சென்னை அரசுக் கருவூலம் முற்றுகை ! செய்தி – படங்கள் !
போராட்டத்தையொட்டி பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு விடுமறை விடப்பட்டது. சாலை மறியல், வங்கியை முற்றுகையிடுவது என ஒரு மணிநேரம் போர்க்குணமாக போராட்டம் நடைப்பெற்றது.
பணம் மதிப்பு நீக்கமா ? சட்டபூர்வக் கொள்ளையா ? ஐ.ஐ.டியில் APSC பிரச்சாரம்
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இந்திய இயக்குனரும் ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருக்கும் நாசிகெட் மோர் (Nachiket Mor) இந்த பணத்தின் மதிப்பை நீக்கும் நடவடிக்கையிலும் பரிவர்த்தனை வங்கி அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஊழல் முதலைகளை அம்பலப்படுத்திய கரூர் தோழர்களுக்கு சிறை !
ஊழலில் திளைக்கும் அதிகார வர்க்கத்தை கைது செய் என்ற பேசினால் மோடியின் ஆசி பெற்ற காவல்துறைக்கு கோபம் வருகிறது. மோடியின் நடவடிக்கை யாருக்காக என்று இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா?
மல்லையா குதிரையும் மாநகராட்சி பூங்காவும்
மக்களிடம் நிலம் பறிக்கப்பட்ட கதை வரலாற்றில் முந்தையது. ஆறுகளும், கனிமவளங்களும் இதே போன்று அரசின் சட்ட திட்டங்களால் கருப்பாக அல்லாமல் வெள்ளையாகவே தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய கும்பலுக்கு மடைமாற்றப்பட்டிருக்கிறது.
மோடி அறிவிப்பால் மக்கள் படும்பாடு ! பு.மா.இ.மு தெருமுனைக் கூட்டம்
நாம் வங்கியில் போட்ட பணம், ஏதோ நம் பெயர் போட்டு அக்கவுண்டில் பூட்டி வைத்திருக்கிறார்கள், நாம் சென்றால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என படித்தவர்கள் கூட நினைக்கிறார்கள். ஆனால், நாம் வங்கியில் போட்ட பணத்தை எடுக்க கூடாது என உத்தரவு போட்டிருக்கிறார் மோடி.
தர்மபுரி : டியூசன் போர்வையில் வன்புணர்ச்சி செய்த சிவக்குமார் !
போலிசும், நீதி மன்றமும், அரசு உயர் அதிகாரிகளும் இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளாக இருக்கும் போது. இவர்களிடத்திலேயே நீதி கேட்பது, தன்டிப்பது என்பது சற்றும் சாத்தியமில்லை.
கழிப்பறைய கட்டாம கையெழுத்து எதுக்கு ஆபிசர் ?
பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப மல கழிப்பறைகள் இல்லை. தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும் ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே உள்ளார்.
வர்தா நிவாரணப் பணியில் பு.மா.இ.மு
எப்போதெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் முதல் ஆளாக களத்தில் இறங்கி செயலாற்ற அரசு வருவதில்லை. மக்களே தங்கள் பாதிப்புகளை சரி செய்ய வேண்டிய அவலநிலையில் இருக்கிறார்கள்
டினா டாபியின் காதலும் காவி கும்பலின் வயிற்றெரிச்சலும்
“லவ் ஜிஹாத்” திரைக்கதையில் இடம் பெறும் “அப்பாவி இந்துப் பெண்ணை, கூலிங் கிளாஸ் போட்டு ஏமாற்றுதல் போன்ற திடுக்கிடும் திருப்பங்களுக்கு டினா டாபியிடம் வழியில்லை – ஏனென்றால், ஐ.ஏ.ஸ் தேர்வில் நாட்டிலேயே முதலாவதாக வருமளவிற்கு விவரமானவர்.
இந்த உலகம் பார்த்துப் பழகியதுதான் எங்கள் அம்மணம்
தேவதாசிகளின் அவலத்தை சொல்லும் அனுதாரா குரவ்-வின் கவிதை. ஆங்கிலம் வழி தமிழாக்கம் - புதிய கலாச்சாரம், பிப். மார்ச் 1995 இதழிலிருந்து..............
பெண் கல்வி : பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா !
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்விக்கென பெண்கடவுளையும் சரஸ்வதி பூஜையையும் இருப்பதாக மேச்சிக்கொள்ளும் பார்ப்பனியத்தின் கள்ளப் பரப்புரைகளை இந்த புள்ளிவிவரம் கேலிக்குள்ளாக்குகிறது.
ஏ.டி.எம் தருணங்கள் : பாரதி தம்பி
மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த இவர்கள், இருக்கும் வேலைவாய்ப்பையும் பறித்துக்கொண்டுவிட்டார்கள். பல்வேறு சிறு, குறு தொழிற்சாலைகள் தாக்குப் பிடிக்க முடியாமல் தங்கள் தொழிலாளர்களின் ஒரு பகுதியினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டன.
பள்ளிக்கரணை சாலை விபத்து : போலீசு – அதிகாரிகளை பணிய வைத்த பெண்கள் !
ஒவ்வொரு தெருவையும் கடக்கும் போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்களிடம், தினம் தினம் உயிர்பலி கொடுக்கப்போகிறோமா? அல்லது போராடி இரண்டில் ஒன்று பார்க்கப்போகிறோமா? வண்டியில் அடிபட்டு சாவதை விட போராட்டத்தில் போலீசிடம் அடிவாங்குவது மேல்.
பா.ஜ.க கருப்பு பணத்தை அம்பலப்படுத்திய அபிஷேக் கைது !
இதே போன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து பதிவிடுவது கிரிமினல் குற்றம் என அரசியல் சட்டம் 144-ஐ பயன்படுத்தி அறிவித்திருக்கிறார் மத்தியபிரதேச மாநில இந்தூர் மாவட்ட ஆட்சியர்.
சென்னை பல்கலை மாணவர்களின் தினமலர் அலுவலக முற்றுகை !
இந்த போராட்டங்களுக்கு பிறகும் மறுப்பு செய்தி வெளியிடாத தினமலருக்கு பாடம் புகட்டும் வகையில் 24-11-16 அன்று அதிரடியாக தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட மாணவர்கள் ஒன்றுகூடி முடிவு செய்தனர்.

























