privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்தஞ்சை, தருமபுரி, கருவேப்பிலங்குறிச்சி - மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள்

தஞ்சை, தருமபுரி, கருவேப்பிலங்குறிச்சி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள்

-

1. கருவேப்பிலங்குறிச்சி

மூடு டாஸ்மாக்கை!
போடு பாழடைந்த பவழங்குடி, தேவங்குடி சாலையை!

என்ற முழக்கத்தின் கீழ் கருவேப்பிலங்குறிச்சியில், விவசாயிகள் சங்கத் தலைவர் A நந்தகுமார் தலைமையில் மக்கள் அதிகாரம் சார்பாக அக்டோபர் 7, 2015 அன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

karuveppilangkurichi-people-power-demo-posterஅவர் தனது தலைமை உரையில் “டாஸ்மாக்கை மூடுவதற்காக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்துள்ளோம். கிராமப் புற சூழலே சீரழிந்துள்ளது, மேலப்பாளையூர் கிராமத்திலே டாஸ்மாக் கடையை மூட சொல்லி ஊர் மக்கள் சார்பாக போராட்டம் நடத்தினோம். அந்த டாஸ்மாக் கடையை சேல்ஸ்மேன் முன்னதாகவே மூடிவிட்டு சென்று விட்டான். மீண்டும் அக்கடையை திறக்கக் கூடாது என்று ஊர்மக்கள் சார்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாகவும் போராட்டம் நடத்தினோம்.

அந்தக் கடையில் ஆளே இல்லை. ஆனால் போலீசார் எங்கள் மீது 307 பொய் வழக்கு பதிவு செய்தனர். போராட்டம் நடத்த ஒவ்வொரு மக்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் போராட்டம் நடத்தியதால் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

நாங்கள் சிறைக்கு போனதும் எங்களை ஒரு அக்யூஸ்ட்டை போல நடத்தினர். நாங்கள் சிறைக்குள் உணவு உண்ணமாட்டோம் எனக் கூறினோம். காரணம் கடை எங்கள் ஊரில் இருக்கக் கூடாது. வருவாய் அதிகாரிகள் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினோம். தாசில்தார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். எங்கள் கோரிக்கையை கூறினோம், டாஸ்மாக் மூடினோம்” என்று பேசினார்.

people-power-karuveppilankurichi-demo-1மக்கள் அதிகாரம், விருத்தாசலம் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தனது கண்டன உரையில், “காவனூர் கடையை மூடச் சொல்லிதான் இந்த ஆர்ப்பாட்டம். டாஸ்மாக்கை பற்றி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் போராட்டம் நின்று போகும் என்று நினைத்தனர். ஆனால் அடுத்த 10 நிமிடத்தில் கோயம்புத்தூர், விருத்தாசலம், திருச்சி, விழுப்புரம் போன்ற இடங்களில் போராட்டம் பற்றி படர்ந்தது. மது பாட்டிலை உடைத்தனர், சாணியால் அடித்தனர், மலத்தால் அடித்தனர், தக்காளியால் அடித்தனர், முட்டையால் அடித்தனர். ஆகவே மக்கள் போராட்டத்தை அடக்கு முறையால் தடுக்க முடியாது என்ற நிரூபித்து காட்டினார் மக்கள்.” என்று குறிப்பிட்டார்.

கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இளங்கோவன் பேசும் போது, “டாஸ்மாக் இருப்பதால் குடிக்கத் தூண்டுகிறது. இதே போல ஊரில் 100 பேருக்கு 98 பேர் குடிக்கின்றனர். 2- பேர் குடிக்காதவர். ஆனால் டாஸ்மாக்கை மூட 100% மக்களிடையே ஆதரவு உள்ளது. ஆனால் இதை யார்? மூடுவது, எப்படி மூடுவது எப்பொழுது, மூடுவது என்ற நிலை உள்ளது.  அனைவரும் வீதிக்கு இறங்கி போராடினால் நம்மால் மூட முடியும்.” என்று பேசினார்.

people-power-karuveppilankurichi-demo-2கச்சிராயநத்தத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இளம் விதவை மந்திரகுமாரி பேசியது “டாஸ்மாக்கினால் எங்கள் ஊரில் 105 பேர் விதவைகள். அதில் 80 பேர் இளம் விதவைகள். நாங்கள் அனைவரும் டாஸ்மாக்கு எதிராக போராடி எங்கள் ஊரிலுள்ள கடையை 2 கி.மீ துரம் அகற்றி வைத்தோம்.

