Tuesday, January 27, 2026

தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா | இ-போஸ்டர்கள் | தரவிறக்கம்

“சாதி-மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்கிற முழக்கத்தின் கீழ் டிசம்பர் 28 அன்று நடைபெறவுள்ள தோழர்கள் ராதிகா, ரவி ஆகியோரின் புரட்சிகர மணவிழா பேனர்கள் உயர் தெளிவுத் திறனுடன் (ஹை ரெசொலூஷன் – High Resolution) கீழ்க்கண்ட இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படத்திற்கும் கீழே உள்ள...

கரூர்: சாதி வெறியால் அரசுப் பள்ளி சமையலர் பணிநீக்கம் செய்யப்பட்ட கொடூரம்!

0
“பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடைதான் வழங்கப்படுகிறது. அதனையும் சாதிக்கு ஏற்றாற்போல் வழங்க வேண்டியதுதானே? அருந்ததியர் சமூகத்தில் பிறந்தது தீண்டாமையா?” என்று பணிநீக்கம் செய்யப்பட்ட நிரோஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆணவப் படுகொலைக்கெதிரான இயக்கம்: பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கெதிரான எமது பண்பாட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சி…!

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நமது போராட்டமென்பது, “சாதி-மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தின் கீழ், பண்பாட்டுப் போராட்டமாக அமையட்டும். சாதி ஒழிப்புப் போராட்டத்தை இத்திசையில் தொடங்கி முன்னெடுப்போம்! இந்தப் பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுகமாக தோழர்கள் ராதிகா - ரவி மணவிழாவை அமைத்துள்ளோம்.

தோழர்கள் ராதிகா – ரவி மணவிழா: ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுக விழா!

இந்த மணவிழாவிற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அனைவரும் பங்கேற்குமாறு மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக அழைக்கிறோம்.

மணவிழா அழைப்பிதழில் கொலையுண்டவர்களின் படங்களா…?

வழக்கமான குல தெய்வங்களைப் போல், குலத்திற்கான குறியீடுகளாகவோ குலப் பெருமைக்கான அடையாளங்களாகவோ ஆணவப்படுகொலைக்கு பலியானவர்கள் இங்கு முன்னிறுத்தப்படவில்லை. மாறாக, பார்ப்பனிய – சாதிய எதிர்ப்பின் குறியீடுகளாக அடையாளங்களாக இவர்களை முன்னிறுத்துகிறோம்.

சாதி, மதம் கடந்து திருமணம்: பெண் குடும்பத்தினர் கொலைவெறித் தாக்குதல்

0
15 பேருடன் வந்த பெண்ணின் உறவினர்கள், விடுதிக்குள் புகுந்து கொலைவெறியுடன் ராகுலை வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவரது அம்மா, அப்பா, மாமா ஆகியோரரையும் கொடூரமாக வெட்டிவிட்டு, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மகாராஷ்டிராவில் சாதி ஆணவ படுகொலை! | தோழர் அமிர்தா

மகாராஷ்டிராவில் சாதி ஆணவ படுகொலை! நெருங்கிய நண்பனையே படுகொலை செய்த சாதிவெறியன்! தோழர் அமிர்தா https://youtu.be/-neZY-GKG2k காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பஞ்சமி நில மீட்பு முயற்சி… சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல் | தோழர் ராமலிங்கம்

பஞ்சமி நில மீட்பு முயற்சி... சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல் தோழர் ராமலிங்கம் https://youtu.be/XPeCe25-Umg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தஞ்சை: கபிஸ்தலம் – தலித் மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்குதல்! | ம.அ.க கண்டனம்

கபிஸ்தலம் மேட்டுத்தெருவில் தலித் மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு செல்லும் சாலையின் நடுவில் ஆதிக்க சாதி வெறியர்கள் வாகனத்தை நிறுத்தி, மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞர்களை கடுமையாக அவர்கள் தாக்கியுள்ளனர்.

அரியானா: கூடுதல் டி.ஜி.பி பூரன்குமார் சாதிய வன்கொடுமையால் தற்கொலை! | ம.அ.க கண்டனம்

பூரன் குமார் எழுதிய ஒன்பது பக்க "இறுதிக் குறிப்பில்", தான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும், டி.ஜி.பி கபூர், எஸ்.பி. பிஜார்னியா உட்பட பல மூத்த காவல்துறை மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தன்னை சாதி ரீதியாக துன்புறுத்தியதாகவும் தொழில் ரீதியான பழிவாங்குதலுக்கு ஆளாக்கியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அம்பேத்கர் புகைப்படம் வைத்ததற்காக தலித் இளைஞரைத் தாக்கிய ஆதிக்கச் சாதி வெறியர்கள்

தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படமும் நீல சிவப்புக் கட்சி கொடியும் ஒட்டியிருப்பதைப் பார்த்து அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, இது யாரு வண்டி என்று கேட்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக பேசி தாக்கியுள்ளனர்.

திண்டுக்கல் ஆணவப்படுகொலை – தமிழ்நாட்டில் தொடரும் ஆணவ படுகொலைகள்!

திருமணமான நாள் முதலிருந்தே ஆர்த்தி குடும்பத்தினரிடமிருந்து அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. அக்டோபர் 12-ந் தேதி பால் கறவைக்காக ராமசந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பெண்ணின் தந்தை சாதிவெறியன் சந்திரன் வழிமறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான்.

மயிலாடுதுறை: ஆதிக்கச் சாதிவெறியர்களால் தாக்கப்பட்ட தலித் இளைஞர்!

0
தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படம் ஒட்டியிருப்பதைப் பார்த்த அக்கும்பல் அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக வசைபாடியுள்ளது. இரு சக்கர வாகனத்தின் சாவியைக் கொண்டு தமிழரசனின் முதுகில் கிழித்து கொடூரத் தாக்குதல் நடத்தியதுடன், தடுக்க வந்த நண்பர்களையும் தாக்கியுள்ளது.

உ.பி-யில் தலித் இளைஞரை அடித்துக் கொன்ற கொடூரம்!

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் அக்டோபர் 1-ஆம் தேதியன்று தலித் இளைஞரை ஆதிக்க சாதிவெறி கும்பல் அடித்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 1

நோய்த்தொற்றுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொருளாதார நெருக்கடியினாலும் போதிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளாமல் ஒரு கட்டத்தில் உயிருக்கே அச்சுறுத்தலான நிலையில் தூய்மைப் பணியாளர்கள் கைவிடப்படுகின்றனர்.

அண்மை பதிவுகள்