Sunday, May 4, 2025
கானாங்கெளுத்தியும், வவ்வாலும் மீனில் மட்டுமா பார்த்தீர்கள்! எங்கள் ஊனிலும் பார்த்தீர்கள். காரப்பொடியும், ஓட்டாம்பாறையும் எங்கள் உடம்பில் தின்றீர்கள்! வஞ்சிரத்தை எம் மீனவப் பெண்களின் நெஞ்சுரத்தில் பார்த்து பயந்தீர்கள்.
நெல்லு வளர்த்துக் கொடுத்தோம் வகை வகையா தின்னீங்க மாடு வளர்த்துக் கறந்தோம் மடிப்பாலு குடிச்சீங்க. ஆடு வளர்த்துக் கொடுத்தோம் கறிக்குழம்பு ருசிச்சீங்க கோழி வளர்த்துக் கொடுத்தோம் நாட்டுக்கோழி ரசிச்சீங்க நாங்க மாரடைச்சி கிடந்தோம் யாரு வந்து தடுத்தீங்க?
செம்பு அலுமினியம் பாக்சைட் தங்கம் கரி... இப்படி நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அனுபவிக்கும் பொருள் ஒவ்வொன்றிலும் கலந்திருக்கிறோம் நாங்கள் !
மேலாண்மை வாரியம் நிறுத்தி காவிரி ரத்தம் மறித்து கைக்காசையும் செல்லாதாக்கிப் பறித்து நாத்தாங்கால் மூச்சை நெறித்து பச்சை படுகொலை செய்யுது பா.ஜ.க. பாடை கட்டுது அ.தி.மு.க. ஊரையே அறுவடை செய்ய அம்மா, சின்னம்மா.
“விதையுங்கள், கொள்ளையன் அறுவடை செய்ய அனுமதிக்காதீர்! செல்வம் கண்டெடுங்கள், எத்தர்களை எட்ட நிறுத்துங்கள்! ஆடைகளை நெய்யுங்கள், சோம்பேறி அணியவிடாதீர்! ஆயுதம் செய்யுங்கள், நீங்களே ஏந்துங்கள்!” - கவிஞர் ஷெல்லி
தேவதாசிகளின் அவலத்தை சொல்லும் அனுதாரா குரவ்-வின் கவிதை. ஆங்கிலம் வழி தமிழாக்கம் - புதிய கலாச்சாரம், பிப். மார்ச் 1995 இதழிலிருந்து..............
சீதை சுவிஸ் வங்கியில், அனுமன் கையில் பார்ட்டிசிபேட்டரி கணையாழி, ராமன் அம்பை விடுவதோ பாரத வங்கியில்! என்னடா இது இராமாயணம்?
செல்பி நாயகனின் அதிரடி அறிவிப்புக்கு, அடிப்படை இல்லாமல் இல்லை ! ராமனை வைத்து அரசியல் செய்தவன், ராமாயணத்தை வைத்து வித்தை காட்டினான் ! பின்பு மாட்டை வைத்து மடக்கினான் ! அதன் மூத்திரத்தை வைத்து முழங்கினான் !
’புதிய சூரியனுக்கு அனுமதி இல்லை' - நவீன மராத்தி தலித் கவிதைகலின் ஆங்கில நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகள்.
வரிசையில் நின்று காலைக் கடனை அடக்கி கை, கால் உழைப்பை முடிக்கி ‍செல்லாத நோட்டை கொடுத்தது 'இல்லாத' நோட்டை வாங்கத்தானா?
வாழ்க்கை எனும் சாணைக்கல்லில் தீட்டியது இந்தப் பாடல் எப்படி இது நடுநிலை வகிக்கும்? எப்படி இது எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும்?
சூரியன் கண்கசங்கினான் சிதறினான் வழிந்தோடியிருந்தான். கிராமத்துக்கு என்ன வந்தது? நல்ல அறுவடையா? பேரன்மார்கள் தழுவிக் கொண்டார்கள். பறித்த ஆயுதங்களைப் பத்திரப்படுத்தினார்கள். காயங்கள் இருக்கத்தான் செய்தன. செய்திகள் பரவின.
நம்ப ஊர் ஆத்துல ஒருவன் மணலைத் திருடுகிறான் எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன், படிக்குற உன் பள்ளிக் கூடத்தை ஒருவன் மூடுகிறான் எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன்.
உரிமையைக் கேட்டால் போய் கடல்நீரை குடிநீராக்கு - என்பது சு. சாமியின் திமிர்வாதம், கேட்பதற்கே தமிழினத்திற்கு தகுதியில்லை - என்பது சமஸ் திமிரின் பிடிவாதம்.
கோமாதாவுக்கு ஒன்றெனில் குதித்துவரும் காவிகளே... உங்கள் கர்நாடகா ஆவிகளுடன் கலந்து பேசி, காவிரியைத் திறந்துவிடத் தடுப்பது பாக்கிஸ்தான் சதியா? பார்ப்பனிய சதியா?

அண்மை பதிவுகள்