தாராவி மறுசீரமைப்பு திட்டம்: அதானிக்கு டெண்டர் – உழைக்கும் மக்களை நகரைவிட்டு விரட்ட எத்தனிக்கும் மகாராஷ்டிர அரசு!
குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பணியை அரசே செய்து நிறைவேற்றாமல் அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கான திட்டமாக இதை மாற்றி உள்ளது.
நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் இலாபத்தில் பங்கு – மாநில தகவல் ஆணையம் தரும் புதிய அல்வா!
லாபத்தில் பங்கு என்பது முதலாளித்துவம் கண்டுபிடித்த அயோக்கியத்தனம். அதை வாங்கித் தருகிறோம் என அரசு சொல்வது அதனினும் மாபெரும் அயோக்கியத்தனம்.
கூலி அடிமைகளாக மாற்றப்படும் ஆசிரியர்கள்! நொறுங்கி விழுந்து கொண்டிருக்கும் அரசு கல்வி கட்டமைப்பு!
2013 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 80,000-த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படவில்லை. அரசு கல்லூரிகளில் 10,000 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருந்த போதிலும், நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
நவ 19: தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் மத்திய அரசிற்கு எதிராக வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்!
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு ஏதுவாகதான் வங்கிகள் இணைப்பு, நிரந்தர வங்கி பணியிடங்களை தற்காலிக பணியிடங்களாக மாற்றுவது போன்றவற்றை மிகவும் வேகமாக செய்து வருகின்றனர்.
விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்
விசாகப்பட்டினம் எஃகு ஆலையை (விஎஸ்பி) தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுமார் 650 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !
விழிஞ்சம் துறைமுக திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோவதை எதிர்த்து போராடும் மீனவ மக்களை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு இத்திட்டதை பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் என்கின்றனர்.
ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!
அரசு நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், தனியார் கொள்முதலை நோக்கி உந்தித் தள்ளுவதானது திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
கிஃப்ட் ஐஎஃப்எஸ்சி: உயர் கல்வியை ஏகாதிபத்தியங்களின் சந்தையாக்கும் திட்டம்!
ஏற்கனவே இந்தியாவில் உள்ள IIT, IIM, IISER போன்ற கல்வி நிறுவனங்களே பார்ப்பன-உயர் சாதியை சேர்ந்தவர்கள் & மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திற்கான ஒன்றாக உள்ளது. IFSC மூலம் அமைக்கப்படும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் யாருக்காக சேவையாற்றும் என்பதைச் சொல்லத் தேவையில்லை!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!
தனியார்மயம் - தாராளமயம்- உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளே அரசியல் சட்டங்களாகவும் பொருளாதாரத் திட்டங்களாகவும் நீடிக்கும் வரை இப்படிப்பட்ட படுகொலைகளையும் அரசு பயங்கரவாத செயல்களையும் ஒருபோதும் தடுக்க முடியாது .
உலக பட்டினிக் குறியீடு 2022 | 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம்!
உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 82.8 கோடி மக்களில் இந்தியாவில் மட்டும் 22.43 கோடி மக்கள் உள்ளனர். அதானி உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்திற்காகப் போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் இந்தியா பட்டினிக் குறியீட்டில் அதள பாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது.
உழைக்கும் மக்களின் மானியங்களை வெட்டி சுருக்கி கார்ப்பரேட்டுக்களை வாழவைக்கும் மோடி அரசு!
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது என்று கூறிக் கொள்கின்றார்கள். இது உழைக்கும் மக்களை சுரண்டியதால் ஏற்பட்ட வளர்ச்சியே.
விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!
மீனவர்கள் குடும்பங்கள் வீடு இழந்து வாழ்வாதாரத்தை இழந்தாலும் அதானி துறைமுக திட்டத்தை முடித்தே தீரவேண்டும் என்ற குறிகோளோடு இருக்கிறது கேரள அரசு.
ஜி.எஸ்.டி: இந்துராஷ்டிர வரிக் கொள்கை!
அம்பானியும் அதானியும் இராம லெட்சுமணர்கள். ஆர்.எஸ்.எஸ்.யும் பா.ஜ.க.வும் சுக்ரீவன், அனுமன் போன்ற வானரப்படைகளாகக் காட்சியளிக்கும் இந்த இந்துராஷ்டிர ஆட்சியின் வரிக் கொள்கையே ஜி.எஸ்.டி.!
5G அலைக்கற்றையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்ற மோடி அரசு!
பிஎஸ்என்எல் புறக்கணிக்கப்பட்டால் 5ஜி போன்ற தொழில் நுட்பங்கள் மற்றும் மொபைல் சேவைகள் என்பது மேல்த்தட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தமாகிவிடும் என்பதில் ஐயமில்லை.
நிலத்தடி நீருக்கும் கட்டணம் – நாம் என்ன செய்யப் போகிறோம்?
கொஞ்ச காலத்தில் சுவாசிக்கும் காற்றையும் விற்பனைப் பண்டமாக்கி விடுவார்கள் போல. அந்தளவுக்கு முதலாளித்துவ இலாபவெறியானது கூரை மீது ஏறி கொக்கரிக்கிறது.