Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 8

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 1-31, நவம்பர் 1-15 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 22-23 | 1991 அக்டோபர் 1-31, நவம்பர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நவம்பர் புரட்சி நாள்: மீண்டும் உதிக்கும்!
  • மருத்துவர் களின் அலட்சியம் ஏழைப்பெண்ணின் அவலம்
  • தனியார்துறை மோகம் தீர்வாகாது
  • அ.தி.மு.க. – காங்கிரசு – பாரதீய ஜனதா பாசிச மும்மூர்த்திகள்
  • அயோத்தி விவகாரம்: இந்து வெறி பாசிஸ்டுகளின் அக்கிரமம் பாசிச காங்கிரசின் ஒத்துழைப்பு
  • பேருந்துக்கட்டண உயர்வு: பாசிச ஜெயாவின் ஆணவம் மாணவர்கள் போர்க்கொடி
  • படரும் பாசிச அடக்குமுறை தொடரும் புரட்சிகர இயக்கம்
  • உயிரோடு எரிப்பு நிர்வாண ஊர்வலம் அடித்துக் கொலை நரவேட்டையாடப்படும் தாழத்தப்பட்டோர்
  • புதிய ஜனநாயகம் மீது பொய்வழக்கு விற்பனையாளர்கள் மீது போலீசின் தாக்குதல்
  • விலைபோன வீரமணியின் இனத் துரோகம்
  • சங்கர் குகா நியோகி கொலை: ஒரு தொழிற்சங்கவாதியின் மரணம்
  • பாசிச பாதுகாப்புச் சட்டம்
  • போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாத சாகசம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 16-30 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 21 | 1991 செப்டம்பர் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வயிற்றை நிரப்பிக்கொண்டு அடிமையாய் வாழ்வதா? உரிமை – மானத்துக்குப் போராடி தியாகியாய் மடிவதா?
  • ஜெயாவின் திமிர்ப்பேச்சு மாணவர்களின் பதிலடி
  • தமிழருக்கு எதிராக பார்ப்பன – பாசிச ஜெயாவின் போர்
  • ”இது நம்மவா ஆட்சி” பார்ப்பன சங்கம் பிரகடனம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • முதலாளித்துவ முட்டாள்களே! சிலைகளைத் தகர்க்கலாம் சித்தாந்தத்தை என்ன செய்வீர்?
  • இந்தியப் போலிகளின் சந்தர்ப்பவாத சாகசங்கள்
  • முதலாளித்துவத்தின் பெருந்தோல்வி! அழுகும் அமெரிக்காவே சாட்சியம்!
  • உத்திரப் பிரதேசம்: ராம ராஜ்ஜியத்தின் முக விலாசம்
  • விவசாயிகளின் வயிற்றில் அடித்து வாழ்வைப் பறிக்க உலக வங்கி சதி
  • நெய்வேலி ஜவஹர் பள்ளி: ஆசிரியர்களா? கொத்தடிமைகளா?
  • பங்காரப்பா – நரசிம்மராவ் – மன்மோகன் சிங்: கொடும்பாவி எரிப்பு போராட்டம் காவிரி நீர் உரிமைக்கான இயக்கம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-31 ஆகஸ்ட், 01-15 செப்டம்பர் 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 18 – 20 | 1991 ஆகஸ்ட் 01-31, செப்டம்பர் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

(இந்த இதழின் அட்டை கிடைக்கப்பெறவில்லை)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சோவியத் ஒன்றியத்தில் அரண்மனைப் புரட்சி தோற்றது! நெருக்கடிகள் தீர்ந்தனவா?
  • காவிரி நீர் பிரச்சினை: கோஷ்டிப் பூசலுக்கான பகடைக்காயா?
  • சி.பி.ஐ.யின் தகிடுதத்தங்கள்!
  • பட்ஜெட்: கட்டுப்பாடற்ற கொள்ளைக்கு கதவு திறந்தது
  • இரத்த வெள்ளத்தில் தாழ்த்தப்பட்டோர்
  • நாடு கடத்தப்படுவோமா?
  • வதைபடும் ஈழ அகதிகள்
  • புலிகளின் பாசிசம்
  • பி.சி.சி.ஐ. விவகாரம்: புதைந்து கிடக்கும் உண்மைகள்
  • சவால் விட்டு சதிராடிய காங்கிரசு கோழைகள்
  • காக்கிச் சட்டை ரௌடிகளின் கயவாளித்தனம்!
  • கேள்வி – பதில்
  • குன்னூர்: போலீசு தாக்குதல்: அப்பாவிகள் பரிதவிப்பு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஜூலை 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 17 | 1991 ஜூலை 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: விநோதமான ஜனநாயகம் திவாலான பொருளாதாரம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ஒண்ட வந்த பிடாரியே, ஈழத் தமிழரை விரட்டாதே!
  • பொருளாதார நெருக்கடி: மறு சீரமைப்பல்ல மறு அடகுவைப்பு
  • செல்லாக்காசாகிவிட்ட ரூபாயின் மதிப்பு
  • அமைந்திருப்பது அரசு பயங்கரவாத ஆட்சி பார்ப்பன – பாசிச ஒடுக்குமுறைக்கு அட்டிகை
  • பா.ம.க. புலம்பலுக்கு வந்த பதிலடிகள்
  • பீகாரை ஆளும் யுத்தப் பிரபுக்கள்
  • அப்பாவி சிறுவன் மீது கொலை வெறித் தாக்குதல் தஞ்சை போலீசின் காட்டுமிராண்டித்தனம்
  • கேள்வி – பதில்
  • ’மார்க்சிஸ்ட்’ கட்சிப் பொதுச் செயலாளர் நம்பூதிரிபாடுக்கு கட்டாய ஓய்வு
  • அரசு ஆலைகள் தனியாருக்கு ஏலம்!
  • ”முஸ்லீம் பிணம் இந்து கோயில் வழியே செல்லக்கூடாது” இந்து வெறியர்களின் அட்டகாசம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 ஜூன், 01-15 ஜூலை 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 15-16 | 1991 ஜூன் 16-30, ஜூலை 01-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காங்கிரசு கனவு நொறுங்கியது
  • விடுதலைப் புலிகளின் இழிசெயல்: ராஜீவ் கொலைக்கு புதிய ஜனநாயகம் – புதிய கலாச்சாரம் மீது வீண்பழி!
  • ராஜீவ் கொலை விசாரணை அரசியல் பழிவாங்கும் முயற்சி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ராஜீவ் கொலை: எதிர்க்கட்சிகளின் இரங்கல் அறிக்கைகள்: கோழைத்தனம்!
  • மாநிலத்தை “பிளாக்மெயில்” செய்கிறது போலீசு
  • எத்தியோப்பியா: சர்வாதிகார எதிர்ப்புப் போரில் சதிகார அமெரிக்காவின் கைவரிசை
  • அல்ஜீரியா: போலி சோசலிசத்துக்கு மரண அடி
  • கோவை மத்திய சிறை: காக்கிச் சட்டை கைதிகள்
  • காஷ்மீர்: பனிமலையில் இரத்த ஆறு
  • அடக்குமுறைகளை மீறி தேர்தல் புறக்கணிப்பு இயக்கம்
  • கேள்வி – பதில்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் மீது பொய்வழக்கு | தோழருக்கு துணைநிற்போம் | தோழர் பிரகாஷ்

சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் மீது பொய்வழக்கு
| தோழருக்கு துணைநிற்போம் | தோழர் பிரகாஷ்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பெண்கள் பொது வாழ்க்கைக்கு வரவேண்டும்! | மகா அமிர்தா

ரு பெண் தன்னை அரசியல் படுத்திக் கொள்வது அத்தனை சுலபமில்லை. பெண்கள் அமைப்புக்குள் வருவதும். அரசியலுக்கு வருவதும், தலைமைப் பொறுப்புக்கு வருவதும் எளிதல்ல. அது மிகப்பெரிய போராட்டம், வலி.

