மண ஏற்பு விழா ஒத்திவைப்பு – அறிவிப்பு
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி உயிரிழந்தார். அமைப்பின் முதுபெரும் தோழர் இறந்துவிட்ட காரணத்தினால் மண ஏற்பு விழாவினை ஒத்தி வைக்கிறோம். திருமணம் நடத்துவதற்கான குறிப்பான தேதியை விரைவில் அறிவிக்கிறோம்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் உடல் தானம் – படங்கள்
தோழரின் இளமை, சிந்தனை, ஆற்றல், வாழ்க்கை என அனைத்தும் மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது போலவே, அவரின் இறப்பிற்கு பிறகும் அவரின் உடலும் இச்சமூகத்திற்கு அதிகபட்ச பயனளிப்பதாக இருக்கும் வகையில், தோழர் சம்பத்தின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – உரைகள்
தோழர் சம்பத் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களின் உரைகளில் உள்ள சில முக்கியமான கருத்துகளை மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாக பதிவிடுகிறோம்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – படங்கள்
தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தோழர் சம்பத் உருவப்படங்கள் | தரவிறக்கம்
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் உருவப்படத்தை வெவ்வேறு வடிவங்களில்...
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்துகிறோம்!
தனது வாழ்நாள் முழுவதும் நக்சல்பாரி இயக்கத்தின் அடிப்படைகளையும் மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படைகளையும் உயிராகப் பாதுகாத்தார். மா.அ.க.வின் மக்கள் திரள் வழியை உயர்த்திப் பிடித்தார். பல மா-லெ குழுக்களில் நிலவும் இடது தீவிரவாதம், வலது சந்தர்ப்பவாதம், கலைப்புவாதம் மற்றும் பல்வேறு அராஜகவாதப் போக்குகளுக்கு எதிராக உறுதியாகப் போராடினார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?
எதிர்க்கட்சிகளோ இந்த கட்டமைப்புக்குள்ளேயே பி.ஜே.பி-யை தோற்கடித்து விட முடியும் என்ற மாயையை மக்களுக்கு உருவாக்குகிறார்கள். இதன் மூலம் தங்களை நம்பும் மக்களுக்கும் கூட துரோகம் இழைக்கிறார்கள்.
திப்பு சுல்தான் – 276 | நவம்பர் 20: திப்பு எங்கள் தோழன்! | பரப்புரை இயக்கம்
நவம்பர் 20 : மாவீரன் திப்பு சுல்தான் - 276 ஆம் ஆண்டு பிறந்தநாள்
திப்பு எங்கள் தோழன்!
பரப்புரை இயக்கம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
மாவீரன் திப்பு சுல்தானின் பெயரை நமது பாடப்புத்தகங்களின்...
பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு கட்டுப்பாடு: கருத்துரிமையை குழிதோண்டி புதைக்கும் தமிழ்நாடு அரசு!
பணம் படைத்த அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் அரசியல் கட்சிகளும் பாசிச கட்சிகளும் மட்டுமே பரப்புரையில் ஈடுபட முடியும் என்பதற்கான பரிந்துரைகளை ஆளும் தி.மு.க அரசு வெளியிட்டுள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் மேற்கண்ட பரிந்துரைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
கோவை மாணவி மீதான பாலியல் வன்முறை: தோற்றுப் போனது அரசு கட்டமைப்பு!
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு சில மணி நேரங்கள் ஆடையின்றி அந்தப் பெண் துடிதுடித்தார் என்பதை கேட்கும்போதெல்லாம் நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் இப்படி ஒரு நிகழ்வும் நடைபெற்று இருக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்.
மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகள்: கார்ப்பரேட்மயமாக்கல்தான் தற்சார்பா?
ஏற்கெனவே மரபணு திருத்தப்பட்ட நெல் விதிகளைத் தடை செய்யக் கோரி விவசாயிகள் போராடிவரும் சூழலில், தற்போது மத்திய அரசு மரபணு திருத்தப்பட்ட பருப்பு வகைகளைப் பயிரிடுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.
சாலையோரக் கடைகளை அடாவடியாக அகற்றிய ஓசூர் மாநகராட்சி!
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களை பெரும் தனியார் நிறுவனங்கள், அரசியல் செல்வாக்குள்ள தனி நபர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதை மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை. உழைக்கும் மக்களுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா?
கிருஷ்ணகிரி: யானைகள் தாக்கி விவசாயிகள் பலி! மாவட்ட நிர்வாகமும், வனத்துறையுமே குற்றவாளிகள்!
வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சோலார் மின்வேலி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் வாக்குறுதி கொடுத்தும் நிறைவேற்றவில்லை. யானைத் தாக்குதலால் விவசாயிகள் உயிரிழக்கும்போது வாக்குறுதிகள் கொடுப்பது, அதன் பிறகு அலட்சியமாக இருப்பது என்ற போக்கிலேயே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: வாக்குரிமையை மக்களிடமிருந்து பறிக்கும் பாசிச நடவடிக்கையே!
வாக்குரிமையை மக்களிடமிருந்து பறிக்கும், பாஜக-வின் பாசிச உறுப்பான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை மக்கள் அதிகார கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
கிருஷ்ணகிரி: பருவமழையால் பயிர்கள் சேதம்!
கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் அஞ்செட்டி, உரிகம், தின்னூர், அத்திக்கோட்டா, எஸ்.குருபட்டி மற்றும் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.






