எங்களைப் போல உள்ள பெண்கள் இளம் விதவையாக தாலியறுக்குது அரசாங்கம். ஆனா தாலிக்கு தங்கம் கொடுக்குதாம். குடும்பத்தலைவர் செத்தா ஈமச்சடங்குக்கு ரூ 2500 பணம் கொடுக்கிறது, ஆனால் எங்கள் பிள்ளைகளுக்கு ஒழுங்கா கல்வி கொடுக்க வக்கில்ல; எங்களுக்கு வேலை கொடுக்க துப்பில்ல.

போராட்டம் நடத்தினால் தப்பா! நாங்க ரோட்டில் நடந்தா சகுனத் தடை, நாங்க எதாவது கேட்டா வாய் ரொம்ப வளர்ந்துடுச்சின்னு சொல்லுராங்க. இப்போ தேர்தலுக்கு வராங்க. இதுக்கு முன்னாடி யாரும் வரல. இந்த அரசியல்வாதிங்கள நம்பாதிங்க. இவங்க நமக்கு ஒன்றும் செய்ய மாட்டாங்க. அதனால் மக்கள் அதிகாரம் மூலம் போராடுவதற்கு வாங்க.”

T.பாவழங்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிறு தொண்டநாயனார், மருங்கூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜகோபால் இருவரும் காவல்துறை சிறையிலும், வெளியிலும் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைப்பற்றி பேசினர்.

people-power-karuveppilankurichi-demo-3விருத்தாசலம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் அருகதை இழந்த அரசு கட்டமைப்பு பற்றியும் மக்களை ஆள தகுதி இழந்ததையும் தெளிவாக விளக்கி மக்கள் மத்தியில் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினர்

விருத்தாசலம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதேவன், “இது வரை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மக்களுக்காக நடத்திய போராட்டங்களையும் (உதாரணமாக தில்லை கோவில் போராட்டம்) டாஸ்மாக் போராட்டத்தில் காவல் துறையின் நடவடிக்கைக்கு அஞ்சாமலும், உளவு பிரிவு போலிசாருக்கு சவால் விட்டும் நாங்கள் மக்களுக்கு ஆதரவாக போராடியதால் எங்களை மக்கள் நம்புகின்றனர். சமச்சீர் கல்வி போராட்டம், மணல் கொள்ளை போராட்டம், முத்துகுமார் இறுதி ஊர்வல போராட்டம் இந்த போராட்டங்களின் சி.டி-களை காவல்துறையினர் கட்டாயம் குடும்பத்தோடு பார்க்க வேண்டும் அப்பொழுது தான் எங்களை பற்றி தெரியும்.” என்று பேசினார்.

தோழர் ராஜு வழக்கறிஞர், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு

கட்டமைப்பு நெருக்கடி பற்றி:

சட்டத்தை மதிக்காத அதிகாரவர்க்கம் பற்றியும், மாஃபியாக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கூலிப்படையாக செயல்படும் காவல் துறையைப் பற்றியும் விளக்கி, அரசு எந்திரம் துருப்பிடித்து, மக்கிப் போய், மக்களுக்கு உபயோக மற்றதாக மாறிவிட்டது. இதனை அடித்து வீ‘ழ்த்தி மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

