Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 580

கேரளாவில் காவிகள் காலூன்றியது எப்படி ?

4

இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போனால்…
– கேரளா உணர்த்தும் எதிர்மறை படிப்பினை!

டந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் கேரளா தவிர, இதர மாநிலங்களில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி அடைந்துள்ளனர். கேரளத்தில் பா.ஜ.க. கூட்டணி ஒரு இடத்திலும், போலி கம்யூனிஸ்டு ‘இடதுசாரி’ கூட்டணி 91 இடங்களிலும், காங்கிரசு கூட்டணி 47 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கேரளத்தில் ஒரு தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள போதிலும், கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது பல இடங்களில் இரு மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று அச்சுறுத்தும் அபாயமாக வளர்ந்துள்ளது. 2011-இல் 6.3 சதவீதமாக இருந்த பா.ஜ.க.வின் வாக்குகள் இப்போது 16 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளன. நீண்ட காலமாக இடதுசாரி அரசியல் செல்வாக்கு உள்ள கேரளத்தில் இந்துவெறி பாசிச சக்திகள் எப்படிக் காலூன்றி வளர முடிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதற்கான விதைகள் ஏற்கெனவே ஊன்றப்பட்டுவிட்டன.

கடந்த சில ஆண்டுகளாக இந்துமுனைவாக்கத்தைச் செயல்படுத்தும் திட்டத்துடன் ஐக்கிய வேதி,ஷேத்ர சம்ரக்ஷன சமிதி, பால சதானம், ஏகல்வ வித்யாலயா, அனுமன் சேனா முதலான புதிய அமைப்புகள் இந்துவெறியர்களால் உருவாக்கப்பட்டன. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வழக்கொழிந்துபோன “தேயம்” எனப்படும் பிற்போக்கான சடங்கை ஆதரித்து, அவர்களது நண்பனாகவும் புரவலனாகவும் ஷத்ர சம்ரக்ஷன சமிதி எனப்படும் கோயில் பாதுகாப்புக் கழகம் செயல்படத் தொடங்கியது. நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பதை எதிர்க்கும் இந்துத்துவ பரிவாரங்கள், கேரள மக்கள் மாட்டுக்கறி உண்பதை அம்மாநிலத்தின் கலாச்சாரம் என்று நயவஞ்சகமாகக் கூறிக்கொண்டு பழங்குடியினரையும் மிகவும் பிற்பட்ட – தாழ்த்தப்பட்ட சாதியினரையும் தன்பக்கம் இழுக்க முயற்சித்தது.

kerala-hindu-fnanaitics-win
பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் இந்து வெறியர்களின் ஊர்வலம்

கடந்த ஆண்டில் பிரபல இலக்கிய விமர்சகரான எம்.எம். பஷீர் “மாத்ருபூமி” நாளேட்டில் ராமாயணம் பற்றிய ஒரு விமர்சனத் தொடர் கட்டுரை எழுதி வந்தார். ராமாயணத்தைப் பற்றி ஒரு முஸ்லிம் எதையும் எழுதக் கூடாது என்று எச்சரித்து அத்தொடர் கட்டுரை வெளிவராமல் தடுத்து நிறுத்திய இந்துவெறியர்கள், பஷீருக்கும் கொலைமிரட்டல் விடுத்தனர். இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ‘’ஏசியா நெட்” தொலைக்காட்சியின் விவாத ஒருங்கிணைப்பாளரான சிந்து சூர்யகுமார், சூத்திரர்களின் கடவுளான மகிஷாசுரனை இந்து பெண் தெய்வமான துர்கை கொன்றதை, இது பார்ப்பன பாரம்பரியம் என்று அசுரர் பாரம்பரியத்தினரான சூத்திரர்கள் எதிர்ப்பதைப் பற்றிய ஒரு விவாதத்தை நடத்தியதற்காக இந்துவெறியர்களால் தாக்கப்பட்டார்.

ஈராண்டுகளுக்கு முன்பு பெரியாறு ஆற்றங்கரையிலுள்ள சிவன் கோயில் அருகே முஸ்லிம்களின் மாநாட்டை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று இந்துத்துவப் பரிவாரங்கள் ஆயுதமேந்திய பேரணியை நடத்தி இந்து முனைவாக்கத்தை தீவிரப்படுத்தின. பாரதப் பண்பாடு என்னும் பிற்போக்குத்தனத்தை நிலைநாட்ட அனுமன் சேனா என்ற அமைப்பு அம்மாநிலத்தின் கலாச்சார காவலான திடீர் அவதாரம் எடுத்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இத்தகைய இந்து முனைவாக்கத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, தாழ்த்தப்பட்ட ஈழவ சாதியினருக்காக நிற்பதாக காட்டிக் கொள்ளும் பாரத் தர்ம ஜன சேனா (பி.டி.ஜே.எஸ்.) என்ற பிழைப்புவாதக் கட்சியை வளைத்து இத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கட்டிக் கொண்டது.

இடதுசாரி சக்திகள் செல்வாக்கு பெற்றுள்ளதைப் போலவே கேரளத்தில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறித்துவ வலதுசாரி பிற்போக்கு சக்திகளும் காங்கிரசு தலைமையில் வலுவாகவே இருந்தன. இந்து மதத்தை எதிர்க்காமல், அதனுடன் சமரசமாகப் போவதும், மத நல்லிணக்கம் பேசுவதும்தான் காந்தி – காங்கிரசின் உத்தியாக இருந்தது. இதே உத்தியை போலி கம்யூனிஸ்டுகளும் பின்பற்றியதால், காங்கிரசு கூட்டணிக்கும் இடதுசாரி கூட்டணிக்கும் இந்து மதம் குறித்த அணுகுமுறையில் வேறுபாடில்லாமல் போனது.

தமிழகத்தைப் போல பார்ப்பன எதிர்ப்பு – இந்துத்துவ எதிர்ப்பு மரபு கேரளத்தில் இல்லாத நிலையில், அத்தகையதொரு மரபை உருவாக்க வேண்டிய பொறுப்பையும் கடமையையும் போலி கம்யூனிஸ்டுகள் தெரிந்தே புறக்கணித்தார்கள். இந்து மதத்தின் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக ஏற்கெனவே நாராயண குரு, அய்யன்காளி போன்றோர் தொடங்கி வைத்த சீர்திருத்தங்களைக்கூட இப்போலி கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்துச் செல்லவில்லை. மாறாக, அரசியல் – சித்தாந்த ரீதியாகவே இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போனார்கள்.

keranal-cpm-surrender
ஓணம் பண்டிகையையொட்டி குழந்தைக்கு மாவலி மன்னன் வேடமிட்டு, பகத்சிங் படங்களுடன் சி.பி.எம். கட்சியினர் நடத்தும் ஊர்வலம்.

மாதொரு பாகன் விவகாரத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிவெறி ஆதிக்கத்தை எதிர்க்க முன்வராமல், இது எழுத்தாளரின் கருத்துரிமையைப் பறிக்கும் செயல் என்று நழுவிக் கொண்டதைப்போலத்தான், இந்து மதத்தின் மையமான பார்ப்பனியத்தை எதிர்க்காமல் கேரள போலி கம்யூனிஸ்டுகள் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொள்கிறார்கள். “பால கோகுலம்” என்ற அமைப்பின் பெயரால் குழந்தைகளுக்குக் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு இந்துவெறியர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலம் நடத்துகிறார்கள் என்றால், அதற்குப் போட்டியாக “பால சங்கம்” என்ற அமைப்பின் பெயரால் அதேபோல கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலத்தை போலி கம்யூனிஸ்டுகள் நடத்துகிறார்கள். ஓணம் பண்டிகையின் போது குழந்தைகளுக்கு மாவலி மன்னன் வேடமிட்டு கார்ல் மார்க்ஸ், பகத்சிங் படங்களுடன் சி.பி.எம். கட்சி ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கிறது. சபரிமலையின் மகரஜோதி அதிசயம் என்பது கேரள மின்வாரியம், போலீசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு ஆகியன இணைந்து நடத்தும் நாடகம் என்பது ஏற்கெனவே அம்பலமாகியுள்ள போதிலும், இந்த மூட நம்பிக்கைக்கும் மோசடிக்கும் எதிராக வாய் திறக்காமல், அரசு அதிகாரத்தில் இருந்த சமயத்திலும்கூட இதனை அங்கீரித்து போலி கம்யூனிஸ்டுகள் சந்தர்ப்பவாதமாகவே நடந்து கொள்கின்றனர். தேர்தல் வெற்றிக்காக சாதி-மதவாத பிற்போக்கு சக்திகளுடன் சந்தர்ப்பவாதமாகக் கூட்டணி சேர்வது, இந்து மனப்பான்மைக்கு ஏற்ப நெளிவுசுழிவாக நடந்து கொள்வது என்பதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் நடைமுறையாக இருக்கிறது.

வேதங்களின் நாடாக இந்திய வரலாற்றைப் பார்த்தார், கேரளத்தின் முதலாவது போலி கம்யூனிஸ்டு முதல்வரும் சி.பி.எம்.கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் சித்தாந்த குருவுமாகிய இ.எம்.எஸ். நம்பூதிரிபாட். அவரது சீடர்கள் இதனை நியாயப்படுத்தி உரை எழுதியதோடு, இந்துத்துவத்துடன் இசைந்து நின்றார்கள். இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போகும் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல் – சித்தாந்த பலவீனத்தையும், சந்தர்ப்பவாத நடைமுறையையும் சாதகமாக்கிக் கொண்டு, கேரள அரசியல் அரங்கில் வளர்ந்துள்ள இந்துவெறி சக்திகள், தேர்தலுக்கு பின் போலி கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வருகின்றன.

ஓட்டுப் பொறுக்குவதற்காக இந்துவெறிக் கும்பலுடனான மோதலில் ஏராளமான ஊழியர்களைப் போலி கம்யூனிஸ்டுகள் ஏற்கெனவே பலி கொடுத்திருக்கிறார்கள். ஓட்டுக்காக இந்துவெறியர்களுடன் மோதுவதற்குத் தயாராக உள்ள போலி கம்யூனிஸ்டுகள், ஏன் அரசியல் – சித்தாந்த ரீதியாக இந்துத்துவத்துக்கு எதிராகப் போராடவில்லை என்பதை அக்கட்சிகளிலுள்ள அணிகள் பரிசீலிக்க வேண்டும்.

போலி கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாத நடைமுறையை நிராகரித்து, அரசியல் – சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் இந்துத்துவத்துக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு போராடுவதே இந்துவெறி பாசிச பயங்கரவாத சக்திகளை முறியடிப்பதற்கான ஒரே வழியாகும். அதற்கு மாறாக, மத நல்லிணக்கம் பேசிக்கொண்டு இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போனால், இப்படிப்பட்ட விபரீத நிலைமைதான் ஏற்படும் என்பதை கேரளம் எதிர்மறை படிப்பினையாக உணர்த்துகிறது.

– தனபால்
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________

ஜெயாவின் வெற்றி சாமர்த்தியமா சதித்திட்டமா ?

10

கண்டெய்னர் வாழ்க! போலி வாக்காளர் வாழ்க!
அழிகின்ற மை வாழ்க! அழியாத முதல்வர் வாழ்க!
ஜனநாயகம் வாழ்க… வாழ்கவே!

மே 21 அன்று இரவு ஜெயா டிவியில் “இருவர்” திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. “வி-டு-த-லை, விடுதலை” என்ற பாடல் வரிக்கு, ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் தனது பின்புறத்தை குளோசப்பில் ரசிகப் பெருமக்களுக்கு காட்டியபடி ஆடிக்கொண்டிருந்தார்.

jaya-victory-paid-crowd
திருச்சியில் நடந்த ஜெயாவின் பிரச்ச்சாரக் கூட்டத்திற்காக கொண்டுவரப்பட்டவர்களுக்கு பகிரங்கமாக பணம் விநியோகிக்கப்படுகிறது: தேர்தல் ஆணையத்தின் கட்டளை, விதிகளுக்கு ஜெயாவின் மரியாதை.

சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகளிலிருந்து ஜெ. பெற்ற விடுதலையாக இருக்கட்டும், அல்லது சுயமரியாதை உணர்விலிருந்து தமிழ் மக்களுக்கு அவர் வழங்கியிருக்கும் ‘விடுதலை’யாக இருக்கட்டும் அனைத்துக்கும் அந்தக் காட்சி பொருந்தக் கூடியதே. மணிரத்தினத்தின் அழகியல் உணர்வைப் பாராட்டத்தான் வேண்டும். தற்போதைய தேர்தல் முடிவுகள் இதனை மீண்டும் உறுதி செய்கின்றன.

தமிழக வாக்காளர்கள் தம்மைத் தாமே இருண்ட காலத்திற்குள் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதிகார வர்க்கம், பல எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், தேர்தல் ஆணையம், நீதித்துறை, வாக்காளர்கள் ஆகிய அனைவரையும், அனைத்தையும் தன்னால் விலைக்கு வாங்க முடியும் என்பதை ஜெயலலிதா பலமுறை நிரூபித்திருக்கிறார். இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அதனை மீண்டும் நிரூபித்து விட்டார். எந்தக் காரணத்துக்காக முன்னர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் (வலது கம்யூ. தவிர) புறக்கணித்தார்களோ, அந்தக் காரணங்கள் அனைத்தும் பன்மடங்கு அதிகமாக இந்த பொதுத் தேர்தலில் தமிழகமெங்கும் தொழிற்பட்டிருக்கின்றன.

ஜனநாயகம் என்ற பெயரால் அழைக்கப்படுவதற்குத் தேவைப்படுகின்ற ஒப்பனைகளைக் கூட இந்த ‘ஜனநாயகம்’ இழந்து வருகிறது. அ.தி.மு.க.வின் கூட்டாளியாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதை அ.தி.மு.க.வைத் தவிர மற்றெல்லா கட்சிகளும் கூறிவிட்டன.

“நம்பிக்கை இல்லை” என்று குற்றம் சாட்டப்பட்டால் மரத்தடி சொம்பு நாட்டாமைகளுக்குக் கூட ரோசம் வரக்கூடும். நம்பிக்கை இல்லாத நடுவரை வைத்து பள்ளிக்கூட கால்பந்து போட்டியைக் கூட நடத்த முடியாது. ஆனால் ஜெயலலிதாவின் கைப்பாவை என்று அனைத்து கட்சிகளாலும் காறி உமிழப்பட்ட பின்னரும் ‘நான்தான் நடுவர்’ என்று புன்னகை மாறாமல் கூறுகிறார் லக்கானி.

jaya-victory-caption-1இலட்சக்கணக்கான போலி வாக்காளர்கள், சிறுதாவூர் கன்டெய்னர், ஐவர் அணியின் பல்லாயிரம் கோடி சொத்துக்கள், கரூர் அன்புநாதனின் கரன்சி கோடவுன், தமிழகம் முழுவதும் அமைச்சர்களின் பினாமிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல கோடிகள், திருப்பூர் கன்டெய்னர் லாரிகள் – என அடுக்கடுக்காக எழுந்த எந்தக் குற்றச்சாட்டிற்கும் தேர்தல் ஆணையமோ வருமான வரித்துறையோ பதிலளிக்கவில்லை.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டி 60,000 கோடி ரூபாய் வரை பணப்புழக்கம் அதிகரிக்கிறது என்றும், அதற்குக் காரணம் உங்களுக்கே தெரிந்ததுதான் என்றும் கூறுகிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன். தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை யாராலும் தடுக்கவே முடியாது என்று தேர்தல் ஆணையத்தின் வக்கற்ற நிலையை பிரகடனம் செய்கிறார், முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி.

அன்புநாதனுக்கு கேட்டவுடன் முன் ஜாமீன் வழங்குகிறது உயர்நீதி மன்றம். அன்புநாதன் பிடிபடக் காரணமாக இருந்த எஸ்.பி.வந்திதா பாண்டேவுக்கு கொலை மிரட்டல் வருகிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் அவர் விஷ்ணுப்பிரியாவைப் போல ‘தற்கொலை’ செய்து கொள்ளவும் வாய்ப்புண்டு.

jaya-victory-police-paying
திருச்சியில் நடந்த ஜெயாவின் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக போலீசு அ.தி.மு.க.வின் விசுவாசமிக்க தொண்டனைப் போலத் தொப்பிகளை விநியோகிக்கும் காட்சி.

தேர்தல் தொடர்பான பணிகளில் ஆளும் கட்சியானது அரசு எந்திரத்தைப் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட வேட்பாளர் பெற்ற வெற்றியையே ரத்து செய்யலாம் என்று விதி இருந்த போதிலும், ஜெயலலிதா உரையாற்றும் மைதானங்களில் புல் புடுங்குவது முதல், ஓட்டுக்குப் பணம் கடத்துவது வரையிலான எல்லா வேலைகளையும் அதிகார வர்க்கமும் போலீசும்தான் செய்திருக்கின்றன. இன்னின்ன அதிகாரிகள் என்று ஆதாரபூர்வமாக அம்பலமான பின்னரும் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தலை நியாயமாக நடத்துவதைப் போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டுவது கூடத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. தேர்தல் ஆணையம் மட்டுமல்ல; பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், வருமான வரித்துறை, உள்துறை அமைச்சகம், மத்திய உளவுத்துறை, ரிசர்வு வங்கி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், ஊடகங்கள் – ஆகிய எல்லா நிறுவனங்களும் கன்டெய்னரின் சந்நிதியில் கைகட்டி வாய் பொத்தி நிற்கின்றன. ஜெயலலிதாவின் வெற்றி என்பது இந்தக் கட்டமைப்பின் தோல்வியை முன் எப்போதையும் விட அதிகமாக பளிச்சென்று எடுத்துக் காட்டியிருக்கிறது.

“ஜெயலலிதாவை இனி தேர்தல் மூலம் தோற்கடிக்கவே முடியாதோ” என்ற கேள்வி எதிர்க்கட்சிகளின் மனதில் எழத்தான் செய்கிறது. இருந்த போதிலும், அந்தக் கேள்விக்கு அவர்களிடம் விடை இல்லாத காரணத்தினால், கேள்வியை தொண்டைக் குழிக்குள்ளேயே புதைத்துக் கொண்டு, அப்படி ஒரு கேள்வியே எழும்பாதது போல தம்மைத் தாமே தைரியப்படுத்திக் கொள்கிறார்கள்.

jaya-victory-tasmac
தமிழ்நாட்டைக் குடிநாடாக்கிய அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்கள்.

இந்தக் கட்டமைப்பு நியாயப்படுத்த முடியாத அளவுக்கு சீர்கெட்டு விட்டது என்ற போதிலும், வேறு மாற்று குறித்த சிந்தனையே எழாத வண்ணம், ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் மக்களை இந்த தேர்தல் அரசியல் வரம்புக்கு உள்ளேயே சிந்திக்கும்படி கட்டுப்படுத்துகின்றன. இருக்கின்ற நிலைமையை அங்கீகரித்து, அனுசரித்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையே வெவ்வேறு கோணங்களிலிருந்து மக்களுக்கு வலியுறுத்துகின்றன.

ஜெயலலிதாவின் வெற்றி சாமர்த்தியமா, சதித்திட்டமா?

தேர்தல் முடிவு குறித்து நடைபெறும் விவாதங்களைக் கவனித்துப் பாருங்கள். இந்த தேர்தலில் எல்லா விதமான கிரிமினல் வழிமுறைகளையும் பயன்படுத்தித்தான் ஜெ. கும்பல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. 2009-2014-இல் இந்தியா முழுவதும் உயர்ந்துள்ள வாக்காளர் எண்ணிக்கை சராசரியாக 13.6%. தமிழகத்தில் இது 29.1%. அதாவது 1.21 கோடி புதிய வாக்காளர்கள். இவர்களில் போலி வாக்காளர்கள் 40 இலட்சம் பேர் என்று தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல், பிறகு தாம்பரம் தொகுதி போலி வாக்காளர் பட்டியலை ஆதாரத்துடன் கொடுத்து உயர்நீதி மன்றத்தில் உத்தரவு பெற்ற பின்னர் நடவடிக்கை எடுப்பது போல நடித்தது ஆணயம். தமிழகம் முழுவதும் அகற்றப்பட்ட போலி வாக்காளர்கள் 6.5 லட்சம் மட்டும்தான். மீதி சுமார் 33 இலட்சம் போலி வாக்காளர்கள் குறித்து எந்த விளக்கமும் இல்லை. வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் பழைய முறைக்குப் பதிலாக வாக்காளர்களையே கைப்பற்றி விட்டார் ஜெயலலிதா. ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்களித்தவர்களின் கையில் வைக்கப்படும் மை, வைத்தவுடன் அழிந்து கள்ள ஓட்டு சதியை அம்பலமாக்கியிருக்கிறது. இத்தனை அயோக்கியத்தனங்கள் அப்பட்டமாக அரங்கேறிய
போதிலும், ஜெயலலிதாவின் இந்த முறைகேடான வெற்றியை எந்த ஊடகமும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

jaya-victory-caption-2தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அரும்பாடுபட்ட ஊடகத் தரகர்கள், தேர்தல் முடிவு குறித்த ஆய்வை ஐ.பி.எல்.ஆட்டம் குறித்த ஆய்வு போல மாற்றுகிறார்கள். ஜெயலலிதா எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தியதையம், விலைக்கு வாங்கியதையும், ஆதிக்க சாதி ஓட்டுக்களை அறுவடை செய்ததையும், மோசடி வாக்குறுதிகள் மற்றும் இலவசத் திட்டங்கள் மூலம் மக்களை ஏய்த்ததையும் அவரது திறமைகளாக காட்டுகிறார்கள். “எப்படி வியூகம் அமைத்திருந்தால் தி.மு.க. வெற்றி பெற்றிருக்க முடியும்” என்று விவாதம் நடத்துகிறார்கள். தேர்தல் என்பதே ஒரு விளையாட்டு போலவும், அதில் சாமர்த்தியமாக ஆடி ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டதாகவும், சாமர்த்தியக் குறைவான தி.மு.க.வும் மற்ற கட்சியினரும் தோற்றுவிட்டதாகவும் காட்டுகிறார்கள்.

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பா?

ஜெ.பெற்ற வாக்குகளில் உண்மை எத்தனை, போலி எத்தனை என்பது ஒரு புறமிருக்கட்டும். 5 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியைப் பரிசீலித்து எடை போட்டு அதன் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிப்பதாகக் கூறுகிறார்கள். அப்படி சீர்தூக்கிப் பார்த்துத்தான் வாக்களித்திருக்கிறார்களா?

2011-இல் ஆட்சிக்கு வந்தவுடனே மின் வாரியம் கடனில் மூழ்கி இருப்பதாக சொல்லி ஜெ.மின் கட்டணத்தை உயர்த்தினார். ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் மின் வாரியத்தின் கடன் பன்மடங்கு உயர்ந்துவிட்டதே, ஏன் என்று மக்களுக்குத் தெரியுமா? தற்போது 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகத் தரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறாரே, இதன் சாத்தியம் குறித்து பரிசீலித்துத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்களா? “மின் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை, ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது” என்று 2011-இல் கட்டணத்தை உயர்த்தியபோது ஜெயலலிதா கூறினாரே, அதை யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா?

