தூய்மைப் பணியாளர்களின் வயிற்றில் அடிக்கும் தி.மு.க. அரசு!
போராடும் தொழிலாளர்கள் தார்பாய் கூடாரங்களை அமைத்து, இரவு-பகல் பாராமல், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல், ஒரு வாரத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கிருஷ்ணகிரி நகராட்சி: குடிநீரில் சாக்கடை நீர் கலக்கும் அவலம்!
கிருஷ்ணகிரி நகராட்சியில் கால்வாய் தூர்வாராமல் இருப்பது; குடிநீரில் கழிவுநீர் கலப்பது; குப்பைகளை அகற்றாமல் இருப்பது போன்ற மக்களின் அடிப்படை சுகாதார பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.
8 புதிய துறைமுகங்கள்: தமிழ்நாட்டைக் கூறுபோடும் தி.மு.க அரசு!
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துறைமுகங்கள் 30 ஆண்டு முதல் 99 ஆண்டுகள் வரை நீண்ட குத்தகைக்கு விடப்படும் என்றும் அதற்கு ஏற்றார் போல் ”நெகிழ்வான துறைமுக கொள்கை” உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டமும் தி.மு.க அரசின் துரோகமும்
தனியார்மயம்-தாராளமயம்-உலகமய கொள்கை வலியுறுத்தும் “ஊழியர்கள் இல்லாத பணிமுறை” என்ற டிஜிட்டல்மயமாக்கத்தின் ஒரு அங்கமாகவே ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர்.
சென்னை மின்சாரப் பேருந்து: நிறுவப்படும் கார்ப்பரேட் ஆதிக்கம்!
நட்டத்திற்குக் காரணமாக உள்ள அதிகார வர்க்கத்தின் ஊழல் முறைகேடுகளைக் களைவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்காமல் போக்குவரத்துத் துறைக்குள் கார்ப்பரேட்களை திணிக்கிறது தி.மு.க. அரசு.
பெங்களூரு: அரசுக்கு எதிராக அணி திரண்ட ஒப்பந்த தொழிலாளர்கள்!
நிரந்தரமாக வேலை செய்யும், அதே சமயம் தற்காலிக தொழிலாளர்கள் என்று பொய்யாக அழைக்கப்படுகின்ற லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
பரந்தூர் விமான நிலையம்: மக்களை மிரட்டி நிலங்களைக் கையகப்படுத்தும் தி.மு.க அரசு!
"வெளியூர் நபர்களை அழைத்து வந்து வலுக்கட்டாயமாக பத்திரப் பதிவு செய்து வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது நிலங்களைக் கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க அரசு முயற்சிப்பதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்."
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாபெரும் தேசத் துரோகம்!
ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், தேசிய மருத்துவக் கமிஷன் மற்றும் அதன் சோதனைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களுக்குச் சேவை செய்தனர் என்பதே குற்றச்சாட்டு.
கடலூர் செம்மங்குப்பம் இரயில் விபத்து: தனியார்மயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வருவதே தீர்வு!
கடந்த 2024 ஏப்ரலில் வெளிவந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 17,083 ரயில்வே கேட்டுகள் கேட் கீப்பருடன் உள்ளன. அவற்றில் கடந்த ஜனவரி 2025 வரை 497 மட்டும் நீக்கப்பட்டு 16,586 ரயில்வே கேட்டுகள் கேட் கீப்பருடன் இயங்கி வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் வெல்லட்டும்!
தமிழ்நாட்டில், வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சம்பளம் பிடித்தம், துறைரீதியான நடவடிக்கை உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தலைமை செயலாளர் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார்.
தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! || தொழிலாளர் விழிப்புணர்வு சிந்தனைகள்
ஜூலை 9, 2025: அகில இந்திய வேலை நிறுத்தம்!
தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்!
ஒன்றிய அரசே!
44 தொழிலாளர் நலச் சட்ட உரிமைகளை பறிக்கும் 4 தொகுப்பு விதிகளை வாபஸ் வாங்கு. திணிக்காதே!
நிறுவனத்தின் மொத்த வருவாய்க்கு இணையான ஊதியம், பணி நிரந்தர உரிமைகள் வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகளை ரத்து செய்!
அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட், F.T.E , NAPS என்ற பெயரில் நேரடி உற்பத்தியில் தொழிலாளர் உழைப்பை சுரண்டும் நிறுவன CEO முதல் HR வரையிலான கும்பலை சிறையில் தள்ளு!
கசக்கி...
அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்! | துண்டறிக்கை | பு.ஜ.தொ.மு
முதலாளித்துவ சுரண்டல்கள் - அடக்குமுறைகளை
முறியடிக்க ஜூலை 09 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை
வெற்றி பெறச்செய்வோம்!
ஜூலை 09 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம் ஏன்?
* விலைவாசிகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் ஊதியத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை!
* வறுமை,பட்டினிச்சாவு, வேலை இன்மை, வேலைபறிப்பு -; கார்ப்பரேடுகளின் செழிப்பு... இவை தான் இந்தியாவின் உண்மையான அடையாளம்!
கார்ப்பரேட்டுகளின் இலாபம் 22.3% உயர்ந்திருக்கிறது.1.5% வேலைவாய்ப்பு உயர்வு 1.5% தான்!அதாவது, கார்ப்பரேட்டுகள் வேலைவாய்ப்பை வெட்டிச்சுருக்கி இலாபம் குவிக்கின்றனர்!
* வெறும் 5% உயர்தட்டு பணக்காரர்கள் 70%...
தொடரும் பேருந்து விபத்துகள்: தி.மு.க அரசின் கார்ப்பரேட் கொள்கையே காரணம்!
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையப் போகிறோம் என்று சூளுரைத்து கல்வித்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்டு அரசுத் துறைகளை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு.
அகமதாபாத் விமான விபத்து: கார்ப்பரேட் கிரிமினல்களின் லாபவெறியே காரணம்
அகமதாபாத் விமான விபத்தானது போயிங், டாடா போன்ற கார்ப்பரேட் கிரிமினல் நிறுவனங்களின் லாப வெறி மற்றும் இந்திய ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சேவை ஆகியவற்றின் விளைவே ஆகும்.
ஒட்டச்சுரண்டப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்
வட மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கட்டட - கட்டுமான பணிகள், ரயில்வே தொழிற்சாலைகள் போன்ற ஆபத்து நிறைந்த வேலைகளில் எந்தவித பாதுகாப்புமின்றி ஈடுபடுத்தப்படுகின்றனர்.























