privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

போர்...! எப்போது குண்டு விழுமோ என்று அஞ்சியபடியே எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறேன் கால்கள் களைத்து இரைந்து கேட்கிறது ஓய்வை உழைக்க ஓடிய கால்களும் ஓடியாடி விளையாடிய கால்களும் உயிர் பிழைக்க ஓடியபடியே இருக்கின்றன அப்பாவின் அப்பா இறந்து போனதை அவரின் கால்தழும்புகள் தான் அடையாளமாய் தெரியப்படுத்தின அப்பா அடிக்கடி சொல்லுவார் வீடில்லாத வாழ்க்கைகூட வீண் இல்லை நாடில்லா வாழ்க்கை நரகம் என்பார் எப்போதும் அவர் உடலில் எதையாவது கிறுக்கியபடி இருப்பார் ஏனென்று கேட்டால் குண்டுகளில் சிக்கி இறந்து போனால்...
ரஷ்ய புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவையொட்டி, ரஷ்ய திரைப்பட இயக்குனரான செர்ஜி ஐஸன்ஸ்டின், ஜான் ரீடு எழுதிய ”உலகை குலுக்கிய பத்து நாட்கள்” புத்தகத்தை மையமாக கொண்டு இயக்கிய சினிமா அக்டோபர்
அந்தச் சனியன்கள் அவர்களை நேருக்கு நேராக விரட்டியது. எனினும் மலையைப்போல் நின்றார்கள். தம்பிகள்! கொஞ்சம் கூட அசையாமல் அஞ்சாமல் நின்றார்கள்...
ஆரியம் விதைக்காது விளையும் கழனி. வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 10-ம் பாகம் ...
குடிமக்கள் சொல்கிறோம் குடி வேண்டாமென்று! எதற்குத் திறக்கிறாய் மதுக்கடையை? மக்களின் கருத்தை மதிக்காதற்குப் பெயர் மக்களாட்சியா! பச்சையப்பன் கல்லூரி மாணவர் உடம்பில் வழியும் ரத்தம் உலகுக்கே உணர்த்துகிறது இது குடியாட்சி அல்ல பச்சையான தடியாட்சி!
அவசர அவசரமாக தூக்கிலிட்டு அறைகுறையாக வெட்டியெறிந்து சட்லெஜ் நதியில் கரைத்தார்கள் இதோ அவன் மெரினா கரையில் துளிர்க்கிறான்... அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில் வீரமரணம் எய்திய ஆசாத்தை வெறிகொண்டு முடித்தார்கள். இதோ அவன் நெடுவாசலில் வந்து நிற்கிறான்.
கால்கள் இல்லையாவது? இப்போது தானே இவன் விமானம் ஓட்டினான், அதுவும் நன்றாகவே ஓட்டினான்! ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 51 ...
சிந்தனை செய்வது, பேசுவது, எழுதுவது, உரையாடுவது, சிகிச்சை செய்வது, வேட்டையாடுவது கூட கால்கள் இல்லாமலே முடியும். ஆனால் அவன் விமானி ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 26 ...
என்ன விலை செலுத்த நேரினும் சரியே, வலிமையை எல்லாம் ஈடுபடுத்தி நீந்திக் குறிக்கோளை அடைய வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 39 ...
கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதே எனக்கு மறந்து போயிற்று. கிராமத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தபோது, அந்தச் சூழ்நிலையில் உயிரோடுகூட வாழ முடியாது என்று உணர்ந்தேன்...
“மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.
அழகான சிவப்பு ரோஜாக்களுடன் புன்னகை பூக்கும் பாதைகளினூடே காசா பிள்ளைகளை பெறுகிறது அதன் குழந்தைகள் அதிகாலைப் பனியில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் காசா மீண்டும் கருவுற்றிருக்கிறது ஆனால் காசாவின் கருவுக்கல்லவா சதிகாரர்கள் குறி வைத்திருக்கிறார்கள் காசாவின் தாய்மார்கள் எல்லாம் கதி கலங்கிப் போயிருக்கிறார்கள் ரத்தம் வழிந்த கைகளின் ஊடாக குழந்தைகள் மீது போர்வைகளைப் போர்த்துகிறார்கள் ஆனால் சிலரோ ராக்கெட்டுகளை அல்லவா அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்களின் பாசாங்குத்தனத்தால் தாய்மார்களின் செவிப்பறைகள் கிழிந்து போயிருக்கின்றன ஆனாலும் நீதி ஆடையின்றி அம்மணமாய் உலாவிக் கொண்டிருக்கிறது எங்களுக்கு ஏன் என்று புரியவில்லை உங்களது பெரும் வெறுப்பால் எமது...
வரிசையில் நின்று காலைக் கடனை அடக்கி கை, கால் உழைப்பை முடிக்கி ‍செல்லாத நோட்டை கொடுத்தது 'இல்லாத' நோட்டை வாங்கத்தானா?
நானும் ஒரு தண்டனையை எதிர்நோக்கித்தான் இருக்கிறேன். அனேகமாக, அவர்கள் என்னையும் சைபீரியாவுக்குத்தான் அனுப்புவார்கள். அப்படிச் செய்தால், அவனை அனுப்பிய இடத்துக்கே என்னையும் அனுப்பும்படி நான் கேட்டுக்கொள்வேன்.".. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 56-ம் பகுதி ...
மயிலே மயிலே என்றால் கடைகள் மூடாது மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது சிக்கலை எப்படி தீர்ப்பது? சிந்திக்க அழைக்கிறது மக்கள் அதிகாரம்!

அண்மை பதிவுகள்