மேற்குவங்கம்: நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினர் நல நிதிக் குறைப்பு!
மேற்குவங்கத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைத்த பிறகு சங்கிக் கும்பலின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. ஆட்சியமைத்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே இஸ்லாமியர்கள் நடத்தும் வணிகக் கடைகள் மீது இந்துத்துவக் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். தான் நிறுவத் துடிக்கும் இந்துராஷ்டிரத்தில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் நோக்கத்தின் ஓர் அங்கமாகவே இந்த நிதிக் குறைப்பும் அரங்கேறியுள்ளது.
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு இரத்து: மதுரை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு கரசேவை!
இந்தியாவில் “இந்து மதம்” எனும் ஒற்றை மதத்தை நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல், பௌத்த, சீக்கிய மதங்களை விழுங்குவதையும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை ஒழித்துக் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “தாய் மதத்திற்குத் திரும்புதல்” (கர்வாப்சி) என்ற பெயரில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. பாசிஸ்டுகளின் இந்த நிகழ்ச்சிநிரலுக்குச் சேவையாற்றுவதாகவே இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: நீதிமன்ற துணையுடன் தேவாலயம் கட்டுவதைத் தடுக்கும் இந்துத்துவ கும்பல்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்குத் திட்டமிட்டு வேலை செய்து வரும் இந்துத்துவ கும்பலின் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உகுந்த வகையிலும் தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசு பள்ளிகளில் இந்து மதச் சடங்குகள்: கல்வியைக் காவிமயமாக்கும் சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு!
கல்வியைக் காவிமயமாக்கி, அரசு பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளாக மாற்ற வேண்டும், மாணவர்களின் மூளையில் இந்துத்துவச் சித்தாந்தத்தைத் திணிக்க வேண்டும் என்ற திட்டத்தின்படியே ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
உ.பி: வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் யோகி அரசு
உமீத் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சொத்து விபரங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தல் என்ற பெயரில் 31,328 சொத்துகளின் ஆன்லைன் பதிவுகளை ரத்து செய்துள்ளனர். மேலும், அவற்றுடன் தொடர்புடைய, 31,192 வக்ஃப் கோரிக்கைகளும் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பசுவின் பெயரில் இஸ்லாமியர்கள் மீது தொடரும் தாக்குதல்கள்!
இந்துத்துவ பாசிஸ்டுகள் ‘பசு பாதுகாப்பு’ என்பதை தங்களுக்கான இந்துத்துவ அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான, விரிவுபடுத்திக் கொள்வதற்கான கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஜம்மு – காஷ்மீர்: எட்டாவது ஆண்டாக பக்ரீத் கொண்டாட்டத்திற்குத் தடை விதித்த மோடி அரசு!
பாசிச கும்பலால் 2019-ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஈத் (பக்ரீத்) மற்றும் பிற முக்கிய மத வழிபாட்டு நாட்களின் போது ஈத்கா மைதானம் மற்றும் ஜாமியா மசூதியில் மக்கள் வழிபாடு நடத்துவதற்குத் தொடர்ந்து தடை விதித்து வருகிறது. எட்டாவது ஆண்டாகவும் இத்தடை நீடிக்கிறது.
தமிழ்நாட்டில் மாடு வெட்ட தடை: மக்களின் உணவு உரிமையைப் பறிக்கும் உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒருதலை பட்சமாக வெளியாகி உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து பெரும்பான்மை மக்களின் உணவு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு தடை: தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மாணவர்கள்!
இந்துராஷ்டிர கொடுங்கனவோடு இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் 11 ஆண்டுகால ஆட்சியில், உயர்கல்வி நிலையங்களில் தீண்டாமைக் கொடுமைகளால் மாணவர்களின் உயிர் காவு வாங்கப்படுவது உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்துராஷ்டிரத்தின் புதிய சோதனைச்சாலையாகும் ஒடிசா
அம்பானி - அதானி - அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலின் கொள்ளையை கட்டற்ற வகையில் மேற்கொள்வதற்கே, தனது பிளவுவாத அரசியல் மூலம் மக்களைத் துண்டாடி இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கிறது பாசிச கும்பல்.
அசாமில் இனப்படுகொலைக்கு அறைகூவல் விடுக்கும் பா.ஜ.க: துணைபோகும் உச்சநீதிமன்றம்!
இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள அசாமில் பெரும்பான்மை இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை, இனப்படுகொலைக்கான தயாரிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது பாசிச கும்பல். உச்சநீதிமன்றமோ அதற்குத் துணைபோகிறது.
உத்தராகண்ட்: காஷ்மீரி இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்துமதவெறி கும்பல்!
சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பாசிச பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காவி கும்பல்களால் காஷ்மீரி இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் – பாகம் 4
திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து அழகர் கோவில், பாண்டி கோவிலிலும் ஆடு, கோழி பலியிடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பிரச்சினையை கிளப்பி வருகிறது சங்க பரிவாரக் கும்பல்.
உ.பி: தொழுகை நடத்துவது சட்டவிரோதம்; கலவரங்கள் நடத்த சங்கிகளுக்கு சுதந்திரம்!
கைது செய்ய வந்த போலீசாரிடம் வீட்டின் உரிமையாளரான ருஷானா உள்ளூர் மசூதி பழுதுபார்க்கப்பட்டு வருவதால், காலியாக இருந்த தனது வீட்டைப் பிரார்த்தனைக்காகப் பயன்படுத்த அனுமதி அளித்ததாகத் தெரிவித்துள்ளார். அதனையெல்லாம் பொருட்படுத்தாத போலீசு சங்கிகள் கொடுத்த பொய்ப் புகாரைக் கொண்டு 12 இஸ்லாமியர்களைக் கைது செய்துள்ளது.
ஒடிசா: பாதிரியார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பஜ்ரங் தள் குண்டர்கள்!
பாதிரியார் முகத்தில் குங்குமத்தைப் பூசியும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தும் ஊர்வலமாக இழுத்துச் சென்று கிராமத்திலுள்ள அனுமன் கோவிலில் கட்டிவைத்து சாக்கடை நீரையும், மாட்டுச் சாணத்தையும் பாதிரியாரின் வாயில் வலுக்கட்டாயமாகத் திணித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடக் கட்டாயப்படுத்தியுள்ளது, பஜ்ரங் தள் கும்பல்.
























