privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுவிஷ்ணுபிரியா மரணம் - கடலூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

விஷ்ணுபிரியா மரணம் – கடலூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

-

நேர்மையாய் வாழ வேண்டுமாயின்
வதைபடுதலும், மரியாதையை இழப்பதும்
எந்நேரமும் போராடுதலும்,
இடறி விழுவதும், முட்டி மோதுவதும்
அவமானப்படுதலும் எந்நேரமும் இழப்புக்கு உள்ளாவதும்
தவிர்க்க முடியாதவை
மீண்டும் எழுந்து போராடு

– லியோ டால்ஸ்டாய்

விஷ்ணு பிரியா தூக்கு! முத்துக்குமாரசாமி தற்கொலை! சுடுகாட்டில் உறங்கிய சகாயம்!

விஷ்ணுபிரியா
கொலை செய்தது போலீசு  கைது செய்து உள்ளே தள்ளு!

ர்மமில்லை
சந்தேகமில்லை
கொலை செய்தது போலீசு
கைது செய்து உள்ளே தள்ளு!

ரவுடியும், போலிசும் கூட்டாளி
ஜட்ஜ் அவனுக்கு பங்காளி
போராடுபவனுக்கு எதிராளி
ரவுடி கையில் சட்டம் ஒழுங்கு
போராடுபவனுக்கு போலிசு விலங்கு

சி.பி.சி.ஐ.டி என்பது லேடி போலீசு
சி.பி.ஐ என்பது மோடி போலிசு
லேடி போலிசும், மோடி போலிசும்
மூடிமறைக்கும் கைக்கூலிகள்

நாட்டில் நடப்பது ரவுடிகள் ஆட்சி
நாட்டில் நடப்பது போலீசு ஆட்சி
நம்ப மறுத்தால் இதுவே சாட்சி!

நம்பாதே! நம்பாதே!
காவல் துறையை நம்பாதே!
நீதித்துறையை நம்பாதே
ஆளு வச்சி கொல்லுறான்
அடிச்சி தூக்குல மாட்டுறான்!

காவல் துறையில் படுகொலை
நீதித் துறையில் படுகொலை
வேளாண்மை துறையில் படுகொலை
கனிம வளத்துறையில் படுகொலை
கல்வித் துறையில் படுகொலை

தோற்றுப்போச்சு! தோற்றுப்போச்சு
அரசமைப்பே தோற்றுப் போச்சு
நாட்டையும், மக்களையும் பாதுகாக்க
அதிகாரத்தை கையிலெடுப்போம்!

என்ற முழக்கங்களோடு கடலூரைச் சேர்ந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் மரணத்தின் பின்னணியை அம்பலப்படுத்தி கடலூரில் பிரச்சார இயக்கமும், 09-10-2015 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தை பொறுத்தவரையில், ஆரம்பம் முதலே எல்லாக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுவது, நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறுவது என்றளவில் மட்டுமே வினையாற்றினார்கள். ஒரு இளம்பெண் அதிகாரி நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு கொங்கு வேளாளர் சாதியைச் சேர்ந்த கல்வி முதலாளிகள், சாதி வெறியர்கள், ரவுடிகள், கொலைகாரர்களின் கொட்டத்தை அடக்கி வைக்கப் போராடிக் கொண்டிருந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சார்ந்த தலித் சமூகத்தில் பிறந்த பொறியியல் மாணவர் கோகுல் ராஜ், சாதி மாறி நட்பு வைத்த ஒரே காரணத்திற்காக கொங்கு வேளாள சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் நடந்தது.

