ஒடிசா ரயில் விபத்து நிகழ்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தது – அம்பலப்படுத்துகிறது சி.ஏ.ஜி அறிக்கை
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரவுகளிலிருந்து ஒரிசாவில் நடைபெற்ற கோர விபத்தானது நடக்கவிருந்ததுதான் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமுல் மூலம் ஆவினை அழிக்கத்துடிக்கும் மோடி அரசு – பின்னணியில் அம்பானி!
சந்தையை கைப்பற்ற அம்பானி ஒவ்வொரு மாநில அரசுகளிடமும் போய் நிற்க வேண்டும் அல்லவா? அதனால்தான் மோடி அரசு மாநில கூட்டுறவு நிறுவனங்களை அழித்து, அமுல் என்ற ஒற்றை தேசிய கூட்டுறவு நிறுவனத்தை கட்டியெழுப்ப விழைகிறது.
ஒடிசா ரயில் விபத்து: அரசே முதல் குற்றவாளி!
தினமும் 2.2 கோடி மக்கள் இரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இரயில்வே துறை ஏன் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இரயில்வேவை மொத்தமாக தனியார்மயப்படுத்துவது தான் அரசின் நோக்கம் என்பதுதான் அதற்கான விடை.
இந்திய ரயில்வேத் துறையில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்!
எத்தனை பணியிடங்கள் காலியாக இருந்தாலும் இந்த மோடி அரசு காலிப்பணியிடங்களை நிரப்பப்போவதில்லை என்பது உறுதி. ஏனெனில் பணமாக்கல் திட்டம், தனியார்மய கொள்கையின் விளைவாக ரயில்வே துறையைத் திட்டமிட்டே சிதிலமடையச் செய்து அதானி-அம்பானிகளுக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம்.
ஆசிரியர்கள் போராட்டம்: அரசுவேலை வழங்க எந்த ஆட்சியும் தயாராக இல்லை!
பொது கட்டமைப்புகளை வலுப்படுத்தினால் தனியார்மய கொள்கையை அமல்படுத்தமுடியாது. இதை நன்கு புரிந்துகொண்ட அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் வெற்றிக்காக ”பணிநிரந்தரம் செய்வது” போன்ற வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ஹூண்டாயின் ₹20,000 கோடி முதலீடு யாருக்கானது?
இப்படிப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நாசகர நிறுவனத்தை தான் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது தி.மு.க அரசு.
மகாராஷ்டிரா: போராடும் ரத்தினகிரி மக்களுக்கு துணைநிற்போம்!
பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெற நம் நாட்டின் இயற்கைவளங்களை நாசம் செய்வதோடு, நம்முடைய உழைப்பையும் குறைந்த விலைக்கு சுரண்டி கொழுப்பதற்கே இதுபோன்ற திட்டங்கள்!
ஏகாதிபத்திய சுரண்டலுக்கு துணைபுரியும் இந்திய பார் கவுன்சில்!
இந்நடவடிக்கை பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் சுரண்டலையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் துணைகொண்டு சட்டரீதியாக மேற்கொள்ளத்தான் வழிவகை செய்யும்.
திராவிட(கார்ப்பரேட்) மாடல் : தனியார்மயமத்தை நோக்கி தமிழ்நாடு போக்குவரத்து கழகம்!
பொதுத்துறை என்பதன் பொருள் உழைக்கும் மக்களின் வரியால் உழைப்பால் உருவானது என்பதே. எனவே அதை முதலாளிகளுக்கு எடுத்துக்கொடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை!
சாலை விரிவாக்கத்தைக் கைவிடு! மக்களை வாழவிடு!
சாலை விரிவாக்கப்பணியால், நீர்வழிப்பாதைகளும், நீர்நிலைகளும் அழிக்கப்படும் என்று தெரிந்தேதான் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை
வெறும் 1 சதவிகித பெரும்பணக்காரர்களிடம் இந்திய நாட்டின் மொத்த சொத்தில் 40.5 சதவிகிதத்திற்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.
சீரழிந்து வரும் அரசு மருத்துவ கட்டமைப்பு! பலியாகும் அப்பாவி உழைக்கும் மக்கள்!
ஆண்டிற்கு 100 கோடிக்கு மேல் காப்பீடு என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளுக்கு கோடிகளை அள்ளி கொட்டி கொண்டிருக்கிறது தமிழக அரசு. அதில் பாதி தொகையை அரசு மருத்துவ கட்டமைப்பிற்கு செலவு செய்து இருந்தால் கூட அரசு மருத்துமனையின் தரம் சிறிதாவது உயர்ந்து இருக்கும்.
மகாராஷ்டிரா: மின்சாரம் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக மின் ஊழியர்கள் போராட்டம்!
மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மின் துறையை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒடிசா, தில்லி போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மின் விநியோகம் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது.
மருத்துவ துறையில் வேத மரபுகளைத் திணிக்கும் மோடி அரசு!
இந்தியா முழுவதையும் ஒற்றை பண்பாட்டில் அடக்க முயலும் ஒன்றிய பாசிச மோடி கும்பல் இந்தியா முழுமைக்குமான ஒற்றை மருத்துவமாக ஆயுர்வேதத்தைத் திணித்து வருகிறது. ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம்! என்கிற ரீதியில் "ஆயூர்வேதத்தை தான் ஆதரிப்போம்" என்று முழங்கி வருகிறது.
‘அவுட் சோர்சிங்’ எனும் நவீன கொத்தடிமை முறை!
“அவுட் சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையின் மூலம் வேலையில் சேர்ந்தவர்களை எல்லாம் உடனடியாக நிரந்தரமெல்லாம் செய்ய முடியாது” என கூறுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.