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் பேருந்து சேவை சீர்குலைந்திருக்கிறது.பால் விலை உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் 25 ரூபாய் என்று குறைக்கப் போவதாக கூறுகிறார் ஜெ. ஆனால் தனியார் முதலாளிகளோ பால் விலையை உயர்த்துகிறார்கள்.
கடந்த 5 ஆண்டு ஆட்சியில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மூவாயிரத்திலிருந்து ஆறாயிரமாகியது. இப்போது அவற்றில் 500 கடைகளை மூடப்போவதாக ஜெ.வாக்குறுதி அளிக்கிறார். இவை பற்றியெல்லாம் மக்களுடைய புரிதல் என்ன? கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் யோக்கியதை இது எனும்போது, அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன நடந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் வாக்களித்திருக்கிறார்களா?

சொற்களால் அதிகாரத்தை நக்கும் தொலைக்காட்சி நெறியாளர்கள்!

jaya-victory-caption-3ஐந்தாண்டு கால ஆட்சியின் சரி -தவறுகளை சீர்தூக்கிப் பார்த்து அந்த அடிப்படையில்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று கருதுவது, பொதுப்படையான ஆதாரமற்ற ஒரு நம்பிக்கை. மேற்கண்ட கேள்விகளை மக்கள் எழுப்புவதில்லை என்பது மட்டுமல்ல, இப்படி கேள்வி எழுப்பி பரிசீலிக்க விடாமல் தடுப்பதற்கும், பல்வேறு கோணங்களில் மக்களைத் திசை திருப்புவதற்கும்தான் ஊடகங்கள் வேலை செய்கின்றன. தொலைக்காட்சி நெறியாளர்கள் எனப்படுவோர், சொற்களால் அதிகாரத்தை நக்குவதை ஒரு அனிச்சைச் செயலாகவே செய்யும் வண்ணம் தமது நாவினைப் பயிற்றுவித்திருக்கின்றனர்.

தலித் இளைஞர்கள் படுகொலை, முத்துக்குமாரசாமி தற்கொலை, விஷ்ணுப்பிரியாவின் மர்ம மரணம் போன்ற பிரச்சினைகளையோ அ.தி.மு.க. அமைச்சர்களின் கொள்ளை குறித்த குற்றச்சாட்டுகளையோ, மறுக்க முடியாத நிலை ஏற்படும்போது, “தி.மு.க. மட்டும் யோக்கியமா” என்ற கேள்வியின் மூலம் எந்த பிரச்சினையையும் துருவி ஆராய முடியாமல் தொலைக்காட்சி நெறியாளர்கள், நடுப்பக்க கட்டுரையாளர்கள் என்று அழைக்கப்படும் ஊடக கூலிப்படையினர் தடுத்து விடுகின்றனர். ஆர்.கே.நகர், ஸ்ரீரங்கம் தேர்தல் மோசடி பற்றி கேள்வி எழுப்பினால், உடனே திருமங்கலத்தை காட்டி அந்த வாதம் முடக்கப்படுகிறது. லஞ்ச ஊழல், அதிகார முறைகேடு ஆகிய விவகாரங்கள் எதைக் கிளப்பினாலும், ஒவ்வொன்றிலும் தி.மு.க. தரப்பின் மீதும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இது ஒன்றே அம்மாவை விடுவிப்பதற்கான குறுக்கு வழியாகப் பயன்படுத்தப் படுகிறது.

ஜெயலலிதா விவகாரத்தில் மட்டுமல்ல, பொதுவிலேயே தர்க்க ரீதியாக அல்லாமல், அறிவற்ற முறையில் சிந்திப்பதற்கே மக்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பாமர மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் என்று கூறப்படும் நடுத்தர வர்க்கமே, இவ்வாறு சிந்திக்கிறது. அவ்வாறுதான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சிந்தனை முறையைத்தான் அது சமூகம் முழுமைக்கும் பரப்புகிறது.

பிம்பத்தை நம்ப வைக்கும் பித்தலாட்டம்

jaya-victory-degenerate-party
பொறுக்கித் திண்ணும் பிழைப்புவாதக் கூட்டத்தையும் (இடது) அரசியலற்ற உதிரிப் பாட்டாளிகளையும் அடித்தளமாகக் கொண்டதுதான் அ.தி.மு.க.

கார்ப்பரேட் விளம்பர நிறுவனங்களால் உருவாக்கப்படும் பிம்பத்தின் மீது ஒரு பித்தையும் மூட நம்பிக்கையையும் ஏற்படுத்தி, “அந்த பிம்பம்தான் நான்” என்று நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்த மோடி, இந்த விசயத்தில் ஒரு முன்னோடி. மாற்றம், முன்னேற்றம் என்ற அன்புமணியின் விளம்பரமாகட்டும், வழமையான அரசியல்வாதியின் தோற்றத்தை நிராகரித்து சாதாரண நடுத்தர வர்க்க மனிதனின் தோற்றத்துக்கு மாறிக் கொள்வதன் மூலம் மக்களில் ஒருவராகத் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள முனைந்த ஸ்டாலினாக இருக்கட்டும் – நுகர் பொருட்கள் குறித்து விளம்பரங்கள் தோற்றுவிக்கும் மனப்பதிவைத்தான் இவர்கள் மக்களிடம் உருவாக்க முயற்சிக்கிறார்கள். இந்த மனநிலையைத்தான் வாக்குகளாக மாற்றுகிறார்கள்.

பொருளாதாரக் கொள்கைகளைப் பொருத்தவரை, எல்லா கட்சிகளுடைய கொள்கையும் தனியார்மய – தாராளமயக் கொள்கைதான் என்பதால், விவாதம், அறிவியல் பூர்வமான ஆய்வு ஆகியவற்றிலிருந்து முடிந்தவரை மக்களை விலக்கி வைக்கவே இவர்கள் முயற்சிக்கிறார்கள். மற்றபபடி, இவர்கள் முன்வைக்கும் தேர்தல் அறிக்கைகள், திட்டங்களெல்லாம் தம்மைப் பற்றி இவர்கள் தோற்றுவித்துக் கொள்ளும் பிம்பத்துக்கான பின் இணைப்புகள் மட்டுமே.

குறிப்பிட்ட பிரச்சினைகளின் பருண்மையான விவரங்களுக்குள் செல்லாமல், எம்.ஜி.யாரின் பரோபகாரம், ஜெயலலிதாவின் துணிச்சல், கருணாநிதியின் நிர்வாகத் திறன் என்பன போன்ற உருவாக்கப்பட்ட அபிப்ராயங்களின் அடிப்படையில் சிந்திப்பதற்கே மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டாஸ்மாக் விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். மக்கள் போராட்டங்கள் தீவிரமாக நடந்தபோது “கடையை மூடும் பேச்சுக்கே இடமில்லை” என்றது ஜெ.அரசு. ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு என்ற தி.மு.க.வின் அறிவிப்பை முதலில் கேலி செய்து விட்டு, பின்னர் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் பரவத் தொடங்குவதைக் கண்டு பீதியடைந்து மூக்கறுபட்டுத்தான் “படிப்படியாக மதுவிலக்கு” என்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார் ஜெயலலிதா. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, “நான் ஒரு முடிவு எடுப்பதென்றால் ஆயிரம் முறை யோசித்துத்தான் எடுப்பேன் என்று உங்களுக்குத் தெரியும். படிப்படியாக மூடுவேன் என்றால் மூடுவேன்” என்று சவடாலாகப் பேசி சமாளித்தார் ஜெயலலிதா.

jaya-victory-killed-in-crowd
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடந்த ஜெயாவின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வந்து அகால மரணமடைந்தவர்கள்.

“நான் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவள்.என்னை நம்பு” என்பதற்கு மேல் ஜெயாவின் வாக்குறுதியில் வேறு எதுவும் இல்லை.இதை நம்பி வாக்களித்தவர்கள் எத்தனை சதவீதம் பேராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.அவர்களுடைய நம்பிக்கைக்கான அடித்தளம் எது? ஒரு பிரச்சினையைக் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கத் தெரியாத ஒருவன், அப்பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றல் பெற்றவர் யார் என்பதை மட்டும் முடிவெடுத்து வாக்களிக்க இயலுமா?

இயலாது.எனினும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தமது தேவை என்ன என்று புரிந்து கொள்ள முடிந்த மக்கள்தான் தமக்கு எப்படிப்பட்ட ஆட்சி வேண்டும் என்பதையும் முடிவு செய்ய இயலும். “உங்களுடைய தேவை என்ன என்பது உங்களுக்குத் தெரியாது. அது எனக்குத்தான் தெரியும்” என்று கூறுகின்ற ஒரு பாசிஸ்டு தன்னைத் தேர்ந்தெடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

அதனை உத்திரவாதம் செய்து கொள்ளும் பொருட்டு, தன்னைத் தேர்ந்தெடுக்கும் மக்களை விலைக்கு வாங்குகிறார். அல்லது உத்திரவாதமாக தன்னை மட்டுமே தேர்ந்தெடுக்கக் கூடிய போலி வாக்காளர்களை உருவாக்குகிறார். தேர்தலில் வெற்றியும் பெறுகிறார். இந்தச் “சாதனை”யின் முழுப்பெருமையும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியதல்ல. “சொந்த” மூளையைப் பயன்படுத்தி அவருக்கு வாக்களித்த மக்களுக்கும் இதில் பங்குண்டு.

இழிபுகழ் பெற்ற எம்.ஜி.யாரின் வாக்கு வங்கி

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஜனநாயகம் கூடாது என்று உறுதியாக நம்புகின்ற ஆதிக்க சாதியினரில் கணிசமானோரும், ஜனநாயகம் என்றால் என்னவென்றே உணர்ந்திராத ஒடுக்கப்பட்ட மக்கட்பிரிவினரும் இணைந்த ஒரு விநோதமான கலவைதான் இழிபுகழ் பெற்ற எம்.ஜி.யாரின் வாக்கு வங்கி. தொழில்துறை நசிவு, விவசாயப் பாதிப்புகளுக்கு இடையிலும், கோவை மாவட்டத்தின் ஒரு தொகுதி தவிர மற்றெல்லாத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. பெற்றிருக்கும் வெற்றி, அம்மாவட்டத்தின் கவுண்டர் சாதிவெறி ஜெயலலிதாவுக்கு செலுத்தியிருக்கும் அன்புக் காணிக்கை. அதற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. அதிகத் தொகுதிகளை வென்றிருக்கும் தென்மாவட்டங்களோ தேவர் சாதிவெறியின் நிலைக்களன்கள். இந்த ஆதிக்க மனோபாவமும், ஏழைகளான உதிரி வர்க்கங்கள் மற்றும் பெண்களின் அடிமை மனோபாவமும்தான் ஜெயலலிதா என்ற பாசிஸ்டை தெரிவு செய்ய தமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியிருக்கின்றன. இந்த வாக்கு வங்கியின் பிடியில் தமிழகம் ஒரு பிணைக்கைதியாகச் சிக்கியிருக்கிறது.

குஜராத்தில் மோடியைத் தேர்ந்தெடுத்த இந்து மதவெறி, அதற்கு முன்னால் படேல் சாதி வெறியாக இருந்தது. உ.பி.யில் மோடிக்கு வெற்றி தேடித்தந்த இந்து மதவெறி, ஜாட் சாதிவெறியின் இன்னொரு வடிவம். சாதி உணர்வு என்பது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, எந்த நெறியுமற்றது, ஒழுக்கமற்றது. அது கழுத்தை வெட்டும், காலிலும் விழும், கவுரமே இல்லாமல் பொறுக்கித் தின்பதற்கு முண்டியடிக்கும், பிறகு ஆண்ட பரம்பரை என்று மீசையையும் முறுக்கும்.

ஜெயலலிதாவுக்குப் பதிலாக தி.மு.க. ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், அது இந்த அரசியல் சமூகக் கட்டமைவின் தோல்வியை எந்த விதத்திலும் மாற்றப்போவதில்லை. மாறாக ,புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையில்தான் தி.மு.க. ஈடுபடும். ஆனால் ஜெயலலிதா பெற்றிருக்கும் வெற்றி, தமிழ்ச்சமூகம் உள்ளுக்குள் அழுகத்தொடங்கி விட்டதை அறிவிக்கின்றது.

அனைத்தும் தழுவிய வீழ்ச்சி!

“ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள் எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன” என்கிறது தோழர் சிவசேகரத்தின் ஒரு கவிதை வரி. ஆற்று மணல் கொள்ளையால் உள்ளூர் விவசாயம் அழிவதைக் கண்ணால் கண்டபடியே, கொள்ளையனிடம் கோயில் திருவிழாவுக்குப் பணம் வாங்குகிறார்கள் மக்கள். உடுமலை சங்கர் கொலையையும், கவுசல்யாவின் தற்கொலை முயற்சியையும் பார்த்தபடி இரக்கமே இல்லாமல் கடந்து செல்கிறது தமிழ்ச் சமூகம். முத்துக்குமாரசாமியும், விஷ்ணுப்பிரியாவும், எஸ்.வி.எஸ்.கல்லூரி மாணவிகளும் தம்மைத்தாமே தண்டித்துக் கொள்கின்றனர். பொதுப்பணித்துறையில் 45% கமிசன் என்று அம்பலப்படுத்திய ஒப்பந்தக்காரர்கள் முகவரி இல்லாமல் போகிறார்கள். அன்புநாதனையும் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியையும் கல்லூரித் தாளாளரையும் விடுவிக்கின்றது நீதிமன்றம். கொங்கு நாட்டு கன்டெய்னர் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்று நிறுவப்பட்டதைப் போல, கோகுல்ராஜ் கொலையையும், “தற்கொலை என்று நிரூபிப்பேன்” என்கிறான் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் யுவராஜ்.

திரும்பிய திசையிலெல்லாம் கொடுமைகள் கூத்தாடும்போது, ஓட்டுக்குப் பணம் வாங்கிய கொடுமையைப் பற்றி மட்டும் குமுறுவது அபத்தமல்லவா?

அரவக்குறிச்சியிலும் தஞ்சையிலும் மட்டும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைக் கண்டுபிடித்து, அந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தலைத் தள்ளி வைக்கிறது ஆணையம். ஓட்டுக்குக் கொடுக்கும் பணத்தை வெளிப்படையாக, ஊர் மக்கள் முன்னிலையில், ‘ஜனநாயக பூர்வமாக’ வழங்க வேண்டுமென்றும் உள்ளூர் கட்சிக்காரர்கள் அதில் ‘ஊழல்’ செய்ய அனுமதிக்க கூடாது என்றும் ஒரு புதிய ஒழுக்க நெறியை உருவாக்குகின்றன தமிழகத்தின் கிராமங்கள். சென்னை மாநகரின் வெள்ளம் பாதிக்கப்படாத பகுதிளைச் சேர்ந்த அபார்ட்மென்ட் நடுத்தர வர்க்கமோ கூசாமல் வெள்ள நிவாரணம் வாங்குகிறது, ஓட்டுக்கும் பணமும் வாங்குகிறது.

இது ஒரு அனைத்தும் தழுவிய வீழ்ச்சி. இந்த அரசுக் கட்டமைப்பு, இதனை நியாயப்படுத்தும் தேர்தல் ஜனநாயகம், இந்த ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை, மக்கள் கொண்டிருந்த விழுமியங்கள் ஆகிய அனைத்தும் தகர்ந்து வீழ்வதைக் காண்கிறோம். “நடைபெற்றது தேர்தலே அல்ல, இது ஒரு சூது” என்று நிறுவும் வகையிலான ஆதாரங்கள் அடுக்கப்படுகின்றன. இந்தச் சூதுதான் ஜனநாயகம் என்று ஒப்புக் கொண்டு சரணடைவதா, எதிர்த்து நிற்பதா என்பதுதான் கேள்வி.

வாக்காளர்களால் தோற்கடிக்கப்பட்ட வளர்மதி, கோகுல இந்திரா, வைத்திலிங்கம், நத்தம் போன்ற உத்தமர்களை தனது பதவியேற்பு விழாவின் முன்வரிசையில் அமர வைத்து, குளோசப்-இல் காட்டி, அவர்களை நிராகரித்த வாக்காளர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. ரசிகப் பெருமக்களுக்கு ஐஸ்வர்யா ராய் வழங்கிய குளோசப் காட்சியின் அரசியல் மொழிபெயர்ப்புதான், வாக்காளப் பெருமக்களுக்கு ஜெயலலிதா வழங்கியிருக்கும் இந்த குளோசப் காட்சி.

பின்புறத்தைக் காட்டினால் முகத்தைத் திருப்பிக் கொள்ளலாம். இது முன்புறம். இந்த அவமதிப்பிலிருந்து நாம் தப்ப முடியாது. இது திரைப்படக்காட்சி அல்ல, இதுதான் ஆட்சி.

– சூரியன்.
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016

நழுவல்

2

லூ சுன். – (சீனப்புரட்சி எழுத்தாளர், கவிஞர். ஒவியர்)

லூ சுன்
லூ சுன்

மிகச் சிக்கலான சீன சமூக சூழ்நிலைமைகளில் பொறுப்பேற்கத் தயங்கிய நடுத்தரவர்க்கப் பிரதிநிதிகளை லூ சுன் கேள்வி கேட்கிறார். கிண்டல் நடையில் பெயர் பெற்ற அவரது இக்கவிதை, குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அறிவுஜீவிகள் மற்றும் போலி மார்க்சீயவாதிகளுக்கும் பொருந்தும்

எந்த ஒரு அரசியல், கலாச்சார, சமூகப் பிரச்சினைக்கும் தெளிவான கருத்து (பதில்) சொல்லிவிட்டால் அது வறட்டுவாதம் என்ற கருத்து மேற்படி ஆகாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. ’இதுதான் சரியான கருத்து என்று வெளிப்படையாகச் சொல்லாதே!’ என்பது அவர்களின் புதிய வேதம். முடிவுக்கே வராமல் சந்தேகத்திலேயே நிரந்தரமாக நில் என்று சொல்லும் இவர்கள் முரண்பாடுகளை ’கண்ணியமாக’ ’நாகரிகமாக’ விவாதிக்கலாம் என்கிறார்கள். இனறோ பல பிரச்சினைகளில் கருத்து சொல்லவும் தயங்குகிறார்கள். இதுதான் கும்மிருட்டில் கரிக்குருவி பிடிக்கப் புறப்பட்டிருக்கும் ’புதிய தத்துவக்காரர்’களின் தேடல்

____________

நடுத்தர வர்க்கத்தின் நழுவல்

னவு.
பள்ளிப்பருவக் கனவு.
ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடம்.
வகுப்பறையில் உட்கார்ந்திருக்கிறேன்.
ஒரு கட்டுரை எழுத ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன்.
கட்டுரையில் எனது அபிப்பிராயத்தை
எப்படி எழுதுவது எனக் கேட்டேன் ஆசிரியரை.

“அது மிகக் கடினம்! இரு… உனக்கு ஒரு கதை சொல்கிறேன்”
அவர் மூக்குக் கண்ணாடிக்கு மேலாக ஒரப்பார்வை பார்த்துக்கொண்டே கூறினார்.
“ஒரு குடும்பத்தில் ஆண்குழந்தை பிறந்தது.
பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சி.
குழந்தைக்கு ஒரு மாதம் ஆனது.
வந்து போகிறவர்களிடமெல்லாம் பெற்றோர் குழந்தையைக் காட்டினர்.
பாராட்டுகளைக் கேட்க அவர்கள் ஆசைப்படுவது இயல்புதானே!

’இந்தக் குழந்தை பெரிய பணக்காரன் ஆவான்’ – என்றார் ஒருவர்.
அந்த உத்தமருக்கு பெற்றோர் நெஞ்சார நன்றி தெரிவித்தனர்.
’இந்தக் குழந்தை பெரிய அதிகாரியாவான்’ என்றார் மற்றொருவர்.
அவருக்குப் புகழாரங்களைச் சூட்டினர்.
இன்னொருவன் வந்தான் –
’இந்தக் குழந்தை மரணமடைவான்’ என்றான்.
பெற்றோர் உள்ளம் கொதித்தது;
எல்லோரும் சேர்ந்து அவனை அடித்துப் புரட்டி விட்டார்கள்.”
ஆசிரியர் மேலும் சொன்னார்:
“அந்தக் குழந்தை பணக்காரனாய் வருவதும்,
பெரிய அதிகாரியாய் வருவதும் நாளை பொய்யாகிப் போகலாம்.
ஆனால் அவன் மரணமோ உறுதி.
எனினும் இங்கே
பொய்யைச் சொன்னவனுக்குப் புகழாரம்!pseudo intellectual
உண்மை பேசியவனுக்கு அடி உதை!”

அவர் அப்படிச்சொல்லிவிட்டு என்னைப் பார்த்துக்
கேட்டார்: ”அப்ப… அந்த இடத்துல நீ என்ன சொல்லுவே?”
“ஐயா. நான் பொய் சொல்லவும் விரும்பவில்லை,
உதைபடவும் விரும்பவில்லை.
அப்படியானால் என் கருத்தை எப்படிச் சொல்வது?”

ஆசிரியர் நிதானமாகச் சொன்னார்:
”அந்த மாதிரி நேரங்களில் சொல்லவேண்டியது
இதுதான். இந்தக் குழந்தையைப் பாருங்களேன்!
ஆகா! ஆகா! இவன் வந்து…. ஒஹோ! ஒஹோ!
குழந்தை பற்றி என்னுடைய கருத்தா? ஹி..ஹி..
ஹி..ஹி..ஹி….

– லூ சுன்,
தமிழாக்கம்:மருத்துவன்,
புதிய கலாச்சாரம் (நவ, டிச 1990, ஜன 1991)

மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் !

4
CPI ன் மாணவர் பிரிவு 1962ல் பங்கேற்ற டிராம்ப் எரிப்பு போராட்டம்.

மந்தைகள்!

புரட்சிகர அமைப்புகளில் நம்பிக்கை வைத்து இயங்கும் அணிகளுக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பட்டம் இது. ஒழுங்கு, கட்டுப்பாடு போன்ற பொருளற்ற கட்டுப்பெட்டித் தனங்களில் கட்டுண்டு கிடக்கும் உறுப்பினர்களுக்கு அவர்கள் கொடுத்த செல்லப் பெயர் இது. அவர்கள் மெத்தப்படித்தவர்கள் அந்தியமாதலைப் பற்றிக் கேளுங்கள் – அவர்கள் ஆர்வத்துடன் விளக்குவார்கள் ஸ்டாலினின் ரஷியாவைப் பற்றிக் கேளுங்கள் – நெருப்பைக் கக்குவார்கள்.

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட நக்சல்பாரி எழுச்சியில் பங்கேற்ற இளைஞர்கள்
மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த நக்சல்பாரி எழுச்சியில் பங்கேற்ற இளைஞர்கள்

ரோசா லக்சம்பர்க், அல்துசர், சார்த்ரே போன்ற பெயர்களைக் கேட்டு ’மந்தைகள்’ விழிக்கும்போது அவர்கள் ரகசியமாக குதுகலிப்பார்கள்.

அவர்கள் பாரம்பரியமிக்கவர்கள். பாட்டாளி வர்க்கக் கட்சியில் உண்மையிலேயே பாட்டாளிகள் இருக்க வேண்டும் என்று லெனின் சொன்னபோது கட்சியை மந்தையாக்க முயல்கிறீர்களா என்று ஆவேசப்பட்டவர்கள் அவர்கள்தான். கிரெம்ளின் அரண்மனையை புரட்சிச் சிப்பாய்கள் தாக்கியபோது பாரம்பரியச் செல்வங்கள் அழிக்கப்படுவது கண்டு துடித்துப் போனவர்கள் அவர்கள் தான். சீனத்துக் கலாச்சாரப் புரட்சியை முழுமூச்சாக எதிர்த்து நின்றவர்களும் அவர்கள் தான்.

