Sunday, October 26, 2025

மயிலாடுதுறை: ஆதிக்கச் சாதிவெறியர்களால் தாக்கப்பட்ட தலித் இளைஞர்!

0
தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படம் ஒட்டியிருப்பதைப் பார்த்த அக்கும்பல் அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக வசைபாடியுள்ளது. இரு சக்கர வாகனத்தின் சாவியைக் கொண்டு தமிழரசனின் முதுகில் கிழித்து கொடூரத் தாக்குதல் நடத்தியதுடன், தடுக்க வந்த நண்பர்களையும் தாக்கியுள்ளது.

உ.பி-யில் தலித் இளைஞரை அடித்துக் கொன்ற கொடூரம்!

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் அக்டோபர் 1-ஆம் தேதியன்று தலித் இளைஞரை ஆதிக்க சாதிவெறி கும்பல் அடித்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 1

நோய்த்தொற்றுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொருளாதார நெருக்கடியினாலும் போதிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளாமல் ஒரு கட்டத்தில் உயிருக்கே அச்சுறுத்தலான நிலையில் தூய்மைப் பணியாளர்கள் கைவிடப்படுகின்றனர்.

நெல்லை: 9-ஆம் வகுப்பு தலித் மாணவருக்கு அரிவாள் வெட்டு

தலித் மற்றும் மறவர் ஜாதி மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் அருகே அமர்வது தொடர்பாகப் பிரச்சினை மற்றும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 25 அன்று பள்ளிக்கு தன்னுடைய புத்தகப் பையில் அரிவாளோடு வந்த மறவர் சாதி மாணவன் தலித் மாணவனை வெட்டி இருக்கிறான்.

மயிலாடுதுறை இளைஞர் சாதி ஆணவப் படுகொலை: தி.மு.க. அரசே குற்றவாளி!

0
தான் தலித் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தாலும், தன்னுடைய மகள் தலித் இளைஞனை காதலித்து திருமணம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிவெறி காரணமாகாவே, விஜயா தனது மகன்கள் மூலம் வைரமுத்துவை ஆணவப் படுகொலை செய்துள்ளார்.

சென்னை: தலித் சிறுவன்மீது சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்!

0
சரவணனும் அவனுடைய சகோதரர் லோகேஷ் இருவரும் சாதிவெறி தலைக்கேறி சிறுவனின் ஆடையைக் கழற்றி நிர்வாணப்படுத்தி, சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சரவணன் என்பவன் சிறுவனின் சாதியைக் குறிப்பிட்டு இழிவான முறையில் வசைபாடிக் கொண்டே அடித்துள்ளான்.

காலம் உருவாக்கியத் தலைவர் மலைச்சாமி

ஊர் பெயர்களில் சாதிய அடையாளங்களை துடைத்தெறிவதற்காக சக மாணவர்களை இணைத்துக்கொண்டு போராடினார். பச்சேரி-யை (பள்ளர் மக்கள் வசிக்கும் பகுதி) இமானுவேல் நகர், பெரியார் நகர் என்றும், பறச்சேரி-யை டாக்டர் அம்பேத்கர் நகர் என்றும், சக்கிலியச்சேரி-யை விடுதலை நகர் என்றும் பெயர் மாற்றம் செய்வதற்காக போராட்டங்களை முன்னெடுத்தார்.

உத்தரப்பிரதேசம்: தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சாதிய அடக்குமுறைகள்!

0
பா.ஜ.க-வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்கள் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காகவும், பொதுசாலையில் ஆடு அசுத்தம் செய்ததற்காகவும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ராஜஸ்தான்: தலித் சிறுவனை மரத்தில் தொங்கவிட்டு அடித்த சாதிவெறியர்கள்

இந்தியாவிற்கு ‘சுதந்திரம்’ கிடைத்து 79 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், எட்டு வயது குழந்தையை ஆதிக்கச் சாதியினரின் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதும், தண்ணீர் பானையை தொட்டதற்காக மரத்தில் தொங்கவிட்டு அடித்ததும் சாதியக் கொடூரத்தின் உச்சமாகும்.

பஞ்சமி நில உரிமை மீட்பு: காலத்தின் கட்டாயம்!

10 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட பஞ்சமி நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன என்பது கடந்து போகும் செய்தி அல்ல. அது பட்டியலின மக்களின் உரிமைகள் எப்படிக் கேட்பாரற்று பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு முக்கிய சான்று.

கோபி – சுதாகரை அச்சுறுத்தும் சாதிவெறியர்கள் | Society Paavangal | வீடியோ

கோபி - சுதாகரை அச்சுறுத்தும் சாதிவெறியர்கள் Society Paavangal | தோழர் சங்கர் - தோழர் பிரகாஷ் https://youtu.be/5_LDqyKS8v8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கிருஷ்ணகிரி: தலித் இளைஞரை காரணமின்றித் தாக்கிய சாதி வெறியர்கள்

ரித்திஷ் மற்றும் அவரது நண்பர் மீது நடத்தப்பட்ட சாதிய கும்பல் தாக்குதலை கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கவின்களை காவு வாங்கும் ஆதிக்கச் சாதி சங்கங்களும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும்

ஆதிக்கச் சாதி சங்கங்களினாலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலாலும் கவின்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். சின்னதுரைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சேதுபந்த வித்வான் யோஜனா திட்டம்: உயர்கல்வி நிறுவனங்களைக் காவிமயமாக்கும் சதி!

0
தேசியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருப்பது போல மூடநம்பிக்கைகளை அறிவியலுடன் இணைக்கும் வகையிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் அதிகரிக்கும் சாதிய வன்முறைகள் – தீர்வு என்ன?

எவ்வளவுதான் படித்திருந்தாலும், உயர்பதவிக்குப் போய் தன் நிலையை உயர்த்திக்கொண்டாலும், சாதிய மனோபாவம் கொண்ட நடுத்தர வர்க்கத்திடம் வெற்று சாதி கௌரவம், ஆண்ட சாதி புத்தி ஆகியவை கூடவே ஒட்டிக்கொண்டு வருகிறது.

அண்மை பதிவுகள்