அதிலும் அரசியல் சார்ந்த களப் போராட்டங்கள், எதிர்ப்புகள், போஸ்டர் ஒட்டுவது, துண்டு அறிக்கை விநியோகம், கைதாகி சிறைக்குச் செல்வதென பெண்களின் செயல்பாடுகள் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அப்படியான போராட்டங்களையும், வலிகளையும் கடந்து கைதாகி சிறைக்கு சென்று, இன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளராகவும், மாநிலப் பொருளாளராகவும் இரண்டு பதவிகளில் கோலோச்சும் மகா அமிர்தாவிடம் அவரின் அரசியல் வாழ்க்கை குறித்து பேசியதில்…

“சித்தாந்தத்தை சித்தாந்தங்கள் மூலமாக வீழ்த்த முடியுமே தவிர வெறும் சீர்திருத்தங்களால் வீழ்த்த முடியாது என்கிற புரிதவோடு, மக்கள் அதிகாரக் கழகத்தில், முழுநேரக்களப்பணி செய்து வரும் நான், அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்து 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டேன்” எனப் புன்னகைத்தவர், “எனது குடும்பத்திற்கு பெரிய அரசியல் பின்னணி எதுவும் கிடையாது. சாதாரண ஒரு குடும்பத்தில் மகாலெட்சுமி என்ற பெயரோடு கடைக்குட்டி பெண்ணாய், செல்லமாக வளர்க்கப்பட்ட பெண் நான். பிற்போக்குச் சிந்தனைகள் கொண்ட சாதாரண மத்திய தர வர்க்க குடும்பம் என்னுது.

பள்ளியில் படித்த காலத்தில் எனக்கு அமைந்த ஆசிரியர் ஒருவர், முற்போக்குச் சிந்தனை உள்ளவராகவும், எளிமையாக அணுகக்கூடியவராகவும் இருந்தார். இதனால் எப்போதும் ஆசிரியரின் வீட்டிலேயே நான் இருக்கத் தொடங்கினேன். பாடத்தைத் தாண்டி, அரசியல், சினிமா, பொது வாழ்க்கை என எல்லாவற்றையும் மாணவர்களிடம் அவர் பேசுவார். வீட்டிலும் மாணவர்களுக்கு இலவசமாகப் பாடங்களை சொல்லித் தருவார். இதனால் எனக்கு அவர் பிரியத்திற்குரிய ஆசிரியராக மாறிப்போனார்.

ஆசிரியரின் உடன் பிறந்த சகோதரி ஒருவர் கம்யூனிஸ்ட் இயக்க செயல்பாடுகளில் இருந்ததால், அந்த இயக்கத்தை தோக்கி நானும் என்னை நகர்த்திக்கொள்வதற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அவர் எனக்கு இருந்தார். ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னவரும் அவர் தான். அவர் மூலமாகவே இயக்கத் தோழர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. தொடர்ந்து புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற புத்தகங்களை படிக்கும் வாய்ப்புகளும் அமைந்தன.

பிஎஸ்லி மேதஸ், அதைத் தொடர்ந்து எம்.ஏ ஜர்னலிஸம் முடித்து, பிரபல தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணியாற்றிய நிலையில், தோழர்களோடு இணைத்து இயக்கம் சார்ந்த வேலைகளை வீட்டுக்குத் தெரியாமலே செய்து கொண்டிருந்தேன். என்னை அரசியல்படுத்திக் கொள்வதற்கான நகர்வுகள் ஒவ்வொன்றுமே போராட்டமாகவும், பிரச்னையாகவும் வீட்டில் இருந்தது.

பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லக்கூடாது என்கிற சித்தனை உள்ள பெற்றோர்களிடத்தில், அரசியல் சிந்தனையோடு என்னை வெளிப்படுத்துவது அவ்வளவு சுலபமாக எனக்கு இல்லைதான். முதல் சில நாட்கள் வீட்டுக்குத் தெரியாமல் கூட்டம், மாநாடு, போராட்டம் என சென்றுவரத் தொடங்கினேன். வீட்டுக்கு தெரியவந்த போது மிகப்பெரிய பிரளயமே வெடித்தது. இயக்கம் சார்ந்து நான் படிக்கும் புத்தகங்கனை எரித்து விடுவேன் என்கிற ரீதியில் வீட்டில் எதிர்ப்புகளும் இருந்தது. அப்போது அகில இந்திய இளைஞர்கள் கூட்டமைப்பான AIYFல் இருந்தேன்.

அமைப்பு ரீதியாக பல்வேறு வேலைகளை முழு மூச்சாக இறங்கி செய்து கொண்டிருந்த நிலையில், தோழர்கள் மூலம், மக்கள் கலை இலக்கிய கழகத்தை (மகஇக) சேர்த்த தோழர் முனியசாமி எனக்கு அறிமுகமாக, சாதி சடங்கு, சம்பிரதாயம் இல்லாத தாலி மறுப்புத் திருமணம் செய்து, இருவரும் இணையர்களாக இல்வாழ்க்கையில் இணைந்தோம். திருமணத்திற்குப் பிறகே சுதந்திரமாகவும் தீவிரமாகவும் என்னை அரசியல்படுத்திக் கொண்டேன். திருமணத்திற்குப் பிறகான எனது செயல்பாடுகள், எனது இணையரோடு சேர்ந்து மக்கள் கலை இலக்கிய கழகத்தோடு இருந்தது.

இதில் நான் செயல்படும் மக்கள் அதிகாரக் கழகம் என்பது சமூக மாற்றத்திற்கானது என்றாலும், இதற்கென சில கொள்கைகளும், இலக்குகளும் உண்டு. புரட்சிதான் இதன் நோக்கம். ஏற்றத்தாழ்வான நம் சமூகத்தில் ஒடுக்குபவர்களும், ஒடுக்கப்படுபவர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நாங்கள் ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் நின்று, குறிப்பிட்ட மக்கள் பிரச்னைகள் சார்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதும், விளைவுகளை ஏற்படுத்துவதும் என அவர்களுக்கான போராட்டங்களை, மக்களோடு இணைத்தே கட்டி அமைக்கிறோம் ஒவ்வொரு அரசியல், காலத்திலும் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது என்பதையும் பார்த்து, மாற்றத்திற்குரிய வேலைகளையும், நூற்றுக்கணக்கான செயல்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டே இருக்கிறோம்.

இதில் பெண்களாகவே இருந்தாலும், ஆண்களுக்கு இணையாக அனைத்து வேலைகளையும் செய்வது, மக்களை களத்தில் இறங்கி சந்திப்பது மக்களோடு மக்களாக நிற்பது, மக்கள் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்வது, இரவெல்லாம் சாலைகளில் இறங்கி போஸ்டர் ஒட்டுவது. துண்டு அறிக்கை விதியோகம், பிரசுரங்களை விநியோகிப்பது, சுவர் எழுத்து, இயக்கபாடல்கள், போராட்டக் களங்கள் எனத் தொடர்ந்து செயல்படுகிறோம். எந்தப் பிரச்னையை கையில் எடுக்கிறோமோ அதற்காக முழு வீச்சில் களம் காண்பதுடன், மக்களை அணி திரட்டுவது, போராட்டங்களைத் தொடர்த்து முன்னெடுப்பதென வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டே இருக்கும்.