யுவராஜ் - கோகுல்ராஜ் - விஷ்ணுபிரியா
சம்பவத்தில் முதல் குற்றவாளி வாட்சப் யுவராஜ்

இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளி பயங்கரவாதி யுவராஜ். இவரை பிடிக்கும் பொறுப்பும் இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பும் விஷ்ணுபிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு முன்பாக ஆயில் மில் முதலாளி ஜெகந்நாதன் கொலை வழக்கிலும், யுவராஜூக்கும், கூலிப்படைத் தலைவன் கொலைகாரன் பேச்சி முத்துவுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து இந்த வழக்கின் விசாரணையும் விஷ்ணு பிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்கண்ட இரு வழக்குகளிலும் மேலதிகாரிகளின் உத்தரவினால் (ஐ.ஜி.பி சங்கர், எஸ்.பி செந்தில்குமார், எஸ்.பி ராஜ்) தவறான குற்றவாளிகளைக் கைது செய்து வழக்கை முடித்துவிட வேண்டும் என்ற உத்தரவை ஏற்க மறுத்து ஆரம்ப முதலே அவர்களோடு டி.எஸ்.பி விஷ்ணு பிரியா போராடியதை கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி, வழக்குரைஞர் மாளவியாவின் பேட்டியில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

முடிவாக காவல் துறையிலும், அதற்கு வெளியிலும் உள்ள அரசியல், கிரிமினல்கள், சாதிவெறிக் கிரிமினல்களின் கூட்டுச்சதியே இந்த மரணத்தில் மேலாதிக்கம் செலுத்துகிறது என்பதுதான் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை. சட்டம், நீதி, நேர்மை எல்லாம் எங்கள் மசுருக்கு சமம் என்று சவால் விட்டு இருக்கிறார்கள் இந்த முக்கூட்டு கிரிமினல்கள்.

உள்ளுர் ஆளும்கட்சி சாதிவெறியர்கள், அரசியல் கிரிமினல்களின் கைக்கூலிகளாக அதிகார வர்க்க கிரிமினல் எஸ்.பி செந்தில்குமார், ஐ.ஜி.பி சங்கரிடமும், எஸ்.பி விஷ்ணு பிரியாவுடன் ஏற்பட்ட மோதல்களையும், லஞ்சம் வாங்க மறுப்பதையும் பேசியுள்ளார். இவை மட்டும் அல்லாமல் கல்லாக் கட்டும் பேர்வழிகளான ஐ.ஜி.பி சங்கர், எஸ்.பி செந்தில்குமார் இருவருக்கும் மாதாமாதம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து தரவேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டு இருக்கின்றனர்.

விஷ்ணுபிரியா தற்கொலை கடிதம்
விஷ்ணுபிரியா தூக்கு தொடர்பாக காவல்துறையை கண்டித்து கடலூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

இதை ஏற்க மறுத்து முரண்பட்ட வேளையில் காவல் துறையால் நடத்தப்படும் பல அதிகாரிகளின் கூட்டத்திலும், போலீசு வாக்கி டாக்கியிலும் “நீ போலிசு வேலைக்கே தகுதியில்லை” என்று மரியாதைக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளனர், இந்த காக்கி கிரிமினல்கள். இப்படிப்பட்ட அதிகாரவர்க்க கிரிமினல்களின் அடக்குமுறையால் தான் காவல் துறையிலேயே 250-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக புள்ளி விவரம் தருகிறது தமிழ்நாடு காவல்துறை.

விஷ்ணு பிரியாவின் வீட்டுக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன், கனிமொழி, வைகோ உள்ளிட்ட பலரும் பொதுவில் ஆறுதல் கூறுவது, கண்டனம் தெரிவிப்பது என்றதோடு நிறுத்திக் கொண்டனர். விஷ்ணு பிரியாவின் மரணத்திற்கு பின்புலமாக செயல்பட்ட சாதி வெறியர்கள், அதிகார வர்க்க கிரிமினல்களை ஒரு வார்த்தை கூட விமர்சித்து பேசவில்லை.

காவல்துறை மட்டுமல்ல உள்துறை செயலர் ஞானதேசிகனின் உறவினர்களும், வேளாண்மைத்துறை பொறியாளர் முத்துக்குமார சாமியின் தற்கொலை, கிரானைட் கொள்ளை விவகாரத்தில் சட்ட ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ் இந்த அரசை, போலீசை நம்பாமல் சுடுகாட்டிலேயே படுத்துறங்கி செத்த பிணத்தின் மண்டை ஓடுகளிலும், எலும்புக் கூடுகளிலும், நீதியையும், ஆதாரங்களையும் தேடி கொண்டிருக்கிறார்.

இந்த அரசுக் கட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது என்று எமது மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் அரசுக்கு உள்ளேயே இருந்து உயர்பொறுப்பில் உள்ளவர்களே வாழ்வா? சாவா? என்று போராடி கொண்டிருக்கின்றனர்.

ஆம், இது தனிப்பட்ட முத்துக்குமார சாமி, விஷ்ணு பிரியா, சகாயம் ஆகியோரின் தனிப்பட்ட விவகாரம் அல்ல அரசுக்குள்ளும், அரசுக்கு வெளியேயும் உள்ள நேர்மையாளவர்களுக்கும், நேர்மையற்ற மக்கள் விரோதிகளுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்.

காவல்துறை, நீதித்துறை, கல்வித்துறை, கனிம வளத்துறை, மருத்துவத் துறை என அரசின் அனைத்து கட்டுமானத் துறைகளும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதிலாக சிதைக்கப்பட்டு அதிகார வர்க்க குற்ற கிரிமினல்களின் கையில் சிக்கி சீரழிந்துள்ளதோடு மட்டும் அல்லாமல் தோற்றுப்போய் மக்களுக்கே எதிரான நிறுவனங்களாக மாறிப் போனதன் விளைவே விஷ்ணுபிரியாவின் இறப்பு என்பதை விளக்கியும், இதற்குத் தீர்வு மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதே என்று விளக்கியும் நகரம் எங்கும் வீடு வீடாகவும், பேருந்துகளிலும் எமது மக்கள் அதிகார தோழர்கள் பிரச்சாரம் செய்தனர்.

09-10-2015 அன்று காலையில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை வழக்குரைஞர் சங்கத்தலைவர் வேலுகுபேந்திரன் பேசுகையில், “மக்களை பாதுகாக்கத்தான் அரசு. அது மக்களுக்காகத்தான் செயல்பட வேண்டும். அந்த மக்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக் கொள்ள எந்த ஆயுதத்தையும் எடுததுக் கொள்ளலாம் என்று சட்டமே சொல்கிறது. அரசே இனி உன்னால் முடியாது. நாட்டை ஆளப்போவது மக்கள் அதிகாரமே” என்று முடித்தார்.

மக்கள் வாழ்வதாரப் பாதுகாப்பு இயக்கத்தின் லோகபரணி பேசுகையில், “விஷ்ணுபிரியாவுக்கு காதலன் யார்? கோயில் குருக்களா, வக்கீல் மாளவியாவா? என்று ஆள்செட்டப் செய்யும் மாமாவாக மட்டுமே சி.பி.சி.ஐ.டி போலிசும், அரசும் செயல்படுகிறது. ஒரு நேர்மையான அதிகாரியை இழந்துவிட்டோமே என்ற வருத்தம் அரசுக்கு துளிகூட இல்லை. கடந்த 7 ஆண்டுகளாய் சாயப்பட்டறையை தடுக்க போராடி வருகிறோம். எங்கள் அனுபவத்தில் ஒரு நேர்மையான அதிகாரியை கூட பார்க்க முடியவில்லை” என்றார்.

வெண்புறா பொது நல பேரவை தலைவர் குமார் பேசுகையில், “இனி மனுகொடுப்பது, மண்டியிடுவது தேவையில்லை. நிலைமைகள் கைமீறி போகும்போது சட்டமன்றம், தலைமை செயலகம், கவர்னர் அலுவலகம் என்று முற்றுகையிட்டு போராடுவதுதான் தீர்வை நோக்கி இட்டுச் செல்லும்” என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநில இணைச்செயலர் மதிசேகர் பேசுகையில்,  “அதிகாரிகளும், அமைச்சர்களும், ரவுடிகளும் கூட்டு சேர்ந்து தமிழகத்தை கிரிமினல் மயமாக்கி வருகின்றனர். யார் குற்றவாளியோ அவனிடமே மனுகொடுக்கும் அவலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது” என்று அம்பலப்படுத்தினார்.

