தமிழ் இலக்கணத்தை எவ்வாறு எளிய முறையில் புரிந்து கொள்வது? திருக்குறள் ஒன்றை உதாரணம் காட்டி விளக்குகிறார், பொ.வேல்சாமி.
அந்த மானேஜர் கண்ணைக் காட்ட வேண்டியது, போலீஸ் தலையை ஆட்ட வேண்டியது. அப்புறம் ஒரு மனிதனைக் கொண்டு போய் விட வேண்டியது அவர்கள் இருவரும் அழகாகத்தான் ஒத்துழைக்கிறார்கள்.
மானேஜரின் ரூபிளில் இருப்பதைவிட நமது கோபெக்கிலுள்ள மனித இரத்தம் அதிகம்! நாம் வேறும் காசை மதிக்கவில்லை; அந்தக் காசிலுள்ள இரத்தத்தை, நியாயத்தைத்தான் மதிக்கிறோம்!
கடவுள் இதயத்தில் குடியிருக்கிறார், அறிவிலும் குடியிருக்கிறார் - ஆனால், நிச்சயமாக தேவாலயத்தில் அல்ல; தேவாலயம் கடவுளின் கல்லறை; கடவுளின் சமாதி!
அவர்கள் மனிதர்களைச் சித்திரவதை செய்வார்கள் என்றா நினைக்கிறாய்?... அவர்கள் ஆன்மாவையே நொறுக்குகிறார்கள். அதுதான் மிகுந்த வேதனை தருகிறது. அவர்கள் தமது தீய கரங்களால் உன் ஆத்மாவைத் தொடும்போது...
எனக்கு எல்லாம் பழகிப் போய்விட்டது. மரத்துப் போய்விட்டது. அந்தத் துன்பங்களையெல்லாம் நினைத்துப் பார்ப்பதும் வீணான நேரக் கொலைதான். இதுதானம்மா வாழ்க்கை!
குழந்தைகளுக்காக, ஒரு துண்டு ரொட்டிக்காக, வீட்டு வாடகைக்காக நீ மாடாய் உழைக்கப் போவாய். நாம் எடுத்துக் கொண்ட கருமத்திலிருந்து நீ மட்டுமல்ல, நீங்கள் இருவருமே விலகிப் போய்விடுவீர்கள்.
நெருக்கடி நிறைந்த அந்தச் சின்னஞ்சிறு அறையிலே எல்லா உலகத் தொழிலாளர்களோடும் ஆத்மார்த்தமாகக் கொள்ளும் ஒட்டுறவு உணர்ச்சி பிறந்தது: அந்த உணர்ச்சி தாயையும் கூட அடிமைப்படுத்தியது.
நாம் முட்டாள்கள் அல்ல; நாம் மிருகங்கள் அல்ல... வயிற்றை நிரப்புவதோடு திருப்தி அடைந்துவிடுவதற்காக மட்டுமல்லாமல் கெளரவமுள்ள மனிதர்களாக வாழ விரும்புகிறோம்.
தன் வீட்டுக்கு வரப்போகும் அந்த அதிசயமான, பயங்கரமான மனிதர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அவள் பயத்தால் செத்துக் செத்துத்தான் பிழைத்தாள். அவர்கள்தான் அவளது மகனையும் அந்தப் புதிய மார்க்கத்திலே புகுத்திவிட்டவர்கள்...
நான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றன, தெரியுமா? இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன.
உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத் தீர்த்துவிட்டார். அவர் என்னைப் படாதபாடு படுத்தினார். உன் தாய் மீது கொஞ்சமாவது நீ பரிவு காட்டக் கூடாதா?
ஆலைச்சங்கு அலறிய அந்த அதிகாலையில் அவன் இறந்து போனான். சவப்பெட்டியில் திறந்த வாயோடும், வெறுப்பு நிறைந்து நெறித்துப் போன புருவங்களோடும் அவன் கிடந்தான். அவனது மனைவியும் மகனும் நாயுமாகச் சேர்த்து அவனைப் புதைத்தார்கள்.
"மிகவும் காலப் பொருத்தமான புத்தகம்" என்று அவர் (லெனின்) கூறினார், இது தான் அவருடைய ஒரே பாராட்டுதல். இது எனக்கு எவ்வளவோ பெரிதாக இருந்தது. - மாக்சிம் கார்க்கி.
எல்லாவிதமான காதல் பற்றியும் புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் இரண்டு முதியவரின் காதலை அழகாகச் சொல்லும் புத்தகத்தை நான் படித்ததில்லை. இந்த நாவல் சொல்கிறது.