people-power-karuveppilankurichi-demo-4காவனூர் டாஸ்மாக்கையும் கருவேப்பிலங்குறிச்சி டாஸ்மாக்கையும் இழுத்து மூடவும், பாழடைந்த பவழங்குடி ரோட்டை போடவும் மக்கள் அதிகார அமைப்பின் ஆதரவோடு அணிதிரண்டு போராடி 15 நாள் கைதாகி சிறை செல்ல இப்பகுதி மக்கள் பெயர் கொடுத்தால் இன்னும் 24 to 48 மணி நேரத்திற்குள் டாஸ்மாக்கை மூடி இந்த ரோட்டையும் போட்டுகாட்டுகிறோம் என்று மக்களின் சார்பாக அரசுக்கு சவால் விடுத்தார். விருத்தாசலம் மக்கள் அனைவரும் போராட்டத்திற்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சிறைக்கு உங்கள் ஊரில் உள்ளவர்கள் சென்று வந்துள்ளார்கள் அவர்களிடம் சிறை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வீட்டிற்கு ரூ 100 வரியாக கொடுத்து உதவுங்கள்.

அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்துதல் :

தமிழகத்தில் மிகப் பெரிய தி.மு.க, பா.ம.க, வி.சி.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதிகப்படியான உறுப்பினர்களை வைத்துக்கொண்டு உங்கள் பலத்தால் முதலில் டாஸ்மாக் கடையை மூடிக்காட்ட வேண்டியதுதானே? ஏன் மூடவில்லை?

ஏன் சாலை போடவில்லை? ஏன் நோட்டீஸ் கொடுப்பதோடு போராட்டத்தை நிறுத்திக்கொள்கிறீர்கள்?

மக்களுக்காக பாடுபடுவேன் என்று கூறுகிற நீங்கள் செருப்பாக தேய்கிறேன் என்று கூறுகிற நீங்கள் மக்களுக்காக போராடி டாஸ்மாக்கை மூடி சிறைக்கு செல்வதுதானே! ஏன் சிறைக்கு செல்ல தயங்குகிறீர்கள்?

நீங்கள் தான் மிகப் பெரிய கட்சியாச்சே மக்கள் மத்தியில் மக்கள் நலனுக்காக சிறை செல்ல தயாரா? தயார் என்று கூறுங்கள், நாங்கள் ஓட்டுபோடுவது பற்றி யோசிக்கிறோம்.

அன்புமணி சொல்கிறார் எனக்கு ஓட்டு போட்டு முதல்வராக்குங்கள், முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறுகிறார். வடிவேலு படத்திலே ஒரு காமெடியில் மலையை யாராவது தூக்க முடியுமா என கேள்விக்கு நீங்கள் அதைத் தூக்கி தோளில் வைத்தால் நான் தூக்கிச் செல்கிறேன் என்று ஒருவர் கூறுவார். அதைப் போல ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து முதல்வராக்கினால் அவர் மதுவிலக்கை அறிவிப்பாராம். இது எப்போ நடப்பது? ஆகையால் தான் சொல்கிறோம் ஓட்டுக் கட்சிகளை நம்பி பலனில்லை.

மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதன் மூலம்தான் இதனை சாத்தியமாக்க முடியும். போராட வக்கில்கள் இருக்கிறார்கள் என்று நினைக்காமல் நாம் இறங்கி போராடினால் தான் ரோடை போட முடியும். நெல், கரும்புக்கு விலை உயர்த்த முடியும். நாம் நிம்மதியாக ஊரில் வாழ முடியும்.

ஆர்ப்பாட்டத்தின் விளைவு :

நாம் இந்த கோரிக்கையை வைத்து ஆர்ப்பாட்டம் என்று என்று அறிவித்திருந்ததால் மாலை 3 மணிக்கு கருவேப்பிலங்குறிச்சி பஸ்டாப்புக்கு அருகில் இருந்த டாஸ்மாக்கை மூடிவிட்டனர். சூப்பர்வைசரும் சேல்ஸ்மேன் அடுத்து காவனூரில் உள்ள டாஸ்மாக்கை மூடினர். மக்கள் அதிகாரத்தின் மேல் உள்ள அரசின் அச்சம் வெளிப்பட்டது. நம் முழக்கத்தை பார்த்து மிரண்டு போய் நின்றது இந்த அதிகார வர்க்கம்.