இறுதியில் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ,  “இந்த அரசின் அனைத்து கட்டுமானங்களும் மக்களைப் பாதுகாக்க வக்கற்று தோற்றுப்போனது மட்டுமல்ல, தன்னை பாதுகாக்கும் அதிகாரியை கூட பாதுகாக்கும் தகுதியிழந்ததன் விளைவுதான் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணமும், முத்துக்குமாரசாமி தற்கொலையும், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் போராட்டமும் நிரூபிக்கின்றன.

இந்த அரசானது ஒரு பழுதடைந்த வாகனம். இதில் மனுகொடுப்பது என்பது உடைந்த பாகங்களை மட்டும் மாற்றுவதற்கு ஒப்பானது. கட்சி மாற்றி ஓட்டு போடுவது என்பது டிரைவரை மாற்றுவதற்கு ஒப்பானது. இங்கு காரும், கார் டிரைவரும், அது போகும் சாலையும் மோசமாக இருக்கும்போது பயணங்கள் எப்படி நல்லமுறையில் போக முடியும். எனவே பயணிகளாகிய அதாவது மக்களாகிய நாம் நம்மை ஆளத் தகுதியற்ற இந்த அரசக்கட்டமைப்பையும், அதில் உள்ள காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அதிகார வர்க்க கிரிமினல் கும்பலையும் கேள்விக்குள்ளாக்கி மக்கள் அதிகாரத்தை நிறுவுவதே நமது உடனடிக்கடமை” என்று முடித்தார்.

குறிப்பு:

டி.எஸ்.பி தூக்கிட்டதாக சொல்லப்படும் சம்பவத்துக்கு வருவோம். 16-ம் தேதி உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு, சம்வத்தன்று காலையில் திருச்செங்கோட்டில் போக்குவரத்துக் காவலருக்கும், பள்ளி ஆசிரியருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் போலிசு ஆசிரியரை அடித்த சம்பவத்தில் ஏற்பட்ட சாலை மறியல் மற்றும் வினாயகர் சிலை ஊர்வலத்தின் பாதுகாப்பு என்று இருவேலைகளையும் முடித்து விட்டு 2.48 மணிவரை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கீழக்கரை டி.எஸ்.பி-யும், தன் தோழியுமான மகேஸ்வரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் நாமக்கல் எஸ்.பி செந்தில் குமாரிடமிருந்து போன் அழைப்பு வந்துள்ளது.

இதற்குப் பின் 3.00 மணிவாக்கில் மகேஸ்வரி மீண்டும் தொடர்பு கொள்ளும்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின் 5 மணிக்கு விஷ்ணு பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தொலைக்காட்சி செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார் மகேஸ்வரி.

5.00 மணிக்கு வேலைக்கு சென்ற வீட்டு வேலைக்காரம்மா ஜன்னல் வழியே பார்த்த பின்தான் தெரியும் என்கிறது போலிசு.

இதிலிருந்து நமக்கு எழும் கேள்விகள்

சம்பவ இடத்தின் கூரை 12 அடிக்கும் அதிக உயரத்தில் உள்ளது.  இந்த நீண்ட இடைவெளியில் குண்டான டி.எஸ்.பி எப்படி துப்பட்டாவை மாட்டியிருக்க முடியும்?

இந்த வளாகத்திற்குள் போலிசு தவிர மற்ற நபர்கள் யாரும் அவ்வளவு எளிதில் நுழைய முடியாது.

மிகக் குறுகிய நேரத்தில் 9 அல்லது 12 அல்லது 15 பக்க கடிதங்கள் எழுத வாய்ப்பே இல்லை.

நேரில் வந்த எஸ்.பி செந்தில்குமார் ஒரு உயர் அதிகாரி தற்கொலை செய்து கொண்டதை நீதித்துறை அதிகாரம் கொண்ட டெபுடி தாசில்தார், அல்லது மாஜிஸ்ரேட் முன்னிலையில் தான் அறையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற சட்ட நடைமுறை கடைபிடிக்கப்படாமல் தான் மட்டுமே ஆய்வு செய்ததன் நோக்கம் என்ன?

தகவல்
மக்கள் அதிகாரம், கடலூர்
8810815963

படங்கள் : நன்றி thenewsminute.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க