“பொதுவாக இயந்திரங்கள் முன்முடிவுகளோடு நடந்து கொள்ளாது என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இயந்திரங்கள் மனிதர்களிடமிருந்து பெறப்படும் விவரங்களின் அடிப்படையிலேயே பயிற்றுவிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு முன் முடிவுகள் இருக்குமல்லவா?”
இவர்கள் புதுமைப் பெண்கள் அல்ல; போராடும் பெண்கள். போராடும் கடமையை உணர்த்தும் வலிமையான பெண்கள். அந்தப் போராட்டத்தில் தங்களது உயிரையும் வாழ்வையும் இழந்த பெண்கள்.
மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், கடந்த 25.10.2017 அன்று மாலை தனது முகநூல் பதிவில் “ இனி கல்லூரிக்கு என்னால் வரமுடியாது. என்னை மிகவும் இழிவு படுத்துகிறார்கள். எனது படிப்பையும் முடிக்க விடமாட்டார்கள். நான் சாகபோகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு, தனது மரணவாக்குமூலத்தை வீடியோவாக தனது மொபைலில் பதிவிட்டிருக்கிறார்.
நெல்லையில் குடும்பமே தீயில் கருகி பலி ! கந்துவட்டியை கட்டுப்படுத்தாத அரசுதான் குற்றவாளி ! தீயில் கருக்க வேண்டியது மக்களுக்கு எதிரான இந்த அரசுக் கட்டமைப்புதான் !
தான் வளர்த்த பயிர்கள் கருகியதைக் கண்டு நெஞ்சு வெடித்து செத்த தஞ்சை விவசாயிகளாலும், பொறியியல் படித்த மகனுக்கு வேலை கிடைக்காத நிலையில் அவனது கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றி தூக்கில் தொங்கிய தாய்மார்களாலும் தான் இசக்கிமுத்துவின் முடிவைப் புரிந்து கொள்ள முடியும்.
இயங்காத வைப்பர்கள் எடுபடாத விளக்குகள் பிடி கொடுக்காத பிரேக்குகள் சரிப்படாத கியர் பாக்சுகள் உருப்படாத டயர்கள் இத்தனையோடும் போராடி மக்களை காத்தவர்கள் அதிகாரவர்க்கத்துடன் போராடி தன்னை இழந்திருக்கிறார்கள்.
படத்துல மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் குறை சொல்லப்படுவதை கண்டிப்பதாக பாஜக தமிழிசை பொங்குறாரு. ஒருவேளை போன 2014 பாராளுமன்றத் தேர்தல்ல மோடி தமிழகத்திற்கு வந்த போது நடிகர் விஜய் கோவை விமான நிலையத்தில் காத்திருந்து பார்த்தவர்தானேன்னு ஒரு இளக்காரம் தமிழிசைக்கு இருக்கலாம்.
எந்த பண்டிகையா இருந்தாலும் உழைப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. தோ... இன்னிக்கு வந்தேன். இந்த சைக்கிளுக்கு பஞ்சர் போடுறேன். இன்னொரு சைக்கிள ரெடி பன்னிட்டேன். எந்த நாளா இருந்தாலும் என் கட தெறந்து இருக்கும்.
லெபனானில் இருக்கும் டபிள்யு மோட்டார்ஸ் நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது – இல்லை செதுக்கியிருக்கிறது. இதன் முகப்பு விளக்குகளில் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.
உற்பத்தியில் தானியங்கி முறை என்பது புதிய போக்கல்ல. மனிதக் கரங்களை இயந்திரக் கரங்களால் மாற்றீடு செய்வது முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொடர்ந்து நிகழும் போக்காகும்.
இந்தியாவின் அதி உயர் மருத்துவமனைகள் அதிகரிக்கும் காலத்தில் இந்தியாவின் ஏழைக மக்கள் அதி உயர் எண்ணிக்கையில் மரணமடைந்து வருவதையும் காண்கிறோம்.
எங்கிருந்தோ வரும் தேவர்கள் எனது கதிராமங்கலத்தை துளையிடுவதை எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன். மூலதன கூர்ம அவதாரங்கள் எனது நெடுவாசலை பாயாய் சுருட்டிக் கொண்டு ஓட வருகையில் வீதிக்கு வந்து விரட்டினால் நான் நரகாசுரன்.
உணவு உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு ஐந்து குழந்தைகளிலும் உயரத்திற்கு குறைவான எடையில் ஒரு குழந்தை இருக்கிறது.
சுதை, கோயில், கோபுரம் ஏன் சாமி சிலையில் கூட நம் சக்தி இருக்கும் போது நாம் தொட்டு பூசை செய்தால் மட்டும் சாமி தீட்டாகிவிடுமாம் இந்த அயோக்கியத்தனத்திற்கு பெயர் ஆகமமாம்.
கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல, தமிழக மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளையும் மருத்துவக்கல்லூரிகளையும் அபகரிப்பதுதான் இந்த நீட் தேர்வின் நோக்கம்.

























