரிய சீர்கேடு கருணநிதிதான். அதற்க்கு அடுத்தே ஜெயலலிதா.

                  • \\ கருணாநிதி ஜெயலலிதாவிடம் தோற்றுவிட்டார்……எம்ஜியாரிடம் அவர் சாணக்கியம் தோற்றுத்தான் போனது.//

                    திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை பல போர்களில் வென்றிருந்தாலும் கடைசி போரில் துரோகிகளின் கைவண்ணத்தால் அவர்களிடம் தோற்று போனார்.ஆனால் அது அவரது வாழ்வின் தோல்வியல்ல. போர் நடந்த இந்த நாட்டின் மக்களின் மனங்களில் இன்றும் வாழ்வது திப்புவா.இறுதி போரின் ஆங்கிலேய படைத்தளபதியா .அதே போலத்தான் வரலாறு பாசிச கோமாளிகள் MGR -க்கும் செயாவுக்கும் அவர்களை எதிர்த்து நின்ற கருணாநிதிக்கும் உரிய இடங்களை வழங்கியிருக்கிறது.

                    1980-ல் இந்து முன்னணி துவக்க விழா ஊர்வலத்தை சபையர் திரையரங்கு முன்னால் மேடை அமைத்து பார்வையிட்டவர் MGR.அந்த ஊர்வலத்தில்தான் தமிழகத்தில் முதன் முதலாக ”பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு’..”’துலுக்கனை வெட்டு துலுக்கச்சியை கட்டு ”முதலான மதவெறி முழக்கங்கள் எழுப்பபட்டன.இதையடுத்து சட்டப்பேரைவையில் கேள்வி வந்த போது ”முசுலிம்களுக்கு என முசுலீம் லீக் இருக்கும்போது இந்துக்களுக்கு என இந்து முன்னணி இருக்க கூடாதா ”’என கேட்டார் அந்த பாசிச வெறியன்.

                    செயா வைப்பற்றி சொல்லவே வேண்டியதில்லை.கரசேவை ஆதரவு,கரசேவைக்கு ஆளனுப்பியது,மூவாயிரம் முசுலீம்களின் பிணங்களின் மீது ஏறிச்சென்று காலடியில் லட்சக்கணக்கான முசுலீம்களை அகதி முகாமில் வைத்து நசுக்கியவாறு முதல்வர் பதவி ஏற்ற மோடிக்கு நேரில் ஓடோடி சென்று வாழ்த்தியது,என அவரது இந்துத்துவ வெறி நாடறிந்தது நீங்களும் அறிந்தது.இன்று அ,தி.மு.க.தென்மாவட்டங்களில் தேவர் கடசியாகவும் கொங்கு மண்டலத்தில் கவுண்டர் கடசியாகவும் இருப்பதும் இந்து மத வெறி அமைப்புகளில் இந்த இரு ஆதிக்க சாதியினர் கணிசமாக இருப்பதும் தற்செயலானது அல்ல.திட்டமிட்டதொரு சதி .

                    இப்படியாக மக்களை மதரீதியாக பிளவு படுத்தி தமிழகத்தை குருதிக்களரியாக மாற்ற துணை போயிருக்கும் MGR -க்கும் செயாவுக்கும் வரலாற்றின் குப்ப்பைத்தொட்டியில்தான் இடம்கிடைக்கும்.

                    • இது தொடர்பாக ஒரு செய்தியை பதிவு செய்ய வேண்டும்.ஆயிரம் செயலலிதாக்கள் வந்தாலும் தமிழக மக்களிடையே நிலவும் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்க முடியாது.என்னதான் தேவர் சாதியினரை முசுலிம் எதிர்ப்பு இந்து மதவெறியின் பக்கம் தள்ளிவிட முயன்றாலும் முசுலீம்களுக்கும் தேவர் சாதியினருக்குமான நல்லுறவை கெடுக்க முடியாது. அதற்க்கு வரலாற்று காரணங்கள் இருக்கின்றன..

                      தென் மாவட்டங்களில் தேவர் சாதியினர் முசுலீம்களை மாமா என்று அழைப்பதை இன்றும் காண முடியும்.அதற்க்கான காரணத்தை ஒரு தேவர் சமூக பெரியவர் சொன்னபோது அவர்களின் நன்றி உணர்ச்சியை கண்டு மெய் சிலிர்த்து போனேன்.

                      வேலு நாச்சியாரின் கணவர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவர் வெள்ளையரை எதிர்த்து வீரச்சாவு அடைந்த பின்னர் வேலு நாச்சியார் வெள்ளையரை எதிர்த்து களம் புகுந்தார். போரில் தோல்வியுற்ற அவர் தனது மகளுடன் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்ச்சிக்கு தப்பி செல்கிறார்.அந்தவிருப்பாட்ச்சி பாளையக்காரர் ஹைதர் அலியின் நண்பர் கோபால் நாயக்கர் மூலம் ஹைதர் அலியிடம் ஆயுத மற்றும் படை உதவி கேட்டுபபெற்றார்.படை திரட்டவும் பயிற்சி அளிக்கவும் எட்டாண்டு காலம் ஆனது.இந்த கால கட்டத்தில் ஹைதர் அலி வேலு நாச்சியாருக்கும் அவரது மகளுக்கும் ஒரு சகோதரன் போல பாதுகாபபாக இருந்தார்.நாச்சியார் அவரை அண்ணன் என்றே அழைத்தார்.பின்னர் அந்த படையின் உதவியுடன் ஆங்கிலேயர் மீது போர் தொடுத்து சிவகங்கையை மீட்டு மீண்டும் ராணியானார்.அந்த போரில் ஏராளமான முசுலிம் வீரர்களும் தங்கள் சகோதரி நாச்சியாருக்காக உயிர்த்தியாகம் செய்தனர் .

                      இந்த விவரங்களை சொல்லிவிட்டு உணர்ச்சி பெருக்கால் கரகரத்த குரலில் அந்த பெரியவர் சொன்னார்.

                      ”நாங்கள் வேலுநாச்சியாரின் பிள்ளைகள்.நீங்கள் என் தாய்க்காக உயிர் கொடுத்த,எங்கள் தாய்மாமன் வீட்டு பிள்ளைகள். அதனால்தான் உங்களை மாமா என்று கூப்பிடுகிறோம்””’.

                    • இந்த காணொளியை காண்போர் தமிழகத்தின் மத நல்லிணக்கத்தை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.அதனால்தான் செயாவின் சதி வேலைகள் இங்கு எடுபடவில்லை.மீரான் போன்றோர் அவரை புரிந்து கொள்ளவும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

                    • வீடியோ லிங்குகளை தவிர்க்கவும். இதற்கு முன்னர் சில வீடியோ லிங்குகள் தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக வெளியாகிவிட்டது. மேரிக்கு போட்ட பதிலில் இது குறித்த விளக்கம் உள்ளது. நன்றி

                    • எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவுக்கும் வரலாற்றில் எங்கே இடம் கிடைக்கும் என்பது பற்றி எனக்கு என்ன அக்கறை? அது அவர்களின் பக்தர்கள்படவேண்டிய கவலை. உங்களுடைய கருணாநிதி பக்தி அவரை காப்பற்ற வேண்டி இவர்களை மட்டம் தட்டுகிறது.இதுதான் சகிப்பதற்க்கு கஷ்ட்டமாக இருக்கிறது.நீங்கள் பட்டியலிட்ட இந்து முன்னணி ஊர்வலம் சபையர் திரையரங்கு எம்ஜியார் பார்வையிடல் வன்முறை கோஷம்…இன்னும் ஒரு முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள்.அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் மீனாட்சிபுரம் என்ற ஊரில் தலித் மக்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்று அந்த ஊரின் பெயரே அகமதுநகர் என்று மாறும் அளவிற்க்கு போய் அன்றைய முதல்வர் எம்ஜியார் தாய்மதம் திரும்புவோருக்கு தையல் மெஷின் தருவேன் கரவைமாடு தருவேன் என்றார்.இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் நான் கருணாநிதியை விமர்சிக்கிறேன். இதனாலெல்லாம் நான் பட்டியலிட்ட கருணாநிதியின் சந்தர்ப்பவாதம் எப்படி அய்யா நியாயமாகும்.எம்ஜியாரின் அன்றைய இந்து முன்னணி ஆதரவுக்கு ஆர் எம் வீரப்பன் போன்றவர்கள் பெரிய ஊக்கமாக இருந்தார்கள் என்பதையும் நாம் அறிந்தோம்.முஸ்லிம் என்றாலே திமுக காரன் என்ற நிலைதான் அன்று.அதிமுகவின் முஸ்லிம் ஆச்சர்யமாய் பார்க்கப்பட்டான்.இப்படி பெரும்திரளாய் மதம் மாறிய மக்கள் கட்சியும் மாறிவிட்டால் என்ன செய்வது.மாறியவர்கள் அனைவரும் அடித்தட்டு மக்கள்.அவர்கள்தான் அதிமுக என்ற கட்சியின் ஆணிவேர்.ஒரு ஓட்டு அரசியல்வாதி கலங்கித்தான் போவான்.எம்ஜியாருக்கு இப்படித்தான் தூபம் போடப்பட்டது.உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் எம்ஜியாருக்கு காவி சிந்தனை இருந்ததா?அப்படி எந்த பின்புலமும் எம்ஜியாருக்கு இருந்ததாக தெரியவில்லை.கருணாநிதிதான் அப்படி ஒரு சந்தேகத்தை முஸ்லிகள் மனதில் விதைத்து இன்னும் அவர்களை தன்னோடு தக்கவைத்துக்கொண்டார்.நான் சொல்கிறேன் எம்ஜியாருக்கு இப்படி பெருவாரியான முஸ்லிம் ஆதரவு வாக்கு இருந்திருந்தால் கண்டிப்பாய் கருணாநிதி அளவிற்க்கு நன்றி கெட்டவராய் இருந்திருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.ஜெயலலிதா அரசிய்லுக்கு வந்த புதிதில் முஸ்லிம் ஆதரவு என்பது நினைத்தும் பார்க்கப்படாத ஒன்று.அவரை மிக அற்ப்பமாகவே முஸ்லிம் சமூகம் பார்த்தது.அப்படிப்பட்டவருக்கு முஸ்லிகளை வாக்களிக்கவைத்த சூழ்நிலையை உருவாக்கியது இதே திருவாளர் கருணாநிதிதான்.இன்று கணிசமான பொது முஸ்லிகள் ஜெயலலிதாவின் ஆதரவாளராய்தான் மாறிப்போனார்கள்.இது ஜெயலலிதாவிற்க்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.அது அவரின் நடவடிக்கைகளிலும் பிரதிபலித்தது.நீங்கள் சொல்வதுபோல அவர் காவிகளால் காவி கொள்கைகளால் நிரம்பியவராக இருந்தால் இன்று காவி வெறிநாய்கள் வேட்டையாட சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. லேசாக அனுமதிதால் போதும் பாய தொடங்கி விடும். அதற்க்கு அவர் இசையும் அடையாளம் சிறிதும் தெரியவில்லை.அனைத்து மதத்தினரையும் சமமாய் பாவிக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும் என்ற முனைப்பே தெரிந்தது.சண்டிராணி போன்ற அரசிய்ல் பாணியே அவருடையது என்றாலும் கருணாநிதியிடம் இருந்த சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமும் குறைவுதான்.

                • திப்பு ஆதாரம் கேட்டிருந்தீர்கள்.ஆதாரத்தை நான் கையில் சுருட்டிக்கொண்டு வைத்திருக்கவில்லை.ஆனால் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.நான் அப்போது கல்லூரி மாணவன்.97ம் வருடம் டிசம்பர்6ல் ஒரு இஸ்லாமிய இயக்கம் பாபர் பள்ளி இடிப்பு தினத்தில் ஊர்வலம் போக அனுமதி கேட் கிறது.அதற்க்கு கருணாநிதி அரசு அனுமதி மறுத்து “பள்ளிவாசல் இடிக்கப்படும் நேரத்தில் இந்தியாவே அமளி துமளி பட்டது.தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்தது.இன்று இந்தியாவே அதை மறந்து அமைதியாக இருக்கும் பொழுது இப்போது என்ன ஊர்வலம் “என்று கேட்டார்.இது உண்மை.முஸ்லிம்லீக் என்ற அவருடைய ஜால்ரா கட்சிக்கு ஒன்றிரண்டு சீட்டுகளை தேர்தலில் கொடுத்துவிட்டு நோன்பு கஞ்சி குடித்து அதில் நபிகள்நாயகம் இஸ்லாம் காயிதேமில்லத் என்று எதையாவது உளறி(சில நேரங்களில் பலமான கூட்டணி சேர்ந்துவிட்டால் அந்த சீட்டும் கொடுக்க மாட்டார் இதயத்தில் இடம் என்று சொல்லிவிடுவார்)தொடர்ந்து ஓட்டுகளை அறுவடை செய்து கொண்டிருந்தார்.புதிதாக ஒரு இஸ்லாமிய வந்து மிக வீரியமாக சமூகத்தை திரட்டி அவரிடம் இருந்து அப்பாவிகளை பிரித்து போனதை தாங்க முடியாமல் அவர் தவித்துக்கொண்டிருந்த நேரம் அது.அந்த வேகத்தில்தான் இதை சொன்னார்.அதற்க்கு மறுவருடம் ஜெயலலிதா முதன் முதலாக பஜக வோடு கூட்டு சேர்கிறார்.அப்போது எல்லா பத்திரிகைகளிலும் முழுபக்க விளம்பரம் திமுக விலிருந்து.பாபர் பள்ளி இடிக்கப்படும் காட்சியை போட்டு “பாபர் மசூதியை இடித்த கயவர்களுக்கா உங்கள் ஓட்டு”என்று.அதற்க்கு அடுத்த வருடம் அந்த “கயவர்களோடு” இவர் கூட்டு.இதுதான் திருவாளர் கருணாநிதி

            • அது என்னங்க செயலலிதா ? ஏன் ஜெயலலிதா என்றால் உங்கள் குடியா முழுகி விடும் ? ஏன் இப்படி ஜனவரியை சனவரி, ஜெயலலிதாவை செயலலிதா என்று சொல்லி தமிழை கேவலப்படுத்துகிறீர்கள்… ஜனவரி என்று சொல்ல பிடிக்காவிட்டால் தை மாதம் என்று சொல்லுங்கள், உங்களை போன்ற ஆட்கள் எல்லாம் என்னமோ தமிழை வாழ வைக்கிறேன் பேர் வழிகள் என்று சொல்லி கொண்டு தமிழை கேவலப்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள். ஆங்கில மாதமான ஜனவரி உங்களுக்கு வேண்டும் ஆனால் அதில் உள்ள ‘ஜ’ உங்களுக்கு வேண்டாம்… என்ன ஒரு போலிதனம்.

              • அது பொருட்டே அல்ல , மனிகண்டன்! அதைவிட முக்கியமான தகவல்களை திப்பு அவர்கள் தருவதற்கு இந்த ‘ஜ’ ‘ச’ தடையில்லையே! எனக்கும்நண்பர்கள் இத்தகைய யோசனை சொன்னார்கள், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அன்பர்களின் தனிதமிழ் இயக்கத்தையும் முயன்று தோற்றேன்! கருத்து பரிமாற்றமே இப்போதைய குறிக்கோள்!

              • \\, ஜெயலலிதாவை செயலலிதா என்று சொல்லி தமிழை கேவலப்படுத்துகிறீர்கள்//

                தமிழே அல்லாத ”ஜ”வை பயன்படுத்துவதுதான் தமிழுக்கு கேவலம்.

                அப்புறம்மணிகண்டன் இதெல்லாம் கொஞ்சம் தாய்மொழிப்பற்று இருக்கறவா புரிஞ்சுப்பா.இதுக்கெல்லாம் நீர் சரிப்பட்டு வரமாட்டீர் ஓய்.நீங்க அப்படியே ஓரமா ஒதுங்கி பாக்கிசுத்தான்,கோமாதா ,மோடி,தோசைபக்தி அப்படின்னு பாடுங்கோ.உங்களுக்கு அதுதான் ஒத்து வரும்..

          • முதலில் நண்பனின் கேள்விக்கு( பின்னுட்டம் 8.1.2.1 )பதில் கூறிவிட்டு நீங்க யாருக்கு வேண்டுமானலும் ஜெயாவுக்கு வேண்டுமானாலும் , மேரிக்கு வேண்டுமானாலும் ஜால்ரா தட்டுங்க மீரான்…..

            • செந்தில்குமரன்,நான் என்ன கருத்துடையவன் என்பதை பல்வேறு வகை விமர்சனங்கள் வைக்கப்பட்டு அனைத்திற்க்கும் பதில் சொல்லி முடித்துவிட்டேன்.நியாயமான ஒரு பார்வையாளரால் நிச்சயமாய் என்னை எடை போட்டிருக்க முடியும்.என் கருத்தோடு முரண்படுவதற்க்கு முழு உரிமையும் உங்களுக்கு உண்டு.கடுமையாக என்னை விமர்சிக்கவும் செய்யலாம்.ஆனால் அனைத்தையும் படித்து முடித்துவிட்டு அதற்க்கு உள்நோக்கம் கற்பிப்பதுபோல் “ஜால்ராதட்டுங்க” என்பது விரக்தியால் விழும் வார்த்தையாகத்தான் இருக்கிறது.டாஸ்மாக் கதையெல்லாம் ஆரம்பித்தால் திமுக காரன் அதிமுக காரனுடைய டீ கடை சணடையாகத்தான் மாறும்.நான் கட்சி காரனும் அல்ல.தலைவனுக்கு ஜால்ரா தட்டுபவனும் அல்ல. இது கட்சி விசுவாசிகளின் சந்தைகடையும் அல்ல.

              • நீங்களும் ,மேரியும் கூட்டணி அமைத்து ஜெயாவின் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகளை கருணாவின் குற்றங்களுடன் சமன்செய்து விவாதிப்பதன் நோக்கம் என்னவென்று அறிந்து கொள்ள இயலாத அளவுக்கு எல்லாம் வினவு வாசகர்கள் ஒன்றும் அறிவறவர்கள் அல்லவே! உங்கள் நோக்கம் ஜெயாவை புனிதப்டுத்துவ்து தான் என்றால் அதனை நேரடியாகவே செய்யலாமே! அவருக்கு பாராளுமன்றத்தில் சிலை வைக்க கூட நீங்கள் இருவரும் கோரலாம்… பாரத ரத்தனா விருதுக்கு கூட அவர் பெயரை நீங்கள் இருவரும் பரிந்துரைக்லாம்.! மேலும் உங்களுக்கு விளக்கமான பதிலை எப்படி எல்லாம் நாடகம் ஆடி ஜெயாவின் குற்றங்களை நீங்கள் இருவரும் நியாயப்படுத்துகின்றீர்கள் என்பதனை என்னுடைய பின்னுட்டம் 41ல் தெளிவாகவே சான்றுகளுடன் விளக்கியுள்ளேன்… படித்து தெளிவடையுங்கள்….

  8. சகோதரி ரெபெக்காவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை! அம்மு ஜெயலலிதா என்ற தனி மனிதர் குணாதிசயங்கள் பற்றி , அவர் மறைந்துவிட்ட இன்னேரம் நமக்கு கவலையில்லை; ஆனால் தமிழ்னாட்டு அரசியலில் அவரால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு விவாதிக்கப்பட்டு கொண்டே இருக்கும்!

    இட்லர், முசோலினிகள் மறைந்தாலும் அவர்களின் பாசிச கொளகைகளினால் உலகம் அடைந்த துயரம்நினைவுறுத்தப்பட்டு கொண்டே இருந்தால்தான் மீண்டும் அத்துயரம் ஏற்படாது ! சரித்திர பாடம் கற்று கொள்ளாவிட்டால் , மீண்டும் சரித்திரம் திரும்பும் அபாயம் உள்ளது!

    ட்

    தி மு க வை காட்டி ஜெயாவைநியாய படுத்த முயற்சிக்கிறார் ரெபெக்கா! தி மு க வை விட பன்மடங்கு மோசமான அரசியல் செய்தவர் ஜெயாவும் அவர் சார்ந்த பார்ப்பன அமைப்புகளும்! பட்டியலிடநான் தயார்! வினவு அனுமதித்தால்!

  9. 1.அம்மு அதிமுக வில் எப்படிநுழைந்தார் என்பதை பண்ருட்டியார் ‘அண்ணா’ இதழில் வெளியிட்ட செய்தியை , பழங்கால எம் ஜி யார் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்! அப்போதைய அ தி மு க கொள்கை பரப்பு செயலாளர்நடிகை லதா !

    2.லதா திருமணமாகி சிஙக்ப்பூர் சென்றதும், எம் ஜியார் மீது வருமான வரி இலாக்காநடவடிக்கை எடுத்து , அவருக்கு மிரட்டலும் ஏற்படுத்தி அப்போதைய மத்திய அரசின் செல்வாக்கினால் எம்ஜியாருடன் செர்த்து வைக்கப்பட்டவர்!

    3.அரசியல் வாரிசு ஆகவேண்டும் என்றே திட்டமிட்டு ‘சின்ன அண்ணி’ என்றும், ‘புதசா கட்டிகிட்ட ஜோடி’ என்றும் பிரசாரம் செய்யப்பட்டது ! திராவிட இயக்கத்தை அழித்துவிட ஆரியம் செய்த எத்தனையோ வியூகங்களில் இதுவும் ஒன்று!

    4.எமெர்ஜென்சியின்போது எத்தனையொ பிராமணர் அல்லாத தலைவர்கள் சிரையிலடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர்! அதை ஆதரிக்காத கருணானிதி ஆட்சி கலைக்கப்பட்டு, பிற மானில அதிகாரிகளின் பிடியில் அடக்குமுறை வெறியாட்டம்நடந்தது! அதையெல்லாம் பார்ப்பன கும்பல் வரவேற்று கும்மாள்மிட்டது வரலாறு!

    5.திராவிட இயக்கத்தால் வளர்ந்த எம் ஜி யார் , அண்ணா ,பெரியார் கொள்கைகளை ஆதரிப்பதாக மக்களுக்கு போக்கு காட்டி அண்ணாயிசம் என்றும், பெரியார் ஸ்தூபி என்றும்நாடகமாடி , கடைசியில் இந்த பார்ப்பன ஆதிக்க சக்திக்கு இறையானார்!

    6.எம் ஜி யாரின் இந்த அரை மனது போராட்டமே அவரது டி ஜி பி யாக இருந்த மோகன் தாஸ் அவர்களால் ‘இரட்டை மனநிலை கொண்டவர்’ என்று எழுதப்பட காரணமாயிற்று!

    7.அப்பொதே சோ ராமாசாமியுடன் செர்ந்து கள்ள சாராய வியாபாரம் களைகட்டியது!
    விழுப்புரம் டிஸ்டிலரி மூடப்பட்டு, பின்புற வழியாக கள்ள சாராயம் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது !

    8.கடைசியில் சாராயவிற்பனை சட்ட பூர்வமாக்கப்பட்டு , அது சம்பந்தமான பாட்டிலிங் கான்ட்ரக்ட் ஊழலில் அய் ஜி மாணிக்கம்நீதிமன்றம் சென்றதும், யோக்கியர் எம்ஜியார் தனக்கும் தனது குடும்பத்தருக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என விளம்பரமும் செய்தார்!

    9. எம்ஜியாரை இப்படியெல்லாம் தொந்திரவு செய்தே அம்முவை அதிமுகவில் இணைத்தனர் ;

    10.எம்ஜியாருக்கு பின்னர் கட்சியை கைப்பற்ற ஜெயாவிற்கு உதவியது திருவாளர் சோ அவர்களே!

    11.அத்ற்கு பிறகு அம்மு வளர்ந்து தன்னிகரில்லா சண்டி ராணியானதும் அவருக்கிருந்த ஆர் எஸ் எஸ் பின்புலந்தான்!

    12.சொத்து குவிப்பு வழக்கு, வருமானவரி கணக்கு காட்டாதது, பிளசன்ட் ஸ்டே விடுதி வழக்கு, கிண்டி அரசுநிலம் அபகரித்த வழக்கு என எல்லாவற்றிலிருந்தும் ஒரு முறையல்ல, பல முறைகள் இந்த பார்பன அம்மையாருக்கு சட்டமும்,நீதியும் பணிந்தன என்பது வரலாற்றில் எழுதப்படும்!

  10. //ஜெயலலிதா இறந்து விட்டார்//
    Crores of people all over the world prayed for HER from various GOD.
    The result-ஜெயலலிதா இறந்து விட்டார்.
    It means there is NO God.
    OR
    All these people prayed in OTHER WAY.

  11. 14. முதல் அய்ந்தாண்டு காலத்தில்நானும் பெரியார் பக்தை என்று கூறிக்கொண்டு , வீரமணியின் ஆதரவோடு 69% பிற்படுத்தபட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடை அதிகரித்து தந்துவிட்டு , பின்பு நீதி மன்ற ஆணை என்று அதை தட்டிப்பறிக்க பார்ப்பனீயம் முயன்றபோது பின்வாங்கினார்! ஆனால் வீரமணியின் ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ போன்ற புகழுரையும் அதன் வோட்டு மதிப்பும் அறிந்து வீரமணியை ஆதரித்தார்!

    15.அப்படியும் மற்ற ஊழல் வழக்குகளினால்நற்பெயர் கெட்டு, தேர்தலில் தோல்விகண்டவுடன், கருணானிதி தொடர்ந்த ஊழல் வழக்கிலிருந்து மீளமுடியாமல், ஆர் எஸ் எஸ் பாஅர்பனர்களை சரணடைந்தார், வீரமணி கண்ட இந்த வீராங்கனை!

    16. கண்கெட்டபின் சூரியநமஸ்காரம் என்பது போல , வோட்டு குவிக்கவும், கள்ளவோட்டுக்கு பணம் கொடுக்கவும் சுய உதவி குழுக்களை பயன்படுத்தி அரசு பணத்தில் வஒட்டுக்கு பணம் கொடுத்தார்! மோடியின் ஜன் தன் இவரிமிருந்து கற்று கொண்டது தான்! ஆண்டி பட்டிக்கு புதிய 500 ரூநோட்டு, தஞ்சை, அஎஅசவகுறிச்சிக்கு 2000ரூநோட்டு! உ பி எலெக்ல்ச்னுக்கும் பயன்படும் என மோடி கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார்!

    16. மனித உரிமை ஆணையத்தையே முடக்க செய்து சோ விடம்நல்ல பெயர் வாங்கியது, கரசேசவைக்கு தொண்டர்களை அனுப்பியது, பிரபாகரணை பிடிக்க ராணுவத்தை அணுப்ப சொன்னது, பிரபாகரனால் தனக்கு ஆபத்து என Z பாதுகாப்பு கேட்டு பெற்றது இன்னும் பல பல சேவைகளை சகோதரி ரெபெக்கா மறைத்துவிட்டார்! கடைசியாக உ பி சகோதரியின் சாராயா தோழில்நலிவடைய கூடாது என காந்திய வாதி சசிபெருமாளை காவு வாஙகியது மன்னிக்க முடியாதது! இவற்றில் எதற்க்கு கருனானிதியை துணக்கு அழைக்கிரார் சகோதரி? தி மு க மீது உள்ளநம்து விமரிசனமும் அப்படியேதானே உள்ளது! அதனால் அம்மா எப்படி உயர்ந்தார்ஸகோதரிபார்வையில்?

    • @Ajathasathru

      மன்னிக்க வேண்டும் சகோதரரே. ஜெயா செய்த தவறுகளை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அவரின் இந்த தவறுக்கு காரணம் அவர் மட்டுமே தான் என்றோ, வெறும் பார்ப்பன பாசிசம் மட்டுமே தான் என்று நாம் சுருக்கி விட முடியாது. நீங்கள் அடுக்கிய அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் பதில் அளிப்பது என் வேலை அல்ல. மேலும் அவை பெரும்பாலும் சாரமற்றவை .

      ஜெயாவின் பூர்வாங்க வரலாறு இங்கு தேவை இல்லை. இன்னும் சொல்ல போனால் அது இங்கு பேசு பொருளே இல்லை. நான் கூறியது 2011 ஆம் ஆண்டிற்கு பிறகான ஜெயலலிதாவின் நடவடிக்கை என்ன என்பது தான். 2011 ஆண்டு அவர் முதல்வர் ஆனதற்கு பிற்பாடு அவரிடம் கணிசமான மாற்றங்கள் தெரிய தொடங்கியது.

      2011 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அவர் முதல் அமைச்சர் ஆனதும், முதல் சட்ட மன்ற கூட்டத்திலேயே, ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருகிறார். மிகவும் தெளிவான, துல்லியமான ஒரு தீர்மானமாக அது இருந்தது. ( விருப்பப்பட்டால் அந்த தீர்மானத்தை பற்றியும் நான் அளிக்க தயார்). இந்த ஒரு தைரியமான நடவடிக்கையை உங்களின் தானே தலைவர் கருணாநிதி அவரின் ஆட்சி காலத்தில்(2009 -2010 ) செய்தாரா? செய்ய முடிந்ததா?

      சரி, நம்மூர் விஷயத்திற்கு வருவோம். எந்த காலத்திலும் அவர் மாநிலத்தின் உரிமைகளை விட்டு கொடுத்ததே கிடையாது.மத்திய அரசின் எந்த ஒரு மக்கள் விரோத திட்டத்தையும்
      அவர் ஏற்றுக் கொண்டதே இல்லை. உணவு பாதுக்காப்பு மசோதா, உதை மின் திட்டம், நீட் தேர்வு, ஜீஎஸ்டீ வரி, பா.ஜ.க அரசு இந்தி மொழியை கட்டாயமாக திணித்தது போன்ற அனைத்து இந்திய மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து மாநில உரிமைகளின் பாதுகாவலராகவே விளங்கினார். ஆனால், இதை பற்றி எல்லாம் வினவோ அல்லது அதன் வாசகர்களோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காரணம், அவரின் பார்ப்பன சாதி. அந்த ஒரு காரணத்திற்காகவே அவர் கொண்டு வந்த சில நல்ல விஷயங்களை கூட யாரும் இங்கு பேசவில்லை. வினவை பொறுத்த வரை கூற வேண்டுமானால் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதிக்கும், கருணாநிதிக்கும், ஆ.ராசாவிற்கும் கிட்டிய கருணை பாப்பாத்தி என்கிற ஒரே காரணத்திற்க்காக ஜெயாவிற்கு கிடைக்கவில்லை.