அவர்கள் எச்சரிக்கை மிக்கவர்கள்; ஆழ்ந்து படித்து, சிந்தித்து, விவாதித்து மீண்டும் படித்து, விவாதித்து, சிந்தித்து….. முடிவுக்கு வர முயல்பவர்கள்.

அடிமைச் சமுதாயத்தின் அரசியல் முதல் கம்யூனிச சமுதாயத்தின் கலாச்சாரம் வரை அனைத்தையும் ஆய்ந்து தெளியாமல் அவர்கள் அடியெடுத்தும் வைக்க மாட்டார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம்.

தங்களைப் போன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க மறுக்கும் மந்தைகளுக்காக சிலர் அனுதாபப்படுவார்கள்.

தங்களை குறை கூற முற்படும் மந்தைகளைக் கண்டாலோ அவர்கள் ஆத்திரத்தால் முகம் சிவப்பார்கள்.

அவர்கள் கரையிலிருந்தே நீந்தக் கற்றுத்தருபவர்கள். அலை ஒயும் என்று காத்திருப்பவர்கள்.

அவர்கள் தான் அறிவு ஜீவிகள். நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகள்: நடுத்தர வர்க்கமாகவே நீடிக்க விரும்பும் அறிவு ஜீவிகள்.

நக்சல்பாரி இயக்கத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு, கட்சியில் சேர்ந்து, பின் அரசு அடக்குமுறையைக் கண்டு அஞ்சி விலகிப்போன ஒரு அறிவுஜீவியின் நேர்மையான சுயபரிசீலனை இது.

அறிவு ஜீவிகளுக்கும் அவர்தம் ஆராதகர்களுக்கும்…… மற்றும் ’மந்தைகளுக்கும்’ இதைச் சமர்ப்பிக்கிறோம்.

– ஆசிரியர் குழு, புதிய கலாச்சாரம்.

***

ருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னே வசந்தத்தின் இடிமுழக்கம் கேட்டுக் கிளர்ந்தெழுந்தவர்களே! இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? ஒரு தீவு போல நான் விலகிவிட்டேன். என்னுடைய வாழ்க்கையின் குன்றிப்போன சோகத்திற்குள்ளே ஒடுங்கிப் போய்விட்டேன். என்னுடைய வாழ்க்கையில் போர்க்குணம் பொங்கும் வெற்றி நடை முடிந்துவிட்டது. கம்பீரமான செங்கொடியும், அறைகூவும் சர்வ தேசிய கீதமும் இன்று எனது வாழ்க்கையில் உணர்ச்சியற்ற சடங்குகளாய் மாறிவிட்டன.

CPI ன் மாணவர் பிரிவு 1962ல்  பங்கேற்ற டிராம்ப் எரிப்பு போராட்டம்.
1962 கொல்கத்தா: ட்ராம்ப் கட்டணம் உயர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 220 மாணவர்கள் காயமுற்றனர்.

நான் அவநம்பிக்கையின் உருவம் என்னுள்ளே கொப்புளித்த போர்க்குணம் இன்று அடங்கிவிட்டது. இருந்தும் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கை நாடகத்தின் இறுதிக்காட்சிக்காகக் காத்திருக்கிறேன்.

கொந்தளிப்பு மிகுந்த 60ம் ஆண்டுகளில் நான் ஒரு கல்லூரி மாணவன். “புரட்சி தவிர்க்கவே இயலாதது” என்ற கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின் ஆணித்தரமான வாசகம் என் மனதில் அழுத்தம் திருத்தமாகப் பதிந்துவிட்டது. மாவோவின் மூன்று புகழ்பெற்ற கட்டுரைகளை அன்று படிக்க நேர்ந்த போது நான் அடைந்த மகிழ்ச்சி. கடந்த காலத்தின் மங்கிய நினைவுகள் பளிச்சிடுகின்றன. சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. தோண்டி எடுக்கப்பட்ட குழிப் பிணத்தைப் போல காட்சிப் படிமங்கள் உருத்தெரியாமல் போய்விட்டன. காலத்தால் அரித்துத் தின்னப்பட்டுவிட்டன. கனவுகளில் தோன்றும் நிஜங்கள் கூட தம் நிறத்தை மாற்றிக் கொள்கின்றனவே! அன்று நான் எப்படி இருந்தேன்? என்னுடைய முகமே எனக்கு மறந்துவிட்டது. அனலில் பட்ட மெழுகாக அது கரைந்துவிட்டது. ஆனால் மிருத்தியுஞ்சயனின் முகம் மட்டும் என் நினைவிலிருந்து அழியாமல் என்னை அலைக்கழிக்கிறது.

அந்த நாட்களின் நினைவை முழுமையாக உங்களுக்குச் சொல்லிவிட முடியுமா? எனக்கென்னவோ சந்தேகமாகத்தான் இருக்கிறது. நான் கல்லூரியில் முதலாண்டு பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்தேன். மிருத்தியுஞ்சயன் அப்போதுதான் எனக்கு அறிமுகமானான். ஒரு சிலரைத் தவிர நாங்கள் அனைவருமே நகர்ப்புற இளைஞர்கள். மிருத்தியுஞ்சயன் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். இருபத்திநான்கு பர்கானா (தெற்கு) மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்தது அவன் குடும்பம். அவனது நடவடிக்கைகளில் ஒரு விவசாயிக்கே உரிய முரட்டுத்தனம் இருக்கும். நினைவுகூறத்தக்க மேற்கோள்களை உதிர்த்த வண்ணம் இருப்பதற்கோ, மழுப்பலாகப் பேகவதற்கோ அவனிடம் இருந்த முரட்டுத்தனம் அவனை அனுமதிக்கவில்லை. அவன் உரத்து சிந்தித்தான்; லட்சியத்தின் மீது இருந்த வெறியில் வாழ்ந்தான்.

நக்சல் பாரி கிராமம்
மேற்கு வங்கத்தில் இருக்கும் நக்சல்பாரி கிராமம்

முன்னேறிச் செல்லும் இடதுசாரி இயக்கம் தோற்றுவித்த உற்சாகம் ததும்பும் நாட்களில் நாங்கள் வளர்ந்தோம். கிளர்ந்தெழுந்த அந்த அறுபதுகளில் எங்கள் தலைமுறை தோழர் மாவோவின் நிழலில் வளர்த்தெடுக்கப்பட்டது. அனல்பறக்கும் விவாதங்களிலிருந்தும், அரசியலிலிருந்தும் யாரும் – யாருமே – ஒதுங்கமுடியாது. எங்களுடைய அரசியல் கருத்துக்கள் துரித கதியில் உருமாறிக் கொண்டிருந்தன. காண்போர் கையில் எல்லாம் சிவப்புப் புத்தகங்கள். காற்றிலோ ரெஜிஸ் டெப்ரேயின் சாகசம்; ருடி டட்கேயின் இளமை ததும்பும் மூர்க்கத்தனம் எங்களை அள்ளிக்கொண்டு சென்றது. அவை தியாகம் ததும்பும் நாட்கள்; விசுவாசமிக்க நாட்கள்; நெஞ்சைக் கொள்ளை கொண்ட நாட்கள்.

கோட்பாட்டுத் துறையிலும் கலாச்சாரத் துறையிலும் இதுவரை வந்துள்ள அனைத்தும் துண்டுதுண்டாகவும், தாறுமாறாகவும், தனிநபர் மனோபாவத்துக்கேற்பவும் விவாதிக்கப்பட்டன. ஆனால் இந்திய அரசைப் பற்றியும், இந்திய சமூகத்தைப் பற்றியும் புதிய கேள்விகளை எழுப்புவதற்கு அவை அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. பற்றுறுதி வாய்ந்த இளைஞர்களை பல்வேறு புரட்சிக் குழுக்களுக்கு அனுப்பி வைக்கும் மூலாதாரமாக அவை இருந்தன. ஆய்வுத்திறன் மிக்கவை, கூர்மையானவை, விமரிசனப் பூர்வமானவை, சுடர்விடுபவை, ஆரவாரமானவை, துடிப்புமிக்கவை, முரட்டுத்தனமானவை, துணிச்சல் மிக்கவை – என எத்தனை வகை சிந்தனைகள் அன்றைய இயக்கத்தில்!

எழுந்தது நக்சல்பாரி! இசை நிகழ்ச்சி ஒன்றினிடையே கிளம்பிய காதைக் கிழிக்கும் வேட்டுச் சத்தமாக, இனிமையான வாழ்க்கையில் மிதந்து கொண்டிருந்தவர்களுக்கு அபகரமாக முகம் திருப்பிக் கொண்டவர்களின் முகவாயைப் பிடித்துத் திருப்பி என்னைப் பார் என்று நிர்ப்பந்தித்த நக்சல்பாரி வந்தது. இன்றோ, நாளையோ நாங்கள் போர்க்களம் புகுந்தாக வேண்டும் என்று அது அறைகூவியது. புரட்சிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்த இளைஞர்களோ இந்தக்கணமே விவசாயப் புரட்சி என்ற கனவுக்காக வாதாடினர்; நாளை அல்ல, இன்று-இந்தக் கணமே களம் புகுந்தாகவேண்டும். எங்களிடம் கவர்ச்சிமயக்கம் இருந்தது ஆனால் மிருத்தியுஞ்சயனிடம் வர்க்கம் இருந்தது.

கடினமான நாட்கள் வந்தன. அச்சம் தனக்கேயுரிய முறையில் தன் செல்வாக்கைக் காட்டியது. எங்கும் நிறைந்திருந்த வெள்ளைப் பயங்கரமும், சிவப்புப் பயங்கரமும் தோற்றுவித்த வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க நாங்கள் பின்வாங்கினோம். வெறிகொண்ட மிருகமாக வெள்ளைப்பயங்கரம் பாய்ந்தது; நரகங்கள் எங்களுக்காகத் தயார்நிலையில் வாய்பிளந்து நின்றன. நக்சல்பாரி எனும் சொல்லை, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஆயுதமாக மாற்றின அரசும், போலீசும்.

நக்சல்பரி கிராமத்தில் அமைந்துள்ள தோழர்களின் சிலைகள்
நக்சல்பரி கிராமத்தில் அமைந்துள்ள தியாகிகளின் நினைவுச் சின்னம்

’தலைமறைவு வாழ்க்கை’ – பேசும்போது மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் அதற்கான தருணம் வந்து கதவைத் தட்டியபோதோ நாங்கள் தலைமறைவாக முயலவில்லை. வெளிப்படையாகத் தான் இருந்தோம். வெளிப்படையான ஊமைகளாக, வெறும் பார்வையாளர்களாக. எங்களது மவுனம் எங்களது செவிப்பறைகளையே கிழித்தது.

அன்றைய எங்களது மவுனம் அனைத்தையும் சீர்குலைத்தது. சாவது உறுதி என்று தெரிந்தால் கூட வீரத்தின் சாயல்கூட இல்லாத கடைந்தெடுத்த கோழைகளாக சிலர் இருந்தோம். உறுதியின்மை, போலிப்பகட்டு, தற்புகழ்ச்சி. ஊசலாட்டம்- இவைதான் எங்கள் குணாதிசயங்கள்.

ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதென்னவோ அற்புதமான விஷயம்தான். ஆனால் அது பல தலைவலிகளைத் தோற்றுவிக்கிறது. இந்தத் தலைவலிகளை மாத்திரைகளால் குணப்படுத்த இயலாது. மாறாக, சிலநேரங்களில் தலையையே இழக்க வேண்டியிருக்கும். நாங்களோ மனவுறுதி குலைந்த நடுத்தர வர்க்கத்தின் வாரிசுகள் – அறிவுபூர்வமாக மட்டும் மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்பவர்களால் இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிக்க முடியும்?

நாங்களோ தெளிவும், உறுதியுமற்ற ஊசலாட்டப் பேர்வழிகளை – ஹாம்லெட்டுகளை – வழிபடுபவர்கள் அல்லது அவர்களுக்காக அனுதாபப்படுபவர்கள். ஆனால் மிருத்தியுஞ்சயன் மேட்டுக்குடிக் குலக்கொழுந்தல்லவே! அவன் ஒரு முட்டாள். அதனால் தான் அவன் இறந்துவிட்டான்.

லெனின், மாவோ, ஹோ-சி-மின் ஆகியோர் தாங்கள் விரும்பிய உலகைக் காண முடிந்தது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் வெற்றி பெற்றது தான்.

என் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா என்ற சந்தேகத்துடன் நான் சொல்லத் தொடங்கினேன். இப்போது நான் உங்களுக்குச் சொல்லியே தீரவேண்டும். மிருத்தியுஞ்சயன் ஒரு புரட்சியாளன் வீரம் செறிந்த இளைஞன் அனைத்திற்கும் மேலாக அவன் ஒரு கம்யூனிஸ்டு தியாகி.

கதை இத்துடன் முடிந்துவிட்டது. ஆனால் நான் முடிக்கவிரும்பவில்லை. ஒரு படி மேலே எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

செருக்கு பிடித்து உப்பிப்போன எங்களது அகம்பாவத்தில் தைத்துவிட்ட முள்ளாக உறுத்துகிறான் மிருத்தியுஞ்சயன். ஆம் என் சிந்தனையில் ஓயாமல் வட்டமிட்டு என்னை அவன் அலைக்கழிக்கிறான்.

குறிப்பு: மிருத்தியுஞ்ஜயன் என்ற வடமொழிச் சொல்லின் பொருள் மரணத்தை வென்றவன்.

– புதில் பட்டாச்சாரியா, ஃபிராண்டியர் வார ஏட்டிலிருந்து மொழியாக்கம்
புதிய கலாச்சாரம் (நவ, டிச 1989, ஜன 1990).

மின் கட்டண உயர்வுக்கு ஊழலே அடிக்கொள்ளி !

0
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.

ம்மாவின் கடந்த ஐந்தாண்டு பொற்கால ஆட்சியில் இரண்டு தவணைகளில் 60 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்பகற்கொள்ளைக்கு எதிராகத் தமிழக மக்கள் எதிர்ப்பையும் வெறுப்பையும் உமிழ்ந்தபோது, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் மின் கட்டணத்தை உயர்த்தியதாகவும், தனது அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என விளக்கம் சொன்னார், ஜெயா. மின்சார ஒழுங்குமுறை ஆணையமோ, “மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களின் விலை கூடிவிட்டதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது” என எதிர்ப்பவர்களின் வாயை அடைக்கும்படியான பதிலை அளித்தது. ஆனால், இந்த விளக்கங்கள் அனைத்தும் பச்சைப் பொய், மோசடி என்பது தற்போது அம்பலமாகியுள்ள நிலக்கரி இறக்குமதி ஊழல் வழியாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன. இம்மின் நிலையங்களின் நிலக்கரி தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்தியாவில் நிலக்கரி வெட்டியெடுக்கப்படாமல், அத்தொழில் முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் அனல் மின் நிலையங்கள் தமக்குத் தேவைப்படும் நிலக்கரியில் ஒரு பகுதியை வெளிநாடுகளிலிருந்து இடைத்தரகர்கள் மூலம் இறக்குமதி செய்து கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

மின்சாரக் கொள்ளையர்கள்: (இடமிருந்து) அனில் அம்பானி, வினோத் சாந்திலால் அதானி,  டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.
மின்சாரக் கொள்ளையர்கள்: (இடமிருந்து) அனில் அம்பானி, வினோத் சாந்திலால் அதானி, டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.

இந்த இறக்குமதியில், குறிப்பாக இந்தோனேஷியா நாட்டிலிருந்து 2010-ஆம் ஆண்டு தொடங்கி 2014 வரை நடந்துள்ள நிலக்கிரி இறக்குமதி வணிகத்தில் மட்டும் 29,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதையும், இந்தப் பணம் முழுவதும் வெளிநாடுகளில் கருப்புப் பணமாகப் பதுக்கப்பட்டுவிட்டதையும் கண்டுபிடித்திருக்கிறது, இந்திய நிதி அமைச்சகத்தின் கீழுள்ள வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம். இந்த ஊழல் தொடர்பாக தமிழ்நாடு, குஜராத், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 80 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, ஹாங்காங்கிலும், துபாயிலும் இறக்குமதி நிறுவனங்களை நடத்திவரும் இந்தியாவைச் சேர்ந்த மனோஜ் குமார் கார்க் என்பவர் மைய அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

50 டாலர் மதிப்புள்ள ஒரு டன் நிலக்கரியை 87 டாலருக்கு வாங்கியிருப்பதாகக் கணக்குக் காட்டி இந்த ஊழலை நடத்தியதோடு, செயற்கையாகவும் மோசடியாகவும் அதிகரிக்கப்பட்ட நிலக்கரியின் விலையைக் காட்டி மின்சார கட்டணத்தை உயர்த்தி, அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பொதுமக்களைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்த ஊழல் காரணமாகத் தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 50 காசு முதல் ரூ.1.50 வரை அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்.

இந்தியாவை வறுமையிலிருந்து மீட்டு வல்லரசாக்கும் இரட்சகர்களாக யாரெல்லாம் மக்கள் முன் நிறுத்தப்பட்டு வருகிறார்களோ, அவர்கள்தான் – அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அனில் அம்பானி, அதானி குழுமத்தைச் சேர்ந்த வினோத் சாந்திலால் அதானி, எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த ரூயா குடும்பம், ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த சஜ்ஜன் ஜிண்டால், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் உள்ளிட்ட தரகு முதலாளிகள்தான் இந்த ஊழலின் சூத்திரதாரிகள். தமிழ்நாடு, குஜராத், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த அரசு மின்சார வாரியங்கள் இந்த ஊழலில் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டுள்ளன.

தனியார் அனல் மின் உற்பத்தி நிலையங்களும் அரசு மின் வாரியங்களும் இந்தோனேஷியாவிலிலிருந்து நேரடியாக நிலக்கரியை இறக்குமதி செய்வதில்லை. அதற்குப் பதிலாக, சிங்கப்பூரிலும், ஹாங்ஹாங்கிலும், துபாயிலும், இந்தியாவிலும் உள்ள தரகு நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியைப் பெறுகின்றன. இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி கப்பலில் ஏற்றப்பட்டு, அந்தச் சரக்கு நேரடியாக இந்தியாவிற்கு வந்தாலும், அதற்குரிய ரசீதுகள் அப்படி வருவதில்லை. அது இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கோ, அங்கிருந்து துபாய்க்கோ போய், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல இந்தியாவை வந்தடைகிறது. அப்படி வருவதற்குள் இந்தோனேஷியாவில் 50 டாலருக்கு வாங்கப்பட்ட ஒரு டன் நிலக்கரியின் விலை 87 டாலராக அதிகரித்து விடுகிறது.

ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு சரக்கு மாறும்போது விலை ஏறும்தானே என்று பொருளாதாரப் புலிகள் நியாயப்படுத்தலாம். ஆனால், இதில் அப்படியெல்லாம் வியாபாரம் நடக்கவில்லை. சரக்கு இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கோ, அங்கிருந்து ஹாங்ஹாங்கிற்கோ துபாய்க்கோ விற்கப்பட்டதாக செட்-அப் செய்யப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் நிலக்கரியின் விலையை உயர்த்தி, போலியான இறக்குமதி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஊழலால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1,500 கோடி ரூபாய் எனச் செய்திகள் கசிந்துள்ளன. எனினும், இதில் போயசு தோட்டத்திற்குப் போன பங்கு எவ்வளவு என்பது மர்மமாக உள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த தரகு நிறுவனங்கள், மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தரகு முதலாளிகளின் பினாமி நிறுவனங்கள் அல்லது கூட்டு நிறுவனங்கள் என்பது இந்த ஊழலின் இன்னொரு அம்சமாகும். குறிப்பாக, மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மின் வாரியங்களுக்கு டாடா குழுமத்திற்குச் சொந்தமான கடற்கரை குஜராத் மின்சக்தி நிறுவனம் மின்சாரத்தை விற்று வருகிறது. இந்த நிறுவனம், புமி ரிசோர்சஸ் என்ற இந்தோனேஷிய நிறுவனத்திடமிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதாகக் கணக்கு காட்டுகிறது. இந்த புமி ரிசோர்சஸ் நிறுவனத்திலும், அதற்குச் சொந்தமான இந்தோனேஷியாவின் நிலக்கரி வயல்களிலும் 30 சதவீதப் பங்குகளை கடற்கரை குஜராத் மின்சக்தி நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா பவர் நிறுவனம் வைத்திருக்கிறது.

அதானி குழுமம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனது பினாமி நிறுவனத்தின் மூலம் தனது குஜராத் மின்நிலையத்திற்கு இயந்திரங்களை இறக்குமதி செய்ததில், அந்த இயந்திரங்களின் இறக்குமதி விலையைச் செயற்கையாக உயர்த்தி, அதன் வழியாக 6,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. மேலும், அக்குழுமம் நிலக்கரி இறக்குமதி கொள்ளையை நடத்துவதற்கு வசதியாக ஆஸ்திரேலியாவில் நிலக்கரி வயல்களை வாங்கிப்போட முயன்று வருகிறது.

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் இயந்திரங்களின் விலைகளைச் செயற்கையாக உயர்த்தி, அதன் வழியாக மின் கட்டண உயர்வை இந்திய மக்களின் மீது ஏற்றியிருக்கும் இந்த ஊழல்-மோசடிகளின் மூலம் ஏறத்தாழ 50,000 கோடி ரூபாயைத் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் சுருட்டிக் கொண்டுள்ளன. மனோஜ் குமார் கார்க் என்ற சுண்டெலி கைது செய்யப்பட்டதற்கு அப்பால், இந்த ஊழல் தொடர்பாக எந்தவொரு கார்ப்பரேட் பெருச்சாளிகள் மீதும் வழக்குப் பாயவில்லை.

கடந்த காங்கிரசு ஆட்சியில்தான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் நடந்தது. அப்பொழுதுதான் நிலக்கரி இறக்குமதி ஊழலும் நடந்திருக்கிறது. நிலக்கரி சுரங்க ஊழலில் காங்கிரசைக் குறிவைத்துப் பலமாக சவுண்டுவிட்டு வரும் பா.ஜ.க., நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து அடக்கியே வாசிக்கிறது. காரணம், அம்பானியும் அதானியும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் குத்தகைக்கு எடுத்த ஆட்சியல்லவோ மோடியின் அரசு!

– திப்பு
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________

நீதிக்கு எதிராக வாளேந்தும் நீதிமன்றம் !

2

குற்றம் சாட்டுபவர்களையே குற்றவாளிகளாக்குவதன் மூலமும், குற்றம் சாட்டுபவர்களைக் கொடூரமாகத் தண்டிப்பதன் மூலமும் தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் நகைக்கத்தக்க முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம். வழக்கறிஞர் சட்டத்தின் பிரிவு 34-க்கு சென்னை உயர்நீதி மன்றம் கொண்டு வந்திருக்கும் திருத்தங்கள், பார் கவுன்சிலின் அதிகாரத்தை முற்றாகப் பறிப்பதோடு, வழக்கறிஞர்களை நீதிபதிகளின் அடிமைகள் என்ற நிலைக்குத் தாழ்த்தியிருக்கின்றன.