உதாரணத்திற்கு அதிமுக ஆட்சியில் விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தில், வீட்டுக்கு ஒரு பெண் அல்லது இரண்டு பெண்கள் தங்கள் அப்பாவை, கணவரை அல்லது மகனை குடிப்பழக்கத்திற்கு இழந்தவர்களாக, விதவை கிராமம் என்ற அடைமொழியில் அழைக்கப்படுவதை, ஊடகம் வாயிலாக அறித்து, அங்கே சென்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களை சந்தித்ததுடன், அவர்களையும் அழைத்து வந்து “மூடு டாஸ்மாக்கை மூடு” போராட்டத்தையும், மாநாட்டை யும் நடத்தியதில், மக்கள் பிரசனையாக அது மாறியது. பாதிக்கப்பட்ட பெண்களே சாலைகளில் இறங்கி சாராயக் கடைகளை உடைக்கத் தொடங்கினர். மக்கள் அதிகாரம் என்றால் சாராயக் கடைக்கு எதிராக

போராடுபவர்கள் என்று மக்கள் மனதில் இந்நிகழ்வு பதித்ததுடன், ஒருசில சாராயக் கடைகள் அரசால் உடனடியாக இழுத்து மூடப்பட்டன. தொடர்ந்து விவசாயிகளுக்கான போராட்டத்திலும் களத்தில் இறங்கிப் போராடவும், மாநாடுகளை நடத்தவும் செய்தோம்.

சாதி ரீதியாக இங்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், மத ரீதியாக சமீபத்தில் நிகழ்ந்த திருப்பரங்குன்றம் பிரச்னையில் மக்கள் அதிகாரக் கழகம் பல்வேறு ஜனநாயக சக்திகளை இணைத்து முழு வீச்சில் களத்தில் இறங்கி செயல்பட்டது. இதற்கென பல்வேறு போராட்டங்களை கட்டமைத்து, ஆர்ப்பாட்டங்களையும் நிகழ்த்தி மனு கொடுத்தோம். வழக்கும் தொடுத்திருக்கிறோம். வழக்கு நீதி மன்றத்தில் இருக்கிறது.

சமூகத்தில் சரிபாதியாக இருக்கக்கூடியவர்கள் பெண்கள். பெண்கள் பங்களிப்பு இன்றி எந்தவொரு மாற்றமும் சமூகத்தில் நிகழ்வதில்லை. அது ரஷ்யப் புரட்சியாக இருந்தாலும் சரி, சீனப் புரட்சியாக இருந்தாலும் சரி. வரலாற்றில் கடந்த காலத்தில் சமூக மாற்றத்தில் என்று எதை எடுத்துப் பார்த்தாலும் முக்கிய நிகழ்வுகளில் பெண்களின் பங்களிப்பு ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்கள், விவசாயப் போராட்டங்கள், முல்லைப் பெரியாறு பிரச்னை, கூடங்குளம் பிரச்னை, மீனவர் போராட்டம் என பல்வேறு போராட்டங்களையும் எடுத்துப் பார்த்தால், உண்ணாவிரதம் இருப்பதில் தொடங்கி, நீண்ட போராட்டங்களில் களத்தில் நின்று பங்கேற்றது வரை, பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது.

சமூக மாற்றத்தில்தான் பெண் விடுதலை சாத்தியமாகும். அதிலும் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய உழைக்கும் பெண்கள், சமூக மாற்றத்திற்கான வேலைகளில் இயக்கம் சார்ந்து பணியாற்றுவதுடன், தங்களை அரசியல்படுத்திக்கொள்வதும், பொது வாழ்க்கைக்கு வருவதும் முக்கியத் துவமானது” என்ற கருத்துக்களை முன் வைத்து, உழைப்பாளர் தின வாழ்த்தை பதிவு செய்து விடைபெற்றார்.

– மகேஸ்வரி நாகராஜன்

நன்றி: குங்குமம் தோழி
(மே 1 – 15, 2025 இதழில் வெளிவந்த கட்டுரை)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 ஜூன், 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 14 | 1991 ஜூன் 01-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ராஜீவ் கொலை: பழிக்குப் பழிதான்!
  • கூட்டுறவு வேளாண்மை பணி சங்கம்: அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளை
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • தேர்தல்கள்: துப்பாக்கி நாயகம்
  • எஸ்.ஏ.டாங்கே – ஒரு கம்யூனிச துரோகியின் மரணம்
  • பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டாண்டித்தனம் பாரீர்!
  • போலீசின் அடாவடித்தனம்! தோழர்களின் துணிவு!
  • சர்வகட்சி முழக்கம்: “பயங்கரவாத வன்முறைக்கு ஐக்கியப்படுவோம்!”
  • இந்து வெறியர்களுக்கு ஆதரவாக கேடயத்தின் புதுப் புளுகு
  • வங்கதேசம்: அவலத்தின் நடுவே அமெரிக்க ஆதிக்கம்
  • நேபாளம்: மன்னராட்சி மறையவில்லை மக்களாட்சி மலரவில்லை
  • ஓட்டுக்கட்சிகளை கதிகலங்க வைத்த தேர்தல் புறக்கணிப்பு இயக்கம்
  • கேள்வி – பதில்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 மே, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 13 | 1991 மே 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது துப்பாக்கிகள்தாம்!
  • தேர்தல் புறக்கணிப்பு இயக்கம்: புரட்சிகர அமைப்புகளின் போர்க்குணமிக்க பிரசாரம்
  • சட்டமன்ற – நாடாளுமன்றத் தேர்தல்கள்: கருப்புப்பண திருவிழா!
  • சென்ற இதழ் தொடர்ச்சி… தேர்தல் அறிக்கைகள்: சர்வகட்சி மோசடி!
  • கேள்வி – பதில்
  • ஈழ அகதிகள்: தொடரும் துயரம்
  • சாதிய கூட்டணிக்கு முற்போக்கு சாயம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • வேலூர் துப்பாக்கிச்சூடு: போலீசின் காட்டுமிராண்டித்தனம் பஸ் தொழிலாளர் போராட்டம்
  • தேர்தல் புறக்கணிப்பு இயக்கம்: போலீசு கும்பலின் பீதி! புரட்சியாளர்களின் உறுதி!
  • சர்வகட்சி முழக்கம்: “பயங்கரவாத வன்முறைக்கு ஐக்கியப்படுவோம்!”
  • தேர்தல் புறக்கணிப்பு இயக்கம்: போலீசின் அடக்குமுறை சித்திரவதை
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 மே, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 12 | 1991 மே 01-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நாறுது நாடாளுமன்ற – சட்டமன்ற ஆட்சி – நாடு காக்கப் புதிய ஜனநாயகப் புரட்சி
  • அபலை கற்பழித்து கொலை: கொலைகாரர்களுக்கு போலீசு காவல்! நியாயம் கேட்ட வி.வி.மு. மீது தாக்குதல்!
  • தேர்தல் அறிக்கைகள்: சர்வகட்சி மோசடி!
  • அம்பேத்காருக்கு நூற்றாண்டு விழா ‘அரிசனங்’களுக்கு தூக்குமரம்
  • மே தின சூளுரை!
  • பாரதீய ஜனதாவின் தேர்தல் உத்தி: வெளியே காவியுடை! உள்ளே ரத்தவெறி!
  • நீலகிரியின் வித்தியாசமான கலெக்டர்!
  • சர்வகட்சி முழக்கம்: “பயங்கரவாத வன்முறைக்கு ஐக்கியப்படுவோம்!”
  • முன்னுதாரணமிக்க ஒரு தோழர்! முன்னேற்றப் பாதையில் ஒரு கிராமம்!
  • கேள்வி – பதில்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ஆதிக்க சக்திகளின் பகடைக்காய்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-30 ஏப்ரல், 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 10,11 | 1991 ஏப்ரல் 01-30, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தேர்தல் கமிஷன் நெறிமுறைகள்: இன்னுமொரு கேலிக்கூத்து!
  • சக்ரவர்த்திகளை மிரட்டும் குறுநில மன்னர்கள்
  • ராணுவ கும்பலின் அட்டூழியம்
  • சர்வதேசப் புரட்சிக்கான ஆக்கப்பூர்வ பங்களிப்பு!
  • பாலஸ்தீன விடுதலை: அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுச் சதி
  • தொழுநோயாளிகள்: அன்பைத் தேடும் மனிதர்கள்
  • கேரள – மே.வங்க சட்டமன்றத் தேர்தல்கள்: கும்பலோடு கோவிந்தா!
  • கிசுகிசு – குடும்பப் பத்திரிக்கைகள்: அரசியல் சீக்குக்கு அலங்காரம்
  • கேள்வி – பதில்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • உடைந்து சிதறும் யூகோஸ்லாவியா: டிட்டோயிசத்தின் தோல்வி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 மார்ச், 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 9 | 1991 மார்ச் 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தோல்வியடைந்தது – நாடாளுமன்ற போலி ஜனநாயகம்
  • சாம்சன் கம்பெனித் தொழிலாளரை ஒடுக்க போலீசு – முதலாளி கூட்டு, சதி
  • உளவு விவகாரம்: யார் குற்றவாளி?
  • வங்கதேச தேர்தல்கள்: பிறவி ஊனம்
  • தகுதியான தண்டனை
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இட்லிக்கும் தோசைக்கும் பறிபோகுது ஆதிவாசி நிலம்
  • ஆயுதப் போர் முடிந்தது! அரசியல் போர் தொடங்கியது!
  • குற்றவாளிகளாக நீதிபதிகள்
  • கேள்வி – பதில்
  • பல்கலைக்கழக சான்றிதழ் மோசடி: மேட்டுக்குடி கும்பலின் குறுக்குவழி திறமை!
  • சி.ஐ.டி.யு. மாநாடு கேளிக்கைத் திருவிழா
  • பின்னி ஆலைத் தொழிலாளர் வாழ்க்கையோடு விளையாடும் உடையார்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 5

