காசா முழுவதையும் கைப்பற்றத் துடிக்கும் பாசிச இஸ்ரேல் அரசு வீழ்க! | ம.அ.க
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நின்று தோள் கொடுக்க வேண்டியது இந்திய மக்களின் கடமையாகும். பாசிச இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் மோடி அரசுக்கு எதிராக நம்முடைய கண்டன குரல்கள் எழட்டும்!
காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!
சொல்லொணா பசிக் கொடுமையில் வாடிய போதிலும் சொந்த மண்ணைவிட்டுக் கொடுக்க முடியாது என்ற பாலஸ்தீன மக்களின் இன உணர்வு நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.
பட்டினி சாவின் விளிம்பில் பாலஸ்தீனம்!
ஹிட்லரின் வதை முகாம் போல இன்று காசாவை ஒரு திறந்தவெளி பட்டினி வதை முகாமாக மாற்றி இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறது இனவெறி இஸ்ரேல்.
ஈரான் மீதான போர்: அமெரிக்க வல்லரசின் படுதோல்வி
மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் அதன் பேட்டை ரவுடியான இஸ்ரேலுக்கும் சவாலாக வளர்ந்துவரும் ஈரானின் செல்வாக்கையும் அதன் அணு ஆற்றலையும் முடக்குவதும், ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதும்தான் அமெரிக்காவின் நோக்கம்.
டெல்லி: பாலஸ்தீன போராட்டத்திற்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்!
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சேற்றை வீசியும், “இஸ்ரேல் ஜிந்தாபாத், பாலஸ்தீனம் முர்தாபாத்” போன்ற கோஷங்களை எழுப்பியும் சங்கிகள் தாக்கியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு அருகில் கூடி, “ஜெய் ஸ்ரீராம்”, “ஹரஹர மகாதேவ்” மற்றும் “வந்தேமாதரம்” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
பிரான்சிஸ்கா அல்பனேஸ்: போர்க்குற்றங்களுக்கெதிரான போர்க்குரல்
அமெரிக்க அரசை மட்டுமல்ல, அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோரையும் போர்க்குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கான முயற்சிகளை பிரான்சிஸ்கா எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
காசா: நவீன ஆயுத சோதனைச்சாலை
அல்பனேஸின் அறிக்கையானது ஏகாதிபத்திய ஆயுத வியாபாரிகளின் இலாபவெறியையும் போர்வெறியையும் அமெரிக்க – இஸ்ரேல் கும்பலின் நோக்கத்தையும் பட்டவர்த்தனமாக வெளிக்கொண்டு வந்துள்ளது.
ஈரான் மீதான போரைக் கண்டிக்காதது அமெரிக்க அடிமைத்தனமே!
ஈரான் மீதான அமெரிக்காவின் போரையும் மனித குலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் ஈரான் அணு உலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலையும் பாசிச மோடி அரசு கண்டிக்காமல் மௌனம் சாதிப்பது அமெரிக்க அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகிறது.
ஈரான் மீதான போரை நிறுத்து!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
காசா மக்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிய நெதர்லாந்து மக்கள்!
காசாவில் இனப்படுகொலையை நிறுத்த உறுதியான தடைகளை விதிக்க வேண்டும் என்று கோரி நடைபெற்ற போராட்டத்தில் 1,50,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக ஆக்ஸ்பாம் நோவிப் நிறுவனத்தின் இயக்குநர் மிச்சேல் சர்வேஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் போர்வெறிக்கு ஜி7 நாடுகள் ஆதரவு
தன்னை தற்காத்துக்கொள்ள ஈரான் தொடுக்கும் தாக்குதலைக் கண்டிக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், ஈரானில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து வாய்திறக்க மறுக்கின்றன.
பொய்க்குற்றச்சாட்டு, போர் வெறிக் கூச்சல்!
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்ற அமெரிக்காவின் முடிவை அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துள்சி கபார்ட் நிராகரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கவில்லை, இப்போது இருக்கும் நிலையிலிருந்து அது அணு ஆயுதத்தைப் பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான போரைக் கண்டிப்போம்!
ஈரான் மீதான அமெரிக்கப் பதிலிப் போரை அனைத்து வகையிலும் கண்டிக்க வேண்டியது போருக்கு எதிராக உலக அமைதிக்காகக் குரல் கொடுக்கும் அனைவரின் கடமையாகும்.
காசா: இனவெறி இஸ்ரேலின் அறிவிக்கப்படாத வதைமுகாம்
காசாவைத் திறந்தவெளி வதை முகாமாக மாற்றும் நோக்கத்தில் காசா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.
காசா: இழுபறியில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை
தங்களுடைய நெருக்கடியைத் தற்காலிகமாக தீர்த்துகொள்வதற்காக இஸ்ரேலும் அமெரிக்காவும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.