“நீதிபதியின் பெயரைச் சொல்லிப் பணம் வாங்குவது, நீதிபதியை மிரட்டுவது, அவதூறு செய்வது, நீதிபதிக்கு எதிராக ஆதாரமற்ற புகார்களை அவரது உயரதிகாரிக்கு அனுப்புவது, நீதிமன்ற ஆவணங்களைத் திருத்துவது, நீதிமன்ற வளாகத்துக்குள் ஊர்வலம் நடத்துவது, நீதிபதியை கெரோ செய்வது, நீதிமன்ற அறைக்குள் முழக்க அட்டைகளைப் பிடிப்பது, குடிபோதையில் நீதிமன்றத்துக்கு வருவது” – என்பன போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கறிஞர்களைத் தற்காலிக நீக்கம் செய்வதற்கும் நிரந்தரமாகத் தொழிலிலிருந்து வெளியேற்றுவதற்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டுமின்றி, மாவட்ட நீதிபதிகளுக்கும் அதிகாரம் அளிக்கிறது இந்தச் சட்டத் திருத்தம்.

நீதிபதிகள் எனப்படுவோர் பரிதாபத்துக்குரிய நல்லொழுக்க சீலர்கள் போலவும், கொடிய கிரிமினல்களான வழக்கறிஞர்களிடம் அவர்கள் சிக்கித் தவிப்பதைப் போலவுமான ஒரு தோற்றத்தை இது அளித்த போதிலும், அந்தத் தோற்றம் பொய் என்பதை அதே நாளில் நிரூபிக்கும் வண்ணம் கவித்துவ நீதியாய் நிகழ்ந்தது ஒரு சம்பவம். அடையாள அட்டையைக் காட்டுமாறு கோரிய ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகரின் கையிலிருந்த ஆவணங்களைக் கிழித்தெறிந்த ஒரு மாவட்ட நீதிபதி, அந்த ரயில்வே ஊழியரைக் கொலை செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிடும் காட்சியின் வீடியோ பதிவை நாடே கண்டது. அந்த மாவட்ட நீதிபதிதான் பானைச் சோறுக்கு ஒரு சோறு. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது உயர்நீதி மன்றத்தின் யோக்கியதைக்குச் சான்று.

உச்ச நீதிமன்ற ஊழல் தலைமை நீதிபதிகளுக்கு எதிராகப் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்கில் தொடங்கி, அமித் ஷாவைக் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்து கைம்மாறாக கவர்னர் பதவியைப் பெற்ற சதாசிவம்; மற்றும் தத்து, குமாரசாமி போன்றோரில் தொடங்கி பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகள் வரை குற்றவாளிகளால் நிரம்பி வழிகிறது நீதித்துறை. இவர்களைத் தண்டிப்பதற்கு சாத்தியமான வழி எதுவும் சட்டத்தில் இல்லை. இத்தகைய நீதிபதிகள் கிரானைட், தாதுமணல் கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் வழங்கிய முறைகேடான ஊழல் தீர்ப்புகளை அம்பலப்படுத்தியதற்குப் பதிலடியாகத்தான் தமிழக வழக்கறிஞர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கியது. நீதிபதிகளுக்கு இலஞ்சம் வாங்கிக் கொடுக்கும் தரகர்களான வழக்கறிஞர்கள், ரவுடிகளுடன் இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் போன்றோர் யாரையும் உயர்நீதிமன்றம் இடைநீக்கம் செய்யவில்லை. மாறாக, அத்தகையோர்தான் நீதிபதிகளின் ஆசியுடன் பார் கவுன்சில் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுநலனுக்காகப் போராடியவர்கள்தான் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் உள்ளிட்ட அரசமைப்பு முழுவதும் குற்றக்கும்பல்களால் நிரம்பி வழியும் இன்றைய சூழலில், இந்த அரசமைப்பின் மீது மக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்குப் பயன்பட்டு வந்த நீதித்துறையின் யோக்கியதையும் சந்தி சிரிக்கிறது. “இலஞ்சம் வாங்கிய ஒரு அரசு ஊழியர் மீது தமிழக அரசின் அனுமதியின்றி யாரும் வழக்கு தொடர முடியாது” என்று சட்டமியற்றியிருக்கிறார் ஜெயலலிதா. தமக்கெதிராக குற்றம் சாட்டினால் குற்றம் சாட்டும் வழக்கறிஞர்களின் “தொழில் செய்யும் உரிமையை ரத்து செய்வோம்” என்று மிரட்டுகிறது உயர் நீதிமன்றம். தீர்ப்பை எடை போட்டு விற்க தராசு! எதிர்ப்போரின் தலையைக் கொய்ய வாள்

தலையங்கம்
புதிய ஜனநாயகம், ஜூன் 2016

புதிய ஜனநாயகம் – ஜூன் 2016 மின்னிதழ் : கண்டெய்னர் ஜனநாயகம் வாழ்க !

0

puthiya-jananayagam-june-2016

புதிய ஜனநாயகம் ஜூன் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. மின்கட்டண உயர்வுக்கு ஊழலே அடிக்கொள்ளி
நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி இயந்திரங்கள் இறக்குமதியில் நடந்துள்ள 50,000 கோடி ரூபாய் ஊழல், 2ஜி ஊழல் போல அனுமான இழப்பு அல்ல, இத்துணை ஆயிரம் கோடியும் மக்கள் மீது மின் கட்டண உயர்வாகச் சுமத்தப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

2. நீதிக்கு எதிராக வாளேந்தும் நீதிமன்றம்!

3. கண்டெய்னர் வாழ்க! போலி வாக்காளர் வாழ்க! அழிகின்ற மை வாழ்க! அழியாத முதல்வர் வாழ்க!
ஜனநாயகம் வாழ்க… வாழ்கவே!
“நடைபெற்றது தேர்தலே அல்ல, இது ஒரு சூது” என்று நிறுவும் வகையிலான ஆதாரங்கள் அடுக்கப்படுகின்றன. இந்தச் சூதுதான் ஜனநாயகம் என்று ஒப்புக் கொண்டு சரணடைவதா, எதிர்த்து நிற்பதா என்பதுதான் கேள்வி.

4. தமிழகத் தேர்தல் ஆணையம் : போயசு தோட்டத்தின் செக்யூரிட்டி!
தேர்தல் ஆணையத்தின் அதிகாரம், நடுநிலை, சுயேச்சைத் தன்மை குறித்து பார்ப்பன அறிவுஜீவிக் கும்பல் கட்டமைத்த பிம்பங்களெல்லாம் நொறுங்கிப் போய்விட்டன.

5. கொள்கையா, பணமா, சாதியா? தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பது எது?
மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள், எதற்காக வாக்களிக்கிறார்கள், வெற்றி – தோல்வியைத் தீர்மானிப்பது எது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் பென்னாகரம் தொகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வு.

6. இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போனால்…- கேரளா உணர்த்தும் எதிர்மறை படிப்பினை
இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போகும் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல் – சித்தாந்த பலவீனத்தையும், சந்தர்ப்பவாத நடைமுறையையும் சாதகமாக்கிக் கொண்டு, கேரளத்தில் இந்துவெறி பாசிச சக்திகள் அச்சுறுத்தும் அபாயமாக வளர்ந்துள்ளன.

7. மோடியின் ஆட்சி இந்து ராஷ்டிரம்தான்!
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இந்து மதவெறியர்களுள் ஒரு சிலரை விடுதலை செய்து விட்டு, அந்த வழக்கையும் நீர்த்துப் போகச் செய்து விட்டார், நரேந்திர மோடி.

8. பிரதமர் பதவியில் ஒரு மோடி மஸ்தான்!
தான் ஊழல் கறைபடியாதவர், தனது ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்று தம்பட்டம் அடித்துவரும் மோடியிம் யோக்கியதையைக் கந்தலாக்கி விட்டது குஜராத்தில் நடந்துள்ள எரிவாயு ஊழல்.

9. “எங்களைக் கொல்லாதீர்கள்!” – அம்பேத்கர் விழாவில் கண்ணீர் சிந்திய தலித்துகள்
ஆனந்த் தெல்தும்டே
ஆண்டொன்றுக்கு 22,000 துப்புரவுத் தொழிலாளர்கள் மலக்குழியிலும் பாதாளச் சாக்கடையிலும் கேட்பாரின்றிக் கொல்லப்படுகிறார்கள். ஆனால், அடுத்தடுத்து கமிட்டிகளை மட்டும் அமைத்து இந்தப் பிரச்சினியைத் தீர்க்க முயலுவது போல நடித்து வருகிறது அரசு.

10. ஹோண்டா தொழிலாளர் போராட்டம் : வெற்றியின் முதல் படியில்
மொழி, இனம், பண்பாடு, நிரந்தரம், தற்காலிகம் என்ற வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்களிடையே ஐக்கியமும் ஒற்றுமையும் ஏற்பட்டிருப்பதுதான் இப்போராட்டத்தின் குறிப்பிடத்தக்க விடயம்.

புதிய ஜனநாயகம் ஜூன் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

பெற்றோர்களே நீங்கள் குற்றவாளிகள் இல்லையா ?

16

சென்ற வருடம் பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்த சமயத்தில் நமக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும்? கல்விக்கான நமது அடிப்படை உரிமையை மீட்டெடுக்க போராடுவதன் அவசியம் என்று எனது பள்ளி கல்லூரி வாழ்க்கை அனுபவத்தை (மாணவர் + பெற்றோருக்கு ஒரு ஆராய்ச்சி மாணவன் கடிதம்) உங்களிடையே பகிர்ந்திருந்தேன். இப்பொழுது இந்த வருட தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் நாம் பெற்ற அனுபவம்; பெற்றுக்கொண்ட படிப்பினைகள், போக வேண்டிய தூரம் என்ன என்பதை இக்கட்டுரையில் தொட்டுச் செல்வோம்.

தனியார் பள்ளியால் முடியாததைச் செய்த அரசு பள்ளி!

தனியார் பள்ளி - அரசுப் பள்ளி
“ஒன்றுமே தெரியாத மாணவனை தேர்ச்சியடையச் செய்வதுதான் ஆசிரியரின் வேலை. தனியார்பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகள்தான் இடம் அளிக்கின்றன.”

கல்வி, வாங்கி-விற்கும்-பண்டமாக மாற்றப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளின் வக்கிரக் கொள்ளையை நமது பிள்ளைகள் அன்றாடம் அனுபவித்து வருவது கண்கூடு. ‘அரசு பள்ளிகள் என்றால் கேவலமானது; குடும்பத்தின் கெளரவம் பாதிக்கும்’ எனும் மட்டமான மனநிலையை மக்கள் மத்தியில் தனியார்மயம் ஒரு பண்பாட்டுத் தாக்குதலாகவே புகுத்தியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தனியார் பள்ளியால் செய்யமுடியாத ஒன்றை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி செய்திருக்கிறது.

தனியார் பள்ளியால் மக்குத்தடி என்று விரட்டியடிக்கப்பட ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு பயிற்சி அளித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வைத்திருக்கிறது இப்பள்ளி. இன்றைய நிலையில் நூறு சதம் தேர்ச்சி எனும் பெயரில் தனியார் பள்ளிகள் பிளக்ஸ் போர்டு பேனர் வைத்து மக்களிடம் நூதனமாக திருடி வருகின்றன. ஆனால் இந்த திருட்டிற்கு பின்னே ஒன்பதாம் வகுப்பிலேயே மெதுவாக கற்கும் மாணவர்களை கழித்துக்கட்டுவது, உறைவிடபள்ளி என்று பல இலட்சங்களை பிடுங்குகிற போக்கு தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

வன்னிவேலம்பட்டி அரசு பள்ளி தலைமையாசிரியரின் நேர்காணலைக் கவனியுங்கள்: “ஒன்றுமே தெரியாத மாணவனை தேர்ச்சியடையச் செய்வதுதான் ஆசிரியரின் வேலை. தனியார்பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகள்தான் இடம் அளிக்கின்றன. அந்த மாணவர்களைப் புறக்கணிக்காமல் தேர்ச்சி பெறச் செய்ய முழு முயற்சியில் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு மாணவனையும் முறையாக ஊக்குவித்தால் தேர்ச்சி பெறச்செய்யலாம்.” (தி இந்து தமிழ், 27-05-016)

பள்ளியின் நோக்கம் என்ன? ஆசிரியரின் நோக்கம் என்ன? என்பதை இந்த நேர்காணல் தெளிவாகக் காட்டுவதுடன் இலாபம் பார்த்து, கல்வி எனும் சரக்கை விற்கும் தனியார் பள்ளிகள் எப்படி சமூகத்தின் வேண்டாத தொங்கு சதைகளாக இருக்கின்றன என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. மேலும் இந்த அரசுப் பள்ளியில் மாணவர்களை தேர்ச்சி பெறவைக்க வன்னிவேலம்பட்டி பகுதிவாழ் இளைஞர்கள் உதவியிருப்பதும் நமது கவனத்திற்கு வருகிறது. மாறாக நாமக்கல், பிராய்லர் கோழி தனியார் பள்ளிகளில் மாணவர்களை முழு மதிப்பெண் பெறவைக்க ஆசிரியரே தேர்வு அறையில் வாட்ஸ் அப் வைத்துக்கொண்டு விடைகளை சொல்லியது செய்திகளில் அம்பலப்பட்டது நினைவிருக்கலாம்.

சட்டபூர்வமற்ற மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இருப்பை நியாயப்படுத்த நடுத்தரவர்க்க கனவான்கள் அரசு பள்ளி மீது கொட்டும் பல்வேறு அவதூறுகள் கிண்டல்களை நடைமுறையில் இரத்து செய்திருக்கிறது வன்னிவேலம் பட்டி அரசு பள்ளி!

பெற்றோர்களின் மோகமும் அரசு பள்ளி சாதனையும்!

தனியார் பள்ளி - அரசுப் பள்ளி
இந்த வருட தேர்வு முடிவில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்த்தி மாநிலத்தில் முதல் இடம் பெற்றிருக்கிறார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த கையோடு நாமக்கல், ஊத்தங்கரை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட பிராய்லர் கோழி தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் தொண்ணாந்து கொண்டு காத்திருந்ததை செய்திகள் பரபரப்புடன் வெளியிட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தங்கள் பிள்ளைகளுடன் படையெடுத்த பெற்றோர்கள் சொல்லும் முதற்காரணம் இங்கு படித்தால் மருத்துவ சீட்டு கிடைப்பது உறுதியாம். அதற்காக உறைவிடப் பள்ளி எனும் முறையில் இங்கு செயல்படும் பல தனியார்பள்ளிகள் இரண்டு வருட கொடுமைக்கு பிள்ளைகளை உட்படுத்துகின்றனர். பதினொன்றாம் வகுப்பு பாடங்களை நடத்தாமலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களை நடத்தும் அப்பட்டமான மோசடி இங்கு நடைபெற்றுவருகிறது! இத்தகைய உறைவிட பள்ளிக்கு பல இலட்சங்களை கந்துவட்டிக்கு வாங்கி பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பணயம் வைக்கின்றனர்.

இந்த வருட தேர்வு முடிவில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்த்தி மாநிலத்தில் முதல் இடம் பெற்றிருக்கிறார். இவரது குடும்பம் சென்னையில் இருந்தாலும் மகளின் படிப்பிற்காக ஊத்தங்கரையில் தனியாக வீடு எடுத்து தங்கி ஊத்தங்கரையில் தாயும் பிள்ளையும் சென்னையில் தகப்பனும் என்று கல்வி வாசம் செய்திருக்கின்றனர். நடுத்தர வர்க்க பெற்றோர்களிடையே காணப்படும் மனநிலையின் ஒருவகைப்பாடு இது.

ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளி
ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளி

மறுபுறத்தில் தன் பிள்ளையின் மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்ட தாயைப் பற்றிய செய்தி இந்தாண்டு வெளிவந்திருக்கிறது. பள்ளி மாணவ மாணவிகள் மனம் வெறுத்து தற்கொலை செய்துகொள்வது ஒருபுறமிருக்க பெற்றோர்களே தற்கொலை செய்துகொள்ளும் போக்கு பாசம், கண்காணிப்பு எனும் பெயரில் பெற்றோர்களின் வக்கிரமான நுகர்வு மனநிலையைத் தான் காட்டுகிறதேயன்றி வேறல்ல!

இந்த இரு எதிர் எதிர் முனைகளுக்கு மத்தியில் புதுக்கோட்டை கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப்பள்ளி கடந்த ஏழு ஆண்டுகளில் 14 மருத்துவ மாணவர்களை உருவாக்கியிருக்கிறது எனும் செய்தி தி இந்து தமிழ் நாளிதழில் 06-06-2016 அன்று வெளிவந்திருக்கிறது.

கல்வியில் தனியார்மயம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு இச்செய்தி கட்டியம் கூறுகிறது. இங்கு பெற்றோர்களின் மனநிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை அரசு பொறியியல் மருத்துவக் கல்லூரிகள் தான் சிறந்தது என்று கருதும் பெற்றோர்கள், தனியார் பள்ளிகளை இதற்கு ஒரு துருப்புச் சீட்டாக என்ன விலை கொடுத்தாவது அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என நினைப்பது மலம் என்று தெரிந்தும் நுகர்ந்து பார்க்கத் துடிக்கும் அறிவாளியின் கதையையே நமக்கு நினைவூட்டுகிறது.

இதில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அரசுப் பள்ளிகளை வேண்டுமென்றே சீர்கெட அனுமதிக்கிற அரசு இருக்கிற இந்நாட்டில், இருக்கும் கொஞ்ச நஞ்ச உயிர் இழைகளை வைத்துக் கொண்டு சிறந்த மாணவர்களை புதுக்கோட்டை கொத்தமங்கலம் போன்ற அரசுப் பள்ளிகள் உருவாக்குகிறது என்றால் மக்களாகிய நாம் என்ன செய்திருக்க வேண்டும்?

சாமியானா பந்தலில் இரவு முழுவதும் நாமக்கல் பள்ளிகளில் அட்மிசனுக்காக கால்கடுக்கும் வெட்கங்கெட்ட வேலையைச் செய்யாமல் வீட்டுக்கொரு நபராய் அருகில் உள்ள அரசு பள்ளியை தரம் உயர்த்துவதில் போராடியிருப்பதுதானே சரியாக இருக்க முடியும்?

பாராளுமன்றம் மட்டுமல்ல பள்ளிகளும் உழைக்கும் மக்களின் தலைமையில் அமைய வேண்டும்

மக்களின் மனநிலையைச் சுரண்டி தனியார் பள்ளிகள் எவ்விதம் ஆளும் அதிகார வர்க்க உறுப்புகளை வளைத்துப்போட்டிருக்கின்றன என்பதற்கு சான்றாக, ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் பள்ளி, தேர்தலில் பணப்பட்டுவாடா பண்ணுவதற்கு நம்பிக்கைக்குரிய கேந்திரமாக செயல்பட்டிருக்கிறது! தேர்தல் ஆணையம் நடத்திய கண்ணாமூச்சி ரெய்டிலேயே 245 தங்கக் காசுகளும் 3.40 கோடி ரொக்கப்பணமும் சிக்கியிருக்கிறது! தங்க நாணயங்கள் செண்டம் எடுக்க உதவிய ஆசிரியர்களுக்கான ‘நாணய’ப்பரிசு என்று கூறி தங்க நாணயங்களை மீட்டிருக்கிறது பள்ளி நிர்வாகம்! சிக்கிய பணத்தின் மீது விசாரணை ஏதும் இல்லை!

வெள்ளத்தைக் காட்டி பள்ளிகளை மூட வேலை செய்த பாசிச ஜெயா கும்பல்!

government-model-school-saidapet
வெள்ளத்தைக் காரணம் காட்டி அடையாறு ஓரம் இருக்கும் (திடீர் நகர், ஆத்துமா நகர், மடுவங்கரை) போன்ற பல பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன

அரசின் செயலற்ற தன்மையாலும் தனியார்மய ஆக்ரமிப்பாலும் சென்னை மக்கள் சூறையாடப்பட்டதை எடுத்துக்காட்டியது சென்ற வருட வெள்ளப்பெருக்கு. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை அடியோடு இழந்தனர் என்கிற பொழுது இதில் பள்ளிகளும் விதிவிலக்கல்ல. ஒருமாதத்திற்கும் மேலாக மின்தடை, நோட்டு புத்தகங்கள் ஆற்றோடு போனது, வெள்ளநீர் வடியாதது என்ற பல நிலைமைகளுக்கு மத்தியில் சென்னை கொருக்குப்பேட்டை பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவி ஸ்வப்னா 1166 மதிப்பெண்களையும் சி.ஐ.டி நகர் மற்றும் மடுவன் கரை அரசு மேனிலைப்பள்ளி மாணவிகள் புவனேஸ்வரி, ராமலெட்சுமி ஆகியோர் 1157 மதிப்பெண்களையும் சைதாப்பேட்டை, கோயம்பேடு, புல்லா அவென்யு அரசு மேனிலைப்பள்ளி மாணவிகள் 1155 மதிப்பெண்களையும் பெற்றிருக்கின்றனர். இவர்களின் பெற்றோர்கள் எல்லாம் மீனவர், தையல் தொழிலாளி, கார் ஓட்டுபவர், தனியார் செக்யுரிட்டி, வீட்டு வேலை செய்பவர் என்று உழைக்கும் வர்க்கமாக உதிரித் தொழிலாளிகளாக இருக்கின்றனர்.

நமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு கல்வி வழங்கப்படும் பொழுது குன்றிலிட்ட விளக்காக ஒளிர்வதற்கு வாய்ப்பிருக்கும் நிலையில் காதோடு காது வைத்தார்போல் சென்னை வெள்ளத்தைக் காரணம் காட்டி அம்மா கும்பல் பல அரசுப் பள்ளிகளை இழுத்து மூடுவதற்கு பலவேலைகளை செய்திருந்ததை 01-01-2016 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்த செய்தி தெரிவிக்கிறது.

நாம் ‘அருகாமை பள்ளிகள் வேண்டும்’ ‘பொதுபள்ளிகள் வேண்டும்’ என்று போராடுகிற பொழுது வெள்ளம் வருவதற்கு முன்பாகவே சென்னை மாநகராட்சி, மாணவர்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி பல பள்ளிகளை மூட திட்டம் போட்டிருந்தது. 1999-லிருந்து 2011வரை இத்திட்டத்தின் கீழ் 25 மாணவர்களுக்கு குறைவான 56 பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. 2009-ல் (தி.மு.க ஆட்சி) 30 பள்ளிகளை மூட எத்தனித்த பொழுது மக்களின் போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடும் நடவடிக்கை பின்வாங்கப்பட்டது. ஆனால் 2016-ல் பள்ளிகளை மூடிய எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று சொல்வதன் பின்னணியில் வெள்ளத்தைக் காரணம் காட்டி அடையாறு ஓரம் இருக்கும் (திடீர் நகர், ஆத்துமா நகர், மடுவங்கரை) போன்ற பல பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்.

தனியார் பள்ளி - அரசுப் பள்ளி
ஒருமாதத்திற்கும் மேலாக மின்தடை, நோட்டு புத்தகங்கள் ஆற்றோடு போனது, வெள்ளநீர் வடியாதது என்ற பல நிலைமைகளுக்கு மத்தியில் சாதித்த மாநகராட்சி பள்ளி மாணவிகள்

அ.தி.மு.க கும்பல் மீட்புப்பணிகளை செய்யவில்லை என்பது மட்டுமல்ல மக்களுக்கு எதிர்நிலையாக, அடிபட்டவன் மயக்கநிலையில் இருக்கும் பொழுது பர்ஸ் அடிக்கும் பிக்பாட்டைப் போல வெள்ளத்தைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடியும் இருக்கிறார்கள்.

இப்பொழுது அரசுப்பள்ளி மாணவர்களின் சாதனை என்று வியக்கிற பொழுது, நமது அடிப்படை உரிமையான பள்ளிகளே போயிருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். அறுக்கமாட்டாதவனுக்கு ஆயிரத்தெட்டு அறுவாள் என்ற கதையாக பள்ளிகளைத் தொலைத்த மக்கள், ஆட்சியை தேர்ந்தெடுக்க ஓட்டுப்போட்டார்களாம்!

மருத்துவம் பொறியியலுக்கு ஆசைபட்டால் போதுமா? நீதிமன்றமும் அரசும் நமக்கு எதிராக இருப்பதை உணரவேண்டாமா?

மாநிலத்தில் முதலிடம் பெற்ற ஊத்தங்கரை மாணவி ஆர்த்தியின் கதைக்கு மீண்டும் திரும்புவோம். ஆர்த்தியின் பெற்றோர் தன் மகள் மருத்துவராக வரவேண்டும் என்பதற்காக ஊத்தங்கரையில் வீடு பார்த்து, வித்யா மந்திர் பள்ளியில் படித்து 1195 மதிப்பெண்கள் வாங்கியாயிற்று. ஆனால் மருத்துவக் கனவு நனவு என்று பெற்றோர்கள் நினைக்கும் பொழுது உச்சநீதி மன்றம் மருத்துவத்திற்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று குண்டைப் போட்டிருக்கிறது. மாநிலங்களின் சுயாட்சி உரிமையை ஒரு தீர்ப்பால் கழிவறையில் போட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஆர்த்தி போன்ற உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் உடனடியாக பொதுநுழைவுத் தேர்விற்கு பயிற்சி எடுக்க இன்னொரு நாமக்கல்லை கேரளாவில் தேடுகின்றனர். ஆனால் மருத்துவப்படிப்பை எட்டாக்கனியாக்கும் அரசின் களவாணித்தனத்தை அறியாமல் இருக்கின்றனர். பார்த்தும் பார்க்காதுபோல் இருக்கின்றனர்.

abhiya
மலையாளப் பாடத்தில் முதலிடம் பெற்ற டீக்கடை தொழிலாளியின் மகள் அபியா

மோடி பதவியேற்றவுடனேயே செய்த முதல் வேலை தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் கீழ் செயல்படும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை மூடுவதாக அறிவித்து நடைமுறைப்படுத்தியதாகும். இதனால் பல ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உருவாவது வேண்டுமென்றே தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நாடெங்கிலும் போராட்டம் நடைபெற்றது. இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் இத்துணைக்கும் தொழிலாளிகளின் வியர்வையால் பி.எப் பணத்தால் விளைந்தவையாகும். என மகன் மகளுக்கு மருத்துவச் சீட்டு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிற எந்தப் பெற்றோரும் இதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.

தொழிலாளிகளை ஆதரித்து வர்க்க உணர்வாக குரல் எழும்பினால் தான் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் மக்களிடையே அந்தக் குரல் எழவில்லை என்பது தொழிலாளிகளை காவு கொடுத்தது மட்டுமின்றி பொதுசுகாதாரம் போய் தனது குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குரியதாய் நின்றிருக்கிறது. அதாவது அரசுக்கும் நமக்கும் இடையிலான கயிறு இழுக்கும் போட்டி மருத்துவச்சீட்டிற்கானதல்ல. மக்களின் அதிகாரத்திற்கானது. உழைக்கும் மக்கள் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்வதன் மூலமாகத்தான் மருத்துவச் சீட்டு மட்டுமல்ல; நாம் உயிர் வாழ்வதற்கான நிலைமையையும் பெற முடியும் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம்.

இதன் அடிப்படையில் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் ஏன் மூடப்பட வேண்டும்? என்பது அன்றைய நிலையில் பொதுதளத்திற்கு விவாதத்திற்கு வரவில்லை. மக்கள் திரள் போராட்டங்கள் கட்டியமைக்கப்படவில்லை. இதில் குளிர்காய்ந்த மோடி கும்பல் இந்தாண்டு மருத்துவப்படிப்பிற்கு பொதுநுழைவுத்தேர்வு கட்டாயம் என்று சொல்வதன் பின்னணியில் முழுக்கவும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்தான் இருக்கிறது. இந்திய நாட்டை விற்கும் உலகவர்த்தக கழகம் கொண்டுவரும் காட்ஸ் ஒப்பந்தம் முன் தள்ளும் புதியக் கல்விக்கொள்கையின் அடிப்படையில் ஒரே நுழைவுத்தேர்வு என்பதன் மூலமாக நாட்டின் கல்விக்கட்டமைப்பை தகர்த்து காசு இருப்பவனுக்கு கல்வி என்று மாற்றுகிறார்கள்.

எனக்கு ஏகாதிபத்தியம், காட்ஸ், புதிய கல்விக்கொள்கை என்றால் என்னவென்று தெரியாது என்று பொதுமக்கள் வாதிடலாம். நியாயம் தான். அதே சமயம் ஒரே நுழைவுத் தேர்வு எப்படி அமல்படுத்தப்பட்டது என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்.

சங்கல்ப் என்ற என்.ஜி.ஓ நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறது. ஒரே நுழைவுத்தேர்வு ஒரே இந்தியா என்று பார்ப்பன சங்கப்பரிவாரக் கும்பல் தலைநகரில் கூச்சல் போடுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி அனில் ஆர். தாவே யாருடைய தரப்பு வாதத்திற்கும் செவிமடுக்காமல் ஒரே நுழைவுத்தேர்வு என்று தீர்ப்பளிக்கிறார். மேல்முறையீட்டை நிராகரிக்கிறார். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டம் எனும் வாதத்தை நிராகரிக்கிறார். இந்தியாவின் கல்விச் சூழல் பாரதூரமாக அசமத்துவமாக இருக்கும் பொழுது சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு என்பது அநீதி என்று வாதமும் நிராகரிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட அனில்.ஆர்.தாவே மனுஸ்மிருதியிலிருந்து அடிக்கடி கோட் செய்து தீர்ப்பளிப்பவர். ஆக தாவே யார் என்று நமக்கு தெரிவதில் சிக்கலில்லை. காட்ஸின் நோக்கங்கள் இவரைப்போன்ற நீதிபதிகளை வைத்து எல்லா தரப்பையும் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வராமலேயே சொடுக்குபோட்டு நிறைவேற்றப்படுகிறது. மக்கள் தேர்தலைப்போலவே, தேர்வு திறமை எனும் வட்டத்தைத் தாண்டி தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்க முடியாமல் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

நமது நாட்டு மருத்துவக் கல்வி பகற்கொள்ளையாக போகிறதே என்று யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. கடைசியில் திறமை, சாதி, தாய்மொழி என்று உழைக்கும் மக்களின் பிள்ளைகள் உயர்கல்வியிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இதை ஆளும் வர்க்கம் ஐ.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரிகளில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. JEE நுழைவுத் தேர்வு நாட்டின் பெரும்பான்மையான மக்களை உள்ளே வரவிடாமல் தடுக்கும் வண்ணம் இரு அடுக்காக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்வு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தேர்வை விட 42 மடங்கு கடினம் என்பது திறமை மற்றும் சிந்தித்தல் என்பதன் அடிப்படையில் அல்ல! கல்விசார் செயல்பாடுகள் மாணவர்களுக்கு கிடைக்கவிடாமல் தடுத்தல் (Non accessibility) என்பதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது முழுக்கவும் மோசடியாகும்.

சான்றாக மாநில வழிக்கல்வியில் 1165 மதிப்பெண் எடுக்கிறவர் JEE நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவில்லை என்பது அவரது திறமையை மதிப்பிடுவதாக அமையாது. ஏனெனில் JEE பயிற்சி என்பது 250 ஸ்ட்ராக்களை வாயில் திணித்து லிம்கா சாதனை, மயிரைக் கொண்டு காரை இழுத்தல், ஆயிரம் பச்சை மிளகாய்களை உண்டு சாதனை போன்ற அர்த்தமற்ற, பொருளற்ற சாதனைத் தேர்வுகளாகும். 1165 தேர்வு முறையும் அப்படிப்பட்டதுதான் என்றாலும் JEE நிராகரித்தலை அடிப்படையாகக் கொண்டது. இதில் மாணவர்களை ஈடுபடச் சொல்வது என்பதே கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். ஏனெனில் என்ன காரணத்திற்காக ஐ.ஐ.டி ஆரம்பிக்கப்பட்டதோ அதற்காகவே முதலில் அது இல்லை. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொறியியல் தொழில்நுட்பம் தேவை என்று ஐ.ஐ.டிக்கள் அமெரிக்க எம்.ஐ.டி மாடலில் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை இந்திய கட்டமைப்பிற்கு ஐ.ஐ.டிக்கள் எந்தப் பங்கும் ஆற்றியதில்லை. இப்பொழுதுவரை ஐ.ஐ.டிக்கள் ஏகாதிபத்திய நலன் காக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பன்னாட்டு கம்பெனிகளுக்கு குறைந்த கூலிக்கு ஆட்கள் என்றுதான் இயங்கிவருகிறது.

ஆனால் நமது பார்வையின் படி உழைக்கும் மக்களின் தலைமையில் நாம் இந்தியாவைக் கட்டியமைக்கிற பொழுது உற்பத்தியில் நமக்கு இருக்கும் சவால்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் கட்டமைப்பை சடுதியில் மேம்படுத்த மிக அவசியமாகும். அப்பொழுது ஐ.ஐ.டிக்கள் ஜரூராக வேலையில் இறங்கும் பொருட்டு பலதிசைகளிலும் முடுக்கி விடப்படும். இதற்கு நமக்கு உண்மையில் நாட்டின் மொத்த இளைஞர் பட்டாளமும் தேவை. இவர்களுக்கு அறிவு ஊட்டும் வேலையைச் செய்வது இன்றியமையாததும் தவிர்க்க இயலாததுமான புரட்சிகர இயக்கங்களின் பாட்டாளிவர்க்கத்தின் கடமையாகும். நாம் அப்பொழுதும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்போம். அப்பொழுது நமது தேர்வு முறை நிராகரித்தல் என்பதன் அடிப்படையில் இல்லாமல் தேர்ந்தெடுத்தல் என்பதன் அடிப்படையில் இருக்கும். இதற்கு JEE போன்ற பித்தலாட்டமான பாசங்கான உதவாக்கரை தேர்வு முறைகள் இருக்க வாய்ப்பில்லை என்பதை நினைவில் வையுங்கள்.

ஐ.ஐ.டிக்கள் தவிர தனியார் பொறியியல் கல்லூரிகள் என்று பல உப்புமா கல்லூரிகள் படையெடுத்து வருவதை நாம் காண்கிறோம். பெற்றோர்கள் தன் பிள்ளை இஞ்சினியர் என்பதில் ஆர்வமாக இருந்தால் தமிழ்நாட்டில் நிலவும் உண்மைக்கு முகம் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 93% சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் போலி பெயரில் பேராசிரியர்கள் பணிபுரியும் மோசடி சென்ற ஆண்டு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது 93% தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் இல்லாமலேயே இருப்பதாக கணக்கு காட்டியிருக்கின்றன. ஆசிரியர் எனும் விசயத்திலேயே கல்லூரிகளின் நிலைமை இப்படி என்றால் கல்லூரி கட்டமைப்பு, வசதிகள் என்பதில் எத்துணை பித்தலாட்டம் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதற்கு மத்திய அரசும் மாநில அரசும், அதிகாரவர்க்க உறுப்புகளும் முழுக்கவும் உடந்தை.

எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி, சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது என சென்ற ஆண்டு சுயநிதி கல்லூரிகளின் அடாவடியை கணக்குப்போட்டு பாருங்கள். தற்பொழுது எஸ்.ஆர்.எம் குழுமம், இடைத்தரகர்கள் மூலமாக மாணவர்களிடம் பணம் பிடுங்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

93% சுயநிதி பொறியியல் கல்லூரிகள் டூபாக்கூர்! இதற்கு அரசு, நீதிமன்றம், ஆளும் வர்க்க அதிகார உறுப்புகள் அத்துணையும் உடந்தை என்றால் எந்த அருகதையின் அடிப்படையில் எந்த தார்மீக கடமையின் அடிப்படையின் எந்த நியாய உணர்ச்சியின் அடிப்படையில் உங்கள் குழந்தைகளை பொறியியல் கலந்தாய்விற்கு அழைத்து செல்கிறீர்கள் என்பதற்கு பதில் சொல்லுங்கள்.

ஆக இந்தப்பதிவின் மூலமாக நம்மால் ஒரு முடிவை எட்ட இயலும்.

என் பிள்ளை மருத்துவனாக பொறியாளனாக வரவேண்டும் என்று சுயநலமாகவாவது பெற்றோர்கள் சிந்திப்பார்கள் எனில் “அரசுக்கட்டமைப்பு தோற்றுப்போய்விட்டது; இது அழுகி நாறிக்கிடக்கிறது; இதை தகர்த்து நமக்கான கல்வி அமைப்பைக் கட்டினால் தான், தான் ஆசைப்பட்ட கல்வி முறை நம் பிள்ளைகளுக்கு வாய்க்கப்பெறும்” என்பதை உணர்ந்து போராட்டத்திற்கு தயாராக வேண்டும். அரசு-கல்விநிலையங்களில் உள்ள ஒவ்வொரு அரங்கிலும் நமது உரிமைகளை நிலைநாட்டும் மக்கள் குழுக்களை நிறுத்தியாக வேண்டும். அரசுப் பள்ளிகளை நமது பகுதி வாழ் மக்களைக் கொண்டு நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரவேண்டும்! சென்ற ஆண்டு படிப்பினைகள் மூலமாக இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரலை நாம் இவ்விதம் வரையறுத்திருக்கிறோம்!

பெற்றோர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்!

– இளங்கோ

படங்கள் : நன்றி thehindu.com, tamil.thehindu.com

தொடர்பான செய்திகள்

பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல … மனிதன் தான் பூமிக்குச் சொந்தம் !

5

கி.பி.1851 இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபர், சுக்வாமிஷ் என்ற செவ்விந்திய இன மக்களுக்குச் சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை விலைக்குக் கேட்டார். அதற்குப் பதிலளித்து அந்தக் குழுவின் தலைவர் சியாட்டில் அமெரிக்க அதிபருக்கு எழுதியதாகக் கூறப்படும் பிரபலமான கடிதம் இது. ஐரோப்பாவில் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை முதலாளித்துவத்தை உலுக்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் முதலாளித்துவத்தைச் சகிக்க வொண்ணாத பண்டைப் பொதுவுடைமையின் குரலாய் இது ஒலிக்கிறது. அறிவியல் பூர்வமான பொதுவுடைமை, முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கத் தொடங்கிய அதே வேளையில், மனித குலத்தின் மழலை முதலாளித்துவத்தின் முகத்தில் காறி உமிழ்கிறது. உலக முதலாளித்துவத்தின் முகத்தில் அந்த எச்சில் இன்னும் வழிந்து கொண்டிருக்கிறது.

செவ்விந்தியர்களின் தலைவர் சியாட்டில்
செவ்விந்தியர்களின் தலைவர் சியாட்டில்

நிலத்துக்கு வெதுவெதுப்பூட்டும் வானத்தை நீ எப்படி விலைக்கு வாங்க முடியும்? எப்படி விற்க முடியும்? நல்ல வேடிக்கை. காற்றின் தூய்மையும், தண்ணீரின் ஒளியும், எங்களுடைய தனிச்சொத்துகளல்ல் பிறகு அவற்றை எப்படி நீ வாங்க முடியும்?

பூமியின் ஒவ்வொரு துகளும் எங்களின் மக்களுக்குப் புனிதமானது.

பளபளக்கும் ஊசி இலைகளும் மணல் பரந்த கடற்கரைகளும், இருண்ட காடுகளுக்குள்ளே பரவிய பனியும் காடு திருத்திய நிலங்களும், ரீங்கரிக்கும் பூச்சி இனங்களும் எங்கள் மக்களின் நினைவுகள் வழியாகப் புனிதமாக நிலைத்திருக்கின்றன. மரங்களுக்குள்ளே செல்லும் நடுத்தண்டு சிவப்பு இந்தியனின் நினைவுகளை பல தலைமுறைகளாகத் தாங்கி வருகிறது.

நாம் பூமியின் அங்கம்; பூமியும் நம்மில் ஓர் அங்கம்.

எனவேதான் வாஷிங்டனிலிருந்து அதன் தலைவர் எங்கள் ‘நிலத்தை வாங்கப் போவதாகச்’ சொல்லி அனுப்பியபோது எங்களை அவர் அதிகம் விலை கொடுத்து வாங்கிவிட நினைப்பதாகவே தோன்றியது. நிலங்களை வாங்கிய பிறகும் நமக்கென்று ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுப்பதாகவும் அங்கே நாம் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து கொள்ளலாம் என்றும் சொல்லி அனுப்பினார் அவர்.

நமக்கு அவர் தந்தைபோல ஆகிவிடுவார்; நாம் அவருக்குக் குழந்தைகளாகி விடுவோம்; அதனாலேயே நம் நிலங்களை அவர் வாங்க அனுமதித்துக் கொள்வோமாம்.

ஆனால், அது அப்படி எளிதாக முடிகிற விசயமல்ல் காரணம் எங்களுக்கு எங்கள் நிலங்கள் புனிதமானவை.

அருவிகளிலும் ஆறுகளிலும் ஓடுகிற தூய்மையான தண்ணீர் வெறும் நீரல்ல, அவை எங்களது மூதாதையரின் ரத்தம்.

உங்களுக்கு எங்கள் நிலத்தை விற்கிறோம் என்றால் அது முதலில் புனிதமானதென்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; அதேபோல உங்கள் குழந்தைகளுக்கும் இந்த நிலம் புனிதமானதென்பதை நீங்கள் கற்றுக் கொடுங்கள். படிகம் போன்ற ஏரிகளின் தெளிந்த நீரில் தெரியும் பிம்பங்கள் எங்களது மக்களின் வாழ்வில் நடந்த பலவிதமான சம்பவங்களையும் நினைவுகளையும் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

1830 ல் செவ்விந்தியர்களின் வாழ்க்கை முறையை கேட்லின் என்பவரால் தீட்டப்பட்ட ஓவியம்
1830 ல் செவ்விந்தியர்களின் வாழ்க்கை – கேட்லின் என்பவரால் தீட்டப்பட்ட ஓவியம்

ஓடுகின்ற நீரில் நீங்கள் கேட்கும் முணுமுணுப்பு எங்கள் பாட்டனின் குரல்.

வெள்ளைக்காரன் இருக்கிறானே அவனுக்கு எங்களின் பழக்கவழக்கங்கள் தெரியாது. எங்கள் நிலத்தின் எல்லாப் பகுதிகளுமே அவனைப் பொறுத்த அளவில் ஒன்றுதான். இரவிலே திருடன் போல உள்ளே நுழைந்து தான் ஆசைப்பட்ட பொருளையெல்லாம் சூறையாடிக் கொண்டு போவதுதான் அவன் பழக்கம்.

கல்லறையில் தந்தையைப் புதைப்பான் மறுகணம் மறந்து போவான் அவனுக்குக் கவலையில்லை. பிள்ளைகளிடமிருந்தே கூட நிலத்தைப் பறித்துக் கொள்வான் அவர்களின் எதிர்காலம் பற்றி அவனுக்கு அக்கறையில்லை.

தந்தையின் ஆன்மா இருந்த கல்லறை, சந்ததியின் உரிமை இரண்டையுமே அவன் வெகு சுலபமாக மறந்து போகிறான். தாயாகிய பூமியை, சகோதரனாகிய வானத்தை, ஆடுமாடுகளைப் போல பொன்மணிகளைப் போல விற்கக்கூடிய வாங்கக்கூடிய கொள்ளையடிக்கக் கூடிய பொருள்களாக மட்டுமே அவன் பார்க்கிறான்.

பச்சைப் பூமியை எடுத்து விழுங்கி எல்லாவற்றையுமே வறண்ட பாலைவனமாக்கி விடுகிற அகோரப்பசி அவனுக்கு.

எப்படிப் பார்த்தாலும், எங்கள் பாதைகள் வேறு, உனது பாதைகள் வேறுதான். எங்களுக்கு உங்கள் நகரங்களைப் பார்க்கும் போதே எரிகிறது, வேதனை வாட்டி எடுக்கிறது. காட்டுமிராண்டிகளுக்கு நகரங்களை விளங்கிக் கொள்ள முடியாதென்கிறாய்.

நியூயார்க் நகரம்
நியூயார்க் நகரம்

வெள்ளையனின் நகரங்களில் அமைதியான ஒரே ஒரு இடத்தைக் கூட உன்னால் காட்ட முடியாது; வசந்த காலத்தில் இலைகள் விரியும் ஓசைகளை அங்கே கேட்க முடியாது. ஒரு பூச்சியின் சிறகுகள் அசையும் ஓசையைக் கூடக் கேட்க முடியாது.
ஒருவேளை, நான் காட்டுமிராண்டி என்பதால் எனக்குப் புரியாது என்பாய்.

உனது நகரங்களின் இரைச்சல் காதைக் கிழிக்கிறது. இரவில் ஒற்றைப் பறவையின் ஏக்கம் தொனிக்கும் குரலோ, குளத்தின் அருகே தவளைகளின் சுவையான விவாதங்களோ கேளாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? நான் ஒரு செவ்விந்தியன், எனக்கு விளங்கவில்லை.

குளத்தின் மேல் தடவிச் செல்லும் காற்றின் ஒலியை விரும்புகிறான் ஒரு செவ்விந்தியன். பகலில் பெய்யும் மழை சுத்தப்படுத்திய காற்றின் ஊசி இலையில் பரவி வந்த காற்றின் வாசனையே அவன் விரும்பும் வாசனை.

காற்று அவனது பொக்கிஷம். விலங்குகள், மரங்கள், மனிதர்கள் என்று எல்லா சீவராசிகளுமே ஒரே மூச்சுக் காற்றைத்தான் சுவாசிக்கின்றன.

ஒரு வெள்ளையன் தான் சுவாசிக்கும் காற்றை என்றைக்காவது நின்று கவனித்திருப்பானா?

பல நாட்களாகவே மரணப் படுக்கையில் விழுந்து விட்டவனைப்போல அல்லவோ நாறும் காற்றில் அவன் மூச்சிறுகிக் கிடக்கிறான்.

உங்களுக்கு நிலத்தை விற்கிறோம் என்றால் காற்று எங்களின் பொக்கிஷம் என்று அறிந்து கொள்ளுங்கள். எல்லா உயிருக்கும் காற்றே ஆதாரம், அவற்றில் எல்லாம் காற்றின் ஆன்மா பாய்ந்து ஓடுகிறது. எங்கள் பாட்டனுக்கு எது முதன்முதலில் உயிரானமூச்சைக் கொடுத்ததோ அதே காற்றுதான் அவருக்கு மரணத்தின்போது பெருமூச்சையும் கொடுத்தது.

எங்கள் நிலத்தை விற்கிறோம் என்றால் தனியே அதை நீ புனிதமாகக் கருதவேண்டும், பாதுகாக்க வேண்டும். அங்கே போகிற வெள்ளையன்கூட பூக்களின் இனிய மணம் நிறைந்த காற்றைச் சுவாசிக்கலாம்.