முதல் உலகப் போரின்போது மே தினம்

போரின்போது சமூக ஜனநாயக கட்சித் தலைவர்கள் செய்த துரோகம் 1915 ஆம் ஆண்டு மே தினத்தின்போது வெளிப்படையாக தெரிந்தது. இது 1914 ஆகஸ்டில் ஏகாதிபத்திய அரசாங்கங்களோடு அவர்கள் செய்துகொண்ட சமரசத்தின் தத்துவார்த்த வளர்ச்சியாகும். ஜெர்மன் ஜனநாயகவாதிகளோ தொழிலாளிகளை வேலை செய்யுமாறு கூறினார்கள். பிரெஞ்சு சோஷலிஸ்டுகளோ ஒரு பிரத்தியேக அறிக்கையில் அதிகார வர்க்கத்திடம் மே தினம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்கள். போர் நிகழ்ந்த மற்ற நாடுகளிலும் பெரும்பாலான சோஷலிஸ்டுகளிடையே இதே நிலைதான் காணப்பட்டது. ரஷ்யாவில் போல்ஷ்விக்குகளும், மற்ற நாடுகளில் சிறுபான்மையாய் இருந்த புரட்சி சக்திகளுமே சோஷலிசத்திற்கும், சர்வ தேசியத்திற்கும் உண்மையாக இருந்தனர். லெனின், லக்ஸம்பர்க், லீப்ஹ் னெட் ஆகியோர் குருட்டுத்தனமான சமூக வெறிக்கு எதிராக குரல் கொடுத்தனர். 1916, மே தினத்தன்று நடந்த சிறு திரளான தொழிலாளர் ஊர்வலமும், தெருவில் நிகழ்ந்த வெளிப்படையான சிறு சண்டைகளும் போர் நிகழும் நாடுகளில் தொழிலாளர்கள் துரோகத் தலைவர்களின் விஷப்பிடியிலிருந்து தானாகவே வெளியேறி வருகின்றனர் என்பதைக் காட்டுவதாய் இருந்தது. லெனினும் மற்ற எல்லா புரட்சிவாதிகளும் சந்தர்ப்பவாதத்தின் அழிவு (இரண்டாம் அகிலத்தின் அழிவு : ஆ-ர்) தொழிலாளர் இயக்கத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பினர். துரோகிகளிடமிருந்து மீள்வதற்கும் புதிய அகிலத்துக்கான லெனினுடைய அழைப்பிற்கும் ஏற்ற நேரமாக அது இருந்தது.

ஜிம்மாவால்டு (1915), கிந்தால் (1916) ஆகிய இடங்களில் நடந்த சோஷலிச மாநாடுகள், லெனினுடைய முழக்கமான ‘ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம்’ என்பதற்கு ஆதரவாக சர்வதேசப் புரட்சிகரக் கட்சிகள் மற்றும் சிறு சக்திகள் திரளுவதற்கு வழிவகுத்தன. 1916 மே தினத்தன்று கார்ல் லீப்ஹ்னெட்டும் மற்ற அவரது சோஷலிஸ இயக்க ஆதரவாளர்களும் சேர்ந்து பெர்லினில் போலிஸின் தடையுத்தரவையும் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையையும் மீறி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி தொழிலாளி வர்க்கம் உயிருள்ள சக்தி என்பதை நிரூபித்தனர்.

1917 ஆம் ஆண்டு அமெரிக்காவில் போர் பிரகடனப் படுத்தப்பட்டபோது அதனால் மே தினம் நிறுத்தப்படவில்லை. அப்போது ஏப்ரலில் நடந்த செயின்ட் லூயிஸ் அவசர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யுத்த எதிர்ப்புத் தீர்மானத்தை முழுமூச்சுடன் எடுத்துக்கொண்டு மே தினத்தை அதற்காக பயன்படுத்தினர். பின்னர் 1910 மே முதல் நாள் கிலிவ்லேண்டில் சார்லஸ் ரத்தன்பர்க் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிடும்படியான போர்க் குணத்தோடு இருந்தது. இவர் உள்ளூர் சோஷலிஸ்டுக் கட்சி ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.

அப்போது பொது சதுக்க வீதியிலே 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணிவகுத்துச் சென்றனர். பின்னர் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அத்தோடு சேர்ந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தை போலிஸ் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியது. அதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். இன்னொரு தொழிலாளி கடுமையாக காயப்படுத்தப்பட்டார்.

