சென்னை மதுரவாயல் பகுதியில் இருக்கும் ரேசன் கடை மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் 100 மீட்டருக்குள்ளாகவே இருந்தது அந்த டாஸ்மாக் கடை. ஓராண்டுக்கு முன்புதான், ஓம்சக்தி நகரின் முனையில் முளைத்தது அந்த தகர சீட்டுகளால் ஆன டாஸ்மாக் கடை. சின்ன நொளம்பூர், நொளம்பூர், ஓம்சக்தி நகர் மக்களுக்கு வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அந்த டாஸ்மாக் கடை வழியாகத்தான் செல்ல வேண்டும். அன்றாடத் தேவைக்கு மளிகைப் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு செல்வதானாலும் சரி, இதர வேலைகள் அனைத்திற்கும் சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிக்க வேண்டுமானாலும் சரி, வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்புவதானாலும் சரி அந்தக் கடையை கடந்து போகாமல் இருக்க முடியாது. சில நேரங்களில் ஓம்சக்தி நகர் இடுகாட்டிலிருந்து எரிந்தும் எரியாமலும் நாயால் கவ்வி இழுத்துவரப்பட்ட பிணங்களுடன், குடிகாரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பொதுச்சாலையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பர்.
விடியற்காலை ஐந்து மணியிலிருந்து மதுரவாயல் போலீசு ஆசியுடன் கடை செயல்பட்டுக் கொண்டிருந்தது. பெருவாரியான உழைக்கும் மக்களை கொண்டுள்ள சின்ன நொளம்பூர், ஓம் சக்தி நகர் பகுதி மக்களின் தினக்கூலியை பெருமளவு தின்று கொழுத்துக் கொண்டிருந்தது அந்த பச்சை வர்ணம் பூசப்பட்ட டாஸ்மாக் கடை. கூவம் நதியின் கரையில் அமைந்திருந்த அந்த டாஸ்மாக் கடை வழியாக பெண்கள் தனியே செல்ல பயந்தனர். வாகனத்தில் செல்வோர் அச்சத்துடன் பயணித்தனர். அடிக்கடி விபத்துகளும், திருட்டுச் சம்பவங்களும் நடைபெற்றன. பகுதி மக்கள் குமுறினர்; கொந்தளித்தனர்; மீட்பரைத் தேடிக்கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அந்த பிரச்சனையில் நுழைந்தது மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. ஏற்கனவே தமிழகத்திலேயே முதன்முறையாக மக்களை திரட்டி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய அழிவிடைத்தாங்கி போராட்ட அனுபவமும், ஆயிரக்கணக்கில் மாணவர்களைத் திரட்டி பச்சையப்பன் கல்லூரியில் டாஸ்மாக்கை நொறுக்கிய அனுபவமும் பு.மா.இ.மு.விற்கு இருந்தது. மக்கள் அதிகாரம் தொடர்ச்சியாக டாஸ்மாக் பிரச்சனைக்காக போராடியும் மேலப்பாளையூர் உட்பட சில பகுதிகளில் நிரந்தரமாக டாஸ்மாக் கடையை இழுத்து மூடியும் வந்துள்ளது. இவர்கள் இணைந்து மக்களை அணிதிரட்டினர். மீட்பர் வேறு யாருமல்ல உழைக்கும் மக்களாகிய நீங்கள்தான் என உணர்த்தியவாறு உழைக்கும் மக்களால் ஆன டாஸ்மாக் எதிர்ப்புக் குழு (நொளம்பூர் பகுதி) கட்டியமைத்தனர்.
மக்கள் அதிகாரத்தின் ஏப்ரல் 20 டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகையினைத் தொடர்ந்து மே 2-ம் தேதி பகுதி மக்கள் ஒன்று திரண்டு மே–5-க்குள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து மே 5-ம் தேதி தமிழகம் முழுக்க மக்கள் அதிகாரம் டாஸ்மாக்கிற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் டாஸ்மாக் எதிர்ப்பு குழுவினர்.
இந்தப் போராட்டத்தில்தான் சத்யா அம்மாவின் மண்டை உடைக்கப்பட்டது. நொளம்பூர் பகுதியை சார்ந்த பள்ளி மாணவர் ஆகாஷ் போலீசார் தாக்கியதில் மயக்கமடைந்தார். பெண்கள், குழந்தைகள் உட்பட பலரும் போலீசின் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். போராட்டத்திற்கு முன்பாகவே மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியனின் கை, கால்கள் உடைக்கப்பட்டன. நொளம்பூர் பகுதி பு.மா.இ.மு செயலாளர் தோழர் கணேசன் கடுமையாக தாக்கப்பட்டார். பு.மா.இ.மு பச்சையப்பன் கல்லூரி மாணவர் வாசு கை முறிக்கப்பட்டது.
பகுதி உழைக்கும் மக்களின் பங்களிப்புடன் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மண்டபத்திற்கு வெளியிலும் போராட்டம் நடைபெற்றது. இன்னும் கூடுதலாக அதன்பின்னர் ஓட்டுக்கேட்டு வந்த அ.தி.மு.க, பகுஜன் சமாஜ், சி.பி.எம் கட்சியினரை ஊருக்குள் விடாமல் மக்கள் விரட்டியடித்தனர். மதுரவாயல் தொகுதியிலேயே குறைவான வாக்குப்பதிவு நடந்த இடமாக இருந்து தேர்தலையும் புறக்கணித்துள்ளனர் இவர்கள். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த்து இவர்களின் போராட்டம். சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தின் விளைவாகவும், தமிழகம் முழுக்க மக்கள் அதிகாரமும், பல்வேறு அமைப்பினரும், உழைக்கும் மக்களும் இணைந்து நடத்திய போராட்டங்களின் விளைவாகவும் 19-6-2016 அன்று மதுரவாயல் ரேசன்கடை டாஸ்மாக் மூடப்பட்டது.
நேற்று காலையில் டாஸ்மாக்கில் இருந்து சரக்குப்பெட்டிகள் லாரிக்குள் ஏற்றிக் கொண்டிருந்தபோது பு.மா.இ.மு தோழர் சாரதியுடன் உழைக்கும் மக்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். பார்வையிட்ட ஒவ்வொருவருக்கும் போராட்டத்தின்போது தாங்கள் வாங்கிய அடிகளும், போலீசின் அராஜகமும்தான் நினைவிற்கு வந்தன. கடையை காலி செய்து கொண்டிருந்தவர்களிடம் விசாரிக்கும்போது எல்லாம் “நீங்க செஞ்ச போராட்டத்தாலதான் கடையை மூடுறாங்க” என தெரிவித்தபோது அந்த வலி இன்பமாக மாறிப்போனது.
போராட்டத்தில் கலந்துக்கொள்ளாது போராட்டத்தை கொச்சைப்படுத்திய ஒவ்வொருவரும் பு.மா.இ.மு சாரதியையும், கணேசனையும் சந்தித்து வருத்தம் தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ஓம்சக்தி நகரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோதுதான் வெற்றிவேல் செழியனை போலீசு அடித்து இழுத்து சென்றிருந்தது. அப்போது தங்களால் போலீசை தடுத்து அவரை மீட்க முடியவில்லை என்பதை உண்மையான வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டனர் அப்பகுதி மக்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த அபிராமி அம்மா நம்மிடையே அவரின் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். அருகிலிருக்கும் குடியிருப்பில் வீட்டுவேலை செய்துவருகிறார் அவர். அவர் வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் ஒருபோதும் இவரிடம் ஒருவார்த்தை பேசியதில்லை. சிறிதும் சட்டை செய்ததில்லை. ஆனால் வேலைக்கு விடுப்பு போட்டுவிட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டதன் மறுநாளே இவரிடம் அந்த வீட்டம்மா முதன்முறையாக பேசி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல் நேற்று வேலைக்கு சென்றபோது டாஸ்மாக் கடை மூடப்பட்டதை சொன்னபோது வேகமாக ஓடிவந்து இவரை கட்டியணைத்து வாழ்த்துகளை தெரிவித்தாராம் அந்த வீட்டம்மா. மேலும், “நீங்க வாங்கின அடி, உதை வீணாகலை. நீங்க ஜெயிச்சிட்டீங்க” என சொன்னதை நம்மிடம் சொல்லி நெகிழ்ந்து போனார் அபிராமி அம்மா. மேலும் இந்தப் போராட்டம் எங்கள் பகுதியின் டாஸ்மாக் பிரச்சனையை மட்டும் தீர்க்கவில்லை, சமூகத்தில் எங்களுக்காஅன அங்கீகாரத்தையும் அளித்துள்ளாதாக சொல்லி ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
டாஸ்மாக் கடைக்கு எதிரில் கடைபோட்டுள்ள கிரில் கதவு செய்யும் கடைக்காரரிடம் “என்னன்ணே எதிரிலே இருந்தது. போய் தண்ணி குடிச்சிட்டு வர மாதிரி அப்பப்போ சாப்ட்டுட்டு இருந்தீங்க இப்ப மூடிட்டாங்க, இனி என்ன பண்ணப்போறீங்க?” என கிண்டலாக பகுதியைச் சார்ந்த ஒருவர் கேட்டதற்கு, “இது மூடனதுல எனக்கும் சந்தோசம்தான். இதுக்கு முன்னாடி சம்பாதிக்கிறதுல 300, 400 ரூவா இதுக்கே போய்டும். ஆனா இனிமே அப்படி பணம் போகாது, வேற கடைக்கு தேடிப்போனாலும் 100ரூவா தாண்டாது. என்னவிட என் வீட்டுக்காரிக்குதான் சந்தோசம்” என சொல்லியுள்ளார்.
ஆனால் இந்தக் கடை மூடப்பட்டது மட்டுமே சாராயப் பிரச்சனையை முழுமையாக தீர்த்துவிடாது என்பதை இப்பகுதி மக்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். இந்த பகுதியில் கடை மூடப்பட்டால் வேறு பகுதிக்கு குடிக்கச் செல்வர். அதனால் ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடினால் மட்டுமே நிரந்த தீர்வு கிடைக்கும் என்பதுதான் இவர்களின் நிலைப்பாடாக உள்ளது. அதோடு குடிகாரர்களை மீட்டெடுக்க மாநிலம் முழுவதும் மறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும் எனவும் கோரி வருகின்றனர். இந்தக் கடை மூடப்பட்டது மட்டுமே தீர்வல்ல ஆனால் அதே நேரத்தில் மக்கள் அதிகாரத்தின் போராட்டங்கள் இல்லாமல் இந்தத் தீர்வும் நமக்கில்லை என்பதை உணர்ந்தே அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகிறது டாஸ்மாக் எதிர்ப்புக்குழு (நொளம்பூர் பகுதி) மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.
அருகிலிருக்கும் மற்ற பகுதி மக்களை பார்த்து, “எங்க இடத்துல நாங்க ஒண்ணு சேர்ந்து கடையை மூடிட்டோம். நீங்க எப்போ ஒண்ணு சேரப்போறீங்க” என கேட்கின்றனர் டாஸ்மாக் எதிர்ப்பு குழுவினர் ஒவ்வொருவரின் முகத்திலும் தாங்கள் போராடியதன் பெருமிதமும், அடுத்தடுத்த பிரச்சனைகளுக்கு போராட தயாராக உள்ள போர்க்குணமும் தெரிந்தது.
மோடி :ஹலோ சகோதரா ஹிட்லர்! இன்று என்னுடைய ஆட்சியின் இரண்டாமண்டு நிறைவடைகிறது. இரண்டே ஆண்டுகளில் என்னுடைய இந்தியா உன் ஜெர்மனியைப் போல் இருப்பதைப் பார்!
டொனால்ட் ட்ரம்ப்: நண்பா! நான் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பொறுத்திருங்கள். பிறகு இரண்டே மாதங்களில் ஹிட்லர் பாணி தான்! சவுதி அரசர் சல்மான்: வா.. ஹாபி.. நாங்கள் சவுதியில் ஹிட்லர் பாணி தான் அமல்படுத்துகிறோம்.. ஹிட்லர்: ஒரு நாள் மக்கள் உங்களுக்கெதிராக கிளர்ந்தெழுவார்கள். பின்னர் எல்லாமே என்னுடைய பாணியிலேயே முடிவுக்கு வரும்.நன்றி : Rebel Politik Arun
—————————————————————–
புதிய கல்விக் கொள்கை – 2015
புதிய கல்விக் கொள்கை – 2015
உலக வர்த்தக கழகத்தின் ‘ஒப்புதல்’ பெற்ற புதிய கல்விக் கொள்கை – ஆர்.எஸ்.எஸ்-ன் கழிவு
நன்றி : Rebel Politik Arun
——————————————————————————
கருப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி
கருப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி
இந்திய அரசு: இவை தனித்தனியான நிகழ்வுகளே. ஊடகங்களின் மிகைப்படுத்தல்களே, இனவெறி அல்ல!
நன்றி : Rebel Politik Arun
———————————————————
ஏராளமான கேள்விகள் கேட்பதால் பேரா. சாய்பாபா, அருந்ததி ராய் இருவரும் ‘தேச விரோதிகள்தான்’
பேரா. சாய்பாபா மற்றும் அருந்ததி ராய் : ஏராளமான கேள்விகள் கேட்பதால் இவர்கள் ‘தேச விரோதிகள்தான்’!
நன்றி : Rebel Politik Arun
————————————————————–
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அழிவு கம்பெனி.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அழிவு கம்பெனி.
எச்சரிக்கை – அழிவு வேலை நடைபெறுகிறது.
வேலையின் தன்மை: பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் ஜனநாயகத் தனமை அழிப்பது.
எல்லா பார்வையாளர்களும் மனுஸ்மிதி இராணியின் அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும்.
காக்கி டவுசர் அணிய வேண்டும்.
காரண – காரியம் மற்றும் மனித தன்மை போன்றவை கண்டிப்பாக தடை செய்யப்படுகின்றன.நன்றி : Rebel Politik Arun
————————————————————-
மோடி : கார்ப்பரேட் இந்தியாவின் புதிய விற்பனைப் பிரதிநிதி
மோடி : கார்ப்பரேட் இந்தியாவின் புதிய விற்பனைப் பிரதிநிதி
நன்றி : Rebel Politik Arun
————————————————————–
தாத்ரி : முகமது அக்லக்- மீள் கொலை!
தாத்ரி : முகமது அக்லக்- மீள் கொலை!
கோமாதாவுக்கு ஜெய் !
ஐயா, நாம் ஏற்கனவே தாத்ரியில் கொன்ற மாட்டிறைச்சி உண்டவரின் தலையை நான் கொய்துவிட்டேன்!
நன்றி : Rebel Politik Arun
————————————————————–
ஹிந்து பாசிசம் : இந்தியாவின் அரச முகம்.
ஹிந்து பாசிசம் : இந்தியாவின் அரச முகம்.
நன்றி : Rebel Politik Arun
வினவு கேலிச்சித்திரம் – பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்.
”நாம் கட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை. நல்ல வேட்பாளர்களாகப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஊழல் செய்யும் கட்சிகளை ஓட்டுப் போடுவதன் மூலம் தண்டித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதே போல், ஒரு சில அதிகாரிகள் லஞ்ச ஊழல் புரியும் அயோக்கியர்களாக இருக்கலாம். ஆனால், நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள். சகாயம், உமா சங்கரைப் போல. அவர்களைப் போன்ற அதிகாரிகளைப் போற்ற வேண்டும். இங்கே சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது. ஒருவேளை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறு செய்தால் நீதி மன்றத்தை நாடலாம். கட்டாயம் நீதி வெல்லும். சத்ய மேவ ஜெயதே. ஜெய் ஹிந்த்”.
என்றெல்லாம் நம்மைச் நம்பச் சொல்கின்றன முதலாளிய ஊடகங்கள். இந்த இன்பக் கனவு அவ்வப் போது கலையும் போதெல்லாம் யாராவது ஒரு அண்ணா ஹசாரே – அரவிந்த் கேஜ்ரிவாலை களமிறக்கி கழுத்தில் ஈரத் துணியைச் சுற்றுகின்றன ஊடகங்கள் – கத்தியோடு பின் தொடர்கிறார் மோடி.
உண்மை என்ன?
நாம் ஒரு மேட்ரிக்ஸ் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே அரசு எப்படி நடக்கிறது, அதிகாரிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், அரசியல்வாதிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், அரசியல் கட்சிகள் எப்படிச் செயல்படுகின்றன, நீதிபதிகள் எப்படிச் செயல்படுகின்றனர், நீதி மன்றங்கள் எப்படிச் செயல்படுகின்றன, அங்கே கிடைக்கும் “நீதி” எத்தகையது, அரசின் திட்டங்களும் நிதிக் கொள்கைகளும் யாருக்காக, எப்படி வகுக்கப்படுகின்றன – எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன, இவற்றையெல்லாம் யார் இயக்குவது என்பதைக் குறித்த உண்மைகள் மிக அரிதான தருணங்களில் ’கசிந்துள்ளன’.
சுமார் ஏழாண்டுகளுக்கு முன் அவ்வாறு வெளியானது தான் நீரா ராடியா நடத்திய பேரங்களின் இரகசிய தொலைபேசி உரையாடற் பதிவுகள்.
இதோ இப்போது அதனினும் அசிங்கமான சில உண்மைகளை அவுட்லுக் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
எஸ்ஸார் டேப்ஸ்
படம் நன்றி : அவுட்லுக்
அல்பசித் கான் என்பவர் எஸ்ஸார் குழுமத்தில் 1999 முதல் 2011-ம் ஆண்டு வரை தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். ரூயா குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் உள்ள எஸ்ஸார் குழுமம் எரிவாயு, இரசாயனம், தொலைதொடர்பு உள்ளிட்ட துறைகளில் கால் பதித்து இதே துறைகளில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தைப் போட்டியாளராக உள்ளது.
எஸ்ஸார் நிறுவனத்தில்1999-ம் ஆண்டு பணிக்குச் சேரும் அல்பசித் கானுக்கு 2001-லிருந்து 2006-ம் ஆண்டு வரை இரகசியமான ஒரு பணி ஒப்படைக்கப்படுகிறது. எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த பி.பி.எல் செல்பேசி சேவையைப் பயன்படுத்தும் சில முக்கியமான மத்திய அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், அப்போதைய பாரதிய ஜனதாவின் மத்திய அமைச்சர்கள் மற்றும் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் அம்பானி சகோதரர்களின் தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக பதிவு செய்வதே அந்த இரகசிய உளவு வேலை.
அதை திறம்படஅல்பசித் கானும் நிறைவேற்றுகிறார். பதிவு செய்யப்பட்ட இரகசிய உரையாடல்களை தனது முதலாளிகளிடம் ஒப்படைத்ததுடன், தனது எதிர்கால பாதுகாப்பு கருதி தனியே பிரதிகள் எடுத்து பாதுகாத்துள்ளார். பின், உளவு வேலைக்கான தேவை முடிந்து போன நிலையில் 2011-ல் வேறு சில சில்லறைக் காரணங்களை முன்வைத்து அல்பசித் கான் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்.
அதன் பிறகு அல்பசித் கான், தன் வசம் உள்ள உரையாடற் பதிவுகளின் பிரதிகளோடு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சுரேன் உப்பலை நாடுகிறார். பதிவு செய்யப்பட்ட இரகசிய உரையாடல்களை கேட்டு அதிர்ந்து போன சுரேன் உப்பல், உடனடியாக பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும் தகவல் தெரிவிக்கிறார். மேலும், எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு சட்டப்படியான நோட்டீஸ்களையும் அனுப்புகிறார்.
இதற்கிடையே சுரேன் உப்பலை சரிக்கட்டி இரகசியப் பதிவுகளை அமுக்கும் முயற்சியில் ரூயா சகோதரர்கள் நேரடியாக இறங்கியுள்ளனர். நேரடியாக பேரம் பேசிப் பார்த்தும் அவர் மசியாததால், தமது முன்னாள் ஊழியர் அல்பசித் கானை சரிக்கட்டி விடுகின்றனர். அதைத் தொடர்ந்து அல்பசித் கான் வழக்கறிஞர் சுரேன் உப்பல் உடனான தொடர்புகளை முறித்துக் கொள்கிறார். என்றாலும், தன் வசம் அல்பசித் கான் ஏற்கனவே வழங்கிய ஆதாரங்களை ஊடகங்களின் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார் சுரேன் உப்பல்.
என்ன சொல்கின்றன அந்த உரையாடல்கள்?
அம்பானி சகோதரர்கள்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி சதீஸ் சேத்திடம் 01.12.2002 அன்று பேசிய முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் தொடர்பான வழக்கு ஒன்றிற்காக பிரமோத் மகாஜன் மூலமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சரிக்கட்டுவது தொடர்பாக பேசியுள்ளார். மேலும் ரிலையன்ஸ் குழுமத்தின் மற்றுமொரு உயரதிகாரியும், ராஜ்ய சபை உறுப்பினருமான பாரிமன் நாத்வாதியிடம் பி.எஸ்.என்.எலின் செல்பேசிக் கட்டனங்கள் நிர்ணயிப்பதில் ரிலையன்ஸ் எவ்வாறு பங்காற்றியது என்று சதீஸ் சேத் விவரித்துள்ளார்.
தகவல் தொடர்புத் துறையின் முன்னோடியாக அன்று விளங்கிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் எப்படி படிப்படியாக சீர்குலைக்கப்பட்டது, அதற்கு தேசபக்தி வேடம் போடும் பாரதிய ஜனதா எப்படி அடியாள் வேலை பார்த்தது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. தரம்தான் தனியார் சேவை என்பது தான் தனியார்மய தாசர்களின் வாதம். ஆனால் அந்த தரத்தின் தரத்தை அம்பலப்படுத்துகிறது இந்த உரையாடல்.
மேலும், தனது போட்டி நிறுவனமான பி.பி.எல்லின் நிறுவனர் ராஜீவ் சந்திரசேகருக்கு 100- 200 கோடி ரூபாயை கொடுத்து செல்பேசி நிறுவனங்களின் கூட்டமைப்பை (COAI) ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமான முறையில் பிளவு படுத்தும் திட்டம் குறித்து அம்பானியும் சதீஸ் சேத்தும் விவாதித்துள்ளனர்.
அதே போல், 22.11.2002 அன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு உயரதிகாரியான சங்கர் அத்வாலிடம் பேசிய அம்பானி, தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் உள்ள சில கோப்புகளை களவாடியதன் மூலம் தாம் அரசுக்குச் செலுத்த வேண்டிய 1,300 கோடி ரூபாய் வரியைத் தவிர்த்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுரேன் உப்பால் படம் நன்றி : அவுட்லுக்
மேலும், அப்போது தொலைத்தொடர்பில் ரிலையன்ஸ்சுக்கு போட்டியாளராக விளங்கிய சுனில் மிட்டலின் ஏர்டெல் நிறுவனத்திற்கு சாதகமாக அன்றைய பாரதிய ஜனதா அரசின் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சர் பிரமோத் மகாஜன் எவ்வாறெல்லாம் தரகு வேலையில் ஈடுபட்டார் என்பது பல்வேறு உரையாடல்களின் மூலம் அம்பலமாகியுள்ளது. மகாஜன் தமக்கு கைக்கூலியாக இருப்பதற்கு பரிசாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிருபர் ஷிவானி பட்னாகரின் கொலை வழக்கில் மகாஜனுக்கு சாதகமாக நீதிமன்றத்தை வளைக்க அம்பானி நேரடியாக உதவி செய்துள்ளார்.
மேலும், அன்றைய பாரதிய ஜனதா அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக், ரியலைன்சுக்கு ஆதரவாக பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களை சீரழிப்பது குறித்து அம்பானிகள் நேரடியாக அமைச்சருக்கு வகுப்பே எடுத்துள்ளனர். கோதாவரி இயற்கை எரிவாயு – கே.ஜி பேசின் வழக்கில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அம்பானிகளுக்கு ஆதரவாக சரிக்கட்டியுள்ளனர். பாரதிய ஜனதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் பிரதமர் அலுவலகத்திலும் நிதியமைச்சகத்திலும் பணிபுரிந்த மத்திய அரசின் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் துணையோடு பட்ஜெட் அறிக்கையையே தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளனர். அமர் சிங்கின் துணையோடு பாரளுமன்ற உறுப்பினர்களை விலை பேசியுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பல்வேறு வழக்குகளுக்காக விலைக்கு வாங்கியுள்ளனர். பாராளுமன்ற நிலைக்குழுக்களில் யார் உறுப்பினராக இருக்கலாம், அது என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதையெல்லாம் அம்பானியே நேரடியாக தீர்மானித்துள்ளார்.
தொகுப்பாக பார்த்தால்,
இங்கே நிலவும் ஜனநாயகம் மக்களுக்கானதல்ல. நிதி, நீதி, நிர்வாகம், இராணுவம், போலீசு என்று அரசு கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு அங்கமும் முதலாளிகளுக்கானதாகவே இருப்பது துலக்கமாக வெளிப்பட்டுள்ளது. மக்களின் இறுதி நம்பிக்கையாக உள்ள நீதிமன்றங்களோ அம்பானிகளின் கழிவறைகளாக உள்ளன. தேர்தலில் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து அனுப்பும் பாராளுமன்றமோ அம்பானிகள் மலம் துடைத்துப் போடும் குப்பைத் தொட்டியாக உள்ளது.
மேற்கண்ட உரையாடல் பதிவுகள் வெளியாகி வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் 56 இன்ஞ்ச் மார்பு கொண்ட பிரதமர் வாய் திறக்கவில்லை. “தின்னவும் மாட்டேன் தின்ன விடவும் மாட்டேன்” என்று வாய்கிழிய பேசி அதிகாரத்தைப் பிடித்த மோடி உண்மையில் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் தரகு முதலாளிகளின் கைக்கூலி என்பது எண்ணற்ற சந்தர்ப்பங்களில் ஏற்கனவே அம்பலப்பட்டிருக்கிறது. அதானியின் விமானத்தில் பறக்கிறவர் மக்களுக்கு விசுவாசமாக இருப்பார் என்று யாரையும் இனி நம்ப வைக்க முடியாது.
தேர்தல், காங்-பா.ஜ.க, இதர கட்சிகள், பாராளுமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை அனைத்தும் முதலாளிகளின் சேவைக்கு காத்திருக்கும் அடிமைகள் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதால் நாம் மாற்றை இந்த அமைப்பில் தேட முடியாது. மக்களை திரட்டி புதிய அமைப்பை படைப்போம்!
தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல்களை ரத்து செய்ததன் மூலம் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனக் காட்டிக் கொண்டிருக்கிறது, தமிழகத் தேர்தல் ஆணையம். ஓட்டிற்குப் பணம் என்ற கழிசடை தேர்தல் பண்பாடு விளையாடியதில் தமிழகத்தின் மற்ற தொகுதிகளுக்கும் அரவக்குறிச்சிக்கும் அதிக வேறுபாடில்லை என்பது தமிழக மக்களுக்கும் தெரியும்; தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும். ஆனாலும், பணப் பட்டுவாடா நடந்ததைக் கையும் களவுமாக, ஆதாரத்தோடு பிடிக்க முடிந்ததால்தான் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டதாகச் சிரிக்காமல் கூறுகிறது, தேர்தல் ஆணையம்.
கரூர்-அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதனின் உதவியாளர் சுதர்சன் வீட்டில் நடந்த சோதனையின்போது பெட்டிபெட்டியாகக் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள். (உள்படம்: அன்புநாதன்)
பணப் பட்டுவாடாவைத் தடுக்கக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் 94 தொகுதிகளில் தலா 6 பறக்கும் படை; மற்ற தொகுதிகளில் தலா ஐந்து பறக்கும் படை; அவற்றுக்கு உதவியாக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 25 மண்டலக் குழுக்கள் – என தமிழகமெங்கும் 20,000 அரசு அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்ட 5,639 மண்டலக் குழுக்கள்; இப்பறக்கும் படைகளைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 அல்லது 3 எஸ்.பி.க்களைக் கொண்ட குழு; இவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரி தலைமையில் 9 பேர் கொண்ட வருமான வரித் துறையின் பறக்கும் படை – என உதார் காட்டி வந்தது, தேர்தல் ஆணையம். ஆனால், இந்தப் படைகளெல்லாம் மற்ற 232 தொகுதிகளில் நடந்த பணப் பட்டுவாடாவைப் பிடிக்க முடியாமல் எதைச் சொரிந்துகொண்டு நின்றன என்பதற்கு சர்வ வல்லமை பொருந்தியதாகக் கூறப்படும் தேர்தல் ஆணையம்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி தொகுதிகளுக்கான மேலிடப் பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரசேகர குமார் நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் முடியும் வரை, அவர் அந்த இரண்டு தொகுதிகளில்தான் தங்கியிருக்க வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதிமுறை. ஆனால், அவரை தருமபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் ஏற்காட்டில் தங்க வைத்திருக்கிறார்; தேர்தலுக்கு முதல்நாள் திருவண்ணாமலை, சிதம்பரம் எனச் சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்து அனுப்பி வைத்திருக்கிறார். மேலிடப் பார்வையாளர் ஆன்மீகப் பயணத்தில் திளைத்த சமயத்தில், அ.தி.மு.க. இந்த இரண்டு தொகுதிகளிலும் பணப் பட்டுவாடாவை நடத்தி முடித்ததாகவும்; தி.மு.க.வும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அம்பலப்படுத்துகிறது, நக்கீரன் இதழ்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பணப் பட்டுவாடாவைத் தடுக்க நியமிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பறக்கும் படைகள் அ.தி.மு.க.வின் ஐந்தாம் படைகளாக வேலை செய்தன என்பது மட்டுமல்ல, தேர்தல் ஆணையமே அ.தி.மு.க.வின் ஏஜெண்டாகச் செயல்பட்டதை அன்புநாதன் மற்றும் கண்டெய்னர் விவகாரங்கள் அம்பலப்படுத்துகின்றன.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மர்ம கண்டெய்னர்கள்: ஜெயா-சசி கும்பல் கொள்ளையடித்துப் பதுக்கி வைத்த பணத்தைப் பாதுகாக்கும் போலீசு.
அ.தி.மு.க.வின் பணப் பட்டுவாடா மையமாக அன்புநாதன் இருந்ததும்; அவர் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் பணத்தைக் கடத்திச் செல்வதற்கு கரூர் மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொடங்கி லோக்கல் இன்ஸ்பெக்டர் வரை மாவட்ட நிர்வாகமே உடந்தையாகச் செயல்பட்டதும் தேர்தல் ஆணையம் அறியாத ஒன்றல்ல. அதேசமயம், அ.தி.மு.க.விற்குள்ளும் அதிகாரிகள் மட்டத்திலும் நடந்த உள்குத்து காரணமாகத்தான் அன்புநாதன் வீட்டைச் சோதனையிட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டது.
சோதனையின் போதும், அதன் பிறகும் அன்புநாதன் விவகாரத்தை உப்புக்குப் பெறாத ஒன்றாக அமுக்கிவிடுவதில் அ.தி.மு.க. அரசும் தேர்தல் ஆணையமும் கூட்டுக் களவாணிகளாவே செயல்பட்டன. அன்புநாதன் வீட்டில் 250 கோடி ரூபாய் அளவிற்குப் பணம் இருந்ததாக எதிர்க்கட்சிகள் இன்றுங்கூடக் குற்றஞ்சுமத்துகின்றன. அன்புநாதன் குடோனில் கண்டெடுக்கப்பட்ட 12 பணம் எண்ணும் இயந்திரங்கள் இக்குற்றச்சாட்டை நிரூபிக்கும் சாட்சியங்களாக உள்ளன. ஆனால், தேர்தல் ஆணையமோ அன்புநாதனிடமிருந்து வெறும் பத்து இலட்ச ரூபாய்தான் கைப்பற்றப்பட்டதாகக் கூறி அம்பலப்பட்டு, பிறகு நான்கு கோடியே சொச்சமும் சில ரப்பர் பேண்டுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறிச் சமாளித்தது.
இந்தச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்தைக் குறைத்துக் காட்டும்படியும், அங்கு கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமிரா பதிவுகளை அழித்துவிடும்படியும் அரசு ஆலோசகரும் முன்னாள் டி.ஜி.பி.யுமான ராமானுஜம் மற்றும் டி.ஜி.பி. அசோக்குமார் ஆகியோர் கரூர் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேவுக்குக் கட்டளையிட்டதாகக் கசிந்துவந்த செய்தி குறித்தோ, கைப்பற்றப்பட்ட பணத்தை அன்புநாதனிடம் திருப்பிக் கொடுத்துவிடும்படி கரூர் மாவட்ட ஆட்சியர் கூறியது குறித்தோ, வந்திதா பாண்டேவைக் கொலை செய்ய முயற்சி நடப்பதாகக் கூறி ஒருவர் துப்பாக்கிகளோடு சரண் அடைந்தது குறித்தோ, தேர்தல் ஆணையம் எந்தவொரு விசாரணையும் நடத்தவில்லை.
அதேசமயம், அன்புநாதன் மீது ஓட்டுக்குப் பணம் கொடுத்தது தொடர்பான குற்றவழக்குப் பதியப்படாமல், இந்திய அரசின் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற மொன்னையான வழக்கு மட்டுமே தொடரப்பட்டது. இந்த வழக்கிலும் அன்புநாதனைக் கைது செய்யாத அ.தி.மு.க. போலீசு, அவரைத் ‘தலைமறைவாக’ச் செல்லும்படி வழியனுப்பி வைத்தது. முன்ஜாமீன் கேட்டு அன்புநாதன் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்த வழக்கில், அதனை எதிர்த்து வாதிட வழக்குரைஞரை நியமிக்காமல் தேர்தல் ஆணையம் ஒதுங்கிக் கொண்டது. எதிர்த்து வாதிட வேண்டிய அரசு வழக்குரைஞரோ அன்புநாதனின் வழக்குரைஞராக நடந்து கொண்டார். உயர்நீதி மன்றமும் அன்புநாதன் கேட்டுக்கொண்டபடி, அன்புநாதனுக்கு முன்ஜாமீன் அளித்தது. அரசு, உயர்நீதி மன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் கூட்டுக் களவாணித்தனம் காரணமாக, மிகத் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய வழக்கில் நீதி கேலிக்கூத்தாக்கப்பட்டது.
காரைக்குடி அ.தி.மு.க. தலைமை அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தைப் பறிமுதல் செய்யும் போலீசு.
அன்புநாதனின் கூட்டாளி மணிமாறன் மற்றும் அன்புநாதனின் உதவியாளர் சுதர்சன் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டாலும், அவை குறித்த விவரங்கள் வெளியிடப்படாமல் அமுக்கப்பட்டதோடு, அவர்கள் மீது வழக்கும் பதியப்படவில்லை. இது போன்று, சசிகலாவின் தாய்மாமன் தங்கவேலு, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது உறவினர் கோழி பாலு, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் செல்லூர் ராஜுவின் பினாமிகள், சிட்லபாக்கம் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன், பொள்ளாச்சி வேட்பாளர் ஜெயராமனின் உறவினர் டாக்டர் மகேந்திரன், தருமபுரி அ.தி.மு.க. நிர்வாகி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டுப் பல அ.தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும் பண்ணைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளும் எவ்வித மேல் நடவடிக்கைகளும் இன்றி அமுக்கப்பட்டன.
இத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டிபோட்டுக் கொண்டு ஓட்டுக்குப் பணம் கொடுத்தன என்றாலும், அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடாதான் மையப்படுத்தப்பட்ட ரீதியில் பரவலாகவும் பிரம்மாண்டமானதாகவும் அரசு இயந்திரத்தின் துணையோடும் நடத்தப்பட்டது. கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே உள்ள அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையும், இரவு நேரத்தில் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு நடத்தப்பட்ட பணப் பட்டுவாடாவும் அரசு இயந்திரம் அ.தி.மு.க.வின் கைக்கூலியாகப் பயன்படுத்தப்பட்டதை நிறுவுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியிலிருந்து 3.40 கோடி ரூபாய்; காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.பகுதிச் செயலர் ரவியிடமிருந்து 4 இலட்ச ரூபாய்; பட்டுக்கோட்டை அருகேயுள்ள திட்டக்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கோவிந்தராஜ் வீட்டிலிருந்து 49 இலட்ச ரூபாய்; தற்பொழுது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் நிலோஃபர் வீட்டிலிருந்து 14 இலட்ச ரூபாய்; சென்னை மாநகராட்சியின் 169-ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.கே.ஜெயச்சந்திரன் வீட்டிலிருந்து 40 இலட்ச ரூபாய்; ஆரணி தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் யுவராஜிடமிருந்து 25 இலட்ச ரூபாய் – என அடுத்தடுத்து அ.தி.மு.க. பிரமுகர்களிடமிருந்து கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டாலும், இவர்களுள் ஒருவர்கூடக் கைது செய்யப்படவுமில்லை; இவர்கள் மீது எந்தப் பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது என்ற விவரமும் வெளியிடப்படவுமில்லை.
இவை அனைத்திற்கும் மேலாக, திருப்பூருக்கு அடுத்துள்ள செங்கம்பள்ளியில் கைப்பற்றப்பட்ட மூன்று கண்டெய்னர்களை, அவற்றுள் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் பணம் பதுக்கப்பட்டிருந்தது என்ற விவரத்தைக்கூடச் சொல்லாமல், சேர வேண்டிய இடத்தில் சேர்த்துத் தனது பொறுப்பை நிறைவேற்றிய தேர்தல் ஆணையத்தைக் கண்டு தமிழகமே விக்கித்துப் போனது.
இந்த மூன்று கண்டெய்னர்கள் குறித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்டுப் பலரும் நியாயமான பல கேள்விகளை இன்றும் எழுப்பி வருகிறார்கள். “பணம் எடுத்துச் செல்லும் கண்டெய்னர்கள் ஏன் முத்திரையிடப்பட்டுப் பூட்டப்படவில்லை என்பது தொடங்கி ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் தமது பணம் என அறிவிப்பதற்கு 18 மணி நேரம் எடுத்துக் கொண்டது ஏன் என்பது வரையில்” எழுப்பப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் தேர்தல் ஆணையமோ, வருமான வரித் துறையோ, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவோ இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. கள்ளத்தனமான மௌனத்தின் மூலம், கோயபல்சு பொய்களின் மூலம் உண்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட முயலுகிறது, அதிகார வர்க்கம். ஆனால், கைப்பற்றப்பட்ட பணம் ஜெயா-சசி கும்பல் ஊரைக் கொள்ளையடித்துக் குவித்து வைத்துள்ள கருப்புப் பணம்தான் எனத் தமிழக மக்கள் நம்புவதற்கு ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன.
தேர்தல் ஆணையர்களா, ஜெயாவின் சொம்புகளா? (இடமிருந்து) தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, தமிழகத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா மற்றும் பிரவீண் குமார்.
ஜெயா-சசி கும்பல் அவமானகரமான தோல்வியைச் சந்தித்த 1996 சட்டமன்றத் தேர்தல்கள் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், போயசு தோட்டத்திலிருந்து கண்டெய்னர் லாரிகள் வெளியேறிப் போன வரலாறைத் தமிழகம் இன்னும் மறந்துவிடவில்லை. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான சமயத்திலேயே ஜெயாவிற்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவிற்கு கண்டெய்னர் லாரிகள் வந்து போவது பற்றிய செய்திகள் புகைப்படத்தோடு வெளிவந்தன. அப்பொழுது அது குறித்து முறையான, நியாயமான விசாரணையை நடத்தாமல், சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கப்படவில்லை என ஜெயா-சசி கும்பலுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேர்தல் ஆணையம், இப்பொழுதோ முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்துவிட்டிருக்கிறது.
தமிழகத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பணத்தைக் கடத்திக் கொண்டு சேர்ப்பதற்கு இந்திய அரசின் முத்திரையை அன்புநாதன் தவறாகப் பயன்படுத்தினார் என்றால், ஜெயா-சசி கும்பலின் கருப்புப் பணத்தைக் கடத்துவதற்கு இந்திய அரசே உடந்தையாக இருந்திருக்கிறது. தேர்தல் ஆணையம் அதற்கு வாட்ச்மேனாக மாறி காவல் காத்து நின்றது.
இப்படி அ.தி.மு.க.வின் விசுவாச அடியாளாக நடந்துகொண்டு வரும் தமிழகத் தேர்தல் ஆணையம் தஞ்சாவூரிலும், அரவக்குறிச்சியிலும் நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் என நம்ப முடியுமா? அதற்காகத்தான் தேர்தலை ரத்து செய்திருக்கிறது எனக் கூற முடியுமா? அந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல்களை ஜூன் 13-க்குத் தள்ளி வைத்த தனது முதல் நடவடிக்கையின் மூலம், ஜெயா-சசி கும்பல் நான்கு நாடாளுமன்ற மேலவைத் தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் ஏஜெண்டாகச் செயல்பட்டது. இப்பொழுது தேர்தல்களை ரத்து செய்திருப்பதன் மூலம், அத்தொகுதிகளின் தேர்தலைகளை இடைத் தேர்தலாக மாற்றி, அ.தி.மு.க.வின் அடாவடித்தனமான வெற்றிக்கு உத்தரவாதம் செய்து கொடுத்திருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்து, அதனின் சுயேச்சைத் தன்மை குறித்து, அதனின் நடுநிலைத்தன்மை குறித்து பார்ப்பன அறிவுஜீவிக் கும்பல் கட்டமைத்த பிம்பங்களெல்லாம் நொறுங்கிப் போய், ஆணையத்தின் கையாலாகத்தனம், அதனின் ஒருதலைச் சார்பு, அதனின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதத் தன்மை எல்லாம் அம்பலமாகி, அது அம்மணமாக நிற்பதைத் தமிழகம் காண்கிறது. அரசின் எல்லா உறுப்புகளும் தம் நம்பகத்தன்மையை இழந்து நாறிவிட்டன. மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் படிப்படியாகப் பறிக்கப்படுகின்றன. இது ஜனநாயக நாடு என்று காட்டிக்கொள்வதற்கு வெகுசன வாக்குரிமை மட்டுமே எஞ்சியிருந்தது. அந்த மயக்கத்தையும் தேர்தல் ஆணையமே ஒழித்து விட்டது.
– குப்பன்
பெட்டிச் செய்தி
ஒரு போலி வாக்காளருக்கு ஒரு ரூபாய் -ஆணையத்தின் போங்காட்டம்!
அ.தி.மு.க. தனது வெற்றிக்கு கோடிக்கணக்காகப் பணத்தை மட்டுமல்ல, இலட்சக்கணக்கான போலி வாக்காளர்களையும் இறக்கியிருக்கிறது. பணப் பட்டுவாடா குறித்து மூக்கைச் சிந்திய ‘நடுநிலை’ பத்திரிகைகளுள் ஒன்றுகூட இப்போலி வாக்காளர் முறைகேடு குறித்து கண்டு கொள்ளவில்லை. காரணம், போலி வாக்காளர் சேர்ப்பு என்பது அ.தி.மு.க.வின் தனிப்பட்ட, போட்டியற்ற ராஜாங்கமாக இருந்ததுதான்.
2009-2014-ம் ஆண்டுகளில் இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை சராசரியாக 13.6 சதவீதம் அளவிற்கு உயர்ந்தபொழுது, தமிழக வாக்காளர் எண்ணிக்கையோ 29.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அக்கால கட்டத்தில் மட்டும் தமிழகத்தில் 1.21 கோடி புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வாக்காளர் சேர்க்கை எண்ணிக்கை தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒத்துப் போகவில்லை எனக் குறிப்பிடுகிறது, நக்கீரன்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கியே போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் எனத் தமிழகத் தேர்தல் ஆணையத்திடம் கோரி வந்தது, தி.மு.க. பா.ம.க.வும் இம்முறைகேடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. தேர்தல் ஆணையர் லக்கானி இம்முறையீட்டைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளவே, ஒரு வாக்காளர் பெயர் 13 இடங்களில் இருந்த ஆதாரங்களோடு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது, தி.மு.க. இதன் பிறகு, சென்னை உள்ளிட்டு தமிழகமெங்கும் 6.5 இலட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அறிவித்தது, தேர்தல் ஆணையம்.
இதன் பிறகும் 32 இலட்சம் போலி வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் தனது பட்டியலில் இருந்து நீக்காமல் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, அதில், “திருவாரூர் தொகுதியில் மட்டும் 11,036 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், ஆவடி, கொளத்தூர், திருப்போரூர், பாலக்கோடு, வன்னூர், திருப்பூர்(தெற்கு), பல்லடம், உடுமலை, குன்னம் உள்ளிட்டுப் பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் மிதமிஞ்சிய அளவில் சேர்க்கப்பட்டிருந்ததை தி.மு.க. கண்டுபிடித்ததாக”க் குறிப்பிட்டுள்ளார்.
பிரவீண் குமார் தமிழகத் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில்தான், அவரின் ஒத்துழைப்போடு அ.தி.மு.க. போலி வாக்காளர்களைச் சிறுகச்சிறுகச் சேர்த்திருக்கிறது. இதற்கு கைமாறாக, அவருக்கு ரூ.85 இலட்சம் மதிப்புள்ள வீடு செப்.2012-இல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நொய்டாவில் அவருக்கு வீடு இருந்தும், அ.தி.மு.க. அரசு விதிமுறைகளை மீறி அவருக்கு சென்னையில் வீடு ஒதுக்கியிருக்கிறது. வீட்டை வாங்கிய 16 மாதங்களுக்குள் 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார், பிரவீண் குமார். வெறும் 75,300 ரூபாய் மாதச் சம்பளம் வாங்கிய அதிகாரி, ஒன்றரை வருடத்திற்குள் 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார் என்றால், அதற்கான வருமானம் எப்படி வந்தது?
தமிழகத்தில் 40 இலட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சுமத்துகிறது, தி.மு.க. பிரவீண் குமார் வருமானத்திற்கு மீறி 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார். ஒரு போலி வாக்காளருக்கு ஒரு ரூபாய் என்பதுதான் கணக்கு. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைக் காட்டிலும் தேர்தல் ஆணையரை விலைக்கு வாங்குவது எவ்வளவு மலிவானது!
நாங்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஐ.டி ஊழியர்களின் தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடி வருகிறோம்.
சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினரும் ஒற்றுமைக்காகவும், பணிப் பாதுகாப்பிற்காகவும், தமது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளவும் தங்களை சங்கத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். NASSCOM எனும் சங்கம் வைத்திருக்கும் ஐ.டி. முதலாளிகள், ஐ.டி ஊழியர்களை தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாதென நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டிக் கொண்டிருந்தனர். நடப்பில் இருக்கும் தொழிலாளர் சட்டங்களை இம்மியளவும் மதிக்காமல், எட்டுமணி நேர வேலை என்பதை மறுதலித்தும், நினைத்த நேரத்தில் வேலையிலிருந்து தூக்கி எறிந்தும் ஐ.டி. ஊழியர்களை துயரத்தில் தள்ளினர்.
உச்சகட்டமாக, 2014 இறுதியில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டுத் துரத்தி விட TCS முடிவு செய்தது. அநீதியான அந்த முடிவை எதிர்த்து சென்னை OMR-ல் பு.ஜ.தொ.மு தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக, ஐ.டி. ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தை, ஜனவரி 10, 2015 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடங்கியது.
அதே ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கோரி பு.ஜ.தொ.மு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்விசயத்தில் தமிழக அரசு தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் இழுத்தடித்தது. நீதி மன்றமும் ஏன் என்று கேட்கவில்லை. அரசிடமிருந்து பதில் பெற பு.ஜ.தொ.மு அனைத்து வழிகளிலும் முயற்சித்து வந்தது. இப்படியே ஓராண்டு ஓடிப்போனது. அதன் பிறகும் தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எனவே தமிழக அரசின் இந்த கள்ள மவுனத்தை கலைக்க 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம்.
இந்நிலையில்தான், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சற்று முன்பாக, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு (மே 30 அன்று) பு.ஜ.தொ.மு-வுக்கு அனுப்பிய கடிதத்தில் தனது முடிவை அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி,
அனைத்து தொழிலாளர் சட்டங்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து I.T. மற்றும் I.T.E.S. நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்துக்கொள்ள எந்தத் தடையும் கிடையாது.
ஐ.டி ஊழியர்களுக்கு பணியிடத்தில் தமக்கு ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் தொழிற்தகராறு சட்டம் 1947-ன் கீழ் தீர்த்துக்கொள்ளலாம்.
வேலை நீக்கம் செய்யப்பட்டாலோ, ஆட்குறைப்பு செய்தாலோ தொழிலாளர் ஆணையர் முன் வழக்கு எழுப்பி போராடலாம்.
இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதை தமிழக அரசு தானாக முன்வந்து செய்யவில்லை. நீதிமன்றத்திலும், தெருக்களிலும், ஐ.டி ஊழியர்கள் மத்தியிலும், நிர்வாக வழிகளிலும் விடாப்பிடியான முயற்சிகள், போராட்டங்கள், பிரச்சாரங்கள் மூலமாக இந்த உத்தரவை அரசின் வாயிலிருந்து வரவழைத்திருக்கிறோம். அதையும் வெளிப்படையாக அறிவிக்காமல் தனிப்பட்ட கடிதத்தின் மூலம் எங்களுக்கு தெரிவித்திருக்கிறது, தமிழக அரசு. எனவே அடுத்ததாக இம்முடிவை வெளிப்படையான அரசாணையாக வெளியிட வேண்டும் என்று போராடவிருக்கிறோம்.
ஐ.டி துறையிலும் நாட்டின் சட்டங்கள் செல்லுபடியாகும் என்ற இந்த அறிவிப்பு வெளியானதும் ‘சட்டத்தின் ஆட்சியை தூக்கிப் பிடிப்பதாக’ சொல்லிக் கொள்ளும் முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும் ‘இனிமேல் ஐ.டி துறையும் உருப்படாமல் போய்விடும்’ என்று ஒப்பாரி வைக்கத் துவங்கி விட்டன.
ஐ.டி முதலாளிகள் சங்கம் வைத்திருப்பதெல்லாம் அவர்களுக்கு பிரச்சினை அல்ல. ஊழியர்கள் சங்கம் வைத்துக்கொள்ளலாம் என்றதும் அனைத்துமே நாசமாகிவிடும் என்று ஊளையிடுகிறார்கள். சங்கம் என்றதுமே இவர்கள் ஏன் இவ்வளவு பதறுகிறார்கள்?
30 லட்சத்துக்கும் அதிகமான ஐ.டி ஊழியர்களின் கடும் உழைப்பால் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கும் ஐ.டி நிறுவனங்கள், தமது லாப வீதத்தை உயர்த்திக் காட்டவும், பங்குச் சந்தையில் பங்கு மதிப்பை ஊதிப் பெருக்கவும், அதன் மூலம் முதலாளிகளும், உயர் மேலாளர்களும் கொள்ளை பணம் குவிக்கவும் செலவுக் குறைப்பு என்ற பெயரில் ஊழியர்களை கசக்கிப் பிழிகிறார்கள், அவர்களது வாழ்க்கையை வைத்து சூதாடுகிறார்கள்.
ஐ.டி ஊழியர்கள் சங்கம் வைத்துக்கொண்டால் என்ன ஆகும்?
அப்ரைசல் என்கிற பெயரில் ஐ.டி ஊழியர்கள் பிரித்து ஆளப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.
ஐ.டி ஊழியர்களை நினைத்த நேரத்தில் வேலையிலிருந்து தூக்கி எறிய முடியாது. விருப்பம் போல் ஆட்குறைப்பு செய்ய முடியாது. TCS 25,000 பேரை கேட்பாரின்றி வேலை நீக்கம் செய்ததைப் போல நடந்து கொள்ள முடியாது. ஊழியர்களின் எதிர்கால பணிவாழ்வை காட்டி மிரட்ட முடியாது.
எட்டு மணி நேரத்திற்கு மேல் வரம்பின்றி வேலை வாங்க முடியாது.
ஐ.டி துறையில் யூனியன் என்பது சாத்தியமற்ற கனவு என்று பலர் எண்ணிக்கொண்டிருந்த போது பு.ஜ.தொ.மு அதை சாதித்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் ஐ.டி தொழிற்சங்கம் நிறுவப்பட்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விசயம். தமிழகத்தில் ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கத்தை ஆழமாகவும் உறுதியாகவும் நிறுவுவதன் மூலம் ஐ.டி முதலாளிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அகில இந்தியாவிற்கு தமிழகம் வழிகாட்டுவதை சாதிக்கலாம்.
இப்போது பெற்றிருக்கும் வெற்றி ஒரு சிறிய வெற்றிதான். இந்த வெற்றியை ஒழித்துக்கட்ட ஐ.டி முதலாளிகள் நிச்சயமாக முயற்சிப்பார்கள். எனவே, இனிமேல்தான் ஐ.டி ஊழியர்கள் இன்னும் கடினமான போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையை எதிர்த்து நாஸ்காம் நீதிமன்றத்திற்கு சென்றால் அதை எதிர்த்தும் போராட வேண்டும். இத்தகைய போராட்டங்களை நடத்துவதன் மூலம் தான் சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டிக்கொள்ள முடியும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஐ.டி துறையில் ஆட்குறைப்புக்கு எதிராக பிரச்சாரம், போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் என்று செயல்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் கணிசமான தொகை செலவாகியிருக்கிறது. குறிப்பாக, ஐ.டி துறையில் சங்கம் வைத்துக்கொள்ளலாம் என்ற இந்த உத்தரவைப் பெற மட்டுமே ரூ 20,000-க்கு மேல் செலவாகியிருக்கிறது. ஒரு சில ஆதரவாளர்களின் நன்கொடை மற்றும் தற்காலிக கடன் மூலம் இந்தச் செலவுகளை சரிக்கட்டி வந்திருக்கிறோம். ஐ.டி ஊழியர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க தொடர்ந்து போராடுவதற்கு மேலும் பொருளுதவி தேவைப்படும்.
எனவே, ஐ.டி ஊழியர்களும், பிற வினவு வாசகர்களும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவை வலுப்படுத்தவும், போராட்டங்கள், பிரச்சாரங்களை இன்னும் வீச்சாக எடுத்துச் செல்லவும் உங்களால் இயன்ற நிதியை தாருங்கள். கீழ் உள்ள வங்கிக் கணக்கில் நிதியை செலுத்துங்கள், அல்லது எங்களை தொடர்பு கொண்டு நேரில் நிதி தாருங்கள்.
வங்கிக் கணக்கு விபரங்கள்
S KARPAGA VINAYAGAM
Indian Overseas Bank,
R.K. Salai Branch,
Chennai-4
Account Number: 029101000035047
Account Type: Savings
IFSC code: IOBA0000291
ஐ.டி.துறையில் பணிபுரியும் நண்பர்கள் அனைவரும் உடனடியாக சங்கத்தில் இணையுங்கள். உங்கள் நண்பர்களையும் இணையச்சொல்லுங்கள். நமது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இனி சங்கம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சங்கத்தில் இணைவதற்கு எமது தொலைபேசி எண்ணிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளுங்கள்.
Union in IT Sector! Hurdles Overcome!
Put an End to Injustice and Exploitation!!
Dear Friends,
We belong to New Democratic Labour Front (NDLF) – I.T Employees Wing. We have been working to unionize IT employees for the past one and half years.
From daily wage earners to corporates in IT sector, every section of society have union of their own to safeguard their interests. While lobbying with government and propagating their views in society using their association NASCOM, the IT companies place direct and indirect hurdles for IT employees to form a Trade Union. In the absence of an Union they are able to deny the employees all legal rights such as regular working hours, protection from sudden and arbitrary dismissal etc.
To cap them all, in December 2014 TCS decided to lay off 25,000 senior employees at one go. Against this unjust and unfair move, workers belonging to NDLF launched a struggle in Chennai OMR. On January 10, 2015 NDLF formed the first labour union in India for IT employees.
In the same month, we filed a Public Interest Litigation in Chennai High Court to confirm that Industrial Disputes Act 1947 is applicable to IT companies. The court passed an order asking Tamil Nadu government to spell out its policy decision immediately. However, the government delayed its decision for 15 months, and sent a reply to our petition on May 30, 2016.
According to the government’s stand
IT company employees are free to form trade union.
All the labour welfare legislations are applicable to all the IT and ITES companies. No IT industry has been exempted from the provisions of the Industrial Disputes Act 1947.
IT employees can redress their grievances through evoking the provisions of Industrial Disputes Act 1947.
As a result of our efforts, Tamil Nadu government has legally confirmed our right to form union. This is only the beginning, to complete this victory we should organize ourselves as a Trade Union and realize our demands.
What are the benefits of forming an Union?
Put an end to the ever present, ever terrifying oppressions like Pink Slip, Forced Resignation and sudden Termination
Put an end to the unjust, unfair and unscientific appraisal system.
Ensure job security and promotion as a right.
Realize democratic demands like 8 hours work day
Abolish gender discrimination in work place, compensation levels and promotion. Win legally provided facilities like children’s Creche, maternity leave etc.
All these can be carried out only by a Labour Union registered under Indian Trade Union Act 1926. At present, NDLF – I.T Employees Wing is the only Trade Union of IT employees registered under this act
To win our rights Join the Union Now.
Give a missed call to 9003198576
#ITLabourUnion
New Democratic Labour Front – IT Employees Wing
combatlayoff@gmail.com
www.vinavu.com
fb:\\NDLFITEmployeesWing
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு. தொடர்புக்கு 90031 98576.
மின்னஞ்சல் combatlayoff@gmail.com
FB : NDLFITEmployeesWing
ஒரு முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நகர்ப்புறத்துக் கடைவீதிகளில் மோடி வித்தை நடப்பது வழமையான ஒன்று. அந்த வித்தையை நடத்துபவர் பாம்பையும் கீரியையும் மோதவிடப் போவதாக சவுண்டுவிட்டுக் கொண்டேயிருப்பார். ஆனால், எவ்வளவு நேரமானாலும் அந்த மோதல் நடந்துவிடாது.ஆனாலும், அந்த மோதலை வேடிக்கைப் பார்ப்பதற்காகக் கூடும் அப்பாவிகளிடமிருந்து துட்டைக் கறந்துவிடுவார், அவர்.
பொது மக்களின் ‘விழிப்புணர்வு’ காரணமாகவோ அல்லது இந்தியா ‘நவீனமயமாக’ உருவாகிக் கொண்டிருப்பதன் காரணமாகவோ, இந்த மோடி வித்தை தற்காலத்தில் அழியும் நிலைக்குச் சென்றுவிட்டது. பிறகு ஏன், இந்த மலரும் நினைவுகள் எனக் கேட்கிறீர்களா? குஜராத்தில் நடந்து, தற்பொழுது அம்பலமாகியிருக்கும் எரிவாயு துரப்பணவு மோசடியைப் படிக்க நேர்ந்தபொழுது, இந்த மோடிவித்தைதான் எனக்குச் சட்டென நினைவுக்கு வந்தது.
குஜராத் தலைநகர் காந்திநகரில் அமைந்துள்ள குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்தின் கார்ப்பரேட் அலுவலகம்: 20,000 கோடி ஊழலின் தலைமையகம்
தெருவோரத்தில் மோடி வித்தையை நடத்திப் பிழைப்பவனுக்கு மோடி மஸ்தான் என்று பெயர். குஜராத்தில் நடந்துள்ள எரிவாயு மோசடிக்குச் சூத்திரதாரியாக இருந்தவரின் பெயர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில், 2005-ஆம் ஆண்டு வாக்கில், நாடே விக்கித்துப் போகும் வண்ணம், “குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம், கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் 20 இலட்சம் கோடி கன அடி இருப்பு கொண்ட இயற்கை எரிவாயுயைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், இதன் வர்த்தக மதிப்பு 40 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமானதென்றும், இந்தக் கண்டுபிடிப்பு நாட்டின் எரிசக்தி தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் திறந்துவிட்டிருப்பதாகவும், குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம் அப்படுகையில் 2007-இல்எரிவாயு உற்பத்தியைத் தொடங்கிவிடுமென்றும்” அதிரடியாக அறிவித்தார்.
இந்தப் பிரமிக்கத்தக்க அறிவிப்பை மோடி வெளியிட்டு 11 ஆண்டுகளும், உற்பத்தி தொடங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்து 9 ஆண்டுகளும் கழிந்துவிட்டன. ஆனால், குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம் அந்தப் படுகையிலிருந்து இதுநாள் வரை ஒரு கன அடி எரிவாயுவைக்கூட உற்பத்தி செய்யவில்லை. மாறாக, மோடி மஸ்தான் பாம்பையும் கீரியையும் காட்டி காசு பிடுங்குவதைப் போல, கிருஷ்ணா-கோதாவரிப் படுகையிலிருந்து இந்த ஆண்டு எரிவாயுவை உற்பத்தி செய்துவிடுவோம், அடுத்த ஆண்டு உற்பத்தி செய்துவிடுவோம் எனப் போங்காட்டம் ஆடியே, கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கி 2015-ஆம் ஆண்டு முடியவுள்ள ஏழே ஆண்டுகளில், 19,720 கோடி ரூபாயை 13 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாக உருவிக் கொண்டுவிட்டது.
குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்திற்கும் பிரிட்டிஷ் கேஸ் நிறுவனத்திற்கும் இடையே இயற்கை எரிவாயு வணிகம் தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் கலந்துகொண்ட அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோர்: நரேந்திர மோடி அரசின் வெட்டி பந்தா. (கோப்புப் படம்)
குஜராத் பெட்ரோலியக் கழகம் கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் எரிவாயு உற்பத்தியைத் தொடங்கவில்லை என்பது மட்டுமல்ல, அப்படுகையில் குஜராத் அரசிற்கு ஒதுக்கப்பட்ட வயலில் எரிவாயு இருக்கிறதா, அப்படியே இருந்தாலும் அதனை எடுக்க முடியுமா, அப்படியே எடுத்தாலும் அதனை இலாபம் தரத்தக்க வகையில் சந்தையில் விற்க முடியுமா எனப் பல கேள்விகளும் சந்தேகங்களும் இத்திட்டம் குறித்து எழுப்பப்பட்டுள்ளன. ஏனென்றால், இந்தத் திட்டம் குறித்து குஜராத் பெட்ரோலியக் கழகம் 2009-இல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அந்த வயலில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் கோடி கன அடி மட்டுமே எரிவாயு இருப்பதாகக் கூறியது. வடிவேலுவின் கிணறு காணாமல் போனது போல, 19 இலட்சம் கோடி கன அடி எரிவாயு ‘காணாமல்’ போய்விட்டது மட்டுமல்ல, பூமிக்கு அடியில் புதைந்து கிடப்பதாகச் சொல்லப்படும் இந்த ஒரு இலட்சம் கோடி கன அடி எரிவாயுவை எடுப்பதும் கடந்த ஆறு ஆண்டுகளாக வெறும் காகிதத் திட்டமாகத்தான் இருந்து வருகிறது.
சங்கப் பரிவாரத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் நினைவாக தீனதயாள் மேற்கு எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வயலில் உள்ள 20 இலட்சம் கோடி கன அடி எரிவாயுவை 1,500 கோடி ரூபாய் செலவில், 2007-இல் எடுக்கத் தொடங்கிவிடுவோம் என 2005-இல் அறிவித்தார், மோடி. அதன் பின், அவரே உற்பத்தி 2011-இல் தொடங்கிவிடும் என்றும், மூலதனச் செலவு 4,100 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என 2008-இல் அறிவித்தார். இதன் பிறகு, இத்திட்டம் குறித்து அறிக்கைகளைச் சமர்ப்பித்த பங்குச் சந்தை கண்காணிப்பு வாரியம், மத்தியத் தணிக்கைத் துறை, குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம் ஆகிய நிறுவனங்கள் தீனதயாள் மேற்கு வயலில் ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் கோடி கன அடி மட்டுமே எரிவாயு இருப்பதாகக் கூறியதோடு, இந்த எரிவாயுவை எடுப்பதற்கான மூலதனச் செலவை 8,500 கோடி, 13,000 கோடி, 18,000 கோடி என அதிகரித்துக் கொண்டே சென்றன. இறுதியாக, 2015-இல் அறிக்கை அளித்த மத்திய தணிக்கைத் துறை ஒரு இலட்சத்து பத்தாயிரம் கோடி கன அடி எரிவாயுவை எடுக்க 19,600 கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படும் என்றும் உற்பத்தி 2016-இல் தொடங்கக் கூடும் என்றும் அறிவித்தது.
குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்தில் நடந்துள்ள 20,000 கோடி ரூபாய் பெறுமான ஊழலைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்திவரும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் சுற்றுப்புறச் சுழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்
ஆனால், இதுவரை உற்பத்தி தொடங்கவில்லை. மாறாக, மூலதனச் செலவிற்காகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து வாங்கப்பட்ட கடன் மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது. 2011-இல் உற்பத்தி தொடங்கிவிடும் எனக் காட்டி 2008-இல் 2,386 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டிருக்கிறது. 2012-இல் உற்பத்தி தொடங்கிவிடும் எனக் கூறப்பட்ட நேரத்தில் இந்தக் கடன் 6,383 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2013-இல் கம்பெனி உற்பத்தியை எட்டிவிடும் எனக் கூறப்பட்டபொழுது, கடன் 9,723 கோடி ரூபாயை எட்டிப் பிடித்தது. இப்படியாக 13,900 கோடி ரூபாய், 16,000 கோடி ரூபாய் என அதிகரித்த கடன் தொகை தற்பொழுது 19,716 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது.
20 இலட்சம் கோடி கன அடி எரிவாயுவைக் கண்டுபிடித்துவிட்டதாக மோடி அறிவித்ததும்; திட்டச் செலவை 1,500 கோடி ரூபாயிலிருந்து 19,716 கோடி ரூபாயாக அதிகரித்துக் கொண்டே சென்றிருப்பதும்தான் இந்த எரிவாயு ஊழலின் முக்கிய அம்சங்கள். மூலதனச் செலவை அதிகரித்துக் காட்டுவதற்காகவே பல்வேறு முறைகேடுகளும் மோசடிகளும் தில்லுமுல்லுகளும் நடந்துள்ளன. அதிலொன்றுதான் இத்திட்டம் குறித்து தயாரித்து அளிக்கப்பட்ட அறிக்கை. வெறும் நூறு பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையைத் தயாரித்து அளிப்பதற்குள், வங்கிகளிடமிருந்து 4,800 ரூபாய் கடன் பெறப்பட்டிருக்கிறது.
உலகிலேயே 4,800 கோடி கடனில் தயாரிக்கப்பட்ட முதல் அறிக்கை இதுவாகத்தான் இருக்கும். அப்படிபட்ட “காஸ்ட்லியான” அறிக்கையில் தீனதயாள் மேற்கு வயலில் ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் கோடி கன அடி மட்டுமே எரிவாயு இருப்பதாகக் கூறப்பட்டாலும், அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது விழலுக்கு இறைத்த நீர் என்ற உண்மையும் அம்பலத்துக்கு வந்தது. இந்த அறிக்கை வெளிவந்த சமயத்தில் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை 4.2 டாலராக இருந்தது. ஆனால், அறிக்கையோ இந்த வயலில் இருந்து எடுக்கப்படும் எரிவாயுவை 5.7 டாலருக்கு விற்றால்தான் இலாபம் பார்க்க முடியும் எனக் குறிப்பிட்டது. குஜராத் அரசு தயாரித்த அறிக்கையே இத்திட்டம் இலாபகரமானது அல்ல எனக் காட்டிவிட்ட பிறகும், மோடி கும்பல் திட்டத்தைக் கைவிடாமல் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு நின்றதற்குக் காரணம், அக்கும்பலுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையேயான நெருக்கம்.
இந்த வயலில் இருந்து எரிவாயுவை எடுக்கும் வேலை ஒப்பந்த அடிப்படையில் அதானி குழுமம், குஜராத்தைச் சேர்ந்த டஃப் டிரில்லிங் மற்றும் மொரீஷியஸ், பார்போடாஸ் ஆகிய வரியில்லா சொர்க்கத் தீவுகளைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லெட்டர் பேடு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. எரிவாயுவை இந்த ஆண்டு எடுத்துவிடுவோம், அடுத்த ஆண்டு எடுத்துவிடுவோம் எனக் கூறிப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடனின் பெரும்பகுதியை இந்த உப்புமா கம்பெனிகள்தான் விழுங்கியுள்ளன.
குறிப்பாக, டஃப் டிரில்லிங் நிறுவனத்திற்கும் எரிவாயு துரப்பணவு தொழிலுக்கும் ஒட்டும் இருந்தது கிடையாது, உறவும் இருந்தது கிடையாது. ஆயுத்த ஆடை தயாரிப்புதான் அந்த நிறுவன முதலாளிகளின் பூர்வாசிரமத் தொழில். குஜராத் அரசு கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை அறிவித்தவுடனேயே, அம்முதலாளிகள் டஃப் டிரில்லிங் நிறுவனத்தைத் தொடங்கி, 5000 கோடி ரூபாய் பெறுமான ஒப்பந்தத்தைப் பெற்றார்கள். கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் எரிவாயுவை எடுப்பதற்கு நவீனமான உயர் தொழில்நுட்பமும் நிபுணத்துவமும் தேவைப்படும் நிலையில், குஜராத் பெட்ரோலியக் கழகம் முன் அனுபவமேயில்லாத ஒரு உப்புமா கம்பெனிக்கு இவ்வளவு பெரிய தொகை கொண்ட ஒப்பந்தத்தை வழங்கியதற்குக் காரணம், அதானி குழுமத்தைப் போலவே இவர்களும் மோடிக்கும் நெருக்கமானவர்கள் என்பதுதான்.
எரிவாயுவை எடுப்பதற்குத் தேவையான கனரக இயந்திரங்களை வாங்கிய செலவு 2,000 கோடி ரூபாய்; கம்பெனியின் பிறவகை செலவுகள் 500 கோடி ரூபாய்; உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குத்தகைக்கு எடுத்த வயல்களைத் திரும்ப ஒப்படைத்த வகையில் ஏற்பட்ட நட்டம் 2,514 கோடி ரூபாய்; ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை 2,000 கோடி ரூபாய் எனக் கணக்குகளைக் காட்டி, பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை குஜராத் பெட்ரோலியக் கழகமும், அதன் ஒப்பந்த நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து ஏப்பம் விட்டுள்ளன.
குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்தில் நடந்திருக்கும் ஊழலில் நரேந்திர மோடியின் நெருங்கிய கூட்டாளி கௌதம் அதானிக்குப் பெரும் பங்குண்டு
குஜராத் பெட்ரோலியக் கழகம் பொதுத்துறை வங்கிகளுக்குக் கட்ட வேண்டிய வட்டி ஆண்டொன்றுக்கு 2,000 கோடி ரூபாய். ஆனால், அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானமே 682 கோடி ரூபாய்தான். அதனின் துணை நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்தால், 1,219 கோடி ரூபாய். வட்டி கட்டுவதற்குக்கூட வருமானம் இல்லாமல் திவால் நிலையை எட்டிவிட்ட குஜராத் பெட்ரோலியக் கழகத்திற்கு மேலும் மேலும் சலுகைகள் காட்டப்படுகின்றன.
தீனதயாள் மேற்கு வயலில் உள்ள எரிவாயு மிகவும் ஆழத்திலும் இறுக்கமாகவும் புதைந்து கிடப்பதாகவும், அதனைத் துரப்பணவு செய்து எடுக்க மிகவும் நவீனமான தொழில்நுட்பம் தேவைப்படுவதாகவும், அதனால்தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக உற்பத்தியைத் தொடங்க முடியாமல் போய்விட்டதாகவும் கூறித் தாமதத்தை நியாயப்படுத்தி வரும் மோடி ஆதரவாளர்கள், மறுபுறமோ 40,000 @காடி ரூபாய் பெறுமானமுள்ள அந்த எரிவாயுவை நாளைக்கே எடுத்து, அதற்கு மறுநாளே விற்றுப் பொதுத்துறை வங்கிகளின் கடனை அடைத்துவிட முடியுமென்றும் உதார் விடுகிறார்கள்.
ஆனால், குஜராத் பெட்ரோலியக் கழகமோ வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடமிருந்து பெற்றுள்ள 3,000 கோடி ரூபாய் பெறுமான கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருப்பதோடு, இந்த நிறுவனம் வட்டி கட்டுவதற்கு வசதியாக 3,500 கோடி ரூபாயை, அமெரிக்க டாலராக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பரோடா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ளன.
பூமியின் அடியில் புதைந்து கிடக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு வளங்களை அப்படியே முழுவதுமாக எடுத்துவிட முடியாது என்பதால், மோடியின் ஆதரவாளர்கள் வீசும் வாக்குறுதிகளைத் துரப்பணவு தொழில் நிபுணர்கள்கூட நம்ப மறுக்கிறார்கள். தீனதயாள் மேற்கு வயலில் உள்ளதாகக் கூறப்படும் ஒரு இலட்சத்து பத்தாயிரம் கோடி கன அடி இருப்பில் இருந்து எவ்வளவு கன அடி எரிவாயுவை எடுக்க முடியும், அதனை எந்தளவிற்கு இலாபகரமாக விற்க முடியும் என்ற கேள்விகளுக்குத் திட்டமிட்டே பதில் அளிக்க மறுக்கிறது, மோடி கும்பல். தெருவோரத்தில் நடக்கும் மோடி வித்தையில் பாம்பையும் கீரியையும் காட்டிப் பொதுமக்களை ஏமாற்றுவதைப் போல, புதைந்து கிடக்கும் எரிவாயு இருப்பை மட்டுமே காட்டித் தமது மோசடிகளை நியாயப்படுத்திவிட முயன்று வருகிறது, மோடி கும்பல்.
இந்தத் திட்டம் கூடுதல் செலவு பிடிக்கும் தோல்வியடைந்த ஒன்று என 2015-இல் மத்திய தணிக்கைத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதோடு, இதில் நடந்துள்ள முறைகேடுகளையும் அந்த அறிக்கையில் பட்டியல் இட்டிருக்கிறது. குஜராத் பெட்ரோலியக் கழகம் கிருஷ்ணா-கோதாவரிப் படுகையிலிருந்து எரிவாயுவைத் துரப்பணவு செய்வதற்கான திட்டத்தைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தை கனடா நாட்டைச் சேர்ர்ந்த ஜியோ குளோபல் ரிசோர்சஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கியதென்றும், அந்த நிறுவனத்தின் தவறான திட்ட மதிப்பிடுகளின் காரணமாகவே கிணறுகளைத் தோண்டுவதற்கான செலவு 531 @காடி ரூபாயிலிருந்து 6,265 கோடி ரூபாயாக அதிகரித்தது என்றும்; அதானி குழுமம் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சட்டவிரோதமான சலுகைகளின் காரணமாக 5,000 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டிருப்பதையும் மத்திய தணிக்கைத் துறை சுட்டிக் காட்டியிருக்கிறது.
அலைக்கற்றை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதைப் போன்றே, கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் இருந்து எரிவாயு எடுக்கும் திட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்து, திட்டமும் தோற்றுப் போய், அரசிற்கும் பொதுத்துறை வங்கிகளுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அலைக்கற்றைகளைக் குறைந்த விலைக்குத் தனியாருக்கு விற்று நாட்டிற்கு நட்டமேற்படுத்தியது ஊழல் என்றால், எரிவாயு எடுக்கும் திட்டத்தில் அதானி, எஸ்ஸார், டஃப் டிரில்லிங், ஜியோ குளோபல் ரிசோர்சஸ் எனக் குறிப்பிட்ட சில தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதாயமடைவதற்காகப் பொதுத்துறை நிறுவனமும் அதற்குக் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகளும் மொட்டையடிக்கப்பட்டிருப்பதும் ஊழல்தான்.
இந்த எரிவாயு ஊழல் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது குறித்து மத்திய தணிக்கைத் துறை ஆறு அறிக்கைகளை அளித்திருக்கிறது. எனினும், அலைக்கற்றை ஊழல் பொதுவெளியில் செய்யப்பட்ட அளவிற்கு, ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட அளவிற்கு எரிவாயு ஊழல் அம்பலத்திற்கு வரவில்லை. காரணம், வெளிப்படையான ஒன்று. எரிவாயு ஊழலின் சூத்திரதாரி பார்ப்பன-பாசிஸ்டு. அலைக்கற்றை ஊழலில் குற்றஞ்சுமத்தப்பட்டிருப்பவரோ சூத்திர தி.மு.க.-வைச் சேர்ந்தவர்.
நம் பிள்ளைகளுக்காக நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்?
அன்பார்ந்த பெற்றோர்களே! வணக்கம்!
பெரும்பான்மையான வளர்ந்த நாடுகளில் தாய்மொழியில், பொதுப்பள்ளிகள் மூலமாக அரசுதான் முற்றிலும் இலவசமாக கல்வி வழங்குகிறது. அருகமைப் பள்ளி முறை – அதாவது நம்ம ஊர் ரேசன் கடை போன்று அந்தந்த பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பிள்ளைகளை அருகிலுள்ள பள்ளிகளில் கல்வி கற்கும், அருகமைப் பள்ளி முறைதான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
அனைவருக்கும் ஒரே சீரான, தரமான கல்வி முறைதான் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றல், தனி மனித ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றுக்கு அடிப்படையானது. அதை அரசுதான் இலாப நோக்கமின்றி அனைவருக்கும் வழங்க முடியும். இந்தியாவில் பார்ப்பனிய சாதிக் கொடுமையுடன், வர்க்கப் பாகுபாடுகளும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் பணத்திற்கு தகுந்த பள்ளிக்கூடம் என்பது, மேலும் இத்தகைய பாகுபாடுகளை அதிகரிக்கச் செய்யும். பணம் சம்பாதிக்க மட்டும் படிப்பு என்ற கல்வி தனியார்மயக் கொள்கையை ஒழிப்பது, பாம்பைப் பார்த்தவுடன் அடிக்கும் முடிவுக்கு ஒப்பானது. ஆனால், அதை பெற்றோர்கள் வரவேற்பது என்ற நிலை குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
தனியார் பள்ளி தரமானதா?
தனியார் பள்ளியில் படித்தால், தன் பிள்ளை ஆங்கிலம் பேசுவான், அறிவு வளரும், டாக்டர், எஞ்சினியர் ஆவான், நம்மைப் போல் கஷ்டப்பட மாட்டான், அதிகம் பணம் சம்பாதிப்பான் என்ற மூட நம்பிக்கையில், அவரவர் வசதிக்கேற்றாற்போல தனியார் மெட்ரிக் பள்ளிகளை நோக்கி விட்டில் பூச்சியாய் ஓடுகிறார்கள். பட்டம் பெற்ற லட்சக் கணக்கான இளைஞர்கள் உரிய வேலை வாய்ப்பின்ற கிடைத்த சம்பளத்திற்கு உரிமைகளற்ற கூலிகளாய் பணிபுரியும் அவலத்தை அவர்கள் பார்ப்பதில்லை.
தனியார் பள்ளி தாளாளர்களுக்கு ஒழுக்கம், நேர்மை எதுவும் கிடையாது. கட்டணக் கொள்ளை அடிப்பது, பணம் கட்டாத மாணவர்களை துன்புறுத்துவது, பெற்றோர்களை அவமானப்படுத்துவது, 10-ம் வகுப்பு பாடத்தை 9-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பு பாடத்தை 11-ம் வகுப்பிலும் படிக்கச் சொல்வது என்று மாணவர்களின் படிக்கும் முறை, பாயாசத்தின் சுவை அறியாத கரண்டி போல மாணவர்களிடம் பதிய வைக்கப்படுகிறது.
கருப்புப் பணமாக கல்விக் கட்டணம், வினாத்தாள் முன்கூட்டியே சொல்வது, காப்பி அடிக்க அனுமதிப்பது, தேர்வு கண்காணிப்பாளரை பிக்ஸ் பண்ணுவது என அனைத்து முறைகேடுகளிலும் ஈடுபடுவது தவறில்லை; அதுதான் திறமை என்று மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றிய தவறான சிந்தனைகளை பள்ளிப் பருவத்திலேயே ஏற்படுத்துகிறார்கள். பெற்றோர்களும் அதற்கு உடன்படுகிறார்கள்.
தங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்களைக் கொத்தடிமைகளாக, குறைந்த சம்பளத்திற்கு ஓய்வு இன்றி வேலை வாங்குவது, அவர்களை செங்கல் சூளைக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் போல் மாணவர்களைப் பிடித்து வரச் சொல்லுவது, தவறினால் பணி நீக்கம் செய்வது. இத்தகைய முறைகேடுகள் பற்றி தெரிந்த பெற்றோர் காரியவாதமாக தனியார் பள்ளி பற்றி பேச மறுக்கிறார்கள். ஆசிரியர் இல்லை, சொல்லிக் கொடுப்பதில்லை என அரசுப் பள்ளிகளின் தரம் பற்றி மிகையாக பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
அரசுப் பள்ளியே நமது பள்ளி!
புத்தகம், நோட்டு, சீருடை, செருப்பு, மதிய உணவு, சைக்கிள் என மாணவர்களுக்கு வழங்கி – கற்றல், கற்பித்தலை அறிவியல்பூர்வமான சேவையாக செயல்படுத்தும் அரசுப் பள்ளிகளோடு அனைத்திலும் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை ஒருநாளும் ஒப்பிட முடியாது. அரசுப் பள்ளி மாணவன், வீட்டு வேலை முதல் விவசாய வேலை வரை செய்து, வறுமையில் டியூசன் படிக்காத சூழலில்தான், அரசுப் பள்ளி மாணவர்கள் 80 சதவீத தேர்ச்சி, 495 மதிப்பெண் என பெறுகிறார்கள்.
இன்றைக்கு உயர்பதவிகளில் இருப்பவர்கள், மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் என பெரும்பான்மையானவர்கள், அரசுப் பள்ளியில் தாய்மொழியில் படித்தவர்கள்தான். அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு இல்லை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, இருக்கும் ஆசிரியர்களும் சரியாகச் சொல்லி கொடுப்பதில்லை என்ற குறைகள் பெற்றோர்கள் கண்காணித்துப் போராடினால் சரிசெய்ய முடியும்.
அரசின் தனியார்மய கொள்கையால் கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர், விவசாயம் என்ற அடிப்படை வாழ்வுரிமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவு மக்களும் போராடுகிறார்கள். பொறுப்பான முறையில் தீர்வு காண வேண்டிய அரசோ, போராடுபவர்கள் மீது தடியடி, பொய் வழக்கு, சிறை, சித்ரவதை என அடக்குமுறை செய்கிறது. நீதிமன்றமும் அதற்கு துணை நிற்கிறது.
மக்கள் நல அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி, மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகார வர்க்கத்தினர் மற்றும் நீதித்துறையினர் என அனைத்தும் மக்களின் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணுவதில்லை. அவர்கள் வகுத்த விதிமுறைகள், சட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை அவர்களே கடைப்பிடிக்க முடியாமல் மீறுகிறார்கள். மக்கள் நலன்களுக்குஎ திராகச் செயல்படுகிறார்கள். இந்த நிலையில் ஆங்கிலேயர்களை எதிர்த்த சுதந்திரப்போராட்டம்போல், மக்களுக்கான கொள்கையை அமல்படுத்தும் அரசை புதிதாக உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை.
உயிராதாரமான குடிநீர் இன்று வாட்டர் பாட்டில் என்ற மாறி நிற்கும் பயங்கரம். அதே போல் தனியார் பள்ளிகளை தரம் என ஆதரிப்பது எதிர்காலத் தலைமுறையையே பாதிக்கும்.
அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை இலவசமாக வழங்கும் அரசுப் பள்ளியை ஆதரித்து அதனை மேம்படுத்த பெற்றோர்கள் போராட வேண்டும்.
நம் பிள்ளைகளுக்கா நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்?
அரசுப் பள்ளியே நமது பள்ளி! கல்வி ஒரு சேவையே! வணிகமல்ல!! கல்வி வியாபாரத்தை புறக்கணிப்போம்!
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு 2016
மினி மாரத்தான் ஜூன் 19, காலை 6 மணி சித்தூர் புறவழிச்சாலை
பேரணி, மாநாடு, தப்பாட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி
ஜூன் 25, சனி மாலை 5 மணி வானொலித் திடல், விருத்தாசலம்
பேரணி துவங்குமிடம்: திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் மாலை 4 மணி
தலைமை திரு வை.வெங்கடேசன், மாவட்டத் தலைவர், மா.க.உ.பெ. சங்கம், விருத்தாசலம்
வரவேற்புரை திரு வா.அன்பழகன், பத்திரப் பதிவுத்துறை (ஓய்வு), துணைத்தலைவர், , மா.க.உ.ப.ச, விருத்தாசலம்
துவக்க உரை: பாரதி தம்பி, பத்திரிகையாளர் (கற்க கசடற நூலாசிரியர்), ஆனந்த விகடன், சென்னை
சிறப்புரை மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வித் தரத்தின் அடையாளம் அல்ல
பேராசிரியர் ந.சி சந்திரசேகரன், முதல்வர் (ஓய்வு), கந்தசாமி கண்டர் கல்லூரி, நாமக்கல் புலவர் சிவராம சேது, தலைமை ஆசிரியர் (ஓய்வு), அ.ஆ.மே.நி.பள்ளி, விருத்தாசலம் மாணவர் மாரிமுத்து, பு.மா.இ.மு, டாஸ்மாக் எதிர்ப்புப் போராளி, சென்னை
கல்வி நிதியை களவாடும் நகராட்சிகள் டாக்டர் மு. வள்ளுவன், மு.நகர் மன்றத் தலைவர், விருத்தாசலம் வழக்கறிஞர் ர.புஷ்பதேவன், மா.செ, ம.உ.பா.மையம், விருத்தாசலம் திரு ச.செந்தாமரைக்கந்தன், செயலாளர், மா.க.உ.பெ.சங்கம், விருத்தாசலம்
சமூக ஏற்றத் தாழ்வுகளை, சாதி வேறுபாடுகளை அகற்றும் அரசுப் பள்ளிகளில் அனைவரையும் சேர்ப்போம்!
பேராசிரியர் திருமதி சாந்தி, சென்னை தோழர் த. கணேசன், மாநில அமைப்பாளர், பு.மா.இ.மு, சென்னை திரு கோ.பாக்கியராஜ், தலைமை ஆசிரியர், இலங்கியனூர், மா.தலைவர், ஆதி திராவிட ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் சங்கம்.
நிறைவுரை வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
வாழ்த்துரை திருமதி மங்கையர்க்கரசி, மா.க.உ.பெ.சங்கம், விருத்தாசலம் வழக்கறிஞர் ச.செந்தில்குமார், மா.தலைவர், ம.உ.பா.மை, கடலூர் வழக்கறிஞர் சி.செந்தில், மா.து செயலாளர், ம.உ.பா.மை, சிதம்பரம் திரு. ஆ. செல்வம், மா.து. தலைவர், ம.உ.பா.மை, விருத்தாசலம். திரு கோ. தமிழரசன், தலைமை ஆசிரியர் (ஓய்வு), சேத்தியாதோப்பு. தோழர் முருகானந்தம், ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், விருத்தாசலம் தோழர் கதிர், செயலர், பு.மா.இ.மு, விருத்தாசலம் திரு சிறுத்தொண்ட நாயனார், தலைமை ஆசிரியர், தே.பவழங்குடி திரு த. கலையரசன், மா.க.உ.பெ.சங்கம், சிதம்பரம் தோழர் எம். முஜிபூர் ரஹ்மான், மா.க.உ.பெ.சங்கம், சிதம்பரம் திரு டி. ரவிச்சந்திரன், மா.க.உ.பெ.சங்கம், சிதம்பரம்
பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாட நாடு தயாராகிக் கொண்டிருந்த வேளையில், தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவினரான மலம் அள்ளும் துப்புரவுப் பணியாளர்கள் டில்லியில் கூடியிருந்தனர். அஸ்ஸாம் மாநிலம் திப்ருகாரிலிருந்து நான்கு மாதங்களுக்கு முன் தொடங்கிய “பீம் யாத்ரா” என்ற அவர்களது பயணம், சுமார் 500 மாவட்டங்கள், 30 மாநிலங்கள், 3,500 கி.மீ. தூரத்தைக் கடந்து ஏப்ரல் 13-ம் தேதியன்று டில்லி ஜந்தர் மந்தரை வந்தடைந்திருந்தது.
அவர்களுடைய பெயர் துப்புரவுத் தொழிலாளர் இயக்கம். “எங்களைக் கொல்லாதீர்கள்!” என்பது அவர்களின் முழக்கம். ஆண்டொன்றுக்கு 22,000 துப்புரவுத் தொழிலாளர்கள் கேட்பாரின்றி கொல்லப்படுகிறார்கள். (பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய், சென்ற மாதம் நாடாளுமன்றத்தில் இந்தப் புள்ளிவிவரத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்) தங்கள் பெற்றோரும் உற்றாரும் மலத்தொட்டிகளிலும், கழிவுநீர் சாக்கடைகளிலும் மூச்சுத் திணறி இறந்த அந்தக் கொடூரக் கதைகளை, கண்களில் நீர் வழிய, துக்கம் தொண்டையை அடைக்க விவரித்தார்கள் பல குழந்தைகள். அந்தக் கதைகள் கொடூரமானதொரு அபத்தத்தின் குறியீடுகள். ஒருபுறம் அம்பேத்கர் ஒரு மாபெரும் பிம்பமாக கட்டமைக்கப்படுகிறார். அவர் எந்த மக்களுக்காக வாழ்ந்து போராடினாரோ அம்மக்களோ உயிர் வாழ்வதற்காகக் கையேந்தி நிற்கிறார்கள். நீக்கமற நிறைந்திருக்கும் போலித்தனம்!
இந்திய அரசியல் சட்டம் தீண்டாமையை ஒழித்துவிட்டது. ஆனால் தீண்டாமையை மறு உற்பத்தி செய்யும் சூழலை மாற்றுவதற்கு அது ஒன்றும் செய்யவில்லை. துப்புரவுப் பணியாளர்கள் தீண்டாமையின் ஆகக் கொடிய வடிவத்தை அனுபவிப்பவர்கள். சாதி இந்துக்களுக்கு மட்டுமல்ல, மற்ற தலித் சாதிகளுக்கும் கூட அவர்கள் தீண்டத்தகாதவர்கள்தான். தீண்டாமை விடயத்தில் காந்தியின் கருத்துகள் எத்தனை பிற்போக்கானவையாக இருந்தாலும், “தோட்டிகள்” என்று அழைக்கப்படும் துப்புரவுப் பணியாளர்கள்தான் தலித்துகளின் பிரதிநிதிகள் என்று அவர் சரியாகவே அடையாளம் கண்டார். தன் கருத்தை நிலைநாட்ட அவர்களில் ஒருவனாகத் தன்னை அடையாளம் காட்டிக் காட்டிக்கொண்டார். அவர்கள் மீதான அன்பைக் காட்டுவதற்காக அவர்கள் குடியிருப்பிலேயே வாழ்ந்தார். காந்தியின் பெயரால் உறுதியேற்றுக் கொள்ளும் அரசு, மனிதத்தன்மையைக் கொல்லும் இந்த பணியை சட்டவிரோதமாக்குவதற்கும் அம்மக்களுடைய மறுவாழ்வுக்கும் முன்னுரிமை தந்திருக்க வேண்டும். ஆனால் மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமை பற்றி பெரும் கவலை கொண்டிருப்பது போல காட்டிக் கொள்ளும் இந்த அரசு, அடுக்கடுக்காக கமிட்டிகளை மட்டும் அமைத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை மட்டும் கடந்த
46 ஆண்டுகளாகத் தள்ளிப்போட்டு வருகிறது.
நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டம் எத்துணை பெரிய மோசடி
1949-ல் தொடங்கிய இந்த ஆட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1949-ல் அன்றைய பம்பாய் அரசு, வி.என். பார்வே என்பவர் தலைமையில் “துப்புரவுப் பணியாளர் வாழ்நிலை ஆய்வுக்குழு” ஒன்றை அமைத்தது. 1952-ல் அக்குழு தனது அறிக்கையை கொடுத்தது. 1955-ல் மத்திய உள்துறை அமைச்சகம் அக்குழுவின் முதன்மையான பரிந்துரைகள் அனைத்தையும் எல்லா மாநில அரசுகளுக்கும் சுற்றுக்கு விட்டு, அவற்றை அமல்படுத்துமாறு கோரியது. எதுவும் நடக்கவில்லை.
1957-ல் என்.ஆர்.மல்கானி என்பவர் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து, மலம் அள்ளும் தொழிலை முடிவுக்கு கொண்டுவர திட்டம் வகுக்குமாறு கோரியது. 1960-ல் தனது அறிக்கையை அளித்த இக்குழு, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமையை மூன்றாவது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் திட்டமிட வேண்டுமெனக் கோரியது. இதுவும் நடக்கவில்லை.
நகராட்சி நிர்வாகத்துக்கு வெளியே, தனியார் கழிவறைகளில் மனித மலத்தை அகற்றும் பணி, பரம்பரைத் தொழிலாக துப்புரவுப் பணியாளர்கள் மீது திணிக்கப்படும் இடங்களில் அதனை முடிவுக்கு கொண்டு வருமாறு 1965-ல் இன்னொரு குழு பரிந்துரைத்தது. இதுவும் கிடப்பில் போடப்பட்டது.
1968-69 ல் தொழிலாளர்களுக்கான தேசிய கமிசன், துப்புரவுப் பணியாளர்களின் பணிநிலை மற்றும் வாழ்நிலைகளை முறைப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த சட்டமொன்றை இயற்றுமாறு பரிந்துரைத்தது. காந்தி நூற்றாண்டையொட்டி 1969-ல் திறந்த கழிவறைகள் அனைத்தையும், நவீனக் கழிவறைகளாக மாற்றுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. அது துவக்க நிலையிலேயே தோல்வியடைந்தது. இதே திட்டத்தை 1980-ல் அறிவித்த உள்துறை அமைச்சகம், மனிதக் கழிவகற்றும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர்களையும் அவர்களது சுற்றத்தாரையும் குறிப்பிட்ட சில நகரங்களில் வேறு கவுரவமான தொழில்களில் பணியமர்த்தும் திட்டம் ஒன்றை அறிவித்தது. 1985-ல் இத்திட்டம் உள்துறையிடமிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. 1991-ல் திட்டக்குழு இத்திட்டத்தை இரண்டாகப் பிரித்தது. கழிவறைகளை மாற்றியமைக்கும் பொறுப்பு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. துப்புரவுப் பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொறுப்பு மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் விடப்பட்டது. 1992-ல் துப்புரவுப் பணியாளர்களை மனிதக்கழிவகற்றும் பணியிலிருந்து விடுவித்தல் மற்றும்
மறுவாழ்வளித்தல் என்ற திட்டத்தை நல்வாழ்வுத்துறை அறிவித்தது. எதுவும் நடக்கவில்லை.
கிரிமினல் அலட்சியம்!
விழுப்புரம்-கா.குப்பம் பகுதியில் சாக்கடை அடைப்பை நீக்குவதற்காக இறங்கிய 19 வயதான அந்தோணிராஜுக்கு அந்தக் குழியே சவக்குழியானது. (கோப்புப் படம்)
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 17, 21, 23 ஆகியவற்றின் படியே மனிதக்கழிவகற்றும் பணி தடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிவில் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் (1955) இன் 7அ மற்றும் 15அ பிரிவுகள், மனிதக்கழிவகற்றும் பணியிலிருந்து துப்புரவுப் பணியாளர்களை விடுவிப்பதற்கும், தொடர்ந்து அவர்களை அப்பணியில் ஈடுபடுத்துவோருக்கு தண்டனை விதிக்கவும் வகை செய்கின்றன.
1993-ல் “மனிதக் கழிவு அகற்றுதல் மற்றும் திறந்த கழிவறைகள் தடுப்புச் சட்டம்” என்றொரு மத்திய சட்டம் இயற்றப்பட்டது. 1997 வரை அது அரசிதழில் வெளியிடப்படவில்லை. 2000 ஆண்டு வரையில் எந்த மாநிலமும் இதன் அடிப்படையில் சட்டமியற்றவில்லை. துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகளால் 1994-இல் துவக்கப்பட்ட “சஃபாய் காம்கார் ஆந்தோலன்” என்ற அமைப்பும், சில தன்னார்வக் குழுக்களும், மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் சமூகத்தைச் சேர்ந்த 7 பேரும் இணைந்து டிசம்பர் 2003-ல் பொதுநல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தனர். நீதிமன்ற அவமதிப்புக்காக அரசின் மீது நடவடிக்கை கோரினர். “தங்கள் மீது தவறே இல்லை” என்று மாநில அரசுகள் வாதாடின. இந்தப் பொய்யை முறியடிக்க, ஏராளமான தரவுகளைத் திரட்டி 12 ஆண்டு காலம் போராடி, 27 மார்ச் 2014 அன்று ஒரு சாதகமான தீர்ப்பினைப் பெற்றனர்.
“1993 முதல் மனிதக் கழிவு அகற்றும் பணியிலும் கழிவுநீர் கால்வாயிலும் உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 1268 பேர் இவ்வாறு இறந்திருப்பதாகவும், இவர்களில் 18 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும் பீம் யாத்ராவில் பங்கேற்றவர்கள் தமது உரையில் குறிப்பிட்டனர்.
மனிதக் கழிவகற்றும் பணியைத் தடை செய்து 2013-ல் நாடாளுமன்றமும் ஒரு சட்டம் பிறப்பித்திருக்கிறது. ஆனால் எல்லா மாநில அரசுகளும் “எங்கள் மாநிலத்தில் இப்பிரச்சினை இல்லவே இல்லை” என்றே சாதிக்கின்றன. ஆனால் 7,94,000 பேர் மனிதக்கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. இச்சட்டத்தை மீறுவோரில் மற்றெல்லோரையும் விட அரசுக்குத்தான் முதலிடம்.
ரயில்வே துறை வடிவமைக்கும் ரயில் பெட்டிகளின் கழிவறைகள், தண்டவாளத்தில் மலம் விழுகின்ற வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் துப்புரவுப் பணியாளர்கள்தான் தம் கையால் சுத்தம் செய்கிறார்கள். “தூய்மை இந்தியா இயக்கத்தின் விளைவாக 2019-ல் இந்தியாவில் மனிதக் கழிவை மனிதர் அகற்றுவது முடிவுக்கு வந்து விடும்” என்று தடபுடலாக அறிவித்தது மட்டுமின்றி, இந்தியாவில் புல்லட் ரயில் வலைப்பின்னலை உருவாக்கப்போவதாகவெல்லாம் பேசினார் பிரதமர். ஆனால் ரயில் பெட்டிகளில் உள்ள இந்தக் கழிவறைகள், பயோ டாய்லெட்டுகளாக எப்போது மாற்றியமைக்கப்படும் என்பதற்கு மட்டும், ஒரு கால இலக்கை அவரால் சொல்ல முடியவில்லை.
ஏன் இந்த அலட்சியம்?
ஏப்ரல் 19-ம் தேதியன்று, பீம் யாத்ரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மைய அரசு, மனிதக் கழிவை அகற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பற்றிய விவரங்களை மாநில அரசுகளிடமிருந்து பெற முடியவில்லை என்பதால், தானே நேரடியாக ஆய்வு நடத்த முடிவு செய்திருப்பதாகக் கூறியிருக்கிறது. அரசுக்கு இதில் ஈடுபாடில்லை என்பது பளிச்சென்று தெரிகிறது. இந்த ஆய்வைக் காட்டி இன்னும் பத்து ஆண்டுகளுக்கு துப்புரவுப் பணியாளர்கள் இழுத்தடிக்கப்படுவார்கள்.
உலக அரங்கில் தலைமைப் பாத்திரம் ஆற்ற பெரிதும் ஆசைப்படும் ஒரு தேசம், இப்படிப்பட்ட ஒரு அவமானத்தை எதற்காகச் சுமக்க வேண்டும்? இதற்கு விடை காண்பது கடினமல்ல. ஆகச்சிறுபான்மையான துப்புரவுப் பணியாளர் சமூகம் துண்டு துண்டாக சிதறிக் கிடக்கிறது. மொத்த சமூகத்திலிருந்து மட்டுமின்றி, தலித் சமூகத்திலிருந்தும் துண்டிக்கப்பட்டு எல்லா ஊர்களிலும் ஏதோ ஓர் மூலையிலுள்ள சேரியில் ஒடுங்கிக் கிடக்கிறது. அரசியல் கட்சிகளின் வாக்கு கணக்கில் இந்தச் சமூகத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. இருப்பினும், இது பற்றி ஏன் பேசுகிறார்கள் என்றால், இப்பிரச்சினை தங்களுடைய தேசிய கவுரவத்துக்கு இழுக்காக அமைந்திருப்பதாக எண்ணி ஆளும் வர்க்கத்தினர் சங்கடப்படுகிறார்கள். அந்தக் காலத்து சீர்திருத்தவாதிகள், நியாயப்படுத்த முடியாத கவுரவக் குறைச்சலான விவகாரமாக தீண்டாமையைக் கருதினார்களல்லவா, அது போலத்தான். தீண்டாமையைப் போலவே, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் வழக்கமும் நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்துடன் இணைந்திருக்கிறது. இதனை ஒழித்தால் பெரும்பான்மை சமூகத்தின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இப்பிரச்சினையின்பால் ஆளும் வர்க்கம் கடைப்பிடிக்கும் அணுகுமுறையைப் புரிந்து கொள்வதில் நமக்கு சிரமம் ஒன்றும் இல்லை. மனிதக் கழிவகற்றும் துப்புரவுப் பணியாளர்களின்பால் தலித் இயக்கங்கள் காட்டும் அலட்சியம்தான் விசித்திரமானது. மைய நீரோட்டத்திலுள்ள தலித் அமைப்புகள் இப்பிரச்சினையைக் கையிலெடுத்ததே இல்லை. அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவது மட்டும்தான் தலித் இயக்கத்தின் முதன்மையான போர்தந்திரமாக உள்ளது.
கையால் மலம் அள்ளும் இழிவு தாழ்த்தப்பட்டோர் மீது சுமத்தப்படுவதை முற்றிலுமாகத் தடை செய்யக் கோரி கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
அம்பேத்கர் அரசியலில் பிரதிநிதித்துவம் பெறப் போராடினார். பின்னர் அதனை பொது வேலைவாய்ப்பிற்குக் கொண்டு சென்றார். வேலைவாய்ப்புக்கு கல்வி முன் நிபந்தனை ஆனது. தலித் மக்களின் அரசியல் நலன்களை தலித் அரசியல்வாதிகள் பாதுகாப்பார்கள் என்பதும், அதிகார வர்க்கப் பதவிகளில் அமரும் படித்த தலித்துகள் உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்புக் கவசமாக விளங்குவார்கள் என்பதும் அவரது எதிர்பார்ப்பு. எனவேதான், பெரும்பான்மைதலித் மக்களின் பொருளாயத பிரச்சினைகள் கையாளப்படவில்லை. உழைக்கும் தலித் மக்களிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டுவிட்ட தலித் இயக்கத்தின் அக்கறையோ, இட ஒதுக்கீடு மட்டும்தான் என்று ஆகிவிட்டது.
கடந்த 70 ஆண்டுகளில் தலித் மக்கள் மத்தியில் உருவாகி வந்திருக்கும் நடுத்தர வர்க்கம், தலித் மக்களிடமிருந்து முற்றாகத் தன்னைத் துண்டித்துக் கொண்டு விட்டது. பீம் யாத்ராவில் அம்பேத்கர் மாபெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்ததும், அம்பேத்கரிஸ்டுகள் யாரும் அங்கே இல்லாமலிருந்ததும் மேற்கண்ட உண்மையின் வெளிப்பாடாக அமைந்திருந்தது. குறிப்பிடத்தக்க முற்போக்காளர்கள் பலரும் ஏழைத் துப்புரவுப் பணியாளர்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். ஆனால் அம்பேத்கரிஸ்டுகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர், அங்கே வராமலிருந்ததன் மூலம் தம்மை இனங்காட்டிக் கொண்டனர்.
(எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி, மே,7, 2016 இதழில் வெளியான கட்டுரையின் சற்றே சுருக்கப்பட்ட மொழியாக்கம்) ______________________________ புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________
வெற்றியின் முதல் படியில் ஹோண்டா தொழிலாளர் போராட்டம்
“இது எங்களுக்கான போராட்டம் மட்டும் அல்ல; ஒப்பந்த தொழிலாளர்களான எங்கள் சகோதரர்களுக்காக, அவர்கள் மிகக் கொடூரமாகச் சுரண்டப்படுவதை எதிர்த்தும் நாங்கள் போராடுகிறோம்.”
– திலீப், நிரந்தரத் தொழிலாளி, ஹோண்டா மோட்டார்ஸ், ராஜஸ்தான்.
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் குஷ்கேரா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஹோண்டா மோட்டார்ஸ்-ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தொழிலாளர்களின் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சம், நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடையே ஏற்பட்ட ஐக்கியமும் ஒற்றுமையும்தான். அந்தப் பிணைப்பை நிரந்தரத் தொழிலாளர்கள் முன்கையெடுத்து நிலைநாட்டியதுதான்.
பிப்ரவரி 16 அன்று ஹோண்டா தொழிற்சாலைக்குள் அந்நிர்வாகத்தின் அடாவடித்தனத்தையும் ஒடுக்குமுறையையும் கண்டித்து உற்பத்தியை நிறுத்தி வைத்து நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய போராட்டம்
நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடையே ஒற்றுமையே காணமுடியாத அளவிற்குப் பிளவு இருப்பதுபோலத் தென்படுவதெல்லாம் வெறும் மாயை என்பதையும், மொழி, இனம், பண்பாட்டு வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளி வர்க்கம் ஐக்கியப்பட்டு, முதலாளித்துவ சுரண்டல், அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட முடியும் என்பதையும் அப்போராட்டம் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.
ஜப்பானைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான ஹோண்டா மோட்டார்ஸ், இந்திய இரு சக்கர வாகன சந்தையில் 22 சதவீதத்தைத் தனது பிடியில் வைத்திருக்கிறது. அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஹோண்டா நிறுவனத்திற்குத் தொழிற்சாலைகள் இருந்தாலும், ராஜஸ்தானிலுள்ள தொழிற்சாலைதான் உற்பத்தித் திறனில் ஆசியாவிலேயே முதன்மையானது எனக் கூறப்படுகிறது. அத்தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 4,400 இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 20 விநாடிகளுக்குள் ஒரு பைக் அல்லது ஒரு ஸ்கூட்டர்.
எஃப் 2 எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஹோண்டா நிறுவனத்தின் ராஜஸ்தான் தொழிற்சாலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டதட்ட 4,000. ஒரு தொழிலாளி, ஓவர் டைமையும் சேர்த்துக் கணக்கிட்டால், 12 மணி நேரத்தில் ஒரு வாகனத்தைத் தயாரிக்கிறார் எனக் கொள்ளலாம்.
எட்டு மணி நேரம் கொண்ட ஷிஃப்டில், உணவு இடைவேளை முப்பது நிமிடங்கள், தலா 15 நிமிடங்கள் கொண்ட இரண்டு தேநீர் இடைவேளை, மீதமுள்ள ஏழு மணி நேரமும் ஒரு விநாடியைக்கூட வீணாக்காமல் இயந்திரங்களோடு போட்டிபோட்டு உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும். இதில் எந்த இடையூறையும் – சிறுநீர் கழிக்கவோ, தொழிலாளி சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ நிர்வாகம் அனுமதிப்பதில்லை. இடைவேளை நேரத்தில் ஒரு நிரந்தரத் தொழிலாளி சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்ப ஓரிரு விநாடி தாமதமானாலும், அவருக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்படுவதோடு, எச்சரிக்கை நோட்டீசும் தரப்படும்.
ஒரு ஒப்பந்த தொழிலாளி இவ்வாறான ‘தவறை’ச் செய்தால், அவரிடம் எந்தவிதமான விளக்கமும் கேட்காமல், அவர் வேலையிலிருந்து துரத்தப்படுவார். ஒப்பந்த தொழிலாளிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும், அதன் காரணமாக ஒருநாள்கூட விடுப்பு எடுக்க முடியாது. அப்படி எடுத்துவிட்டால், அவருடைய ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டிற்குப் புதுப்பிக்கப் படாமல் ரத்து செய்யப்படும்.
சிறு தவறுக்குக்கூட நிரந்தரத் தொழிலாளர்கள் தகாத வார்த்தைகளால் ஏசப்பட்டு, அவமானப்படுத்தப்படுவதும்; ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும் ஹோண்டா நிர்வாகத்தில் சர்வ சாதாரணமானது.
ஹோண்டா தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து குர்கான், மானேசர், தாபுகாரா சிறப்புப் பொருளாதார மண்டலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குர்கானில் உள்ள தேவிலால் விளையட்டு அரங்க மைதானத்தில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
4,000 தொழிலாளர்கள் வேலை செய்து வரும் ராஜஸ்தானிலுள்ள ஹோண்டாவின் எஃப் 2 தொழிற்சாலையில் 472 பேர்தான் நிரந்தரத் தொழிலாளர்கள். மீதமுள்ள அனைவரும் பல்வேறு ஏஜென்சியின் கீழ்வரும் ஒப்பந்த தொழிலாளர்கள். ஓவர்டைமையும் சேர்த்துக் கணக்கிட்டால், ஒரு நிரந்தரத் தொழிலாளி மாதமொன்றுக்கு ரூ 22,000 வரை ஊதியம் பெறலாம். ஆனால், அதே வேலையைச் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளியின் மாதக் கூலி ரூ 10,000 தான்.
சலிக்காமல், எதிர்த்துப் பேசாமல், கடினமாக வேலை செய்தால் நிரந்தரத் தொழிலாளியாகி விடலாம் என்ற கனவில் ஒப்பந்த தொழிலாளி இருத்தி வைக்கப்படுகிறான். ஆனால், நிரந்தரத் தொழிலாளியாக உயர்வு பெறுவதற்கு ஹோண்டா நிர்வாகம் நடத்தும் தேர்வில் தோல்வியடையச் செய்வதன் மூலம் ஒப்பந்த தொழிலாளி ஒப்பந்த தொழிலாளியாகவே நிறுத்தப்படுகிறான்.
மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட சில மாதங்களிலேயே, ராஜஸ்தானை ஆளும் பா.ஜ.க. அரசு தொழிலாளர் நலச் சட்டம், தொழிற்பழகுநர் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம், தொழிற்சாலை சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்து, ராஜஸ்தானைப் பன்னாட்டு நிறுவனங்களின் பலிபீடமாக மாற்றியது. இத்திருத்தங்கள் தொழிலாளர்களைத் தமது கொத்தடிமைகளாக நடத்துவதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தன.
இத்திருத்தங்கள் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை உருவாக்கி விடும் என பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜே அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் கனவு கண்டன. அந்த எண்ணத்தில் சம்மட்டி அடியாக இறங்கியது, ஹோண்டா தொழிலாளர்களின் ஐக்கியமும் போராட்டமும். தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டவுடேனேயே, ஆகஸ்டு 2015-ல் ஹோண்டா தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தைத் தொடங்கக் கோரும் விண்ணப்பம் தொழிலாளர் நலத் துறையிடம் அளிக்கப்பட்டது.
தொழிலாளர்களின் நியாயமான, சட்டபூர்வமான, ஜனநாயகப்பூர்வமான இக்கோரிக்கையை, பா.ஜ.க. அரசும், ஹோண்டா நிர்வாகமும் சட்டவிரோதமான, மோசடியான குறுக்கு வழிகளில் முறியடிக்க முனைந்தன. தொழிற்சங்கத்தைக் கட்டுவதற்கு ஆதரவாகக் கையெழுத்திட்ட 227 தொழிலாளர்களுள் ஒரு 21 பேரின் கையெழுத்தைப் போலியாக (ஃபோர்ஜரி)ப் போட்டு, தொழிற்சங்கம் தொடங்க தங்களுக்கு விருப்பமில்லை என்ற மனுவைத் தயாரித்து, தொழிலாளர் நலத் துறையிடம் கொடுத்தது, நிர்வாகம். இது குறித்து எந்தவொரு முறையான விசாரணையையும் நடத்தாமல், தொழிலாளர்களின் விண்ணப்பத்தை முடக்கி வைத்தது, தொழிலாளர் நலத் துறை.
தொழிற்சங்கத் தலைவராக முன்நிறுத்தப்பட்ட நரேஷ்குமாரை பீகாருக்கு மாற்றியது நிர்வாகம். இதற்கு அவர் அடிபணிய மறுக்கவே, அவரும் தொழிற்சங்கச் செயலராக முன்நிறுத்தப்பட்ட ராஜ்பால் உள்ளிட்டு மூன்று பேரைப் பணி நீக்கம் செய்ததோடு, மேலும் 5 தொழிலாளர்களைப் பணியிடை நீக்கம் செய்தது. மேலும், செப்டம்பர் 2015 தொடங்கி பிப்ரவரி 2016-க்குள் தொழிற்சங்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட 1,200 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, அந்த வேலை சுமை முழுவதும் மற்ற தொழிலாளர்கள் மீது வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டது. நிர்வாகத்தின் அடியாட்கள், தொழிலாளர்கள் என்ற போர்வையில் உற்பத்திப் பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்கள் அவர்களின் நேரடிக் கண்காணிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
இவ்வாறு தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையேயான முரண்பாடு சிறுகச்சிறுக முற்றி, பிப்ரவரி 16 அன்று போராட்டமாக வெடித்தது. அன்றைய தினம், தொடர்ந்து மூன்று நாட்கள் ஓவர் டைம் வேலை வாங்கப்பட்ட ஒரு ஒப்பந்த தொழிலாளியை நான்காவது நாளாகவும் ஓவர் டைம் செய்யுமாறு அதிகாரிகள் நிர்பந்திக்க, அவர் தனது உடல் நிலையைக் காட்டி மறுத்தார். அவரின் நிலையைப் பரிசீலிக்கவே மறுத்த சூப்பர்வைசர்கள், அத்தொழிலாளியைத் தரக்குறைவாகப் பேசியும் அடித்தும் அவமானப்படுத்தினர். நிர்வாகத்தின் இந்த ஈனத்தனமான செயலையடுத்து, குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உற்பத்தி நிறுத்தம் போராட்டத்தை உடனடியாகவே தொடங்கினர். “ஏ” ஷிப்டில் வேலை செய்துகொண்டிருந்த 2,000 தொழிலாளர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஒப்பந்த தொழிலாளியைத் தாக்கிய மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதோடு நின்றுவிடாமல், பணி நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க முன்னணியாளர்கள், வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தவும், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவும் கோரி தொழிற்சாலைக்குள்ளேயே போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதேபொழுதில், அடுத்த ஷிப்டுக்கு வரத்
தயாராக தொழிற்சாலையின் வாசலில் நின்றுகொண்டிருந்த தொழிலாளர்களும் நிர்வாகத்தைக் கண்டித்துப் போராட்டத்தைத் தொடங்கினர்.
தொழிலாளர்களின் இந்தப் பதிலடியை எதிர்பார்க்காத நிர்வாகம் போலீசின் உதவியோடு போராட்டத்தை முறியடிக்க முனைந்தது. தொழிற்சாலைகளின் அனைத்து நுழைவாயில்களையும் அடைத்து உள்ளே போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களைத் தொழிற்சாலைக்குள் சிறை வைத்தது. நிர்வாகத்தின் கைக்கூலியாக வந்த வட்டாட்சியர், பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஐந்து முன்னணியாளர்களை அழைத்துச் சென்று, போலீசிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து பின்புற வாயில் வழியாக போலீசையும் ரவுடிகளையும் தொழிற்சாலைக்குள் இறக்கி, போராடிய தொழிலாளர்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது. போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னணியாளர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், தொடர்ந்து எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்திருந்து, சித்திரவதை செய்தது.
இதன் பிறகும் பிப்.16 அன்று தொடங்கிய போராட்டத்தின் கனல் தணிந்து போகாமல் கனன்று கொண்டிருக்கவே, தொழிற்சங்க முன்னணியாளர்களைத் தேடித் தேடிக் கைது செய்தது, போலீசு. மொத்தமாக 44 தொழிலாளர்கள் பிணையில் வெளியில் வர முடியாத வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். போராடிய தொழிலாளர்கள் ஆலையைச் சுற்றி 500 மீட்டருக்குள் நுழையமுடியாதபடி நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. புதிய ஒப்பந்த தொழிலாளர்களைப் பணிக்கு எடுத்தும், குஜராத்தில் உள்ள தனது ஆலையின் உற்பத்தி இலக்கைக் கூட்டியும் உற்பத்தி சரிந்துவிடாமல் காப்பாற்ற முனைந்தது, ஹோண்டா நிர்வாகம்.
இந்தப் போராட்டத்தையும், அதன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் வெளியுலகிற்குத் தெரிந்துவிடாதபடி மூடி மறைத்துவிட ஹோண்டா நிர்வாகமும், போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டன. தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்த “நியூஸ் லாண்டரி” என்ற இணைய தளப் பத்திரிகையைச் சேர்ந்த அமித் என்ற பத்திரிகையாளர் ஹோண்டா நிர்வாகத்தின் அடியாட்களால் மிரட்டப்பட்டதோடு, உள்ளூர் போலீசு நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டார்.
ஆனாலும், ஹோண்டா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளும் செய்திகளும் போராட்டங்களும் பரவியதை ஹோண்டா-பா.ஜ.க.கூட்டணியால் தடுக்க முடியவில்லை. குறிப்பாக, உள்ளூர் பொதுமக்கள் கட்சி வேறுபாடின்றி, ஹோண்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று கிராமக் கூட்டங்களை நடத்தினர். தாபகுரா, மானேசர் ஆகிய இடங்களில் உள்ள மாருதி தொழிலாளர்களும், மானேசரில் உள்ள ஹோண்டா தொழிலாளர்களும் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலைமைகள் ஹோண்டா-பா.ஜ.க. ராஜஸ்தான் அரசு கூட்டணியைப் பின்வாங்கச் செய்து, கைது செய்யப்பட்ட 44 தொழிலாளர்களுள் 39 பேருக்குப் பிணை வழங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.
ஹோண்டா நிர்வாகம் தொழிலாளர்கள் மத்தியில் ஐக்கியம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டே, தனது தொழிற்சாலையில் உ.பி., பீகார், ஒரிசா எனப் பல்வேறு மாநிங்களைச் சேர்ந்தவர்களை ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணிக்கு எடுத்து வருகிறது. எனினும், ஹோண்டா தொழிலாளர்கள் நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் மத்தியிலும் ஐக்கியத்தைச் சாதித்துள்ளனர். இவையெல்லாம், ஹோண்டா தொழிலாளர்கள் தமது தொழிற்சங்க உரிமைக்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு தொடங்கி விடாப்பிடியாக நடத்திவரும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளாகும்.
போராட்டத்தின் வெற்றி தோல்வியைக் காட்டிலும், வேறுபாடுகளைக் கடந்து இத்தொழிலாளர்கள் சாதித்திருக்கும் ஒற்றுமை மிகவும் முக்கியமானது. சர்வதேச மூலதனமும் அரசும் இணைந்து நடத்தும் இத்தாக்குதலை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும் தேச, இனப் பிரிவினை கடந்த ஒற்றுமையைச் சாதிக்க முடியும். சாதித்தாக வேண்டும்.
கொள்கையா, சாதியா, பணமா? தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பது எது?
“மக்கள் சரியில்லைங்க. மக்கள் அயோக்கியர்களாக இருக்கிறதாலே அரசியல்வாதிகளும் அயோக்கியர்களா இருக்காங்க. அரசியல்வாதிகள் அயோக்கியர்களா இருக்கிறதாலே அரசாங்கங்களும் அயோக்கியத்தனமா நடக்குது. எல்லாமே காசுதான். ஓட்டு வாங்க பணத்தை முதலீடு செஞ்சி பதவிக்கு வர்றவன், வந்த பின்னாலே அதை பத்து மடங்கா திருப்பி எடுக்கத்தானே நினைப்பான்?” – அவரது உரையாடலில் வலிந்து திணிக்கப்பட்ட ஒரு மேடை பேச்சு பாணி இருந்தது.
அவர் தன்னை ”தோழர் கிருஷ்ணமூர்த்தி” என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார். பேச்சின் இடையிலும் தன்னைத் தானே குறிப்பிடும் போதும் பிறர் அழைக்கும் போதும் “தோழர்” என்கிற அடைமொழி தவறி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவர் எர்ரகொல்லனூர் கிளை சி.பி.ஐ. கட்சியின் செயலாளர். எர்ரகொல்லனூர் பென்னாகரம் நகரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வன்னிய சாதி வாக்குகளை அறுவடை செய்து வெற்றி பெற்றுவிடலாம் எனக் கனவு கொண்டிருந்த அன்புமணியை, டெபாசிட்டைக் காலிசெய்து தோற்கடித்தனர் பெண்ணாகரம் தொகுதி மக்கள்
“இந்த ஊர்லயே மாமா தாங்க நல்லா அரசியல் பேசுவாரு… தி.மு.க.காரன் ஓட்டுக்கு காசு கொடுத்தப்ப கூட வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டாரு. ஆனா அத்தை தனியா போயி நாலு ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூவாய்னு கறாரா பேசி வாங்கினு வந்திருச்சி” என்றார் மணிவண்ணன். தோழர் கிருஷ்ணமூர்த்தியின் மருமகன் இவர். நடுச்சபையில் வேட்டி உரிந்து விழுந்தவரைப் போல் துணுக்குற்றார் தோழர் கிருஷ்ணமூர்த்தி.
“என்னாங்க செய்யிறது.. வீட்டுல பொம்பளைங்க பேராசை பிடிச்சவளுங்களா இருக்காளுங்க. அவளுங்களுக்கு அரசியலெல்லாம் புரியறதில்லே” சற்றுத் தொலைவில் சாயம் போய் படபடத்துக் கொண்டிருந்த அவரது கட்சிக் கொடியிலிருந்த சிவப்பு தோழரின் முகத்தில் சட்டென ஏறியது.
அன்புமணி தலைகுப்புறக் கவிழ்ந்ததற்கு இரண்டு நாள் கழித்து நாங்கள் பென்னாகரம் சென்றிருந்தோம். அவரது தோல்வியை நூலாகப் பிடித்துக் கொண்டு மக்கள் எப்படி ஓட்டளிக்கிறார்கள், எதற்காக ஓட்டளிக்கிறார்கள், தேர்தல் அரசியல் சமூகத்தின் வேர்மட்ட அளவில் எப்படிச் செயல்படுகிறது, வெற்றி- தோல்வியை தீர்மானிக்கும் சமன்பாடுகள் எவை என்பதைப் புரிந்து கொள்வதே எமது பயணத்தின் நோக்கங்கள்.
பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர்கள் நெருக்கமாக வசிக்கும் சில கிராமங்கள், பென்னாகரம் நகரப் பகுதி மற்றும் வன்னியரல்லாத பிற சாதியினர் வசிக்கும் பகுதிகளைத் தெரிவு செய்தோம்.
அன்புமணியின் மனைவியும் மக்களும் அவருக்காக வன்னிய சாதி உழைக்கும் மக்களிடத்தில் பிரச்சார வேட்டை நடத்தியதைப் பற்றிக் கேட்டபொழுது, அவுங்க கலரைப் பாரு, நம்ம கலரைப் பாரு, ரெண்டு பேரும் ஒரு சாதியாப்பா?” என்று கேலி செய்து சிரித்தனர்.
“ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. ஐயாயிரத்தி சொச்சம் ஓட்டு வாங்கி டெப்பாசிட்டையும் பறிகொடுத்து தோற்கிறார் என்பது மகா கேவலமாச்சே தோழர். அதிலும் பென்னாகரம் சி.பி.ஐ. கட்சி செல்வாக்கோடு இருக்கும் பகுதியாச்சே? இங்கே வி.சி. ஓட்டு இருக்கு, தே.மு.தி.க.வுக்கு ஆதரவு இருக்கு…எப்படி தோற்றீர்கள்?”
அவர் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றியது. “ஆங்.எப்படி ஜெயிப்பான்னு கேட்கிறேன். மொத்த ஓட்டுல வன்னியர் ஓட்டு பாதிக்கும் கொஞ்சம் கீழேன்னா மத்த சாதி ஓட்டு பாதிக்கும் கொஞ்சம் மேல இருக்கே?”
“அங்கதான் விசயமே இருக்கு… ஏற்கனவே அன்புமணி எம்.பி.யா ஜெயிச்ச பின்னாடி வன்னியருங்க ரொம்ப கொட்டமடிச்சிட்டாங்க. சின்னச் சின்ன பசங்க கும்பலா பைக்ல டர்ர்ருன்னு வர்றதும் போறதும்… ரோட்டுல மத்த சாதிக்காரனை மறிச்சி கலாட்டா பன்றதும்…ஏகப்பட்ட தொல்லை. திரும்ப எம்.எல்.ஏ.வா ஜெயிச்சா கையிலெ பிடிக்க முடியுமா? அதான் மத்த சாதிக்காரனெல்லாம் அன்புமணி தோற்கனும்னா இன்பசேகரனுக்கு போட்டா தான் ஆகும்னு முடிவெடுத்திருக்காங்க… அதே மாதிரி வன்னியர்கள்லேயும் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வும் ஆதரவு இருக்கு. அந்த ஓட்டு பிரியுமில்லே?”
”அப்படின்னா இதர சாதிக்காரங்க சேர்ந்து தான் பா.ம.க.வை தோற்கடிச்சதா சொல்றீங்க?”
”அட ஆமாங்க. இந்த ஊர்ல பத்து பதினோரு வன்னியர் குடும்பங்கள் தான் இருக்கும். மத்தபடி பெரும்பாலும் நாயுடு – ஒக்கலிகா சமூகம் தான்… எங்க வார்டை எடுத்துக்கங்க… மொத்தம் 930 ஓட்டு இருக்கு. அதுல தி.மு.க.வுக்கு 430 ஓட்டு, அ.தி.மு.க.வுக்கு 175 ஓட்டு விழுந்திருக்கு.. பா.ம.க.வுக்கு 27 ஓட்டு தான் கிடைச்சிருக்கு” என்று ஒரு இடைவெளி விட்டர்வர் “சி.பி.ஐ.க்கு 30 ஓட்டு விழுந்திச்சி” என்றார். பின், “மத்த சாதிக்காரர்களை பகைச்சிகிட்டு அவங்க ஜெயிக்க முடியுமா?” என்று தன் மருமகனைப் பார்த்து கேட்டார். இருவரின் முகங்களிலும் வெற்றிப் பெருமிதம்.
“உங்கள் வீட்டில் யாருக்குப் போட்டார்கள்” என்கிற சங்கடமான கேள்வியைத் தவிர்த்து விட்டோம்.
இந்தத் தேர்தலில் சந்தேகமின்றி காசு விளையாடியிருக்கிறது. காசு மட்டுமின்றி, சாதி உள்ளிட்ட வேறு காரணிகளும் கூட உள்ளது. ஒரே வீட்டிற்கு தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் போட்டி போட்டு காசு கொடுத்துள்ளனர். பா.ம.க. ஊர் நாட்டாமைகளுக்குச் செலவு செய்ததாக மற்ற கட்சியினர் சொல்கின்றனர். இன்னாரென்று குறிப்பான ஆதாரங்கள் எதையும் கூறவில்லை. நேற்று முளைத்த நாம் தமிழர் கட்சியினர் வெளியூரில் இருந்து ஆட்களை இறக்கி வேலை செய்திருக்கின்றனர். இவர்கள் வாங்கிய சில நூறு ஓட்டுக்களுக்கு செலவழித்த தொகையை கணக்கிட்டால் ஓப்பீட்டளவில் பெரிய கட்சிகளுக்கு இணையாக செலவழித்துள்ளனர்.
“உங்க ஏரியாவுல எவ்வளவு காசு கொடுத்தாங்க?” பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு அருகே தேநீர் கடை நடத்தும் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
“இவங்க ஐநூறு, அவங்க அறுநூறு” என்றார் முகத்தில் கொஞ்சம் வெட்கம் எட்டிப் பார்த்தது.
“வீட்ல மொத்தம் எத்தனை ஓட்டு?”
“மொத்தம் ஆறு ஓட்டு இருக்குங்க..”
“அப்ப ஆறாயிரத்துக்கு மேல தேறியிருக்குமே?”
“எதுனா செலவுக்கு ஆகுமில்லே?”
“ஏன் பணம் வாங்கினீங்க? காசு வாங்கி ஓட்டை விற்பது தப்பில்லையா? நாளைக்கு தெரு விளக்கு எரியலெ, ரோடு சரியில்லென்னு அவன் கிட்டே போயி நிக்க முடியுமா உங்களால?”
“என்னா சார், அவன் வூட்டு துட்டையா குட்த்தான்? எல்லாம் நம்ப கிட்ட கொள்ளெ அடிச்சது தானே? இப்படி தேர்தல்னா தானே துட்ட கண்ல காட்றானுவோ? இப்ப காசு குடுக்காம ஒருத்தன் ஜெயிக்கிறான்னே வையிங்க… அவன் மட்டும் ஜெயிச்சி வந்து என்னாத்த கிழிக்கப் போறான்? எப்டியும் ஜெயிச்சி உள்ற போன திருடத் தானே போறான்?” அவரது முகத்தில் இருந்த வெட்கம் அகன்றது; தர்மாவேசத்தோடு பேசிச் சென்றவரை தடுத்து அடுத்த கேள்வியை கேட்டோம்.
“மூணு வோட்டு தி.மு.க.வுக்கு, மூணு வோட்டு ரெட்டெலைக்கு” கோபம் அடங்கி நியாயஸ்தராக பேசினார்.
“இப்படி காசு வாங்கிட்டு சொந்த சாதிக்காரருக்கே துரோகம் செஞ்சிருக்கீங்களே; உங்கள மாதிரி ஆளுங்க இருந்தா எப்படிங்க அன்புமணி முதலமைச்சர் ஆவாரு?”
“பென்னாகரத்துல ஜெயிச்சி தான் அவரு முதலமைச்சர் ஆகப் போறாரா? கோயமுத்தூர்ல, மதுரைல, திருச்சில, மெட்றாசுல எல்லாம் ஜெயிக்க வேணாம்? சாதிய சொல்லித் தானே இம்மாம் பெரிய கட்சி ஆனாங்க; சாதிக்கு என்ன செஞ்சாங்க? நாங்க கஸ்டப்படறோம், துன்றோம்… சாதியா சோறு போட்டுச்சி… இல்ல சாதிக்காரன்னு ஆத்திர அவசரத்துக்கு ஐயா கிட்ட கைமாத்து கேட்ட குடுத்துட போறாரா?”
“ரெண்டு கட்சியும் காசு கொடுக்கலைன்னா மாம்பழத்துக்கு தானே போட்டிருப்பீங்க?”
“அப்டி இல்ல சார். எப்டியும் சூரியனோ ரெட்டெலையோ தான் வரப் போவுது.இன்னாத்துக்கு ஓட்டை வேஸ்ட் பண்ணனும்? அவுங்க ரெண்டு பேர்ல யாருக்கோ தான் போட்ருப்பேன்”
மக்கள் ஜெயிக்கும் குதிரையின் மேல் பந்தயம் கட்டுகிறார்கள். இதில் பணம் ஒரு துணைக்காரணியாக சேர்ந்து விடுகிறது. மக்கள் எவருக்கும் பணம் வாங்குவதில் சிறிதளவுக்கும் கூச்சமோ தயக்கமோ இல்லை.”நம்ம காசு தானே” என்கிற உரிமையில் கைநீட்டுகிறார்கள். சில இடங்களில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தடுத்த மாற்றுக் கட்சிக்காரர்களை மக்களே அடித்து விரட்டியுள்ளனர்.
மல்லாபுரம், கூத்தப்பள்ளி, குளத்துமேடு பகுதி மக்கள் தங்களுக்கு கட்சிகளிடமிருந்து காசு வருவது தாமதமானதும் உள்ளூர் கட்சிப் பிரமுகர்களின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு சண்டையிட்டிருக்கிறார்கள். “யாரு அப்பமூட்டு காசு, மேலயிருந்து குடுத்தா நீ அமுக்க பார்க்கிறயா?” என்று கேட்டு ஏசியிருக்கிறார்கள்.
காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டவர்களை மூன்று வகையாக பார்க்க முடிகிறது.
முதலாவதாக, யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதை முன்பே தீர்மானித்துக் கொண்டவர்கள்.தாம் ஓட்டுப் போடும் கட்சியை ‘உரிமையோடு’ அணுகி காசு வாங்கிக் கொண்டு, அதே கட்சிக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். தீர்மானித்ததற்கு மாறான கட்சியின் முன்வந்து காசு கொடுத்தாலும் மறுப்பதில்லை; ஆனால் ஓட்டு, தீர்மானத்தின் அடிப்படையில்தான். கூத்தப்பாடி கிராமத்திற்குட்பட்ட காலனியில் பெரும்பான்மையான ஓட்டுக்கள் தி.மு.க.வுக்குப் பதிவாகியுள்ளது. நாங்கள் அங்குள்ள மக்கள் சிலரிடம் பேசினோம்.
”இருந்தாலும் துட்டு வாங்கிட்டு தானே ஓட்டுப் போட்டீங்க?”
“காசு கெடக்குது சார்; கருணாநிதி வந்திருக்கலாம்; வராம பூட்டாரே” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
“ஏன் கருணாநிதி வந்திருந்தா மட்டும் உங்க பிரச்சினை எல்லாம் தீர்த்திருப்பாரா?”
“யாரு வந்தாலும் ஒரு பிரச்சினையும் தீரப் போறதில்லே; ஏதோ படிச்சவுகளுக்கு வேலை எடுத்துக் கொடுப்பாருன்னு சொன்னாங்க” என்கிறார் அருகில் நின்ற ராமக்காள்.
அந்தக் காலனியில் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்களில் அநேகர் பட்டதாரிகள்.அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முறையான வேலையில்லை.பி.காம்.பட்டதாரியான ராஜு வேலையின்றி இருக்கிறார்.பெங்களூர் சென்றால் எதாவது கொரியர் டெலிவரி வேலை கிடைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்த சதீஸ், ஓசூரில் உள்ள இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் கூலி வேலைக்குச் செல்கிறார்.
இந்தக் காலனியில் சென்ற தேர்தல்களில் இரட்டை இலைக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. வேறு சில பகுதிகளில் உத்திரவாதமாக இரட்டை இலைக்கே ஓட்டு விழும் என்கிற மாதிரியான பகுதிகளில் அக்கட்சியினர் காசு கொடுக்கவில்லை. அந்த மாதிரியான இடங்களில் ஒன்று, நம்மை ஏமாற்றி விட்டார்களே என்கிற ஆத்திரத்தில் ஓட்டுப் போடாமலோ அல்லது நோட்டாவிற்கோ ஓட்டுப் போட்டுள்ளனர். ஒரு கட்சி சார்பான பகுதிகளில் சம்பந்தப்பட்ட கட்சி காசு கொடுக்காமல் மாற்றுக் கட்சி காசு கொடுத்தால், அங்கே கணிசமாக மாற்றிப் போட்டுள்ளனர்.
இரண்டாவது பிரிவினர், எந்தக் கட்சி காசு கொடுத்ததோ அதே கட்சிக்கே ஓட்டுப் போட்டுள்ளனர். உள்ளூர் அளவில் உள்ள கட்சிப் பிரமுகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து ஏரியாக்களைப் பிரித்துக் கொண்டு மேலிடத்திலிருந்து வரும் தொகையில் தாங்கள் அமுக்கியது போக எஞ்சியதை மக்களுக்கு விநியோகிக்கும் புரோக்கர்களாகச் செயல்பட்டுள்ளனர். இது மாதிரியான பகுதிகளில் கீழ்மட்டத்தில் கிளைக்கழக அளவில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. தங்களுக்குள் சச்சரவின்றி ஓட்டுக்களைப் பிரித்துக் கொண்டு பணத்தை விநியோகித்துள்ளனர். இது போன்ற பகுதிகளில் ஒரே வீட்டுக்கு இரண்டு, மூன்று கட்சிகள் காசு கொடுத்து வாக்காளர்களைக் குழப்பியடிக்காமல் ஜனநாயகத்தை சிறப்பாக காப்பாற்றியிருக்கிறார்கள்.
கள்ளிபுரம் காலனி பகுதியில் ஊர் மக்களே கூட்டம் போட்டு பா.ம.க.வுக்கு ஓட்டுப் போடுவதில்லை என்று தீர்மானித்துள்ளனர். மற்ற இரு கட்சிகளில் எதற்கு ஓட்டுப் போடுவது என்பதைத் தீர்மானிக்க இரு பெரிய கட்சிகளையும் உள்ளூர் புரோக்கர்கள் மூலமாக அணுகியுள்ளனர். இரு தரப்புடனும் சமமாக பேரம் பேசி கடைசியில் தி.மு.க.வுடனான பேரம் படிந்துள்ளது. அதன்படி, தி.மு.க. வேட்பாளர் இன்பசேகரன் கோயில் கட்டுவதற்கு நிதி அளிப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மூன்றாவது பிரிவினர், எல்லா கட்சிகளிடமும் காசு வாங்கிக் கொண்டு வீட்டிலிருக்கும் ஓட்டுக்களை விகிதாச்சார அடிப்படையில் பிரித்துப் போட்டுள்ளனர். இவர்களுக்கு கட்சி, அரசியல் பற்றியோ அல்லது கட்சிகள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் பற்றியோ பெரியளவில் மதிப்பு இல்லை. “யார் ஜெயித்தாலும் எதுவும் மாறப் போவதில்லை”,”எவன் ஜெயிச்சாலும் திருடத்தான் போகிறான்”, “ஓட்டுப் போட்டாலும் ஒன்றுதான் போடாவிட்டாலும் ஒன்றுதான்”, “தேர்தல் என்பதே மக்களை ஏமாற்றுவதற்காகத்தான்” என்றெல்லாம் ‘தத்துவார்த்தமாக’ பேசத் துவங்கும் இவர்கள், இந்த தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டு முடிந்தவரை கட்சிகளிடமிருந்து ’கறந்து’ விட வேண்டும் என்கிறார்கள். இப்போது விட்டால் எப்படியும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நம்மைப் பார்க்க இவர்களில் எவனும் வரப் போவதில்லை என்று சொல்லும் இவர்கள், கிடைத்தற்கரிய வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
என்.ஜி.ஓ.க்களோ, தேர்தல் ஆணையமோ, புதிய தலைமுறை மொக்கைகளோ சொல்வது போல் நல்ல வேட்பாளர்களைத் தேடி அவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினால் தங்கள் வாழ்க்கை சிறப்படைந்து விடும் என்கிற மூட நம்பிக்கைகள் மக்களுக்கே இல்லை. சீசனுக்கு விற்கப்படும் பண்டங்களைப் போல் தான் தங்கள் ஓட்டுரிமையை அவர்கள் பாவிக்கிறார்கள்.
***
அதே நேரத்தில் பணத்துக்கு சற்றும் குறையாத முக்கியத்துவத்தை சாதியும் பெற்றிருக்கிறது. பென்னாகரம் தொகுதியின் மொத்த வாக்குகள் சுமார் 2,26,000 வாக்குகள். அதில் 1,10,000 வன்னியர்கள், சுமார் 40,000 தாழ்த்தப்பட்டோர்; ஒக்கலிகர்,குறும்பர் போன்ற சாதியினர் 15,000. தெலுங்கு பேசும் நாயக்கர், நாயுடு போன்றோர் 15,000. முஸ்லிம்கள் 20,000; இவையன்றி மற்ற சாதியினர் என்பது உத்தேசமான சாதி ரீதியான வாக்கு கணக்கு.
தொகுதியின் வ.கம்யூ எம்.எல்.ஏ.வான நஞ்சப்பன் இந்த தேர்தலில் வெறும் 5,000 வாக்குகள்தான் வாங்கியிருக்கிறார். அவரே மறைமுகமாக அ.தி.மு.க.வுக்கு ஆதரவளித்ததுதான் இதற்குக் காரணம் என்றும் கூறுகிறார்கள். தி.மு.க.விற்கு ஓட்டளித்தால்தான் பா.ம.க.வை தோற்கடிக்க முடியும் என்று, தாழ்த்தப்பட்ட மக்களை தி.மு.க.விற்கு ஓட்டளிக்குமாறு வி.சி. கட்சியைச் சேர்ந்தவர்களே சில கிராமங்களில் கோரியிருக்கின்றனர்.
வன்னியர் வாக்குகள் சரிபாதி இருந்தும் அன்புமணி ஏன் படுதோல்வி அடைந்தார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவர் எம்.பி.தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் மட்டும் அன்புமணி 93,000 வாக்குகள் பெற்றிருக்கிறார். இளவரசன் -திவ்யா காதலுக்கு எதிராக பா.ம.க. தோற்றுவித்திருந்த சாதிவெறி, வன்னியர்கள் மத்தியில் மட்டுமின்றி மற்ற ஆதிக்க சாதியினரிடமும் செல்வாக்கு செலுத்தியதே இதற்கு முதற்காரணம். அன்று அ.தி.மு.க.வின் கே.பி.முனுசாமி, தி.மு.க.வின் இன்பசேகரன், வலது கம்யூ. கட்சியின் நஞ்சப்பன் ஆகிய அனைவரும் அன்புமணிக்கு ஆதரவாக வேலை செய்தனரென்று அனைவரும் கூறுகின்றனர்.
இன்பசேகரனின் தந்தையான மறைந்த பெரியண்ணன் எம்.எல்.ஏ, ஏற்கெனவே பா.ம.க. விலிருந்து தி.மு.க.விற்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்பசேகரனின் நடவடிக்கை பற்றி தி.மு.க. தலைமைக்குத் தெரிந்த போதிலும், இந்த காரணத்தை நேரடியாகச் சொல்ல அஞ்சி, “உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் கட்சி விரோத நடவடிக்கை” என்று கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். அவருடைய சாதி செல்வாக்கு காரணமாக தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டு விட்டனர்.
2014-இல் அன்புமணி வெற்றி பெற்றதன் பின்புலம் இதுதான். வன்னியர் மட்டுமல்ல, குறிப்பிட்ட வட்டாரத்தில் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சாதி எதுவாக இருந்தாலும் சரி, அந்த சாதியின் பெயரால் இயங்கும் கட்சியை மற்றெல்லா சாதியினரும் உள்ளூர வெறுக்கவே செய்கின்றனர். இந்த வெறுப்புணர்வை தலித் மக்களுக்கு எதிராகத் தந்திரமாக மடை மாற்றி விட்டதன் மூலம் 2014-இல் அன்புமணி வெற்றி பெற்றிருக்கிறார். அவ்வளவே. வெற்றி பெற்ற பின்னர் பா.ம.க.வினர் தங்களது அடாவடித்தனங்கள் காரணமாக மற்ற ஆதிக்க சாதியினரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது மட்டுமின்றி, வன்னியர் சமூக மக்கள் மத்தியிலேயே தனிமைப்பட்டுவிட்டனர் என்பதையும் அனைவரும் கூறுகின்றனர்.
இருந்த போதிலும் 20 முதல் 25 வயது வரை உள்ள வன்னிய இளைஞர்கள் அநேகமாக பா.ம.க.வுக்குத்தான் வாக்களித்துள்ளனர். வெறும் சாதிவெறியை மட்டும் வைத்து இளைஞர்களைக் கட்டுக்குள் முடியாது என்பதால், “கட்சி சீட்டு” என்ற பெயரில் எல்லா கிராமங்களிலும் ஏலச்சீட்டு நடத்தியிருக்கின்றனர். இந்தப் பணத்திலிருந்து வட்டிக்கு கொடுப்பது, கட்சி மாநாட்டுக்கு பஸ் செலவு, தண்ணி அடிக்கும் செலவுக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்வது போன்ற வழிமுறைகள் மூலம் இளைஞர்களை தம் பிடியில் பராமரித்திருக்கின்றனர். மேற்படி இளைஞர் படை வாங்கின காசுக்கு மேலே கூவி, தொகுதி மக்களை வெற்றிகரமாக அன்புமணிக்கு எதிராகத் திருப்பி விட்டது.
“பாட்டாளி சொந்தங்களே நம்மைக் கவிழ்த்து விடுவார்கள்” என்ற பயமும் அன்புமணிக்கு இருந்திருக்கிறது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் பல காமெடி காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. கிராமத்திற்கு வாக்கு கேட்க செல்லும்போது, கிராமத்தின் எல்லையிலேயே உட்கார்ந்து கொண்டு,”எனக்கு ஓட்டு போடுவதாக சத்தியம் செய்தால்தான் ஊருக்குள் வருவேன்” என்று அன்புமணி சென்டிமென்டாக போட்டுத் தாக்கியிருக்கிறார். “இதென்னடா வம்பு” என்று பாட்டாளி சொந்தங்களும் சத்தியம் செய்து அவரை ஊருக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். நம்ம்..பி உள்ளே போனவரை இந்தக் கும்மு கும்மி விட்டார்கள்.
அன்புமணியின் மனைவி மக்களும் பென்னாகரத்தில் தங்கி வாக்கு சேகரித்திருக்கிறார்கள். அது பற்றி வன்னிய சமூக உழைக்கும் மக்களிடம் கேட்டபோது, “அவுங்க கலரைப் பாரு, நம்ம கலரைப் பாரு, ரெண்டு பேரும் ஒரு சாதியாப்பா?” என்று கேலி செய்து சிரித்தனர்.
இனி, தேர்தல் காலத்தில் மட்டும் கருப்பு நிறத்துக்கு மாறிக்கொள்ளும் படியாக ஃபேர் அண்டு லவ்லி கம்பெனிக்காரன் ஏதாவது கிரீம் கண்டுபிடித்தால்தான் உண்டு.
தனது தோல்விக்கு பணம்தான் காரணம் என்று சாதிக்கிறார் அன்புமணி. தோற்றவர்கள் பலரும் அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த தேர்தலில் “பணம்” வெற்றிக்கு காரணமாக இருந்ததைக் காட்டிலும், தோற்றவர்கள் தமது தோல்விக்கான காரணத்தை மறைத்துக் கொள்வதற்குப் பெரிதும் உதவியிருக்கிறது.
– வினவு செய்தியாளர்கள்
______________________________ புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________
மோடி ஆட்சியில், இந்துவெறி பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு விசுவாசமான அரசு பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் கைவிடப்பட்டு அடுத்தடுத்து அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். காங்கிரசு அரசின் பழிவாங்கும் செயல், ஓட்டுக்காக முஸ்லிம்களை அனுசரித்துப் போகும் செயல் என்று கூறி இந்த வழக்குகளை ஒன்றுமில்லாத விவகாரமாக்குவது, இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்துவெறி பயங்கரவாதிகளை விடுதலை செய்வது, இதற்கேற்ப நாட்டின் புலனாய்வு அமைப்புகள், நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரத்தையே மாற்றியமைப்பது என்ற திட்டத்துடன் மோடி கும்பல் செயல்பட்டு வருகிறது.
இதன்படி, மோடி – அமித் ஷா கும்பல் ஆட்சிக்கு வந்ததும், குஜராத்தின் நரோடா பாட்டியாவில் நடத்தப்பட்ட இந்துவெறி பயங்கரவாத கொலைவெறியாட்ட வழக்கில் 26 ஆண்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட குஜராத்தின் முன்னாள் அமைச்சரான மாயா கோத்நானி பிணையில் விடுவிக்கப்பட்டார். குஜராத்தில் போலி மோதல் கொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட அரசு பயங்கரவாத வெறியன் டி.ஜி. வன்சாரா, மோடி அரசால் பிணையில் விடுவிக்கப்பட்டு, கௌரவமாக ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டான். இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கிலும், சொராபுதீன் கொலை வழக்கிலும் குஜராத்தின் கிரிமினல் போலீசு அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு, அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. சோராபுதீன் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அமித் ஷாவை அவ்வழக்கிலிருந்து விடுவித்ததற்குப் பரிசாக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு கேரள ஆளுநர் பதவி தரப்பட்டது. இந்த வரிசையில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்துவெறி பயங்கரவாத பெண் சாமியாரான பிரக்யா சிங் மற்றும் ஐந்து இந்துவெறியர்களுக்கு இதில் தொடர்பில்லை என்று இப்போது தேசியப் புலனாய்வுக் கழகம் அறிவித்துள்ளது.
மலேகானில் இந்துவெறியர்கள் நடத்திய குண்டுவெடிப்பு பயங்கரத்தின் கோரம்
மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டில் நடந்த குண்டுவெடிப்பானது, முஸ்லிம்கள்தான் பயங்கரவாதிகள் என்று பழிபோட்டு ஒடுக்குவதற்காக இந்துவெறி பயங்கரவாதிகள் நடத்திய மிகப் பெரிய சதித் திட்டத்தின் ஒரு அங்கமாகும். குஜராத்தில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளுக்குப் பிறகு, இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதாகப் பீதியூட்டி அடக்குமுறையை ஏவுவது, அதன் மூலம் இஸ்லாமியர்களை ஆத்திரமூட்டி எதிர்த்தாக்குதலைத் தொடுக்குமாறு தூண்டுவது, அப்படி அவர்கள் செய்யாத பட்சத்தில் தாங்களே அத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி பழியை முஸ்லிம்கள் மீது போடுவது – என்ற சதித் திட்ட நிகழ்ச்சிநிரலின்படி, இதற்காகவே தனியாக ஒரு சதிகார வலைப்பின்னல் உருவாக்கப்பட்டு, குண்டுகள் தயாரிப்பு மற்றும் குண்டுவைப்புச் சதிகளை இந்துவெறி பயங்கரவாதிகள் தொடங்கினர்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் .பயங்கரவாதிகள் மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் இரகசியமாக வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு இருவர் மாண்டனர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து இந்துவெறி பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் போலீசு அடுத்தடுத்து கைது செய்து, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
அதைத் தொடர்ந்து கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாளன்று மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரில் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் 4 குண்டுகள் வெடித்தன. 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில் அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதே ஆண்டு மே மாதத்தில் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து நவம்பர் 11 அன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. மீண்டும் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி ரம்ஜான் விழாவின்போது மலேகானில், மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் கொல்லப்பட்டு 79 பேர் படுகாயமடைந்தனர்.
லேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, கடந்த ஏப்ரலில் மும்பை கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள்
இப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும்போதும், எவ்வித விசாரணையுமின்றி முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டே உருவாக்கப்பட்டன. மலேகான் குண்டுவெடிப்புகள் குறித்து ஆரம்ப விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே முஸ்லிம் குடியிருப்புகளைச் சுற்றிவளைத்து, சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை போலீசு இழுத்துச் சென்றது. பின்னர், இவர்கள்தான் குண்டு வைத்தார்கள் என்று சல்மான் பார்சி, நூருல் ஹூதா, சபீர் அகமது, ரைஸ் அகமது, முகம்மது அலி, ஆஷிப் கான், ஜாவித் ஷேக், பரூக் அன்சாரி, அப்ரார் அகமது – ஆகிய ஒன்பது அப்பாவி முஸ்லிம்கள் மகாராஷ்டிர மாநில தீவிரவாத எதிர்ப்புப் போலீசுப் படையால் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்தனர். கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு சிறையிடப்பட்ட அவர்களது இளமையும் எதிர்காலமும் நொறுங்கிப் போயின.
இதற்கிடையே சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருட்களை முன்னாள் ராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் என்பவன் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான தடயங்கள் கிடைத்தன. மலேகான் குண்டுவெடிப்புகளிலும் ஆர்.டி.எக்ஸ் .ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இக்குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அபிநவ் பாரத் எனும் இந்துத்துவ அமைப்பின் முக்கிய பிரமுகராக இருந்த பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார்.
இந்துவெறி பயங்கரவாதிகள் குண்டுவைப்புகளில் ஈடுபட்டுள்ளதை ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்த மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே.
அதைத் தொடர்ந்து கடந்த 2008-இல் பிரக்யா சிங், முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்திவந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துவெறி பயங்கரவாதிகளை கார்கரே கைது செய்தார். 2006-2008 ஆம் ஆண்டுகளுக்கிடையே ஒன்பது குண்டு வெடிப்புகளை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ள இப்பயங்கரவாதச் சதியில் இந்துவெறியர்கள் ஈடுபட்டுள்ளதை வாக்குமூலமாகப் பெற்று பல்வேறு ஆதாரங்களுடன் அவர் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்துவெறியர்களும் அரசு எந்திரமும் எதை மறைத்தார்களோ அதை வெளிக்கொண்டுவந்து, கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்கள் அப்பாவிகள் என்றும், இந்துவெறியர்கள்தான் குண்டு வைத்தார்கள் என்றும் முதன் முறையாக நிரூபித்தார். அதன் பிறகுதான் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது அப்பாவி முஸ்லிம்களுக்குப் பிணை கிடைத்தது.
பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தியபோது, இந்துவெறி பயங்கரவாதிகளின் சதிகள் படிப்படியாக வெளிவரத் தொடங்கின. இதற்கான ஆதாரங்களைத் திரட்டிய போலீசு அதிகாரியான கர்காரே, 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின் போது திட்டமிட்டே கொல்லப்பட்டார்.
மலேகான் குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்.இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தாவை கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பரில் சி.பி.ஐ. கைது செய்து சிறையிலடைத்து விசாரணை நடத்தியது. “மலேகான் நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், எங்களது முதலாவது குண்டு வெடிப்பை அங்கே நடத்தினோம். … அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால் அதனைத் தடுத்து இந்துக்களை அசசுறுத்துவதற்காக அங்கே குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது…. சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில் ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்” என்று அவர் தானே முன்வந்து நீதிபதி முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை இந்துவெறியர்கள்தான் செய்தனர் என்று பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அன்று காங்கிரசு கூட்டணி ஆட்சியின் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இது இந்து பயங்கரவாதம் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.
தேசிய புலனாய்வுக் கழகத்தால் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டுள்ள இந்துவெறி பயங்கரவாத பெண் சாமியார் பிரக்யா சிங்
பின்னர்,2011-ஆம் ஆண்டில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மைய அரசின் தேசியப் புலனாய்வுக் கழகம் ( என்.ஐ.ஏ.) விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, கைது செய்யப்பட்ட ஒன்பது அப்பாவி முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள் என்று ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஆதாரங்களைச் சமர்பித்தது. இவர்களில் ஷபீர் அகமது ஏற்கெனவே விபத்தொன்றில் இறந்து விட்டார். எஞ்சியுள்ள எட்டு பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கடந்த ஏப்ரல் 26 அன்று மும்பை கீழமை நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளது.
மலேகான் குண்டுவெடிப்பு விசாரணையை முடித்த தேசிய புலனாய்வுக் கழகம், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மே 13 அன்று குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில், மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் போலீசார் இந்த வழக்கு விசாரணையில் உள்நோக்கத்துடன் செயல்பட்டிருப்பதாகவும்,பெண் சாமியாரான பிரக்யா சிங் மற்றும் 5 பேருக்கு இக்குண்டுவெடிப்பில் தொடர்பில்லை என்றும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அதேசமயம் மகாராஷ்டிரா மாநில அமைப்பு ரீதியான குற்றத் தடுப்புச் சட்டப்படி, முன்னாள் ராணுவ அதிகாரி சிறீகாந்த் புரோகித் உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
“மலேகான் நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால் எங்களது முதலாவது குண்டு வெடிப்பை அங்கே நடத்தினோம்…” என்று தானே முன்வந்து நீதிபதி முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அசீமானந்தா.
இந்துவெறி பயங்கரவாதிகளை வழக்குகளிலிருந்து விடுவிப்பதற்காக தேசியப் புலனாய்வுக் கழகம் கீழ்த்தரமாக இயங்குவதை மலேகான் வழக்கு நிரூபித்துக் காட்டிவிட்டது. அரசியல் தலையீடு காரணமாக, சி.பி.ஐ. நடுநிலையாகச் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரசு ஆட்சின் போது பா.ஜ.க. கூச்சல் போட்டது. ஆனால் இப்போது மோடி ஆட்சிக்கு வந்ததும் தேசிய புலனாய்வுக் கழகம் அப்பட்டமாகவே இந்துவெறி கும்பலின் கைப்பாவையாகி நிற்கிறது. இதற்கு அரசியல் தலையீடு மட்டும் காரணமல்ல; புலனாய்வு அமைப்புகளின் அதிகார வர்க்கமே இந்துமயமாகியிருப்பதையே இது நிரூபித்துக் காட்டுகிறது.
மோடி கும்பலின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே, தேசியப் புலனாய்வுக் கழகத்தின் தலைமை இயக்குனராகப் பதவி வகித்துவரும் சரத்குமாரின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 31,2015-இல் முடிவுக்கு வந்துள்ள போதிலும், அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக அவரது பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்ததும், மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளை மென்மையாகக் கையாளுமாறு சுஹாஸ் வார்கி என்ற தேசிய புலனாய்வுக் கழகத்தின் போலீசு அதிகாரி தனக்கு நிர்பந்தங்கள் கொடுத்ததாக முன்னாள் அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞரான ரோகினி சாலியன் கூறியிருப்பதே இப்புலனாய்வு அமைப்பின் யோக்கியதையை அம்பலப்படுத்திக் காட்டுகிறது.
நடப்பது சட்டத்தின் ஆட்சி என்றும், அதிகார வர்க்கமும், நீதித்துறையும் நடுநிலையானது என்றும் பரப்பப்படும் மாயைகள் தகர்ந்து, இந்நிறுவனங்கள் சீரழிந்து கிடப்பதையும், இந்நிறுவனங்களின் அதிகார வர்க்கமே இந்துமயமாகியிருப்பதையும் மலேகான் மற்றும் இஷ்ரத் ஜஹான் வழக்குகள் நிரூபித்துக் காட்டுகின்றன.
இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போனால்…
– கேரளா உணர்த்தும் எதிர்மறை படிப்பினை!
நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் கேரளா தவிர, இதர மாநிலங்களில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி அடைந்துள்ளனர். கேரளத்தில் பா.ஜ.க. கூட்டணி ஒரு இடத்திலும், போலி கம்யூனிஸ்டு ‘இடதுசாரி’ கூட்டணி 91 இடங்களிலும், காங்கிரசு கூட்டணி 47 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கேரளத்தில் ஒரு தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள போதிலும், கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது பல இடங்களில் இரு மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று அச்சுறுத்தும் அபாயமாக வளர்ந்துள்ளது. 2011-இல் 6.3 சதவீதமாக இருந்த பா.ஜ.க.வின் வாக்குகள் இப்போது 16 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளன. நீண்ட காலமாக இடதுசாரி அரசியல் செல்வாக்கு உள்ள கேரளத்தில் இந்துவெறி பாசிச சக்திகள் எப்படிக் காலூன்றி வளர முடிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதற்கான விதைகள் ஏற்கெனவே ஊன்றப்பட்டுவிட்டன.
கடந்த சில ஆண்டுகளாக இந்துமுனைவாக்கத்தைச் செயல்படுத்தும் திட்டத்துடன் ஐக்கிய வேதி,ஷேத்ர சம்ரக்ஷன சமிதி, பால சதானம், ஏகல்வ வித்யாலயா, அனுமன் சேனா முதலான புதிய அமைப்புகள் இந்துவெறியர்களால் உருவாக்கப்பட்டன. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வழக்கொழிந்துபோன “தேயம்” எனப்படும் பிற்போக்கான சடங்கை ஆதரித்து, அவர்களது நண்பனாகவும் புரவலனாகவும் ஷத்ர சம்ரக்ஷன சமிதி எனப்படும் கோயில் பாதுகாப்புக் கழகம் செயல்படத் தொடங்கியது. நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பதை எதிர்க்கும் இந்துத்துவ பரிவாரங்கள், கேரள மக்கள் மாட்டுக்கறி உண்பதை அம்மாநிலத்தின் கலாச்சாரம் என்று நயவஞ்சகமாகக் கூறிக்கொண்டு பழங்குடியினரையும் மிகவும் பிற்பட்ட – தாழ்த்தப்பட்ட சாதியினரையும் தன்பக்கம் இழுக்க முயற்சித்தது.
பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் இந்து வெறியர்களின் ஊர்வலம்
கடந்த ஆண்டில் பிரபல இலக்கிய விமர்சகரான எம்.எம். பஷீர் “மாத்ருபூமி” நாளேட்டில் ராமாயணம் பற்றிய ஒரு விமர்சனத் தொடர் கட்டுரை எழுதி வந்தார். ராமாயணத்தைப் பற்றி ஒரு முஸ்லிம் எதையும் எழுதக் கூடாது என்று எச்சரித்து அத்தொடர் கட்டுரை வெளிவராமல் தடுத்து நிறுத்திய இந்துவெறியர்கள், பஷீருக்கும் கொலைமிரட்டல் விடுத்தனர். இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ‘’ஏசியா நெட்” தொலைக்காட்சியின் விவாத ஒருங்கிணைப்பாளரான சிந்து சூர்யகுமார், சூத்திரர்களின் கடவுளான மகிஷாசுரனை இந்து பெண் தெய்வமான துர்கை கொன்றதை, இது பார்ப்பன பாரம்பரியம் என்று அசுரர் பாரம்பரியத்தினரான சூத்திரர்கள் எதிர்ப்பதைப் பற்றிய ஒரு விவாதத்தை நடத்தியதற்காக இந்துவெறியர்களால் தாக்கப்பட்டார்.
ஈராண்டுகளுக்கு முன்பு பெரியாறு ஆற்றங்கரையிலுள்ள சிவன் கோயில் அருகே முஸ்லிம்களின் மாநாட்டை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று இந்துத்துவப் பரிவாரங்கள் ஆயுதமேந்திய பேரணியை நடத்தி இந்து முனைவாக்கத்தை தீவிரப்படுத்தின. பாரதப் பண்பாடு என்னும் பிற்போக்குத்தனத்தை நிலைநாட்ட அனுமன் சேனா என்ற அமைப்பு அம்மாநிலத்தின் கலாச்சார காவலான திடீர் அவதாரம் எடுத்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இத்தகைய இந்து முனைவாக்கத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, தாழ்த்தப்பட்ட ஈழவ சாதியினருக்காக நிற்பதாக காட்டிக் கொள்ளும் பாரத் தர்ம ஜன சேனா (பி.டி.ஜே.எஸ்.) என்ற பிழைப்புவாதக் கட்சியை வளைத்து இத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கட்டிக் கொண்டது.
இடதுசாரி சக்திகள் செல்வாக்கு பெற்றுள்ளதைப் போலவே கேரளத்தில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறித்துவ வலதுசாரி பிற்போக்கு சக்திகளும் காங்கிரசு தலைமையில் வலுவாகவே இருந்தன. இந்து மதத்தை எதிர்க்காமல், அதனுடன் சமரசமாகப் போவதும், மத நல்லிணக்கம் பேசுவதும்தான் காந்தி – காங்கிரசின் உத்தியாக இருந்தது. இதே உத்தியை போலி கம்யூனிஸ்டுகளும் பின்பற்றியதால், காங்கிரசு கூட்டணிக்கும் இடதுசாரி கூட்டணிக்கும் இந்து மதம் குறித்த அணுகுமுறையில் வேறுபாடில்லாமல் போனது.
தமிழகத்தைப் போல பார்ப்பன எதிர்ப்பு – இந்துத்துவ எதிர்ப்பு மரபு கேரளத்தில் இல்லாத நிலையில், அத்தகையதொரு மரபை உருவாக்க வேண்டிய பொறுப்பையும் கடமையையும் போலி கம்யூனிஸ்டுகள் தெரிந்தே புறக்கணித்தார்கள். இந்து மதத்தின் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக ஏற்கெனவே நாராயண குரு, அய்யன்காளி போன்றோர் தொடங்கி வைத்த சீர்திருத்தங்களைக்கூட இப்போலி கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்துச் செல்லவில்லை. மாறாக, அரசியல் – சித்தாந்த ரீதியாகவே இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போனார்கள்.
ஓணம் பண்டிகையையொட்டி குழந்தைக்கு மாவலி மன்னன் வேடமிட்டு, பகத்சிங் படங்களுடன் சி.பி.எம். கட்சியினர் நடத்தும் ஊர்வலம்.
மாதொரு பாகன் விவகாரத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிவெறி ஆதிக்கத்தை எதிர்க்க முன்வராமல், இது எழுத்தாளரின் கருத்துரிமையைப் பறிக்கும் செயல் என்று நழுவிக் கொண்டதைப்போலத்தான், இந்து மதத்தின் மையமான பார்ப்பனியத்தை எதிர்க்காமல் கேரள போலி கம்யூனிஸ்டுகள் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொள்கிறார்கள். “பால கோகுலம்” என்ற அமைப்பின் பெயரால் குழந்தைகளுக்குக் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு இந்துவெறியர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலம் நடத்துகிறார்கள் என்றால், அதற்குப் போட்டியாக “பால சங்கம்” என்ற அமைப்பின் பெயரால் அதேபோல கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலத்தை போலி கம்யூனிஸ்டுகள் நடத்துகிறார்கள். ஓணம் பண்டிகையின் போது குழந்தைகளுக்கு மாவலி மன்னன் வேடமிட்டு கார்ல் மார்க்ஸ், பகத்சிங் படங்களுடன் சி.பி.எம். கட்சி ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கிறது. சபரிமலையின் மகரஜோதி அதிசயம் என்பது கேரள மின்வாரியம், போலீசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு ஆகியன இணைந்து நடத்தும் நாடகம் என்பது ஏற்கெனவே அம்பலமாகியுள்ள போதிலும், இந்த மூட நம்பிக்கைக்கும் மோசடிக்கும் எதிராக வாய் திறக்காமல், அரசு அதிகாரத்தில் இருந்த சமயத்திலும்கூட இதனை அங்கீரித்து போலி கம்யூனிஸ்டுகள் சந்தர்ப்பவாதமாகவே நடந்து கொள்கின்றனர். தேர்தல் வெற்றிக்காக சாதி-மதவாத பிற்போக்கு சக்திகளுடன் சந்தர்ப்பவாதமாகக் கூட்டணி சேர்வது, இந்து மனப்பான்மைக்கு ஏற்ப நெளிவுசுழிவாக நடந்து கொள்வது என்பதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் நடைமுறையாக இருக்கிறது.
வேதங்களின் நாடாக இந்திய வரலாற்றைப் பார்த்தார், கேரளத்தின் முதலாவது போலி கம்யூனிஸ்டு முதல்வரும் சி.பி.எம்.கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் சித்தாந்த குருவுமாகிய இ.எம்.எஸ். நம்பூதிரிபாட். அவரது சீடர்கள் இதனை நியாயப்படுத்தி உரை எழுதியதோடு, இந்துத்துவத்துடன் இசைந்து நின்றார்கள். இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போகும் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல் – சித்தாந்த பலவீனத்தையும், சந்தர்ப்பவாத நடைமுறையையும் சாதகமாக்கிக் கொண்டு, கேரள அரசியல் அரங்கில் வளர்ந்துள்ள இந்துவெறி சக்திகள், தேர்தலுக்கு பின் போலி கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வருகின்றன.
ஓட்டுப் பொறுக்குவதற்காக இந்துவெறிக் கும்பலுடனான மோதலில் ஏராளமான ஊழியர்களைப் போலி கம்யூனிஸ்டுகள் ஏற்கெனவே பலி கொடுத்திருக்கிறார்கள். ஓட்டுக்காக இந்துவெறியர்களுடன் மோதுவதற்குத் தயாராக உள்ள போலி கம்யூனிஸ்டுகள், ஏன் அரசியல் – சித்தாந்த ரீதியாக இந்துத்துவத்துக்கு எதிராகப் போராடவில்லை என்பதை அக்கட்சிகளிலுள்ள அணிகள் பரிசீலிக்க வேண்டும்.
போலி கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாத நடைமுறையை நிராகரித்து, அரசியல் – சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் இந்துத்துவத்துக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு போராடுவதே இந்துவெறி பாசிச பயங்கரவாத சக்திகளை முறியடிப்பதற்கான ஒரே வழியாகும். அதற்கு மாறாக, மத நல்லிணக்கம் பேசிக்கொண்டு இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போனால், இப்படிப்பட்ட விபரீத நிலைமைதான் ஏற்படும் என்பதை கேரளம் எதிர்மறை படிப்பினையாக உணர்த்துகிறது.
கண்டெய்னர் வாழ்க! போலி வாக்காளர் வாழ்க!
அழிகின்ற மை வாழ்க! அழியாத முதல்வர் வாழ்க!
ஜனநாயகம் வாழ்க… வாழ்கவே!
மே 21 அன்று இரவு ஜெயா டிவியில் “இருவர்” திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. “வி-டு-த-லை, விடுதலை” என்ற பாடல் வரிக்கு, ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் தனது பின்புறத்தை குளோசப்பில் ரசிகப் பெருமக்களுக்கு காட்டியபடி ஆடிக்கொண்டிருந்தார்.
திருச்சியில் நடந்த ஜெயாவின் பிரச்ச்சாரக் கூட்டத்திற்காக கொண்டுவரப்பட்டவர்களுக்கு பகிரங்கமாக பணம் விநியோகிக்கப்படுகிறது: தேர்தல் ஆணையத்தின் கட்டளை, விதிகளுக்கு ஜெயாவின் மரியாதை.
சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகளிலிருந்து ஜெ. பெற்ற விடுதலையாக இருக்கட்டும், அல்லது சுயமரியாதை உணர்விலிருந்து தமிழ் மக்களுக்கு அவர் வழங்கியிருக்கும் ‘விடுதலை’யாக இருக்கட்டும் அனைத்துக்கும் அந்தக் காட்சி பொருந்தக் கூடியதே. மணிரத்தினத்தின் அழகியல் உணர்வைப் பாராட்டத்தான் வேண்டும். தற்போதைய தேர்தல் முடிவுகள் இதனை மீண்டும் உறுதி செய்கின்றன.
தமிழக வாக்காளர்கள் தம்மைத் தாமே இருண்ட காலத்திற்குள் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதிகார வர்க்கம், பல எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், தேர்தல் ஆணையம், நீதித்துறை, வாக்காளர்கள் ஆகிய அனைவரையும், அனைத்தையும் தன்னால் விலைக்கு வாங்க முடியும் என்பதை ஜெயலலிதா பலமுறை நிரூபித்திருக்கிறார். இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அதனை மீண்டும் நிரூபித்து விட்டார். எந்தக் காரணத்துக்காக முன்னர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் (வலது கம்யூ. தவிர) புறக்கணித்தார்களோ, அந்தக் காரணங்கள் அனைத்தும் பன்மடங்கு அதிகமாக இந்த பொதுத் தேர்தலில் தமிழகமெங்கும் தொழிற்பட்டிருக்கின்றன.
ஜனநாயகம் என்ற பெயரால் அழைக்கப்படுவதற்குத் தேவைப்படுகின்ற ஒப்பனைகளைக் கூட இந்த ‘ஜனநாயகம்’ இழந்து வருகிறது. அ.தி.மு.க.வின் கூட்டாளியாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதை அ.தி.மு.க.வைத் தவிர மற்றெல்லா கட்சிகளும் கூறிவிட்டன.
“நம்பிக்கை இல்லை” என்று குற்றம் சாட்டப்பட்டால் மரத்தடி சொம்பு நாட்டாமைகளுக்குக் கூட ரோசம் வரக்கூடும். நம்பிக்கை இல்லாத நடுவரை வைத்து பள்ளிக்கூட கால்பந்து போட்டியைக் கூட நடத்த முடியாது. ஆனால் ஜெயலலிதாவின் கைப்பாவை என்று அனைத்து கட்சிகளாலும் காறி உமிழப்பட்ட பின்னரும் ‘நான்தான் நடுவர்’ என்று புன்னகை மாறாமல் கூறுகிறார் லக்கானி.
இலட்சக்கணக்கான போலி வாக்காளர்கள், சிறுதாவூர் கன்டெய்னர், ஐவர் அணியின் பல்லாயிரம் கோடி சொத்துக்கள், கரூர் அன்புநாதனின் கரன்சி கோடவுன், தமிழகம் முழுவதும் அமைச்சர்களின் பினாமிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல கோடிகள், திருப்பூர் கன்டெய்னர் லாரிகள் – என அடுக்கடுக்காக எழுந்த எந்தக் குற்றச்சாட்டிற்கும் தேர்தல் ஆணையமோ வருமான வரித்துறையோ பதிலளிக்கவில்லை.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டி 60,000 கோடி ரூபாய் வரை பணப்புழக்கம் அதிகரிக்கிறது என்றும், அதற்குக் காரணம் உங்களுக்கே தெரிந்ததுதான் என்றும் கூறுகிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன். தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை யாராலும் தடுக்கவே முடியாது என்று தேர்தல் ஆணையத்தின் வக்கற்ற நிலையை பிரகடனம் செய்கிறார், முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி.
அன்புநாதனுக்கு கேட்டவுடன் முன் ஜாமீன் வழங்குகிறது உயர்நீதி மன்றம். அன்புநாதன் பிடிபடக் காரணமாக இருந்த எஸ்.பி.வந்திதா பாண்டேவுக்கு கொலை மிரட்டல் வருகிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் அவர் விஷ்ணுப்பிரியாவைப் போல ‘தற்கொலை’ செய்து கொள்ளவும் வாய்ப்புண்டு.
திருச்சியில் நடந்த ஜெயாவின் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக போலீசு அ.தி.மு.க.வின் விசுவாசமிக்க தொண்டனைப் போலத் தொப்பிகளை விநியோகிக்கும் காட்சி.
தேர்தல் தொடர்பான பணிகளில் ஆளும் கட்சியானது அரசு எந்திரத்தைப் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட வேட்பாளர் பெற்ற வெற்றியையே ரத்து செய்யலாம் என்று விதி இருந்த போதிலும், ஜெயலலிதா உரையாற்றும் மைதானங்களில் புல் புடுங்குவது முதல், ஓட்டுக்குப் பணம் கடத்துவது வரையிலான எல்லா வேலைகளையும் அதிகார வர்க்கமும் போலீசும்தான் செய்திருக்கின்றன. இன்னின்ன அதிகாரிகள் என்று ஆதாரபூர்வமாக அம்பலமான பின்னரும் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தலை நியாயமாக நடத்துவதைப் போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டுவது கூடத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. தேர்தல் ஆணையம் மட்டுமல்ல; பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், வருமான வரித்துறை, உள்துறை அமைச்சகம், மத்திய உளவுத்துறை, ரிசர்வு வங்கி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், ஊடகங்கள் – ஆகிய எல்லா நிறுவனங்களும் கன்டெய்னரின் சந்நிதியில் கைகட்டி வாய் பொத்தி நிற்கின்றன. ஜெயலலிதாவின் வெற்றி என்பது இந்தக் கட்டமைப்பின் தோல்வியை முன் எப்போதையும் விட அதிகமாக பளிச்சென்று எடுத்துக் காட்டியிருக்கிறது.
“ஜெயலலிதாவை இனி தேர்தல் மூலம் தோற்கடிக்கவே முடியாதோ” என்ற கேள்வி எதிர்க்கட்சிகளின் மனதில் எழத்தான் செய்கிறது. இருந்த போதிலும், அந்தக் கேள்விக்கு அவர்களிடம் விடை இல்லாத காரணத்தினால், கேள்வியை தொண்டைக் குழிக்குள்ளேயே புதைத்துக் கொண்டு, அப்படி ஒரு கேள்வியே எழும்பாதது போல தம்மைத் தாமே தைரியப்படுத்திக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டைக் குடிநாடாக்கிய அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்கள்.
இந்தக் கட்டமைப்பு நியாயப்படுத்த முடியாத அளவுக்கு சீர்கெட்டு விட்டது என்ற போதிலும், வேறு மாற்று குறித்த சிந்தனையே எழாத வண்ணம், ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் மக்களை இந்த தேர்தல் அரசியல் வரம்புக்கு உள்ளேயே சிந்திக்கும்படி கட்டுப்படுத்துகின்றன. இருக்கின்ற நிலைமையை அங்கீகரித்து, அனுசரித்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையே வெவ்வேறு கோணங்களிலிருந்து மக்களுக்கு வலியுறுத்துகின்றன.
ஜெயலலிதாவின் வெற்றி சாமர்த்தியமா, சதித்திட்டமா?
தேர்தல் முடிவு குறித்து நடைபெறும் விவாதங்களைக் கவனித்துப் பாருங்கள். இந்த தேர்தலில் எல்லா விதமான கிரிமினல் வழிமுறைகளையும் பயன்படுத்தித்தான் ஜெ. கும்பல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. 2009-2014-இல் இந்தியா முழுவதும் உயர்ந்துள்ள வாக்காளர் எண்ணிக்கை சராசரியாக 13.6%. தமிழகத்தில் இது 29.1%. அதாவது 1.21 கோடி புதிய வாக்காளர்கள். இவர்களில் போலி வாக்காளர்கள் 40 இலட்சம் பேர் என்று தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல், பிறகு தாம்பரம் தொகுதி போலி வாக்காளர் பட்டியலை ஆதாரத்துடன் கொடுத்து உயர்நீதி மன்றத்தில் உத்தரவு பெற்ற பின்னர் நடவடிக்கை எடுப்பது போல நடித்தது ஆணயம். தமிழகம் முழுவதும் அகற்றப்பட்ட போலி வாக்காளர்கள் 6.5 லட்சம் மட்டும்தான். மீதி சுமார் 33 இலட்சம் போலி வாக்காளர்கள் குறித்து எந்த விளக்கமும் இல்லை. வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் பழைய முறைக்குப் பதிலாக வாக்காளர்களையே கைப்பற்றி விட்டார் ஜெயலலிதா. ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்களித்தவர்களின் கையில் வைக்கப்படும் மை, வைத்தவுடன் அழிந்து கள்ள ஓட்டு சதியை அம்பலமாக்கியிருக்கிறது. இத்தனை அயோக்கியத்தனங்கள் அப்பட்டமாக அரங்கேறிய
போதிலும், ஜெயலலிதாவின் இந்த முறைகேடான வெற்றியை எந்த ஊடகமும் கேள்விக்குள்ளாக்கவில்லை.
தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அரும்பாடுபட்ட ஊடகத் தரகர்கள், தேர்தல் முடிவு குறித்த ஆய்வை ஐ.பி.எல்.ஆட்டம் குறித்த ஆய்வு போல மாற்றுகிறார்கள். ஜெயலலிதா எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தியதையம், விலைக்கு வாங்கியதையும், ஆதிக்க சாதி ஓட்டுக்களை அறுவடை செய்ததையும், மோசடி வாக்குறுதிகள் மற்றும் இலவசத் திட்டங்கள் மூலம் மக்களை ஏய்த்ததையும் அவரது திறமைகளாக காட்டுகிறார்கள். “எப்படி வியூகம் அமைத்திருந்தால் தி.மு.க. வெற்றி பெற்றிருக்க முடியும்” என்று விவாதம் நடத்துகிறார்கள். தேர்தல் என்பதே ஒரு விளையாட்டு போலவும், அதில் சாமர்த்தியமாக ஆடி ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டதாகவும், சாமர்த்தியக் குறைவான தி.மு.க.வும் மற்ற கட்சியினரும் தோற்றுவிட்டதாகவும் காட்டுகிறார்கள்.
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பா?
ஜெ.பெற்ற வாக்குகளில் உண்மை எத்தனை, போலி எத்தனை என்பது ஒரு புறமிருக்கட்டும். 5 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியைப் பரிசீலித்து எடை போட்டு அதன் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிப்பதாகக் கூறுகிறார்கள். அப்படி சீர்தூக்கிப் பார்த்துத்தான் வாக்களித்திருக்கிறார்களா?
2011-இல் ஆட்சிக்கு வந்தவுடனே மின் வாரியம் கடனில் மூழ்கி இருப்பதாக சொல்லி ஜெ.மின் கட்டணத்தை உயர்த்தினார். ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் மின் வாரியத்தின் கடன் பன்மடங்கு உயர்ந்துவிட்டதே, ஏன் என்று மக்களுக்குத் தெரியுமா? தற்போது 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகத் தரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறாரே, இதன் சாத்தியம் குறித்து பரிசீலித்துத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்களா? “மின் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை, ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது” என்று 2011-இல் கட்டணத்தை உயர்த்தியபோது ஜெயலலிதா கூறினாரே, அதை யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா?
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் பேருந்து சேவை சீர்குலைந்திருக்கிறது.பால் விலை உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் 25 ரூபாய் என்று குறைக்கப் போவதாக கூறுகிறார் ஜெ. ஆனால் தனியார் முதலாளிகளோ பால் விலையை உயர்த்துகிறார்கள்.
கடந்த 5 ஆண்டு ஆட்சியில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மூவாயிரத்திலிருந்து ஆறாயிரமாகியது. இப்போது அவற்றில் 500 கடைகளை மூடப்போவதாக ஜெ.வாக்குறுதி அளிக்கிறார். இவை பற்றியெல்லாம் மக்களுடைய புரிதல் என்ன? கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் யோக்கியதை இது எனும்போது, அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன நடந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் வாக்களித்திருக்கிறார்களா?
சொற்களால் அதிகாரத்தை நக்கும் தொலைக்காட்சி நெறியாளர்கள்!
ஐந்தாண்டு கால ஆட்சியின் சரி -தவறுகளை சீர்தூக்கிப் பார்த்து அந்த அடிப்படையில்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று கருதுவது, பொதுப்படையான ஆதாரமற்ற ஒரு நம்பிக்கை. மேற்கண்ட கேள்விகளை மக்கள் எழுப்புவதில்லை என்பது மட்டுமல்ல, இப்படி கேள்வி எழுப்பி பரிசீலிக்க விடாமல் தடுப்பதற்கும், பல்வேறு கோணங்களில் மக்களைத் திசை திருப்புவதற்கும்தான் ஊடகங்கள் வேலை செய்கின்றன. தொலைக்காட்சி நெறியாளர்கள் எனப்படுவோர், சொற்களால் அதிகாரத்தை நக்குவதை ஒரு அனிச்சைச் செயலாகவே செய்யும் வண்ணம் தமது நாவினைப் பயிற்றுவித்திருக்கின்றனர்.
தலித் இளைஞர்கள் படுகொலை, முத்துக்குமாரசாமி தற்கொலை, விஷ்ணுப்பிரியாவின் மர்ம மரணம் போன்ற பிரச்சினைகளையோ அ.தி.மு.க. அமைச்சர்களின் கொள்ளை குறித்த குற்றச்சாட்டுகளையோ, மறுக்க முடியாத நிலை ஏற்படும்போது, “தி.மு.க. மட்டும் யோக்கியமா” என்ற கேள்வியின் மூலம் எந்த பிரச்சினையையும் துருவி ஆராய முடியாமல் தொலைக்காட்சி நெறியாளர்கள், நடுப்பக்க கட்டுரையாளர்கள் என்று அழைக்கப்படும் ஊடக கூலிப்படையினர் தடுத்து விடுகின்றனர். ஆர்.கே.நகர், ஸ்ரீரங்கம் தேர்தல் மோசடி பற்றி கேள்வி எழுப்பினால், உடனே திருமங்கலத்தை காட்டி அந்த வாதம் முடக்கப்படுகிறது. லஞ்ச ஊழல், அதிகார முறைகேடு ஆகிய விவகாரங்கள் எதைக் கிளப்பினாலும், ஒவ்வொன்றிலும் தி.மு.க. தரப்பின் மீதும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இது ஒன்றே அம்மாவை விடுவிப்பதற்கான குறுக்கு வழியாகப் பயன்படுத்தப் படுகிறது.
ஜெயலலிதா விவகாரத்தில் மட்டுமல்ல, பொதுவிலேயே தர்க்க ரீதியாக அல்லாமல், அறிவற்ற முறையில் சிந்திப்பதற்கே மக்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பாமர மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் என்று கூறப்படும் நடுத்தர வர்க்கமே, இவ்வாறு சிந்திக்கிறது. அவ்வாறுதான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சிந்தனை முறையைத்தான் அது சமூகம் முழுமைக்கும் பரப்புகிறது.
கார்ப்பரேட் விளம்பர நிறுவனங்களால் உருவாக்கப்படும் பிம்பத்தின் மீது ஒரு பித்தையும் மூட நம்பிக்கையையும் ஏற்படுத்தி, “அந்த பிம்பம்தான் நான்” என்று நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்த மோடி, இந்த விசயத்தில் ஒரு முன்னோடி. மாற்றம், முன்னேற்றம் என்ற அன்புமணியின் விளம்பரமாகட்டும், வழமையான அரசியல்வாதியின் தோற்றத்தை நிராகரித்து சாதாரண நடுத்தர வர்க்க மனிதனின் தோற்றத்துக்கு மாறிக் கொள்வதன் மூலம் மக்களில் ஒருவராகத் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள முனைந்த ஸ்டாலினாக இருக்கட்டும் – நுகர் பொருட்கள் குறித்து விளம்பரங்கள் தோற்றுவிக்கும் மனப்பதிவைத்தான் இவர்கள் மக்களிடம் உருவாக்க முயற்சிக்கிறார்கள். இந்த மனநிலையைத்தான் வாக்குகளாக மாற்றுகிறார்கள்.
பொருளாதாரக் கொள்கைகளைப் பொருத்தவரை, எல்லா கட்சிகளுடைய கொள்கையும் தனியார்மய – தாராளமயக் கொள்கைதான் என்பதால், விவாதம், அறிவியல் பூர்வமான ஆய்வு ஆகியவற்றிலிருந்து முடிந்தவரை மக்களை விலக்கி வைக்கவே இவர்கள் முயற்சிக்கிறார்கள். மற்றபபடி, இவர்கள் முன்வைக்கும் தேர்தல் அறிக்கைகள், திட்டங்களெல்லாம் தம்மைப் பற்றி இவர்கள் தோற்றுவித்துக் கொள்ளும் பிம்பத்துக்கான பின் இணைப்புகள் மட்டுமே.
குறிப்பிட்ட பிரச்சினைகளின் பருண்மையான விவரங்களுக்குள் செல்லாமல், எம்.ஜி.யாரின் பரோபகாரம், ஜெயலலிதாவின் துணிச்சல், கருணாநிதியின் நிர்வாகத் திறன் என்பன போன்ற உருவாக்கப்பட்ட அபிப்ராயங்களின் அடிப்படையில் சிந்திப்பதற்கே மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
டாஸ்மாக் விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். மக்கள் போராட்டங்கள் தீவிரமாக நடந்தபோது “கடையை மூடும் பேச்சுக்கே இடமில்லை” என்றது ஜெ.அரசு. ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு என்ற தி.மு.க.வின் அறிவிப்பை முதலில் கேலி செய்து விட்டு, பின்னர் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் பரவத் தொடங்குவதைக் கண்டு பீதியடைந்து மூக்கறுபட்டுத்தான் “படிப்படியாக மதுவிலக்கு” என்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார் ஜெயலலிதா. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, “நான் ஒரு முடிவு எடுப்பதென்றால் ஆயிரம் முறை யோசித்துத்தான் எடுப்பேன் என்று உங்களுக்குத் தெரியும். படிப்படியாக மூடுவேன் என்றால் மூடுவேன்” என்று சவடாலாகப் பேசி சமாளித்தார் ஜெயலலிதா.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடந்த ஜெயாவின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வந்து அகால மரணமடைந்தவர்கள்.
“நான் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவள்.என்னை நம்பு” என்பதற்கு மேல் ஜெயாவின் வாக்குறுதியில் வேறு எதுவும் இல்லை.இதை நம்பி வாக்களித்தவர்கள் எத்தனை சதவீதம் பேராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.அவர்களுடைய நம்பிக்கைக்கான அடித்தளம் எது? ஒரு பிரச்சினையைக் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கத் தெரியாத ஒருவன், அப்பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றல் பெற்றவர் யார் என்பதை மட்டும் முடிவெடுத்து வாக்களிக்க இயலுமா?
இயலாது.எனினும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தமது தேவை என்ன என்று புரிந்து கொள்ள முடிந்த மக்கள்தான் தமக்கு எப்படிப்பட்ட ஆட்சி வேண்டும் என்பதையும் முடிவு செய்ய இயலும். “உங்களுடைய தேவை என்ன என்பது உங்களுக்குத் தெரியாது. அது எனக்குத்தான் தெரியும்” என்று கூறுகின்ற ஒரு பாசிஸ்டு தன்னைத் தேர்ந்தெடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
அதனை உத்திரவாதம் செய்து கொள்ளும் பொருட்டு, தன்னைத் தேர்ந்தெடுக்கும் மக்களை விலைக்கு வாங்குகிறார். அல்லது உத்திரவாதமாக தன்னை மட்டுமே தேர்ந்தெடுக்கக் கூடிய போலி வாக்காளர்களை உருவாக்குகிறார். தேர்தலில் வெற்றியும் பெறுகிறார். இந்தச் “சாதனை”யின் முழுப்பெருமையும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியதல்ல. “சொந்த” மூளையைப் பயன்படுத்தி அவருக்கு வாக்களித்த மக்களுக்கும் இதில் பங்குண்டு.
இழிபுகழ் பெற்ற எம்.ஜி.யாரின் வாக்கு வங்கி
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஜனநாயகம் கூடாது என்று உறுதியாக நம்புகின்ற ஆதிக்க சாதியினரில் கணிசமானோரும், ஜனநாயகம் என்றால் என்னவென்றே உணர்ந்திராத ஒடுக்கப்பட்ட மக்கட்பிரிவினரும் இணைந்த ஒரு விநோதமான கலவைதான் இழிபுகழ் பெற்ற எம்.ஜி.யாரின் வாக்கு வங்கி. தொழில்துறை நசிவு, விவசாயப் பாதிப்புகளுக்கு இடையிலும், கோவை மாவட்டத்தின் ஒரு தொகுதி தவிர மற்றெல்லாத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. பெற்றிருக்கும் வெற்றி, அம்மாவட்டத்தின் கவுண்டர் சாதிவெறி ஜெயலலிதாவுக்கு செலுத்தியிருக்கும் அன்புக் காணிக்கை. அதற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. அதிகத் தொகுதிகளை வென்றிருக்கும் தென்மாவட்டங்களோ தேவர் சாதிவெறியின் நிலைக்களன்கள். இந்த ஆதிக்க மனோபாவமும், ஏழைகளான உதிரி வர்க்கங்கள் மற்றும் பெண்களின் அடிமை மனோபாவமும்தான் ஜெயலலிதா என்ற பாசிஸ்டை தெரிவு செய்ய தமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியிருக்கின்றன. இந்த வாக்கு வங்கியின் பிடியில் தமிழகம் ஒரு பிணைக்கைதியாகச் சிக்கியிருக்கிறது.
குஜராத்தில் மோடியைத் தேர்ந்தெடுத்த இந்து மதவெறி, அதற்கு முன்னால் படேல் சாதி வெறியாக இருந்தது. உ.பி.யில் மோடிக்கு வெற்றி தேடித்தந்த இந்து மதவெறி, ஜாட் சாதிவெறியின் இன்னொரு வடிவம். சாதி உணர்வு என்பது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, எந்த நெறியுமற்றது, ஒழுக்கமற்றது. அது கழுத்தை வெட்டும், காலிலும் விழும், கவுரமே இல்லாமல் பொறுக்கித் தின்பதற்கு முண்டியடிக்கும், பிறகு ஆண்ட பரம்பரை என்று மீசையையும் முறுக்கும்.
ஜெயலலிதாவுக்குப் பதிலாக தி.மு.க. ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், அது இந்த அரசியல் சமூகக் கட்டமைவின் தோல்வியை எந்த விதத்திலும் மாற்றப்போவதில்லை. மாறாக ,புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையில்தான் தி.மு.க. ஈடுபடும். ஆனால் ஜெயலலிதா பெற்றிருக்கும் வெற்றி, தமிழ்ச்சமூகம் உள்ளுக்குள் அழுகத்தொடங்கி விட்டதை அறிவிக்கின்றது.
அனைத்தும் தழுவிய வீழ்ச்சி!
“ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள் எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன” என்கிறது தோழர் சிவசேகரத்தின் ஒரு கவிதை வரி. ஆற்று மணல் கொள்ளையால் உள்ளூர் விவசாயம் அழிவதைக் கண்ணால் கண்டபடியே, கொள்ளையனிடம் கோயில் திருவிழாவுக்குப் பணம் வாங்குகிறார்கள் மக்கள். உடுமலை சங்கர் கொலையையும், கவுசல்யாவின் தற்கொலை முயற்சியையும் பார்த்தபடி இரக்கமே இல்லாமல் கடந்து செல்கிறது தமிழ்ச் சமூகம். முத்துக்குமாரசாமியும், விஷ்ணுப்பிரியாவும், எஸ்.வி.எஸ்.கல்லூரி மாணவிகளும் தம்மைத்தாமே தண்டித்துக் கொள்கின்றனர். பொதுப்பணித்துறையில் 45% கமிசன் என்று அம்பலப்படுத்திய ஒப்பந்தக்காரர்கள் முகவரி இல்லாமல் போகிறார்கள். அன்புநாதனையும் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியையும் கல்லூரித் தாளாளரையும் விடுவிக்கின்றது நீதிமன்றம். கொங்கு நாட்டு கன்டெய்னர் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்று நிறுவப்பட்டதைப் போல, கோகுல்ராஜ் கொலையையும், “தற்கொலை என்று நிரூபிப்பேன்” என்கிறான் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் யுவராஜ்.
திரும்பிய திசையிலெல்லாம் கொடுமைகள் கூத்தாடும்போது, ஓட்டுக்குப் பணம் வாங்கிய கொடுமையைப் பற்றி மட்டும் குமுறுவது அபத்தமல்லவா?
அரவக்குறிச்சியிலும் தஞ்சையிலும் மட்டும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைக் கண்டுபிடித்து, அந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தலைத் தள்ளி வைக்கிறது ஆணையம். ஓட்டுக்குக் கொடுக்கும் பணத்தை வெளிப்படையாக, ஊர் மக்கள் முன்னிலையில், ‘ஜனநாயக பூர்வமாக’ வழங்க வேண்டுமென்றும் உள்ளூர் கட்சிக்காரர்கள் அதில் ‘ஊழல்’ செய்ய அனுமதிக்க கூடாது என்றும் ஒரு புதிய ஒழுக்க நெறியை உருவாக்குகின்றன தமிழகத்தின் கிராமங்கள். சென்னை மாநகரின் வெள்ளம் பாதிக்கப்படாத பகுதிளைச் சேர்ந்த அபார்ட்மென்ட் நடுத்தர வர்க்கமோ கூசாமல் வெள்ள நிவாரணம் வாங்குகிறது, ஓட்டுக்கும் பணமும் வாங்குகிறது.
இது ஒரு அனைத்தும் தழுவிய வீழ்ச்சி. இந்த அரசுக் கட்டமைப்பு, இதனை நியாயப்படுத்தும் தேர்தல் ஜனநாயகம், இந்த ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை, மக்கள் கொண்டிருந்த விழுமியங்கள் ஆகிய அனைத்தும் தகர்ந்து வீழ்வதைக் காண்கிறோம். “நடைபெற்றது தேர்தலே அல்ல, இது ஒரு சூது” என்று நிறுவும் வகையிலான ஆதாரங்கள் அடுக்கப்படுகின்றன. இந்தச் சூதுதான் ஜனநாயகம் என்று ஒப்புக் கொண்டு சரணடைவதா, எதிர்த்து நிற்பதா என்பதுதான் கேள்வி.
வாக்காளர்களால் தோற்கடிக்கப்பட்ட வளர்மதி, கோகுல இந்திரா, வைத்திலிங்கம், நத்தம் போன்ற உத்தமர்களை தனது பதவியேற்பு விழாவின் முன்வரிசையில் அமர வைத்து, குளோசப்-இல் காட்டி, அவர்களை நிராகரித்த வாக்காளர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. ரசிகப் பெருமக்களுக்கு ஐஸ்வர்யா ராய் வழங்கிய குளோசப் காட்சியின் அரசியல் மொழிபெயர்ப்புதான், வாக்காளப் பெருமக்களுக்கு ஜெயலலிதா வழங்கியிருக்கும் இந்த குளோசப் காட்சி.
பின்புறத்தைக் காட்டினால் முகத்தைத் திருப்பிக் கொள்ளலாம். இது முன்புறம். இந்த அவமதிப்பிலிருந்து நாம் தப்ப முடியாது. இது திரைப்படக்காட்சி அல்ல, இதுதான் ஆட்சி.
மிகச் சிக்கலான சீன சமூக சூழ்நிலைமைகளில் பொறுப்பேற்கத் தயங்கிய நடுத்தரவர்க்கப் பிரதிநிதிகளை லூ சுன் கேள்வி கேட்கிறார். கிண்டல் நடையில் பெயர் பெற்ற அவரது இக்கவிதை, குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அறிவுஜீவிகள் மற்றும் போலி மார்க்சீயவாதிகளுக்கும் பொருந்தும்
எந்த ஒரு அரசியல், கலாச்சார, சமூகப் பிரச்சினைக்கும் தெளிவான கருத்து (பதில்) சொல்லிவிட்டால் அது வறட்டுவாதம் என்ற கருத்து மேற்படி ஆகாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. ’இதுதான் சரியான கருத்து என்று வெளிப்படையாகச் சொல்லாதே!’ என்பது அவர்களின் புதிய வேதம். முடிவுக்கே வராமல் சந்தேகத்திலேயே நிரந்தரமாக நில் என்று சொல்லும் இவர்கள் முரண்பாடுகளை ’கண்ணியமாக’ ’நாகரிகமாக’ விவாதிக்கலாம் என்கிறார்கள். இனறோ பல பிரச்சினைகளில் கருத்து சொல்லவும் தயங்குகிறார்கள். இதுதான் கும்மிருட்டில் கரிக்குருவி பிடிக்கப் புறப்பட்டிருக்கும் ’புதிய தத்துவக்காரர்’களின் தேடல்
____________
நடுத்தர வர்க்கத்தின் நழுவல்
கனவு.
பள்ளிப்பருவக் கனவு.
ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடம்.
வகுப்பறையில் உட்கார்ந்திருக்கிறேன்.
ஒரு கட்டுரை எழுத ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன்.
கட்டுரையில் எனது அபிப்பிராயத்தை
எப்படி எழுதுவது எனக் கேட்டேன் ஆசிரியரை.
“அது மிகக் கடினம்! இரு… உனக்கு ஒரு கதை சொல்கிறேன்”
அவர் மூக்குக் கண்ணாடிக்கு மேலாக ஒரப்பார்வை பார்த்துக்கொண்டே கூறினார்.
“ஒரு குடும்பத்தில் ஆண்குழந்தை பிறந்தது.
பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சி.
குழந்தைக்கு ஒரு மாதம் ஆனது.
வந்து போகிறவர்களிடமெல்லாம் பெற்றோர் குழந்தையைக் காட்டினர்.
பாராட்டுகளைக் கேட்க அவர்கள் ஆசைப்படுவது இயல்புதானே!
’இந்தக் குழந்தை பெரிய பணக்காரன் ஆவான்’ – என்றார் ஒருவர்.
அந்த உத்தமருக்கு பெற்றோர் நெஞ்சார நன்றி தெரிவித்தனர்.
’இந்தக் குழந்தை பெரிய அதிகாரியாவான்’ என்றார் மற்றொருவர்.
அவருக்குப் புகழாரங்களைச் சூட்டினர்.
இன்னொருவன் வந்தான் –
’இந்தக் குழந்தை மரணமடைவான்’ என்றான்.
பெற்றோர் உள்ளம் கொதித்தது;
எல்லோரும் சேர்ந்து அவனை அடித்துப் புரட்டி விட்டார்கள்.”
ஆசிரியர் மேலும் சொன்னார்:
“அந்தக் குழந்தை பணக்காரனாய் வருவதும்,
பெரிய அதிகாரியாய் வருவதும் நாளை பொய்யாகிப் போகலாம்.
ஆனால் அவன் மரணமோ உறுதி.
எனினும் இங்கே
பொய்யைச் சொன்னவனுக்குப் புகழாரம்!
உண்மை பேசியவனுக்கு அடி உதை!”
அவர் அப்படிச்சொல்லிவிட்டு என்னைப் பார்த்துக்
கேட்டார்: ”அப்ப… அந்த இடத்துல நீ என்ன சொல்லுவே?”
“ஐயா. நான் பொய் சொல்லவும் விரும்பவில்லை,
உதைபடவும் விரும்பவில்லை.
அப்படியானால் என் கருத்தை எப்படிச் சொல்வது?”
ஆசிரியர் நிதானமாகச் சொன்னார்:
”அந்த மாதிரி நேரங்களில் சொல்லவேண்டியது
இதுதான். இந்தக் குழந்தையைப் பாருங்களேன்!
ஆகா! ஆகா! இவன் வந்து…. ஒஹோ! ஒஹோ!
குழந்தை பற்றி என்னுடைய கருத்தா? ஹி..ஹி..
ஹி..ஹி..ஹி….
– லூ சுன், தமிழாக்கம்:மருத்துவன், புதிய கலாச்சாரம் (நவ, டிச 1990, ஜன 1991)