      ஒரு மாபியா கும்பலின் பிடியில் சிக்கி கொண்ட ஒருவர், எந்த அளவிற்கு இந்த மாநிலத்திற்கு நன்மை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு, ஏன் அதை விடவே செய்தார். அவர் கொண்டு வந்த அம்மா உணவகம், குடிநீர் போன்ற திட்டங்கள் பயனுள்ளதா, இல்லையா என்று அதனால் பயன் அடைந்த ஏழை மக்கள் குறிப்பாக வட மாநிலத்தில் இருந்து இங்கு வந்து கூலி வேலை செய்து கஷ்ட பட்டு பணம் சம்பாதிக்கும் ஆயிர கணக்கான பேர்களில் ஒரே ஒருவரிடம் கேட்டு பாருங்கள் அவர் கூறுவார் அதன் அருமை இன்னதென்று. இன்னும் மற்ற திட்டங்களை பற்றி நான் பிரஸ்தாபம் பண்ண விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாக என்னால் ஒன்றை கூற முடியும், நிஜமாகவே அவர் இரும்பு மனிஷிதான். இந்தியாவின் நவீன வரலாற்றில் பார்த்தோமானால் இந்திரா காந்தி, ஜெயலலிதா இருவருமே மிக சிறந்த ஆளுமை திறன் கொண்டவர்களே. இரும்பு பெண்மணிகள் தான். இதை மறுப்பதற்கில்லை..

      நீங்கள் கூறுவதை போன்று வெறும் எம்.ஜி.யாரின் முக தயவை மட்டும் வைத்து கொண்டு காலம் முழூவதும் எல்லாம் அரசியலில் குப்பை கொட்ட முடியாது. அதை தாண்டி அவரால் 25 ஆண்டுகளாக அரசியலில் எவ்வளவோ இன்னல்களை கடந்தது கோலோச்ச முடிந்தது என்றால் அதற்க்கு காரணம், அவரின் துணிச்சலும் தைரியமும் வாய்ந்த நடவடிக்கைகளால் தான். அது மட்டுமல்லாமல், மத்திய அரசிடம் மற்ற மற்ற மாநில முதல்வர்களை போன்று என்றுமே, எதற்காகவும் எந்த தேவைகளுக்காகவும்அவர் இதுநாள் வரை கூழை கும்பிடு போட்டதே கிடையாது.

      இதற்க்கு மேல் சொல்ல ஏதும் கிடையாது, ஜெயாவிற்கு வக்காலத்து வாங்குவது என் வேலை அல்ல. அவர் இறந்து விட்டார். ஆனால் அவர் செய்த நல்ல விஷயங்களையும் நிச்சயம் நாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட முடியாது. அவருடைய மரணம் பரிதாபமான ஒன்று தான். அவரை விமர்சனம் செய்யலாம், ஆனால் அதில் ஒரு நாகரீகம் இருக்க வேண்டும். ஒரு நேர்மை இருக்க வேண்டும். அவர் தவறே செய்ய வில்லை என்றுக் கூறவில்லை, ஆனால் அந்த தவறு என்பது எல்லா அரசியல்வாதிகளிடமும் இருக்கும் ஒன்று தான். இருந்தாலும் ஜெயலலிதா செய்த தவறுக்கு பின்னாடி யார் இருந்தார்கள் . சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற பொழுதே அவர் மனதளவில் மாய்ந்து இருப்பார். அவர் செய்யவில்லை என்று இங்கே நான் கூறவில்லை. ஆனால் தனி மரமாக நின்ற அவருக்கு அப்படி குவிக்க ஒரு அவசியமே இல்லை. ஆனால் யாரினால், யார் தூண்டுதலால் அப்படி செய்தார் அல்லது செய்ய வைத்தார்கள் அல்லது யார் அப்படி செய்து சிக்க வைத்தார்கள்.இப்பொழுது அதை யார்யாரெல்லாம்அனுபவிக்கிறார்கள். அனைத்தையுமே நாம் பரிசீலிக்க வேண்டும். நன்றி

      • ”ஜெயாவின் பூர்வாங்க வரலாறு இங்கு தேவை இல்லை….. 2011 ஆண்டு அவர் முதல்வர் ஆனதற்கு பிற்பாடு அவரிடம் கணிசமான மாற்றங்கள் தெரிய தொடங்கியது.”என்று மேரி அவர்கள் சொல்வதன் மூலம் ஜெயாவின் முந்தைய இரண்டு ஆட்ச்சிக்காலங்களின் கொடுங்கோன்மையை அவரே ஒப்புக்கொள்கிறார் என தெளிவாகிறது.

        ”ஈழத்தாயின்” இனப்படுகொலை கண்டன தீர்மானத்தை புகழ்கிறார் மெரி.தமிழ் இன அழிப்பு போரை நடத்துவதில் இந்திய அரசும், ஆளும் வர்க்கங்களும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கு உற்ற நண்பனாகவும், முதன்மையான கூட்டாளியாகவும் செயல்பட்டன . இத்தீர்மானம் பற்றிப் பேசும்போது ஜெயலலிதா இலங்கையில் நடந்த அனைத்துப் போர்க் குற்றங்களையும் கருணாநிதி எதிர்த்துப் போராடவில்லை, துரோகம் செய்துவிட்டார் என்று கூறும் அதே வேளையில் போரை நடத்திய நடுவண் ஆளும் காங்கிரசு கட்சியை விமர்சிக்கவே இல்லை.

        இதில் கவனிக்க வேண்டிய செய்தி, தி.மு.க, அ.தி.மு.க இருக்கட்சிகளுமே இலங்கைப் பிரச்சினையை வாக்கு சேகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அணுகுகிறார்களே ஒழிய அதில் உருப்படியாக செயல்படவில்லை என்பதே வரலாறு. எனவே, இக்கட்சிகளின் தீர்மானங்களையும், சொற்களையும் கண்டு ஒரு நாய் கூட பயப்படாது.

        கருணாநிதி அவரின் ஆட்சி காலத்தில்(2009 -2010 ) செய்தாரா? செய்ய முடிந்ததா?என்று வேறு கோபப்படுகிறார்..ஜெயாவைத்தான் ஈழத்தாய் என கொண்டாடுகிறார்கள்.கருணாநிதியை யாரும் ஈழத்தந்தை என சொல்லவில்லை.போர் என்றால் நாலு பேர் சாகத்தான் செய்வார்கள் என இன அழிப்பு போரை நியாயப்படுத்திய ஜெயா வாக்கு பொறுக்குவதற்க்காக அடித்த சவடால்களை நம்புபவர்களை அப்பாவிகள் என்பதா தெரிந்தே பொய்யுரைக்கும் கயவர்கள் என்பதா.பேரறிவாளன் சாந்தன்,முருகன் மூன்று தமிழர்களை தூக்கில் போட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு சட்டமன்றத்தில் தண்டனையை ரத்து செய்ய முடியாது என பேசியவர்தான் ஜெயா.ஆனால் தமிழக இளைஞர்களின் வீறு கொண்டு எழுந்த போராட்டத்தை கண்டு அஞ்சி மறுநாளே சட்டமன்றத்தில் தோசையை திருப்பி போட்டு மூவரையும் விடுதலை செய்ய போவதாக அறிவித்தார்.அதிலும் உளப்பூர்வமாக இல்லாமல் திட்டமிட்ட குளறுபடிகள் மூலம் இன்றளவும் அவர்கள் விடுதலையாகாமல் பார்த்துக்கொண்டார்.

        மற்றபடி நடுவண் அரசின் சில திட்டங்களை அவர் மாநில நலன் கருதி எதிர்த்தார் என்பதெல்லாம் தமிழகத்தில் நிலவும் அரசியல் தரும் அழுத்தத்தின் காரணமாக விளைந்தவை.இங்கு நீட் தேர்வை ஆதரித்து சமூக நீதிக்கு எதிராக ஒரு முதல்வர் பேசினால் அவரது அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்து போகும்.GST-யை ஜெயா முற்று முழுதாக எதிர்க்கவில்லை.வருவாய் இழப்பை நடுவண் அரசு ஈடு கட்டவேண்டும், GST Council தேவையில்லை. Empowered Committee of state ministers யே போதும் என்ற அளவில்தான் அவரது எதிர்ப்பு இருந்தது.

        \\ஒரு மாபியா கும்பலின் பிடியில் சிக்கி கொண்ட ஒருவர், எந்த அளவிற்கு இந்த மாநிலத்திற்கு நன்மை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு, ஏன் அதை விடவே செய்தார். //

        இது போதும்.தன்னையே அடிமையாக ஒப்புக்கொடுத்தவர் தன்னையே காப்பாற்றிக்கொள்ள வக்கற்றவர் நாட்டையே காப்பாற்றினாராம்.

        உள்ளூர் மற்றும் வடமாநில ஏழை தொழிலாளிக்கு ஒரு ஓவாய்க்கு இட்லீ குடதாராம் .அம்மாடி தொழிலாளிக்கு நியாயமான கூலி கிடைக்க செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்தவர் அவர்.அதை ஒழுங்காக செய்திருந்தால் இடலிக்கடையே தேவையில்லையேம்மா.முதலாளிகளின் கொள்ளைக்கு துணை போய் விட்டு தொழிலாளி போராடாமல் தடுக்க கொடுத்த ஒத்த ஓவாய் இட்டலியை பாராட்ட மனசாட்ச்சியை கழட்டி வைக்க வேண்டும்.

        \\தனி மரமாக நின்ற அவருக்கு அப்படி குவிக்க ஒரு அவசியமே இல்லை. ஆனால் யாரினால், யார் தூண்டுதலால் அப்படி செய்தார் அல்லது செய்ய வைத்தார்கள் அல்லது யார் அப்படி செய்து சிக்க வைத்தார்கள்.இப்பொழுது அதை யார்யாரெல்லாம்அனுபவிக்கிறார்கள்.//

        நம்ம இடத்தை மேரி புடுச்சுருவாரோ எனஉயிரோடு இருந்தால் சோவே பயப்படுவார்.

      • \\அவரால் 25 ஆண்டுகளாக அரசியலில் எவ்வளவோ இன்னல்களை கடந்தது கோலோச்ச முடிந்தது என்றால் அதற்க்கு காரணம், அவரின் துணிச்சலும் தைரியமும் வாய்ந்த நடவடிக்கைகளால் தான். அது மட்டுமல்லாமல், மத்திய அரசிடம் மற்ற மற்ற மாநில முதல்வர்களை போன்று என்றுமே, எதற்காகவும் எந்த தேவைகளுக்காகவும்அவர் இதுநாள் வரை கூழை கும்பிடு போட்டதே கிடையாது.//

        இது பற்றி பின்னர் எழுதுகிறேன்.

      • The media all over the country were very considerate towards Jayalalitha.Her commissions and omissions were not highlighted.In a way,the media has not given any opportunity to her to correct her mistakes over the years.A person will be called honest only when he/she does not yield to any wrong influence whatsoever.There was no special budget for the unavagams.The funds meant for civic amenities were diverted for this purpose resulting in lack of civic amenities.She promised protected water supply to poor.Instead sold water.Mayavati,Karunanidhi and Raasa never got any mercy from any people,particularly the media.They were hounded out.In the 2G case itself,the mis-propaganda was carried out stating that 1.76 crore was looted by Raasa and Karunanidhi.If it is true,how come CBI stated the loss as just 30000 crore?Any worthwhile assets were confiscated from the residence of Raasa so far?A regime,which was taking TN to heights were sent out by the above mis-propaganda.At the same time,Bhavanisingh’s final arguments listing out many properties acquired by the accused throughout TN were blacked out by the media.

  12. /தமிழகத்தை பீடித்த ஒரு அரசியல் சனி அப்பல்லோவில் தொலைந்தது/

    புதிய சனி பிடிக்காதிருக்க சகோதரி ரெபெக்க போன்ற அம்மா பக்தர்கள் சிந்தித்து திருந்தினால்தான் உண்டு! தனிநபர் துதிபாடும் கூட்டம் தொலைய வேண்டும்.

  13. டிச 6 மதியம் 3 மணியளவில் இந்த பதிவிற்கு ஒரு கருத்தை பதிவு செய்திருந்தேன்.அதில் வினவு தளத்தின் மீதான விமர்சனம் இருந்தது.அந்த விமர்சனம் இங்கு பதிவேற்றப்படவில்லை.இந்த செயல் எனக்கு மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது.ஒரு விமர்சனத்தை ஏற்பதிலோ,மறுப்பதிலோ வினவு செயலாற்றி இருக்கலாம் அல்லது வெறுமனே வெளியிட்டு பதிலளிக்காமல் வாசகர் பார்வைக்கு விட்டிருக்கலாம்.அதனை இருட்டடிப்பு செய்வது என வினவு முடிவு செய்திருக்குமானால் நான் உங்களிடம் கொண்ட நம்பிக்கை பொய்த்துபோகிறது என்பது தான் எனது ஏமாற்றம்.

    • அய்யா, கட்டுரை தொடர்பான பின்னூட்டங்களையே வெளியிடுகிறோம். கட்டுரையின் பேசு பொருளுக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் கருத்துக்கள் வெளியிடப்படுவதில்லை. கட்டுரை தொடர்பானவற்றோடு எங்களையோ வேறு யாரையுமோ நீங்கள் தாராளாமாக விமரசிக்கலாம். கட்டுரை பேசு பொருளுக்கு தொடர்பில்லாமல் எங்களை மட்டும் விமரிசிக்க வேண்டுமென்றால் மின்னஞ்சல் அனுப்புங்கள் – vinavu@gmail.com நன்றி.

  14. தமிழகத்தை வறண்ட பாலைவனமாக்கியது, தங்கநகைக் கொள்ளைமுதல் தாதுமணல் கொள்ளைவரை நடக்கவிட்டது, பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது (நத்தம் ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு),
    சாராய சாம்ராஜ்யத்தை உருவாக்கியது, தமிழகத்தின் தலைமீது 5 லட்சம் கோடிக்குமேல் கடன் சுமையை ஏற்றியது, இவைதான் இந்த இரும்புப் பெண்மணியின் வாழ்நாள் சாதனைகள். காலில் விழும் கலாச்சாரம் ஓரு தீவீர எல்லைக்குப் போய்விட்டது. இனி அதுவாவது திருந்துமா என்று பார்ப்போம்.

  15. வினவு நண்பர்களுக்கு
    இரண்டாவதாக ஒரு கடிதம் எழுதினாலே டூப்ளிகேட் கமெண்ட் டிடெக்டட் (இது என் சிலமுறை அனுபவம்) என்று எப்படிப் பார்க்காமல் படிக்காமலே போட்டுவிடுகிறீர்கள், அல்லது வேர்ட்ப்ரஸ் போடுகிறது? புரியவில்லை.
    நான் இப்போதுதான் சுருக்கமாக ஒரு கடிதம் எழுதினேன். அதற்குத்தான் இந்த பதில்.

  16. இந்த கொடுமைக்கெல்லாம் காரணம் திருவாளர் தம்பிதுரையே! அன்றேநீதிபதி சிவப்பாவை ஜெயாவின் சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு சொல்ல அனுமதித்திருந்தால், ஓரளவு பின்னாளில்நடந்த கொடுமைகள் தவிர்க்கப்பட்டிருக்கும்! 20 வருடமாக பிழைத்தநீதியெ அம்முவை ஆவேசங்கொண்ட சண்டியாக்கியது! அறம் பிழைத்தவர்க்கு, அந்த அறமே கூற்று ஆகியது! இனி பூதம் காத்த புதையல் யாருக்கு என அடுத்த போராட்டம் ஆரம்பமாகிவிட்டது!

  17. //வினவை பொறுத்த வரை கூற வேண்டுமானால் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதிக்கும், கருணாநிதிக்கும், ஆ.ராசாவிற்கும் கிட்டிய கருணை பாப்பாத்தி என்கிற ஒரே காரணத்திற்க்காக ஜெயாவிற்கு கிடைக்கவில்லை//
    என்ன சகோதரி… வினவுக்கு பின்பு முற்போக்கு பட்டம் கிடைக்குமாம்… இதிர் தர்மம் நீதி என்று பார்த்தா அரசியல் பண்ண முடியுமா.. தமிழ் நாட்டல சிற்சில விசயங்கள் பேசினாத்தான் முற்போக்குன்னு ஒத்துப்பாங்க.. இல்லைன்னா வயித்துப் போக்குன்னு தூர கடாசிடுவாங்க.. இது ஒரு வகை முற்போக்கு சாஸ்திரியம்

  18. //வினவை பொறுத்த வரை கூற வேண்டுமானால் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதிக்கும், கருணாநிதிக்கும், ஆ.ராசாவிற்கும் கிட்டிய கருணை பாப்பாத்தி என்கிற ஒரே காரணத்திற்க்காக ஜெயாவிற்கு கிடைக்கவில்லை//

    இப்போது பூனை வெளியில் வருகிறது! பாப்பாத்தி என்ற ஒரே காரணத்திற்காக வினவு இப்படி அம்மாவை விமரிசித்து விட்டதாம்; அப்படியானால் வினவு முதற்கொண்டு அத்தனை பதிவாளர்கள் முன்வைத்த வாதங்களுக்கு இதுதான் ஒரே பதிலா?

    சட்டத்தின் பிடியில் வசமாக மாட்டிகொண்ட அம்மு, தன்னையும் தன் ஊழல் சாம்ராஜ்யத்தையும் காப்பாற்றி கொள்ள எடுத்த பிர்மாஸ்திர கவசம்தான் ‘நான் பாப்பாத்திதான்’ என்ற விஸ்வரூபம்! பாவம் கருணானிதி, ராஜா வகையறாக்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டாதது அவர்கள் துரதிர்ஸ்டம் !

  19. அம்மா இறக்க உண்மையான காரணம் என்ன? மோடிதான்! நினைவு வந்து தெப்புத் தேறியவுடன் அம்மாவிடம் சொல்லப்பட்ட முதல் நிகழ்வு கருப்புப் பண ஒழிப்பு விவகாரம்…அவ்வளவுதான்! அப்பவே இதயம் நின்றுவிட்டதாம்! இல்லாவிட்டால் நன்றாக இருந்த அம்மாவுக்கு ஏன் கார்டியாக் அரஸ்ட் வரும் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

  20. ஜெயலலிதா சோ போன்றவர்கள் பிராமணர்களாக பிறந்தது தான் தவறு, அதனால் தான் வினவு போன்ற தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் அயோக்கியர்கள் ஜெயலலிதாவை இறந்த பிறகு இப்படி அவதூறு பரப்பி கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஜாதியற்ற சமூகத்திற்கு பாடுபடுகிறார்களாம் சீ தூ…

    ராமதாஸ் செய்யும் கூச்சமற்ற ஜாதி அரசியலுக்கும் வினவு செய்யும் ஜாதி அரசியலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ராமதாஸ் தலித் மக்கள் மீது வெறுப்பை தூண்டி அரசியல் செய்கிறார், வினவு பிராமணர்கள் மீது வெறுப்பை தூண்டி அரசியல் செய்கிறார்கள்.

    இருவருமே ஜாதி வெறியை தூண்டும் கேவலமானவர்கள் தான்..

  21. __________ஜெயலலிதா சோ போன்றவர்கள் எல்லாம் பாசிஸ்ட்களாம்… கம்யூனிஸ்ட் அயோக்கியர்களின் கோர முகம் வினவு

  22. அமைதி காக்க மணிகண்டன் அவர்களே! இந்தியர்களுக்கு பாசிசம், எதேச்சதிகாரம், சர்வாதிகாரம் எல்லாம் பிடித்த தலைமை பண்புகள்! யாரும் விதிவிலக்கல்ல, செக்குமாட்டு ஜனனாயகமும், பணனாயகமும் போல!

  23. /ஜெயலலிதா சோ போன்றவர்கள் பிராமணர்களாக பிறந்தது தான் தவறு, அதனால் தான் வினவு போன்ற தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் அயோக்கியர்கள் ஜெயலலிதாவை இறந்த பிறகு இப்படி அவதூறு பரப்பி கொண்டு இருக்கிறார்கள்/

    முற்றிலும் உண்மைதான்! தங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்! ஆனால் இவர்கள் பிராமணர்களாக பிறந்திருக்காவிட்டால், ஆர் எஸ் எஸ் எடுபிடியாக திராவிட் இயக்கத்தை அழிக்க கிளம்பியிருக்க மட்டார்கள்! எம் ஜி யாருக்கு செஞ்சோற்று கடன் இருந்தது, அதனால் பிளவுண்ட மனனிலையால் பெரியாருக்கும் சிலை, மூகம்பிகைக்கும் அடிமை என்று அவதி பட்டார்! ஆனால் அம்முவிற்கும், சசியின் மிடாசஸ் பார்ட்னெர் சோ வுக்கும் அந்த மனசாட்சி உறுத்தல் சுத்தமாக இல்லாமல் போனதற்கு காரணம் அவர்கள் பிறப்பினால் ஏற்பட்ட உயர்சாதி வெறியே காரனம்!

    இப்போதும் கூட சாராய (முன்னாள் கள்ள சாராய) வியாபாரத்தில் சசியுடனும், உடையாருடனும் பார்ட்னரான பார்பனர்கள் ஆட்சியில் சசி பங்கு கேட்பதை ஏன் எதிர்க்கிரார்கள்! எம் ஜி யார் இறந்த வுடன் ‘சின்னம்மா’ வை ஏற்று கொண்டார்கள், 30 ஆன்டுகளாக ஜெயா-சசி உடன்வாழ்க்கையை ஏற்று கொண்டார்கள், அதே முறையில் அரசியலில் சசி நுழைவதற்கு என்ன தடை?

    ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாததும் மக்கள் விருப்பம் அல்லவா? இதுவரை அதிமுக வை எதிர்த்து வந்தவர்களெல்லாம் (சன்,இன்டு உட்பட) இப்போது அம்மா புகழ் பாடுவது ஏன்?

    • சரிங்க உங்க வாதப்படியே வருவோம் RSS இயக்கத்தின் செயல்பாடு என்ன ? ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு இடதுசாரிகள் உட்பட பல இயக்கங்கள் செயல்படும் போது, இந்தியாவிற்காக, இந்திய பண்பாட்டிற்காக, ஹிந்து மதத்திற்காகவும் RSS பேசுகிறது அது எந்த வகையில் தவறு என்று சொல்கிறீர்கள் ? இடதுசாரி இயக்கங்கள் உட்பட பலர் இந்திய பிரிவினைக்காக (காஷ்மீர்) பேசும் போது RSS இந்திய ஒற்றுமைக்காக பேசுகிறது அது எந்த வகையில் தவறு ?

      பிரமணர்களுக்காக RSS செயல்படுகிறது என்றால் மோடி யார் ? அவர் எந்த ஜாதியை சேர்ந்தவர் ? மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் தானே, நீங்கள் சொல்வது போல் RSS பிரமணர்களுக்காக செயல்படுகிறது என்றால் மோடியை எப்படி பிரதமராக ஏற்று கொண்டார்கள் ?

      எதற்கு எடுத்தாலும் பிராமணர் சதி RSS சதி என்று பேசுவது முட்டாள்தனமாக இருக்கிறது.

  24. அம்முவின் உண்மையான முகத்தைநான் அறிந்து கொண்டது அண்ணாமலைநகர்போலீசில் கணவர் கொலைக்கு நீதி கேட்ட பத்மினி கற்பழிப்பு விவகாரத்தில் தான்! எதிர் கட்சியான தி மு க வைவிட உறுதியுடன் அம்மு வை எதிர்த்து போராடியது இடது சாரி இயக்கங்கள் தான்! தி மு க ஆட்சியில் அந்த காவல்நிலைய கயவர்களை தண்டித்த பெண்நீதிபதியை பாராட்டியவர்கள் பலர்! ஆனால் இடதுகளும் பதவிக்கு சோரம் போக,நீதியும் அம்முவிற்கு ஜாலரா தட்ட ஆரம்பித்தது, காவல்நிலைய கொடுமைகள் பின்னர் அதிகரித்ததே தவிர குறையவில்லை!

    ராஜகுரு சோ மனித உரிமை ஆணையம் ஏற்படுவதையே எதிர்த்தார், அது ஆர் எஸ் எஸ் நிலைப்பாடு! ஆனால் அம்மையாரோ தமிழ்னாட்டில் மனித உரிமை ஆணையத்தை செயல்படாமல் முடக்கினார், உறுப்பினர்களையும், தலைவரையும்நியமிக்காமல்! ஏழை மக்களின் மேல் ‘அன்பு’ ‘பாசம்’ வைத்திருந்த , மிடாஸ் சசி, வைகுந்த், சோ, அய் பி எல் சீனு போன்ற பரம ஏழைகளின் பங்காளியான அம்மாவின் பாசம் அக்கா ரெபெக்கா, மீரான் , ஜோசஃப் அம்பிகளுக்கே வெளிச்சம்!

    • அஜாதசத்துரு என்னய ஏன் அம்பினு சொல்லுறீங்கனு புரியல நான் ஒரிஜினல் பள்ளன் எனக்கு இத சொல்லுரதுல பெருமைதான் இசுலாமை விமர்சித்தால் அவன் பிராமினாகத்தான் இருக்க வேண்டுமா மனித விரோத தத்துவம் எதுவாக இருந்தாலும் அதை விமர்சிப்ப்பேன் ஜெயலலிதா இறந்து போனதை மட்டன் பிரியானி சாப்பிட்டி கொன்டாடியவன்நான்

      • உங்கள் கருத்துக்களை வைத்துதான் அப்படி கூறினேன்! மற்றபடி தவறாகநினைக்க வேண்டாம்! இன்னொரு ஜோசெப் (பாண்டிசேரி?) தன் வலை பக்கத்தில் முழுவதும் வைணவ மத பிரச்சாரம் செய்து வருகிறார்!நான் விமரிசிப்பது தங்கள் கருத்துக்களை மட்டுமே! ஏன் அம்பியாக இருந்தாலும் வரவேற்கிறேன்! பார்பனர்களில் பலர் ஏஎஸ்கே அய்யங்கார் போன்ற பெரியார் விசுவாசிகளும் உள்ளனர்! முதன் முதலில் பெரியாருக்கு மோட்டார் வேன் பரிசளித்தது ஒரு பார்ப்பன நிறுவனமே! (சிதம்பரத்தில் என்று நினைவு)

      • //ஜெயலலிதா இறந்து போனதை மட்டன் பிரியானி சாப்பிட்டி கொன்டாடியவன்நான்//

        ஜோசப் அவர்களே .. இப்படியா இரக்கம் இல்லாமல் நடந்து கொள்வது. பகைவனாக இருந்தாலும் அவன் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பது தானே நமது பண்பாடு. நமக்கு பிடித்தமானவர்களின் மீது அன்பு செலுத்துவதில் என்ன நன்மை உள்ளது, அது இயல்பு தானே. எதிரியின் மீது செலுத்த படும் அன்பு தான் உயர்ந்த அன்பு. ஆனால், நீங்களோ அன்று பிரியாணி சாப்பிட்டு கொண்டாடி உள்ளீர்கள். உங்களுக்காக நானே ஆண்டவரிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கிண்டல் செய்யவில்லை நிஜமாகவே கூறுகிறேன்.

  25. அம்பிகள் இப்போதெல்லாம்நேரடியாக விவாதத்தில் இறங்குவதில்லை போலும்! மீரான், ஜோசெப், ரெபெக்கா என்று முகமூடியுடன் வருகிறார்கள்! கருணானிதியின் அரசியல் ஒளிவு மறைவு இல்லாதது! திருவாரூரில் இந்தி எதிர்ப்பு களம் கண்டவர், ஆரிய ஆதிக்க எதிர்ப்பு இன்றளவும் கொண்டவர்! அரசியலில் ஈடுபட்டு அரசியலில் கொலோச்சவே அண்ணாவுடன் பெரியாரை துறந்து வந்தவர்! படிபாளிகள் எல்லாம் மேடைபேச்சில்தான் இவருக்கு சீனியர்! கட்சியை உழைத்து பரப்பியவர் கருணனிதியே! அதனாலேயே அண்ணா இறந்தவுடன் எம்ஜியாரே கருணனிதி தலைமையைத்தான் ஆதரித்தார்!

    அவ்வளவு ஏன் இருவருமே அம்முவின் பொழுபோக்குநிலயத்தில் தான்நள்ளிரவு வரை இருப்பர்! கோட்டைக்கு அடுத்த தலைமையிடமாக போயஸ் இருந்ததைநான் அறிவேன்! கவியரசு கண்ணடாத்சன் இவர்களை இந்திரன்,சந்திரன் என்று குறிட்டு ‘தேவி’ இதழில் எழுதியதும் உண்டு!

    வண்டிக்காரன் படம் கலைஞரால் ஜெயலலிதாவை கதானாயகியாகவும், ஜெயசங்கரை கதானாயனாகவும் கொண்டு எடுக்கப்பட்டது! ஆரம்பித்தது சனி! ஜெயா வீட்டில் எம்ஜியார் ஜெய்சங்கரால் தாக்கப்படுகிறார்! கிழிந்த சட்டையுடன் அசெம்பிளிக்கே வந்து கலைஞரிடம் முறையிட்டும் ஜெய்சங்கரின் மேல்நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பிளவுபடுகிறார் எம்ஜியார்! மூல காரணமே இந்த மோகணாங்கி விவகாரம் தான்!

    பின்னர் சமயம் பார்த்திருந்த காஞ்சி மடம் , இதயம் பேசுகிறது மணியன் மூலமாக எம்ஜியாரை வெளிமானிலத்திற்கு ரகசியமாய் அழைத்து தி மு க வை உடைக்கசதி செய்தது! இப்படி மணியணாரே பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு!

    பின்னர் எம்ஜியாரின் மெடிக்கல் மினிஸ்டர் விவகாரம். கணக்கு கேட்பு விவகாரம் எல்லாம்நாடகம்போலநடந்தேறியது! அப்போதும் எம்ஜியார் தி மு கவிற்கு துரோகம் இழைக்க விரும்பவில்லை; ஜெயாவையும் தவிர்த்தே வந்தார் , தனி கட்சி ஆரம்பித்தபின்னரும்!

    ஜெயாவின் சோபன் பாபு எபிசொட் முடிந்து, எம்ஜியாரிடம்நெருங்கியது அடிமைப்பெண் படபிடிப்பில்நேபாளநாட்டிலிருந்தபோதுதான்! அதிலிருந்து தமிழ்னாட்டுக்கே பிடித்தது சனி! எம்ஜியாரை திட்டி, துன்புறுத்தியே தனது ஆதிக்கத்தை அவர்மேல் வளர்த்து கொண்டார் ஜெயா! அபலையாய் வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்த தலைவர் அடிமையானார்! அவ்வப்போது எம்ஜியார் ச் உய மரியாதையை காட்டினாலும், மத்திய புலானாய்வு, வருமான வரி தொந்தரவால் பணியநேரிட்டதை பண்ருட்டி ஏற்கெனவே ‘அண்ணா’ ஏட்டில் எழுதியதுண்டு!

    பார்பன சதியினாலேயெ திராவிட இயக்கத்தை பிளக்க வந்த ‘சண்டி’ என்று ஒரு பெரியவா கூறியதும் உண்டு!

    பாபர் மசூதியை இடிக்க கரசேவகரை அனுப்பிய ஜெயா, அதை எதிர்த்த கருணனிதியைவிட உயர்ந்தவராகிவிட்டார் மீரானுக்கு! தி மு க ஆட்சியை கலைக்கவேண்டும் என்றுநிர்பந்தித்து 13நாட் களில் வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த ஜெயாநல்லவராம், தன் ஆட்சிய தக்கவைத்துகொள்ள மதவாத இல்லாத பொதுதிட்டத்துடன் ஆதரவளித்த கருணானிதி எப்படி கெட்டவரானார்? மீரான், ரெபெக்கா, ஜோசப் அக்ரகார அம்பிகளின் மறைமுக அவதாரங்களா?