செவ்விந்தியர்கள்
செவ்விந்தியர்கள்

நானொரு காட்டுமிராண்டி; எனக்கு வேறு விதமாகப் புரிந்து கொள்ளவும் தெரியவில்லை.

புல்வெளியில் ஆயிரம் எருதுகளின் சடலங்கள் அழுகிக் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன் அவை, அருகே ரயிலிலிருந்து வெள்ளையர்களால் பொழுதுபோக்குக்காகச் சுட்டுக் கொல்லப்பட்டவை. புகை விட்டுச் செல்லும் உன் ரயில் எங்கள் எருதுகளை விட எந்த விதத்தில் உயர்ந்தது? எனக்கு விளங்கவில்லை நானொரு காட்டுமிராண்டி.

விலங்குகள் இல்லை என்றால் மனிதன் ஏது? விலங்குகள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டால் ஆன்மாவை விட்டு விட்ட கூடுபோல மனிதன் செத்துப் போவான்.

விலங்குகளுக்கு என்னவெல்லாம் நேர்ந்ததோ, மனிதனுக்கு அவை சீக்கிரத்திலேயே நடக்கும். எல்லாமே ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை.

உன் குழந்தைகளுக்கு நீ கற்றுத்தா அவர்களின் காலடியில் உள்ள மண் பாட்டன்மாரை எரித்த சாம்பல் என்று. அதனால்தான் அவர்கள் நிலத்தைப் போற்ற வேண்டும் என்கிறேன். எங்கள் சுற்றத்தாரின் வாழ்க்கையால் நிரம்பிய பொக்கிஷமே இந்தப் பூமி என்பதை உன் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்.

பூமி நமது தாய் என்று நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தோம்; அதை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

பூமிக்கு எதெல்லாம் நேரிடுமோ அதுவே அவன் பிள்ளைகளுக்கும் ஆகும்.

பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல மனிதன் தான் பூமிக்குச் சொந்தம் இது எங்களுக்குத் தெரியும்.

நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக வைத்துக் கொள்வோம் எங்கள் நிலத்தை நாங்கள் நேசித்ததுபோலவே நீங்களும் நேசியுங்கள்;
நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக வைத்துக் கொள்வோம் எங்கள் நிலத்தை நாங்கள் நேசித்ததுபோலவே நீங்களும் நேசியுங்கள்;

பொருள்கள் எல்லாம் உள்ளே இணைந்தவை ஒரு குடும்பத்தை ரத்தச் சம்பந்தம் பிணைப்பது போல. எல்லாப் பொருள்களும் உள்ளுக்குள்ளே இணைந்தவை.

பூமிக்கு எதெல்லாம் நேரிடுமோ அதுவே அவன் பிள்ளைகளுக்கும் ஆகும்.

மனிதன் வாழ்க்கை என்ற வலையைப் பின்னவில்லை; அவன் அதில் ஓர் இழை மட்டுமே. அந்த வலைக்கு அவன் எத்தனைக்கேடுகள் செய்தாலும், அவற்றையெல்லாம் தனக்கே செய்து கொண்டவனாகிறான்.

கடவுளே வந்து அந்த வெள்ளையனோடு தோளோடு தோள் சேர்ந்து நடக்கலாம்; நண்பர்களைப் போலக் கலந்து பேசலாம்; ஆனால் அவனுக்கும் இறுதித் தீர்ப்பிலிருந்து விதிவிலக்கு இல்லை.

என்ன இருந்தாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்தானே, இதோபார்.

வெள்ளையர்களாகப் பிறந்தவர்களும் உலகை விட்டு நீங்கத்தான் வேண்டும்; மற்ற எல்லாப் பழங்குடியினரைவிடச் சீக்கிரமாகவே மறைந்தும் போகலாம். நீ படுத்துறங்கும் நிலத்தை நீயே அசுத்தப்படுத்தினால் ஓரிரவில் உன் குப்பைகளுக்குள்ளேயே மூச்சு முட்டி நீ செத்துப் போகலாம்.

அந்த இறுதி முடிவு ஒரு விளங்காத புதிர்போல. எருதுகள் படுகொலையையும் காட்டுக் குதிரைகளைப் பழக்கி விடுவதையும் காடுகளுக்குள்ளே எங்கு பார்த்தாலும் மனித நடமாட்டம் அதிகரிப்பதையும் பழைய பூர்வீகமான மலைகளை மறைத்து தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும் நாம் விளங்கிக் கொள்ளாமலேயே இருக்கிறோம். வரப்போகிற அந்த இறுதி முடிவு ஒரு விளங்காத புதிர் போல.

native-american-graphics-3புதர்க் காடுகள் எங்கே ?
எல்லாம் போயிற்று
மலைக் கழுகுகள் எங்கே?
அவையும் மறைந்தன.
விரைவாக ஓடும் மட்டக்
குதிரைகளையும் வேட்டையாடி
அழித்துக் கொண்டிருக்கிறார்கள்
என்ன நடக்கிறது?
இப்படி வாழவேண்டும் என்ற
அவர்களின் வாழ்க்கை
முடிந்து விட்டது
எப்படியோ மீதமிச்ச வாழ்க்கை
மட்டும் நடந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக வைத்துக் கொள்வோம் எங்கள் நிலத்தை நாங்கள் நேசித்ததுபோலவே நீங்களும் நேசியுங்கள்; நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள்; எங்களிடமிருந்து நிலம் பெறுகின்றபோது எப்படி இருந்தது என்பதை மட்டும் நினைவில் வைத்திருங்கள்; எல்லா உறுதியுடனும், எல்லா வலிமையோடும் முழுமையான விருப்பத்தோடும் உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள். இந்நிலத்தை நேசியுங்கள்… கடவுள் நம் எல்லோரையும் நேசிப்பதுபோல.

மொழியாக்கம்: புதூர் இராசவேல்,
புதிய கலாச்சாரம் 2005

வறுமையின் நிறம் சிவப்பு : ஐ.நா – ஐ.எம்.எப் நீலிக் கண்ணீர்

0
கடுமையான, ஏற்றதாழ்வான (இந்த) சமூக சூழல் குழந்தைகளின் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான வாழ்க்கைக்கு தடையை இருக்கின்றன

ரு சமூகம் தன் குழந்தைகளை எப்படி கவனித்து கொள்கிறது என்பதை வைத்து ஐ. நா சபையின் யூனிசெஃப் UNICEF வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்கா நம்ப முடியாத அளவிற்கு மோசமான நாடாக இருக்கிறது.

உலகின் முதல் பணக்கார நாடான அமெரிக்காவின் வறுமையின் அளவும் அதன் தனி நபர்கள் கைகளில் புழங்கும்  செல்வத்தின் அளவும் கடந்த 30 ஆண்டுகளில் தாறுமாறாக அதிகரித்துள்ளது தான்
உலகின் முதல் பணக்கார நாடான அமெரிக்காவின் வறுமையின் அளவும் அதன் தனி நபர்கள் கைகளில் புழங்கும் செல்வத்தின் அளவும் கடந்த 30 ஆண்டுகளில் தாறுமாறாக அதிகரித்துள்ளது தான்

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 41 பணக்கார நாடுகளில் முதல் பணக்கார நாடு அமெரிக்கா என்பதும் வறுமையில் வாடும் குழந்தைகள் பட்டியலில் முதலிடத்திலும் இருப்பதும் அமெரிக்கா தான் என்பது ஒரு முரண் நகை.

அந்த ஆய்வறிக்கை இப்படி தொடங்குகிறது “குழந்தைகளை மையமாக வைத்து அரசு அல்லது தனியாரின் சமூக நல நிறுவனங்கள், நீதிமன்றங்கள், நிர்வாக மற்றும் சட்டமியற்றும் அதிகாரிகளால்  எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளின் பிரதான நோக்கம் குழந்தைகளின் சிறந்த நலன்களை முதன்மையான நோக்கமாக கொண்டிருத்தல் வேண்டும்.”

அந்நிறுவனம் மேற்கொண்ட  ஆய்வு, சமூகத்தில் மிகவும் அடித்தட்டில் உள்ள குழந்தைகள் முதல் நடுத்தர மக்கள் வரை வெவ்வேறுவிதமான விவரங்கள் குறிப்பாக குடும்ப வருமானம், கல்வி சாதனை,மகிழ்ச்சியான மற்றும் நலமான வாழ்க்கை ஆகியவற்றை வைத்து நடத்தப்பட்டதாக கூறுகிறது. ஒரு நாட்டின் நிலை குறித்து அந்நாட்டின் மக்களது வாழ்வு நிலை குறித்து அல்லாமல் இப்படி குழந்தைகள் என்று பிரிப்பது என்.ஜி.வோ பார்வை என்றாலும் அதிலேயே என்.ஜி.வோக்களின் பிதாகமகன்கள் தேறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

உலகமயமாக்கலின் முக்கிய கூறுகள் ஏற்றத்தாழ்வை அதிகரித்து விட்டன என்று இந்த ஆய்வு நெக்குருகி தனது கவலையை தெரிவித்து உள்ளதால் அதற்கு ஏழையின் பால் திடீரென கருணை உதித்து விட்டது என்று பொருளல்ல. அந்த கவலைக்கான காரணம் அந்த ஏழைகள் முதலாளித்துவத்திற்கு பாடை கட்டி விடுவார்களோ என்ற அச்சம் தான்.

இந்த அச்ச்சத்திற்க்கான வேறொரு காரணம் உலகின் முதல் பணக்கார நாடான அமெரிக்காவின் வறுமையின் அளவும் அதன் தனி நபர்கள் கைகளில் புழங்கும்  செல்வத்தின் அளவும் கடந்த 30 ஆண்டுகளில் தாறுமாறாக அதிகரித்துள்ளது தான்.

ஊதிய ஏற்றத்தாழ்வில் துருக்கி, எஸ்தோனியா மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு பின்னால் அமெரிக்கா 30 வது இடத்தை பிடித்திருக்கிறது. அமெரிக்காவில் ஐந்தில் ஒரு குழந்தை வறுமையில் இருப்பது தான் இதற்கு காரணம்.

கடுமையான, ஏற்றதாழ்வான (இந்த) சமூக சூழல் குழந்தைகளின் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான வாழ்க்கைக்கு தடையை இருக்கின்றன
கடுமையான, ஏற்றதாழ்வான (இந்த) சமூக சூழல் குழந்தைகளின் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான வாழ்க்கைக்கு தடையை இருக்கின்றன

கல்வித்தரத்திலோ 10 வது இடத்தில இருந்தாலும் மன நிறைவான வாழ்கையில் அது 21 வது இடத்தையே பிடித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள ஸ்காண்டிநேவியன் நாடுகள் அமெரிக்காவிற்கு முன்னால் உள்ளன. இதற்க்கு காரணம் சமூகப் பாதுகாப்பிற்காக அந்நாடுகள் கணிசமான நிதியை ஒதுக்குகின்றன. ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை.

அந்த மிகப்பெரிய அறிக்கையின் ஒரு வரி கூறுகிறது, “கடுமையான, ஏற்றத் தாழ்வான (இந்த) சமூகச் சூழல் குழந்தைகளின் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் ஆக்கப்பூர்வமான வாழ்க்கைக்கு தடையாக இருக்கின்றன”

அமெரிக்க பொருளாதார கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கையின் படி, இன்னும் 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் முதல் 1 விழுக்காடு பணக்காரர்கள் கடைகோடி 62 விழுக்காடு மக்களின் மொத்த சொத்து மதிப்பை கொண்டிருப்பார்கள். அமெரிக்கா மக்கள் 50 விழுக்காடு பேர்களின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 400 அமெரிக்க தனி நபர்களிடம் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் 2005-ல் இருந்து சொந்த வீடு வைத்துள்ள அமெரிக்க நடுத்தர மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று வேறொரு ஆய்வு கூறுகிறது. தனி நபர்களிடம் செல்வம் சேர சேர வறுமையில் வாடும் மக்களும் அதிகரிக்கிறார்கள் எனில் அவர்களின் குழந்தைகள் மட்டும் தப்புமா என்ன?

மில்லினியம் கோஹோர்ட் ஆய்வில் எடுத்து கொண்ட  19,000  இங்கிலாந்து குழந்தைகளில் வசதி படைத்த பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளே அறிவாற்றலில் தேர்வில் சிறந்து விளங்குகின்றன. அறிவாற்றல் தேர்வில் கடைசி 10 விழுக்காடு பணக்கார குழந்தைகளை விட 3 மடங்கு குறைந்த புலனுணர்வு திறனையே வறுமையில் வாடும் குழந்தைகள் பெற்று இருப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

சுற்றுசூழல் சமூக மனிதனை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது தான் இந்த ஆய்வு கூறும் உண்மையாகும். ஏற்றத்தாழ்வான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பின் குளறுபடிகள், அதனுள்ளே வளரும் அந்த குழந்தைகளின் மனங்களில் ஏற்றத்தாழ்வை தோற்றுவிக்காதா என்ன?

உறுதி செய்யப்பட உலகளாவிய மழலையர் கல்வி வாய்ப்பு என்பது அக்குழந்தைகளுக்கு ஒருவேளை நல்வாய்ப்பாய் அமையலாம்.
உறுதி செய்யப்பட உலகளாவிய மழலையர் கல்வி வாய்ப்பு என்பது அக்குழந்தைகளுக்கு ஒருவேளை நல்வாய்ப்பாய் அமையலாம்.

உறுதி செய்யப்பட உலகளாவிய மழலையர் கல்வியை அளிக்கும் நாடுகளில் 26 வது இடத்திலும் அதற்கான முதலீடு செய்வதில் 21  வது இடத்திலும் அமெரிக்கா இருக்கிறது.

ஆனால் இந்த திட்டம் கூட பணக்கார குழந்தைகளுக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்குமா என்பது சந்தேகமே. பொருளாதார கட்டமைவில் கடைகோடியில் இருக்கும் அந்த ஏழைக் குழந்தைகளின் பிரச்சினைகளுக்குக் காரணம் அது அல்ல. அக்குழந்தைகளின் குடும்பங்களின் வருமானம் மிகக் குறைவு. அதை வைத்து கொண்டு அவர்களது சுயத் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது நம்ப முடியாத செயலாகும்.

ஊதியத்தை உயர்த்துவதும், குறைந்தபட்ச ஊதியத்திற்க்கான சட்ட வரைவை நிறைவேற்றுவதும் ஒருவேளை பயன் தரலாம். ஆனால் சட்டங்கள் இயற்றுவது முதலாளிகள் தான் என்பது நமக்குத் தெரியும்.

15 டாலர்கள் குறைந்த பட்ச ஊதியமாக பெறுவதற்காக அமெரிக்காவெங்கும் கிட்டத்தட்ட 300 நகரங்களில் மெக்டொனால்ட் உணவு நிறுவனத்தின் பணியாளர்கள் போர்கொடி ஏந்தினர். இந்த போராட்டங்களின் பயனாக கலிபோர்னியா மற்றும் நியூயார்க் நகர மக்கள் மட்டும்  மணியோன்றிற்கு குறைந்தபட்ச ஊதியமாக 15 டாலர்களை பெற்றுள்ளனர். அதுவும் சில ஆண்டுகளில் தான் நடைமுறைக்கு வருகிறது.

விரும்பியோ விரும்பாமலோ 35,000 டாலர்கள் மதிப்புள்ள தானியங்கி இயந்திரங்கள் 15 டாலர்கள் பெரும் ஊழியர்களை விட மலிவானதாகும் என்று எச்சரிக்கிறார்
எட் ரென்ஸி – விரும்பியோ விரும்பாமலோ 35,000 டாலர்கள் மதிப்புள்ள தானியங்கி இயந்திரங்கள் 15 டாலர்கள் பெரும் ஊழியர்களை விட மலிவானதாகும் என்று எச்சரிக்கிறார்

இதற்கு பதில் அளித்துள்ள மெக்டொனால்டின் முன்னாள் தலைமை அதிகாரி எட் ரென்ஸி, இந்த 15 டாலர்கள் குறைந்தபட்ச ஊதியமென்பது மிகப்பெரிய அளவில் வேலையிழப்பை ஏற்படுத்தும் என்றும் விரும்பியோ விரும்பாமலோ 35,000 டாலர்கள் மதிப்புள்ள தானியங்கி இயந்திரங்கள் 15 டாலர்கள் பெறும் ஊழியர்களை விட மலிவானதாகும் என்று எச்சரிக்கிறார். அதாவது கொடுப்பதை வாங்கி கொண்டு பிழைத்துக் கொள் என்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளில் முதலாளித்துவ பொருளாதாரம் தோல்வியடைந்து விட்டது என்றும்  சில தனி நபர்களிடம் மென்மேலும் சேரும் சொத்துக்கள் தாம் ஏற்றத்தாழ்வை அதிகரிக்கின்றன என்றும்  ஐக்கிய நாடுகள் முதல் பன்னாட்டு நாணய  நிதியம் வரை நீலிக் கண்ணீர் வடித்தாயிற்று. எனில் சில தனிநபர்களிடம் மட்டும் சேரும் சொத்துக்களை இந்த முதலாளித்துவ அமைப்பில் தடுப்பது எங்கனம்?

ஒருபுறம் இந்த பிரச்சினைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் இல்லாததன் காரணமாகவும் மறுபுறம் ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்வதை தனியாரிடம் விட்டு விட வேண்டும் எனவும் அரசு அதில் மூக்கை நுழைக்க கூடாது என்று கூறுவதும் முரண் நகையாக இல்லையா?

இப்பொழுது ஐ.எம்.எப் இந்த “ஏற்றத்தாழ்வானது மேல்நோக்கிய சமூக இயக்கமாக மூச்சு திணற செய்யும்” என்று கூறியிருக்கிறது. ஆகவே முதலாளித்துவ வள்ளல்கள் கொஞ்சம் கஞ்சித் தொட்டி திறந்து கருணையை காட்ட வேண்டும் என்பே அதன் உட்கிடை.  அல்லது வால் ஸ்ட்ரீட் போராட்டம், பிரான்ஸ் மக்கள் போராட்டம், பெங்களூர் ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து எச்சரிக்கிறார்கள். மக்களைப் பொருத்தவரை இந்த எச்சரிக்கைகளும் கருணைகளும் முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கான அறிகுறிகள் என்று எடுத்தக் கொள்வார்கள்!

– சுந்தரம்

தொடர்புடைய பதிவுகள்

Fairness for Children
The World’s Richest Countries
Neoliberalism is increasing inequality and stunting economic growth, IMF says

சென்ட்ரல் ஸ்டேசனை அக்ரஹாரமாக்கு ! தி இந்துவின் என்கவுண்டர் திட்டம்

2

உழைக்கும் மக்கள் மீதான ‘தி இந்து’ வின் வக்கிரம் !

கிரிக்கெட், ஃபில்டர் காபி, கர்நாடக சங்கீதம், சங்கராச்சாரி ஆகிய இந்த நான்கு துறை சங்கதிகளின் மேன்மைகளை பேசும் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு (தி இந்து) அலுத்து சலித்து வீதி உலா வரும் பொழுது தவிர்க்கவியலாதபடி சூத்திர – பஞ்சமர்களின் கருவாட்டு வீச்சம் மூக்கைத் துளைத்து விடுகின்றது. சென்ற சீசனில் கருவாட்டிற்காக மவுண்ட் மகாவிஷ்ணு ருத்ர தாண்டவம் ஆடியதை அறிந்திருப்பீர்கள்.

இந்த சீசனில் தி இந்து-விற்கு வேலைப்பளு கொஞ்சம் ஜாஸ்தி! அமித் ஷா சென்னைக்கு வந்து காஞ்சி சங்கராச்சாரியின் சந்திர ஹர்ஷ தரிசனத்தில் கலந்து கொண்டு சனாதன தர்மத்தைக் காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பொழுது அதை ஃபுல் கவரேஜ் செய்தது மவுண்ட்ரோடு தான். மேலும் ‘ஆயுஷ்மான் பவ செளம்ய’ என்று நியுஜெர்சியில் காஞ்சிப் பெரியவாளுக்கு சிலை எடுத்த செய்தியை கவரேஜ் செய்ததும் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் மைல்கல் சாதனைகள்! இவ்வளவு வேலைப்பளுவிற்கு மத்தியில் நடுப்பக்க கட்டுரை ஆசிரியர் சமஸின் தனி ஆவர்த்தன சல்லை வேறு! இதனால் உலகளந்த கஸ்தூரிரங்க பெருமானால் அடிக்கடி வீதி உலா வரமுடிவதில்லை.

central-stationயார் செய்த பாக்கியமோ? புண்ணியக்கோடி பீடாதிபதி ராணிப்பேட்டை ரங்கன் வாள் இந்தமுறை மூக்கைப்பொத்திக்கொண்டு நமக்காக வீதி உலா வந்திருக்கிறார். பெரியவாளின் அனுக்கிரஹமோ அல்லது வாழை இலை மகிமையோ இன்னதென்று சொல்ல இயலவில்லை! என்னவாக இருந்தாலும் கீழ்க்கண்ட ரங்கனின் அனுபவம் என்னவென்பதை கொஞ்சம் பாராயணம் செய்வது உசிதமானது!

“சமீபகாலமாக அரக்கோணம் சென்னை, கும்மிடிப்பூண்டி சென்னை மார்க்கங்களில் புறநகர் மின்சாரப் பயணிகள் கூடுதல் இம்சைகளை – சக பயணிகள், பிச்சை எடுப்போர், தின்பண்டங்கள் விற்போர், அரசியல் பிரச்சாரக் குழுக்கள், திருநங்கைகள் – போன்றோரால் அனுபவிக்கின்றனர்.

அரக்கோணம் சென்னை மார்க்கத்தில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் ‘2 வர்த்தக மண்டலங்கள்’ இருக்கின்றன! சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நடைமேடை 12, 13, 14 ஆகியவற்றில் மூட்டைகளில் அடுக்கிவைத்து 5 ரூபாய்க்கு சிப்ஸ், இதர நொறுக்குத் தீனிகளை விற்போர். இவர்கள் அநாவசியமாக ரயிலில் ஏறி கூடவே வரமாட்டார்கள். பிளிப்கார்ட், அமேசான் போல இணையதளத்தில் ஆர்டர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சென்ட்ரலில் இருந்து புறப்படும் வரை, பெட்டிக்குள் ஏறி விற்று விட்டுக் கீழே இறங்கிவிடுவார்கள். இவர்கள் விற்கும் நொறுக்குத் தீனிகளில் உள்ள ரசாயனங்கள், எண்ணெய், அளவு பற்றியெல்லாம் பயணிகளே கவலைப்படாததால், ரயில்வே துறையில் சுகாதார ஆய்வாளரும் (அப்படியொரு பதவியில் எவராவது இருந்தாலும்) கவலைப்படுவதில்லை. சென்னைப் புறநகர நடைமேடைகளின் தரமான சுகாதாரத்துக்கு இந்த அதிகாரிக்கு ‘காப்பே’ போடலாம்! தெற்கு ரயில்வேயின் ‘தடையற்ற சுதந்திர வர்த்தக மண்டலமாக’ நடைமேடைகளைக் கருதலாம்.