1917 ஆம் ஆண்டு மே தினமும், ஜூலை மாதத்து நாட்களும் இறுதியாக அக்டோபர் மாதத்து நாட்களும் ரஷ்யப் புரட்சிக்கு படிப்படியாக ஒரு நினைவைக் கொடுத்தது. மனிதகுல வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கிய ரஷ்ய புரட்சியானது, மே தினத்திற்கு புதிய உத்வேகத்தையும் முக்கியத்துவத்தையும் தந்தது. 1890 ஆம் ஆண்டு மே தினத்தின்போது நியூயார்க் யூனியன் சதுக்கத்தில் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்கள் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பின்வருமாறு முழங்கினர். “8 மணி நேர வேலைநாளுக்காகப் போராடும் இதே நேரத்தில் நமது இறுதி லட்சியமான இந்த கூலி (முதலாளித்துவ) அமைப்பை தகர்த்தெறிவதிலிருந்து விலக மாட்டோம்.” இந்த முழக்கம் முதன் முறையாக உலகின் ஆறில் ஒரு பகுதியில் பாட்டாளி வர்க்க சக்தியின் வெற்றியாக நினைவாக்கப்பட்டது.

இந்த லட்சியத்தை அடைந்ததிலே முதலானவர்கள் என்பதை ரஷ்யத் தொழிலாளர்கள் நிரூபித்துக் காட்டினர். ஆனால் 1917 ஆம் ஆண்டின்போது, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்கள், தாங்கள் 1890ல் முழங்கிய குறிக்கோளிலிருந்து வெகுதூரத்தில் இருந்தார்கள். அவர்களின் முக்கிய நோக்கம் முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதும், அமெரிக்க ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு சுலபமான வழிவகுப்பதுமாக இருந்தது. உலகத் தொழிலாளர் ஒற்றுமை, முதலாளித்துவ அமைப்பிலிருந்து விடுதலை போன்ற பிரகடனங்களை முழங்கிய மே தினத்திற்கு புதிய சக்தியை வழங்கிய ரஷ்யப் புரட்சியினால் அமெரிக்கத் தொழிலாளர்கள் உத்வேகம் பெறுவதை அந்தத் தலைவர்கள் விரும்பவில்லை.

1923ஆம் ஆண்டு மே தினத்தின்போது ‘தொழிலாளி’ என்ற வார பத்திரிகையின் ஆசிரியர் சார்லஸ் ரத்தன்பர்க் பின்வருமாறு எழுதுகிறார். “மே தினம் உலகெங்கிலுமுள்ள முதலாளிகளின் உள்ளத்திலே அச்சத்தையும், தொழிலாளிகளின் உள்ளத்திலே நம்பிக்கையையும் உருவாக்கும் தினம். வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அமெரிக்காவில் கம்யூனிஸ இயக்கம் பலமாக இருக்கும். மாபெரும் சாதனைகளுக்கான பாதை தெளிவாக இருக்கிறது. அமெரிக்காவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் எதிர்காலம் என்பது கம்யூனிஸத்திற்கே உரியதாய் இருக்கும்.”

அதே ‘தொழிலாளி’ பத்திரிகையில் ஒரு தலைமுறைக்கு முன் 1907ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் நாள் மே தினம் குறித்து யூகின் டெப்ஸ் என்பவர் பின்வருமாறு எழுதுகிறார். “இந்த தினம்தான் முதலாவதும், ஒன்றேயுமான உலகத் தொழிலாளர் தினம். இந்த நாள் புரட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளி வர்க்கத்துக்குரிய நாளாகும்.”

மே தினத்தின் வளர்ந்து வரும் போர்க்குண பாரம்பரியத்தை எதிர்க்கும் வகையில், செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை மே தினத்துக்கு பதிலான தொழிலாளர் தினமாகக் கொண்டாடுவதாக அமெரிக்கக் கூட்டமைப்பின தலைவர்கள் ஊக்குவித்தனர். இந்த தினம் முதன் முதலில் 1885ல் உள்ளூர் அளவில் கொண்டாடப்பட்டது. பின்னர் பல மாநில அரசுகளால் இந்த தினம் மே தினக் கொண்டாட்டங்களை முறியடிக்கும் வகையில் நடத்தப்பட்டது.

இதே போன்று மே தினத்துக்கு எதிராக, ஹீவர் நிர்வாகம் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்போடு சேர்ந்து மே முதல் நாளை குழந்தைகள் நல தினமாக அறிவித்தது. குழந்தைகள் நாளில் திடீரென்று பிறந்த இந்த அக்கறையின் உண்மையை நாம் 1928 ஆம் ஆண்டு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாட்டில் நிர்வாகக் குழு சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அந்த அறிக்கை பின்வருமாறு சொல்கிறது.

“கம்யூனிஸ்டுகள் மே முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இனிமேல் மே முதல் நாளை, அமெரிக்க மக்கள், குழந்தைகள் தினமாக கொண்டாடும்படி அழைக்க வேண்டும் என்று தலைவரைக் கேட்டுக் கொள்கிறது. ஆண்டு முழுவதும் குழந்தைகள் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம். இதுதான் மிகுந்த பயனுள்ள நோக்கமாகும். அதே நேரத்தில் இனி மே தினம் கம்யூனிஸ்டு தினமாகவோ அல்லது வேலைநிறுத்த தினமாகவோ அறியப்பட மாட்டாது.”

1929ல் ஏற்பட்ட நெருக்கடி

முதல் உலகப் போருக்குப் பத்தாண்டுக்குப் பின்னும் லட்சோபலட்ச மக்கள் முதலாளித்துவ அழிவுப் பாதையில் சிக்கியிருந்தார்கள். அனுபவங்களிலிருந்து பாடம் பெற மறுத்த பிற்போக்கு தொழிற்சங்கத் தலைவர்களோ இந்த மக்களைத் திரட்டுவதற்கு பதிலாக முதலாளித்துவத்தின் கீழ் நிரந்தர செழுமை என்ற மாயையைப் பரப்புவதில் தீவிரமாய் இருந்தார்கள். 1929 இறுதியில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. அப்போது சொத்துடையவர்களும், ஏசுபோகவாதிகளும் எல்லா சுமையையும் தொழிலாளர்கள் தலையின் மீது சுமத்தப் பார்த்தார்கள். அப்போது தொழிலாளர்களுக்கு ஒரே பாதுகாப்பாக இருந்தது வேலைநிறுத்தமும், வேலையில்லாதவர்களின் வெகுஜனப் போராட்டமுமேயாகும். கம்யூனிஸ்டுகள் இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். இதனால் அமெரிக்கத் தொழிலாளர்கள் பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்களின் ஜனநாயக உரிமைகள் விரிவுபடுத்தப்பட்டன. என்றுமில்லாத அளவுக்கு அமெரிக்க தொழிலாளர் வரலாற்றில் 1930களில் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்த முடிந்தது. 1935ஆம் ஆண்டு சி.ஐ.ஓ. துவக்கப்பட்டது. பெரும் தொழிற்சாலைகள் வேகமாக ஸ்தாபனப்படுத்தப்பட்டன. இவையெல்லாம் அமெரிக்க முக்கியத்துவத்தைத் தந்தன. அமெரிக்கத் தொழிலாளர்களின் இந்த எழுச்சியால் நீக்ரோ மக்களின் சம உரிமைக்கான போராட்டம் நடத்துவதற்கான காலம் ஏதுவானது. அதன் காரணமாக அமெரிக்க ஜனநாயக முன்னணி மேலும் வலுவடைய முடிந்தது.