ஆர்பாட்டத்தினால் டாஸ்மாக்கின் பாதுகாப்பு நிலை :

நம் ஆர்ப்பாட்டத்தினால் முன்பு டாஸ்மாக் காவலில் இருந்த 2 போலிஸ் மாறி தற்பொழுது 5 காவல் நிலையங்களிலிருந்து போலிசார் குவிக்கப்பட்டனர்.

அது மட்டுமல்லாமல் உளவு பிரிவு போலிசார் 1. விருத்தாசலம் 2.கம்மாபுரம் 3. மங்கலம்பேட்டை 4. ஜெயங்கொண்டம் 5.கருவேப்பிலங்குறிச்சி போன்ற பகுதிகளிலிருந்து வந்திருந்தனர். இவர்கள் உளவு பார்த்தனர். திருமணத்திற்கு வீடியோ எடுப்பதை போல வீடியோ காட்சி பதிவு செய்தனர்

ஆனால் காவல்துறை அதிகாரிகள் பலர் “மூடு டாஸ்மாக்கை” பிரச்சாரத்தின் போது அதிகளவில் அவர்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்கள் கூறும் கருத்து

“எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையால் தான் அதிக பிரச்சினை வருது. அத மூடுங்க. அப்பதான் பிரச்சினை இல்லாமலிருக்கும். நாங்க யூனிபார்ம்ல இருக்கிருதனால் எங்களால் மூட முடியாது. நீங்களாவது மூடுங்க சார், ரொம்ப நல்லது”

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகார அமைப்பின் தோழர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கருவேப்பிலங்குறிச்சி பஸ்டாப் அருகில் 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கு எடுத்து கொண்டனர். குறிப்பாக பெண் தோழர் மந்திரகுமாரி பேசுவதைக் கண்டு அதிகப்படியான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்,

குறிப்பாக அ.தி.மு.க பிரமுகர்கள் இருவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் சாராய வியாபாரி சசி ஜெயகும்பால கண்டித்து பேசும்போது ஒரு அ.தி.மு.க பிரமுகர் ஆர்ப்பாட்டத்திலிருந்து  மற்றொரு அ.தி.மு.க வினரை வெளியே வரும்படி அழைத்தார். ஆனால் அவர் ஆர்ப்பாட்டத்தை விட்டு வரமறுத்தார்.

தகவல்,
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்

2. தஞ்சை

  • ஊழல், சா்வாதிகாரம்,
  • சிவில் சமூகத்தின் மீதான அடக்குமுறைகள்!
  • மஃபியாக்கள் கன்மவளக் கொள்ளையா்கள், பணக்காரா்களின் எடுபிடிகளாய் நீதித்துறை!
  • ஆளும் அருகதையற்ற நீதித்துறைக்கு மாற்று…? மக்கள் அதிகாரமே!people-power-demo-on-judicial-corruption

என்ற தலைப்பில் தஞ்சாவூரில் 11-10-2015 அன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தை மக்கள் அதிகார அமைப்பின் உறுப்பினா் தோழா் அருள் துவக்கி வைத்தாா். மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பாளா் தோழா் தா்மரஜ் உரையாற்றினாா். மக்கள் அதிகாரத்தின் மாநில தலைமைக் குழு உறுப்பினா் தோழா் காளியப்பன் சிறப்புரையாற்றினாா்.

இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவினா் கலை நிகழ்ச்சி நடத்தினா். மக்கள் அதிகார அமைப்பின் உறுப்பினா் தோழா் தேவா நன்றி உரை வழங்கினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
தஞ்சை

3. தருமபுரி

“மூடு டாஸ்மாக்கை” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் 12-10-2015 அன்று தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

people-power-demo-dpi

தகவல்
மக்கள் அதிகாரம்,
தருமபுரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க