கார்ப்பரேட்டுக்களுக்காக தமிழ்நாட்டைச் சூறையாடும் பாசிச பாஜக அரசு! காவல்காக்கும் திமுக அரசு!
எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கம், காட்டுப்பள்ளித் துறைமுகம், பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம் என கார்ப்பரேட்டுகளின் காவலாளியாக செயல்படும் திமுக அரசு, அணுக்கனிம சுரங்கம் மற்றும் எண்ணெய் - எரிவாயு திட்டத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது.
மோடி பதவியேற்பதை ஏற்கவைக்கும் தி.மு.க-வின் துரோகத்தனம்!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போதுவரை மோடி பதவியேற்பது பெரும்பான்மை இந்திய மக்களின் உணர்வுக்கு எதிரானது என்று வாய்த் திறக்கவில்லை.
கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்போகும் திராவிட மாடல் அரசாங்கம்!
ஒன்றிய பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் கொண்டு வர முயற்சி செய்து, விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தால் முறியடிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமான வழியில் கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையம் என்ற பெயரில் திராவிட மாடல் அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.
செந்தில் பாலாஜி கைது! THE UNCONDITIONAL SUPPORT அரசியல்!
நிபந்தனை விதிப்பதே பாசிசத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள். மாநில சுயாட்சி உரிமை, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தடை, அம்பானி- அதானி பாசிச கும்பல் மீது நடவடிக்கை ஆகிய எவ்வித நிபந்தனையுமின்றி காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்கள்.
ஒப்பந்த செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு!
பாஜக-வை எதிர்க்கும் தேர்தல் கட்சிகள்கூட, தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தியே தீரும் என்பதை செவிலியர்கள் மீதான திமுக அரசின் தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கை 2020-இன் மாறுபட்ட வடிவமே!
தமிழ்நாட்டில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் அவை அமைக்கும் குழுக்களில் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் பேராசிரியர் இராமனுஜத்தை இந்த குழுவில் நுழைத்த போதே தி.மு.க-வின் வேடம் கலைந்து விட்டது.
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத் திருத்த மசோதா: வேகமெடுக்கும் திராவிட மாடலின் கார்ப்பரேட் சேவை!
தொழிற்மயமாக்கல், நகரமயமாக்கல் என்ற பெயரில் ஏற்கனவே நீர்நிலைகள் மிக வேகமாக விழுங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளால் இன்னும் மோசமாக சுற்றுச் சூழல் அழிக்கப்படப்போவது திண்ணம்.
பரந்தூர் செல்ல முயன்றால் கழுகாக பறந்து கைது செய்யும் தமிழ்நாடு போலீசு
இவ்வளவு பெரிய மக்கள் போராட்டம், கட்சிகள் இயக்கங்கள் இத்திட்டத்திற்கு எதிர்த்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கார்ப்பரேட் சேவைதான் கட்சியின் சேவை என உறுதியாக இருக்கிறது திமுக அரசாங்கம்.
தமிழ்நாடு போலீசின் இரண்டு நிமிட ஜனநாயகமும் மூச்சு விட மறந்த கதையும்!
பாசிசத்தை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியும் என்பதும் தேர்தலை பாசிசத்துக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பது போன்ற சிந்தனைகள் நம்மை அதிகார வர்க்க, பாசிசத்துக்கு அறியாமலேயே கீழ்படிய செய்து வருகின்றது.
மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டியது மாணவர்களுக்கா? ஆட்சியாளர்களுக்கா?
நீட் தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் படித்துக் கொண்டே இருக்கும் மாணவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.
பட்ஜெட் : பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்படும் புதியக் கல்விக்கொள்கை !
நுழைவுத்தேர்வுகளில் தனியார் பயிற்சி நிலையங்களில் பல இலட்சம் கட்டிப்படிக்கும் பணக்கார மாணவர்களால் மட்டுமே எளிதாக தேர்ச்சிபெற முடியும். அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோருக்கு இத்தகைய பயிற்சிகள் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.
புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !
ஆர்.எஸ்.எஸ் சார்பு கல்வி நிறுவனத்துக்கு அனுமதியளிப்பார்களாம், ஆனால் அவர்கள் கொள்கையைத் திணிப்பதைத் தடுப்பார்களாம். இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்வது ?
நாசகர கிடெக்ஸ் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு !
இத்தகைய கொடூர கிட்டெக்ஸ் நிறுவனம், தமிழகத்திற்கு வந்தவுடன் தொழிலாளர்கள் மீதான சுரண்டலையும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதையும் கைவிட்டு புனிதனாக தம்மை மாற்றிக் கொண்டுவிடுமா ?
கேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா ?
பொருளாதார தளத்தில் தி.மு.க.வும் சரி பொதுவில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்று இட ஒதுக்கீடு, சமூக நலத்திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.
கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?
ஒருபுறம் திராவிடம் 2.0 என்று கொள்கை பரப்புகிறார்கள். மறுபுறம் குடும்ப அரசியல் 2.0 அல்லது 3.0-வாக வாரிசுகளை இறக்குகிறார்கள்.