ஏகாதிபத்திய யுத்தம், புரட்சி, முன்னெப்போதும் இருந்திராத பொருளாதார நெருக்கடி இவை பதினைந்து ஆண்டுகளுக்குள் முதலாளித்துவத்தை ஆட்டங்காண வைத்தன. இதனால் அது பெரும் நெருக்கடிக்குள்ளானது. முதல் உலகப் போருக்குக் காரணமாய் இருந்த ஏகாதிபத்தியப் போட்டிகள் இப்போது இன்னும் தீவிரமாயின. மேலும் உலகின் ஆறில் ஒரு பகுதியில் முதலாளித்துவம் துடைத்தெறியப்பட்டதும், காலனி நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களின் அதிகரிப்பும், வளர்ந்து விட்ட முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஜனநாயக உரிமைக்காகவும் தீவிரமாகப் போராடியதும் இந்த பொதுவான முதலாளித்துவ நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது. இதனால் தங்கள் அரசியல் பொருளாதார வாழ்வை காத்துக்கொள்ளவும் தவிர்க்க முடியாத வரலாற்று வளர்ச்சியினைத் தடுத்து நிறுத்தவும் வேறு வழியின்றி முதலாளிகளும் ஏகபோகவாதிகளும், பாசிச பயங்கர சர்வாதிகாரம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தார்கள். தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனி, மற்ற நாடுகளில் தொழிலாளர் மற்றும் முற்போக்கு சக்திகளிடையே இருந்த பலவீனம் மற்றும் ஒற்றுமையின்மையாலும், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்த நாடுகளில் இருந்த பாசிச சக்திகளை ஊக்குவித்ததாலும், இந்த நாடுகளில் பாசிசம் வெற்றி பெற ஏதுவாகிறது. நூற்றாண்டு காலமாய் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமையை அழிப்பதற்கு உலகம் முழுவதுமான ஏகபோக மூலதனத்தின் முயற்சியை இது காட்டுவதோடு, இரண்டாவது உலகப்போருக்கான பாதையையும் இது தெளிவாக்குகிறது.

பாசிசத்திற்கு எதிரான யுத்தம்

1933லிருந்து 1939 வரை ஜெர்மன் பாசிசம் உலகெங்குமுள்ள பிற்போக்குத்தனத்தின் முன்னோடியாய் திகழ்ந்தது. சோஷலிச நாடுகளுக்கு எதிராக ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் நாஜி ஜெர்மனியை ஆதரித்தன. ஜெர்மனி பாசிசமோ உலகம் முழுவதையும் தன் கீழ் கொண்டுவர எண்ணியது. இதன் காரணமாக இரண்டாம் உலக யுத்தத்துக்கான தயாரிப்புகள் முறைப்படி செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஜப்பானிய ஏகபோகவாதிகளும் தங்கள் சொந்த நலனுக்காக இந்த சதியில் கை கோர்த்து நின்றனர். இந்த யுத்தம் அதன் சொந்தத் தன்மை காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சுதந்திரத்திற்கு எதிராகத் திருப்பப்பட்டது. இச்சூழ்நிலையில் மனிதகுல முன்னேற்றத்தின் விதி மற்ற இடங்களில் உள்ள விவசாய மற்றும் ஒடுக்கப்பட்ட காலனி மக்களோடு இணைகின்ற தொழிலாளர்களின் கையிலேதான் உள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. ஏகபோக முதலாளிகள் வளர்ந்து வரும் அழிவு சக்தியைத் தடுக்கும் பொருட்டு ஜனநாயக மற்றும் தேசிய சக்திகளைத் திரட்டுவது என்பது இவர்களின் முயற்சி, ஒற்றுமை, எதிர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருந்தது. எனவே முப்பதுகள் முழுதும் நடந்த மே தினம், புதிய உலக அழிவைத் தடுக்கும் பொருட்டு, பாசிச ஆக்ரமிப்புக்கு எதிராக, உலக மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒற்றுமைக்காக குரல் கொடுப்பதாக இருந்தது.

உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது உலக யுத்தம் நிரூபித்தது. உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுபட்டிருந்தால், பாசிசம் தனது அதிகாரத்திற்கு உலகையே நாசகர யுத்தத்தில் மூழ்கடித்திருக்கும். ஆனால், பாசிசத்தால் ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்தைப் பாதுகாக்க உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மையான ஜனநாயக சக்திகளைத் திரட்டி, போராடக்கூடிய உழைக்கும் வர்க்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லை.

சுதந்திரம், ஜனநாயகம், வளர்ச்சி இவற்றிற்காக இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் இருந்தது. இந்தப் போராட்டத்தின் முன்னணியில் சோவியத் யூனியனும், மற்ற நாடுகளின் உழைக்கும் மக்களும் இருந்ததை உலகெங்கிலுமுள்ள ஜனநாயக சக்திகள் கண்டனர். யுத்தத்தின் போது வேலைநிறுத்தம் மூலமும், பாசிச படையை அழிப்பதற்கான ஆயுதங்களைத் தயாரிப்பதன் மூலமும் எல்லா இடங்களிலும் உழைக்கும் வர்க்கம் மே தினத்தை அனுஷ்டித்தது. 1945ல் யுத்தம் முடிவுற்றபோது பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் விடுதலையும், வெற்றியும் அடைந்த ஐரோப்பிய நாடுகளில் மே தினங்களின்போது திரண்டதை எல்லா நாடுகளும் கண்டன . அந்த ஆர்ப்பாட்டங்களின்போது, பாசிசத்தின் மிச்ச சொச்சங்களை வேரொடு அழிக்க தொடர்ந்து போராடுவது என்றும், பாசிச ஆயுதத்தை மீண்டும் கையிலெடுக்காத வண்ணம் ஏகபோகத்தை அழித்தொழிக்க மற்ற முற்போக்கு சக்திகளோடு தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைப் பூரணமாக்குவது என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாத்து விரிவுபடுத்தவும், மக்கள் சக்தியை ஆட்சியாக்கவும், நிலையான அமைதியை உருவாக்கவும், சுரண்டலும் ஒடுக்கு முறையும் அற்ற சோஷலிஸ உலகை நிர்மாணிக்கப் பாதை வகுக்கவும் தொழிலாளி வர்க்கம் உறுதி பூண்டது.

மனித குலத்தின் அமைதி மற்றும் மகிழ்வான எதிர்காலத்திற்காக போராடுவதன் மூலமும் எல்லா நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கம், சர்வதேச ஐக்கியம் மற்றும் தோழமையுணர்வு அடிப்படையில் மே தினத்தன்று உலக மக்களை வணக்கம் செய்கிறது.

(முற்றும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 மார்ச், 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 8 | 1991 மார்ச் 01-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஏகாதிபத்திய வெற்றியும் எதிர்விளைவுகளும்
  • கழக கண்மணிகளின் கட்சிப் பற்று!
  • ’பட்ஜெட்’ தள்ளிவைப்பு ஏன்?
  • நாடாளுமன்ற ஜனநாயகம்: பிரமை தேவையில்லை
  • சூதாட்டக்களம்
  • கேள்வி – பதில்
  • போர் எதிர்ப்புப் புயல்
  • சதாமின் மறுபக்கம்
  • பிணந்தின்னியின் ஜனநாயக மோகம்!
  • உ.பி. – பீகார்: கொலைக் கிரிமினல்கள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ’மார்க்சிஸ்டு’ குண்டர்களின் மகத்தான ‘சாதனை’!
  • பதுக்கல் போர்வழிக்கு பாதுகாப்பு போராளிகளுக்கு பொய் வழக்கு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கார்ல் மார்க்ஸ்: ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை! | மீள்பதிவு

இந்தப் பதிவு ஜூன் 29, 2018 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது. பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் காரல் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது மீள்பதிவு செய்யப்படுகிறது.