    • அஜாதசத்ரு அண்ணனும் எல்லோரையும் போல எதிருக்கருத்தை முன் வைப்பவர்களை, ஆர்.எஸ்.எஸ், அம்பிகள், கைக்கூலிகள் என்று வசைபாட தொடங்கி விட்டார். நான் என்ன இங்கே திராவிட இயக்கத்தையா குறை கூறினேன். சம்மந்தா சம்மந்தமில்லாமல் பனகல் அரசர், பி.டி தியாகராயர், நாயர். நீதி கட்சி.எம்.ஜி.யார் என்று கடந்து சென்ற பழைய வரலாற்றை எல்லாம் தோண்டி கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கூறியது எதுவும் எனக்கு தெரியாத ஒன்றல்ல,

      கருணாநிதியை பற்றி கூறினேன் அவ்வளவே. கலைஞரை தவிர்த்து விட்டு ஜெயாவை மட்டும் ஏன் இவ்வளவு காட்டமாக விமர்சிக்கிறீர்கள் என்று கேட்க்கிறேன் அவ்வளவே? இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்கிற பொழுது, இருவருக்குமே ஒரே மாதிரியான விமர்சனத்தை தான் முன் வைக்க வேண்டுமே ஒழிய ஏன் இந்த பாரபட்சம் என்பதே என் கேள்வி. மிக சுருக்கமாக உண்மையை கூற வேண்டுமானால் “குலத்திற்கு ஒரு நீதி” என்கிற பார்ப்பனிய மனுதர்மத்தை அப்படியே திருப்பி போட்டுள்ளீர்கள் அவ்வளவே. அங்கே குலத்திற்கு குலம் நீதி மாறும் . இங்கோ சாதியை பொறுத்து விமர்சனங்களும் அதன் மீதான அழுத்தங்கள் மாறுகின்றன.

      மேலும், மாநில உரிமைகள் எதனையும் மத்திய அரசின் எவ்வித அழுத்தங்களுக்கும் அவர் விட்டு கொடுத்ததே கிடையாது. உங்களிடம் கேட்க்கிறேன் மனசாட்சியோடு நேர்மையாக பதில் கூறுங்கள், தமிழக விவசாயிகளை அழிக்கும் மீத்தேன் எரிவாயு திட்டமும், கெயில் குழாய் பதிக்கும் திட்டமும் யாருடைய ஆட்சி காலத்தில் போட பட்ட திட்டம். தி.மு.க வின் காலத்தில் தானே.

      விவசாயி நிலங்களில் கெயில் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது 2007 -ஆம் ஆண்டு கெயில் நிறுவனத்தின் மூலம் புதிய எரிவாயு குழாய் அமைக்க அங்கீகாரம் வழங்கியது. அப்போது ஆட்சியில் இருந்தவர் யார் ஜெயலலிதாவா, உங்களின் மஞ்சள் துண்டார் தான் அப்போதைய முதல்வராக இருந்தார். எவ்வித தடையும் கூறாமல் கூசாமல் அனுமதி வழங்கினார். அப்பொழுதே தி.மு.க இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால், விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்தை முளையிலேயே கிள்ளி ஏறிந்திருக்கலாம்.

      2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு இந்த திட்டத்தை ரத்து செய்தது. தமிழக விவசாயிகளின் கோரிக்கை மற்றும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு தமிழக அரசு 2 ஏப்ரல் 2013 அன்று சட்டசபையில் கெயில் நிறுவனத்தை விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதித்தால், விவசாயம் பாதிக்கப்படும். எனவே, தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், குழாய் பதிக்கலாம்’ என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் உத்தரவை ஏற்க மறுத்த, கெயில் நிறுவனம், தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது.

      விளை நிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டதற்கு, அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கெயில் நிறுவனம் தெரிவித்திருந்தது. எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை மாற்று வழியாகச் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டனர். மேலும் கெயில் நிறுவனம் தமிழக விளைநிலங்கள் வழியாகக் குழாய் அமைக்கவும் அனுமதி அளித்தனர்.

      இதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் இதை எதிர்த்து, தமிழக அரசு(அ.தி.மு.க) மற்றும் தமிழக விவசாயிகள் சங்கங்கள் சார்பில், உச்சநீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக, கெயில் நிறுவனம், எரிவாயு குழாய் பதிப்பதற்குத் தடை விதிப்பதுடன்,இதுதொடர்பாக தமிழக அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

      அப்போது உச்ச நீதி மன்றம் முகத்தில் அடித்தது போல் ஒரு கேள்வி ஒன்றை தமிழக அரசிடம் கேட்டது. திட்டத்தைத் துவக்கும் போது ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டு, இப்போது மறுப்பதா என்று கேட்டது. திட்டம் துவங்கும் போது யார் இருந்தார்களோ அவர்கள் இதை பற்றி ஏதும் பேசாமல், எவ்வித ஆலோசனைகளும் மேற்கொள்ளாமல், அப்போது இருந்த காங்கிரஸ் அரசிற்கு ஒரு ஏவல் நாயாகவே இவ்விஷயத்தில் செயல் பட்டது யார்? ஜெயலலிதாவா அல்லது கலைஞரா. வோட்டு அரசியலுக்காக ஜெயா இத்திட்டத்தை எதிர்த்தார் என்றே வைத்துக் கொள்வோம். ஏன், அதனை உங்கள் தலைவர் கலைஞர் செய்திருக்க வேண்டியது தானே. இதனை வைத்து அரசியல் செய்ய கூடாது என்று நினைக்கும் அளவிற்கு அவ்வளவு நல்லவரா.

      இதுமட்டுமல்ல கச்ச தீவு தொடங்கி கெயில், மீத்தேன் என்று தமிழக உரிமைகளை தன்னுடைய அரசியல் ,குடும்ப நலன்களுக்காக எப்போதுமே பலி கொடுக்க தயங்காதவர் தான் மு.க அவர்கள். என்ன இருந்தாலும் ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு தினம் தினம் சிதறி செத்து கொண்டிருந்த போது, இங்கு சினிமா கூத்தாடிகள் அளிக்கும் பாராட்டு விழாக்களையும்,மேடையில் அசின் நயன்தாரா போன்ற சினிமா நடிகைகள் போடும் குத்தாட்டத்தையும் கலை விழாக்களையும் மெய் மறந்து ரசித்தவர் தானே , மேலும் தன் பேரனோடு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளையும் ரசித்து கொண்டிருந்த நீரோ மன்னன் தானே கருணாநிதி. பாராளுமன்ற தேர்தல் வருவதை மனதில் வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்ற 3 மணி நேரம் உண்ணா விரதம் என்கிற நாடகத்தை அரகேற்றியது. போர் நின்று விட்டதாக பசபல் வார்த்தைகளை கூறி மக்களை ஏமாற்றியது. இதை எல்லாம் யாரும் மறக்க மாட்டார்கள்.

      //பாபர் மசூதியை இடிக்க கரசேவகரை அனுப்பிய ஜெயா, அதை எதிர்த்த கருணனிதியைவிட உயர்ந்தவராகிவிட்டார் மீரானுக்கு…//

      பாபர் மசூதியை இடித்த பாசிச பா.ஜ.க கும்பலோடு, 2002 இல் குஜராத்தில் 3000 அப்பாவி இசுலாமியர்களை படுகொலை செய்த கிரிமினல் பா.ஜ.க கும்பலோடு 98-2003 வரை தேர்தல் கூட்டணி வைத்து பதவி சுகம் அனுபவித்தது யாரம். “தவறான இடத்தில் இருக்கும் சரியான நபர்” என்று வரலாறு தெரியாமல்(தெரிந்திருந்தும்) வாஜ்பாய்க்கு பாராட்டு பாத்திரம் வாசித்தது யாரம்.

      இன்னும் எவ்வளவோ அடுக்கி கொண்டே போகலாம் அது என்னுடைய வேலை அல்ல. நடுநிலையாளர்களுக்கு தெரியும் உண்மை எது வென்று. நான் ஜெயாவை சுத்தமான நல்லவர் என்று கூறவில்லை. அவரும் அராஜகவாதிதான். ஆனால், கருணாநிதிக்கு இவர் பரவாயில்லை. எவ்வளவோ தேவலாம். இதற்க்கு மேல் இதில் மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை.

      கடைசியாக, கருத்தை முடிந்தால் கருத்தால் சந்தியுங்கள். காவி கயவர்கள் செய்வது போல் தனக்கு எதிராக பேசுவோரை தேச துரோகிகள் என்று முத்திரை குத்துவதை போன்று.எதிர் கருத்தை வைப்பவர்களை ஆர்.எஸ்.எஸ் கூலிகள் என்பது, காவிகள், அம்பிகள் என்பது போன்ற இந்த பேச்செல்லாம் வேண்டாம். இங்குள்ள சில பதிவர்களில் நான் மதிக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர். உங்களின் பதிவுகளை எப்போதும் நான் நிறுத்தி படித்து விட்டு போவது வழக்கம். ஆகவே,எங்களின் மனதினை புண்படுத்தாமல் கருத்திடுங்கள். நன்றி

  26. அஜாதசத்ரு, பார்பனீய எதிர்ப்பு என்பது பார்ப்பனீயத்தை மட்டும் தெளிவாக எதிர்ப்பதாக இருந்தால் அது ஆரோக்கியம் அக்கறை என்று கொள்ளலாம்.பார்ப்பது அனைத்தும் பார்பனீயமாய் தெரிந்தால் அது ஏதோ மனச்சிக்கலாய் உங்க்ளுக்குள் உறைந்திருப்பதாய் தான் படுகிறது.என்னுடைய கருணாநிதி பற்றிய விமர்சனம் மிகத்தெளிவாய் ஆதாரத்தோடு இருக்கிறது.அவதூறாகவோ வரம்பு மீறியோ நான் எழுதிவிடவில்லை.ஆனால் என் முதல் வரியை நீங்கள் படித்தவுடனேயே “ஆகா இவன் கருணாநிதியை எதிர்த்து எழுதுகிறான் “என்ற எரிச்சலால் உந்தப்பட்டு எங்கேயோ ஒரு கூட்டத்தோடு என்னை தள்ளிவிட்டு என்னை வாய் திறக்காமல் செய்ய பார்க்கிறீர்கள்.இதுதான் கருணாநிதி பித்து நிலை.இதே பித்து என் க்கும் பிடித்திருந்ததால் உங்கள் உணர்வை என்னால் உணர முடிகிறது.இந்த பித்தை தற்க்காலிகமாவது ஒதுக்கி வைத்துவிட்டு என் கருத்தை முழுதாக படியுங்கள். எம்ஜியார் ஜெயலலிதா சோபன்பாபு ஜெய்சங்கர் கதையெல்லாம் இங்கு எதற்க்கு?கருணாநிதி அவர் தகுதிக்கு உகந்தது போல் நடந்திருக்கிறார என்று வாதம் வைத்தால் அதை திருப்புவதுபோல் தொடர்பில்லாததையெல்லாம் பதிலாய் வைத்து என்னையும் கொண்டு எங்கேயோ தள்ளி விடுகிறீர்களே! கருணாநிதியை விமர்சித்தால் இதுதான் கதி என்று மிரட்டுகிறீகளா..!?

    • மீரான் பாய் அவர்களே! பித்து எனக்கு பிடிக்கவில்லை! இங்கு விவாதத்துக்கு உள்ளாவது ஜெயாவின் செயல்பாடுகள் , அவர் குணாதிசயங்கள் பற்றியே, அப்படி இருக்க கருணானிதியை இழுத்துநியாயம் கற்பிப்பதும் அதில் முதல்வை, முற்றும் வரி என்பதும்நியாயமா? பார்ப்பனீயம் என்பது என்னைவிட தங்களுக்கு அதிகம் புரிந்திருக்க வாய்ப்பிருந்தால் அதையும் கூறுங்களேன்! விவாதத்தை திசை திருப்பி கருணானிதி பற்றிய விமரிசனமாக மாற்ற் பார்ப்பன சக்திகளுக்கு மட்டுமே அவசியமுள்ளது! உங்களுக்கு என்ன அவசியமோ அல்லது அவசரமோ தெரியவில்லை!

      • அஜாதசத்ரு நீங்கள் அனைத்தையும் பார்ப்ப்னீயம் பார்ப்பனீயம் என்றே பார்ப்பதில்தான் அசல் பார்வையிலிருந்தும் விமர்சனத்திலிருந்தும் விலகி போகிறீர்கள் என்று கருதுகிறேன்.பார்ப்பணர் அல்லாத இரண்டு அரசியல் வாதிகளை அவர்களின் செயல்பாடுகளிலிருந்து பார்க்கும் உங்கள் மனம் அவரில் ஒருவர் பார்ப்பணராக இருந்துவிட்டால் பார்ப்பனீய கோணத்திலிருந்து மட்டுதான் பார்க்க தளைப்படுகிறது.ஆகவேதான் கருணாநிதி எவ்வளவு தரம் தாழ்ந்து சந்தர்ப்பவாதியாக நடந்து கொண்டாலும் அவையெல்லாம் சதாரண அரசியல் வாதியின் நடவடிக்கையாகவும் அவர் எப்படி நடந்தாலும் தமிழினத்தை காக்க வந்த ஆபத்பாந்தவனாகத்தான் பார்க்கவேண்டும் என்றும் நம்புகிறீர்கள்.நான் அவர்கள் இருவரையும் கடந்தெடுத்த சுயநல அரசியல்வாதிகள் என்றே பார்க்கிறேன்.பிறகுதான் இருவரில் யார் கொஞ்சம் குறைந்த அயோக்கியர்கள் என்று விவாதிக்கிறேன்.நீங்கள் இந்த இடத்திற்க்கே வருவதற்க்கே தயாரில்லை.காரணம் ஒன்று ஜெயலலிதா பாப்பாத்தி.அடுத்து ஆயிரம் இருந்தாலும் தமிழின காவலர் கருணாநிதி.பிறகு எப்படி என் கோணத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்? பார்பனீயம் தூண்டிவிட்டே நான் விவாதிக்கிறேன் என்று கொஞ்சமும் சிரிக்காமல் சீரியஸாய் நகைச்சுவைதான் பண்ண முடியும்.ஜெயலலிதா பாப்பாத்தி சரி. அவரை சுற்றியிருக்கும் பெருச்சாளி கூட்டம் பார்ப்பணர்களா? அவரது அமைச்சரவையில் எத்தனை பேர் பார்ப்பணர்கள்?சட்டசபையில் நான் பாப்பாத்தி என்று ஆவேசமாய் அறிவித்தவருக்கு பார்ப்பனீயத்தை பார்ப்பணர்களைக்கொண்டே அரங்கேற்றுவதற்க்கு என்ன தயக்கம்? கருணாநிதிதான் எதையும் தயங்கி செய்வார்.ஜெயலலிதாவிடம் இந்த சுபாவம் இல்லை என்பதை அனைவருக்குமே தெரியும். பார்ப்பனீயம் அவரை வைத்து பலதை அரங்கேற்ற துடித்தது.ஆனால் அவர் அவரின் சுயநலத்தையே பெரிதாக நினைத்து செயல்பட்டதாகத்தான் கருதுகிறேன். நீங்கள் பாப்பாத்தி என்ற ஒற்றை காரணத்தை வைத்து கருணாநிதியின் அனைத்து சந்தர்ப்பவாததையும் அயோக்கியத்தனத்தையும் புரட்டுவாதத்தையும் பச்சோந்திதனத்தையும் மறைக்க பார்க்கிறீர்கள்.நான் ஜெயலலிதாவை புகழ்வதற்க்கு எந்த அவசியமும் இல்லை.

  27. ஜெ ஆட்சியை சோ மீண்டும் வராமல் பார்த்துக் கொண்டார்
    வாஜ்பாய் ஆட்சியை ஜெ கவிழ்த்தார்
    ஜெயேந்தர கைது ஜெநடத்தியது

    ஆனால் எல்லா வரலாற்றையும் மறைத்து அவர்கள் அணைவரும் ஒற்றுமையாக இருந்தனர் என சொல்லுவது என்ன நியாயம்?..

    இட்லரின் யூத பேரழிப்பு பாசிசம் என்றால்
    வினவின் அந்தண எதிர்ப்பு ?..

  28. நான் செயாவின் இந்துத்துவ சார்பை ,RSS, கருத்தியலை பிரதிபலிக்கும் அவரது நிலைபாடுகளை,இந்து மதவெறி இயக்கங்களை வளர்க்க ஒத்துக்கையாக இருந்தது ,இவற்றை சுட்டிக்காட்டி அவரது அரசியல் நாட்டிற்க்கு ஆபத்தானது என்கிறேன்.நீங்களோ இவை யாதொன்றையும் மறுக்க,முடியாமல் கருணாநிதியின் பதவி மோகத்திலான பா.ஜ.க கூட்டணி,கோவை குண்டு வெடிப்புகளை தொடர்ந்து அவர் முசுலிம் மக்கள் மீது ஏவிய ஒடுக்குமுறை இவற்றை காட்டியே செயாவை அவரது குற்றங்களில் இருந்து விடுதலை செய்கிறீர்கள்.இது சரிதானா என்று எண்ணிப்பாருங்கள்.கருணாநிதி செய்தவை அறிந்தே செய்த தவறுகள்.செயா செய்தவையோ திட்டமிட்ட குற்றங்கள்.எண்ணிப்பார்த்து தெளிவடையுங்கள்.

    முசுலிம்களுக்கு செயா ஏன் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.அவருக்கா முசுலிம்கள் வாக்களித்தார்கள்,கருணாநிதிதானே முசுலிம்கள் வாக்குகளை வாங்கி கொழுத்தார் என்று சொல்கிறீர்கள்.அதிர்ச்சியாக இருக்கிறது.திமிரும் கொழுப்பும் நிரம்பிய S.Ve .சேகர் ,Y.G. போன்ற பார்ப்பன கும்பல் கூட இவ்வளவு திமிராக பேசாது.தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு ஒரு அரசு நல்லது செய்ய வேண்டியதில்லை என்பது பாசிசத்தின் கேடு கெட்ட வடிவம்.இந்த அளவுகோலை மோடிக்கு பொருத்தினால் மோடிக்கு வாக்களிக்காத முசுலிம்களை குசராத் இனப்படுகொலையிலிருந்து அவர் ஏன் காக்க வேண்டும் என்று விடை கிடைக்கும்.திருந்துங்கள்.

    முசுலிம்கள் செயாக்கு வாக்களிப்பதில்லை என்பதும் உண்மையல்ல.நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்.91-ல் துறைமுகத்தில் மட்டும் தி.மு.க. வென்றது முசுலீம்களின் வாக்குகளால்தான் என்று.அபபடியானால் மீதி தொகுதிகளில் செயாவுக்குத்தான் வாக்களித்தார்கள் என்றாகிறதா இல்லையா.இரண்டாயிரத்து ஒன்று சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி தோற்பதற்க்கான எந்த நியாயமும் இல்லை.அவரது 96-01-ஆடசியின் மீது பெரிய குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை.ஆனாலும் தோற்றார்.காரணம் பா,ஜ க ,கூட்டணி என்பதால் முசுலிம்கள் முற்று முழுதாக அவரை புறக்கணித்து செயாவுக்கு வாக்கு செலுத்தினர்.செயா வென்றார்.இப்போது கூட செயா 37-நாடாளுமன்ற தொகுதிகளை வென்றார்.10-முதல் 15-விழுக்காடு வரை இருக்கும் முசுலிம்கள் அவருக்கு வாக்களிக்காமல் இது சாத்தியமில்லை.அந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையிலும் முசுலிம்களுக்கு இட ஒதுக்கீட்டை கூடுதலாக்குவேன் என வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார்.

    MGR -க்கு முசுலிம்கள் வாக்களிக்கவில்லை என்பதும் உண்மையல்ல.1977-சட்டமன்ற தேர்தலில் முசுலீம் லீக் அ. தி.மு.க ,வுடன் கூட்டணியில் இருந்தது.அவ்வளவு ஏன்.MGR க்கே -சென்னையில் போட்டியிட துணிவில்லாமல் முசுலிம்கள் கணிசமாக வாழும் அருப்புக்கோட்டை தொகுதிக்கு ஓடினார்.அதில் ஒரு வேடிக்கை.அருப்புக்கோட்டை நகரம் அப்போது அந்த தொகுதியில் இல்லை.சாத்தூர் தொகுதியில் இருந்தது.அந்த தொகுதியின் வீரசோழன் ,காரியாபட்டி,காரையேந்தல்,நரிக்குடி,இருஞ்சிறை.கீழசம்பகுளம் முதலான ஊர்களில்கணிசமான அளவில் வாழும் முசுலீம்களின் வாக்குகளை பெற்றுத்தான் அவர் வெற்றி பெற்றார்.இதில் வீரசோழனும் காரையேந்தலும் முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்கள்.

    இன்னும் நிறைய இருக்கிறது.

    மீனாட்சிபுரம் ,Rm,V பற்றிய உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் நிதானமாக படியுங்கள்.அதன் முரண்களை பிறகு பேசுவோம்.

    • திப்பு, ஜெயாவுக்கு இருந்தது ஆர் எஸ் எஸ் கருத்தியல் என் கிறீர்கள்.கருணாநிதிக்கு இருந்தது பதவி மோகம் என் கிறீர்கள்.முன்னது வெறுக்க தக்கது.பின்னது மன்னிக்கத்தக்கது என்பது உங்கள் கருத்து.நான் கேட் கிறேன், முதன் முதலாக பஜக வுக்கு ஆதரவளித்து சொற்ப நாட் களில் ஆதரவை விலக்கி அதன் பிறகு சாகும் வரை பஜகவோடு ஜெயா கூட்டு சேரவில்லை. அன்று அவர் ஆதரவை விலக்கிய அன்று பிரதமராய் இருந்த வாஜ்பேய், கருணநிதி மொழியில் சொல்வதாய் இருந்தால் நல்லவர் பண்பானவர் வாஜ்பேய் சொன்னார் “இன்றுதான் நான் நிம்மதியாக உறங்குவேன்” என்று.ஒட்டு மொத்த தமிழகமும் தீண்டதகாத கட்சி கூட்டு சேர நினைத்தும் பார்த்திராத கட்சியோடு கூட்டணி வைத்து கொஞ்ச நாட் களில் காலை வாரி விட்டு வர என்ன காரணம்?சுயநலம்.தன் அரசியல் எதிரி கருணாநிதியை பழி வாங்க வேண்டும்.தன் மேல் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளிலிருந்தும் வெளிவரவேண்டும்.இதுதான் அவரின் நோக்கம்.அதில் சுணக்கம் காட்டுகிறது மத்திய அரசு.”நான் என் பெயரையே அடகு வைத்து தமிழ் நாட்டையே அதிர வைத்து உன்னோடு கூட்டணி சேர்ந்திருக்கிறேன்.நீ என் கோரிக்கையில் மெத்தனம் காட்டுகிறாயே” என்ற வேகத்தில்தான் மத்திய அரசை காலை வாரி விட்டார்.உடனடியாய் கருணாநிதி தோளை கொடுத்து தாங்கிக்கொள்கிறார். அப்படி இருந்தும் முட்டு கொள்ளாமல் அரசு குடைதள்ளி சாய்ந்து கவிழ்கிறது.இதற்க்கு அவர் சொன்ன காரணம்தான் “நாடு இருக்கும் நிலையில் தேர்தலை தாங்குமா?”இவர் தாங்கியும் கவிழ்ந்து போனதே.வேறு வழியில்லை தேர்தலை சந்தித்தே ஆகவேண்டியநிலை.தேர்தலை தவிர்க்கத்தானே கூட்டு சேர்ந்தார்.கலைந்து போன அரசை மீண்டும் உருவாக்க ஏன் கூட்டணி சேர்கிறார்? ஜெயலலிதா கூட்டணி வைத்தால் இந்துத்துவ கருத்தியல் அவருடைய காரணம் கண்ணுக்கு முன்னால் தெரிந்தாலும் பார்பணீயம் என்ற பூச்சாண்டியைத்தான் காட்டுவீர்கள். கருணாநிதி கூட்டணி வைத்து அந்த இந்துத்துவ வெறி என்ன கோர தாண்டவம் ஆடினாலும் அதை கண்ணையும் காதையும் வாயையும் பொத்தி அது முழுமையாக ஆண்டு முடிக்கும் வரை இருந்து விட்டு தானும் நன்றாக அன்பவித்துவிட்டு கிளம்புவதை “இது வெறும் பதவி மோகம்” என்று லேசாக முணங்கி விட்டு தானை தலைவன் தமிழின தலைவன் என்று வாழ்த்தி கோஷம் போடனும். இந்த பச்சோந்தி தனத்தை நெஞ்சம் பொறுக்க முடியாமல் எவனாவது விமர்சித்தால் அவனை பார்பணியத்திற்க்கு துணை போகிறவன்.அல்லது அரசியல் விள்ங்காத அடி முட்டாள் என்று தூற்றவேண்டும் இல்லையா?

      • திப்பு இடஒதுக்கீடு என்பது அதுவும் முஸ்லிகளுக்கான இட ஒதுக்கீடு என்பது கொஞ்சம் சட்டநுட்பமான ஒன்றுதான். என்னதான் முஸ்லிகளுக்கான இட ஒதுக்கீட்டிற்க்கு பல நீதிபதிகள் அடங்கிய கமிஷன் கள் நியாயங்களை கூறி அமல்படுத்த கோரிக்கை வைத்தாலும் சில சட்ட சிக்கல்களை தாண்டியே அவர்களுக்கு ஒதுக்கீட்டை தந்தாக வேண்டும்.அப்படி தருவதற்க்கு தரக்கூடிய அரசுகளுக்கு பெரிய அக்கறை இருந்தாக வேண்டும்.அப்போதுதான் அனைத்து சூழ்ச்சிகளையும் கடந்து அவ்ர்களால் அமல் படுத்த முடியும். முஸ்லிமகளுக்கு தருவதற்க்கு கருணாநிதி அரசுக்குத்தான் அதற்க்கான பெரும் கடமை இருக்கிறது.எந்த அளவிற்க்கு முஸ்லிகள் அவர் மேல் நேசம் வைத்திருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.முஸ்லிமாக இருப்பவன் திமுக அனுதாபியாக இல்லாம்லிருந்தால் அது ஆச்சர்யம்.இதோ இந்த தளத்திலேயே பலர் நான் கருணாநிதிக்கு எதிராக வரிந்து கட்டுவதை ஆச்சர்யத்தோடு பார்க்கலாம்.அவ்வளவு பற்றோடு இருந்த சமூகத்திற்க்கு அவர் செய்தது என்ன? ஜெயலலிதா ஆணையம் போடுகிறேன்.பிறகு சட்டம் இயற்றுகிறேன் என்று சொன்ன பிறகே இந்த எலி புழுக்கை இட ஒதுக்கீட்டை தந்தார்.இதற்க்கு உதாரணமாய் “ஓட்டு போடாத மக்களை மோடி கருவறுத்தால் என்ன தப்பு என்று கேட் கிறீர்களே”எதற்க்கு எது உதாரணம். இட ஒதுக்கீடு என்பது மக்களின் மேல் உள்ள அதீத அக்கறை. தந்தால் அதற்க்கான நன்றி கடன் அந்த தலைவருக்கு கிடைக்கும்.இல்லையென்றால் இல்லை.தனக்கு ஓட்டு போடாத மக்களை இல்லாமலாக்குவேன் என்ற கொலை வெறிபிடித்த செயலை எப்படி இதற்க்கு உதாரணமாக்குவீர்கள். கருணாநிதியின் பக்தி உங்களை நிதானமில்லாமலாக்குகிறது

        • மீரான்.
          ”MGR க்கு காவி சிந்தனை இருந்ததா?அப்படி எந்த பின்புலமும் எம்ஜியாருக்கு இருந்ததாக தெரியவில்லை.கருணாநிதிதான் அப்படி ஒரு சந்தேகத்தை முஸ்லிகள் மனதில் விதைத்து இன்னும் அவர்களை தன்னோடு தக்கவைத்துக்கொண்டார்.நான் சொல்கிறேன் ”என்று சொல்கிறீர்கள்.

          MGR-செவப்பா இருப்பாரு.அதுனால அவருக்கு காவி சிந்தனை இருக்காது என்று சொல்லாமல் விட்டீர்களே.அதுவரைக்கும் நன்றி.மீண்டும் மீண்டும் சொல்வதற்க்கு அவலமாக இருக்கிறது.சரி,சற்று விளக்கமாகவே சொல்கிறேன்.

          ஒரு சனநாயக நாட்டில் இயங்கும் அரசியல் கட்ச்சிகள் பொதுவாகவே பெரும்பான்மையினரை பிரதிநிதிப்படுத்துபவையாக,அவர்களின் நலனை பேணுவதாகவே இருக்கும்.அதனால் அந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் கோரிக்கைகளை எடுத்து சொல்ல,அவர்களின் நலனை முன்னெடுக்க சிறுபான்மையினருக்கென தனிச்சிறப்பான கட்ச்சிகள் தேவைப்படுகின்றன.அந்த கட்ச்சிகள் சிறுபான்மையினர் கடசி என்பதால் வகுப்புவாத நோக்கில் சமூகத்தின் பிற பிரிவு மக்களை அடக்கி ஒடுக்கும் வகையில் கொள்கைகளையோ செயல்திட்டங்களையோ முன்வைத்து செயல்பட முடியாது.

          இந்த அடிப்படையில் இந்தியாவில் செயல்படும் முசுலிம் லீக் ஒரு வகுப்புவாத இயக்கமல்ல.அது சிறுபான்மையினரை பிரதிநிதிப்படுத்தும் கடசி .அவ்வளவுதான். முசுலிம் லீக் இந்துக்களுக்கு எதிரான முழக்கத்தையோ,செயல்திட்டத்தையோ முன்னிறுத்துவதில்லை.
          இந்த மாதிரியான ஒரு சிறுபான்மை இயக்கத்தின் இருப்பை இந்து முன்னணி என்ற மதவெறி கும்பலின் அரசியல் நுழைவை,அதன் அடாவடி அரசியலை நியாயப்படுத்த MGR-சுட்டிக்காட்டுகிறார்.

          அதுவும் எப்படி .”பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு’..”’துலுக்கனை வெட்டு துலுக்கச்சியை கட்டு ”போன்ற மதவெறி முழக்கங்களை மேடை போட்டு உட்கார்ந்து காது குளிர கேட்டு விட்டு வந்து ஒரு மனிதன் பேசுகிறான் என்றால் அந்த அயோக்கியப்பயலை காவி வெறியன் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது.இதை சொல்வதற்க்கு எந்த கருமத்தையும் தொட வேண்டியதில்லை.

          மீண்டும் உங்களிடம் தகவல் பிழை.இந்து முன்னணி துவக்கம் முந்தியது,மீனாட்சிபுரம் பிந்தியது.மதம் மாறிய மக்கள் கட்சியும் மாறிவிட்டால் என்ன செய்வது.என்ற உங்கள் வாதமே அடிபட்டு போகிறது.

          • திரும்ப திரும்ப எம்ஜியாரின் ஜெயலலிதாவின் குறைகளை நுணுக்கி நுணுக்கி ஆராய்கிறிர்களே தவிர கருணாநிதியின் குறைகளை உங்களால் மறுக்க முடியவில்லை.முஸ்லிம்லீக் என்ற கட்சியின் போட்டியாக இந்து முன்னணியை எம்ஜியார் முன்னிறுத்துகிறார் என்று கண்டு பிடிக்கிறீர்கள்.சரி இருந்து விட்டு போகட்டும்.ஒரு ஓட்டு பொறுக்கும் எந்த அரசியல் வாதியின் நிலையும் இதுதான்.ஒரு சமூகத்தின் பெரும்பாலான மக்கள் தனக்கு எதிராக இருக்கிறார்கள் என்று தெரிய வரும்போது அந்த அரசியல்வாதி அதற்க்கு நேரெதிரான நிலையை எடுக்கிறான்.(காயல்பட்டனம் என்ற ஊரில் எம்ஜியார் உள்ளே நுழையாதபடி கருணாநிதி பக்தர்கள் விரட்டியடித்தார்கள் என்பதை நினையூட்டுகிறேன்)இவ்வளவு நுணுக்கி எம்ஜியாரையும் கருணாநிதியையும் பார்க்கும் பார்வை கருணாநிதியை பார்க்கும்போது ஏன் குருடாகி விடுகிறது.இந்த குருட்டுத்தனத்திற்க்குத்தான் இவ்வளவு நேரமும் நான் மாய்கிறேன்.”ஜெயலலிதா பாப்பாத்தி அவரிடம் பார்பனீயமாய் இருக்கிறார்.எம்ஜியார் இந்து முன்னணியை வளர்த்துவிட்டார்.அவருக்கும் இஸ்லாமியர் வெறுப்பு இருந்தது”என்று நிறுவ படாதபாடு படுபவர்கள், சொக்கத்தங்கம் கருணாநிதி ஆட்சியில் சொர்கத்தில் அல்லவா சிறுபான்மையினர் இருந்திருக்க வேண்டும்!.நடந்ததா?நேர்மாறாக அவர் கூட்டணி வைத்து ஆண்ட மத்திய அரசு காலகட்டத்திலும் அவர் நேரிடையாக ஆண்ட மாநில ஆட்சியின் காலகட்டத்திலும் தான் வரலாறு காணாத சிறுபான்மை இன அழிப்பு கண ஜோராய் நடந்தது.இதை கவனத்தில் கொண்டு வந்தால் இதை “கருணாநிதியின் பதவி மோகம்” என்று லேசாக புனுகு தடவுவீர்கள்.தோழன் தோழன் என்று நம்பி அரவணைத்த ஒருவன் தன் சுயநலத்திற்க்கு என்னை பலி கொடுப்பான் தெரிந்தே அவனுக்கு காலம் முழுக்க நான் பலியாகிக் கொண்டே அவனை வாழ்த்தி கோசம் போட்டுக்கொண்டே திரிய வேண்டும்.என் எதிரியாக நினைத்து நான் கண்டு கொள்ளாத ஒருவன் எனக்கு எந்த கேடும் செய்யவில்லை என்றாலும் அவன் செத்த பிற்கும் அவனை கற்ப்பனையில் காறி துப்பிக்கொண்டே இருக்க வேண்டும் .நல்ல கொள்கை….

            • “இவ்வளவு நுணுக்கி எம்ஜியாரையும் ஜெயலலிதாவையும் பார்க்கும் பார்வை”என்று இருந்திருக்க வேண்டும்.தவறுதலாக “எம்ஜியாரையும் கருணாநிதியையும் “என்று வந்து விட்டது.இன்னொரு சந்தேகம்,வன்முறை கோசம் போட்டு செல்லும் இந்துமுன்னணி ஊர்வலத்தை பார்த்து ரசித்ததற்க்கே எம்ஜியார் மேல் இவ்வளவு ஆத்திரம் வருகிறதே..வரட்டும் நியாயம்தான்.ஆனால் வயிற்றை கிழித்து சிசுவை வெளியில் உருவிய மிருகங்கள் வேட்டையாடும்போது அந்த மிருகங்களை கண்டு கொள்ளாமல் தன் மருமகன் பதவியை தக்கவைக்க அதை வைத்து தன் தொழில் சாம்ராஜ்யத்தை வளர்த்துக்கொள்ள வாளாவிருந்த சிறுபான்மையின காவலரின் மேல் ஒரு சிறு எரிச்சலும் வரவில்லையே!”கலைஞரை பற்றி உங்களுக்கு தெரியாது எல்லாம் அர்த்தத்தோடுதான்”என்று அதற்க்கும் ஒரு நியாயம் இருக்குமோ?ஒன்று சொல்கிறேன்.இதே கருணாநிதி இன்னும் ஒரு ஐம்பது வருடம் நல்ல ஆரோக்கியம் பெற்று தீவிர அரசியலில் இருந்தால் அப்போதும் இதே சுயநலத்தோடுதான் இயங்குவார்.வார்த்தை ஜாலமாய் தமிழென்றும் சிறுபான்மை என்றும் பகுத்தறிவு என்றும் பிதற்றுவார்..அப்போதும் நீங்கள் விட்டு கொடுக்காமல் இதைப்போலவே கலைஞர் புராணம்தான் பாடப்போகிறீர்கள்.இப்படியே தலையில் மிளகரைத்துதான் தன் குடும்பத்தை வானளாவிய உயரத்தில் வைத்துவிட்டு இன்னும் மண்ணாசை விடாமல் ஆளாய் பறந்து கொண்டிருக்கிறார்.இந்த கருணாநிதியை காப்பாற்ற நீங்கள் செத்தவர்களோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

      • முதலில் ஒரு தகவல் பிழை.செயா 1999-ல் முசுலிம்கள் வாழ்வுரிமை மாநாட்டில் கொடுத்த உறுதிமொழி.

        ”கருணாநிதியை போல அல்ல நான்.செய்த தவறை ஒப்புக்கொள்ளும் நேர்மையும் துணிச்சலும் எனக்கு உண்டு.ஆம்.பாரதிய சனதாவோடு கூட்டு சேர்ந்து தவறு செய்து விட்டேன்.அந்த தவறுக்கு பிராயச்சித்தமாக நானே அந்த ஆட்ச்சியை கவிழ்த்து விட்டேன்.இனி எந்த காலத்திலும் பாரதிய சனதாவோடு அ,தி.மு.க.கூட்டு சேராது என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்”

        கூட்டம் பெருத்த ஆரவாரத்தோடு இந்த உறுதிமொழியை வரவேற்றது.முசுலிம்கள் 99-நாடாளுமன்ற தேர்தலில் செயாவுக்கு வாக்குகளை அள்ளிப்பொழிந்தனர்.ஆட்ச்சியை கவிழ்த்த சதிகாரி என்ற அவப்பெயரையும் தாண்டி 10-இடங்களை செயா வென்றார்.ஆனால் குடிகாரன் பேச்சு விடிந்தவுடன் பொய்யாய் போயிற்று.2004-நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ச.க.வோடு கூட்டு சேர்ந்தார் புரட்டு தலைவி.நாற்பதிலும் தோற்றார்.அதற்க்கு பிறகுதான் தெனாலி ராமனின் பூனைக்கு பால் சட்டியில் வாய் வைக்கும் துணிவு வரவேயில்லை.

  29. நன்றி திப்பு அவர்களே! முகமூடியுடன் வரும் பார்ப்பன சக்திகளை அம்பலப்படுத்த உதவி வருவதற்கு!

  30. நன்றி திப்பு அவர்களே! முகமூடியுடன் வரும் பார்ப்பன சக்திகளை அம்பலப்படுத்த உதவி வருவதற்கு! ஜெயாவின் சமாதி கூட காயவில்லை! அதற்குள் பார்பன மீடியாக்கள் கர்னாடகாவிலிருந்து ஒரு பார்பன வாரிசை கொண்டுவந்து திணிக்க முயற்சிக்கிரார்கள்! எல்லா பாஅசிச கட்சிகளுக்கும் ஏற்படும் வெற்றிடம்தான் , ஜெயாவின் மறைவிற்கு பின் அ தி மு க வில் ஏற்பட்டிருக்கிறது! இன்னொரு பாசிச தலைமையை திணிக்க சதிகாரர்கள் முயற்சிக்கிரார்கள்! ஒருபக்கம் சமூகநீதி காத்த வீராங்கனை ஜெயா என்று வீரமணியும், அம்மாவின் ஆட்சியில் ஓடிய பாலாறு, தேனாறு கணக்காய் தொழில் துறை முன்னேற்றம், குற்றச்செயல் குறைவி போன்ற சகிக்க முடியாத புகழ் அஞ்சலிகளுடன் பார்ப்பன மீடியாக்கள் (அம்மாவிற்கு பாரத ரத்னா என்ற கோரிக்கை வேறு) கள்ம் கட்டுகின்றன! பாவம் ஏமாந்த தமிழன்!

  31. செயலலிதா இரும்பு பெண்மணி,வீரமங்கை என்றொரு அபத்தமான கற்பிதம் மக்களின் மனதில் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.அதற்க்கு ஆட்ப்பட்டவர்களில் மீரானும் விதிவிலக்கல்ல என்பதை காட்டும் வகையில் சகோதரரின் வாதங்களை பார்த்து வருகிறோம்.[எ ,கா].\\கருணாநிதிதான் எதையும் தயங்கி செய்வார்.ஜெயலலிதாவிடம் இந்த சுபாவம் இல்லை என்பதை அனைவருக்குமே தெரியும்//.

    கோவை சுரேஷ் கொலையுண்டபோது பிணத்தை 17-கி,மீ ஊர்வலமாக எடுத்து செல்ல காவல்துறை அனுமதித்தது இந்துமுன்னணி காலிகள் கலவரம் செய்ய ஏதுவாகி போனது அனைவரும் அறிந்த உண்மை.அப்போது அம்மா துதிபாடிகள் என்ன சொன்னார்கள்.அம்மா செயல்பட முடியாமல் மருத்துவமனையில் இருந்த காரணத்தால்தான் இப்படி நிகழ்ந்து விட்டது.அம்மா மட்டும் நலமாக இருந்திருந்தால் பிணத்தை 17-கி,மீ ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி கிடைத்திருக்காது,சட்டம் ஒழுங்கை காப்பாற்றி இருப்பார்கள் என்றெல்லாம் கதை அளந்தார்கள்.ஆனால் வரலாறு அவர்கள் முகத்தில் கரி பூசி காறி துப்புகிறது.

    திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ்குமார் ஜூன் 18, 2014-அன்று அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிணக்கூராய்வு முடித்துவிட்டு,உடலை ஊர்வலமாக எடுத்து செல்ல இந்து முன்னணிக்கு அனுமதி வழங்கினார் செயா .அந்த மதவெறி ஊர்வலம் கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், பாடி, கொரட்டூர் வழியாக சுமார் பத்து கி,மீ சென்றது.கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகில் சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பேரூந்துகள் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் கபாலி என்றபேருந்து ஓட்டுனரும் , அசோக்குமார் என்ற காவலரும் காயம் அடைந்தனர். ஊர்வலம் நெடுக பேரூந்துகள் மீதும் வாகனங்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. 9 அரசு பேரூந்துகள், 25 மோட்டார் சைக்கிள்களும், 10 கார்களும் உடைக்கப்பட்டன. பூட்டியிருந்த மற்றும் திறந்திருந்த முசுலிம் அடையாளம் உள்ள கடைகள் குறி வைத்து தாக்கப்பட்டன.துலுக்கானாடா நீ துலுக்கானாடா நீ என்று கேட்டு கேட்டு அந்த கடைகளில் இருந்த அப்பாவி பொது மக்களையும் தாக்கினர்.இதுமட்டுமின்றி சென்னை அமைந்தகரையில் உள்ள கிறித்தவ தேவாலயம் ஒன்றை தாக்கியதோடு, தேவாலயத்தின் போதகர், அவரது வாகனம் மற்றும் அங்குள்ள பெண்களையும் பார்ப்பன இந்துமதவெறி பாசிசக் கும்பல் கடுமையாக தாக்கியது .இந்த மதவெறியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காவிக் கும்பலின்வெறியாட்டத்துக்கு பாதுகாப்பு கொடுத்தது.

    இதைத்தான் தமிழிசை சவுண்டு இப்படி ஒரு கவிதை போல நியாயப்படுத்தியது.

    மனது உடைந்திருக்கிறது.அதனால்
    பேருந்துகள் உடைக்கப்படுகினறன்.

    மீரான் அவர்களே ,இப்போது உங்கள் வாக்குமூலத்தை மீண்டும் படித்து பாருங்கள்.உங்களுக்கே வெட்கமாக இருக்கும்.

    \\இது ஜெயலலிதாவிற்க்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.அது அவரின் நடவடிக்கைகளிலும் பிரதிபலித்தது.நீங்கள் சொல்வதுபோல அவர் காவிகளால் காவி கொள்கைகளால் நிரம்பியவராக இருந்தால் இன்று காவி வெறிநாய்கள் வேட்டையாட சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. லேசாக அனுமதிதால் போதும் பாய தொடங்கி விடும். அதற்க்கு அவர் இசையும் அடையாளம் சிறிதும் தெரியவில்லை.அனைத்து மதத்தினரையும் சமமாய் பாவிக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும் என்ற முனைப்பே தெரிந்தது.//

    காவிகள் கலவரம் செய்ய சிறிதளவு அல்ல பெரிய அளவிலேயே செயா இசைந்திருக்கிறார்.ஆனால் தமிழகத்தின் சமூக நல்லிணக்க பாரம்பரியம் செயாவின் மதவெறி எத்தணிப்புகளுக்கு இடம் கொடுக்கவில்லை.ஆகவே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதற்க்கு காரணம் செயாவின் ஆடசியல்ல ,மக்கள்தான் மக்களின் மாண்புதான் காரணம்.

    • சரி,நுணுக்காமல் பெருக்கி வைத்து பார்த்தாலே இந்த நிகழ்வு மூலமாக செயாவின் யோக்கியதை பல்லிளிக்கிறது.இருபது,முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அல்ல வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது,இதற்க்கு என்ன சொல்கிறீர்கள்.

  32. “தமிழகத்தின் ச்மூக நல்லிணக்க பாரம்பரியம்”செயாவின் மதவெறிக்கு மட்டுமல்ல கருணாநிதியின் சுயநல அரசியலால் விளைந்த மதவெறி எத்தனிப்புகளுக்கும் இடம் கொடுக்க வில்லை.(நல்லவேளை கலைஞரால் உருவான மதநல்லிணக்க பாரம்பரியம் என்று சொல்லாமல் விட்டீர்கள்.)நான் மீண்டும் மீண்டும் சொல்ல வருவது ,ஜெயலலிதா மதவெறி சக்திகளுக்கு துணை போனார் என்று நீங்கள் சொல்லும் பொழுது அதற்க்கு மாற்றாய் கருணாநிதியை சொல்ல என்னிடம் பதில் இருக்கக்கூடாது.ஆனால் அதற்க்கு இணையாக அல்ல அதையும் தாண்டி என்னால் சொல்ல முடிகிறதென்றால் பிறகு என்ன இவர் பெரியாரிடம் பாடம் கற்றவர் திராவிடத்தின் இளவல் சிறுபானமையின காவலர்.இவர் லச்சணம் ஜெயலலிதாவோடு ஒப்பிடும் அளவிற்க்குத்தான் இருக்கிறதென்றால் இவருக்கு என்ன கூடுதல் கரிசன்மும் புகழ் மாலையும்?என்னதான் அரசியல் வாதிகளாய் இருந்தாலும் அரசியல் ஆதாயம் தேடி அலைந்தாலும் இடது சாரிகளையாவது நம்ப முடிகிறது.கொள்கையளவில் இவர்தான் இடதுசாரிகளைவிட பஜக வுக்கு நேர் விரோதமானவர்.அவர்களிடம் இருந்த பஜக வெறுப்பு இவரிடம் உண்டா? வாயில் மட்டும் உண்டு.பண்டாரங்களும் பரதேசிகளும் நாட்டை ஆள்வதா?என்பார்.பஜக என்பது ஒரு ஆக்டோபஸ்.அதற்க்கு பல கொடுக்குகள் உண்டு.அதில் ஒன்று ஆ ர் எஸ் எஸ்,பஜ்ரங்தள்,வி எச் பி என்று வக்கனையாக விவரிப்பார்.இதில்தான் நீங்கள் மயங்குவது.சொன்ன சொல் உலர்வதற்க்கு முன் “வாஜ்பேய் நல்லவர் வல்லவர்” என்று அவங்க வாசலில் போய் நிற்ப்பார்.கருணாநிதியை நினைக்கும் பொழுதெல்லாம் வி பி சிங் அவர்களை நினைத்துப்பார்க்கிறேன்.நெஞ்சம் விம்முகிறது.பிறகு கருணாநிதியை நினைக்கிறேன் சலித்து போகிறேன்

    • மீரான்.
      உங்கள் வாதம் புரியாத வயது குழந்தைகள் அடம் பிடிப்பது போல் உள்ளது.MGR மற்றும் செயா இந்துத்துவ வெறியர்கள் அல்லர் என்று வாதிட்டீர்கள்.வெறியர்கள்தான் என ஆதாரங்களோடு சொல்லியிருக்கிறேன்.அதிலும் இந்துத்துவ வெறியர்கள் வேட்டையாட வெறியுடன் காத்திருக்கிறார்கள் ,அவர்களுடைய வெறியாட்டத்துக்கு செயா இசைவு படவில்லை என சொன்னீர்கள்.இல்லை கலவரம் நடத்த முழுமனதோடு இசைந்திருக்கிறார் என ஆதாரத்தோடு இந்த பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

      இதற்க்கு கருணாநிதி மீதான உங்கள் வசைபாடலையே மீண்டும் பாடி எதிர் வாதம் என வைக்கிறீர்கள்.இது என்ன வகை நேர்மை.ஒன்று உங்கள் கருத்து தவறு என ஏற்றுக்கொண்டு MGR .செயா இருவரும் இந்துத்துவ வெறியர்கள் என ஒப்புக்கொள்ளுங்கள்.அல்லது அப்படி இல்லை ,அவர்கள் சமாதான புறாக்கள் ,என ஆதாரங்களோடு எதிர் வாதம் செய்யுங்கள்.அதை விடுத்து கருணா புராணம் பாடியே வாதத்தை ஒப்பேற்றலாம் என நினைக்காதீர்கள்.

      அடுத்து கருணாநிதியின் தவறுகளை முதல் பின்னூட்டத்திலேயே குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன்.அவற்றை எந்த இடத்திலும் நான் நியாயப்படுத்தவில்லை.பதவி மோகம் என்று வகைப்படுத்தி இருக்கிறேனேயல்லாது நியாயப்படுத்தவில்லை.கருணாவுக்கு செயா மேல் என்ற உங்கள் கருத்தை மறுத்து செயாவின் குற்றங்களை பட்யலிடுகிறேன் .அவற்றுக்கு யாதொரு மறுமொழியும் சொல்ல முடியாமல் கருணா வசையையே மீண்டும் மீண்டும் பாடுவதால் அவற்றை மறுத்து விட்டதாக நினைக்கிறீர்களா..

      பா.ச.க.கூட்டணி .அதுவும் குசராத் கலவர சமயத்தில் கூட்டணி,இவற்றையே கருணாநிதி மீதான முதன்மையான குற்றச்சாட்டாக சொல்கிறீர்கள்.அப்படி பார்த்தால் இந்தியாவில் எந்த ஒரு கடசியையும் மதசார்பற்ற அரசியலை விரும்புப்வர்கள் ஆதரிக்க முடியாது.பரூக் அப்துல்லா,மகபூபா,நிதிசு,ராம்விலாசு பசுவான்,மம்தா,அசித் சிங்,மாயாவதி,பிசு பட்நாயக்,சந்திரபாபு நாயுடு,செயா ,கருணாநிதி,தேவ கௌடா என இவர்களெல்லாம் பா.ச.க.வோடு நேரடியாக கூட்டு வைத்து பதவி சுகம் கண்டவர்கள்.காங்கிரசும்,முலாயமும் கள்ளக்கூட்டு வைத்தவர்கள்.வி.பி.சிங்கை நினைத்து ரெம்பவும் பொங்க வேண்டாம்.அந்த புண்ணியவானை தாயக்கட்டையாக உருட்டித்தான் இரண்டு இடங்களை 90-ஆக பெருக்கியது காவி கும்பல்.[இதில் ஒரே ஒரு யோக்கியன் ஈலோகத்தில் உண்டெங்கில் அது அந்த லாலு பிரசாத் மட்டும்தான்].இவற்றையெல்லாம் தாண்டித்தான் யாராவது ஒரு குறைந்த பட்ச தீங்கு தருபவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம்.இதையெல்லாம் எண்ணிப்பார்க்க மாட்டேன் கருணாநிதியை வெறுத்தே ஆக வேண்டும் என ஒற்றைக்காலில் நீங்கள் நின்றால் ஒன்று மட்டும் சொல்வதறகு ஆசை.

      .”துலுக்கனாடா நீ”என்று கேட்டு கேட்டு அடித்தார்களே ,அப்படி அடிவாங்கிய இந்து,முசுலீம் சகோதரர்கள் நான்கு பேரிடம் நேரில் போய் ”செயலலிதா மத கலவரத்துக்கு இடம் கொடுக்காத .சட்டம ஓழுங்கை உறுதியாக பேணி வந்த இரும்பு பெண்மணி என சொல்லிப்பாருங்கள்.

      • கருணாநிதியை விட்டுக்கொடுக்காத அனைவருக்குமாக நான் எழுதி கொள்வது,ஜெயலலிதாவின் மரணத்தையொட்டி வந்த கட்டுரைக்கு பலரும் மறுமொழி இட்டிருந்தார்கள்.அதில் சகோதரி ரெபெக்காமேரியின் கடிதம் கருணாநிதியையும் இழுத்திருந்தது.என்னை பொறுத்தவரை அது நியாயம்தான்.இருவரும் ஒரே காலத்தில் அரசியல் செய்து நீயா நான என்று முட்டி மோதி கொண்டவர்கள்.மக்கள் பிரச்சினை கூட இவர்களுக்கு மூன்றாவதோ நான் காவதோதான் இருவரின் தனிப்பட்ட பகையே தமிழகத்தின் அரசியல் எனும் அளவிற்க்கு இவர்களின் மல்லுகட்டல் இருந்தது.மக்கள் பிரச்சினைகளை அலசும் ,முடிவெடுக்கும் சட்டசபையிலேயே இருவரும் ஒன்றாய் இருக்க மாட்டார்கள்.அவர்களை உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்த மக்கள் மேல் மரியாதையையும் அக்கறையையும் தாண்டி அவர்களின் தனிப்பட்ட பகையே அவர்களுக்கு முக்கியம் என்று உலகமே காரி துப்பும் வகையில்தான் அவர்கள் அரசியல் இருந்தது.இப்படி இருந்த இருவரில் ஒருவர் இறந்து இறந்தவரைப்பற்றி நாம் பேசும்பொழுது இருப்பவரை எப்படி விட முடியும்.என்ன தலைப்பில் நாம் ஜெயலலிதாவை திட்டினாலும் அதில் கருணாநிதியும் அடங்குவார்.ஊழல் என்ற தலைப்பிலா,பகட்டு படாடோபம் என்ற தலைப்பிலா,குடும்ப அரசியல் என்ற தலைப்பிலா,சராயா சாம்ராஜியம் என்ற தலைப்பிலா,மதவாதத்திற்க்கு துணை போதல் என்ற தலைப்பிலா,பழி வாங்கும் போக்கு என்ற தலைப்பிலா,ஈழம் இலங்கை என்ற தலைப்பிலா காவேரி பிரச்சினை என்ற தலைப்பிலா ஜல்லிகட்டு என்ற தலைப்பிலா இப்படி அல்லது இன்னும் என்ன தலைப்பில் பேசினாலும் ஜெயலலிதாவை பேசினால் கருணாநிதியை பேசித்தான் ஆகவேண்டும்.நாம் பேசுவது சந்தியாவின் மகள் ஜெயலலிதாவை அல்ல.அல்லது அஞ்சுகத்தின் புதல்வன் கருணாநிதியை அல்ல.நாம் பேசுவது தமிழகத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை இரு பெரும் முதல்வர்களை.அவர்களைப்பற்றி நாம் என்ன பேசுவோம்?அவர்கள் பல் தேய்த்ததையும் குளித்ததையும் பள்ளிகூடம் போனதையுமா பேசுகிறோம்?அவர்களின் அரசியல் ஆட்சிமுறை அவர்கள் கட்சிகளின் கொள்கை அந்த கொள்கையின் படி அவர்கள் நடந்த முறை..இவைதானே பேசுபொருள்.”கருணாநிதியை பற்றி பேசாதே கருணாநிதியை பற்றி பேசாதே”என்றால் என்ன அர்த்தம்?யாருக்கு யார் மேல் மயக்கம் இருக்கிறது?ஒருவரின் தனிப்பட்ட செயல்பாடு அவரோடு முடிந்து போவது.அரசியல் செயல்பாடுகளை ஒருவரை விட்டு ஒருவரை எப்படி பிரிக்க முடியும்?அண்ணாவையும் ஜெயலலிதாவையுமா இங்கு ஒப்பிட்டோம்?கருணாநிதி ஜெயலலிதா தான் மிக அதிக காலம் ஒன்றாய் அரசியல் செய்தவர்கள்.ஆனாலும் இங்கு பலருக்கு கருணாநிதி என்றால் ஒரு மிதமான பார்வை.”அவர் என்ன கயமைத்தனம் பண்ணினாலும் கண்டுக்காதே அதே கயமைத்தனத்தை ஜெயலலிதா செய்தால் அதற்க்கு ஒரு பின்னணியை ஜோடித்து பெரிய ஆபத்தாக காட்டி கருணாநிதி கையில் ஆயுதத்தை கொடுத்து விட வேண்டும்.அவரும் இந்த பேத்தனத்தை முதலீடாய் வைத்துதான் இத்தனை வருடமாய் ஏய்த்துக்கொண்டு வருகிறார்.ஜெயலலிதா இந்துத்துவத்தில் ஊறியவர் சரி.அவரின் கால்கள் சங்பரிவார சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறது ஒத்துக்கொள்கிறேன்.அப்படிப்பட்ட ஆபத்து ஒன்று தமிழக அரசியலில் கால் ஊன்றுகிறது என்றால் இந்த பகுத்தறிவு பாசபிள்ளை எவ்வளவு எச்சரிக்கையாய் இருந்து இந்த தமிழகத்தை காத்திருக்க வேண்டும்.91ல் ராஜிவ்காந்தியின் கொலையோடு இந்த ஜெயலலிதா முதல்வரான போது நாங்களெல்லாம் இப்படித்தானே பயந்து இந்த கலைஞ்சரின் கரத்தை வலுப்படுத்தினோம்.அந்த ஜெயலலிதாவையே தட்டிவிட்டு விட்டு நேரிடையாக அந்த அரக்கர்களின் கால்களில் போய் விழுந்தாரே.எவ்வளவு லேசாக நீங்கள் அனைவரும் இதை கடந்து போகிறீர்கள்?இதற்க்கு மேல் என்ன இந்துத்துவ பூச்சாண்டி.

        • இன்னும்…பரூக் அப்துல்லா பாஸ்வான் முலாயம்..என்று வரிசையாக அடுக்குகிறீர்கள்.இவர்கள் யாரும் சமூகநீதியின் அடிப்படியில் அரசியலுக்கு வரவில்லை.தமிழகம் அளவிற்க்கு எந்த மாநிலமும் சமூகநீதி கொள்கையிலும் பகுத்தறிவு சுயமரியாதை போன்ற சித்தாந்த்த்திலும் இவ்வளவு தெளிவாய் திடமாய் உரம் போட்டு வளர்ந்ததில்லை.அந்த காரமும் வேகமும்தான் இன்றுவரை பஜக என்று அல்ல,எந்த தேசிய கட்சியும் வேர் பிடிக்க முடியாமல் கொம்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறது.ஜெயலலிதாவை திட்டி தீருங்கள் பிரச்சினை இல்லை.நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.திட்டி சோர்ந்த பிறகு கொஞ்சம் நிதானத்தோடு திருவாளர் கருணாநிதியை திரும்பி பாருங்கள்.கொள்கை என்ற வேட்டியை பதவிக்காகவும் பணத்திற்க்காகவும் பரி கொடுத்துவிட்டு “உடன்பிறப்பே உயிர் துடிப்பே”என்று ஒன்றுமில்லாமல் மொட்டைகட்டையாக நின்று சிரித்துக்கொண்டிருப்பார்.அப்பவாவது கேளுங்கள் “என் தானை தலைவனே உன்னை நம்பினோமே பகுத்தறிவும் சுயமரியாதையும் மதநல்லிணக்கமும் கொஞசமாவது உன் கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று உன்னை நம்பினோமே அஞசு பைசா பதவிக்காக அதையும் உதறிவிட்டு ஓடி விட்டாயே! கனகச்சிதமாய் ஊரை அடித்து உலையில் போட்டாய்,தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்.அரசியல்வாதி ஆட்டையை போடாமல் வாழ்மாட்டான் என்பதற்க்கு ஒப்ப உன் ஊழலை நாங்கள் பொருட்படுத்தவில்லை.கொள்கையிலாவது கொஞ்சமாவது உருப்படியாய் இருப்பாய் என்று நம்பினோம்.அதிலும் மண்ணள்ளி போட்டாயே..நீயே இப்படி என்றால் உனக்கு பின்…உன் மகன் இப்போதே 90சதவீதம் இந்துக்கள்தான் திமுகவில் இருக்கிறார்கள் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.எங்கள் கட்டுமரமே நாங்கள் இனி யாரை கட்டிக்கொண்டு அழ “என்று கேளுங்கள்.ஜெயலலிதா மரணத்திற்க்கு பிரியாணி தின்றுதான் ஆகவேண்டும் என்றால் திங்கிறேன்.அதே பிரியாணி கருணாநிதிக்கும் தின்பேன்.

          • அப்பாடா.ஒரு வழியாக செயாவும் MGR -ம் இந்துத்துவ வெறியர்கள்தான் என ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.

            ஆனாலும் செயலலிதாவை ஆதரித்தே தீருவேன் என்று குரங்குப்பிடியாக பிடிவாதம் பிடிக்கிறீர்கள்.ராமருக்கு இந்தியாவில் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது,மத அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது,கரசேவை நடக்கட்டும் என்றெல்லாம் இசுலாமிய வெறுப்பு நஞ்சு கக்கிய செயலலிதாவை, .பீகாருக்குள் நுழையாதே என பாட்னா வானூர்தி நிலையத்திலிருந்தே ராபரி தேவி துரத்தியடித்த பிரவீன் தொகாடியா திருச்சியில் வந்து இந்து எழுச்சி மாநாடு நடத்த மனமுவந்து ஏற்பாடு செய்து கொடுத்த செயலலிதாவை ,அந்த மாநாட்டில் திரிசூலம் வழங்கி திரிசூலத்தின் மூன்று முனைகளும் முசுலீம்.கிறித்தவர்,கடவுள் மறுப்பாளர்கள் ஆகிய மூன்று தரப்பாரையும் குத்திக்கொல்ல வேண்டும் என வெறியூட்டிய தொகாடியாவின் பேச்சை கேட்டும் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வழியனுப்பி வைத்த செயலலிதாவை ஆதரித்தே தீருவேன் என கண்ணை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தால் அந்த அறிவார்ந்த செயலை பாராட்ட சொற்கள் கிடைக்காமல் திண்டாடுகிறேன்.

            இந்த அறிவார்ந்த செயலுக்கு அடிக்காரணமாக தாங்கள் காட்டுவது கருணாநிதி கொண்ட கொள்கைக்கு துரோகம் செய்து விட்டார் என்ற வாதம்தான்.கலைஞர் என்ன அண்ணாவே கொண்ட கொள்கையை விட்டு தடம் மாறி துரோகம் செய்தவர்தான் ,ஆனாலும் அண்ணாவை ஆதரிக்க வேண்டியிருக்கிறது.பார்ப்பனிய ஆதிக்க வெறி கொண்ட இராசாசியை விட ,இந்திய ஏகாதிபத்தியத்துக்கு துணைபோன காமராசரை விட அவர் மேலானவராக இருந்தார்.அதே கோணத்தில்தான் பாசிச கோமாளி ,பூடகமான இந்துத்துவ வெறியன் MGR -ஐ விட,பாசிச கொடுங்கோலர்,அப்பட்டமான இந்துத்துவ வெறி கொண்ட செயலலிதாவை விட கருணாநிதி மேலானவராக இருக்கிறார்.தேவைப்பட்டால் இது பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

            அப்புறம் சமூக நீதி என்ற சொல்லாடலே வடபுலத்து கடசிகளால்தான் மண்டல் விவகாரத்தை தொடர்ந்து இந்திய அரசியலில் புழக்கத்துக்கு வந்தது.அதனால் கருணாநிதிக்கு கூடுதல் பொறுப்பு என்றெல்லாம் மதி மயங்கி பிதற்ற வேண்டாம்.பிற்பட்டோர்.தாழ்த்தப்பட்டோர் நலனை,சமூக நீதியை பேசாமல் நிதிசும்,முலாயமும்,மாயாவதியும் ஏன் காங்கிரசே கூட அரசியல் செய்ய முடியாது.கருணாநிதியின் மீதுள்ள வெறுப்பு உண்மைகளை உணர மாட்டாமல் உங்களை உளற வைக்கிறது.

            அப்புறம் கருணாநிதியின் மீது எத்தனை விமரிசனங்களை நானே இங்கு குறிப்பிட்டு எழுதுகிறேன்.ஆனாலும் ”என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே ”என்று அவர் சொல்லும்போதெல்லாம் கைதட்டி சீட்டியடிக்கும் தி.மு.க.தொண்டன் போல என்னை கருதிக்கொண்டு கொள்கை,வேட்டி மேற்கோள்களோடு மீண்டும் மீண்டும் என்னிடம் வந்து வசை பாடுகிறீர்களே ஏனிந்த பேதைமை.

            • நண்பர் திப்பு அவர்களுக்கு உள்ள உளகிடக்கை என்னவென்றால் நான் எப்படியாவது கருணாநிதியை சற்று உயர்த்தி ஜெயலலிதாவை வசைபாடியே ஆக வேண்டும்.அதற்க்காக எங்கெல்லாமோ சுற்றி எதைஎதையோ சொல்லி கஜகர்ணம் அடிக்கிறார்.எம்ஜியாரும் ஜெயலலிதாவும் இந்துத்துவ வெறியர்கள்தான் என்று நான் சொன்னதற்க்கு பெரிய மகிழ்ச்சி தெரிவித்து ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்.இந்துத்துவ வெறி இல்லாமலேயே அவர்கள் இருவரையும் விட இந்துத்துவத்தின் குடும்பத்தோடு கூடி கும்மாளமடித்து இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தயாராயிருக்கிற தமிழகத்தின் தவப்புதல்வன் தரணிபோற்றும் செயல் வீரன் கருணாநிதியை மிக வசதியாக மறந்து, அதை நினையுறுத்தினால் கண்டிக்கிறேன் என்று மயிலிரகால் வருடி விடுகிறார்.ஜெயலலிதாவை அவர் என்ன சொல்லி தாக்கினாலும் ஜெயலலிதாவின் காலுக்கு கீழே தொங்கி கொண்டிருக்கும் கருணாநிதி திப்புவுக்கு மறந்தே போகிறது.கருணாநிதியை காப்பற்ற அண்ணாதுரை வரைக்கும் போய்விட்டார்.திப்புவின் ஆத்ம திருப்திக்காகவாவது நான் கருணாநிதியை பாராட்ட அவரின் செயல்களை தேடுகிறேன்.ம்ம்ம்…..கிடைக்கவே மாட்டேங்குது.நான் என்ன கலைதுறையின் சினிமா நட்ச்த்திரமா?பிரம்மாண்ட செட் போட்டு கருணாநிதிக்கு பாராட்டுவிழா நடத்த.அவரை நம்பி ஏமாந்து போன பலகோடி தமிழர்களில் ஒருவன்.எம்ஜியாரும் ஜெயலலிதாவும் இந்துத்துவத்தின் பிரதிநிதிகள்.ஒத்துகொண்ட செய்தி.ராமர்கோயில் ஆதரவு ,கரசேவை ஆதரவு ,பிரவீன் தொகாடியா ,திரிசூலம் இதையெல்லாம் திருப்பி திருப்பி குறிப்பிட்டு எதற்க்கு?நான் தெளிவாக பலமுறை குறிப்பிட்டு விட்டேன்.அந்த இருவரின் இந்துத்துவ ஆதரவு நிலைக்கு எதிராக உங்கள் கருணாநிதியின் எதிர்நிலை என்ன?இப்படி ஜெயலலிதாவை பயம் காட்டி பயம் காட்டி கருணாநிதியின் பக்கம் எங்களை அழைத்துக்கொண்டு போய் என்ன நலனை நீங்கள் கண்டீர்கள்.?அல்லது எங்களுக்குத்தான் என்ன பலனை அமைத்து கொடுத்தீர்கள்?அவரும் அவர் குடும்பமும்தான் ஊதி பெருத்துக்கொண்டே போகிறது.தேவையற்ற அவ நம்பிக்கையோடு இருக்காதீர்கள்.யாரைக்கொண்டும் யாரும் அல்ல.படைத்தவன் எவனோ அவனே பாதுகாக்க போதுமானவன்.இவரின் ஏமாற்று நாடகத்தை புறக்கணித்து ஒதுக்குங்கள்.மெய்யாகவே சிறுபான்மை மக்களின் மேல் பரிவும் அக்கறையும் கொண்டு பல நல்ல உள்ளங்கள் நம் நாட்டில் ஏராளம் இருக்கிறார்கள்.அதில் இந்த கருணாநிதி கிடையவே கிடையாது.நம்மால்தான் இவருக்கு நன்மையே அன்றி அவரால் ஒரு துரும்பும் நமக்கு கிடைத்ததில்லை.கால்ம் முழுக்க ஏய்த்தல் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டிருப்பவரை தூக்கி சுமந்து கொண்டே திரியாதீர்கள்.இறக்கி கீழே வைத்து தெம்பாய் தைரியமாய் நடை போடுங்கள்.எத்தனை மோடிகள் திரண்டு வந்தாலும் பொடி பொடியாய் போவார்கள்.

              • மீரானுக்கு கருணாநிதி செய்தது என்று நன்மை எதுவுமே கண்ணுக்கு தெரியவில்லையாம்.எப்படி தெரியும். காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்தானே.சிலவற்றை குறிப்பிட்டு அவரது கண்களை திறக்க முயற்சிக்கலாம்.

                தன் நிதி கல்லூரிகள் என்ற கொள்ளையை தொடங்கி வைத்தவர் ம.கோ.ரா.[சுய நிதி ,MGR என்பதைத்தான் மணிகண்டன்கள் காண்டாகட்டும் என்று இப்படி எழுதுகிறேன்.காண்டு மேலும் கூடுவதற்க்கான சொற்களும் வரும்].அந்த கொள்ளையை வளர்த்து விட்டவர் செயலலிதா.

                96-ல் ஆட்ச்சிக்கு வந்தவுடன் மறு ஆண்டே 97-ல் தொழிற்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றை சாளர முறையை கொண்டுவந்து அந்த கொள்ளையை பாதி பகுதியளவுக்கேனும் தடுத்தவர் கலைஞர்.

                தனியார் கல்லூரிகள் தாராளமாக கட்டணக்கொள்ளை அடிக்க ஒத்து இருந்தவர் செயா.அவற்றுக்கு வரம்பிட்டு கட்டணங்களை நிர்ணயித்தவர் கருணாநிதி.

                பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த வன்னிய சமூகத்தினர் தனி ஒதுக்கீடு கேட்டு போராடியபோது அவர்களை சுட்டுத்தள்ளியவர் ம.கோ.ரா.89-ல் ஆட்ச்சிக்கு வந்தவுடன் MBC என்ற வகையை உருவாக்கி அதில் வன்னியர் மற்றும் இன்னும் சில சாதியினரை சேர்த்து அவர்களுக்கு பிற்பட்டோர் ஒதுக்கீட்டில் 20 விழுக்காட்டை உள் ஒதுக்கீடாக தந்து சமூக நீதியை வளர்த்தவர் கலைஞர்.

                முசுலிம்களுக்கு உள் ஒதுக்கீடாக 3.5 விழுக்காடு தந்தவர் கலைஞர்.அந்த ஒதுக்கீட்டை உயர்த்துவதாக வாக்களித்து ஏமாற்றியவர் செயலலிதா.

                தொழிற்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வை கொண்டு வந்து சமூக நீதிக்கு பங்கம் விளைவித்தவர் ம.கோ.ரா.அந்த நுழைவு தேர்வை ”சமூக நீதி காத்த வீராங்கனை”செயா ரத்து செய்யவில்லை.ரத்து செய்து சமூக நீதி காத்தவர் கலைஞர்தான் .

                கலைஞர் முதல்வர் ஆவதற்க்கு முன்னர் தமிழ்நாட்டில் சிறிய நகரங்களில் கல்லூரிகள் கிடையாது.சென்னை,மதுரை போன்ற பெரிய நகரங்களுக்குத்தான் உயர்கல்வி கற்க வந்தாகவேண்டும்.ஏழை எளிய மக்களுக்கு அது எட்டாக்கனி.கலைஞர்தான் விழுப்புரம்,,மேலூர்,பூலாங்குறிச்சி போன்ற சிறிய நகரங்களிலும் கல்லூரிகளை கட்டித்தந்தார்.காமராசர் பள்ளிகளை கொண்டுவந்தார் என்றால் கலைஞர் கல்லூரிகளை கொண்டு வந்தார்.தனியார்மயம் தலை விரித்தாடும் இப்போது கூட கலைஞர் ஆடசியில் கணிசமான எண்ணிக்கையில் அரசு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் கட்டப்பட்டன.செயாவோ தேனி மருத்துவ கல்லூரி தவிர்த்து எதையும் கொண்டு வரவில்லை.

                தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி அரசு போக்குவரத்து கழகங்களை தொடங்கி வளர்த்தவர் கலைஞர்.செயாவோ தாராளமயமாக்க வெறியில் அவற்றை ஊற்றி மூடுவதற்க்கான அத்தனை குழி பறிப்புகளையும் செய்தவர்.

                பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி சட்டம் போட்டவர் கலைஞர்.

                ஆட்ச்சிக்கு வரும்போதெல்லாம் முதல் ஆண்டில் 4000 கோடி 5000 கோடிக்கு பேருந்து,மின்சார கட்டணங்களை உயர்த்தி பால் விலையை உயர்த்தி மக்களை கொள்ளையிட்டவர் செயலலிதா.50,விழுக்காடு 60 விழுக்காடு என விலையேற்றுவது அவரது வழக்கம்.கருணாநிதியும் ஏற்றி இருக்கிறார்.ஆனால் அது 20 – 25 விழுக்காடு என்ற அளவிலேயே இருக்கும்.அதிலும் குறிப்பாக 2006 ,-ல் ஆட்ச்சிக்கு வந்த அவர் வெளியூர் பேருந்து கட்டணங்களை உயர்த்தாமலே ஆடசி நடத்தி ஆட்ச்சியை விட்டு இறங்கிப்போனார்.

                மதவெறிக்கு ,கலவர கும்பலுக்கு நேரடியாக துணை போனவர் செயா.(எ ,கா.).சூன் 18,-2014 இந்து முன்னணி பிண ஊர்வலம்.அப்படி கருணாநிதி அரசு மதவெறிக்கு ,கலவரம் நடத்த துணைபோனதாக ஒரு நிகழ்வை கூட காட்ட முடியாது.

                இன்னும் சொல்லலாம்.விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன்.

                மீரான்இப்ப்டி தரவுகளை தந்து கருணாநிதிக்கு செயலலிதா மேல் என நிறுவ முயற்சிக்க வேண்டும்.அதை விடுத்து ஊழல்,பா,ச,க,கூட்டணி என செயா கருணா இருவரிடமுமே இருக்கும் குறைகளை மீண்டும் மீண்டும் சொல்லி கருணாநிதியை மட்டும் குறை கூறுவது பொறுப்பான ,பொருள் உள்ள வாதம் ஆகாது.

                மற்றபடி சிறுபான்மை காவலர் என்ற மயக்கமெல்லாம் முசுலீம் மக்களிடம் இல்லை.அது மீரானின் கற்பனை.சான்றாக துறைமுக தொகுதி முசுலீம் மக்கள்.ஆம் 91-ல் கருணாநிதியை கரை சேர்த்த அதே மக்கள்தான் 2011-ல் பேராசிரியர் அன்பழகனை தோற்க்கடித்தனர்.அதிலும் நான் அப்படி ஒரு மயக்கத்தில் இருப்பது போல் எழுதுகிறார்.அவருக்கு பழைய பின்னூட்டம் ஒன்றின் நினைவூட்டல்.

                https://www.vinavu.com/2015/12/11/muslims-rescue-relief-work-chennai-floo-report/#comment-463064

                அந்த பதிவின் நீண்ட விவாதங்களில் பங்கெடுத்தவர்தான் மீரான்.ஆனாலும் கருணாவை சிறுபான்மை காவலர் என நான் கருதுவது போல பேசுகிறார்.என்ன ஒரு பேதைமை.

                அப்புறம் ஆண்டவன் நேரடியாக மக்களை காப்பதில்லை.மனிதர்கள் மூலம்தான் அதை செய்ய முடியும்.அதைத்தான் அண்மைய கோவை கலவரத்தில் இந்து சமூகத்தை சேர்ந்த மக்களே முசுலீம்களை பாதுகாத்ததை பார்த்தோம்.அப்படியான மத நல்லிணக்கத்தை நோக்கியே நமது எழுத்துக்களும் செயல்களும் இருக்க வேண்டும்..,

  33. இந்த விவாதத்தை கூர்ந்து நோக்கும் போது தனி மனித பலவீனங்கள் மட்டுமே பெருங்காட்சி அளிக்கின்றன. ஒருவரின் கருத்து என்னவென்றால் :

    “ஜெயலலிதா இறந்து விட்டார். ஏன், இறந்தவரை போய் இவ்வளவு வறுத்தெடுக்கிறீர்கள். அவருக்கு ஏற்பட்டது மிகவும் பரிதாபமானதொரு மரணம். வேண்டாம் விட்டு விடுங்களேன் ப்ளீஸ்..”

    என்று இருக்கிறது.

    பாவம் புண்ணியம் பார்த்து தான் ஜெயா ஆட்சி செய்தது போல இவர் பிதற்றுகின்றார்… ஜெயாவால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பதிக்கபட்ட யாருமே அவரின் மறைவை விரும்பத்தான் செய்வார்கள்.

    அதானை தான் ஜோசப் பிரியாணியுடன் அனுசரித்தார். அதிலும் தவறு காண்கின்றார் இவர்! யேசுவிடம் பாவமன்னிப்பு ஜோசப்க்காக கேட்டக்கப்போகின்றாராம் இவர். !அறிவை ஒதுக்கி வைத்துவிட்டு உணர்வுகளை மட்டுமே முதன்மைபடுத்தும் விவாத முறை இது.

    • ஏன் ஒரு இறப்ப கொண்டாட வேன்டும் பரமக்குடியில் துப்பாக்கியால் சுடப்பட்டு நாய்களை இழுப்பது போல குச்சியால் தூக்கி எறிந்தார்கள்நாமெல்லாம் டீவில பார்த்தோம் எப்பவோ செத்த செயலலிதா பிணம்நாற்றம் எடுக்காமல் இருக் உடல் முழுதும் ஓட்டை போட்டு மருந்து செலுத்தி இருக்கிறார்கள் செய்த பாவம் சும்மா விடுமா

      • @joseph

        //செய்த பாவம் சும்மா விடுமா………..//

        மோடி, ராஜபட்சே, அமெரிக்க அதிபர் புஷ், பில் கிளிண்டன் போன்றோர்களை சும்மா விட்டு விட்டதே ஜோசப். இந்த பாவம் பல தருணங்களில் நம்மை பிரியாணி சாப்பிவிடாமல் செய்து விட்டதே. இருந்தாலும் உங்களுக்காக நான் பாவ மன்னிப்பு அறிக்கை செய்து விட்டேன். இனியாவது வக்கிர சிந்தனையை கைவிடுங்கள் ஜோசப்..

        • எளிய மனிதர்களின் வாழ்வின் மீது தன் அதிகாரத்தின் மூலமாக வேதனைகளை திணிப்பவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் இறுதி முடிவின் போது மக்களால் துற்றபடாமல் வேறு என்ன செய்யப்படவேண்டும் என்று உங்களுக்கு உத்தேசம்? ஜோசப் தெளிவாக தானே பதில் அளித்து உள்ளார். பரமக்குடி துப்பாக்கி சூட்டுக்கு யார் காரணமோ அவரின் மரணத்தை அவர் கொண்டாடுவதாக தானே கூறுகின்றார். அதில் என்ன வக்கிரம் இருக்கிறது

        • கொடுரர்கள் செய்த பாவம் அவர்களை மக்களின் எதிர்ப்பு என்பது இல்லாவிட்டால் சும்மாதான் விடும் என்பது எல்லாருக்கும் தெரியும்…! அதே நேரத்தில் அத்தகைய கொடுரர்கள் மரணிக்கும் போது அதனை அந்த கொடுரர்களின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அவர்களை மன்னித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பற்கு மேரி உட்பட யாரும் இங்கு வந்து வியாகானம் கூறவேண்டியது இல்லை… பாதிப்புக்கு உள்ளானவர்கள் அந்த கொடுரர்களின் மரணத்தை கொண்டாடுவது என்பது இயல்பானது தான். இங்கு வக்கிரம் எங்கு வருகின்றது என்றால் மனிதர்களின் குறைந்த பட்ச உணர்வுகளுக்கு கூட மதத்தின் பெயரால் தடை போடும் மேரிகளின் கட்டளையில் இருந்து தான் வருகின்றது.

        • ரெபெக்காமேரி,ஜோசப் எப்போதுமே ஏறுக்குமாறாய் ஏதாவது குரோதம் காட்டித்தான் தன் பதிவுகளை இட்டுக்கொண்டிருக்கிறார்.இந்த தளத்தில் என்ன தலைப்பில் விவாதம் நடந்தாலும் நானும் இருக்கிறேன் என்று என்ன வாயில் வருகிறதோ அதெல்லாம் அவர் பதிவு.ஆனால் ஜெயலலிதா பற்றிய அவர் விமர்சனத்தில் அவருடையது, வக்கிர சிந்தனை என்ற அளவிற்க்கு நீங்கள் போய்விட்டீர்களே… ஆச்சர்யமாய் இருக்கிறது.

          • மீரான் சாகிப்…

            இந்த மரணத்தை கொண்டாடும் விடயத்தை பற்றி நான் விளாவரியாகவே பேசி விடுகிறேன்.

            நான் வக்கிரம் என்று ஜெயலலிதாவின் மரணத்திற்காக மட்டும் சொல்லவில்லை. பொதுவாக யார் ஒருவரின் மரணத்தையும் “கொண்டாடுவது” என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த “மரண” கொண்டாட்டங்களை தான் பார்ப்பன இந்து மதம் தீபாவளியாகவும், விஜய தசமியாகவும், ராம் லீலாவாகவும் மக்கள் தலையில் சுமத்தி இருக்கிறது எனும்பொழுது, இது போன்று மரணத்தை கொண்டாடாடுவது என்பது கீழ் தரமான சிந்தனையாகத் தான் எனக்கு தோன்றுகிறது.

            நான் பல முறை மரண தண்டனைக்கு எதிராகவே கருத்திட்டிருக்கிறேன். மரண தண்டனை என்பது முற்றாக ஒழிக்க பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. அதே போன்று இன்னாரின் மரணத்தை இன்ன காரணத்திற்க்காக கொண்டாடுவதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது, அது ஹிட்லர் ஆனாலும் சரி, முசோலினியானாலும் சரி, ராஜபட்சேவானாலும் சரி.

            ஒருவேளை, நாளையே ராஜபட்சே ஏதோ ஒரு காரணத்தால் இறந்து போனான் என்று வைத்துக் கொள்வோம், அதனை நான் இனிப்புகள் வழங்கியோ அல்லது பிரியாணி சாப்பிட்டோ கொண்டாடுவதால் என்ன லாபம் இருக்கிறது, ஒரு கேவலமான அற்ப சந்தோசம் என்பதை தாண்டி வேறு என்ன நன்மை இருக்கிறது. இறந்து போன ஒன்றரை லட்சம் தமிழர்களும் மீண்டும் வந்து விட போகிறார்களா. அல்லது அவர்களின் சிதைந்த வாழ்க்கை சரியாகி விடுமா. ஒன்றுமே கிடையாது. அவன் நினைத்ததை நடத்தி முடித்து விட்டான். இனி அவன் நன்றாக இருந்தால் என்ன, நாசமாய் போய் இறந்தால் என்ன?.

            இருப்பினும், இந்த மரணத்தை கொண்டாடுவது என்பது வக்கிர மனம் படைத்தவர்களுக்கு மட்டுமே தான் வரும் என்கிற கருத்தில் எனக்கு எவ்வித தடுமாற்றமுமில்லை. இலங்கையில் நடந்த போரில் தினமும் இத்தனை ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வந்து சேர்ந்தவுடன் நிச்சயம் ராஜபட்சே அதனை சந்தோஷமாக தான் கொண்டாடி இருப்பான். இரண்டாம் உலக போர் நடந்த நேரத்தில், இன்றைய தினம் இத்தனை ஆயிரம் சோவியத் செம்படை வீரர்கள் கொல்லப்பட்டார்கள் என்கிற செய்தியை ஜெர்மன் ராணுவ தளபதிகள் ஹிட்லருக்கு அனுப்பிய போது நிச்சயம் அவன் அந்த மரணங்களை உச்சி முகர்ந்து கொண்டாடி இருப்பான். மகாத்மா காந்தி கொல்லப்பட்டதை பாசிச ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் இன்று வரை கொண்டாடி கொண்டிருக்கின்றன. ஆக, மரணத்தை கொண்டாடுவது என்கிற வக்கிரம் பாசிஸ்டுகளுக்கே உள்ள மன நோய், இன்னும் சொல்ல போனால் அது ஒரு நார்சிச சிந்தனை.

            எனக்கு இசுலாமிய வரலாறு அத்து பிடி கிடையாது. இருந்தாலும் கேட்க்கிறேன், நபிகளார் தன்னுடைய வாழ்வில் அவர் மீது திணிக்க பட்ட எவ்வளவோ போர்களை சந்தித்து இருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதில் எப்போதாவது எதிரியின் மரணத்தை தன்னுடைய தோழர்களுடன் கொண்டாடி இருக்கிறார் என்று வரலாறு உண்டா? தன் மீது திணிக்க பட்ட போரை முறியடித்து விட்டோம் என்று இறைவனுக்கு நன்றி கூறி இருப்பாரே தவிர நிச்சயம், தனி பட்ட எதிரி அழிந்து போனான் என்று அகமகிழ்ந்து கொண்டாடி இருக்க மாட்டார். அது தான் மாண்பு என்பது.

            எது எப்படியாயினும், எதிரியின் மரணத்தை கொண்டாடும் அளவிற்கு உங்கள் அனைவரையும் போன்று எனக்கு மன பக்குவமில்லை. எனது மட்டான அறிவிற்கு அது பாவமாகத் தான் தெரிகிறது. என்னை பொறுத்தவரை எதிரி என்று நினைக்க படுபவரின் மீது செலுத்த படும் அன்பு தான் உண்மையான அன்பு, உயர்ந்த பேரன்பு. நன்றி

            • ஆட்சியில் இருந்த கொடூரன் ஒருவனுக்கு மக்கள் மன்றத்தில் தண்டனை கொடுக்க இயலாத நிலையில் அத்தகைய அரசியல் சூழல் சமுகத்தில் ஏற்படாத நிலையில் இயற்கையில் அந்த கொடூரன் உயிர் இழக்கும் போது அதனை மக்கள் கொண்டாடுவது என்பது இயற்கை தான் என்ற எளிய உண்மையை கண்டு அறிய மேரிக்கு இன்னும் எத்துனை நாட்கள் தேவைபடுமோ தெரியவில்லை… காந்தியின் மரணத்தை கொடுரர்களின் மரணத்துடன் சமன் செய்து விவரணைகள் கொடுக்கும் இவரின் மனம் எத்தகைய வக்கிரமானது என்பதனை நாம் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

              மக்கள் விரோதிகள் , மக்களின் வாழ்வை அழிக்கும் கயவர்கள் காந்தியின் மரணத்தை கொண்டாடுகின்றார்கள் என்கின்ற நிலையில் அதற்கு இணையாக அத்தகைய எதிரிகளின் மரணத்தை மக்கள் கொண்டாடுவதில் என்ன தவறு காண்கின்றார் இந்த மேரி!

              • செந்தில்குமரன், ஜெயலலிதாவின் மரணத்தை ஜோசப் பிரியாணி உண்டு கொண்டாடினேன் என்று சொன்னதை எங்கெல்லாமோ சுற்றி நியாயப்படுத்திக் கொண்டிருப்பது எனக்கென்னவோ சரியாக படவில்லை.கொடுங்கோலர்களால் மக்கள் ஆளப்பட்டு வந்த காலத்தில் அவர்களை மாற்றவும் வழியில்லாது அகற்றவும் கதியில்லாது இருந்து பிறகு அவர்கள் இயற்க்கையாகவோ அல்லது கொல்லப்பட்டோ சாகும்பொழுது தன்னெழுச்சியாகவே மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியும் கொண்டாட்ட உணர்வும் வரும்.இது புரிந்து கொள்ள கூடியதே.ஆனால் இன்று நாம் அப்படிப்பட்ட சூழ்நிலையிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?ஜெயலலிதா மரணத்திற்க்கு பிரியாணி கொண்டாட்டம் என்றால் ஒவ்வொரு ஆட்சியாளனின் மரணத்திற்க்கும் கொண்டாட்டம் கொண்டாடித்தான் ஆகவேண்டும்.இங்கே எல்லோரும் அரசியல் கொலைகள் செய்தவர்கள்தான்.மரணிததவரின் செயல் பாடுகளை கொண்டு பாடமும் படிப்பனையும் பெறலாம்.அவை விவாதிக்கபடலாம் விமர்சிக்கபடலாம்.இதோ இந்த ஜெயலலிதாவை கடவுளென்றும் தெய்வமென்றும் கூனி குறுகி திரிந்தது ஒரு கூட்டம் அவரும் கொஞசமும் கூசாமல் அதை அனுமதித்து உருகி திளைத்தார்.இன்று அப்படி அப்படியே போட்டுவிட்டு அனாதையாகிப்போனார்.என்ன ஆனது அவர் கொட்டம்?இந்த சிந்தனையில் இருக்கிறது நமக்கான பாடம் படிப்பினை.கொண்டாடுவது என்ன வகை?அவ்ரிடம் அடிமையாக இருந்தவர்கள் வேண்டுமானால் கொண்டாடலாம்.நாம் அவரிடம் என்ன வாழ வழியற்ற அடிமையாக இருந்தோமா?அவர் நம்மை முடியாட்சி கொண்ட மன்னராக ஆண்டு கொண்டிருந்தாரா?இது ஜெயலலிதாவை பிடிக்காத எதிர் முகாமின் நாகரிகமற்ற ஒரு அரசியல் காட்டுமிராண்டித்தனம்(எதிர் முகாம் என்பது உடனே திமுக என்று முடிவுக்கு வராதீர்கள்)இதை அர்த்தமற்ற காரணங்கள் கூறி ஒப்பேத்த வேண்டாமே..

                • மக்கள் நல விரோதிகள் மற்றும் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் ஆட்சியில் இருந்து மரணிக்கும் போது அது மக்களுக்கு ஒரு மகிழ்வான நிகழ்வு தான் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. எனவே அது ஜோசப் போன்றவர்களுக்கு கொண்டாட்டத்துக்கு உரிய நிகழ்வுதான்… நாகரிகம் என்ற பெயரில் பமாத்துக்கள் செய்ய எங்களை போன்ற “நாகரிகம்” அற்றவர்களுக்கு நடிக்கத்தெரியாது ஐயா….

            • ரெபெக்காமேரி, எனக்கு இவ்வளவு பெரிய விளக்கம் எதற்க்கு? நான் மரணத்தை கொண்டாடும் மனநிலையில் இருக்கிறேனா? அல்லது ஆதரிக்கிறேனா? உங்களுடைய கருத்தில் முழுமையாய் உடன்படுகிறேன்.ஜெயலலிதாவின் மரணத்தை கொண்டாடும் மனக்கோளாறு என்னிடம் இல்லை.அதேவேளை ஒரு பெரும் அரசியல் தலைவியாக அவரின் நிறை குறைகள் அலசப்படத்தான் வேண்டும்.இறந்து விட்டதற்க்காக அவரின் தவறுகள் அவரோடு புதைக்க பட்டுவிட வேண்டும் யாரும் அவற்றை நோண்டிவிடக் கூடாது என்பதில்தான் உங்களோடு நான் முரண்பட்டேன்.இப்போது கூட பாருங்கள்,ஒரு பெரும் மக்கள் இயக்கத்திற்க்கு தலைமை தாங்கி மக்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் ஆதரவால் தொடர்ந்து ஆட்சி பீடம் ஏறி இரண்டாம் முறை முதலமைச்சராகி ஆறு மாதமாகவில்லை போய் சேர்ந்து விட்டார்.முழுமையான ஆட்சி காலம் இருக்கிறது.மக்கள் அவரின் தலைமையை நம்பியே ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தார்கள்.தனக்கு பின் எந்த ஒரு தலைவனையும் அடையாளம் காட்டவில்லை.இருக்கும் பொழுதும் கொஞசமும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவும் இல்லை.வெறும் கொத்தடிமைகளாய் தான் அவருடைய மந்திரி பிரதானிகளை நமக்கு அறிமுக படுத்த்னார்.யார் எந்த துறை அமைச்சர் அவர் எப்படி இருப்பார் என்பது கூட மக்களில் பலருக்கு தெரியாது.”நானே நானே நானே” இதுதான் அவரின் தாரக மந்திரம்.”நிரந்தர பொதுச்செயலாளர்”இதுதான் அவரைப்பற்றி அவரின் அடிமைகளின் கோஷம். எங்கே அந்த நிரந்தரம்?.கொல்லப்பட்டாரா ? இறந்து போனாரா தெரியவில்லை.சர்வ அதிகாரம் படைத்தவராக காட்டிக்கொண்டவர் ஒரு அனாதை பிணமாக போனதைத்தான் பார்த்தோம்.அவர் வசித்த வீடு மர்ம மாளிகையாய் மாறிப்போனது. கட்டி காத்த கட்சி குரங்கு கை பூ மாலையாக மாறிக்கொண்டிருக்கிறது. இவர் வாழ்க்கையிலிருந்து பாடமும் படிப்பினையும் இருக்கிறதா இல்லையா?இன்று அந்த கட்சியின் எதிர்காலம் அவர் பொறுப்பேற்ற அரசின் செயல் பாடுகள் திட்டங்கள் நம் ஒவ்வொருவரையும் நேரிடையாக பாதிக்கிறதா இல்லையா? பிறகு எப்படி அவர் இறந்து விட்டார் அவரை விமர்சிப்பதை விடுங்கள் என்று சொல்ல முடியும்? இந்த அர்த்தத்தில் சொன்னேனே தவிர அவர் மரணத்தை கொண்டாடும் கீழ்தரம் என்னிடம் இல்லவே இல்லை.இதில் முழுமையாய் உங்களோடு உடன் படுகிறேன். ஜோசப்பை பொறுத்தவரை இதற்க்கென்று இல்லை என்ன விவாதம் வந்தாலும் ஏதோ விரக்தியுற்றவன் மனநிலையில் பாய்ந்து குதறுவது. தீர்க்க முடியாத மத வெறிக்கு ஆளானவரைப்போல் சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பது என்பதெல்லாம் ஜோசப்புக்கு புதிதல்ல.நீங்கள் இதற்க்கெல்லாம் சாதாரணமாக கூட கண்டித்ததில்லை. ஜெயலலிதா விமர்சனத்திற்க்கு மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தீர்கள். அதற்க்காக கேட்டிருந்தேன்.அவரின் ஜெயலலிதா விமர்சனம் நிச்சயம் கண்டிக்கப்படவேண்டியதே.

              • இந்த விவாதத்தில் ஜோசப் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும், வேதனை உணர்வுகளுக்கும் பதில் சொல்ல வக்கற்றவர்கள் பல பத்திகளில் புகுந்துக்கொண்டு நாகரிகம் பேசுவதில் எந்த பயனும் இல்லை. அவர் இந்த கட்டுரையில் எழுப்பும் விவாதம் மிக எளியது ,நேர்மையானது. பரமக்குடியில் நிகழ்த்திய துப்பாக்கிசூட்டுக்கு யார் காரணமோ அவரின் மரணத்தை பிரியாணி சாப்பிட்டு கொண்டாடுவதாக கூறுகின்றார். அதில் என்ன தவறு உள்ளது? அதில் என்ன வக்கிரம் உள்ளது ? என்று இங்கு நாகரிக போர்வைக்குள் புகுந்து கொண்டு பத்தியடிக்கும் மேரிகளும், மீராங்களும் தான் நேர்மையாக , நேரடியாக எவ்வித ஜோடனைகளும் இல்லாமல் பதில் அளிக்க வேண்டும்.

                • மரணத்தை கொண்டாடுபவன் ஒன்று கோழையாக இருப்பான் அல்லது அடிமையாக இருப்பான்.இவனை தவிர வேறு எவனும் எவனின் மரணத்தையும் கொண்டாட்டத்திற்க்குரியதாய் கருத மாட்டான்.

                  • மீரான் உங்கள் விளக்கம் நகைப்புக்கு கூட இடம் இல்லாதது. வெறும் பசப்பல் வார்த்தைகள் மட்டுமே உங்கள் வார்த்தைகள். ஜோசப் ஏன் ஜெயாவின் மரணத்தை கொண்டாடுகின்றார் என்பதற்கு எளிய ஆனால் வலிமையான விளக்கத்தை கொடுத்து உள்ளார். அந்த விளக்கத்தில் எங்கே கோழைத்தனம் அல்லது அடிமைத்தனம் வருகின்றது.? அவரின் விளக்கம் தான் உணர்வு பூர்வமானது மேலும் அறிவு பூர்வமானதும் கூட…. அவரின் விளக்கத்தை எதிர்கொள்ள உங்களிடம் வார்த்தைகள் இன்றி தவிக்கின்றீர்கள்! Try to answer to his explanation truthfully !

                  • இருக்கும்பொழுது ஒருவனை எதிர்க்க வக்கற்று அவன் இறந்த பிறகு அவன் இறப்பை கொண்டாடுவது கோழையின் செயல்தான்.அல்லது ஒருவனிடம் அடிமையாக இருந்துவிட்டு அவனிடமிருந்து வெளியேற வழியில்லாமல் அவன் இறந்த பிறகு அவன் இறப்பால் விடுதலை பெற்று கொண்டாடுவான் அடிமை.இது இரண்டும் அல்லாது மரணத்தை கொண்டாடுபவனை என்ன வகையில் சேர்ப்பது?மரணம் என்பது வாழ்வின் முற்றுப்புள்ளி.ஒருவன் எவ்வளவு பெரிய கொடூரனாக இருந்தாலும் அவன் முடிந்து போனான்.ஜெயலலிதா மரணத்தை கொண்டாடி முடித்து விட்டோம்.அடுத்து நம் வாழ்வை உய்விக்க ,உத்தமர்களாக அணிவகுத்து நிற்க்கிறார்காளா?இதுவரைக்கும் நாம் பெற்ற துயரத்தையெல்லாம் துடைத்து அவர்கள் நம்மை வேறு ஒரு புனித இடத்திற்க்கு தூக்கிபோக போகிறார்களா? செத்தது பின் விட்டை இருப்பது முன் விட்டை.இதில் பரமக்குடி துப்பாக்கி சூடு…இளையாங்குடி பீரங்கி சூடு என்று காரணம் வேறு. துப்பாக்கி சூட்டை காரண்மாக்கி துப்புகெட்டுபோய் ஒருத்தர் பிரியாணி திங்கிறாராம்…இன்னொருத்தர் அவர் பிரியாணி திங்கிறதுக்கு பலமான காரணம் சொல்லி சிக்கன்65 வைக்க சொல்றாரு… இப்படியும் சில செல்ல கிறுக்குகள்…

                    • ஒருபக்கம் ஜெயாவுக்கு ஜால்ரா தட்டுவது அவரை புனிதராக மாற்ற முயல்வது மறுபக்கம் அவரை எதிர்த்து போராடவில்லை அதற்கு வக்கு இல்லை என்று கூறுவது! என்ன ஒரு கயவாளித்தனம் மீரான் இது! ஜெயாவின் சமுக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராடவில்லை என்று எதற்காக பொய் கூறுகிறீகள்… மக்கள் அவர்களின் சக்திக்கு உட்பட்டு போராடிக்கொண்டு தான் இருந்தார்கள்…

                      நீங்க என்ன செய்வீங்க நீங்க அமைத்து உள்ள கூட்டணியின் இயல்பே அப்படிபட்ட கயமைத்னமானது தானே! சரி விசயத்துக்கு வருமோம்… ஆட்சியில் இருந்த ஒரு கொடியவனின், மக்கள் விரோதியின் இயற்க்கை மரணத்தை மகிழ்வுடன் ஏற்கும் மன நிலை உங்களுக்கு இருக்கின்றதா இல்லையா? அல்லது எந்த மாதிரியான உணர்வு நிலை உங்களுக்கு ஏற்படும் என்பதனை எத்தகைய கிறுக்கு தனங்களும் , கோமாளிதன்ங்க்ளும், அல்லது கயமைதனங்களும் இல்லாமல் விளக்குங்கள் பார்க்கலாம்!

                    • கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்
                      வினவு பெயரில் வரும் பின்னூட்டங்களைத் தவிர மற்றவர்களின் கருத்துக்கு அவரவரே பொறுப்பு. அது வினவு கருத்தாக புரிந்து கொள்ள வேண்டாம்
                      ஆரோக்கியமான விவாதங்களை வளர்க்கும் பொருட்டே இந்த கொள்கை முடிவுகள். அனைவரும் புரிந்துணர்வுடன் ஆதரிக்குமாறு கோருகிறோம்.
                      வினவு கட்டுரைகள் தவிர்த்து பிற வெளி தளங்களுக்கு சுட்டிகள் கொடுப்பதை தவிர்க்கவும். நீங்கள் சொல்ல விரும்பும் கருத்தை சொந்த முறையில் எழுதவும்./ வினவு தளத்துக்கு கோழை துப்பு கெட்டவன் என்றெல்லாம் வசை பாடா அனுமதித்தது எந்த விதத்தில் மீரான் முசுலீம் என்ற காரனத்தினாலாநீங்கதான் எங்கள மாறி ஏழைகளுக்கு புரச்சி பன்னி சம்த்துவத்த வாங்கி தர போறிகளா கெட்டது குடி

                    • @ Joseph P,

                      மீரான் அவர்கள் உங்கள் மீது நிகழ்த்தும் தனிமனித தாக்குதலுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கும் போதும் பதில் கூற துப்பு இன்றி மீண்டும் மீண்டும் உளறிகிட்டு இருக்காரு என்றால் அதனை அம்பலப்டுத்துங்கள் சார்…. தப்பே இல்லை… ! இன்னும் அவர் பதில் கூறவே இல்லை ! சரி மீண்டும் அவர் கண் முன்னே அதே கேள்விகளை வைப்போம்…. இப்ப மீரான் மீண்டும் என்ன உளறுகின்றார் என்று பார்ப்போம்.! நாங்கள் கொடியவனின் மரணத்தை கொண்டாடுவோம்… அதில் மீரானுக்கு என்ன பிரச்சனை! (ஒ அம்மா புகழ் பாடியாகிய மீரானுக்கு தானே பிரச்சனை!) from here we can go to feedback number 8.1.2.2.1.1 and refer it.! அம்மா புகழ் பாடும் மீரானின் வாகுமுலங்க்களை காணமுடியும்!

            • Rebecca Mary அக்கா,

              ஜெயலலிதா மரணத்தை இங்கே கொண்டாடுகிறார்கள் என்ற அளவிற்கு விவாதத்தை கொண்டு வந்து விட்டீர்கள். அதற்கு ஹிட்லர்,விஜயதசமி என்று பிலாக்கணம் வேறு பாடுகிறீர்கள்.

              1) ஒருபுறம் அவர் இறந்து விட்டதால் அவரது பழி பாவங்கள் அனைத்தும் துடைக்கப்பட்டு அவர் ஒரு புனித பிம்பமாக வெகுஜன ஊடகங்களால் ஊதப்படும் சூழ்நிலையில் அது ஒரு மாயை என்று பிரசாரம் செய்வதையே மரணத்தை கொண்டாடுவதாக மடை மாற்றுகிறீர்கள்.

              2) ஆணோ பெண்ணோ, ஒருவர் தான் கொண்டுள்ள சமூக பொறுப்புணர்வின் அடிப்படையில் தான் விமர்சனம் செய்யப்பட வேண்டுமோ ஒழிய அவரது பாலின அடிப்படையில் அல்ல. இப்படியும் பலர் பேசினார்கள். அதை விமர்சனம் செய்தால் ஜெயலலிதாவின் மரணத்தை கொண்டாடுவதாக பொருள் கொண்டீர்கள் என்றால் அது தான் கடைந்தெடுத்த கயமைத்தனம்.

              3) இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு சிந்தனைக் கொண்ட ஹிட்லர் அடிப்படையில் மனித குல விரோதி. இதை சொல்வதாலேயே அவரது மரணத்தை கொண்டாடுவதாக கருத முடியுமா?

              இலவசம், டாஸ்மாக், கவர்ச்சி பிழைப்புவாதம் என்று தமிழக மக்களின் சமூக சிந்தனையை நாசமாக்கியவர் ஜெயலலிதா. பாசிட்டு மறைந்தார் என்று எழுதுவதால் அவரது மரணத்தை கொண்டடுவதாக அர்த்தம் ஆகுமா?

              ஆகையால் ஜெயலலிதாவின் மரணத்தை இங்கே யாரும் கொண்டாடவில்லை. அதே நேரத்தில் ஜெயலலிதா செத்து போனதாலேயே அவரை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் இல்லாமலும் போய் விடாது.

              • திரு செல்வம்…, மனித குலத்தின் மாபெரும் விரோதி ஹிட்லரின் தோல்வியையும் , அவனின் மரணத்தையும் ருஷ்ய மக்கள் இன்னும் கொண்டாடிக்கொண்டு தானே உள்ளார்கள். இந்த ஆண்டு கூட மாஸ்கோவில் கொண்டாட்டங்கள் நடந்தவே மறந்து விட்டிர்களா?
                மேலும் இறந்தவர் எத்தகைய மக்கள் விரோதியாக இருந்தாலும் அவரை சார்ந்த அடிமைகள் அவருக்கு நாடளுமன்றத்தில் சிலை வைக்க கோருவார்கள்…. பாரத ரத்தனா விருது கொடுக்க கோருவார்கள்…. அத்தகைய ஈன செயல்களை எதிர்கொள்ள அந்த நபரின் மக்கள் விரோத செயல்களின் அடிப்படையில் அவரின் மரணம் கொண்டாடப்டத்தான் வேண்டும். அதில் என்ன தவறு என்று உங்களால் விளக்க முடியுமா?

              • @ செல்வம்…

                //ஆகையால் ஜெயலலிதாவின் மரணத்தை இங்கே யாரும் கொண்டாடவில்லை………//

                மிக்க மகிழ்ச்சி.. நல்ல பண்பு.. பாராட்டுகின்றேன்.

                //அதே நேரத்தில் ஜெயலலிதா செத்து போனதாலேயே அவரை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் இல்லாமலும் போய் விடாது.//

                தாராளமாக விமர்சியுங்கள். முடிந்தால் வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடியுங்கள். நன்றி.

            • என்ன அக்கா” துக்கம் கொண்டாடா வாரும் பாரும்நம் மீட்பர் மரித்தார் என்று யேசுவின் இறப்பை பாட்டு பாடி ஆதரிப்பது இல்லயா யெனென்றால் யேசுவின் மரிப்பே மனித குல மீட்பு என்று திருச்சபையார்நம்புகிறார்கள் ” ஆனா யேசுவின் மரணம் கூட ஓரு உத்தம மனிதனின் மரனம் தான் அதயே கொண்டாடும் போது இந்த அரசியல் கழிசடையிம் மரணத்தை கொண்டாட ஏன் கூடாது அப்பிடி இந்த அம்மா என்ன கிழித்து விட்டதாம் கஸ்டபடுர மக்களுக்காக சில இலவச பிச்சைகளையும் திமிர்த்தனமானநடவடிக்கைகளயும் த்விர அவ செஞ்சது எல்லாம் தமிழக்தத்தை மாபியா பிடியிலும் சாராய சாம்ராஜ்யத்திலும் சிக்க வைத்தார் இதுதனா இதுக்கு மாற்று கருத்து இருக்கானு விஜயகாந்த் மாரி கேக்குரேன்நிரய பேருக்கு இருக்கும் ஆனா சத்தம் மட்டும் வெளிய வராது அதுக்குதான் ரபேக்கா மாரி ,மிரான் சாகிபு போன்றவர்கள் இருக்குறாஙளே சத்தம் வேளிய வராம அவுக அதிக சவுண்டு குடுப்பாங்க…

              • அப்புறம் எதிரிக்கு மன்னிப்பு யேசு சொல்லிவிட்டார் ஒரு எதிரி உஙளுக்கு தீமை செய்து விட்டால் அவனுக்கு மன்னித்துநன்மை செய்ய வேண்டும்நல்ல தத்துவம் ஒருவன்நமக்கு காட்டிய மன்னிப்பை உளச்சான்றுடன் ஏற்று அதற்க்காக வருந்துகிறவன் மனிதன் அவன் எதிரியாக இருந்தாலும் மன்னிக்கலாம் அனா இதயே அட்வான்டேஜா எடுத்துக்கிட்டுநமக்கொறு அடிமை சிக்கிட்டானுநினைச்சா அவன் சாத்தான் சாத்தானை எதிர்த்துநிக்க யேசு சொல்லி இருக்காரு எனக்கு சாத்தான் யாருன்னு தெரியுது உங்கள் புத்திக்கு அது தெரியாதவாறு ஜெயா பாசம் மறைத்து இருக்கிறது…..

                • //சாத்தான் யாருன்னு தெரியுது உங்கள் புத்திக்கு அது தெரியாதவாறு ஜெயா பாசம் மறைத்து இருக்கிறது…..//

                  உங்கள் கண்களுக்கு ஜெயா சாத்தானாக தெரிந்தால் தவறில்லை, ஆனால் ஜெயலலிதா மட்டுமே சாத்தானாக தெரிந்தால் அது உங்களின் அறிவு கோளாறு. இங்கு நான் ஆரம்பத்தில் இருந்து பேசுவதும் அதைத் தான்.

                  //இந்த அரசியல் கழிசடையிம் மரணத்தை கொண்டாட ஏன் கூடாது…….//

                  ஏனென்றால் அப்படி கொண்டாடுவது “மனித” தன்மை கிடையாது.

                  //சாத்தானை எதிர்த்துநிக்க யேசு சொல்லி இருக்காரு …..//

                  சரி, எதிர்த்து நில்லுங்கள். ஒருவரின் மரணத்தை கொண்டாடுவது என்பது சாத்தானின் செயல் தான். ஆகவே, அந்த எதிர்ப்பை நீங்கள் உங்களிடம் இருக்கும் கெட்ட எண்ணங்களை ஒழிப்பதில் இருந்து தொடங்குங்கள். எதிரியாக இருந்தாலும் அவர் மீதும் அன்பு செலுத்துங்கள்.

                  //ஒருவன்நமக்கு காட்டிய மன்னிப்பை உளச்சான்றுடன் ஏற்று அதற்க்காக வருந்துகிறவன் மனிதன் அவன் எதிரியாக இருந்தாலும் மன்னிக்கலாம் அனா இதயே அட்வான்டேஜா எடுத்துக்கிட்டுநமக்கொறு அடிமை சிக்கிட்டானுநினைச்சா…//

                  ஒன்றுமில்லை.. உங்களிடம் இருக்கும் அன்பு தூய்மையானது அல்ல என்று அர்த்தம்.

                  • நகைச்சுவையுட கூடிய ஒரு கதை சொல்லுவாங்க ஒரு ஊருல ஒருத்தன் இருந்தானான் பெண்கள் குடிக்க தண்ணி எடுக்குற கிணத்து மேட்டுல டெய்லி பள்ளு விளக்கி எச்சி துப்புவானாம் எதுத்து கேட்டா தூக்கி போட்டு மிதிப்பானாம் அந்த ஊரு பொணுக எல்லாம் இவன் எப்படா செத்து தொலைவான்னுநினைச்சாங்களாம் ஒருநாள் அவனுக்கும் சாவு வந்ததாம் சாகுறக்கு முன்னாடி தன் மகன கூப்பிட்டி டேய் என்ன எல்லாம் கெட்டவன்னு வெளிப்படயா பேசி வையிரானுகநீ எனக்குநல்லவன் பேரு வாங்கி குடுடானு சத்தியம் வாங்கிட்டானம் அவன் செத்த பிறகு அவன் மகன் கையில அரிவாளோட கிணத்தடிக்கு போயி பள்ளு விளக்கி எச்சிய ப்ளிச்சுனு கிணத்துக்குள்ள துப்புனானம் ஊருல பேசுனானுகளாம் இவனுக்கு இவுக அப்பன் எவ்வளவோநல்லவனு கிகிகிகி புடிச்சு இருந்தா ரசிங்க மக்களே…..

                    • தம்பி ஜோசெப் …! கதை நல்லா இருக்கு… ஆனா புரியவேண்டியவங்களுக்கு புரியவேண்டுமே! உங்க பின்னுடங்களில் வாக்கியம் முடியும் போது புள்ளி வைங்க! பழங்காலத்து கல்வெட்டுகள் மற்றும் ஓலை சுவடிகள் படிப்பது போன்று உள்ளது உங்களின் புள்ளியில்லா வாக்கிய அமைப்புகள்!

                    • @ joseph

                      நகைச்சுவை துணுக்கு என்னமோ கேட்டு புளித்து போன ஒன்றுத் தான். ஆனால், இதன் மூலம் உங்களின் அறிவு வெளிப்படவில்லை. இன்னும் உங்களை மேலும் கோமாளியாகத் தான் ஆக்கி கொண்டுள்ளீர்கள்.

                    • @ mary

                      ஜெயாவை நீங்கள் புனிதப்டுத்தும் வக்கிர தனத்தை விட ஜோசப் ஒன்றும் தவறாக பேசிவிடவில்லை. என்ன வாக்கியங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க மறந்துவிட்டார். அது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை…. ஆனால் ஜெயாவை அவரின் சமுக குற்றங்களை கண்டும் அவரை நீங்கள் துதி பாடுவது என்பது தான் அடிமைத்தனம், வக்கிரம்…..

                    • இந்த கோமாளியின்நகைச்சுவை கதை கூட புரியாதா பாஸிஸ்ட்டாநீங்க அப்ப ஜெயலலிதாவுக்கு கோவில் கட்ட என் அக்கவுன்ட்நம்பருக்குநண்கொடை அனுப்புங்க பிலிஸ்நானே அம்மாவுக்கு கோவில் கட்டுரேன் பிலீஸ் மோடியாலநான் பிச்சைக்காரன் மாறி எந்த ஏடிஎம் ல பணம் கிடைக்கும்னு அலையுரேர்ன் ஆனா எல்லா ஏடியமயும் மூடிட்டானுக அட பாவி பசங்க்களநீங்க உருப்படுவடுகீலானு கூட கேக்கநாதி இல்லை …

                    • @joseph P,

                      மேரி மற்றும் மீரான் முன்னாடி உங்கள் பணம் வங்கியில் கிடைக்கவில்லை என்று கோவப்பட்டு ஒரு வார்த்தை கூட மோடியை பற்றி எக்ஸ்ட்ரா பேசிடாதிங்க …. கோபம் பொத்திக்கொண்டு வந்துவிடும் ஜோசப்…..!

                  • இங்கு மேரி அவர்கள் வார்த்தை பம்பாத்து விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் ஜெயாவை புனித படுத்தும் தன் தவறுகளில் இருந்து விடுபட முயலுகின்றார். “மூன்று துறவிகள்” என்ற லியோ டால்ஸ்டாய் அவர்களின் கதையை படித்தாவது மேரி திருந்துவாரா என்று பார்ப்போம். அந்த கதையில் உள்ள கிருஸ்துவ போதகரின் கையறு நிலையில் மேரியும் , அந்த கடல் மீது நடந்து வந்த மூன்று சன்யாசிகளின் நிலையில் ஜோசப் அவர்களும் உள்ளார்கள்.

                    ஆனாலும் அவரின் ஜெயா மீதான பாசம் “தாராளமாக விமர்சியுங்கள். முடிந்தால் வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடியுங்கள்.” என்று அவர் செல்வம் அவர்களுக்கு அறிவுரை கூறுவதன் மூலம் வெளிப்பட்டுகொண்டு தான் உள்ளது.

                  • ஜெயாவுடன் ,கருணாவை ஒப்புமை செய்வேன்…. ஜெயாவை புனிதபடுதுவேன்… ஜெயாவை அவரின் சமுக குற்றங்களில் இருந்து காப்பேன் , முடிந்தால் ஜெயாவுக்கு ஞானஸ்தானம் வாங்கி தருவேன் என்று ஒற்றை காலில் சாத்தானை நோக்கி தவம் நிற்கும் மேரியை திருத்த இயேசு தான் மறுஅவதாரம் எடுத்து வரவேண்டும்….

        • அதி தூதன் மிக்காயில் ஈட்டியால் முதலையை கொல்லுவது போன்ற ஒரு படம் கத்தோலிக்க திருச்சபைகளில் இருக்கும் கடைசிநாட்டகளில் மீக்காயில் சைத்தானை கொன்று விடுவாராம் அதை குறிப்பிடும் படம் அது அதை தொட்டு மக்கள் கும்பிடுவார்கள் சின்ன வயசுலநான்நினைப்பேன் இவர்கள் யாரை கும்பிடுகிறார்கள் மீக்காயிலயா இல்ல சைத்தானயா அந்த டவுட்டு இப்ப கிளியர் ஆயிடுச்சு அக்கா ரபேக்கா மேரி மூலம் அட பாவிகளா அக்கா பண முதலையைத்தான் கும்பிட்டு இருக்கிறார் வெகு சீக்கிரத்துலயே மீக்காயில் உங்களயும் ஈட்டியால் குத்துவார் சாவதற்க்கு அல்லநீங்கள் திருந்துவதற்க்கு ஆமேன் …..

          • பார்த்தீர்களா ஜோசப், உங்களுக்கு அறிவு போதவில்லை என்று கடந்த மறுமொழியில் நான் கூறியதை நிரூபித்துவிட்டிர்கள். அதனால் தான் பாருங்கள் ஜெயாவுக்கு கோவில் கட்ட நிதி திரட்ட கிளம்பி விட்டீர்கள். விமர்சனம் செய்யலாம் ஆனால் அதைக்கென்று ஒரு அளவு இருக்கிறது. வினவு கட்டுரையாளர்கள், மற்றும் அதன் சில பதிவர்களை போன்று விமர்சனம் என்கிற பெயரில் “ஆணாதிக்க வெறியோடும்” மற்றும் “பாப்பாத்தி” என்கிற காழ்ப்புணர்வோடும் வன்மத்தை கக்குவதும் தவறு தான்.உங்களை போன்று கோவில் கட்ட போகிறேன் என்று கிளம்புவதும் முட்டாள்தனம் தான். இறந்து போனவரை விமர்சனம் என்கிற பெயரால் தொடர்ந்து வறுத்தெடுப்பதிலோ அல்லது பிரியாணி தின்று கொண்டாடுவதனால் நாட்டுக்கோ அல்லது சமூகத்திற்க்கோ ஒரு பயனுமில்லை. புரிந்து கொண்டால் சரி, இல்லையென்றால் இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

          • @ ஜோசப்

            மிகாயில் ஈட்டியால் குத்தி கொல்வது முதலை கிடையாது, அது ட்ராகன். சரி என்னை ஈட்டியால் குத்துவது இருக்கட்டும். நீங்கள் பிரார்த்தனையின் போது கூறுவது என்ன? “எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களையும் மன்னியும்” என்று தானே பிரார்த்திக்கின்றோம். நீங்கள் மன்னிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை யாருடைய மரணத்தையும் கொண்டாட வேண்டாம். அது ஒரு நல்ல சுபாவம் கிடையாது.

            ஜெயா உயிருடன் இருந்த வரை அவரை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யட்டும். ஆனால், இறந்து போன ஒருவரை இப்படி கடுமையாக விமர்சனம் செய்வதால் என்ன பயன் என்று தான் கேட்க்கிறேன். மேலும், அவர் ஒரு பெண். அவரை மன்னித்து விட வேண்டும் என்று நான் கேட்க வில்லை. ஆனால், இங்கு வைக்க படும் விமர்சனங்கள் ஏதும் நியாயமாக இல்லை அதை தான் நான் ஆரம்பத்தில் இருந்தே கூறுகிறேன். இந்த தளத்தில் ஜெயாவை விமர்சிப்பதற்கென்றே பிரத்யேகமான சில தடித்த வார்த்தைகளை கையாளுகின்றனர், அதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. இதற்க்கு மேல் இந்த கட்டுரையில் கூற எனக்கு ஒன்றுமில்லை. நன்றி

          • அம்மா ஒரு பண முதலை என்று ஒப்புக்கொண்டதற்க்குநன்றி இன்னும் உங்க கிட்ட இருந்து அதிக ஒப்பாரியை எதிர்பார்க்கிறேன் அக்காவுக்கு ஒப்பாரினாநல்லா தெரியுமா பினத்துக்கு முன்னாடி அவன் செய்யாத சாதனையெல்லாம் செஞ்சதா சொல்லி புலம்புறதுநாளைக்கு வெள்ளனா கிளம்புனாத்தான் பேங்குல பணம் எடுக்க முடியும்நாளைக்கு பணம் கிடைச்சா எடுத்துட்டு வந்துநானும் உங்களோட சேந்து அழுது மூக்கு சீந்துரேன் சரியா அக்கா…..

            • @ joseph …

              வேண்டாம் தம்பி , நானே தனியாக ஒப்பாரி வைத்துக் கொள்கிறேன், நீங்கள் சென்று வான் கோழி பிரியாணி சாப்பிட்டு முடிந்தால் இன்னும் கோலாகலமாக அவரின் மரணத்தை கொண்டாடுங்கள்.

  34. திப்பு மற்றும் மிரான் ,
    ஜெயா மற்றும் கருணா ஆகிய இருவருமே சுயநலவாதிகள் தானே? அதில் யார் ரொம்ப நல்லவர்கள் அல்லது ரொம்ப கெட்டவர்கள் என்ற விவாதம் தேவையானது தானா? தங்கள் சுயநலனுக்காக தானே அவர்கள் இருவருமே மத்தியில் பிஜேபி-யுடன் கூட்டு வைத்தார்கள்! ஜெயா தம்பி துறையை சட்ட அமைச்சர் ஆக்கியது எதற்காக? கருணா சண்டை போட்டு செழிப்பான துறைகளை காங்கிரஸ் அரசிடம் இருந்து பெற்றது ஏன்? சுயநலம் இன்றி வேறு என்ன கண்டீர்கள்?

  35. அஜாந்த சத்துரு போன்ற கருணா துதிபாடிகளின் கவனத்துக்கு : ஜெயாவுக்கு பரமக்குடி படுகொலைகள் அழியா கொலை சுவடுகள் என்றால் கருணாவுக்கு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் கொல்லப்பட்ட 17 பேரின் உயிர்கள் என்றும் அவரை-கருணாவை நோக்கி கேள்வி கேட்டுகொண்டு தானே நிற்கும்! அப்புறம் எதற்கு தராசு பிடித்து அவரை-ஜெயாவை விட இவர்-கருணா நல்லவர் என்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டு உள்ளீர்கள் !

  36. செந்தில்குமரன், “யார் ரொம்ப நல்லவர்கள், யார் ரொம்ப கெட்டவர்கள்”என்பது விவாதமே அல்ல.”யார் ரொம்ப கெட்டவர்கள், யார் ரொம்ப ரொம்ப கெட்டவர்கள்”என்றுதான் விவாதம் தொடர்ந்தது.நான் யாருக்கும் யோக்கிய சர்ட்டிபிகேட் கொடுத்து வாதாடவில்லை என்பதை விவாத தொடக்கத்திலேயே தெளிவு படுத்திவிட்டேன். இருவர் பொறுப்புக்கு வருகிறார்கள் ஒருவர் மிகச்சிறந்த பின்னணி பெரும் நிபுணர்களின் பயிற்ச்சி அடிமட்டத்திலிருந்த வந்த அனுபவம் என்று அதிகாரத்தை கைபற்றுகிறார்.இன்னொருவர் ஒரு விபத்தாய் சிலரின் சிபாரிசால் தற்ச்செயலாய் அதிகார்கத்திற்க்கு வருகிறார். இருவரின் செயல்பாடுகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பீர்களா விமர்சிப்பீர்களா? கருணாநிதி பதிமூன்று வயதில் சித்தாந்த ரீதியாய் உந்தப்பட்டு பொது வாழ்க்கைக்கு வந்ததாய் சொல்லிக்கொள்பவர்.அத்தனை நெளிவு சுளிவுகளையும் கற்று பெரும்தலைவர்களால் அரவணைக்கப்பட்டு உச்சத்திற்க்கு வந்தவர்.இன்று அகில இந்தியாவிலும் இவரைப்போன்ற் அனுபவ மிக்கவர்கள் உறுதி படைத்தவ்ர்கள் தன்னம்பிக்கையாளர்கள் எல்லாவற்றுக்கும் மேல் ஆற்றலும் அறிவும் ஆரோக்கியமும் மிக்கவர்கள் யாரும் கிடையாது.ஜெயலலிதாவை இதில் ஏதாவது ஒன்றில் ஒப்பிடமுடியுமா? ஆனால் இவரிடம் புதைந்த அனைத்து ஆற்றலும் அவரின் சுயநலனுக்குத்தான் பயன் பட்டதே ஒழிய இந்த நாட்டுக்கோ மக்களுக்கோ குறிப்பிட்ட எந்த சமுதாயத்திற்க்குமோ கூட அல்ல.அவர் போட்ட அரசு திட்டங்களை எல்லாம் பட்டியல் போட்டு விடாதீர்கள்.அது எம்ஜியாரும் செய்திருப்பார் ஜெயலலிதாவும் செய்திருப்பார் நாளை சின்னம்மாவின் இளவளும் செய்யலாம்.அரசியலில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள அரசியல்வாதிகள் பல தகிடுதித்தங்களை செய்வார்கள்தான். அதையெல்லாம் நான் குறையாக சொல்லவில்லை. குறைந்த பட்சம் ஏதாவது ஒன்றில் கொள்கை உறுதியோடு இருக்கவேண்டுமில்லையா? கிடையாது.இவர் ஒழுங்காய் இருந்திருந்தால் எம்ஜியாரே இந்த அளவிற்க்கு வளர்ந்திருக்க முடியாதே..பிறகு ஏது ஜெயலலிதா…?இறுதியில் அவர்களே பரவாயில்லை எனும் அளவிற்க்குத்தான் இவர் நடத்தைகள் இருக்கினறது.இவரை விமர்சித்தால் உடனடியாக பாப்பாத்தி பார்பனீயம் என்ற அஸ்த்திரத்தை சிலர் தூக்குகிறார்கள்.இதுவும் கருணாநிதி தந்திரம்தான்.தன்னை காக்கும் கவசமாக பார்ப்பனீய பூச்சாண்டியை காட்டி காட்டியே தன் தவறுகளை மறைத்துக்கொள்வது.ஆனால் ஒரிஜினல் பார்ப்பணர்களையும் தாண்டி இவரிடம் பார்பனீயம் வெளிப்பட்டிருக்கிறது. பார்ப்பணர்களிடம் மட்டும்தான் பார்பனியம் இருக்கிறதா?பலபேரிடம் பார்பனியம் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.ஏதாவது ஒரு பிரச்சினையில் பற புத்திய காட்டிட்டிடியே துளுக்க புத்திய காட்டிட்டியே என்ற சொலவடை சாதாரணமாக புளங்குவதை பார்க்கத்தான் செய்கிறோம்.இதுவும் பார்பணியத்தின் ஒரு வடிவம்தானே.பிறகு என்ன பார்ப்பணர்களை மட்டும் குறிவைத்து பார்ப்பனிய பயம் காட்டுவது?

    • ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை பற்றி எடை போட அவர்கள் எந்த பின்னணியில் இருந்து வந்தார்கள் என்ற விசயத்தை கணக்கில் எடுத்துகொள்ளவேண்டுமா அல்லது அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது நிகழ்த்திய செயல்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ற விசயத்தை திரு மிரான் அவர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன். என்னை பொறுத்த வரையில் இரண்டாவது விசயத்தை மட்டுமே கணக்கில் எடுத்துகொள்வேன்….

    • //யார் ரொம்ப கெட்டவர்கள், யார் ரொம்ப ரொம்ப கெட்டவர்கள்”என்றுதான் விவாதம்// அம்மா 8 வது பாஸாம் அய்யா 10 வது பெயிலாம் பாஸ் பெருசா பெயிலு பெருசா கி கிகி கி குழப்புங்கள் குட்டையை ,அம்மாதான் மோசமானவங்கள்ள முக்கியமானவங்க…

  37. பார்பணீயம் என்றாலே சூழ்ச்சியும் தந்திரமும் கொண்டது.ஒன்றை கொண்டு ஒன்றை தாக்குவது பிறகு இரண்டையுமே புதைப்பது.இது அத்தனையும் கருணாநிதியிடமும் உண்டு.பார்பணியம் பெரிய பரப்பில் செயல்படும்.கருணாநிதி தன்னளவில் இதை செயல் படுத்துவார்.

  38. இன்றைக்கு மத்தியில் பாஜக அரசும் அதனை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலும் இந்த அளவுக்கு மெஜாரிட்டியோடு ஜெயித்து வந்து சாதாரண மக்களை இப்படி வாட்டி வதைப்பதற்கு யார் காரணம்? பாஜக ஒரு வேளை ஜெயித்தாலும் மெஜாரிட்டி மட்டும் பெறமுடியாது என நினைத்த தேர்ந்த அரசியல் நிபுணர்களின் நம்பிக்கை பொய்த்ததற்கு யார் காரணம்? ஊழலை விட இந்துத்துவ மதவாதமும் உயர்சாதிவாதமும் கொஞ்சம் பரவாயில்லை என உபி, பீகார் போன்ற மாநிலங்களில் இருக்கும் தலித்களை கூட முடிவெடுக்க வைத்தது யார்? ஜெயலலிதாவா? 1990க்கு பிறகு மத்திய அரசில் கூட்டணி யுகம் ஏற்பட்டது. அந்த கூட்டணி யுகத்தில் பெரும்பாலான காலகட்டத்தில் காங்கிரஸோடும் பாஜகவோடும் கூட்டணி வைத்து பசையுள்ள இலாக்காக்களை வாங்கி பொறுக்கி தின்றது யார்? இதன் மூலம் கூட்டணி என்ற உன்னதத்தை கேவலப்படுத்தியது யார்? ஒரு பக்கம் “மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி” என்று முழங்கி பித்தலாட்டம் செய்தது யார்? ஜெயலலிதாவா? ஜெயலலிதா கொள்கை கோட்பாடு என்றெல்லாம் சொல்லி மக்களை முட்டாளாக்க முயன்றது இல்லை. அவர் எப்போதும் தன் சுயநலத்தை மறைக்க முயன்றது இல்லை.

  39. இங்கு கட்டுரையின் கருப்பொருள் ஜெயாவின் மரணத்தை பற்றியது…அவர் செய்த சமுக குற்றங்கள் பற்றியது. அதில் அழகாக மேரி அவர்கள் ஜெயாவின் குற்றங்களுடன் கருணாவின் குற்றங்களை சமன் செய்து பின்னுட்டம் 8.1.2ல் பேசுகின்றார்… அதற்கு மீரான் அவர்கள் பின்னுடம் 8.1.2.2 ல் இசைந்து பாடுகிறார்….அதாங்க ஜால்ரா தட்டுகின்றார்… என்ன அருமையாக விவாதத்தை இவர்கள் இருவரும் திசை திருப்புகின்றார்கள்! அதன் முலமாக ஜெயாவை அவரின் குற்றங்களில் இருந்து விடுவிக்க முயலுகின்றார்கள்! உண்மையில் இவர்கள் இருவருக்கும் சிறிதாவது நேர்மை இருந்தால் ஜெயாவின் மீதான குற்றங்களை தனித்து எதிர்கொண்டு பேசட்டும்…. கருனாவை பற்றி பேச காலம் வரும் போது அல்லது கட்டுரை வரும் போது அவரின் குற்றத்தையும் ஆய்வு செய்யலாம்.

  40. “கருணாவைப்பற்றி பேச காலம் வரும்”என்றால் எப்படி?செத்ததற்க்கு பிறகு பிணத்தை வைத்துக்கொண்டு காறி துப்பிக்கொண்டிருக்க வேண்டுமோ?ஜெயாவின் குற்றங்களை பேசினால் கருணாவின் குற்றத்தையும் பேசித்தான் ஆக வேண்டும்.இருவரும் ஏக காலத்தில் அரசியல் நடத்தியவர்கள்.சட்டசபையிலேயே ஜாக்கட் கிழித்து சண்டை போட்டவர்கள்.ஜெயா,சொன்னாரெட்டியை “என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்”என்றார்.கருணா,சட்டசபையில் “நாடாவை அவிழ்த்துப்பார் தெரியும்”என்று ஜெயா முன்னிலையிலேயே சொன்னார்.பெரிய சிலேடை சொல் என்று அவரின் அபிமானிகள் இதையும் புல்லரித்து போய் புளங்காகிதம் அடைந்தார்கள்.இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காத கழுதை விட்டைகள்தான் இதில் என்ன ஜெயா மோசம்? கருணா மேல் பாசம்?

    • மீரான் தனக்கு ஒரு நீதி ஜோசெப்க்கு ஒரு நீதி என்று பேசிக்கொண்டு உள்ளார். ஜோசெப் அவர்கள் வினவு கட்டுரைகளுக்கு தொடர்பு இன்றி போசுவதாக குற்றம் சாட்டும் மிரான் அவர்கள் இந்த கட்டுரைக்கு தொடர்பற்ற விசயங்களை பேசுவது ஏன்? ஜெயாவை கருணாவுடன் குற்றங்கள் அடிப்டையில் சமன் செய்வதன் மூலம் இவர் சாதிக்க விருபுவது என்ன வென்றால் ஜெயாவை அவர் செய்த சமுக குற்றங்களில் இருந்து காப்பது மட்டுமே! கருணாவை பற்றிய பல்வேறு கட்டுரைகள் இங்கு வினவில் வந்து உள்ள நிலையில் அங்கு சென்று தெளிவாக கருணாவை விமர்சிக்கலாமே! அதனை விட்டுவிட்டு இங்கு வந்து ஜெயாவை காக்க முனைவது ஏன் ? அதனை தானே நான் முன்பே கீழ் கண்டவாறு சுட்டிக்காட்டி உள்ளேன். “ கருனாவை பற்றி பேச காலம் வரும் போது அல்லது கட்டுரை வரும் போது அவரின் குற்றத்தையும் ஆய்வு செய்யலாம்.”

    • நேர்மையானவர்கள் என் குரலுக்கு மதிப்பளித்து இந்த ஜெயாவையும் ,கருணாவையும் ஒப்புமை செய்யும் வேளையில் இருந்து விலகி உள்ளார்கள். திப்பு மற்றும் அஜந்தா சத்துரு ஆகிய இருவரும் கருணாவை ஜெயாவுடன் ஓப்பாய்வு செய்த நிலையில் அவர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுத்தேன்… அவர்கள் விவாதத்தில் இருந்து விலகிவிட்டார்கள்… ஆனால் நீங்கள் மிரான் ! கருணாவை பற்றி இங்கு இந்த கட்டுரைக்கு தொடர்பின்றி பேசுவேன் ஒன்று ஒற்றை விரலில் நீங்கள் நின்றால் நில்லுங்கள்….. நிங்கள் ஆயிற்று வினவு ஆயிற்று! எனக்கு என்ன வந்தது! அஜந்தா சத்துரு கருணாவை ஆதரித்தும் நிலையிலேயே என் கருத்தை கிழ் கண்டவாறு தெளிவாக கூறியுள்ளேன்…

      “””அஜாந்த சத்துரு போன்ற கருணா துதிபாடிகளின் கவனத்துக்கு : ஜெயாவுக்கு பரமக்குடி படுகொலைகள் அழியா கொலை சுவடுகள் என்றால் கருணாவுக்கு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் கொல்லப்பட்ட 17 பேரின் உயிர்கள் என்றும் அவரை-கருணாவை நோக்கி கேள்வி கேட்டுகொண்டு தானே நிற்கும்! அப்புறம் எதற்கு தராசு பிடித்து அவரை-ஜெயாவை விட இவர்-கருணா நல்லவர் என்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டு உள்ளீர்கள் !”””

      இதில் எங்கிருந்து பாசம் எனக்கு கருணா மீது வந்து உள்ளது என்று நீங்கள் தான் விளக்கவேண்டும்….

    • //“கருணாவைப்பற்றி பேச காலம் வரும்”என்றால் எப்படி?செத்ததற்க்கு பிறகு பிணத்தை வைத்துக்கொண்டு காறி துப்பிக்கொண்டிருக்க வேண்டுமோ?ஜெயாவின் குற்றங்களை பேசினால் கருணாவின் குற்றத்தையும் பேசித்தான் ஆக வேண்டும்//

      மீரான் அவர்கள் கூறியது மிகவும் சரியான கருத்துக்கள். ஜெயாவை பற்றிய விமர்சனம் என்பது கருணாநிதியின் அரசியல் வாழ்வையும் சேர்த்து விமர்சனம் செய்ய படும்போது தான் தெளிவாக வெளிவரும். யாரும் இங்கு ஜெயாவை அப்பழுக்கற்றவர் என்று கூறவில்லை. மோசமான அரசியல்வாதிக்குரிய அராஜக குணங்கள் அவரிடமும் உள்ளன. ஆனால், ஜெயாவின் மீது வைக்கப்படும் காட்டமான விமர்சனத்தை, யாரும் கருணாநிதியின் மீது வைப்பதில்லை. இதற்கான காரணத்தை முன்பே கூறிவிட்டேன்.

      இருந்தாலும் என்னுடைய கருத்து இது தான், கருணாவுடன் ஒப்பிடும் பொது ஜெயா எவ்வளவோ நல்லவர் என்று கூறலாம். கருணாநிதிக்கு இருக்கும் அளவிற்கு பதவி ஆசை, மோகம் ஜெயலலிதாவிற்கு கிடையாது. அதன் பொருட்டு மாநில நலன்களை கருணாநிதி அளவிற்கு அவர் என்றுமே விட்டு கொடுத்தது கிடையாது. அதற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவரே.

      • அதான் சொன்னோம் இல்லையா! ஒப்புமை செய்து ஜெயாவை அவரின் சமுக குற்றத்தில் இருந்து விடுவிக்க அவரை புனிதராக , அவருக்கு ஞானஸ்தானம் வாங்கிக்கொண்டுக்க, பாராளுமன்றத்தில் சிலை வைக்க, பாரத ரத்னா விருது வாங்கி கொடுக்க என்று மேரி அவர்கள் சாத்தானிடம் தவம் இருக்கின்றார் என்று….! அந்த கருத்தை உண்மை என்று நிருபித்து இங்கு வாக்கு முலம் கொடுத்துகொண்டு உள்ளார் மேரி அவர்கள்….! தெடருங்கள் உங்கள் ஜெயா சேவை பணியை மேரி !

    • அண்ணன் மீரா சாகிபு புதுசா கண்டு பிடிச்ச 2000 ரூபாய்நோட்டு இருந்தா அனுப்பிவைங்க அம்மாவுக்கு ஓகோனு ஒப்பாரி வச்சுருவோம் ——-

    • Kalaignar never uttered that silly word Mr Meeran.You are imagining too much.The pity is the ones like G.K.Mooppanar,who was in the house on that day never revealed what was the real incident that happened that day.

    • மீரான் குறிப்பிட்டுள்ள சொற்றொடர் திருமதி அனந்தநாயகி அவை உறுப்பினராக இருந்தபோழ்தில் கூறப்பட்டதாகும்.செயா முன்னிலையில் அல்ல.

  41. மீரான் அவர்களின் நினைவுக்கு :
    [1]ஜோசப் அவர்கள் பரமக்குடியில் நிகழ்த்திய துப்பாக்கிசூட்டுக்கு யார் காரணமோ அவரின் மரணத்தை பிரியாணி உண்டு கொண்டாடுவத்ர்க்கான காரணத்தை விளக்கிய பின்னும் அவரின் செயலை “கோழைத்தனம் ,அடிமைத்தனம்,வக்கிரம்” என்று நீங்கள் வசைபாடுவதில் ஜோசப் மீதான தனிமனித தாக்குதல் மட்டுமே உள்ளது. எதன் அடிபடையில் அவ்வாறு ஜோசப்பை வசைபாடுகின்றீர்கள் என்று இன்னும் உங்களால் விளக்கம் அளிக்க முடியவில்லை… ஒன்று ஜோசப் அவர்களுக்கு விளக்கம் அளியுங்கள்… அல்லது உங்கள் தவற்றை திருத்திகொள்ளுங்கள் மீரான்…..
    [2] இங்கு இந்த கட்டுரையில் கட்டுரைக்கு தொடர்பின்றி ஜெயாவை கருணாவுடன் ஒப்புமை செய்யும் வேலையை தொடங்கியது பின்னுட்ட்டம் 8.1.2ல் மேரி தான். அவருக்கு ஆதரவாக அத்தகைய ஒப்புமையை ஆதரித்து விவாதத்தை திசை திருப்பி ஜெயாவை புனித படுத்தும் வேலையை செய்து கொண்டு இருபதும் நீங்களும் மேரியும் தான்… அத்தகைய தவற்றை செய்ய முயன்றவர்கள் திப்புவும் , அஜந்தா சத்துருவும் தங்கள் தவறை உணர்ந்து விவாதத்தில் இருந்து விடுபட்டு உள்ள நிலையில் நீங்களும் ,மேரியும் தான் ஒப்புமை வேலையை செய்யாமல் நேரடியாக ஜெயாவை விமர்சிக்க முயலுங்கள்…. அது தான் நேர்மை…

  42. வினவுக்கு ஒரு வேண்டுகோள்…. ஜெயா அவரின் ஆட்சி அதிகாரத்தில் அரசியல் ரீதியாக மக்களுக்கு எதிராக நிகழ்த்திய சமுக குற்றங்களை பட்டியல் இட்டு தனியாக ஒரு கட்டுரை எழுதி அதனை வினவில் பதிவு செய்யுங்கள்… அப்படியாவது , அதனை படித்தாவது மீரான் போன்றவர்கள் திருந்தட்டும்….

    • மிரானுக்கு மோடி கெட்டவராம் ஜெயா ஓரளவுக்குநல்லவராம் எப்பிடினே இப்பிடி பச்ச பிள்ளயாட்டம் பேசுறீங்க…..

      • இப்போதும் கூட உங்களுடைய பதிவுகளில், மீரான் மீது தாங்கள் வைக்கும் விமர்சனத்தில், அவர் சார்ந்திருக்கும் இசுலாம் மதம் மீதான உங்களின் காழ்ப்பை மனதில் வைத்துக் கொண்டு, அதன் அடிப்படையில் இந்த கட்டுரையை சாக்காக வைத்துக் கொண்டு அவர் மீது வெறுப்பை உமிழ்வது மட்டுமே தான் வெளிப்படுகிறது. இதுவும் நல்லதல்ல சகோதரரே. உங்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக உள்ளது.

        • இவிங்க கருப்பு வெள்ளை போங்காட்டத்துல ஏழைகளதான் கஸ்டபடுராங்க நாளைக்கு கரன்ட் பில்லு கட்டனுமுடா லாஸ்ட் டேட்டுடா இல்லனா பீச புடுஙிடுவனெளகடானு யாருகிட்ட கேக்க முடியும்நாம பணம் போட்டு வச்சுல்க்கிற பேங்கு காரணுகட்டதான் அவனுக என்னடானா டோக்கன் காலியா போச்சுநாளைக்கு வாங்கனு சொல்லுறானுக என் கூட வரிசைலநின்ன ஒருத்தர் சொன்னார் டேய் மோடிநி கைல கிடைச்ச இன்னிக்கு கைமாதான்டானு, அய்யோ சிரிக்குறதா அழுறதானு புரியல……

  43. வெற்றி மேரிக்கே! வெற்றி மேரிக்கே! வெற்றி மேரிக்கே! கடைசியாக மேரி அவர்கள் பயன் படுத்தும் பொய்யான குற்றசாட்டுகள் காரணமாக இந்த கட்டுரையில் இந்த விவாதத்தில் இருந்து விலகிக்கொள்கின்றேன். வெற்றி மேரிக்கே! வெற்றி மேரிக்கே! வெற்றி மேரிக்கே!

    Mary: //சில பதிவர்களை போன்று விமர்சனம் என்கிற பெயரில் “ஆணாதிக்க வெறியோடும்” மற்றும் “பாப்பாத்தி” என்கிற காழ்ப்புணர்வோடும் வன்மத்தை கக்குவதும் தவறு தான்//

    ஆனா ஒன்னு! இந்த கட்டுரையில் எந்த இடத்தில் வினவோ, அல்லது பின்னுட்டகாரர்களோ அத்தகைய கொடிய மனித நேயமற்ற முறையில் விவாதித்தார்கள் என்று சான்றுகளுடன் நிருபிக்கவேண்டியது யாருடைய கடமை மேரியின் குற்றசாட்டுகளுக்கு ஆளானவர்களுடையதா அல்லது குற்றம் சாட்டும் மேரியின் உடையதா என்று யாரவது வந்து பஞ்சாயத்து செய்தால் நன்றாக இருக்கும்!

  44. தன்னிலை விளக்கம் கொடுக்கவேண்டிய அவல நிலைக்கு வினவையும் அதன் பதிவர்களையும் கொண்டு சென்று நிறுத்திய மேரியின் அறிவையும் சாமார்த்தியத்தையும் பாராட்டாமல் இருக்க என்னால் முடியவில்லை.! வாழ்த்துக்கள் மேரி! சரி நான் என்னளவில் தன்னிலை விளக்கம் கொடுக்கின்றேன். முன்னாள் ஆட்சியாளர்களை பற்றி (கருணா மற்றும் ஜெயா) மீரான் அவர்களிடம் நான் கூறிய கருத்தின் உட்பொருளை புரிந்துகொள்ள வினவு வாசகர்களால் முடியும் என்று நினைக்கிறன்.

    1. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை பற்றி எடை போட அவர்கள் எந்த பின்னணியில் இருந்து வந்தார்கள் என்ற விசயத்தை கணக்கில் எடுத்துகொள்ளவேண்டுமா அல்லது அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது நிகழ்த்திய செயல்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ற விசயத்தை திரு மிரான் அவர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன். என்னை பொறுத்த வரையில் இரண்டாவது விசயத்தை மட்டுமே கணக்கில் எடுத்துகொள்வேன்….(இதில் ஆட்சியாளரின் சாதிய பின்னணியை கவனத்தில் எடுதுகொன்டேனா அல்லது அவர்களின் செயல்களை மட்டும் மதிப்பீடு செய்கின்றேனா என்று மேரி அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் )

    2. ஜெயா மற்றும் கருணா ஆகிய இருவருமே சுயநலவாதிகள் தானே? அதில் யார் ரொம்ப நல்லவர்கள் அல்லது ரொம்ப கெட்டவர்கள் என்ற விவாதம் தேவையானது தானா? தங்கள் சுயநலனுக்காக தானே அவர்கள் இருவருமே மத்தியில் பிஜேபி-யுடன் கூட்டு வைத்தார்கள்! ஜெயா தம்பி துறையை சட்ட அமைச்சர் ஆக்கியது எதற்காக? கருணா சண்டை போட்டு செழிப்பான துறைகளை காங்கிரஸ் அரசிடம் இருந்து பெற்றது ஏன்? சுயநலம் இன்றி வேறு என்ன கண்டீர்கள்? (இந்த கருத்தில் இருவரையும் மதிப்பீடு செய்ய பாலின வேறுபாடுகளை எங்கே பயன் படுத்தினேன் என்று மேரி அவர்கள் தான் கூறவேண்டும்)

  45. Don’t expect the mediator for this issue. Rebecca Mary surly creates trouble even to arbitrator in the name of cast and gender. But she should prove that who speaks against the modesty of a woman.

  46. Just ignore Rebecca Mary’s words. Your Unanswerable questions are reacted by Rebecca Mary in this wrong way. If nothing wrong with your Criticize -I too feel so, than you go ahead with your fine work. This is only my comment. I am not engaged to mediate any way. I should be in safe side.

  47. ரபெக்கா மேரி என்ற அம்மா அடிமையில் கருத்து என்ன??

    ஜெயலலிதா செய்த குற்றங்களுக்காக அவரை மானே தேனே என்று மயில் இறகால் வருடி மென்மையா கொஞச சொல்கின்றார்.

    அவரின் இந்த கட்டளைக்கு யாரவது செவி சாய்க்கா விட்டால் உடனே ஆணாதிக்க வெறி, பாப்பாத்தி என்று மண்டை காய்ந்து கோபத்தில் சூடு ஏறி போய் உளறுகின்றார்.

    ரபெக்கா மேரி போற்றி பாரடி பெண்ணே என்று பாட விருப்பபட்டால் நமது எம்ஜியார் பத்திரிக்கைக்கு போகலாம் அல்லவா? அங்கு ஒப்பாரி வைக்கலாம் அல்லவா? கை நிறைய காசும் கொடுப்பாங்க… மனதுக்கும் ஆறுதலாக இருக்குமே.

  48. இந்த விவாததில் இருந்து இத்துடன் நான் விலகி கொள்கிறேன். ஜெயலலிதா தொடர்பாக இந்த கட்டுரையின் மூலமாக நிறையவே விவாதங்கள் நடந்து விட்டன. நிறையவே பேசியாகி விட்டது. இனி நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை இரண்டே இரண்டு விஷயங்களை தவிர..

    1 ). ஜெயாவின் மரணம் என்பது மர்மமான அதே சமயத்தில் பரிதாபமான ஒன்றாக இருந்தாலும், அவரின் இறுதி சடங்குகள் ஒரு மக்கள் தலைவருக்குரிய மரியாதையுடன் லட்சோப லட்சம் மக்கள் திரண்டிருக்க இருபத்தோரு குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்ய பட்டுவிட்டது. ஆகவே, அவரை பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும், அவர் இனி வரப்போவதில்லை. மேலும் அதனால் ஒரு பயனுமில்லை. ஜெயாவின் இடத்தை இனி யாரும் பிடிக்க போவது கிடையாது. விமர்சனம் செய்ய வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் இனி நிறையவே இருக்கின்றன.

    2). தமிழகத்தை கடந்த 49 ஆண்டுகளாக தி.மு.க ,அ.தி.மு.க என்கிற 2 திராவிட காட்சிகள் தான் மாறி மாறி ஆட்சிசெய்தன. திராவிட கொள்கைகளை அவ்வளவாக கடை பிடிக்கவில்லை என்றாலும், பெயரளவிற்காவது அ.தி.மு.க என்கிற திராவிட கட்சி செயல் பட்டு வந்தது. இந்த மண்ணில் திராவிட காட்சிகளை தவிர வேறு எந்த கட்சிகளுக்கு இடமில்லை, அதிலும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதவாத பாசிஸ்ட் கட்சியான பா.ஜ.க போன்ற கட்சிகளை துடைத்தழித்து வளராமல் பார்த்து கொண்டதில் இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஜெயாவின் மறைவு என்பது அ.தி.மு.க விற்கு மிக பெரிய பின்னடைவு. இனி எவ்வளவு காலம் அந்த கட்சி இருக்கும் என்று சொல்ல முடியாது.

    ஆனால்,திராவிட கட்சிகளை இல்லாமல் ஒழித்து விட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியமான பணிகளில் ஒன்று. அதற்க்கு இப்பொழுது அவர்களுக்கு ஒரு பெரிய “கொல்லைப்புற” வழி கிடைத்திருக்கிறது. அதன் ஒரு அங்கமாகத்தான் இன்று நடத்த பட்டிருக்கும் தமிழக தலைமை செயலாளரின் மீதான வருமான வரி ரெய்டு. மத்திய பிரதேச அரசின் பூதாகரமான ஊழலான வியாபம் ஊழலை கூட கண்டுகொள்ளாத வருமான வரித்துறை, மத்திய குற்ற புலனாய்வு துறை போன்றவைகள் தமிழ்நாட்டின் விடயத்தில் இவ்வளவு கவனம் செலுத்துகிறது என்றால் இதன் அரசியல் மர்மம் புரியவில்லை. உடனே பொன். ராதாகிருஷ்ணன் இதற்க்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார். எது எப்படியோ, திராவிட அரசியலின் ஒரு தூண் சரிந்து விட்டது. பா.ஜ.க என்கிற பாசிச விஷ பாம்பு எந்த வகையிலும் பெரியாரின் மண்ணில் காலடி எடுத்து வைத்து விடாத படி, இனி தமிழக மக்கள் தான் இதில் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தை ஆள்வது ஒன்று திராவிட கட்சியாக இருக்க வேண்டும் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்க வேண்டும் அவ்வளவே. நன்றி வருகிறேன்.

    • சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக அம்மா அருப்புகோட்டை வர்ராங்க என்று ஒரு அதிமுக தொண்டர் பக்கத்து வீட்டு கிழவிய ஏய் கிழவிநீ வேன் ல ஏரு 200 ரூபாய் சம்பளத்த வாங்கிக்க சாப்படு பொட்டல்மும் ஒரு வார்ட்டர் பொட்டலமும் தருவோம்னு சொல்லி கூப்பிடுறார் அதுக்கு முன்னாடிதான் அம்மா கூட்டத்குக்கு போன 5 பேரு செத்து ஆளுக்கு 3 லட்டம் அறிவிச்சதா பேப்பரில் வந்து இருந்து அந்த அதிமுக தொண்டன் அதயும் சுட்டிக்காட்டி நீ இருந்து என்ன கிழிக்க போற அம்மா கூட்டத்துக்கு வந்து செத்தா 3 லச்சம் கிடைக்குமுனு சொல்லுறான் அதுக்கு அந்த பாட்டி சொல்லுச்சு எலே வெளங்காத மூதி களை வெட்டிகூட கஞ்சி குடிப்பே உன் பிச்சை எனக்கு வேனாமுனு சொல்லிறுச்சி அவ்வளவு தன்மானம் அந்த பாட்டிக்கு ஆனாலும் சிலர் 200 ரூபாய் கூலிக்காக போய் செத்தார்களே வெயிலுல கிடந்து ,இந்த திமிர் பிடித்த சண்டியை மறக்க வேண்டும் மன்னிக்க வேண்டுமாம் தன் மானம் உள்ள எவனும் இதை மன்னிகவோ மறக்கவோ மாட்டான் ஜெயா ஒருநார்சிஸ்ட்( தற்க்காதலர்)இவரின் மரணம் தமிழகத்துக்கு ஒரு விடிவு காலமே என்று சொல்லிநானும் விவாதத்தில் இருந்து ஜீட் விடுறேன் அம்மா மரணத்தை கொண்டாடினென் என்று அம்மா விசவாசிகளிம் மனது வலிக்குமானால் வலிக்கட்டும் எத்தனயோ ஏழை மக்கள் அம்மாவால் கொல்லப்பட்ட போது வலிக்காத மனது இப்பொழுது வலிக்குமானால் வலிநிவாரணி இருக்கு அதுதாம் அம்மா டாஸ்மாக் அம்மா டாச்மாக்

  49. அதிமுக திராவிட கட்சினுநீங்கநினைச்சுகிட்டீங்கள அய்யோ அது அம்மாதிருடர்கள்முன்னேற்ற கழகமுங்கா பெரிய திருடி ஒழிந்து விட்டார் அவ்வளவே ஒப்பாரி சவுண்ட குறைங்க அம்மா செத்து 2 வாரம் ஆகுது

  50. ரெப்க்காமேரிமெல் வர்ர கடுப்புக்கு என்ன பன்றதுனே தெரியல ஏடிஎம் மெசின கண்ணுல கூட காட்ட மாட்டுறானுக சேகர் ரெட்டி வீட்டுல 100 கோடி 60 கிலோ தங்கமாம் இத புடிச்சா அது ஏதோ அரசியல் சதியாம் வெக்கம் இல்ல இப்பிடி பேச

  51. Rebecca Mary, You have done a great job for your amma by stopping your discussion here. Also you stopped others discussion by issuing words related to cast and femininity. No wonder you are also seems to be amma in this act. Just recall her words and complaint against Channa ready : “ he hold My hands” {You and your amma take advantage over yours own gender}

    Anyway successfully you achieved your aim and objective that is blocking other’s criticize against amma. As a slave you have done a good job for your head amma.

  52. பல அன்பர்களும் வாதத்தை முடித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.சந்தை கலையும் நேரத்தில் மீண்டும் வந்திருப்பதற்க்கு மனம் பொறுக்க வேண்டும் .புயலால் இணையத் தொடர்பு பாதிக்கப்பட்டு இப்போதுதான் மீண்டுள்ளது.

    • திப்பு , நேரடியாக உங்கள் குற்றசாட்டுகளுக்கு இவர்கள் பதில் அளிக்க மாட்டார்கள் பாருங்கள்… மீண்டும் கருணாவின் வால் பிடித்துகொண்டு தான் ஓடுவார்கள். முதலில் நீங்கள் இங்கு வைக்கும் குற்றசாட்டுகளுக்கு இவர்கள் பதில் சொல்லும் வக்கு இருக்கின்றதா என்று பார்கலாம். அதற்கு பின் வேண்டுமானால் கருணாவின் வாலை பிடித்துக்கொண்டு இவர்கள் ஓடட்டும்.

      என்ன! நீங்கள் தீர்க்கமாக உறுதியாக விமர்சனம் செய்தீர்கள் என்றால் பழையபடியே சாதியையும் , பாலினத்தையும் (“ஆணாதிக்க வெறியோடும்” மற்றும் “பாப்பாத்தி” என்று இவர்கள் பிதற்றிக்கொண்டு )தனக்கு சாதகமாக இழுத்துகொண்டு வந்து நிற்பார்கள் இவர்கள்.!

      • என்ன அன்னே திப்பு அப்பவே சீட்டு போட்டாச்சு அதிமுகல தேவர் சாதிக்காருனக எல்லாம் என் மாமன் மச்சான்னு அதிமுகாவுல, இப்ப இவரநம்பிதான் மீரான எதுக்க கலத்துல எறங்க போறிகளா கெட்டது குடி போங்க உங்க இசுட்டம்

  53. மீரான் Sir, நீங்க கருணா மீது வைக்கும் விமர்சனங்கள் மிக சரியானவை தான்… உங்கள் ஆதங்கமும் ஏற்புக்கு உரியது தான்.. ஆனால் ஒரு விசயத்தை நன்கு யோசியுங்கள்…இங்கு ஒரு கயவன் மீது குற்றம் சுமத்தப் படுகின்றது. அதில் மற்றும் ஒரு கயவனை ஒப்புமை செய்வது என்பது முதல் கயவனின் மீதான குற்றசாட்டுகளை நீர்த்து போக செய்யாதா?

    பள்ளியில் ஒரு மாணவன் மீது எழுப்பட்டும் குற்றசாட்டுக்கு அந்த மாணவன் என்ன பதில் கூருவானோ அதே நிலையில் தான் நீங்கள் இந்த கட்டுரையில் விவாதத்தை முன்னேடுகிண்றீர்கள்…!குற்றசாட்டுக்கு உட்படும் மாணவன் என்ன கூறுவான்? நான் மட்டுமா குற்றம் செய்தேன்… அவனும் தானே என்று மற்றவனையும் கைகாட்டுவான் அல்லவா? அதேமனோநிலையில் தான் நீங்களும் ஜெயாவின் மீதான குற்றங்களை விவாதிக்கும் இந்த கட்டுரையில் கருணாவையும் கைகாட்டி முதல் குற்றவாளியை விடுவிக்கும் செயலை தெரிந்தோ அல்லது தெரியாமலோ, புரிந்தோ அல்லது புரியாமலோ, உங்கள் மன பாரங்களை குறைக்கவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ செய்துகொண்டு உள்ளீர்கள்! அந்த செயல் மூலம் என்ன விளைவு ஏற்படும் என்பதனை எத்துனை முறைதான் நான் உங்களுக்கு விளக்குவது?

    கட்டுரைக்கு தொடர்பின்றி ஜோசப் பேசுவதாக நீங்கள் வைக்கும் குற்றசாட்டு இப்ப உங்கள் மீதும் விழுகின்றது அல்லவா? ஒரூ வேலை இந்த கட்டுரை கருணாவையும், ஜெயா வையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து இருந்தால் நீங்கள் அதனை தொடர்வதில் ஏதும் தவறு இல்லை… ஆனால் இந்த கட்டுரை ஜெயாவை பற்றியது தானே?

    வேண்டுமானால்வினவில் கருணாவை பற்றி வந்து உள்ள கட்டுரைகளை உங்களுக்கு பட்டியல் இடுகின்றேன்… அங்கு வாருங்கள் நானும் கருணாவை பற்றி விரிவாக பேசுகிறேன். கருணாவை பற்றி அவரின் சதிராட்டங்களை பற்றி ,பார்ப்பனியத்தையும் மிஞசிய அவரின் நரித்தனங்களை பற்றி பேச நிறைய விசயங்கள் உள்ளன பேசுவோமே! கீழ உள்ள கருணாவை பற்றிய இணைப்புக்கு வாங்களேன்… பேசுவோம்….

    https://www.vinavu.com/2011/08/30/mk-statement/

    மேரி அவர்கள் இங்கு வினவு மீதும் ,பதிவர்கள் மீதும் வைக்கும் குற்றசாட்டுகளை பற்றிய உங்கள் கருத்து என்ன? ஏற்கிண்றீக்லா? எதிர்க்கின்றீர்களா? Mary Said: //சில பதிவர்களை போன்று விமர்சனம் என்கிற பெயரில் “ஆணாதிக்க வெறியோடும்” மற்றும் “பாப்பாத்தி” என்கிற காழ்ப்புணர்வோடும் வன்மத்தை கக்குவதும் தவறு தான்//

  54. மேரி அவர்கள் வினவு மீதும் பதிவர்கள் மீதும் வைக்கும் குற்றச்சாட்டிற்க்கு அவ்ர்கள்தான் விளக்கமளிக்க வேண்டும்.இந்த கட்டுரையிலேயே “ஜெயலலிதா இறந்து விட்டார் அவரை விமர்சிக்க தேவையில்லை “என்ற அவரின் கருத்தைதான் நான் உடனே மறுதலித்து விட்டேனே. ஜெயலலிதா பற்றிய விமர்சனத்தை “ஆணாதிக்க வெறி,பாப்பாத்தி என்ற காழ்ப்பு”என்று மேரி சொகிறார் என்றால்,உங்கள் பலரின் கருத்து அவருக்கு அப்படி ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றுதான் அர்த்தம்.கருணாநிதி பற்றி வாயே திறக்க மாட்டோம் ஜெயலலிதாவை செத்த பிறகும் தனியாய் ஒதுக்கி தாக்கு தாக்கு என்று தாக்குவோம்.இதை நியாயம் கேட்பவர்களை “நீ ஜெயலலிதாவின் அடிமை” என்று சொல்வோம்,என்று வரிந்து கட்டினால் ஒரு பெண்ணாக அப்படி ஒரு சந்தேகம் வருவது இயல்புதான்.கருணாநிதி பற்றி வந்த கட்டுரைக்கு நான் வந்து மறுமொழி இட்டாலும் கண்டிப்பாக ஜெயலலிதாவை இழுக்காமல் இருக்க மாட்டேன்.ஜெயலலிதாவை இழுக்காமல் இருக்கவும் முடியாது.இருவரும் ஒரு வண்டியில் பூட்டிய மாடுகள்.இதில் ஒருவரை மட்டும் கழுவி ஊற்றுவது ஓரவஞ்சனை.இதை நான் செய்யவே மாட்டேன்.

  55. மீரான் Sir, நான் என்ன கருதுகின்றேன் என்றால் விவாதத்தில் இருந்து ஜெயாவை காப்பாற்றும் , ஜெயாவின் சமுக குற்றங்களில் இருந்து அவரை காக்கும் முயற்சியாகவே ரபெக்கா மேரி அவர்கள் இந்த எந்த அடிப்படை உண்மைகளும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக சந்தர்ப்ப சாட்சிகளை கூட முன்வைக்காமல் ,வலுவான சாட்சிகள் ஏதும் இல்லாமல் இத்தகைய குற்றசாட்டுகளை வினவின் மீதும் வினவு பின்னுட பதிவர்கள் மீதும் சுமத்துகின்றார் . நான் என்னளவில் பின்னுட்டம் 46ல் விளக்கங்களை கொடுத்தும் கூட மொவுனம் சாதிக்கின்றார் என்றால் என்ன வென்று முடிவுக்கு வருவது. இப்படி பட்ட சாதி ரீதியான, பாலினம் ரீதியான தற்காப்பு தாக்குதல்கள் மூலம் மேரி போன்றவர்கள் தற்காலிகமாக வேண்டுமானால் விவாதங்களை திசை திருப்ப இயலுமே தவிர நீண்ட கால நோக்கில் அவர்கள் சாதிக்கப்போவது ஏதும் இல்லை தானே!

    “நீ ஜெயலலிதாவின் அடிமை” என்று கூறுவது தான் மேரி அவர்களை இத்தகைய கீழ் தரமான தாக்குதலுக்கு அழைத்து செல்கிறது என்றால் இவருக்கும் அம்மாவின் அரசியல் அடிமையாகவே இருந்து மக்கள் பணத்தை உண்டு கொழிக்கும் அந்த அம்மாவின் அரசியல் அடிமைகளுக்கும் என்ன வேறுபாடு உள்ளதாக கருதுகின்றீர்கள்? தினம் தினம் ஜெயாவின் அடிமைகள் ஜெயாவின் மீது வைக்கும் விமர்சனங்களை எப்படி அராஜகமாக எதிர் கொள்கின்றார்கள் என்று பார்த்துக்கொண்டு தானே உள்ளோம். அம்மாவை பற்றி விமர்சிக்க கூடாது என்று தொலைகாட்சி விவாதங்களில் மிரட்டல் விடுக்கும் அம்மா அடிமைகளுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்? ஒரே வேறுபாடு மேரி அவர்கள் ஜெயாவை மிதமாக விமர்சியுங்கள் என்கின்றார்… தமிழ் சமுத்தின் மீது தன் அதிகாரத்தின் மூலம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இந்த ஜெயா என்ற நிலையில் எதற்காக ஜெயாவை மிதமாக இவரை விமர்சிக்கவேண்டும்? ஜெயா பெண் என்பதற்க்காக மட்டுமே அவரின் தவறுகளை கண்டும் காணாமல் செல்லவேண்டுமா என்ன? மேலும் ஜெயாவை பற்றிய விமர்சனங்களில் அதில் சாதிய ரீதியான பாலின ரீதியான தாக்குதல்கள் ஏதும் இல்லாத நிலையிலேயே அத்தகைய சிந்தனையுடன் இவர் பேசுகிறார் என்றால் இவரின் உள் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? ஜெயாவை அவரின் சமுக குற்றங்களில் இருந்து காப்பதை தவிர வேறு என்ன உள்நோக்கம் இருக்க முடியும்.

    அடுத்தது ஜெயாவை பற்றிய இந்த கட்டுரையில் நீங்கள் கருணாவையும் கொண்டு வருவேன் என்றால் தாராளமாக செய்யுங்கள்…. அதற்கு முன் ஜெயாவின் மீது வைக்கபடும் குற்றசாட்டுகளுக்கு நேர்மையாக பதில் அளித்துவிட்டு அதன் பின் இருவரையும் ஒப்புமை செய்யுங்கள்….. மேலும் வரலாறு ஒன்றும் கணிதம் அல்ல ! யார் ரொம்ப கேட்டவர் என்று எல்லாம் ஒருவருடன் மற்றவரை ஒப்பீடு செய்து கணக்கீடு செய்ய எந்த விதமான சமுக கணினி இயந்திரங்களும் இன்னும் கண்டுபிடிக்கபட வில்லை. எனவே இருவரையும் தனி தனியாக “குணம் நாடி, குற்றம் நாடி அதில் மிகை நாடி மிக்கக்கொள்ளல்” என்பதே சரியானதாக இருக்கும் என்பது நான் வள்ளுவர் மூலம் கண்டு உணர்ந்த கருத்து.

    • நண்பர் செந்தில்,உங்கள் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்.அரசியல் கணிதமல்ல.அரசியல் ஆளுமைகளை ஒப்பிட்டு கணிக்க எந்தவொரு கணிணியோ ,சூத்திரமோ இல்லைதான்.ஆனாலும் செயலலிதா என்ற தன்னலப்பேயை,கருணை,இரக்கம் போன்ற மனித உணர்வுகள் ஏதுமற்ற மனசாட்ச்சி அற்ற தன்னலப்பிண்டத்தை கருணாநிதி என்ற குறை நிறை இரண்டுமே கொண்ட ஒரு தலைவருடன் நியாயமற்ற முறையில் ஒப்பீடு செய்து மேலானவர் என பிதற்றுவதை காண சகிக்கவொட்டாமல்தான் இந்த விவாதத்தை தொடர வேண்டியிருக்கிறது.நீங்கள் சொல்வது போல குணம் நாடி குற்றமும் நாடும் முயற்சி இது.அவ்வளவே.

      செயலலிதா குறித்து நான் பயன்படுத்தியிருக்கும் கடுமையான சொற்கள் ஆத்திரத்தில் அள்ளித்தெளித்தவை அல்ல.எண்ணிப்பார்த்தே பயன்படுத்தியிருக்கிறேன்.இதற்க்காக ரெபேக்கா மேரி சண்டைக்கு வந்தாலும் சமாளிக்க அணியம்.

      உலங்கு ஊர்தி [எலிகாப்டர்தான் மணிகண்டன் காண்டாக வேண்டாமா ],இரவில் பறக்க முடியாது என்பதால்,இரவு தங்குவதற்க்கு போயசு தோட்டம் திரும்பி விட வேண்டும் என்பதற்காக நண்பகல் ஒரு மணிக்கு கொளுத்தும் 102 டிகிரி வெயிலில் அப்பாவி மக்களை அடைத்து வைத்து கொன்று போட்ட செயலலிதாவை வேறு எப்படி சொல்வது.தனது வசதியை இம்மியளவும் குறைத்துக்கொள்ள மறுத்து அதற்க்காக அப்பாவி மக்களை பலியிட்ட செயாவை இன்னும் கடுமையான சொற்களால் கூட அழைக்கலாம்.நாகரீகம் தடுக்கிறது.

      • @திப்பு சார்,…………
        ரெபெக்கா மேரியும் சரி ,மீரானும் சரி இந்த கட்டுரை விவாதத்தில் அவர்கள் நோக்கம் எல்லாம் கருணாவை வசைபாடுவது அல்ல… ஆனால் ஜெயாவை அவரின் குற்றங்களில் இருந்து காப்பது தான் அவர்களின் முதன்மையான கடமையாக உள்ளது. அதற்காகவே இந்த கட்டுரையில் இருவரையும் ஒப்புமை செய்யும் வேளையில் இறங்கி உள்ளார்கள். வினவில் கருணாவை விமர்சிக்கும் கட்டுரைகள் எவ்வளவோ வந்து உள்ள நிலையிலும் அவற்றில் ஒன்றை நான் மீரானுக்கு சுட்டிக்காட்டி அதில் கருணாவின் மீதான என் விமர்சனங்களை பதிவு செய்த நிலையில் கூட அவர் அங்கு வந்து விவாதிக்காமல் தயங்குவதன் காரணம் வேறு என்னவாக இருக்கமுடியும்?

        இன்னும் கூட சொல்லப்போனால் ஜெயாவின் மரணத்துக்கு பின் அவரை பற்றிய வலுவான விமர்சனங்கள் ஏதும் உள்ள அரசியல் கட்டுரைகள் ஏதும் வராத நிலையிலேயே அவருக்கு ஆதரவாக அவரை விமர்சிக்க கூடாது என்ற கருத்துடன் இவர்கள் இருவரும் இங்கு வந்து மல்லுகட்டுகின்றார்கள் அவர்களின் முத்னமையான நோக்கத்தை வினவு வாசகர்கள் அறியாமலா போவார்கள்!

        • திரு செந்தில்குமரன், நாம் இங்கு விவாதிப்பது ஒன்றைப்பற்றி அல்லது ஒருவரைப்பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்து பார்வைகளை தர்க்க ரீதியாய் வெளிப்படுத்துவதற்க்குத்தான்.ஜெயலலிதா மரணம் பற்றி வந்த கட்டுரைக்கு தேவையான அளவிற்க்கு விவாதித்து விட்டோம்.ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறைகள் அவர் கர்ட்சிசார்ந்து அவரிடம் வெளிப்பட்ட செயல்பாடுகள் அவர் ஆளுமை அது வெளிப்படுத்திய தாக்கம் இவைகளை பேசும்பொழுது அவரோடு அரசியல் செய்து அவரோடு மட்டுமே அதிகமாக அரசியல் செய்து தமிழகத்தின் அரசியலில் தவிர்க்கவே முடியாத சக்தியாகிய கருணாநிதியை விட்டு விட்டு பேசவே முடியாது என்பதால் கருணாநிதியை குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.ஆகவே ஜெயலலிதாவின் கடும் விமர்சனத்திற்க்குரிய சில செயல்பாடுகள் கருணாநிதியிடமிருந்து நீள்கின்றன.இவரை குறிப்பிட முடியாமல் அவற்றை பேசமுடியாது.அதிலும் மேரி அவர்களே அவற்றை சுட்டினார்.நான் மிக ஆழமாகவெல்லாம் போகவில்லை.பொதுவாக”மேரியின் கருத்து நியாயம்தான் பல சிக்கல்களுக்கு கருணாநிதியிடமும் முக்கிய பங்கிருக்கிறது” என்ற நியாயத்தை மேலோட்டமாய் ஒத்துக்கொண்டு நிறுத்திவிட்டேன்.ஆனால் உடனடியாக, “எப்படி கருணாநிதியை ஜெயலலிதாவோடு ஒப்பிடுவாய்”என்று வரிந்து கட்டிக்கொண்டு மறுமொழி வந்திருந்தது.வேறு வழியில்லை.கருணாநிதியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றித்தான் ஆக வேண்டும்.தொடர்ந்த என் பதில்களில் ஆக சிறந்த அரசியல்வாதியாய் ஜெயலலிதாவை நான் புகழ்ந்து தள்ளவே இல்லை.இயற்க்கையாய் ஜெயலலிதா அபிமானம் எனக்கு வர வாய்ப்பும் இல்லை.என்னை சுற்றி கருணாநிதி புகழ் கேட்டு வளர்ந்தவன் நான்.எனக்கு முதல் ஓட்டுரிமை 96 தேர்தலில் வந்தது.அந்த முதல் ஓட்டை திமுக விற்க்கு போட்டவந்தான்.இன்றுவரை ஓட்டுப்போட ஆர்வமற்றவனாகவே ஆகிப்போனேன்.உதயசூரியனையே நெஞ்சில் குத்திக்கொண்ட என் குடும்பம் மிகுந்த தயக்கத்திற்க்குப்பிறகு 2011ல் முதன்முதலாக இரட்டைஇலைக்கு ஓட்டு போட்டது.போன சட்டமன்ற தேர்தலில் ம ந கூ விற்க்குத்தான் ஓட்டளித்தார்கள்.இதுதான் என் பின்னணி.எனக்கு ஜெயலலிதாவை கொண்டாட வேண்டிய தேவையே இல்லை.நான் ஏற்கனவே சொன்னது போல கருணாநிதியின் வஞ்சகம் சுயநலம் அவரை விட்டு எங்களை தள்ளியது.இந்த அடிப்படையில் என் விமர்சனத்தை ஆரம்பத்திலிருந்து நீங்கள் படித்து பார்த்தால் வெறும் கட்சி அரசியலின் பார்வையில் கருணாநிதி/ஜெயலலிதா என்ற முறையில் என் விமர்சனம் இல்லை.

          • மீரான் பாய் நானும் உங்களுக்கு கருணாவின் மீதான வினவு கட்டுரையை சுட்டிக்காட்டி அதில் என்னுடைய பின்னுட்டத்தையும் அளித்து உங்களையும் விவாதத்துக்கு அழைத்தேன். ஆனால் வரமாட்டேன் என்று அடம்பிடித்தால் எப்படி? மீண்டுமே வேண்டுமானால் அதே லிங்க்கை உங்களுக்கு அளிகின்றேன். வாருங்கள் கருணாவை குற்றவாளி கூண்டில் ஏற்றி அவரின் சமுக குற்றங்களை அக்குவேறாக ஆணிவேறாக ஆராய்வோம்.
            https://www.vinavu.com/2011/08/30/mk-statement/

            • செந்தில்குமரன்,கருணாவை பற்றி போதுமான அளவிற்க்கு பேசியாகிவிட்டது.ஜெயலலிதா பற்றிய கட்டுரையாக இருந்தாலும் கருணா தவிர்க்க முடியாதவராக இருக்கிறார் என்ற காரணத்தை கூறி ஜெயலலிதாவைவிட கூடுதலாகவே கருணா பேசப்பட்டு விட்டார்.திரும்பவும் கருணாவைப்பற்றி பேசலாம் கருணாவைப்பற்றி பேசலாம் என்றால் எதற்க்கு?தேவைக்கு பேசி முடித்தாகி விட்டது.எனக்கு கருணாவைப்பற்றி என்ன கருத்து என்பதும் தெளிவாகி விட்டது வேறு எதற்க்கு வேலை மெனக்கெட்டு அவரை கழுவி ஊற்ற!? நேர்த்தி க்டனா? ஒரு அரசியல் தெளிவிற்க்காகத்தான் விவாதிக்கிறோமே தவிர குறை பேசுவதே வேலையாக நாம் அலையவில்லை.அவர்கள் இருவரையும் பற்றிய விமர்சனத்தை இருபது நாட் களுக்கும் மேலாக போதுமான அளவிற்க்கு எந்த சார்பும் இல்லாமல் விவாதித்து விட்டோம் என்றே நான் நினைக்கிறேன்.இனி பேசுவது பயனற்றதாகவும் நேரம் திண்பதாகவுமே இருக்கும் என்றே கருதுகிறேன்.

          • \\உதயசூரியனையே நெஞ்சில் குத்திக்கொண்ட என் குடும்பம் மிகுந்த தயக்கத்திற்க்குப்பிறகு 2011ல் முதன்முதலாக இரட்டைஇலைக்கு ஓட்டு போட்டது.//

            கருணாநிதி மீதோ,செயா மீதோ இப்படிப்பட்ட கண்மூடித்தனமான பற்றுதல் வைப்பதையும் நியாயமற்ற வெறுப்பை உமிழ்வதும்தான் வேண்டாமென்கிறேன்.நியாயமாக பார்த்தால் 2001 தேர்தலிலேயே மீரானின் குடும்பத்தார் உதய சூரியனை புறக்கணித்து இரட்டை இலைக்கு வாக்களித்திருக்க வேண்டும்.காரணம் செயலலிதா நல்லவராகி விட்டிருந்தார் என்பது அல்ல.அவர்தான் அப்போது மதவெறி பா.ச.க.வுடன் கூட்டணி கட்டிக்கொண்டு வந்த கருணாநிதியை தோற்கடிக்கும் ஆற்றல் கொண்ட மாற்றாக இருந்தார்.அந்த தேர்தலில் மட்டும் கருணா வென்றிருந்தால் ஊழல் வழக்குகளை வைத்து செயாவை அரசியலை விட்டே அப்புறப்படுத்தி இருப்பார்கள் கருணாநிதியும்,நடுவணில் ஆடசியில் இருந்த பா.ச.க.வும்.இப்போது 2016 -ல் முயற்சிப்பது போல அந்த வெற்றிடத்தை பயன்படுத்தி மதவெறி கும்பல் இங்கு வளர முற்பட்டிருக்கும்.

            அதே போலத்தான் கருணாநிதியை கண்ணை மூடிக்கொண்டு வெறுத்தே ஆக வேண்டும் என்றால் கடைசியில் ஊழல் பெருச்சாளி,மர்ம குகை வாழ் தந்திர யோகி சசிகலாவையோ ஆரியத்தின் அடுத்த நாசகார ஏவுகணை தீபாவையோ கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் இழிநிலைக்கு மீரான்கள் ஆளாக வேண்டியிருக்கும்.

            • சகோதரர் திப்பு 2001 தேர்தலிலேயே என் குடும்பம் உதயசூரியனை புற்க்கணித்திருக்க வேண்டும் என்று 2016ல் ஆலோசனை சொல்கிறீர்கள்.நான் இந்த உண்மையை குறிப்பிட காரணம், செந்தில்குமரன், ஜெயலலிதா மேல் எனக்கு மயக்கம் இருப்பதாக சந்தேகப்படும்போது அதன் விளக்கமாகவே “அந்த மயக்கம் எனக்கு இருக்க வாய்ப்பில்லை”என்பதை குறிப்பிட்டேன். இதில் நானோ என் குடும்பமோ அல்ல.பெரும்பாலான தமிழக முஸ்லிகளின் குடும்பமும் இந்த நிலையில்தான் இருந்தது.இன்றும் இருக்கிறது.அன்று இருந்த மயக்கம் கணிசமாய் தணிந்தும் இருக்கிறது.அவ்வளவு பற்றும் பாசமும் வைத்த ஒரு கட்சி அதன் தலைவர் அந்த சமூககத்திற்க்கு செய்தது என்ன?நெருக்கடியான நேரத்தில் அந்த சமூகத்தின் பக்கம் நின்று அவர் காத்தது என்ன?என்ற கேள்வியும் அதனால் வந்த குமுறலும்தான் இந்த பக்கம் முழுக்க வந்த என் பதிவுகளின் வெளிப்பாடு.கருணாநிதி தன் சுயநலனுக்காக அப்பட்டமான துரோகத்தை செய்து அதையும் நியாயப்படுத்தி தேர்தலை சந்தித்த போதும் மக்கள் அவரை விடுத்து மாற்றாக ஜெயலலிதாவை மனமுவந்து ஆதரிக்க முன் வரவில்லை என்ற எதார்த்தத்தை தெரிவிக்கவே அந்த நிகழ்வை குறிப்பிட்டிருந்தேனே தவிர, அது சரியா தவறா என்பதல்ல விவாதம்.கருணாநிதியை கண்ணை மூடிக்கொண்டு யாரும் வெறுக்க தேவையில்லை.கண்ணை திறந்தாலும் கருத்தை திறந்தாலும் வெறுத்துதான் ஆகவேண்டும்.கருணாநிதியை வெறுத்தால் சசிகலாவை ,ஆரியத்தை ,தீபாவையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தே தீருவார்கள் என்பது என்ன தத்துவம்?இது ரொம்ப சின்னபுள்ளத்தனமாகவல்லவா இருக்குது!

  56. நான் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே வருகிறேன். பின்னுட்டம் 6 ல் நண்பன் ஜெயாவின் மீது வைக்கும் குற்றசாட்டுகளை தன் பின்னுட்டம் 8 மூலம் திசை திருப்பிய மேரி அவர்கள் இங்கு இப்போது இல்லாததால் மீண்டும் அந்த குற்றசாட்டுகளை வினவு வாசகர்கள் முன்னிலையில் வைக்க விரும்புகின்றேன்.

    டாஸ்மாக் மூலம் ஒரு தலைமுறையையே சீரழித்தது,
    சமச்சீர் கல்விக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்றது
    அண்ணா நூலகத்தை திருமண மணடபம் ஆக்க முயற்சி செய்தது
    ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளின் மேல் வழக்கு போடாமல் இருக்க சட்டம் இயற்றியது
    போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று மேம்போக்காக ஈழத்த தமிழர் படுகொலையை கடந்து சென்றது
    அதே வாயின், தான் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைத்து தருவேன் என்று உதார் விட்டு, கொடநாடு எஸ்டேட்டில் பாதி நாட்களை கழித்தது,
    தோழிகளை ஊக்குவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் வரிசையில் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளியது,
    நிலக்கரி ஊழல், மின்கொள்முதல் ஊழல், தொழில் தொடங்க விண்ணப்பித்தால், முதலீட்டு தொகையில் இருபது சதம் முன்னதாகவே கமிஷனாக கொடுத்துவிட வேண்டும் என்று அடாவடி செய்தது, தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, எல்லா தொகுதிகளிலும் பண பட்டுவாடாவை கச்சிதமாக முடித்துவிடுவது, தமிழத்தை மின்-மிகை மாநிலமாக ஆக்குவேன் என்று உதார்விட்டது, எந்த முயற்சியும் எடுக்காமலே மிகை மின் மாநிலம் ஆகிவிட்டதாக வாயில் வடை சுட்டது,…இன்னும் எவ்வளவோ அடுக்கலா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க