திமுக குறித்தும், கருணாநிதி குறித்தும் காடுவெட்டி குரு முதலான அற்பங்கள் அநாகரீகமாக பேசுவதுதான் அவரது கவலை. அது போல தன்னை மட்டுமல்ல மற்ற கட்சிகளையும் நாகரீகமாக பாமக பேசவேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள்.
அன்புமணி ராமதாஸ் தனது கைதை கருணாநிதியின் "ஐயோ" கைதுடன் வேறு ஒப்பிடுகிறார். ஆனாலும் இந்த கைப்புள்ளையின் கைது குறித்து தி.நகரில் ஒரு காக்கா கூட கத்தவில்லை.
ஜெயலலிதா, "நீங்கள் வழக்கு போடச் சொன்னீர்கள், போட்டு விட்டோம், அதை எதிர் கொண்டு நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்வீர்கள்' என்று ராமதாசுடன் செல்லமாக வார்த்தை விளையாட்டு ஆடுகிறார்.
33 வயது நிரம்பிய அப்பெண்ணால் சினிமாவுக்கு போக முடியாது, ஒரு கடை கண்ணிக்கு போக முடியாது, எந்த விழாவுக்கும் ஏன் இழவுக்கும் கூட போக முடியாது.
ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க கோரி மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சென்னையில் நடத்திய மே தினப் பேரணி, போராட்டம் குறித்த செய்திப் பதிவு - படங்கள்!
ஈழக்கொலைக்களத்தை இயக்கி நடத்தியதே இந்திய அரசுதான்! இந்த உண்மையை உரைக்காமல் இந்திய மேலாதிக்கம் எதிர்க்காமல், ஈழத்தைக் காப்பாற்ற இந்தியாவிடமே வலியுறுத்தும் தில்லிவாய்க்கால்களின் மோசடிகள் முள்ளிவாய்க்காலை விட பயங்கரமானவை!
பாமக இராமதாசின் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பாக உயர்நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
"எங்களை சாதி பெயரைச் சொல்லி அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தையில் பேசினர். ஜட்டியை அவிழ்த்து தலையில் போட்டு கொண்டு கைலியை தூக்கி வாங்கடி வாங்கடி என கூச்சலிட்டனர்."
அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் போலீசாரின் பொய்வழக்குகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
சமீபத்தில் டெல்லியில் 5 வயது சிறுமியை கொடூர பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய இருவர் அதற்கு சற்று முன்னர்தான் இணையத்தில் போர்னோ தளத்தை பார்வையிட்டுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை பெண்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், சுற்றுலா வரும் இசுலாமிய செல்வச் சீமான்கள், குறைந்த நாட்கள் இங்கு தங்கினாலும், பாலியல் உறவுக்காக குறுகிய கால ஒப்பந்த திருமணங்கள் செய்து கொள்கின்றனர்.
இலவச அரிசியோ, ஒரு ரூபாய் இட்டிலியோ இவையனைத்துமே மக்களின் கோபம் எல்லை மீறாமல் இருப்பதற்காக வீசப்படும் எலும்புத் துண்டுகள், உரிமைகளை கேட்கும் மனித நிலைக்கு உயர்ந்து விடாமல் இருத்தி வைக்கும் தடைகள்.
இன்றும் பெரும்பான்மை வன்னியர்கள் பெரியாரை மதிப்பவர்கள் என்பதால்தான் பாமக, வன்னியர் சங்க சாதி வெறியை அவர்கள் ஏற்கவில்லை. அதுதானே ராமதாஸ் மற்றும் குருவுக்கு எரிச்சலைத் தருகிறது.
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்திய மருத்துவ ஆராய்ச்சிகளில் 2,644 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கல்கியால் 'வாசகர்கள்' என்றும், சுஜாதாவால் 'விசிறிகள்' என்றும் இந்துஸ்தான் லீவர், கிளாக்ஸோ, போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் 'மார்க்கெட்' என்றும் அழைக்கப்படும் இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின்................