அடுத்த இனம், ரயிலுக்குள் ளேயே இடைவிடாமல் ஏறி வறுகடலை, மூக்கடலை சுண்டல், தேங்காய் புட்டரிசி, பர்பி பாக்கெட், கமர்கட், பத்து ரூபாய்க்கு 3 ‘அண்ணா’ கவுறு உள்பட பல அத்தியாவசிய சாமான்களை எல்லோரையும் இடித்தும், துவைத்தும் விற்பவர்கள். சம்சா விற்பவர்கள் தங்களுடைய வாயமுதத்தையும் தெளித்து, திறந்த டப்பாவில் ‘ஆரோக்கியமாக’ சம்சா விற்கிறார்கள். விலை மலிவு. 10 ரூபாய்க்கு 4. புறநகர் பயணிகள் தங்களுடைய பசியையும், விற்பவர்களின் வாழ்வாதாரத்தையும் உத்தேசித்து, வாங்கிச் சாப்பிட்டு ஆதரவு காட்டுகிறார்கள். நெய் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட், பப்ஸ், 10 ரூபாய் பாக்கெட்களில் தலை கால் வெட்டப்பட்ட முற்றிய காரட்டுகள், வதங்கிய கத்தரிக்காய், வளையாத வெண்டைக்காய் போன்றவற்றையும் விற்கிறார்கள். காய்கறி, பழம் என்றாலே மொஃபசல் ஏரியா வந்துவிட்டது என்று அறியலாம்.

ரயில் பெட்டியின் தரையை அழகுபடுத்துவதற்காகவே ‘வேச்ச’ கடலை (‘வேகவெச்ச’ மருவி, ‘வெவிச்ச’ ஆகி இப்போது ‘வேச்ச’!) விற்கிறார்கள். இதை வாங்குவோரில் 90 சதவீதம் பேர் ஆழ்ந்த சிந்தனைச் சிற்பிகள். கடலைக்காயை உரித்து வாயில் போட்டுக்கொண்டே தோலை அப்படியே காலுக்கடியில் நழவவிடுவார்கள். சப்போட்டாவாக இருந்தால் எதிரில் இருப்பவரின் காலுக்கு அடியில் துப்புவார்கள்.

சென்ட்ரல் ரயில் நிலைய வாயிலிலேயே ஒருவர் பத்து ரூபாய்க்கு 5 சம்சா விற்பார். டெல்லி, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற தலைசிறந்த ரயில் நிலையங்களில்கூட இந்த சம்சா ‘ரிசப்ஷன்’ விற்பனை கிடையாது. பகல் நேரமானால் மோர் விற்பனை. மாங்காயை மிளகாய்த்தூளில் நீராட்டி அப்படியே திறந்து வைத்து விற்பது சென்னை சென்ட்ரல் எதிரில் ஸ்பெஷல்.

நாடி நரம்பெல்லாம் புடைக்க, ‘‘ஓட்டுப் பொறுக்கிக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள், தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுங்கள், டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குவோம், ஆயுதம் எடுத்துப் போராடுவோம்’’ என்று அன்பார்ந்த உழைக்கும் மக்களை அழைக்கும் அனல் வீச்சு இயக்கத்தினரை ரயில்வே பாதுகாப்புப் படை (அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திக்காரர்கள், தமிழ் தெரியாது) ஜவான்கள், இருப்புப் பாதைக் காவல்துறையினர் கண்டு கொள்வதே இல்லை. பத்து ரூபாய்க்குத் தங்களுடைய வார இதழை நடப்பு அரசியல் விமர்சனத்துடன் சேர்த்து விற்கவும், இயக்கச் செலவுக்குப் பணம் வசூலிக்கவும் ‘ஃபுளோட்டிங் பாப்புலேஷனை’ நன்றாகப் பயன்படுத்துகிறார்கள். (நாங்க சொல்றதை கேளுங்க, எதிர்த்துப் பேசாதீங்க என்ற அறிவுரையும் உண்டு.)

திருப்பதி, அரக்கோணம், திருத்தணி ‘விரைவு’ ரயில்கள் நடைமேடைக்கு வந்ததும், இளமைத் துள்ளலுடன் பாய்ந்து ஏறி கைப்பை, கர்ச்சீப், செல்போன், லேப்-டாப் என்று 4 அல்லது 5 பொருட்களை இருக்கைகளில் விரித்து அதில் ‘யாரும் உட்காரக்கூடாது, சேத்துப்பட்டில் ரயிலில் வந்துகொண்டிருக்கும் தங்கள் நண்பர்களுக்காக’ என்று அடம் பிடிக்கும் சக பயணிகளான வாலிபர்களை, ஏன் என்று கேட்கக்கூட ரயில்வே துறையில் யாரும் கிடையாது. வயதானவர்கள் நிற்பதை இந்த வாலிபர்களால் கண்கொண்டு ‘பார்க்க’ முடிவதில்லை. எனவே ‘செல்’லில் இயர் பிளக்கை சொருகி பண்பலை வர்ணனையுடன் பாடல்களைக் கேட்டுக்கொண்டு ‘கண்ணை மூடிக்கொண்டு’ விடுகிறார்கள்.

கூட்டம் எவ்வளவு மிதிபட்டாலும் வாயிலிலேயே உட்கார்ந்து அல்லது கேள்விக்குறி போல உடலை மடித்து படுத்து வழிமறிக் கும் வழியடைப்பு சுதந்திரம் தெற்கு ரயில்வேயால் பலருக்கும் தரப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அவதிப் பட்டாலும், சிலராவது காற்று வாங்கிக்கொண்டு வருகிறார்களே என்று நாம் சாந்தி அடைய வேண்டும் (கும்மிடிப் பூண்டி லோக்கல் குவாட்டி போகுமா-தி இந்து தமிழ், 08-06-2016).”

கோயம்பேடு மார்கெட்டிற்கு தன் வாழ்நாளில் முன்னே பின்னே போயிராத ஒருவர் கருவாட்டிற்காக ‘லோகமே இருண்டுடுத்து’ என்று குமுறியதைப் போல ரங்கன் வாள் முதன்முறையாக சென்னை சென்ட்ரல் புறநகர் இரயில் வாழ்க்கையை பார்த்து ஹாஷ்ய பாஸ்யம் எழுதியிருக்கிறார். ஹாஷ்ய பாஸ்யம் என்றால் நகைச்சுவை உரை!

அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருத்தணியிலிருந்து சென்னை எனும் சொர்க்கத்தில் இன்ப வாழ்வு பெறுவதற்காக நாளொன்றுக்கு எட்டு இலட்சம் பேர் வருவதாக கேள்வி. இதில் பெரும்பாலும் கட்டிட வேலை பார்க்கும் பெயிண்டர்கள், சித்தாள்கள், கூலித் தொழிலாளிகள், எலக்ட்ரீசியன்கள், அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்திருக்கும் நோயாளிகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், மார்கெட்டிற்கு சாமான் பிடிக்க வந்திருக்கும் சிறு குறு வியாபாரிகள், மூளை உழைப்பு சாப்ட்வேர் கொத்தடிமைகள் என இந்தியாவின் ஒட்டுமொத்த நாடிநரம்பும் அங்குதான் இருக்கிறது.

இத்தொழிலாளிகள் எல்லாம் வெண்பொங்கல் தின்றுவிட்டு கொட்டாவி வந்தால் பில்டர் காபி இறக்கி, ஏசி அறையில் சங்கீதா ஹோட்டல் முந்திரிப்பருப்பு வறுவலை கொரிக்கும் சிற்றுண்டி சதைப்பிண்ட வாழ்க்கையை வாழவில்லை! பிளாட்பாரத்திலும் இரயிலும் விற்கும் சமோசா, கடலை மிட்டாய், வேச்ச கடலை, பொரி, நெய் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட், பப்ஸ், 10 ரூபாய் பாக்கெட்களில் தலை கால் வெட்டப்பட்ட முற்றிய காரட்டுகள், வதங்கிய கத்தரிக்காய், வளையாத வெண்டைக்காய் போன்ற பொருட்கள் எல்லாம் மலமாய் வெடித்துச் சிதறுவதற்காக அல்ல; நாளைக்கும் உழைப்பைச் சுரண்டுவதை உறுதிப்படுத்த தொழிலாளிகளின் உயிரைத் தக்க வைக்கும் பொறுப்பை ஏற்கும் நிபந்தனை தான் இந்த பிளாட்பார பண்டங்கள்!

ஆனால் ராணிப்பேட்டை ரங்கனின் பார்வைக்கு புறநகர் ரயிலில் வியாபாரிகளுக்கும் பயணிகளுக்கும் இருக்கும் இந்த வர்த்தகம் முகம் சுளிப்பாக அறுவெறுப்பாக இருக்கிறது! இவையெல்லாம் அதிகார பூர்வமற்ற வர்த்தக மண்டலங்கள் என்கிறார்! மாறாக இந்தியாவின் பல பகுதிகளில் தண்ணீர் இலவசம், மின்சாரம் இலவசம், தொழிலாளர் நலச்சட்டங்கள் பொருந்தாது; வேலைநேர கணக்கு கிடையாது; டேக்ஸ் ஹெவன் ஹாலிடேஸ் உண்டு, நீதி கேட்டு வழக்கு தொடுக்க முடியாது என்றிருக்கும் பன்னாட்டு கம்பெனிகளின் வர்த்தக மண்டலங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்று பெயராம். நம்மை அண்டிச் சுரண்டிப் பிழைக்கும் ஏகாதிபத்திய அட்டைப்பூச்சிகளின் வர்த்தகம் அதிகாரப் பூர்வமானது! யாரால் நாம் உயிர் வாழ்கிறோமா இந்நாட்டின் உழைக்கும் மக்கள் சுண்டல் பொரி கடலை வாங்கித் தின்னும் வர்த்தகம் அதிகார பூர்வமற்றது; அசிங்கமானது! அருவெறுப்பானது!

திறந்த டப்பாவில் சமோசா விற்பவர்கள் தங்கள் வாயமுதத்தையும் சேர்த்து ஆரோக்கியமாக சமோசா விற்கிறார்கள் என்று சொல்லும் தி தமிழ் இந்து வாழை இலையில் பேளும் சங்கராச்சாரியை அனுஷ்டானம் என்று மணப்பதேன்? புரோட்டா கேடு என்று ‘அறிவார்ந்து’ ஆய்ந்து விட்டு அதே மைதாவில் வடிக்கப்படும் பிசா, பர்கர், பிளாக் பாரெஸ்ட்டை நாகரீகத்தின் உச்சம் என்று கொண்டாடும் இந்த ராயல் விக்டோரியன் கனவான்களுக்கு உழைக்கும் பெண்கள் விற்கும் கொய்யாப்பழமும், பலாப்பழமும் சகிக்க முடியவில்லையாம்!

சென்ற வருடம் சென்னை மியூசிக் அகடமியில் புதிதாக என்ன பதார்த்தங்கள் வந்திருக்கிறது என்று இந்து தனிகட்டுரையே எழுதியது! ஆப்பிள் சேவையும் புதினா சேவையும் சங்கீத அரங்கில் புதுவரவு என்று எழுதும் அய்யர்வாள் ஆப்பிள் சேவையில் வாயமுதத்தை பார்க்கவில்லையா? அல்லது பார்ப்பான் எச்சில் மட்டும் புனிதம் என்று கருதுகிறாரா? உண்மையில் சமோசாவில் எச்சிலைக் காணும் ரங்கனின் பார்வையில் சூத்திர பஞ்சம உழைக்கும் மக்கள் சைவமே தின்றாலும் அது தீட்டு என்று தீர்ப்பளிக்கும் பார்ப்பனத் திமிர் தான் தூக்கிக் கொண்டு நிற்கிறது!

அதிகாரபூர்வ வர்த்தகம் என்பதைத் தாண்டி வீதி உலாவில் ரங்கனை அதிகம் இம்சித்த அம்சம் பிச்சைக்காரர்கள், திருநங்கைகள், சகபயணிகள். தமிழ் இந்துவில் வரும் கட்டுரைகள் எல்லாம் மாற்று பாலினத்தவருக்கான ஆதரவு, விளிம்பு நிலை, களிம்பு நிலை என்று எழுதுவதோடு, கூக்கு போன்ற கண்தெரியாதவர்கள் இரயிலில் வாழும் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தால் கவித்துவம் என்று கூசாமல் எழுதிவிட்டு இங்கு அருவெறுப்போடு இத்தகையவர்கள் மீது வன்மத்தைக் கக்குகிறார்கள். தமிழ் இந்துவை நம்பி தலித்தியம், பெண்ணியம், மாற்றுப்பாலினம், விளிம்பு நிலை என்று எழுதிய அறிவுஜீவிக்கூட்டம் எங்கு திரண்டு தி இந்துவிற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்தவர்கள் எங்களுக்கு அறியத் தாருங்கள்!

இறுதியில் ரங்கன் அரசியல் பிரச்சாரம் செய்யும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை புரட்சிகர இயக்கங்களைக் கண்டு குமுறுகிறார்! உங்கள் வீட்டிலும் பில்டர் காபி ஜக்கு இருந்தால் காலையில் பிரெஷ்ஷாக ஹிந்து பேப்பரை உங்கள் மடியில் வைத்து பிரச்சாரம் செய்யலாம். அதைவிடுத்து புறநகர் இரயிலில் உழைக்கும் மக்களைத் திரட்டும் வண்ணம் அதுவும் ஜெயா கும்பலின் டாஸ்மாக் அட்டூழியத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தால் மவுண்ட்ரோ மகா விஷ்ணு சும்மாயிருக்குமா? ரங்கனின் உள்ளடக்கத்திற்கு பதில் சொல்லலாம் என்றால் சமஸைப் போன்று ஆயுதம் என்று அவதூறு செய்கிறார்! இதைத் தவிர்த்துப் பார்த்தால் ரங்கன் சமஸ் போன்றவர்கள் மட்டுமல்ல ஆளும் வர்க்கம் மக்கள் அதிகாரத்தை எப்படி பார்க்கிறது என்பதைச் சொல்வது இங்கு பொருத்தமாக இருக்கும்.

பிப்ரவரி 14 டாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டை மக்கள் அதிகாரம் திருச்சியில் நடத்தியது. அத்தருணத்தில் சென்டரல் ரயில் நிலையத்தில் மக்கள் அதிகாரம் எனும் தலைப்பில் பத்திரிகை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இது புரட்சிகர இயக்கங்களின் பத்திரிகையாக இருக்கும் என்று வாங்கிப்பார்த்தால் ஜெயா கும்பலின் பிராக்சியாக மக்கள் அதிகாரம் என்பதைப் பயன்படுத்தி அம்மா புராணம் பாடப்பட்டிருந்தது. அதாவது மக்களைக் குழப்புகிறார்களாம்! அதுவும் ஆளும் வர்க்கமே சங்கி மங்கி வடிவேலுவைப் போன்று வேடம் போட்டு மக்கள் அதிகாரம் எனும் பெயரைப் பயன்படுத்தி கள்ளப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தது. ரங்கன், ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளவில்லை என்று சொல்கிற பொழுது புறநகர் ரயிலில் உளவுத்துறையில் இருந்து உள்ளூர் காவல்துறை வரை தீயாய் வேலை செய்யணும் குமாரு என்ற கணக்காக வேலை செய்தனர். ரங்கன் என்னடாவென்றால் டீச்சர் அவ கைய கிள்ளிட்டா என்றகதையாக பார்ப்பன பஜனை மடத்தில் நடந்த அரட்டைகள் எல்லாவற்றையும் ரிப்போர்ட் என்று சம்பாஷனை செய்கிறார். இந்து பத்திரிக்கையின் அவாள் தர்மம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்!

இதில் புரட்சிப்படை புளோட்டிங் பாப்புலேசனை பயன்படுத்துகிறதாம்! சனிப் பெயர்ச்சி வந்தால் ஒரு வெளியீடு! தேர்தல் என்று வந்தால் தி.மு.க, அ.தி.மு.க எனும் ஓட்டுக்கட்சிகளிடம் தட்சணை வாங்கிக்கொண்டு முதற்பக்க விளம்பரம்; சனாதன தர்மம் என்று பாலகுமாரனை வைத்து வெள்ளி தோறும் ஒரு வெளியீடு என்று பார்ப்பனத் தொந்தி வளர்க்கும் மகாவிஷ்ணு பயன்படுத்தாத கட்டிங் கலெக்சன் ஏதாவது இருக்கிறதா? கட்டிங்கிற்காகவே கருத்து விபச்சாரம் செய்யும் இவர்கள் உழைக்கும் மக்களிடம் உண்டியல் வசூல் செய்யும் தோழர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று ரயில்வே போலீசிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

கடைசியில் அய்யர்வாளின் வீதி உலா டர்ட்டி லேபரர்ஸ் என்று அங்கலாய்ப்பதற்காக ஹாஷ்ய பாஸ்யமாக முடிந்திருக்கிறது! இதைப் பார்த்து சிரிக்கிற அந்த வக்கிர மனதுக்காரர்கள் தான் டிராபிக் ராமசாமி பிளாட்பார கடைகளையும் தள்ளு வண்டி மனிதர்களையும் கோர்ட் உத்தரவு கொண்டு அப்புறப்படுத்திய பொழுது பாராட்டியது என்பதை மறந்துவிட வேண்டாம்! கோமியத்தை புனித நீர் என்று சூத்திர பஞ்சமர்களின் வாயிலேயே ஊற்றித் தெரிந்த பார்ப்பனியம் கருவாட்டிலிருந்து இறங்கி வந்து சூத்திர பஞ்சமர்களின் சமோசாவிற்கு வந்திருக்கிறது. பார்ப்பனத் திமிரை சைவ உணவுகளை வைத்தும் நிலைநாட்டலாம் என்றால் இந்துப் பார்ப்பனியம் என்பது எத்துணை பெரிய பாசிசம் என்பதைத் தான் மவுண்ட் ரோடு நமக்கு இந்த உலாவில் அருளியிருக்கிறார். என்ன செய்யப் போகிறீர்கள்?

ராணிப்பேட்டை ரங்கன் என்ற பெயரில் பா.ராகவன் மாதிரியான தேர்வடப் பூணூல் வெறியர்களோ இல்லை சமஸ் போன்ற கருப்பு பார்ப்பன அடிமைகளோ எழுதியிருந்தாலும் இவர்களின் குடுமியும் மறையாது, விஷமும் குறையாது!

– இளங்கோ

சமூக வலைத்தளங்களில் பதியப்படும் கண்டனங்களை எங்களுக்கும் அனுப்புங்கள்!

தி இந்துவுக்கும் உங்களது கண்டனத்தை அனுப்ப வேண்டியது அவசியம்!

பாகிஸ்தான் : அல்லாவின் ஆட்சியில் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்கள்

3

பாகிஸ்தானைச் சேர்ந்த தப்பஸும் அத்னான் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்டு மனித உரிமை பாதுகாவலராக பணியாற்றுபவர்.

தப்பஸும் அத்னான்
தப்பஸும் அத்னான்

13 வயதில் திருமண செய்யப்பட்டவர் 20 வயதில் 3 குழந்தைகளுக்கு தாயாகவும், 30 வது வயதில் கணவனால் கடுமையாக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதால் மணமுறிவும் பெற்றவர். அப்போது எந்தவித பொருளாதார ஆதரவும் இன்றி துரத்தப்பட்டார்.

5 வருடங்களுக்கு பிறகு, மனித உரிமைகள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டதன் விளைவாக 2013 ல் சகோதரிகள் அமைப்பு அவரால் உருவாக்கபடுகின்றது.

சகோதரிகள் அமைப்பின் மூலமாக “நிலுவையில் உள்ள பல பாலியல் வல்லுறவு குற்றங்கள், ஆணவக் கொலைகள் மற்றும் ஆசிட் வீச்சு வழக்குகள் போன்றவற்றில் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி போலீசிடமும் நீதிமன்றத்திடமும் போராட்டம் நடைபெற்று வருகிறது. முஸ்லீம் நாட்டில் உள்ள ஒரு என்.ஜி.வோவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் இவருக்கு நெல்சன் மண்டேலா – கிராசா மகலேஸ்  புத்தார்வ விருது வழங்கப்பட்டுள்ளது.  ஏகாதிபத்தியங்கள் இவரைப் போன்றவர்களை பயன்படுத்திக் கொள்ளும் அபாயத்தை விட இவர்களைப் போன்ற எளிய மக்களுக்கு மதவெறியர்கள் தோற்றுவித்திருக்கும் அபாயம் தான் முதன்மையானது.

அவருடைய சொந்த வாழ்வில் ஏற்ப்பட்ட அனுபவங்களையும் அவருடைய பகுதிகளில் பெண்களின் நிலையை பற்றியும் அவர் நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார்.

எப்படி உங்களால் சகோதிரிகள் அமைப்பை பாகிஸ்தானில் அமைக்க முடிந்தது?

பாகிஸ்தானில் இருக்கின்ற அமைப்புகள் பெண்களின் பிரச்சினைகளை தவிர்க்கின்றனர். யாரும் பெண்களின் குரல்களை முன்னெடுத்து செல்வதில்லை. இதிலிருந்துதான் பெண்களுக்குக்கான ஒரு அமைப்பு வேண்டும் என்று தோன்றியது.

மேலும் ஆசிட்டால் தாக்கப்பட்ட குழந்தையின் தாயும் நானும் சேர்ந்து பல அமைப்புகளுக்கு சென்று எங்களுக்கு ஏற்பட்ட அநீதியை முறையிட்டோம் அவர்கள் ஆலோசனை மட்டும் கூறினர். மாறாக பதில் நடவடிக்கை எடுக்கவோ, எங்களுக்கு ஆதாரவாக நிற்கவோ தயாரில்லை. உதவுவதாக கூறிய சிலரும் வார்த்தைகளோடு மட்டும் முடித்துக்கொண்டனர். அப்போது பெண்களுக்கென்று ஒரு அமைப்பை ஏன் உருவாக்க கூடாது என தோன்றியது. அதன் வேளிப்பாடே சகோதரிகள் அமைப்பு.

தொடக்கத்தில் 10 லிருந்து 12 வரை மட்டுமே உறுப்பினர்கள் இருந்தனர், பிறகு படிப்படியாக வளர்ந்து எல்லா பகுதிகளிலும் இப்போது உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். பல்வேறு பகுதியிலிருந்தும் சுமார் 1000 பெண்கள்  தங்களின் புகார்களை தெரிவிக்கின்றனர், அதை தீர்க்க முயற்சி செய்கின்றோம்.

உங்களுடைய கோரிக்கைகளுக்கு ஆண்கள் செவி சாய்க்கிறார்களா?

வேறு வாய்ப்பின்றி, செவி மடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையை நாங்கள் உருவாகியுள்ளோம். ஒரு பெண் ஆணுக்கு சம்மாக அமர்ந்து முடிவெடுப்பதும், தீர்வுகள் கொடுப்பதும் ஆண்களால் ஏற்று கொள்ள முடிவதில்லை. இதுவரை நிலவியிருந்த நிலைக்கு நாங்கள் பெரும் சவாலாக இருப்பதால், அதிகப்படியான எதிர்ப்புகளை சந்திக்கின்றோம்.

எங்களை போன்ற பெண்களை அடித்து நொறுக்கி, ஒழித்து கட்ட வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் இன்றோ நிலைமை சற்று மாறி தான் விட்டது.

எவ்வாறு பெண்களின் பிரச்சினைகளை இவ்வளவு தீவிரமாக எடுத்து செல்ல முடிகிறது?  

இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு முழுமையாக நம்மை ஈடுபடுத்தும் போது, நம்மிடையே உள்ள தயக்கங்களை அது உடைத்துவிடும். நான் அவர்களுடைய கண்களையும் அவர்கள் எவ்வாறு போராடுகின்றனர் என்பவதையும் மட்டுமே பார்ப்பேன்.

நாம் நம்முடைய உரிமைக்காக போராடுகிறோம் என்ற உணர்வு எங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தையும் சக்தியையும் கொடுக்கிறது.

13 வயதில் திருமண வாழ்க்கையிலிருந்து இந்நிலைக்கு வர பல போராட்டங்களை சந்தித்துள்ளீர்கள் அதைப்பற்றி…

imagesநான் என்னுடைய குழந்தை பருவத்தையும், இளம் பருவத்தையும் அனுபவத்ததில்லை. மாறாக என்னுடைய 20 வயதில் 3 குழந்தைகளுக்கு தாயாக இருந்தேன். என் வாழ்வானது குடும்ப வன்முறைகளாலும், என்னால் தாங்கமுடியாத வேதனைகளாலும் நிரம்பியது. என் பெற்றொர்கள் எனக்கு ஆதரவு கரம் நீட்டவில்லை.

20 வருடங்களுக்கு பிறகு, பல போராட்டங்களை கடந்து நான் என் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றேன். என்னுடைய சகோதரர் எனக்கு கொலைமிரட்டல் விடுத்தார். என் தந்தையோ விவாகரத்திற்கு பதிலாக விசம் குடித்து நீ சாகலாம் என்று கூறினார். எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அநீதிகள் எல்லாம் தெரிந்த என்னுடைய தாய் கூட விவாகரத்து பெறுவதை விட சாவது மேல் என்று விரும்பினார். ஆனால் நான் அவர்களுக்கு எதிராக முடிவெடுத்தேன்.

எனக்கு பொருளாதார உதவியும் சொத்தும் இல்லை. என்னுடைய குழந்தைகளை அவரிடம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

பிறகு பெண்களுக்கான சிறிய நிறுவனத்தில் சேர்ந்தேன் அதில் சமாதானத்தையும் மற்றும் மன்னிப்பதையும் வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதை கற்று கொடுத்தனர். ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் ஒரு பெண் எழுந்து என்னிடம் ”உங்களுடைய குழந்தையின் முகத்தில் அவளின் தந்தையே ஆசிட் விசீனால் அந்த இடத்தில் மன்னிப்பதை பற்றி யோசிப்பீர்களா?” என்றாள். நான் வாயடைத்து நின்றேன்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயாருக்காக உதவி புரிய தொடர்ந்தேன். ஆனால் இந்த கொடூரங்களை செய்தவர்களோ வெளியில் சுதந்திரமாக திரிகின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள அமைப்புகள் இச்சம்பவங்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நாங்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினோம். எங்களுடைய தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக ஆசிட் வீச்சில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் தண்டித்தது. இந்நிகழ்வு எங்களுக்கு மேலும் மன உறுதியை தந்தது மற்ற பிரச்சினைகளையும் போராட்ட வடிவமாக கொண்டுச் செல்லவதற்கு இதுவே அடித்தளமாகியது.

உங்களுடைய அமைப்புக்கு வெளியிலிருந்து பொருளாதார உதவிகள் அல்லது சட்ட ஆதரவு கிடைத்துள்ளதா?

இதுவரையில் நாங்கள் யாரிடமிருந்தும் உதவிகள் பெறவில்லை. சிலர் தானாக முன்வந்து சட்ட ஆலோசனைகள் வழங்குகின்றனர். ஆனால் அவர்களும் முக்கியமான நேரத்தில் உதவுவதற்கு முன் வருவதில்லை. சில சட்ட ஆலோசகர்கள் அல்லது குழுக்களிடம் நாங்களாக உதவி கோரினாலோ உதவி செய்வதோடு, அதனால் கிடைக்கும் அனைத்து பலன்களையும் அவர்களே எடுத்துக்கொள்கின்றனர்.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

sisters-councilநான் வசிக்கும் பகுதிகளில் ஆணவக்கொலைகள், பெண்களை கடத்துவது, பாலியல் வன்முறைகள், நில தகராறு என நிறைய பிரச்சினைகள் உள்ளன. இரு குடும்பதினருக்கு இடையே பிரச்சினையை தீர்ப்பதற்கு தங்களின் பெண் குழந்தைகளை அடுத்தவர் வீட்டிற்க்கு அனுப்புகின்றனர் பெற்றோர்கள் இது போன்ற பிரச்சனைகளும் இங்கு உள்ளன. இத்தகைய பிரச்சினைகள் உலகில் இருக்கத்தான் செய்கின்றன ஆனால் எங்களுடைய கலாச்சார கருத்துக்களோடு ஊறிப்போன இச்சமூகம் பிரச்சினைகளின் தீவிரத்தை அதிக படுத்துகின்றன. நான் என்னுடைய முகத்தை காட்டி பேசுவது கூட எங்கள் கலாச்சாரத்திற்கு எதிரானது.

ஆகையால் எங்கள் பகுதிகளில் பெண்கள் பேசுவது என்பதே பெரிய பிரச்சினை. அவ்வளவு எளிதாக தங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியாது. தந்தைமார்கள் ஒரு விதத்தில் பயமின்றி தங்களின் பிரச்சினைகளொடு எங்களுடைய அமைப்பிற்கு வருகிறார்கள் என்றால், அவர்களுடைய வீட்டு பெண்கள் தங்களின் பிரச்சினைகளை வேறொரு பெண்ணிடம் தான் கூறுகிறார்கள் என்பதால் மட்டுமே.

வெளிநாட்டிலிருந்து பெற்ற இவ்விருது உங்களுடைய வேலைகளுக்கு பயன்படுமா?

தைரியமான பெண் என்ற பட்டத்தை பெற நான் இங்கு வந்திருக்கிறேன். எங்கள் ஊருக்கு திரும்பி போனால்தான் தெரியும் எவ்வளவு கொலைமிரட்டல்கள் எனக்காக காத்திருக்கின்றன என்று. இப்போதே எங்கள் பகுதிகளில் வெளிநாட்டிலிருந்து நான் பணம் பெறுவதாகவோ அல்லது ஏஜெண்டோ என்று நம்ப தொடங்கிவிட்டனர். இதுவரை ஒரு சிறு உதவிக்கூட எங்களுக்கு கிடைத்ததில்லை. எங்களுக்கான திட்டங்களை வகுக்க சில உதவிகளை நான் தொடர்ந்து கொருகிறேன். இதுவரை யாரும் செவிசாய்க்கவும் இல்லை. எங்களுக்கு நீதி கிடைக்க செய்வதற்கே நாங்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளது.

இதுபோன்ற அங்கீகாரம் எங்களுக்கு பொருளாதார ரீதியில் எந்த விதத்திலும் பயன்படுவதில்லை. மாறாக பாகிஸ்தான் மக்கள் இதன் மூலம் எங்களை கருத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் மலாலா சொந்த ஊரான மிங்கோராவை சேர்ந்தவர், 2012 தாலிபன்களின் தாக்குதலுக்கு பின்பு பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாடு அடைந்துள்ளதா?

Unknown
மாணவிகள்

பெண்களுக்கான கல்வி இங்கு தடைசெய்யப்படுவதில்லை. என் தாய், பாட்டி என அனைவரும் கல்வியறிவு பெற்றவர்களே. ஆனால் போர்க்காலங்களில் நாங்கள் எந்த குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதில்லை.

சில மாற்றங்கள் நடைப்பெற்றுள்ளன, அதை மறுக்க முடியாது. கல்வி முறையை மாற்றி அமைக்கவேண்டும் என்பதே என் கருத்து. நம்மை சுற்றி பல மாற்றங்கள் நடந்துக்கொண்டு இருக்கிறது அதற்கேற்றார் போல் நம் பகுதிகளிலும் மாற்றம் ஏற்படவேண்டும்.

பல்வேறு சிரமங்களுக்கு இடையில் எவ்வாறு இப்பகுதிகளில் உள்ள பெண்களின் நிலையை மேம்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்கள்?

முதலில் சமூகத்தில் விழிப்புணர்வு செய்வது முக்கிய கடமையாகும். விழிப்புணர்வின் மூலம் நல்ல கல்வியை கொடுத்து மேம்பாடு அடையச்செய்வதே பிரதானமாகயுள்ளது.

உடனடியாக எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது, முயற்சி படிபடியாக கொண்டுவரும். பெரும்பாலான பெண்களுக்கு தன் உரிமைகளை பற்றி எந்த தெளிவும் இல்லாமல் இருக்கிறார்கள். இதன் முலம் அவர்களுடைய உரிமைகளை பற்றி விழிப்புணர்வும் மேலும் அதற்காக போராட செய்வதும் எங்களின் தலையாய கடமையாகும்.

நன்றி: அல்ஜசீரா, தமிழாக்கம்: கலா.
Pakistan’s Sister’s Council: ‘Men have to listen to us’

அ.தி.மு.க ரவுடிகளால் சிதைக்கப்பட்ட மாணவி, எரிக்கப்பட்ட வீடு – படங்கள்

0
Jpeg

மாணவியை சிதைத்து வீட்டை தீக்கிரையாக்கியஅ.தி.மு.க குண்டர்கள்

Jpeg

பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டு!

  • குறிஞ்சிப்பாடி – தையல்கொணாம்பட்டினத்தில் 10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ மீது பாலியல் வன்முறை! வீடுகள் சூறை – தீக்கிரையாக்கம்!
  • அ.தி.மு.க ரவுடிகள் மணிகண்டன், செல்வகுமார், வைரமுத்து கும்பல் வெறியாட்டம்
  • அ.தி.மு.க கிரிமினல்களை சட்டம் தண்டிக்காது!

மக்கள் மன்றத்தில் நிறுத்தித் தண்டிப்போம்

மக்கள் அதிகாரம், கடலூர்
தொடர்புக்கு – 80008 15963

மாணவியின் அருகில் அவரது தாய்!

தாக்குதல் நடத்தப்பட்ட பசுமை வீடு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

எரிக்கப்பட்ட ஆவணங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

போராட்டத்தில் ஜெயஸ்ரீ குடும்பம்

Jpeg

Jpeg

Jpeg

தகவல்

மக்கள் அதிகாரம்,
கடலூர்

ஐ.டி. துறையில் தொழிற்சங்க உரிமை ! சாதித்தது பு.ஜ.தொ.மு

3
ச்ச்

மிழகத்தில் உள்ள அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தக் கோரி கடந்த ஜனவரி 2015 இல் பு.ஜ.தொ.மு. ஐ.டி. ஊழியர்கள் பிரிவின் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு (W.P.No. 4422/2015) தொடுத்திருந்தோம். இவ்விசயத்தில் உடனடியாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று 23,பிப்ரவரி 2015 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில் 30, மே 2016 அன்று தமிழக அரசு கீழ்க்கண்ட முடிவுகளை அறிவித்துள்ளது.

  1. அனைத்து ஐ.டி. / ஐ.டி.இ.எஸ் (தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகள்) நிறுவனங்களுக்கும் எல்லா தொழிலாளர் சட்டங்களும் பொருந்தும்.
  2. எந்த ஐ.டி/ஐ.டி.இ.எஸ் நிறுவனமும், தொழில் தாவா சட்டம் 1947 இலிருந்து விலக்குப் பெறவில்லை.
  3. ஐ.டி. ஊழியர்கள், தொழிற்சங்கம் அமைத்துக்கொள்ள எவ்விதத் தடையும் இல்லை
  4. ஐ.டி. ஊழியர்கள், தொழில்தாவா சட்டம் 1947இன் ஷரத்துக்களின்படி தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்.
  5. வேலை நீக்கம் / ஆட்குறைப்பினால் பாதிக்கப்பட்டோர் தொழிலாளர் துறை அலுவலர் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம்.

சங்கம் அமைக்கும் உரிமையையும், தொழிலாளர் சட்டத்தின் கீழ் நமது பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்பதையும் தமிழ் நாடு அரசு தெளிவாக அறிவித்து விட்டது. எனவே அனைத்து ஐ.டி./ஐ.டி.இ.எஸ் ஊழியர்களும் பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட நமது உரிமைகளை நிலைநாட்ட சங்கமாகத் திரண்டிட அழைக்கின்றோம்.

இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சட்டரீதியான வழிகளில் நாம் நிவாரணம் தேடவும், நமது உரிமைகள் அனைத்தையும் நிலைநாட்டவும் பு.ஜ.தொ.மு. – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு சங்கத்தில் இணையுமாறு அழைக்கின்றோம்.
இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சட்டரீதியான வழிகளில் நாம் நிவாரணம் தேடவும், நமது உரிமைகள் அனைத்தையும் நிலைநாட்டவும் பு.ஜ.தொ.மு. – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு சங்கத்தில் இணையுமாறு அழைக்கின்றோம்.

கடந்த 25 ஆண்டுகளில் ஐ.டி. துறை மிகப் பெரும் அளவில் வளர்ந்து இந்தியா முழுவதிலும் 30 லட்சம் ஊழியர்களைக் கொண்டதாகப் பரிணமித்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கொத்தடிமைகளாக, நிர்வாகம் நினைத்த நேரத்தில் தூக்கி எறியப்படுபவர்களாக, கடுமையான பணிச்சுமையோடு உழைக்கின்றனர். நூற்றுக்கணக்கான தற்கொலைகளும், மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களும் சூழ்ந்த நிலைதான் தொடர்கின்றது. இவர்களின் பணிப்பாதுகாப்போ, சட்டப்பூர்வ உரிமைகளோ, சங்கமாய்த் திரளும் உரிமையோ உண்டா இல்லையா என்ற கேள்விக்கு விடை கூடத் தெரியாதபடிக்கு அரசும், ஐ.டி. நிறுவன முதலாளிகளும் பார்த்துக்கொண்டனர். இந்த நிலையில் 2014 டிசம்பர் இறுதியில் டி.சி.எஸ். நிறுவனம் 25 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப்போகும் செய்தி வெளியானது. அப்போது சென்னை ஐ.டி. நெடுஞ்சாலையில் இந்த அநீதிக்கெதிரான பிரச்சாரத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முன்னெடுத்தது. இந்தியாவின் முதல் ஐ.டி. ஊழியர்க்ள் சங்கத்தை ஜனவரி 10, 2015 அன்று பு.ஜ.தொ.மு. ஆரம்பித்தது. இச்சங்கம்தான் டிசிஎஸ் உள்ளிட்ட அனைத்து ஐ.டி. நிறுவன்ங்களிலும் தொழிலாளர் சட்டங்கள், குறிப்பாக தொழில் தாவா சட்டம் 1947 பின்பற்றப்பட வேண்டும் என்பதை அறிவிக்கக் கோரி ஜனவரி 19, 2015 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போட்டது. இவ்விசயத்தில் உடனடியாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று 23,பிப்ரவரி 2015 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

NASSCOM - 25 வது ஆண்டு நிறைவு விழா
NASSCOM – 25 வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற மோடி

நீதிமன்ற உத்தரவை அரசு உடனடியாக அமல்படுத்திவிடவில்லை. அதற்கு சட்டப்பூர்வ வழிகளில் பு.ஜ.தொ.மு.வின் இடையறாது போராடியுள்ளது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி 24 மார்ச், 2015 அன்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலரிடம் மனு கொடுக்கப்பட்டது. இம்மனுவை நினைவூட்டி மே 2015 இல் மீண்டும் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அரசு அசைந்து கொடுக்கவில்லை. மனு மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டு, பதில் இல்லை. மேல் முறையீட்டிலும் அரசு பதில் தரவில்லை. 14 மாதங்களாக அரசு எந்தப் பதிலும் தராத நிலையில் ஏப்ரல், 2016 இல் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். இம்மாத ஆரம்பத்தில் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த சூழலில்தான் அரசு தற்போது தனது முடிவை அறிவித்துள்ளது.

தங்களின் நலன்களைக் காப்பதற்காக நாஸ்காம் சங்கத்தை வைத்திருக்கும் ஐ.டி. நிறுவன முதலாளிகள், ஐ.டி. ஊழியர்கள் சங்கம் வைக்க உரிமை இல்லை என்றும், சங்கம் வைத்தால் வேலை போய்விடும் என்றும் கட்டுக்கதைகளை உலவ விட்டுருந்தனர். மேலும் தங்கள் நிறுவனங்களை தொழிலாளர் சட்டங்கள் கட்டுப்படுத்தாது என்று திமிரோடு நடந்துகொண்டனர். அரசோ கள்ள மவுனம் சாதித்தது. பு.ஜ.தொ.மு.வின் இடையறாத முயற்சியின் காரணமாக அரசின் மவுனம் கலைக்கப்பட்டுள்ளது. ஐ.டி. ஊழியர்களின் உரிமைகள் யாவும் தெளிவாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன.

எனவே ஐ.டி. ஊழியர்கள் இனி அச்சமின்றி சங்கமாகத் திரளும்படி கேட்டுக் கொள்கிறோம். ஆட்குறைப்பினாலோ, சட்டவிரோத வேலை நீக்கத்தாலோ பாதிக்கப்பட்டுள்ள ஐ.டி. துறை ஊழியர்கள் அனைவரும் எங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சட்டரீதியான வழிகளில் நாம் நிவாரணம் தேடவும், நமது உரிமைகள் அனைத்தையும் நிலைநாட்டவும் பு.ஜ.தொ.மு. – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு சங்கத்தில் இணையுமாறு அழைக்கின்றோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஐ.டி. ஊழியர்கள் பிரிவு

தொடர்புக்கு:
combatlayoff@gmail.com
9003198576

————————————————————————————-

New Democratic Labour Front – IT Employees Wing

Press Release

In reply to a petition submitted by NDLF in January 2015 (W.P.No. 4422/2015) , a subsequent order by Madras High Court and after repeated reminders, Tamil Nadu government has announced the following decisions regarding implementation of labour laws in the IT sector.

  1. All the labour legislations are applicable to all the IT and ITES companies.
  2. IT company employees are free to form trade union.
  3. They can redress their grievances through evoking the provisions of Industrial Disputes Act 1947.
  4. No IT industry has been exempted from the provisions of the Industrial Disputes Act 1947.
  5. Affected employees can approach the conciliation officers to redress their problems regarding retrenchment or termination or for any other grievances.

With this confirmation of Tamil Nadu government about the rights of IT employees, we call upon all IT employees to organize themselves as a Union under NDLF – IT Employees Wing.

IT/ITES industry employs more than 30 lakh employees now. For the past 30 years of its existence, the corporate of this sector denied all basic and democratic rights to employees resorting to illegal hire & fire practices, denial of right to form trade union, discriminatory rating systems, irregular working hours, and so on. This had major impact on the health and well being of IT employees, leading to mental health issues, break down of family life and even suicides.

In January 2015, following the illegal lay off of 25,000 employees by Tata Consultancy Services, NDLF conducted demonstrations and campaigns leading to the formation of IT Employees Wing, which is the first trade union of IT employees in India. Subsequently, NDLF filed a petition with the Labour Department requesting action to prevent such illegal practices by IT companies. As no action as taken on the petition, a PIL was filed at the Madras High Court by NDLF, on which the court issued an order to Tamil Nadu government to decide whether IT industry would be covered under the Industrial Disputes (ID) Act or not.

However, the state government did not take any action on the order. Only after repeated efforts by NDLF the present decision is announced.

  1. A petition was submitted to the Secretary to Government, Labour and Employment department on 24-03-2015.
  2. A reminder to the above petition was sent in May 2015. The government refused to budge.
  3. A petition filed under RTI Act demanding to know the action taken on the petition evoked no response. An appeal also failed to produce any results.
  4. As the government did not act on the High Court’s order even after 14 months, a contempt petition was filed in Madras High Court which is scheduled to come up for hearing soon.

Only after all this, Tamil Nadu government has come forward to confirm the rights of IT employees. This shows that even to assert the basic rights of employees, it requires sustained and organized efforts by NDLF to move the government machinery into action.

Moreover, the corporate in IT sector have been circulating rumours such as ‘IT employees have no right to form a trade union’, ‘joining an union will lead to job loss’ ‘labour laws are not applicable to IT industry’ and so on. However, they have formed their own “union” NASCOM to collude with each other and lobby for their rights. They behave in utter disregard of the Labour laws. The government turned a blind eye to these illegal practices till NDLF stepped into assert the rights of employees.

Now, the rights of IT employees have been confirmed by Tamil Nadu government in no uncertain terms. We invite IT employees affected by retrenchment or termination to contact us for further legal and administrative action against the companies.

We also call upon all IT employees to join NDLF IT Employees Wing to assert their rights, redress their grievances.

New Democratic Labour Front – IT Employees Wing

Contact
combatlayoff@gmail.com
9003198576

———————————————————————–

அரசு தந்துள்ள விளக்கம் குறித்து எகனாமிக் டைம்ஸ் டிவியில் தோழர் கற்பக விநாயகத்திடம் பேட்டி எடுத்தனர். அதன் இணைப்பு கீழே:
http://economictimes.indiatimes.com/news/et-tv/tamil-nadu-allows-unions-in-it-sector/videoshow/52671146.cms

__________________________________________________

A letter from TN Govt to New Democratic Labour Front attached here

Secretariat, Chennai-9

LΑΒΟURΑΝD ΕΜΡLΟΥΜΕΝΤ DΕΡΑRΤΜΕΝΤ

Letter No.9172/K2/2015 – 6, dated 30.05.2016

From

Thiru. Kumar Jayant, I.A.S.,
Principal Secretary to Government.

To

iru. S.Karpagavinayagam,
Organiser,
Puthiya Jananayaga Thozhilalar Munnani,
No.110/63, NSK Salai,
Kodambakkam, Chennai – 24.

Sir,

Sub: IT Companies – Enforcement of Labour Law in IT Companies and demands of Puthiya Jananayaga Thozhilalar Munnani – report called for — Reg.

Ref: Your petition dated 24.03.2015.

I am directed to invite attention to your petition in the reference cited wherein you have raised certain demands and requested appropriate action of the government.

  1. On the above demands I am to inform you as follows:

(i) All the Labour Welfare Legislations are applicable to all the IT and ITES companies and they are being monitored by the enforcement officials for proper implementation of Labour legislations and thereby ensures the welfare of the employees. The IT company employees also are free to form trade union and can redress their grievances through evoking the provisions of Industrial Disputes Act 1947. It is also informed that, no IT industry has been exempted from the provisions of Industrial Disputes Act 1947. The affected employees can approach the conciliation officers to redress their problems regarding retrenchment or termination or for any other grievance. Any trade union with the IT employees as its members can rise industrial disputes under section 2(k) of the Act and seek remedy.

(ii) The Inspectors of Labour are inspecting IT companies. In case of any contravention of the provisions of the Act, IT employee may approach the concerned conciliation officer through their union and file an Industrial Dispute against the erring employer.

(iii) It is also informed that routine inspections are being carried out by the Inspectors. In case of emergent situation, a team of officials will inspect the IT firm depending upon the magnitude of the problem. As a trade union, the union will be informed by its members regarding any grievance. The trade union can represent it to Labour Department / Government.

(iv) The Government cannot organize public hearing, since alternate remedies through different forums are statutorily available. It is open for the employee and trade union to approach appropriate forums and seek remedy.

(v) It is pertinent to note that already 9 IT employees have sought remedy for their non-employment issue under the Industrial Disputes Act, 1947. Hence no further action in this regard is required at, Government level.

Yours faithfully,

for Principal Secretary to Government