***

மார்க்ஸ் பிறந்தார் – 14
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

6. “யதார்த்தத்தை இரக்கமற்ற முறையில் விமர்சனம் செய்தல்”

ஒரு அரசாங்கம் மக்களுக்கு விரோதமாக இருக்குமானால் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் – “நல்லவை” கூட- எதிரானவையாக மாறிவிடுகின்றன. “சட்டத்தை” அமுலாக்க முயற்சிக்கின்ற பொழுது அது அராஜகத்தை, சட்டத்தை மீறலைத் துணையாகக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறது. அது தான்தோன்றித் தனத்தைச் சட்டத்தின் நிலைக்கு உயர்த்துகிறது.

பத்திரிகைகள் விமர்சனம் செய்கின்ற உரிமையை அது பறிப்பதனால் அரசாங்க அதிகாரிகளின் மீது விமர்சனக் கடமையைச் சுமத்துகிறது, “தனிநபர்களே” ஆதரிப்பதன் மூலம் அது தனிநபரைக் கீழிறக்குகிறது; அந்தத் தனிநபர் சொந்தக் கருத்தை வைத்துக் கொள்கின்ற உரிமையைக் கூடப் பறித்து விடுகிறது.

தேசிய உணர்ச்சியை அதிகப்படுத்த முயற்சிக்கும் பொழுது அது “தேசிய இனத்தை அவமதிக்கின்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.” அரசாங்க ஆணை “அதிகாரிகளிடம் அளவுக்கு மீறிய நம்பிக்கையைக்” கோருகிறது; “அதிகாரிகள் அல்லாதவர்களிடம் அளவுக்கு மீறிய அவநம்பிக்கையிலிருந்து முன்னே செல்கிறது”.

பிரஷ்ய அதிகாரி “பாதுகாவலர்” என்ற பாத்திரத்தில் செயல்படுகிறார், “மூளையைக் கட்டுப்படுத்துகின்ற” பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விஞ்ஞானத் தகுதியுடைய விஷயங்களைப் பற்றித் தீர்ப்பு வழங்குவதற்கு அவருக்கு விஞ்ஞானத் தகுதி இருக்கிறதா என்பதைப் பற்றி மிகச் சிறிதளவு சந்தேகம் கூட ஏற்படுவதில்லை.

இந்த அதிகாரவர்க்கக் கோட்பாட்டில் அமைந்திருக்கும் கிண்டலை மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். சிந்தனையாளர்களைப் பற்றித் தகுதியுடன் மதிப்பிடுவதற்கு அதிகாரி எல்லாத் துறைகளிலும் அவர்களைக் காட்டிலும் உயர்ந்த தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

ஒரு வேளை “அரசாங்கத்துக்குத் தெரிந்த சர்வாம்ச மேதைகள் கூட்டம்” உண்மையாகவே பிரஷ்யாவில் வசிக்கலாம். அப்படியானால் இந்தக் “கலைக்களஞ்சிய மேதைகள்” எழுத்தாளர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் ஏன் முன்வருவதில்லை?

எண்ணிக்கையில் ஏராளமாகவும் விஞ்ஞான அறிவினாலும் மேதாவிலாசத்தினாலும் மாபெரும் பலமுடையவர்களாகவும் இருக்கின்ற இந்த அதிகாரிகள் சமூக மேடையில் தோன்றி பரிதாபகரமான எழுத்தாளர்களைத் தங்களுடைய கணத்தினால் ஏன் நசுக்கவில்லை?

சிந்தனைத் துறையில் ஒழுங்கை பாதுகாப்பவர்களை நியமித்து, அவர்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற இந்த அதிகாரிகளின் மேதாவிலாசம் இன்னும் எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும்? “இந்த அறிவின் அதிகாரவர்க்கத்தில் எவ்வளவு மேலே நாம் போகிறோமோ அந்த அளவுக்கு நாம் சந்திக்கின்ற மூளைகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.”

ஒரு அதிகாரவர்க்க, போலீஸ் அரசில் எல்லாத் தணிக்கைக்கும் மேலே இன்னொரு உயர்ந்த தணிக்கை இருக்கிறது; ஒவ்வொரு அதிகாரியின் எதேச்சாதிகாரமும் அவருக்கு மேலே இருக்கின்ற அதிகாரியின் எதேச்சாதிகாரத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

அத்தகைய அமைப்பில் “மூன்றாவது அல்லது தொண்ணூற்று ஒன்பதாவது கட்டத்தில் சட்டத்தை மீறல் தொடங்குவது” தவிர்க்க முடியாதது. அதிகாரவர்க்க அரசு இந்தத் துறையை நம் கண்களுக்குத் தெரியாமலிருக்கும்படி மிகவும் உயரத்தில் வைப்பதற்கு முயற்சி செய்கிறது.

“தணிக்கை முறையை ஒழிப்பதே அதற்குத் தீவிரமான மருந்து; ஏனென்றால் அந்த அமைப்பே மோசமானதாகும்.” என்ற இயற்கையான முடிவுக்கு இந்தப் பகுப்பாய்வு மார்க்சை இட்டுச் சென்றது.

முதலாளித்துவ அரசின் “அதிகாரவர்க்க” இயந்திரத்தை அழிக்க வேண்டிய அவசியத்தை மார்க்ஸ் இங்கே போதிக்கவில்லை; ஆனால் அந்தக் கருத்தை மிகவும் நெருங்கி வருகிறார்.

மார்க்ஸ் தன் முதிர்ச்சிக் காலத்தில் தணிக்கை அரசாணையைப் பற்றிய இந்தக் கட்டுரையை மிக உயர்வாக மதிப்பிட்டார் என்பது 1851ம் வருடத்தில் வெளிவரத் தொடங்கிய அவருடைய கட்டுரைகளின் தொகுப்பில் முதல் கட்டுரையாக அதை வைத்தார் என்பதிலிருந்து விளங்கும் (முதல் தொகுதி வெளியான பிறகு அரசாங்க நிர்ப்பந்தம் காரணமாக இப்பதிப்பு நிறுத்தப்பட்டது).

அக்கட்டுரை மிகவும் தீவிரமான முறையில் எழுதப்பட்டிருந்தபடியால் அதை ஜெர்மனியில் அச்சடிக்கின்ற பேச்சுக்கே இடமில்லை. மார்க்ஸ் எதிர்பார்த்ததைப் போல தணிக்கை முறை அக்கட்டுரையைத் தடை செய்தது; அதன் மூலம் அக்கட்டுரையில் அதைப் பற்றி எழுதப்பட்டிருந்த வர்ணனை எவ்வளவு துல்லியமானது என்பதை நிரூபித்தது. அக்கட்டுரை முதல் தடவையாக 1843-இல் ஸ்விட்சர்லாந்தில் வெளியிடப்பட்டது.

ஆனால் 1842ம் வருடத்தின் வசந்தகாலத்தில் Rheinische Zeitung பத்திரிகையில் ரைன் மாநில சட்டசபையில் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிய விவாதங்களைப் பற்றிக் கட்டுரை எழுதினார். அதில் இப்பிரச்சினையை வேறொரு கோணத்திலிருந்து அணுகினார்.

பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றி சபையின் உறுப்பினர்கள் தெரிவித்த பல்வேறு கருத்துக்களுக்கும் அவர்களுடைய சமூக-வர்க்க அந்தஸ்துக்கும் இடையிலுள்ள நேரடியான இணைப்பை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். அவர் பின்பற்றிய புதிய அணுகுமுறை இந்த உண்மையில் அடங்கியிருக்கிறது. இது முன்னே வைக்கப்பட்ட முக்கியமான காலடியாகும்.

பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிய விவாதத்தில் “சமூகக் குழுக்களின்” நலன்கள் சமரசப்படுத்த முடியாதபடி மோதுவதால், “பொதுவான” சுதந்திரம் இல்லை என்பது தெளிவாயிற்று, ஒவ்வொரு சமூகப் பிரிவும் தன்னுடைய “சொந்த” சுதந்திரத்தை ஆதரிக்கிறது.

முதலாளி வர்க்க, விவசாய வர்க்கக் குழுக்கள் கூட பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றித் தங்களுடைய கோரிக்கைகளின் குறுகிய தன்மையை விளக்கிவிட்டார்கள் என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். முதலாளி வர்க்க பத்திரிகைச் சுதந்திரம்-அது அப்பொழுது பிரான்சில் இருந்த வடிவத்தில்கூட- போதுமான சுதந்திரத்தைக் கொண்டிருப்பதாக மார்க்ஸ் கருதவில்லை.

பிரெஞ்சுப் பத்திரிகைகள் “ஆன்மிகத் தணிக்கைக்கு உட்பட்டிருக்காவிட்டாலும்… அவை பெருந்தொகைகளைப் பிணையாகக் கட்ட வேண்டியிருப்பதால் பொருளாயதத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன”, அவை “பெரும் வர்த்தக சூதாட்டத் துறைக்குள் இழுக்கப்பட்டிருக்கின்றன.”

இங்கே ஒரு புதிய கருத்து தோன்றுவதைத் தெளிவாகப் பார்க்கிறோம்: “ஆன்மிகத் தணிக்கை” “பொருளாயதத் தணிக்கையை”, முதலாளித்துவச் சமூகத்தின் வர்த்தக – பணவியல் உறவுகளைச் சார்ந்திருக்கின்றது. இக்கருத்து மார்க்ஸ் அடுத்தடுத்து எழுதிய ஒவ்வொரு புத்தகத்திலும் மேலும் வளர்த்துக் கூறப்படுவதை நாம் காண்கிறோம்.

ஜெர்மானிய மிதவாத அறிவுஜீவிகள் முதலாளித்துவ சுதந்திரங்களைத் தம்முடைய இலட்சியமாகக் கொண்டிருந்தனர்; ஆனால் மார்க்ஸ் அவற்றைத் தன் இலட்சியமாக ஒருக்காலும் கருதவில்லை என்பதை அவருடைய முதல் பத்திரிகைக் கட்டுரையே எடுத்துக்காட்டுகிறது. அவர் ஆரம்பத்திலேயே புரட்சிகர ஜனநாயகவாதியாகத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மிகவும் தீவிரமான முதலாளிவர்க்க மிதவாதிகள் செய்ய முடிந்ததைக் காட்டிலும் அதிக ஆழமான, முரணில்லாத முறையில் ஜெர்மானிய யதார்த்தத்தை விமர்சனம் செய்தார்.

ஒரு முறை சுதந்திரத்தை அனுபவித்த பிறகு ஒரு நபர் அதற்காக “ஈட்டிகளை மட்டுமல்லாமல் கோடரிகளையும் உபயோகித்துப்” போராட வேண்டும் என்று ஹெரடோடஸ் கூறியதை மேற்கோளாகக் காட்டி பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது விவாதத்தைப் பற்றிய தன்னுடைய கட்டுரையை மார்க்ஸ் முடிக்கிறார்.

Rheinische Zeitung பத்திரிகையில் மார்க்ஸ் மேதாவிலாசத்துடன் எழுதத் தொடங்கிய பொழுது அது உண்மையிலேயே பரபரப்பூட்டியது. மார்க்ஸ் தன்னுடைய திறமைகளை நிரூபிக்க வேண்டும் என்று நெடுங்காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள் திருப்தியடைந்தனர். பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றியும் அதை ஆதரித்தும் இப்படி மிக ஆழமான, நன்கு வாதிக்கப்பட்ட முறையில் இதற்கு முன்பு ஒருபோதும் எழுதப்படவில்லை என்று அ. ரூகே கூறினார்.

Rheinische Zeitung பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் மார்க்சின் செல்வாக்கு இதற்கு முன்பு கணிசமாக இருந்தது. அது இக்கட்டுரைத் தொடருக்குப் பிறகு மிகவும் அதிகரித்துவிட்டபடியால் மார்க்ஸ் அதன் தலைவர்களில் ஒருவரானார். சிறிது காலத்துக்குப் பிறகு அப்பத்திரிகையின் தலைமை ஆசிரியராக அவர் நியமிக்கப்பட்டார். ரைன் மாநில சட்டசபையில் மரங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் சட்டத்தின் மீது நடைபெற்ற விவாதங்களைப் பற்றி இப்பத்திரிகை 1842 அக்டோபரில் ஒரு புதிய கட்டுரைத் தொடரை வெளியிட்டது.

மார்க்சின் படைப்பாற்றல் நிறைந்த வாழ்க்கையில் இக்கட்டுரைகள் முக்கியமானவையாகும். முதல் தடவையாக அவர் சூக்குமக் கருத்தாக்கம் என்ற வானத்திலிருந்து “உறுதியான பூமிக்கு” வரும்படி, அதாவது ஹெகலின் தத்துவஞான அமைப்பில் இடம்பெறாத பொருளாயத நலன்களைப் பற்றி எழுதும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இந்தச் சமயத்திலிருந்து மார்க்சினுடைய சிந்தனை சமூகத்தின் வர்க்க மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பைப் பகுத்தாராய்கின்ற திசையில் செலுத்தப்பட்டது. மரம் திருடப்படுவதைப் பற்றிய விவாதங்களைப் பற்றிய கட்டுரையைப் படிக்கின்ற பொழுது புதிய கருத்துக்களின் “உதயத்தை” அறிவிக்கின்ற முதல் “மின்னல் வீச்சுக்களை” நாம் கற்பனை செய்ய முடிகிறது.

மரங்கள் திருடப்படுவதும் வேட்டையாடுதல் மற்றும் காடுகளைப் பாதுகாத்தலைப் பற்றிய சட்டங்கள் மீறப்படுவதும் பொருளாதார வாழ்க்கையில் அற்பமான விஷயமாகத் தோன்றும். ஆனால் அவற்றுடன் தொடர்புடைய சந்தர்ப்பங்களைப் பற்றி செய்யப்பட்ட ஆராய்ச்சி பெருந்திரளான ஏழை மக்களின் வறுமை நிலையையும் அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்டிருப்பதையும் முழுமையாக எடுத்துக் காட்டியது.

பெரிய நிலவுடைமையாளர்களின் நலன்களுக்குச் சாதகமான முறையில் அடிப்படை மனித உரிமைகள் எவ்வளவு அவமானகரமான முறையில் மீறப்பட்டன, தனிச் சொத்துடைமைக்காக மக்கள் எப்படி பலியிடப்பட்டார்கள் என்பதை மார்க்ஸ் கண்டார்.

“தனிச் சொத்துடைமை” மனித விரோதமானது, அது தனி நபருக்கு எதிராக இருக்கிறது, தனி நபருக்கு எதிராக எல்லாவிதமான குற்றங்களையும் நியாயப்படுத்துகிறது, அது மனிதனை மிருகத்தின் நிலைக்குத் தாழ்த்திவிடுகிறது என்பவை அவருக்கு மிகவும் தெளிவாயிற்று.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram