Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 831

கனடாவில் “ஈழத்தின் நினைவுகள்” – இறுதிப்பாகம் – ரதி

41

vote-012வசதி படைத்தவர்கள் போராடினால் அது போராட்டம். ஏழைகளின் போராட்டம் பயங்கரவாதம். இப்படித்தான் கனடிய பத்திரிகை ஒன்று கடந்தவருடம் ஈழப்போர் வேரறுக்கப்பட்ட காலத்தில் ஒரு தடவை எழுதியது. ஏழை ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் பயங்கரவாதமாக்கப்பட்டு, ஐம்பதாயிரம் உயிர்கள் காவு வாங்கப்பட்டு  ஓராண்டு உருண்டோடிவிட்டது. எங்கள் விடயத்தில் உலகத்தின் அறம் பிறழ்ந்து, எங்களுக்கு மட்டும் நீதி பிழைக்கவில்லை. இன்னும் இலங்கையில் எங்களுக்கு உயிர்வாழும் உரிமையும் கிடைக்கவில்லை.

மழை நின்றும் விடாத தூவானமாய் அரசபயங்கரவாதத்திற்கும் எந்த குறையும் இல்லை. ஈழத்தின் மண், பெண், பொருள் எல்லாம் சிங்களப் பேரினவாதத்தின் சொத்தாகிப்போனது. அவன் நினைத்தபடி சூறையாடலாம். கேள்வி கேட்க யாருமில்லா பூமியாகிப்போனது இன்று ஈழம். எங்கள் மண் இப்போது சிங்களர்களுக்கு சுற்றுலா மையம். எங்களின் அவலங்கள் அருங்காட்சிப்பொருள். ஈழத்தின், தமிழனின் பூர்வீக அடையாளங்கள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, எங்களின் வளங்களைச் சுரண்ட முதலீட்டாளர்களுக்கு வியாபாரத்தின் வாசல் கதவுகள் அகலத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.

இப்போதும் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செய்தி பதின்மவயதுப்பெண் காணாமற்போனார், இளைஞர் சடலமாக மீட்பு, கேள்விமுறையற்ற சமூக சீர்கேடுகள். காணவும், கேட்கவும் சகிக்காத இந்த அவலங்கள் தான் இந்த பூலோகத்தின் பிதாமகர்களாக தங்களை பிரச்சாரப்படுத்தியவர்கள் ஈழத்தில் “பயங்கரவாதத்தை” அழித்த கதையின் விளைவு மற்றும் கிளைக்கதை. இந்த கிளைக்கதைகளின் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்துதானே உலகத்து வீதிகளிலெல்லாம் இறங்கி ஈழத்தமிழன் போராடினான்.

ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், கனடா சர்வதேச சமூகமாக அதிலிருந்து தவறிவிட்டது என்று காலம் கடந்து மன்னிப்பு கேட்கிறது. ஐ. நாவும் அதை ஆஹா, ஓஹோ என்று பாராட்டுகிறது. ஈழத்தமிழனின் அழிவை சர்வதேசம் “இன அழிப்பு” என்று ஒத்துக்கொள்ளுமா என்பது ஒருபுறமிருக்கட்டும். இவ்வாறு, காலம் கடந்து எங்களிடம் மன்னிப்பு கேட்காதீர்கள் என்றுதான் கடந்தவருடம் இந்தப் பிதாமகர்களின் மனட்சாட்சியின் கதவுகளைத் தட்டினோம், திறக்கவில்லை. மனிதாபிமானத்தின் வாசலாவது திறக்கும் என்று வீதி, வீதியாய் விழுந்து கிடந்து அழுது புரண்டோம். மனிதம் செத்து சவமாகிவிட்டது, ஆதலால் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தங்கள் செய்கைகளில் காட்டினார்கள்.

நாங்களும் விடாப்பிடியாக எங்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை ஓயப்போவதில்லை என்று இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறோம். புலத்தில் தமிழன் அடங்கவே மாட்டான் என்று பலருடைய குடைச்சலுக்கும் எரிச்சலுக்கும் வேறு காரணமாக இருக்கிறோம். உலகம் முழுக்க சிதறிக்கிடந்த தமிழர்களை ஈழம் என்ற ஒற்றைச் சொல் இன்று ஒன்றாய் இணைத்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் தங்களுக்குள் ஒருகாலத்தில் ஏதேதோ காரணங்களினால் பிளவுபட்டிருந்தாலும் இன்று இனம் என்ற ரீதியில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். நாங்கள் எப்படி ஒன்று பட்டோம் என்பதை என் பார்வையில் திரும்பிப் பார்க்கிறேன்.

ஈழத்திலிருந்து தமிழர்கள் தங்கள் சாதிய விழுமியங்களையும் கொஞ்சம் கட்டிக், காவிக்கொண்டுதான் கனடா வந்தார்கள். புலம்பெயர் தேசங்களிலும் ஈழத்தமிழர்கள் சாதிய வேற்றுமைகளோடும் முரண்பாடுகளோடும் மல்லுக்கட்டியவர்கள் தான். இப்படிப்பட்டவர்கள் கனடாவில் எப்படி ஒற்றுமையாய் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு வந்தார்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். தம் இனம் அழிக்கப்படுவது கண்டும் கூட ஒன்று சேரவில்லை என்றால் எப்படி?

கனடாவில் சாதிய வேற்றுமைகள் தனிமனித முரண்பாட்டுக் கோலங்களாய் சிதறிக்கிடந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அது சமூக பண்பாட்டு உறவுகளில் விரிசல்களை கடந்தகாலத்தில் உண்டாக்கியது  என்று சொல்லுமளவிற்கு இல்லை என்பது தான் யதார்த்தம். ஆனாலும் ஈழத்தில் ஆரம்ப காலத்திலிருந்ததைப் போல் புலம் பெயர் தேசங்களில் சாதியின் பெயரால் யாருடைய முன்னேற்றமும் தடைப்பட்டதை நான் அறியவில்லை.

ஈழத்தின் பால் அக்கறை கொண்டவர்கள் இந்த வேற்றுமைகளை கடந்துதான் தங்கள் அர்ப்பணிப்புகளை இன்றுவரை செய்துகொண்டிருக்கிறார்கள். முந்தைய தலைமுறையைச் சேர்ந்த கொஞ்சம் அழுகிப்போன ஆப்பிள்கள் எப்போதும் போல் இன்னமும் அழுகிக்கொண்டுதானிருக்கின்றன. இவ்வளவு அழிவுகளுக்குப் பிறகும் நாம் சாதியால் பிளவுண்டு கிடந்தால், இந்த இனம் எப்போது தான் மீள்வது!! பிரிவுக்கு வேண்டுமானால் பிறர் காரணமாகலாம். ஈழத்தமிழர்களின் ஒற்றுமை என்பது அடுத்தவர் அறிவுரை கூற வருவதாய் கேலிப்பொருளாய்  இருக்கக்கூடாது என்பதுதான் என் கருத்து. அதை ஈழத்தமிழர்கள் எப்போதோ உணர்ந்தும் விட்டார்கள்.

எங்கள் புதிய தலைமுறை சாதிபேதம் அற்ற ஓர் சமுதாயத்தின் முன்னோடியாய் இருக்கிறது என்பதில் ஓர் ஈழத்தமிழாய் நான் பெருமைப்படுகிறேன். ஆம், எங்களிடம் சாதிபேதம் என்ற வேற்றுமைகள், முரண்பாடுகள் இருந்தது என்பதை ஒத்துக்கொள்கிறோம். ஆனால் கடந்தகால முரண்பாட்டு மூட்டைகளை அவிழ்த்துப்போட்டு ஆராய்ச்சி செய்வதில் இனிமேல் பயன் ஒன்றும் இல்லை. தயவு செய்து யாராவது பழங்கதை பேசி எங்கள் நிகழ்கால ஒற்றுமையை குலைக்காதீர்கள்.

ஆரம்பகாலங்களில் தமிழர் அமைப்புகள் என்பது பெரும்பாலும் ஊர்ச்சங்கங்கள் மற்றும் ஒன்றிரண்டு சமூக அமைப்புகள் (Social Movements) இப்படித்தான் இருந்தன. “பொங்குதமிழ்” என்ற நிகழ்வுதான் ஆரம்பத்தில் தமிழர்களை புலத்தில் ஒற்றுமையாய் சேரவைத்தது. எங்கள் உரிமைப்போரை வேரறுக்கும் முஸ்தீபு நடவடிக்கைகள் புலத்தில் இலங்கை அரசால் முடுக்கி விடப்பட்டபோது தமிழர்களால் தங்கள் ஒருமைப்பாட்டையும், ஈழவிடுதலையையும் வலியுறுத்தி எத்தனையோ தடைகளையும், ஒடுக்குமுறைகளையும் கடந்து நடத்தப்பட்ட நிகழ்வுதான் அது.

நாங்கள் என்ன தான் ஆயிரமாயிரமாய் கூடி எங்கள் அபிலாஷைகளை இவர்களுக்கு சொல்ல முயன்றாலும் எங்களின் செய்திகளுக்கு எந்தவொரு கனேடிய ஊடகமும் முக்கியத்துவம்  கொடுப்பதில்லை.  பயங்கரவாதத்திற்கு எதிரான என்ற போர்வையில் நாங்கள் ஈழத்தில் இறந்தர்வர்க்காய் வருடம் ஒருமுறை கூடியழக்கூட ஓர் மண்டபமேனும் கனடாவில் தரமறுத்தபோது ஜனநாயகம் இங்கேயும் ஏன் எங்களை மட்டும் புறக்கணிக்கிறது என்று வேதனையும், அயர்ச்சியுமே மிஞ்சியது.

அதன் பிறகு சின்ன, சின்னதாய் அறவழிப்போராட்டங்கள், சில அரசியல் முன்னெடுப்புகள் என்பன புலத்தில் நடந்தேறின. ஆனால், புலத்தில் Mainstream Media என்று சொல்லப்படுகிற தேசிய ஊடங்கங்களில் எங்கள் சமூக அமைப்புகளின் செயற்பாடுகள் செய்திகளில் புறக்கணிக்கப்பட்ட அரசியல் அப்போது ஏனோ புரியாமல் போனது. மாற்றங்கள் குறித்த எந்தவொரு சமூக அமைப்பின் முயற்சிகளும், போராட்டங்களும் பிரபல ஊடகங்களின் மூலம் தெரியவந்தால் அன்றி அந்த அமைப்புகளின் குறிக்கோள்கள் பொதுமக்களை அல்லது அதற்குரிய அரசியல் களங்களை சென்றடையாது என்பது தான் யதார்த்தமான உண்மை.

சிங்கள அரசு திரைமறைவில் அரசியல் ராஜதந்திர முயற்சிகளில் எங்களை முடக்கும் முயற்சிகளில் முனைப்பாய் இருக்க புலத்தில் எங்களின் அரசியல் வெளி முற்றுமுழுதாய் அடைக்கப்பட்டது. இலங்கையின் தலைநகரில் குண்டுவெடித்தால் பலகோணங்களில் படம்பிடித்து காட்டிய ஊடகங்கள், வடக்கு, கிழக்கில் தசாப்தங்களாய் அரச படைகள் நடத்தும் படுகொலைகளை அறியாமல் இருந்தார்களா என்று என் மனதில் கேள்வி எழாமல் இல்லை.

இப்படியே தமிழ் இணையத்தில், தமிழ் ஊடகங்கள் மூலம் மட்டுமே தாயக செய்திகளை அறியமுடிந்தது. ஈழத்திலிருந்து யாராவது தொலை பேசினால் எதைத் தான் பேசமுடியும். எல்லாம் உங்களுக்கு தெரியும் தானே என்று தங்கள் சொல்லமுடியாத அவலத்தை ஒற்றைவரியில் அடக்குவார்கள். ஈழத்தில் நிலைமைகள் மேசமடைந்து வன்னியில் அது உக்கிரமடையும் போது தான் ஈழத்தமிழர்கள் தாங்களாகவே வீதியில் இறங்கி போராடத்தொடங்கினார்கள். இந்தப் போராட்டங்களில் ஊர்ச்சங்கங்கள், சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் எல்லோரும் காலத்தின் தேவை கருதி ஒன்றாய் நின்றார்கள்.

ஆனாலும், இவர்களையெல்லாம் முன்னின்று ஒன்றிணைத்து தமிழ் சமூகத்தை மட்டுமல்ல கனடிய சமூகத்தையே வியப்பில் ஆழ்த்தியவர்கள் எங்கள் இளையவர்கள். எங்கே, எதை, எப்படி செய்யவேண்டும் என்று அரசியல் கலந்து விளக்கமாய் சொல்லிகொடுத்தார்கள். இவர்களுக்கு பக்கபலமாய் போருக்கெதிரான அமைப்புகள், கல்விமான்கள், இங்குள்ள தொழிற்சங்கங்கள் , பல்கலைக்கழக மாணவர், இவர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்த தமிழ் ஊடகங்கள் மற்றும் பொருளாதார ரீதியில் உதவியளித்த தனியார் வியாபார நிறுவனங்கள் என்று எல்லோரும் உறுதுணையாய் நின்றார்கள்.

ஏற்கனவே தமிழன் மீது திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட தடைகளால் பயந்து கிடந்தவர்களுக்கு கனடாவின் உரிமைகள், சுதந்திரத்துக்கான சாசனத்தின் படி, “சிந்தனை, நம்பிக்கை, கருத்துரை, பத்திரிக்கை சுதந்திரம், பேச்சு சுதந்திரம், அமைதி நிலையில் ஒன்று கூடுதலுக்கான சுதந்திரம்” என்பதன் அடிப்படையில் வீதியில் இறங்கி போராடும் உரிமை உண்டு என்று புரிய வைத்தார்கள். இது எங்கள் சொந்த மண்ணல்ல. இங்கே எப்படி போராட முடியும் என்று தயங்கிய தமிழ் சமூகத்தை மிக குறுகிய காலத்தில் அரசியல் மயப்படுத்தினார்கள் எம் இளைய தலைமுறையினர்.

ஊர்வலங்கள், அமெரிக்க, இலங்கை, இந்திய, சீன தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல், மனிதச்சங்கிலி இப்படித்தான் போராட்ட வடிவங்கள் இருந்தன. Acting Crowd என்ற கருத்தியல் காட்சியாய் கண் முன்  விரிவதை தமிழ் சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அதன் உண்மையான வடிவத்தை சில பல்கலைக்கழக மாணவர்கள் கனடாவிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு சென்று ஈழத்தமிழர்களை கொல்வதை நிறுத்தும்படி வேண்டுகோள்  விடுத்தபோதுதான் நேரடியாக கண்டுகொண்டேன். “நீங்கள் தானே கனடாவில் எங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்கிறீர்கள். அதனால் உங்களிடம் ஓர் வேண்டுகோளை முன்வைக்க வந்திருக்கிறோம்” என்று சொன்ன சில பல்கலைக்கழக மாணவர்களை அவர்கள் தமிழர்கள் என்பதால் “பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்தி இலங்கை தூதரக அதிகாரிகள் கனடிய காவல் துறையை வேறு துணைக்கழைத்தார்கள்.

எப்போதுமே பரபரப்பு செய்திகளுக்கு அலையும் கனடிய ஊடகங்கள் பரிவாரங்களோடு வந்து அதை வானலையில் எடுத்துவந்து உதவினார்கள். மாணவர்கள் வரம்பு மீறுவார்கள்; அதை அப்படியே நேரலையில் ஒளிபரப்பி ஓர் பரபரப்பு செய்தி காட்டலாம் என்று காத்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது வேறுவிடயம். அது அப்படியே தமிழ் ஊடகங்கள் மூலமாக தமிழ் பொதுமக்களையும் சென்றடைந்தது. யாருடைய தூண்டுதலோ அல்லது வழிநடத்தலோ இல்லாமலே அங்கிருந்த மாணவர்களுக்கு ஏதாவது நடக்கக்கூடாது என்ற பதைப்புடனும், அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்துடனும் தமிழர்கள் Toronto விலுள்ள இலங்கை தூதரகம் முன் ஒன்றாய் கூடி கோசங்களை எழுப்பத்தொடங்கினர்.

இந்த நிகழ்வு மேலும் புலத்தில் தமிழர்களுக்கு வீதியில் இறங்கி போராடும் தைரியத்தை கொடுத்தது. முக்கியமான ஊர்வலம் என்றால் தமிழர்கள் அதிகம் வாழும் Ontario மாகாணத்தில் இதயப்பகுதி என்றழைக்கப்படுகிற Toronto வின் முக்கியமான தெருக்களில் நடந்ததை தான் குறிப்பிடவேண்டும். ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள். அடுத்து அமெரிக்க துணை தூதரகத்தின் முன் இரவு பகலாய், பனியையும் மழையையும், குளிரையும் கொஞ்சமேனும் பொருட்படுத்தாமல் மாதக்கணக்கில் நடந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல். இவையெல்லாம் கனடிய ஊடகங்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பியது.

அதுவரை ஈழத்தமிழர் பிரச்சனையைப் பற்றி பேசாத கனடிய ஊடகங்கள், ஈழப்பிரச்சனையில் இலங்கை அரசு சொல்வதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான தமிழர்களுக்கென்று ஓர் கருத்து உண்டு என்பதை புரிந்து கொள்ளத்தொடங்கினார்கள். Live, நேரடி, ஒளி, ஒலிபரப்பில் எம்மவர்களையும், சமூக அமைப்பை சேர்ந்த தலைவர்களையும் பேசவைத்து எங்கள் கருத்துகளை கனடிய சமூகத்தினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் எட்டச் செய்தார்கள். ஈழத்தமிழர்கள் பிரச்சனை ஓரளவிற்கு கனடிய அரசுக்கு தெரிந்தாலும் Mainstream Media மூலம் அது வெளியே சொல்லப்படவில்லை என்றால் அரசியல்வாதிகளும், அரசுகளும் வாழாதிருப்பார்கள்.

கனடிய ஊடகங்கள் எங்கள் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தொடங்க எம்மவர்களும் இன்னும் அதிகமாக போராட்டங்களில் கலந்துகொள்ளத்தொடங்கினார்கள். சமூக அமைப்புகளோடு சேர்ந்து ஒட்டுமொத்த சமூகமாய் ஒன்றாய் நின்று முயற்சி செய்தபோது அதற்குரிய பலம், அங்கீகாரம் இரண்டுமே கிட்டியது.

ஈழத்தில் போர்நிறுத்தம் வரும்வரையில் ஓய்வதில்லை என்ற உறுதியுடன் ஊர்வலங்கள் போனோம், உண்ணாவிரதமிருந்தோம், ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்தோம். தமிழர்கள் வாழ்ந்த ஒவ்வோர் மாகாணத்திலும் (Quebec-Montreal, British Columbia-Vancouver, Ontario-Metro Toronto) நகர்களிலும் தங்கள் முதுமை, மூட்டுவலி என்று எதையும் பொருட்படுத்தாது முதியோரும், மகளிர் அமைப்புகளும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்தினோம். கனடிய அரசைப்பொறுத்தவரை எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காய் ஆனது.

இனிமேல் பொறுப்பதற்கு காலம் இல்லை என்று சில மாணவர்கள் கனடிய பாராளுமன்றத்தின் முன் வாரங்களாய் தாங்கள் வாக்களித்து, தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய ஒருவராவது வந்து எங்கள் மனிதாபிமானக் கோரிக்கைகளை செவிமடுப்பார்கள் என்று இரவு பகலாய் எலும்பையும் துளைக்கும் குளிரில் விறைத்து கொண்டே காத்துக்கிடந்தார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். நாங்களும் எங்களால் முடிந்தவரை முப்பதாயிரம் பேர் வரை நாடாளுமன்றத்தின் முன் கூடி, கோஷமிட்டு, அழுது மண்டியிட்டு எங்கள் உறவுகளுக்காய் உயிர் பிச்சை கேட்டோம்.

பாராளுமன்றத்தை விடுமுறைக்காய் மூடும் கடைசி நாளில் நாங்கள் மழையிலும் குளிரிலும் வெளியே நம்பிக்கையின் கடைசி இழையும் அறுந்து போகும் தறுவாயில் உயிர் பதைத்துக் காத்துக்கிடந்தோம். எங்கள் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துங்கள் என்று நாங்கள் பாராளுமன்ற வாசலில் நின்ற அதேநேரம், சில அரசியல் வாதிகள்  Holocaust Survivors என்றழைக்கப்படும் யூத இன முதியோர்களை கைப்பிடித்து அழைத்து வந்து மேடையேற்றி யூத இனத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை, அதிலிருந்து தப்பிழைத்தவர்களின் கதைகளை உணர்வுபூர்வமாக, உருக்கமாக கேட்டுக்கொண்டிருந்ததை பிறகு தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்ட போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே பயந்து (அழுதுவிடுவோம் என்ற பயம் தான்) கல்லாய் சமைந்தோம்.

இவற்றையெல்லாம் விட எரிச்சலான விடயம் கனடிய பாரளுமன்றத்தில் எங்களுக்காய் ஓர் சிறப்பு விவாதமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர்கள் (Visible Minority களுக்கான சிறப்பு விவாதம். வழக்கம் போல் எங்கள் கனடிய பிரதமர் கலந்துகொள்ளவில்லை என்பதை வருத்தம் ஏதுமின்றி பதிந்துகொள்கிறேன்) மூச்சைப்பிடித்து, இரவை நீட்டித்து   எங்களுக்காய்  விவாதம் செய்து “இலங்கை” அரசுக்கு ஒரு மில்லியன் டாலர்களை கொடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதில் ஒற்றை காசாவது தமிழனுக்கு போய் சேருமா என்பது ஒருபுறமிருக்கட்டும். ஈழத்தில் வன்னி காடுகளில் செத்துக்கொண்டிருக்கும் தமிழனுக்காய், அவன் பெற்ற குழந்தைகளுக்காய் நாங்கள் போர் நிறுத்தம் வேண்டி நிற்க தமிழகத்திலிருந்து சட்டி பானையும், புடவை துணியும் அனுப்பிய கதைக்கும் இதற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?

பூமிப்பந்தின் எந்தவொரு நாடாயினும் அரசியலின் இயங்குவிதி எப்போதுமே ஒன்றுதான் போலும். நாடாளுமன்றத்தின் கதவுகள் மூடப்பட, அடித்துப்பிடித்து, முண்டியடித்து மாகாண சபை மன்றத்தின் முன் கூடினோம் (Ontario, Queen’s Park). அங்கேயும் அழுதோம், ஒப்பாரி வைத்தோம், கோஷமிட்டோம், எங்கள் முன் தோன்றி ஓரிரு வார்த்தைகள் பேசிய குட்டி அரசியல் வாதிகளுக்கு வானைப்பிளக்கும் அளவிற்கு கை தட்டினோம். அவர்களும் இந்த அப்பாவிகள் எப்படியும் அடுத்த தேர்தலில் எனக்கே வாக்களிக்கும் அளவிற்கு பேசியிருக்கிறேன் என்ற திருப்தியோடு எங்களிடம் தமிழில் “நன்றி, வணக்கம்” சொல்லி விடை பெற்றார்கள்.

இவை தவிர ஒருமுறை Ontario, Toronto வில் அமெரிக்க துணைத்தூதரகத்திற்கு முன் கூடி நின்ற தமிழர்கள் ஊர்வலம் போகிறோம் என்று ஓர் இரவு அகால வேளையில் பெருந்தெரு (Gardner Express Way) ஒன்றை உயிரை கூட துச்சமாக மதித்து வழிமறித்தார்கள். உற்பத்திக்கான பொருட்களை சேவைகளை காவிச் செல்வதில் Ontario வில் இந்த பெருந்தெருக்கள் (Highway) மிக முக்கியமானவை. கனடிய சட்ட திட்டங்களின் படி பார்த்தால் பெருந்தெருவை வழிமறிப்பது என்பது எல்லை மீறும் செயல் தான். பொது மக்களுக்கு அசெளகர்யங்களை உண்டாக்கும் செயல் தான். என்னதான் ஈழத்தின் உறவுகள் படும் துன்பம் எங்களை வதைத்தாலும் யாருமே இங்கு வன்முறையில் ஈடுபடவில்லை என்பதும் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. அவர்கள் செய்ததது சரியா, பிழையா என்று இன்றுவரை என்னால் ஓர் முடிவுக்கு வர முடியவில்லை.

அன்றிரவு வேலைத்தளத்தில் இருந்ததனால் நான் பங்குபற்றவில்லை. ஆனால் அன்றிருந்த மனோ நிலையில் ஊர்வலத்தில் நானும் இருந்திருந்தால் நிச்சயம் அவர்களில் ஒருவாராகியிருப்பேன் என்று தான் தோன்றுகிறது. அன்று அரசு இயந்திரம் நினைத்திருந்தால் எம்மவர்களை அற்ப பதர்களாய் காவல் துறையை கொண்டு எத்தனையோ வழிகளில் அங்கிருந்து துரத்தியடித்திருக்க முடியும். ஏன், கைது செய்து சட்டப்படி நடவடிக்கை கூட எடுத்திருக்கலாம். அப்படி ஏன் செய்யவில்லை என்பதற்கு எனக்கு தெரிந்த ஒரே காரணம் அந்த நேரங் கெட்ட நேரத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் பல பெண்களும் அங்கு நின்றதது தான்.

அதை தொலைக்காட்சியில் பார்த்த போது உண்மையில் கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். எங்கள் குடும்ப நண்பர்களில் ஒரு பெண் தனது ஆறே, ஆறு மாத குழந்தையுடன் அங்கு சென்று வந்த அனுபவத்தை பின்னர் எனக்கு சொன்னார். அன்று எங்களைப் பற்றி அநேகமான கனேடியர்கள் வாயிலிருந்து உதித்த வார்த்தைள், “They are crazy” என்பது தான். நிச்சயமாக யாரும் சட்டத்தை மதிக்காமல் இதை செய்யவில்லை என்பது தான் எனது கருத்து. இதையெல்லாம் Collective Behavior, Moral Panic என்று யாராவது விமர்சிக்கலாம். ஆனால், எங்கள் மீதான இந்த கருத்தியல் விமர்சனங்களைத் தாண்டி நாங்கள்  வேண்டியதெல்லாம் ஈழத்தில் இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்படவேண்டும், நிரந்தர போர்நிறுத்தம் செய்ய கனடா முயல வேண்டும் என்பது தான்.

இந்த ஒரு விடயத்தில் அன்று எங்கள் மனோநிலையை புரிந்து கொண்டு எங்கள் மீது கடும் நடவடிக்கை ஏதும் எடுக்காத கனடாவுக்கு என் நன்றிகள். அடுத்து, எந்தவொரு விடயத்திலும் சமூகத்தில் ஓர் பிரக்ஞையை, விழிப்புணர்வை உருவாக்க வேண்டுமானால் சில பிரபலங்களின் புகழும் திறமையும் கூட பயன்படுத்தப்படுவதுண்டு. எங்கள் புலம் பெயர் ஈழத் தமிழ் சமூகத்தில் சர்வதேச ரீதியில் புகழ் பெற்றவர்கள் என்று யாரும் எங்களுக்காய் குரல் கொடுக்குமளவிற்கு பிரபல்யம் அடைந்திருக்கவில்லை. ஆனால் ஓரளவிற்கேனும் இசை மூலம் அறியப்பட்டவர் என்ற ரீதியில் M.I.A, என்றழைக்கப்படுகிற மாயா அருட்பிரகாசம் என்பவர் தான் பிரித்தானிய, அமெரிக்க, கனேடிய தொலைக்காட்சிகள் மூலம் மறுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உரிமைகள் பற்றி பேசினார். இதற்காக அவர் தேவைக்கதிகமாகவே விமர்சனங்களுக்குள்ளானது வேறு விடயம்.

சோமாலியாவுக்கு ஓர் K’naan என்றால், ஈழத்திற்கு ஓர் M.I.A, மாயா. இசையில் புயலாய், சூறாவளியாய், தென்றலாய் என்றெல்லாம் அடைமொழி கொண்டவர்கள் அல்ல இவர்கள். ஆனால், தாம் சார்ந்த மக்களின் வலிகளை இசைமூலம் யாதார்த்தமாய் உலகிற்கு உணர்த்த முயலும் சாதாரணர்கள். இன்னும் புலத்தில் அவர்களின் திறமைகள் இனங்காணப்படாமல் எத்தனையோ இளைய தலைமுறையினர் எங்களின் வலிகளை பாடல்களாய் இசை மூலம் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இறுதியாக புலம்பெயர் மண்ணில் இந்த போராட்டங்கள் அதன் விளைவுகள் பற்றிய இங்குள்ள மக்களின் கருத்துகள், நிலைப்பாடுகள் பற்றி சுருக்கமாக பதிந்து கொள்கிறேன். கனடியர்களில் ஒரு சாராரின் நிலைப்பாடு, உங்களுக்கு இந்த மண்ணில் அடைக்கலம் தந்திருக்கிறோம். உங்கள் பிரச்சனைகளை இங்கே கொண்டுவராதீர்கள் என்பதாகத்தான் இருந்தது. அவர்களின் கருத்தை முற்றுமுழுதாக மறுதலிக்க முடியாது தான். இங்குள்ள பெருந்தெருவை மறித்த போது இருவர் சொன்ன கருத்துக்களை இங்குள்ள ஊடகம் ஒன்று திருப்பி, திருப்பி ஒளிபரப்பியது. ஒருவர் சொன்னது, நான் மேலே சொன்னது தான். உங்கள் பிரச்சனைகளை இங்கே கொண்டு வராதீர்கள். அமைதியாய் இருக்கும் கனடாவில் பிரச்சனைகளை உண்டு பண்ணாதீர்கள்.

அமெரிக்காவின் வாலைப்பிடித்துக்கொண்டு இவர்கள் எந்தப்பிரச்சனையையும் கனடாவுக்குள் கொண்டுவருவதில்லை. எல்லாத்தையும் நாங்கள் தான் கொண்டுவருகிறோமா? என்னவோ போங்கள்!! இரண்டாமவர் சொன்னது அவர்களின் பிரச்சனையும், மனோ நிலையும் புரிந்துகொள்ளப்படவேண்டியவை. ஒரு முறை ஓர் ஊர்வலத்தின் போது நான்கு பாலஸ்தீனிய மாணவர்கள் எங்களிடம் வந்து சொன்னது, “We support you guys”. ஊர்வலங்கள், ஒன்றுகூடல்களின் போது நான் பொதுவாக கவனித்தது கறுப்பின மக்கள் தங்கள் ஆதரவை எங்களுக்கு தெரிவித்துப் போனது தான். “இப்போது வீதிகளில் நீங்கள் இவர்களுக்கு ஓர் இடைஞ்சலாய் இருக்கலாம். ஆனால், வரலாறு நிச்சயம் உங்களை ஓர் நாள் திரும்பிப்பார்க்கும்” என்று எங்களை கடந்து போன ஓர் கறுப்பின மூதாட்டி சொல்லிப்போனார்.

இவர்களுக்கு நாங்கள் அதிகமாய் உண்டு பண்ணிய இடைஞ்சல் என்னவென்பதை ஒரு ஆங்கில தொலைக்காட்சி நிருபர் அழகாகவும், சற்றே நக்கல் கலந்த தொனியுடனும் சொன்னார். இந்த ஊர்வலங்கள், ஒன்று கூடல்கள் கனடியர்களுக்கு “Ball Games” இற்கு நேரத்திற்கு போகமுடியாமல் போக்குவத்து நெரிசல்களை உண்டாக்கியது தான். கூடவே பத்திரிகைகளில், ஊடக கருத்து கணிப்புகளில் எங்கள் மீது விஷத்தை கக்கும், எங்களுக்கு ஆதரவளிக்கும் கருத்துகளும் பதியப்பட்டன. இனவழிப்பில் இருந்து தப்பிவந்த ருவாண்டாவை சேர்ந்தவர்கள் எங்களுக்காய் நகரின் மையப்பகுதியில் ஓர் இசைநிகழ்ச்சியோடு கூடிய ஓர் கவனயீர்ப்பு நிகழ்வை நடத்தினார்கள். நன்றிகள்.

ஆம், எங்கள் ஊர்வலங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் இங்குள்ள பொதுமக்களுக்கு சில அசெளகர்யங்களை உண்டுபண்ணியது என்பதை நான் மறுக்கவில்லை. பொதுமக்களுக்கு அசெளகர்யங்களை உண்டாக்குவது எங்கள் நோக்கமல்ல. எம் இனவழிப்பை தடுத்து நிறுத்த எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை. காவல் துறையினருடன் தள்ளு, முள்ளுப்பட்டதும் உண்டு. ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எங்களுக்கு ஆதரவளித்தார்கள் என்பதை விட தங்கள் கடமையை அவர்கள் செய்தார்கள் அவ்வளவே. இருந்தாலும் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

ஒரு முறை Queen’s Park முன் கூடி நின்ற போது எங்களுக்கு எதிராக சில விஷமிகள் “எங்களை பயங்கரவாதிகள்” என்று எழுதி ஓர் சிறிய விமானத்தில் கட்டியிழுத்துக்கொண்டு Toronto வை சுற்றிப்பறந்தார்கள். காவல் துறை தலையிட்டு அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்க வைத்தது மறக்க முடியாதது. எங்களைப் பொறுத்துக் கொண்டதற்கு கனேடிய காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் மீண்டும் நன்றிகள். நாம் கனடாவில் மறக்காமல் நன்றி சொல்லவேண்டிய மற்றவர்கள், தமிழக தமிழர்கள். கனடாவில் ஒப்பீடு ரீதியில் வட இந்தியர்களே அதிகம் வாழுகிறார்கள். தமிழ்நாட்டு தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவாய் தானிருக்கிறார்கள். அவர்கள் குறைந்த எண்ணிக்கையானோர் ஆயினும் எங்களோடு வீதிகளில் இறங்கி போராடத்தவறவில்லை. இது தங்களின் கடமை. தன் இனம் அழிக்கப்படுகிறது. அதனால் நான் இங்கே அவர்களுக்காய் குரல் கொடுக்கிறேன் என்று கண்கலங்கியபடியே சொன்னவர்களையும் பார்த்திருக்கிறேன். நன்றிகள் உறவுகளே.

இந்த போராட்டங்களின் மூலம் நாங்கள் முற்றுமுழுதாக எதையும் சாதிக்கவில்லை என்று சொல்லமுடியாது. என்னைப் பொறுத்தவரை இலங்கை அரசின் முகமூடியை ஓரளவிற்கு கிழிக்க முடிந்தது. எங்களின் மறுக்கப்பட்ட உரிமைகள், அபிலாஷைகளை உலகிற்கு சொல்ல முடிந்தது. இலங்கை அரசை, அவர்களின் பிரதிநிதிகளை கடந்து எங்கள் கருத்துகளையும் ஊடகங்கள் கேட்கவும், அவற்றை மக்களிடம் எடுத்து செல்லவும் முடிந்தது. தவிர கனேடியர்களே ஈழத்தமிழர்கள் விடயத்தில் கனடாவின் செயலற்ற தன்மைகளை சுட்டிக்காட்ட வைத்தது. கனடாவுக்கு இது தேவையற்ற சோலி. கனடா தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டும் என்றும் சிலர் சொன்னார்கள். மிக முக்கியமாக நாங்கள் கவனிக்க வேண்டியது, நாங்கள் கனேடிய சமூகத்தால் அடையாளம் காணப்பட்டதும் தான். முதலில் பத்தோடு பதினொன்று நிலைதான்.

ஆனால், இந்த போராட்டங்களுக்கு பிறகு நாங்கள் ஓர் கட்டுக்கோப்பான, ஒற்றுமையான (ஒருபோதும் மறக்காதீர்கள் ஈழத்தமிழர்களே) சமூகம் என்று அடையாளம் காணப்பட்டோம். நாங்கள் ஊர்வலம் நடத்தினால் வீதிகள் கூட சுத்தமாகும். அவ்வளவு பொறுப்போடு எம் இளையோர் குப்பைகளை கூட பொறுக்கிப் போட்டார்கள். கனேடிய ஊடகங்கள், கவனயீர்ப்பு நிகழ்வில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டாலும் அதை நேர்த்தியாக, கட்டுக்கோப்பாக நடத்துவதை வெளிப்படையாகவே பாராட்டின. இவ்வளவையும் சாதித்துக்காட்டியவர்கள் எம் இளையோர்.

எமக்குரிய தீர்வை நோக்கிய சில வெளிச்சப்புள்ளிகள் சற்றே வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. Channel 4 என்கிற பிரித்தானிய ஊடகம் முதல் சர்வதேச மன்னிப்புசபை (Amnesty International), சர்வதேச நெருக்கடிகள் குழு (International Crisis Group), மனித உரிமைகள் காப்பகம் (Human Rights Watch) போன்றவை இலங்கையில் போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்றும் இலங்கை அரசு போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகத்திற்கு ஆதாரங்களோடு அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிருக்கிறார்கள். இலங்கையின் போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் எங்களுக்குரிய நீதி தானாகவே கிடைக்கும் என்று பல தரப்பினரும் சொல்கிறார்கள்.

ஆனால் அது ஒரு நீண்ட நெடுந்தூரப்பயணம். நாங்கள் வெட்டியாய் வாழாதிருந்தால் மேற்கொண்டு எதுவுமே நடக்காது. தொடர்ந்து எங்களின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் மூலம் அவர்களின் முயற்சிகளுக்கு ஈழத்தமிழர்களாக துணை புரிவோம். சர்வதேச சமூகத்திற்கு நாங்கள் கொடுக்கும் அழுத்தங்கள் தான் அவர்களையும் எங்கள் விடயத்தில் எதையாவது செய்யத்தூண்டும். தமிழக தமிழர்களே ஓர் அந்நிய தேசத்து ஊடகத்திற்கு எங்கள் இனப்படுகொலையை நிரூபிக்க வேண்டும் என்ற தேவை எந்தளவிற்கு இருக்கிறது என்று எனக்கு சொல்லத்தெரியவில்லை.

ஈழத்தின் இனப்படுகொலையை மிக அண்மையிலிருந்தும் இந்திய, தமிழக ஊடகங்கள் வெளியே கொண்டுவராமல் வாழாதிருக்கிறார்கள். அதை வெளியே தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் அறியும் படி செய்யுங்கள். ஓர் வரலாற்றுப்பிழையை அரசியல் வேண்டுமானால் இழைக்கட்டும். நீங்கள் வரலாற்றுக்கடமையிலிருந்து விலகாதீர்கள். ஈழப்போரின் விளைவாக கொதிநிலையில் இருக்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள் மத்தியில் மாற்றங்கள் உருவாகுவதை அவதானிக்கிறேன். ஆரோக்கியமான, நம்பிக்கை தரும் மாற்றம். ஈழத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுங்கள்.

காலங்காலமாய் அடுத்தவர் மீதும், அடுத்த தலைமுறைகளிடமும் குற்றச்சாட்டுக்களை மட்டுமே கடத்திவிட்டு எமக்குரிய பொறுப்புகளிலிருந்து சுலபமாய் தப்பித்து வந்திருக்கிறோம். அந்தக்குற்ற உணர்விலிருந்து விடுபடவாவது எதையாவது சாதித்துவிட்டு அடுத்தவரை, அவர் தம் செயல்களை விமர்சிக்கலாம் என்பதே என் கருத்து. ஈழத்தின் உண்மை நிலையை, தேவையை தமிழகம் முழுக்க அறியச்செய்யுங்கள். இந்தியாவின், தமிழகத்தின் ஊடகங்களும், அரசியலும் செய்யத்தவறியதை நீங்கள் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடனும், ஈழத்தின் விடிவை என் வாழ்நாளில் காணுவேன் என்ற நம்பிக்கையுடனும்…..!

———————————————————————————————–

நான் ஏன் வினவு தளத்தில் எழுத ஆரம்பித்தேன்! ஈழப்போர் கொஞ்சம் மோசமடையத்தொடங்க  என்னுள் ஓர் அமைதியின்மையும், பதட்டமும் பரவத்தொடங்கியது. எங்கள் மறுக்கப்பட்ட உரிமைகளுக்கான போராட்டம்  நசுக்கப்படுவது என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்சமூகத்தையே நம்பிக்கையற்றவர்களாக மாற்றிவிடுமோ என்ற பயம் தலைதூக்கியது. புதினம், Tamilnet, யாழ் களம் என்பதுதான் ஆரம்பத்தில் என் இணையத்தின் எல்லைகோடாய் இருந்தது. ஈழப்போர் உக்கிரமடையத்தொடங்க அதன் எல்லைக்கோடும் நீண்டது.

ஈழத்தின் வீழ்ச்சியில் மகிழ்ச்சி கொள்ளும் சில ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை என்னை சுடத்தொடங்கியது. எங்கள் பக்க நியாயங்களை சொல்ல கொஞ்சம் இணையத்தில் அதிக நேரம் செலவிடத் தொடங்கினேன். அப்போது யாழ் களத்தில் அறிமுகமானது தான் வினவு தளம். நாங்கள் புலத்தில் வீதியில் நின்று போராடியபோது அவர்களும் சில போராட்டங்களை ஈழத்தமிழர்களுக்காக செய்ததை வினவு தளத்தில் பார்க்கநேரிட்டது. தமிழக ஊடகங்கள் செய்யவேண்டியதை இவர்கள் செய்துகொண்டிருப்பதாக தோன்றியது.

வினவு நண்பர்களுக்கு நன்றி சொல்ல வந்து, சிறிது சிறிதாய், அவசர அவசரமாய் பின்னூட்டமிட்டு விட்டு ஓடிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் என்னை மின்னஞ்சலில் இழுத்துப்பிடித்துக் கேட்டார்கள், ஈழம் பற்றிய உங்கள் அனுபவத்தை ஏன் வினவு தளத்தில் எழுதக்கூடாது என்று. முதலில் நிறையவே தயக்கம் தான் என்னிடமிருந்தது. இதற்கு முன் பதிவெழுதிய முன் அனுபவம் கூட எனக்கில்லை. எந்த நம்பிக்கையில் இவர்கள் என்னை எழுதச் சொல்கிறார்கள் என்று ஏதேதோ யோசித்தேன். இழுத்தடித்து வாரக்கணக்காய் யோசித்து சரி சொன்னேன். அவர்களின் நோக்கம் நல்லதாய் பட்டது. உண்மையில், என்னால் முடியும் என்று நிறையவே நம்பிக்கை கொடுத்தார்கள்.

ஒவ்வொரு பதிவையும் எழுதி முடித்துவிட்டு பரீட்சை எழுதிய ஓர் மாணவி போல் வினவின் பதிலுக்காய் காத்திருப்பேன். “இந்த பதிவும் நன்றாக வந்திருக்கிறது. உங்கள் எழுத்தின் முன்னேற்றத்தில் ஓர் தாயைப்போல் பூரிப்படைகிறோம்” என்று நிறையவே தட்டிக்கொடுத்தார்கள். சந்தோசப்பட்டேன். என்னை எழுதச்சொன்னவர்களின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் என்ற கவனத்துடன் முடிந்தவரை எழுத முயற்சித்தேன். ஏதாவது விடுபட்டுப்போனால் அதைரியப்படுத்தாமல் சுட்டிக்காடினார்கள். நன்றிகள்.

பதிவுலகின் ஓர் சாபக்கேடான தனிநபர் தாக்குதலுக்கு நானும் ஆளானேன். எடுத்த எடுப்பிலேயே என்னை ஒருவர் “Facist” என்று முத்திரை குத்த நிறையவே அதிர்ந்துதான் போனேன். அது இன்றுவரை கசப்பாய் என் மனதில் படிந்து போனது தவிர்க்கவியலாதது. இன்னொருவர் நான் அறியவே அறியாத ஓர் இணையத்தளத்தில் வேறு யாரோ பதிந்த கருத்தை நான் பதிந்ததாக என் மீது சகட்டு மேனிக்கு சேறு வாரி வீசியது எல்லாமே என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இது அத்தனையும் நான் புலி அபிமானி என்பதால் தான்.

புலி பற்றி எழுது என்றார்கள், எழுதாதே என்றார்கள். ஈழத்தில் புலிகள் இல்லாத தமிழன் நிலை என்ன என்பதை இணையத்தில் எனக்கு உணர்த்தினார்கள். இதில் நான் ஈழ வரலாற்றை எழுதுவதாய் சிலரின் எதிர்ப்பு வேறு. ஏன் அந்த மண்ணில் பிறந்து வளர்ந்த, அந்த காற்றை சுவாசித்த, போரின் வலிகளை சுமக்கும் எனக்கு எந்த தகுதி இல்லை ஈழவரலாற்றை எழுதுவதற்கு என்று யோசிக்க வைத்தார்கள். நான் வினவு தளத்தில் அதை எழுதக்கூடாது என்று என்னை எதிருங்கள் எனக்கு ஆட்சேபனை இல்லை. எத்தனையோ பேர் எழுதி விடியாத ஈழத்தமிழன் விதி நான் எழுதியா விடியப்போகிறது என்று நினைத்து ஏன் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டுமென்று எழுதமாட்டேன் என்று சொன்னேன்.

ஆனால், எனக்கு வினவு மற்றும் வினவு நண்பர்கள் உறுதுணையாய் இருந்தார்கள். ஆறுதலாய் இருந்தது. அப்போது நான் எழுதுவதை நிறுத்தக்கூடாது என்று மிகவும் அக்கறையோடு எனக்கு ஆதரவாக பேசியவர் நான் மதிக்கும் இணையத்தள நண்பர் R.V. மற்றும் பல நண்பர்கள். அவர்கள் அனைவருக்கும்  என் மனம் நிறைந்த நன்றிகள். நண்பர் R.V சொன்னது போல் நான் இணையத்தில் எழுதவந்து சில நல்ல நண்பர்களை சம்பாதித்தது சந்தோசமாக இருக்கிறது.

அது தவிர நான் ஈழத்தின் அவலத்தை என் அனுபவம் மூலம் சொன்னேன் என்பதை போலவே வினவுக்கு நான் ஈழம் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன் என்ற வாக்கை காப்பாற்றிவிட்டேன் என்பது கூட நிறைவை தருகிறது. ஈழம் பற்றி, ஈழத்தமிழனின் வலிகள் பற்றிப்பேச  உங்கள் தளத்தில் களம் அமைத்துக்கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள், வினவு.

ரதி

___________________________________________________

ரதியின் “ஈழத்தின் நினைவுகள்” இத்துடன் நிறைவுபெறுகிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று கிட்டத்தட்ட ஒரு வருட காலமாய் இந்த தொடரின் மூலம் தனது நினைவுகளை உணர்ச்சிக் குவியலாய் பகிர்ந்து கொண்ட ரதிக்கு நன்றி. இந்த தொடர் ஆரம்பித்தபோது முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு போர் முடிவுக்கு வந்திருந்தது. எல்லா நம்பிக்கைகளும் சோர்வுற்றிருந்த நேரத்தில் ஈழத்தின் நினைவுகளை மீண்டும் மீண்டும் மீட்டி கொண்டிவரும் அவசியமிருக்கிறது என்பதற்காகவே ரதியை எழுதுமாறு கோரினோம்.

இது அவரது தனிப்பட்ட அனுபவங்கள் மட்டுமல்ல, அகதிகளாய் விரட்டப்பட்ட ஈழத் தமிழினத்தின் வரலாற்றில் ஒர் அத்தியாயமும் கூட. இத்தகைய அனுபவங்கள் பதிவு செய்யப்படுவது எதிர்கால சந்ததியினருக்கு அவசியம். தனது அரசியல் தவறுகளை மீளாய்வு செய்து எதிர்காலத்தில் ஈழத்தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பார்கள். அந்த நம்பிக்கையுடன் ரதி இந்தத் தொடரை முடித்திருக்கிறார். போராடுவோம், இறுதிவரை!

–          வினவு

vote-012

ஈழத்து நினைவுகள் – அனைத்து பாகங்களும்….

UNTHINKABLE திரை விமரிசனம்: அமெரிக்க மனிதாபிமானத்தின் அழுகுணி ஆட்டம்!!

23

Unthinkable

Directed by
Gregor Jordan

Produced by
Marco Weber, Caldecot Chubb

Written by
Oren Moverman, Peter Woodward

Starring
Michael Sheen,
Samuel L. Jackson,
Brandon Routh,
Carrie-Anne Moss,
Stephen Root,
Martin Donovan,
Gil Bellows,
Benito Martinez,

Cinematography
Oliver Stapleton

vote-012UNTHINKABLE – என்றால் என்ன? நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. வழமையான முறைகளை கைவிட்டுவிட்டு எப்படியாவது தீர்வை கண்டறிவது. வழமையான முறைகள் ஏன் அப்படி தோல்வியடைகின்றன? இந்த வழமையான முறைகள், வழமையற்ற முறைகள் என்பதை யார் தீர்மானிப்பது?

தற்செயலாக இந்த ஹாலிவுட் படத்தை பார்த்த போது ஆரம்பத்தில் வழக்கமான விஜயகாந்த் மசாலா என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை என்பது கொஞ்ச நேரத்தில் தெரிய வந்தது. பார்வையாளனது பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் அரசியல், நீதி, நேர்மைகளை வைத்து உணர்ச்சியைக் கிள்ளி விடுவதில் அல்லது மடை மாற்றுவதில் இந்த படமும் இதன் இயக்குநரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

__________________________________________________

அமெரிக்க குடிமகனான யூசுப், மூன்று நகரங்களில் அணுகுண்டை தயார் செய்து வைத்து விட்டு, அவை மூன்று நாட்களில் வெடிக்கும் என்பதை வீடியோவில் தெரிவித்து விட்டு, போலீசிடம் தானாகவே பிடிபடுகிறான். எல்லா சேனல்களிலும் யூசுப்பின் பிரகடனம் வெளியிடப்படுகிறது. இதை எஃப்.பி.ஐ(FBI), இராணுவம், முதலான எல்லா அரசு பாதுகாப்பு நிறுவனங்களும் சேர்ந்து விசாரிக்கின்றன.

எஃப்.பி.ஐயின் பயங்கரவாத எதிர்ப்பு அணியின் தலைவியான ஹெலன் ப்ராடி ஒரு கண்டிப்பான, நேர்மையான, அதே சமயம் பெண் என்பதாலோ என்னமோ மென்மையான அல்லது மனிதாபிமான அதிகாரி. அவளது அணி உறுப்பினர்கள் அணுகுண்டு எப்படி சாத்தியமானது என்பதை விசாரிக்கிறார்கள். யூசூப்பிடமிருந்து அந்த மூன்று இடங்களை விசாரித்து தெரிந்து கொள்வதற்கு ராணுவம், ப்ராடி, அப்புறம் ஹெச் எனப்படும் நடிகர் சாமுவேல் ஜாக்சன் எல்லோரும் கூட்டாக முயல்கிறார்கள்.

கருப்பரான ஹெச் இந்த சிறப்பு நடவடிக்கைக்காக கொண்டு வரப்பட்ட வெளியாள். அவன் பொதுவில் அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும், மொன்னைத்தனத்தையும் கிண்டலித்து விட்டு இவையெல்லாம் வேலைக்காகாது என்ற கலக மனப்பான்மை உடையவன். ராணுவ தலைமை கமாண்டரிடமிருந்து விசாரிக்கும் பொறுப்பை வம்படியாக வாங்கிக் கொள்கிறான். அவனது நடத்தைக்கு நேரெதிர் துருவமாக ப்ராடி வாதிடுகிறாள். இவர்களுக்கிடையில் எப்படியாவது குண்டு இருக்கும் இடங்களை கண்டுபிடித்தால் சரி என்று ராணுவ கமாண்டர் காரியவாதமாக இருக்கிறான்.

முழுப் படமும் யூசுப்பை வைத்திருக்கும் சித்திரவதைக் கூடம் மற்றும் விசாரணை அரங்கிலேயே நடைபெறுகிறது. ஆரம்பத்தில் எல்லாரும் ப்ராடி உட்பட யூசுப்பிடம் விசாரிக்கிறார்கள். அவன் அசைந்து கொடுக்கவில்லை. நேரம் ஆக ஆக அழுத்தம் கூடுகிறது. என்ன செய்வது? அணுகுண்டுகள் வெடித்தால் குறைந்தது ஒருகோடி மக்கள் கொல்லப்படுவார்கள். எப்படி தடுக்க முடியும்?

வழக்கமான விசாரணைகளின் போதாமையை எள்ளி நகையாடும் ஹெச் ஒரு சுத்தியலால் யூசுப்பின் சுண்டுவிரலை அடித்து நசுக்குகிறான். அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். யூசுப் ஒரு அமெரிக்க குடிமகன் என்றும் அவனை இப்படி சித்திரவதை செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் ப்ராடி வாதிடுகிறாள். குண்டு வைப்பது மட்டும் சட்டத்திற்கு உடன்பாடானதா என்று ஹெச் மடக்குகிறான்.

சித்திரவதை செய்தது போக அவன் ஓய்வு எடுக்கும் நேரத்தில் ப்ராடி அன்பாக யூசுப்பிடம் விசாரிக்கிறாள். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நியாயம்தானா என்று கேட்கிறாள். யூசுப் ஒரு எக்காளமான புன்முறுவலுடன் அதை புறந்தள்ளுகிறான். ஒரு கட்டத்தில் தான் அமெரிக்க அதிபருக்கு ஒரு வேண்டுகோள் விடுவதாகவும் அது ஏற்கப்பட்டால் குண்டுகள் இருக்குமிடத்தை தெரிவிப்பதாகவும் கூறுகிறான். அது ஏற்கப்படுகிறது.

அவனது சித்திரவதை காயங்களை மறைத்து ஒரு போர்வை போர்த்தப்படுகிறது. காமராவைப் பார்த்து யூசுப் தெளிவான குரலில் பேசுகிறான். “உலகெங்கும் உள்ள இசுலாமிய நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் அமெரிக்க இராணுவம் தனது தாக்குதலை நிறுத்தி விட்டு வாபஸ் வாங்க வேண்டும்.” இதுதான் அவனது கோரிக்கை.

ஒரு அரை லூசு பயங்கரவாதிக்காக அமெரிக்கா வாபஸ் வாங்குவதா என்று ராணுவ கமாண்டர் தலையில் அடித்துக் கொள்கிறான். நிறைவேற சாத்தியமே இல்லாத இந்த கோரிக்கைதான் அவனது குண்டுகளை கண்டுபிடிக்கும் என்றால் வேறு வழியில்லை, விசாரணை சூடுபிடிக்கிறது. இல்லை சித்திரவதை அனல் பறக்கிறது.

நிதானமாக ஒரு லேத் பட்டறை தொழிலாளியின் லாகவத்தோடு எந்த உணர்ச்சியுமின்றி இயல்பாகவே ஹெச் சித்திரவதைக் கருவிகளோடு யூசுப்பை வதைக்கிறான். அவனது நகங்கள் பிடுங்கப்படுகின்றன. விரல்கள் நசுக்கப்படுகின்றன. அந்தரத்தில் கட்டி தொங்க விடப்படுகிறான். உடலெங்கும் கத்திக் குத்து காயங்கள். அவனது அலறல் அவ்வப்போது சித்திரவதைக் கூடத்தின் மரண இசையாக ஒலிக்கிறது. ஆனாலும் அவன் பேசமறுக்கிறான்.

ப்ராடி அவனிடம் அவனது அன்பான மனைவி, குழந்தை, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை எல்லாவற்றையும் சென்டிமெண்டாக விவரித்து கெஞ்சுகிறாள். அவன் ஒரு ஹீரோ எனவும், சும்மா பயமுறுத்துவதற்காகத்தான் இந்த வெடிகுண்டு விளையாட்டை அவன் நடத்துகிறான் என்றெல்லாம் பேசுகிறாள். யூசுப் ஒரு இடத்தின் முகவரியைக் கூறி அங்கு குண்டு இருப்பதாக தெரிவிக்கிறான்.

கமாண்டோ படை அங்குசென்று சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் அவனது புகைப்படத்தை எடுக்கும் போது அதிலிருந்த பொத்தான் அழுத்தப்பட்டு அருகாமை வணிக அங்காடியில் குண்டு வெடிக்கிறது. 53 பேர்கள் கொல்லப்படுகின்றனர். தான் விளையாடவில்லை என்பதை தெரிவிக்கவே இந்த குண்டு வெடிப்பு என்கிறான் யூசுப்.

அதுவரை நிதானமாக இருந்த ப்ராடி இப்போது சினங்கொண்டு அவனது நெஞ்சை கத்தியால் கிழித்தவாறே கொல்லப்பட்டவர்களுக்காக வாதிடுகிறாள். ஈராக்கிலும் இதே போல தினமும் 53 அப்பாவிகள் அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்படுகிறார்களே, அது தெரியாதா என்று வினவுகிறான் யூசுப். தன்னை அறியாமலே தானும் இப்போது சித்திரவதையைக் கைக்கொள்ள ஆரம்பித்த அதிர்ச்சியில் ப்ராடி செய்வதறியாது திகைக்கிறாள். அவளுக்குள் அந்த போராட்டம் தீவிரமடைகிறது.

எல்லா சித்திரவதைகளையும் கையாண்ட பிறகும் யூசுப்பை பேசவைப்பதில் தோல்வியடையும் ஹெச் சோர்வுறுகிறான். இருப்பினும் அவனது UNTHINKABLE முறைகள் இன்னும் தீரவில்லை. இசுலாமிய அடையாளத்துடன் இருக்கும் யூசுப்பின் மனைவியை அழைத்து வரச்சொல்கிறான். ஆரம்பத்தில் தனது கணவன் அப்பாவி என்று வாதிடும் அவளை பயங்கரவாதிக்கு உதவிய குற்றத்திற்காக உள்ளே தள்ள முடியும் என்று ப்ராடி மிரட்டுகிறாள்.

கணவனது எதிரே அமரவைக்கப்படும் அவள் அழுதவாறே ஹெச் எழுப்பும் கேள்விகளை கேட்கிறாள். யூசுப் அழுதாலும் உறுதியாக இருக்கிறான். இனி அவனது மனைவியையும் அவன் முன்னே சித்திரவதை செய்யப்போவதாக ஹெச் கூறுகிறான். அனைவரும் அவனை தடுக்கிறார்கள். அந்த தள்ளுமுள்ளுவையும் மீறி அவன் யூசுப் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுக்கிறான். அவளும் இரத்தம் வடிய கொல்லப்டுகிறாள்.

இந்த அதிர்ச்சியிலேயே எல்லாரும் நீடிக்க முடியவில்லை. குண்டுகள் வெடிப்பதற்கான நேரம் நெருங்கி வருகிறது. ஹெச் இப்போது யூசுப்பின் சிறு வயது குழந்தைகளை கேட்கிறான். ப்ராடி கடுமையாக எதிர்க்கிறாள். மற்றவர்கள் ஆதரிக்கிறார்கள். இசுலாமிய அடையாளத்துடன் வரும் அந்த பிஞ்சுகள் சித்திரவதைக் கூடத்தினுள் கொண்டு செல்லப்படுகின்றனர். யூசுப் வெளியே கொண்டு வரப்பட்டு சேம்பரின் கண்ணாடிக்கு முன்னே அமரவைக்கப்படுகிறான். அவனது முகமூடி கழட்டப்படுகிறது. உள்ள குழந்தைகளுடன் சித்திரவதைக்கு தயாரகும் ஹெச். இதற்கு மேலும் தாளமாட்டாமல் அழுது வெடிக்கும் யூசுப் கடகடவென்று குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் மூன்று இடங்களையும் கூறுகிறான். ஒரு வழியாக பிரச்சினை முடிவது போல தெரிகிறது.

இல்லை, யூசுப் பயன்படுத்திய அணுகுண்டு மூலப்பொருளில் மூன்று குண்டுகளில் வைத்தது போக மிச்சம் இருக்கிறது, அது நாலாவது குண்டு என்கிறான் ஹெச். அதைக் கண்டுபிடிக்க யூசுப்பின் குழந்தைகள் மீண்டும் தேவைப்படுவார்கள் என்கிறான். ப்ராடியைத் தவிர அனைவரும் ஆதரிக்கிறார்கள். குண்டு வெடித்தாலும் பரவாயில்லை, அந்த குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்கிறாள் ப்ராடி. யூசுப்பின் கட்டுக்களை அவிழ்த்து விடும் ஹெச் இனி அவன் சுதந்திரமனிதன் என்கிறான். ராணுவ கமாண்டரின் துப்பாக்கியைப் பறிக்கும் யூசுப் தற்கொலை செய்கிறான். வெடிக்கக் காத்திருக்கும் நாலாவது வெடிகுண்டின் நேரக்கருவியின் கவுண்டவுணோடு கேமரா நம்மிடமிருந்து விடைபெறுகிறது.

__________________________________________________

அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளை சிவில் உரிமைகளோடு விசாரிப்பதா இல்லை சித்திரவதை செய்து உண்மையை வரவழைப்பதா என்பதின் அறவியல் கேள்விகளை படம் எழுப்புகிறது. ஆனால் முகத்தில் அறையும் அமெரிக்க யதார்த்தம் இந்த புனைவின் மீது காறி உமிழ்கிறது.

உலகெங்கும் சி.ஐ.ஏ நடத்தியிருக்கும் சதிகள், கொலைகள், ஆட்சிக் கவிழ்ப்புகள் எண்ணிலடங்கா. உலகின் எல்லா வகை சித்திரவதை முறைகளுக்கும் ஊற்று மூலம் சி.ஐ.ஏதான். குவாண்டமானோ பேயில் அமெரிக்க சட்டம் செல்லாத இடத்தில் அப்பாவிகளை வைத்து சித்திரவதை செய்தவற்கென்றே ஒரு முகாமை நடத்தும் அமெரிக்காவின் உண்மை முகத்தை இந்த படம் திறமையாக மறைக்கிறது.

ஈராக்கிலும், ஆப்கானிலும் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் அப்பாவி மக்கள் என்பதையோ, அதில் சில இலட்சம் குழந்தைகளும் உண்டு என்பதையோ இந்த படம் சுலபமாக கடந்து செல்கிறது. யூசுப்பின் குண்டு கொல்லப்போகும் அமெரிக்க உயிர்களின் மதிப்பு மற்ற நாடுகளின் மனிதர்களுக்கு இல்லை போலும். படத்தில் இதையே யூசுப் கேட்டாலும் அவனது கேள்வியின் நியாயத்தை படம் பலவீனமாக்குகிறது.

யூசுப்பின் குழந்தைகளை ஹெச்சிடமிருந்து காப்பாற்றுவதற்காக கதவை உடைத்து உள்ளை நுழையும் அமெரிக்க வீரர்களின் உண்மை முகத்தை பாக்தாத் மண்ணில்தான் பார்க்க முடியும். பாரசீக மண்ணில் ரத்தம் குடிக்கும் அமெரிக்க  கழுகு இரண்டு குழந்தைகளுக்காக கண்ணீர் விடுவதை நம்மால் சகிக்க முடியவில்லை. ஆனால் பார்வையாளர்கள் விடும் கண்ணீர் இங்கே தந்திரமாக வரவழைக்கப்படுகிறது.

குண்டு வெடித்தாலும் வெடிக்கட்டும் அந்த குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்று ப்ராடி அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்லும் காட்சி அமெரிக்க மனிதாபிமானத்தின் குறியீடாக இதயத்தை அழுத்துகிறது. ஆனால் மருந்து தடைக்காகவே பல்லாயிரம் ஈராக் குழந்தைகள் கொல்லப்பட்டது அமெரிக்க மனசாட்சியை உலுக்கவே இல்லையே?

விசாரிப்பவர்கள் எல்லாரும் யூசுப்பை அரசியல் ரீதியாக கன்வின்ஸ் செய்து பேசவில்லை. அப்படி பேசவும் முடியாது என்பது வேறு விசயம். ப்ராடி கூட அவனது மனைவி, குழந்தைகள், அன்பான குடும்ப வாழ்க்கை என்றுதான் விளக்குகிறாள். ஆனால் ஒரு போராளி தனது ஆன்ம பலத்தை சமூக அரசியல் காரணிங்களிலிருந்துதான் பெறுகிறான் என்பதை இந்த படம் சிறுமைப்படுத்துகிறது. தனது சொந்த பந்தங்களின் மகிழ்ச்சியை விடவும் தனது சமூகத்தின், நாட்டின் துன்பத்தை களைய நினைக்கும் போராளியின் வழிமுறைகள் தவறாக இருக்கலாம். ஆனால் அவனது சாரம் என்ன?

யூசுப்பின் குழந்தைகளை சித்திரவதை செய்தால் உண்மை வெளியே வரும், குண்டுகள் வெடிக்காது என்றால் அப்பாவி அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டால்தான் அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு நிற்கும் என்று ஒரு போராளி ஏன் நினைக்கக் கூடாது? அல்லது அமெரிக்க அரசைப் போன்று ஆயுத, இராணுவ வல்லமை இருந்திருந்தால் ஒரு பயங்கரவாதி ஏன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறான்?. வலியோரை எளியோர் எதிர்கொள்ளும் முறையாகத்தானே பயங்கரவாதம் வேர்விடுகிறது? அந்த வலியோரின் கொடூரம் நிறுத்தப்படாத போது எளியோரின் செயல் மட்டும் ஏன் பயங்கரவாதமாக பொதுப்புத்தியில் நுழைக்கப்படுகிறது?

ஆக பயங்கரவாத்தின் இந்த பரிமாணங்களை இயக்குநர் கவனமாக தவிர்த்திருக்கிறார். அது வெறும் சட்டம், சிவில் உரிமை, சென்டிமெண்டாக மட்டும் அவரால் சித்தரிக்கப்படுகிறது. ஒரு தீவிரவாதிக்கு மனித உரிமை சட்டங்கள் செல்லுபடியாகுமா என்பதல்ல பிரச்சினை. அமெரிக்க அரசு தானே வைத்திருக்கும் சட்டங்களும், புதிதாக உருவாக்கும் சட்டங்களும் எந்த மனித உரிமையை வைத்து உருவாக்குகிறது? அமெரிக்க நலன் என்ற வார்த்தைகளுக்குள்ளே மறைந்திருப்பது அமெரிக்க முதலாளிகளின் நலன் என்பதுதான் அவர்களது மனித உரிமை அளவுகோல். அதனால்தான் அமெரிக்காவின் அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் அவர்களது சட்டப்படியே நியாயப்படுத்தப்படுகின்றன.

இன்னொரு புறம் பயங்கரவாதிகள் தமது வலுவான எதிரிகளை வீழ்த்த முடியாமல் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கனவே உள்ள அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகின்றன. அப்படி ஒரு நியாயப்படுத்துதலின் ஒரு சரடைத்தான் இந்த படம் சித்தரிக்கிறது.

பயங்கரவாதிகளை வழமையான முறைகளில் சட்டப்படி எதிர்கொள்ள முடியாது என்பதுதான் ஹெச்சின் கருத்து. அமெரிக்க அரசையும் அப்படி வழமையான முறைகளில், சட்டப்படி எதிர்கொள்ள முடியாது என்பதுதான் பயங்கரவாதிகளின் கருத்து. எனினும் இரண்டு பயங்கரவாதங்களையும் சமப்படுத்தி பார்ப்பதால் அது இறுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கே உதவி செய்யும். அமெரிக்காவை வீழ்த்தும் சக்தியை உலக மக்கள் என்றைக்கு பெறுகிறார்களோ அது வரை இந்த ஆட்டம் நடக்கத்தான் செய்யும்.

அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அமெரிக்க உளவியலை அதன் முகப்பூச்சை கலைத்து விட்டு பார்க்கும் அரசியல் வலிமை இல்லையென்றால் உங்களை இந்தப் படம் வென்று விடும். பரிசோதித்துப் பாருங்கள்! பரிசோதிப்பதற்காகவே பாருங்கள்!!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

நீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா?

86

vote-012சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆறு வழக்குரைஞர்கள் 9.6.10 முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருந்து போராடி வருகின்றனர். இளம் வழக்குரைஞர்களின் முன்முயற்சியினால் உந்தித் தள்ளப்பட்டிருக்கம் இப்போராட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின்(ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) வழக்குரைஞர்கள் முக்கியப் பாத்திரம் ஆற்றி வருகின்றனர்.

செம்மொழி மாநாடு என்ற நல்ல காரியம் நடக்கும்போது, அபசகுனமாக இப்படிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த திமுக அரசு, முடிந்த வரை இப்பிரச்சினையை இருட்டடிப்பு செய்யும் பொருட்டு புறக்கணித்து. அதிகாரபூர்வ வழக்குரைஞர் சங்கங்களும் இதனைப் புறக்கணித்தன.

மதுரையில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் அதாரிட்டியான தென்மாநில முதல்வர் அழகிரி, இப்பிரச்சினையை 15 நாளில் முடித்துத் தருவதாகவும், போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படியும் நேற்று வழக்குரைஞர்களிடம் கூறியிருக்கிறார். தன் பேச்சைத் தட்டுவதற்கு மதுரையில் ஆள் கிடையாது என்ற நம்பிக்கையில் பழரசத்தை எடுத்துக் கொண்டு உண்ணாவிரதப் பந்தலை நோக்கி காரில் கிளம்பியும் விட்டார். ஆனால் வக்கீல்கள் மசிவதாக இல்லை. “அண்ணன் 15 நாளில் முடிப்பதற்கு இது ரியல் எஸ்டேட் பிரச்சினை இல்லை. இதற்கு பதில் சொல்லும் அதிகாரம் கொண்டவர்கள் பதில் சொல்லவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” என்று முடிவெடுத்து விட்டனர்.

வேலை மெனக்கெட்டு கிளம்பி வந்த அண்ணன் பந்தலுக்கு வந்து ஒரு வாழ்த்துரை வழங்கிவிட்டுப் போயிருக்கலாம். ஆங்கிலம் தெரியாத அண்ணன் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச முடியவில்லை. நீதிமன்றத்தில் தமிழ் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட அண்ணனின் பிரச்சினையுடன் நேரடியாகத் தொடர்புள்ளதுதான். அதற்காகவாவது வாழ்த்திவிட்டுப்  போயிருக்கலாம். ஆனால், அண்ணன் தலையிட்டால் பிரச்சினை செட்டில் ஆகவேண்டுமே. அதனால்தான் திரும்பிப் போய்விட்டார்.

இன்றைக்கு ஜெ களத்தில் குதித்துவிட்டார். செம்மொழி மாநாடு எனும் பிரம்மாண்ட கேளிக்கையை வைத்து கருணாநிதி ஆதாயம் அடைவதை விரும்பாத ஜெயலலிதா, வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரித்து இவர் ஏதோ தமிழுக்கு ஆட்சி மொழி தகுதியை எதிர்காலத்தில் வாங்கித் தருவது போல காட்டிக் கொண்டிருக்கிறார். இத்தனை காலமும் கருணாநிதியின் நிழலில் இளைப்பாறி தமிழின் உணர்ச்சியை மட்டும் விற்பனை செய்து வந்த வைகோவும் நிச்சயமாய் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறார்.

கோவை மாநாட்டில் இந்த வழக்கறிஞர் போராட்டம் ஒரு கரும்புள்ளியாய் விழுந்துவிடக்கூடாது என்று துடிக்கும் கருணாநிதி வழக்கம் போல ஜெயலலிதாவின் அறிக்கைக்கு லாவணியாக ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதிலிருந்து உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வராமல் இருப்பதற்கு தி.மு.க அரசு என்னென்ன முயற்சிகளை கிடப்பில் போட்டது என்ற உண்மை நமக்கு கிடைக்கிறது. சொந்த செலவில் சூன்யம்.

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழும் இருக்கவேண்டுமென்பது தி.மு.கவின் திட்டவட்டமான கொள்கையாம். இதற்காக பலமுறை கழக பொது குழுக்களிலும், செயற்குழுவிலும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்களாம். நீதிமன்றங்களிலும் தமிழ் இடம்பெற வேண்டுமென்று வாதாடி வந்திருக்கிறார்களாம். இந்த ‘வீர’ வரலாற்றின் தொகுப்பை சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் அறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறாராம்.

தமிழுக்காக கழகம் போராடியிருக்கும் அந்த ‘வீர’ வரலாற்றின் காலம் தி.மு.க ஆட்சியைப் கைப்பற்றியதிலிருந்தோ, இல்லை கருணாநிதி பொதுவாழ்க்கைக்கு வந்ததிலிருந்தோ தொடங்கியிருக்குமென்று நீங்கள் நினைத்தால் தவறு. அது வெறும் 21ஆம் நூற்றாண்டுச் சமாச்சாரம்தான்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் தமிழ்மன்றம் சார்பாக 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு ரிட் மனு தமிழுக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அரசியலைமைப்புச் சட்டம், பிரிவு 348(2)இன் கீழ் தலையிட முடியாது என்று தீர்ப்பளிக்கின்றனர். அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு இதை கிடப்பில் போட்டது என்று சரியாகவே சொல்லும் கருணாநிதி அவர் ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார்?

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் வேண்டுமென்று 6.12.2006 அன்று சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கருணாநிதி அரசால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பிறகு இந்த தீர்மானத்திற்கு கவர்னரின் பரிந்துரையையும், சென்னை உயர்நீதிமன்றத்தின் கொள்கை ரீதியிலான ஒப்புதலையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்களாம். ஏற்கனவே அரசியலைமைப்புச் சட்டத்தின் கீழ் இதைச் செய்யமுடியாது என்று கைவிரித்த நீதிபதிகள் இப்போது எந்த கொள்கையளவில் இதை ஆதரித்தார்கள் என்பது மேலிடத்து இரகசியமா இல்லை நடைமுறைக்கு வராத வெத்து வேட்டு என்ற மெத்தனமா தெரியவில்லை.

தி.மு.க அரசுக்கு கடிதம் மூலம் பதில் அளித்த மத்திய அரசு “தமிழக அரசின் முன் மொழிவுகள் உச்சநீதிமன்றத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் வட்டார மொழியை அறிமுகம் செய்வது தற்போதைக்கு இயலாத ஒன்று என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கருதுவதாகவும்” தெரிவித்துள்ளது.

2006க்குப் பின் 2 ஆண்டுகள் திமுக அமைச்சர் வெங்கடபதி மத்திய சட்டத்துறை இணை அமைச்சராக இருந்திருக்கிறார். அவர் என்ன செய்தார்? பீகார், உ.பி முதலான மாநிலங்களில் மட்டும் இந்தி நீதிமன்ற மொழியாக இருப்பதெப்படி என்ற கேள்வியை அவர் எழுப்பினாரா? தமிழக சட்ட மேலவைக்கு 4 நாளில் மத்திய அரசின் ஒப்புதல் பெற முடிந்த ராஜதந்திரி கருணாநிதி, அந்த ராஜதந்திரத்தை உயர்நீதி மன்றத்தில் தமிழைக் கொண்டுவருவதற்கு காட்டாதது ஏன்? மாவட்ட நீதிமன்றம் வரையில் அனுமதிக்கப்படும் தமிழ் மாநில நீதிமன்றமான உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படாத்து ஏன்? மாவட்டம் எல்லாம் சேர்ந்த்துதானே மாநிலம்? பொது அறிவுக்குப் புரியும் இந்தக் கேள்விகள் கூட திமுக அரசின் மண்டையில் உரைக்காத்து ஏன்?

தமிழ் மற்றும் மற்றைய தேசிய மொழிகளை சூத்திர பாஷை என்று எக்காளமிட்டு அடிமைப்படுத்திய பார்ப்பனியத்தின் அன்றைய வரலாற்றுக்கும், உச்சநீதிமன்றத்தின் இன்றைய வரலாற்றுக்கும் என்ன வேறுபாடு? ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான் முதலான நாடுகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் தாய்மொழி பேசும் மக்களைக் கொண்ட நாட்டில் அந்த மொழிகளை வெறும் வட்டார மொழி என்றும், சாத்தியமில்லை என்றும் கருதுவது வெறும் மேட்டிமைத்தனம் மட்டுமல்ல அது பார்ப்பனிய இந்திய தேசியத்தின் அடக்குமுறையும் ஆகும்.

இதெல்லாம் தெரியாத அளவுக்கு கருணாநிதி ஒன்றும் மக்கு இல்லை. எல்லாம் அறிந்தவர். வாரிசுகளுக்காக வளமான அமைச்சர் பதவிகளை கூசாமல் நேரில் சென்று கேட்டுப் பெற்றவர் தமிழுக்காக வெறும் கடித விளையாட்டுக்களை நடத்தியதையே சாதனையாக அறிவிக்க வேண்டுமென்றால் தமிழன் இளித்தவாயன் என்பதன்றி வேறென்ன? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாத்தியமில்லை என்று மத்திய அரசும் கழண்டு கொள்ள, விட்டது தொல்லை என்று கருணாநிதியும் விட்டுவிட்டார்.

சுவரே இல்லாத வீட்டுக்க்கு கூரையை தங்கத்தில் வேயலாமா, வெள்ளியில் வேயலாமா என்ற கதையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை கொண்டு வருவதற்கான உள்கட்டுமான பணிகளுக்காக தமிழக அரசு ஒதுக்க விரும்பியது 32 கோடியா, 22 கோடியா என்று ஜெயலலிதாவுடன் அறிக்கைப் போர் நடத்துகின்றார் கருணாநிதி. தமிழை கொண்டுவரமுடியாது என்று ஆனபிறகு அதற்கு எத்தனை கோடி ஒதுக்கித்தான் என்ன பயன்?

பிரச்சினை நடக்கும் நிகழ்காலத்தில் நீங்கள் சண்டையே போடவில்லை என்றால் 65இல் தமிழுக்காக பாளையங்கோட்டை தனிமைச்சிறையில் பல்லி, கரப்புகளுடன் அவதிப்பட்டேன் என்று இறந்த காலத்திற்கு பயணிக்கிறார் கருணாநிதி. சிறையை விடுங்கள், பல்லி, கரப்பு, கொசுக்களுடன்தான் இன்றும் பெரும்பான்மையான மக்கள் வீடுகளில் சாதாரணமாக வாழ்கிறார்கள். பாம்புக்கடிக்கும், நாய்க்கடிக்கும் மருந்தின்றி அரசு மருத்துவமனைகளில் அவதிப்படுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் தியாகமாக சித்தரிப்பதற்கு அவர்களெல்லாம் கோபாலபுரத்தில் பிறக்கவில்லை, என்ன செய்வது?

உயர்நீதிமன்றத்தில் கூட தமிழை கொண்டுவருவதற்கு இயலவில்லை எனும் போது 500 கோடி ரூபாய்களை இறைத்து செம்மொழி மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? கடந்த ஏழு, எட்டுமாதங்களாக முழு அரசு எந்திரமும் இந்த மாநாட்டுப் பணிக்காக மும்முரமாக பணியாற்றி வருகிறது.

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் ஏற்வில்லை. மேட்டூரில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. போலி மருந்து பிரச்சினை முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்காக அளிக்கப்படும் தடையற்ற மின்சாரத்தினால் தமிழகம் மின்தட்டுப்பாட்டினால் தத்தளிக்கிறது. விலைவாசி உயர்வு விஷம் போல ஏறிவருகிறது.

இதையெல்லாம் ஏறெடுத்துப் பார்க்காத அமைச்சர்களும் அதிகாரிகளும் கோவை மாநாட்டின் சிலைகளும், அலங்கார ஊர்திகளும், அரங்கங்களும் சரியாக இருக்கிறதா என்று அணு அணுவாக சோதிப்பது ஆபாசமாக இல்லையா? யாரை ஏமாற்ற இந்த நாடகம்? இன்னும் எத்தனை நாள் தொடரும் இந்த கேலிக்கூத்து?

இது போக சில படித்த மேதாவிகள் அவர்களது வாழ்வுக்கு எந்த வகையிலும் தேவைப்படாத தமிழை நீதிமன்றங்களில் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என்று நமக்கு வகுப்பு எடுப்பார்கள். அவர்களெல்லாம் நீதிமன்றங்களுக்கு வரும் மக்களைக் கொஞ்சம் சந்தித்து பார்த்தால் உண்மை அறியலாம்.

நீதிமன்றங்களில் தமிழ் என்பது மிகவும் அடிப்படையான ஜனநாயக கோரிக்கை. பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமை. ஆங்கிலம் கோலோச்சும் நீதிமன்ற நடைமுறைகளைப் பற்றி ஏதும் அறியமால் அதிகம் அல்லல்படும் அந்த மக்களுக்கு தமிழ் என்பது அங்கே வெறும் மொழியாக அல்ல அவர்களது சிவில் உரிமையாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் வந்துவிடுவதாலேயே அவர்களுக்கு நீதி கிடைத்துவிடுவதில்லை என்றாலும் தங்களுக்கு மறுக்கப்பட்ட நீதியின் யோக்கியதையையாவது புரிந்து கொள்ளலாம் அல்லவா?

வக்கீல்கள், போலீசுக்காரர்கள், நீதிபதிகள் சேர்ந்து சட்ட மொழியில் மக்களை ஏமாற்றும் நடைமுறைகளை தமிழ் வந்தால் அத்தனை எளிதாக செய்ய முடியாது. தங்களது பிரச்சினையின் நியாயத்தை புரிந்து கொள்ளும் மக்கள் அதையே சட்டமொழியாக தமிழ் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளினூடாகவும் புரிந்து கொள்வார்கள். தமிழ் நீதிமன்ற மொழி என்பது பெரும்பான்மை மக்கள் ஜனநாயக உரிமையாகும். அதை மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.

மதுரை வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! தமிழுக்காக வேடம்போடும் கபட வேடதாரிகளின் பொய்முகத்தை தோலுரிப்போம்!!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

காதலர்கள் அடித்துக் கொலை ! இரத்தம் குடிக்கும் பார்ப்பனியம் !!

78

vote-01219 வயது ஆஷா, சைனி (saini) எனும் சாதியைச் சேர்ந்தவர். இந்த சாதியை விட படிக்கட்டில் கீழே இருக்கும் ஜாதவ் சாதியைச் சேர்ந்தவர் யோகேஷ். பெற்றோரை இழந்த இந்த 21 வயது இளைஞர் தனது அக்கா வீட்டில் தங்கி ஒரு பழைய மாருதி காரை வைத்து வாடகை ஓட்டியாக காலத்தை கழித்து வந்தார். டெல்லியின் புறநகர் ஒன்றில் வசிக்கும் இருவரும் பழகி பின்னர் காதலித்து வந்தனர். இது அரசல் புரசலாக ஆஷா வீட்டில் தெரிய வந்ததும் வழக்கம் போல பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

ஆஷா வீட்டினர் அவளைக் கண்டித்ததோடு, யோகேஷையும் அவனது அக்கா வீட்டிற்கு சென்று எச்சரித்திருக்கின்றனர். சாதி வெறியோடு, ஒரு வாடகை கார் ஓட்டுனரோடு காதலா என்ற வர்க்க வெறுப்பும் சேர்ந்து அந்த பெண் வீட்டினரது நடவடிக்கைகளை தீர்மானித்திருக்கிறது. ஆனாலும் ஆதிக்க சாதியின் கௌரவத்திற்கு அந்த இளையோரின் காதல் கட்டுப்படவில்லை.

அவர்கள் தொடர்ந்து சந்திப்பதும், தொலை பேசியில் உரையாடுவதும் தொடர்கிறது. இடையில் ஆஷாவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கின்றனர். இருந்தும் ஆஷா தனது காதலை துறக்கத் தயாரில்லை. இனி அவளை பணிய வைப்பது எப்படி?

கடந்த ஞாயிறு இரவு யோகேஷைத் தொடர்பு கொண்ட ஆஷாவின் தாய் அவனை நேரில் வருமாறும், பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளலாமென்றும் கூறுகிறார். இரவு சாப்பாட்டை முழுவதும் சாப்பிடாமல் ஆஷா தங்கியிருந்த அவளது தாய்மாமன் ஓம் பிரகாஷ் வீட்டிற்கு அவன் செல்கிறான். அங்கே ஆஷாவின் உறவினரான ஆண்கள் இருந்திருக்கின்றனர்.

காதலர்கள் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்படுகின்றனர். அலறல் சத்தம் கேட்டு அருகாமை வீட்டிலிருந்தோர் விசாரிக்க ” இது எங்கள் குடும்ப விவகாரம், யாரும் தலையிட வேண்டாம்” என்ற பதில் வந்திருக்கிறது.

விடிந்து பார்த்தால் வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு யோகேஷின் கார் வெளியே அனாதையாக நின்றிருக்கிறது. பின்னர் போலீஸ் வந்து கதவை உடைத்து பார்த்தால் காதலர்களின் பிணங்கள்!

____________________________________________

இதே டெல்லியில் பிசினஸ் ஸ்டாண்டர்ட் தினசரியில் வேலை பார்த்து வந்த பத்திரிகையாளரான நிருபமா மே மாத ஆரம்பத்தில் இதே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டதை உங்களில் சிலர் படித்திருக்கலாம்.

பார்ப்பன சாதியைச் சேர்ந்த நிருபமா ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவள். தந்தை வங்கி மேலாளர். சகோதரர்கள் இருவர் வருமான வரித்துறை அதிகாரியாகவும், முனைவர் ஆய்வு படிப்பு படிப்பவராவும் இருக்கிறார்கள். டெல்லியைச் சேர்ந்த பிரபலமான ஊடக கல்லூரியில் படித்த நிருபமா தனது வகுப்புத் தோழனான ரஞ்சனை காதலிக்கிறாள். ரஞ்சன் பீகாரைச் சேர்ந்தவர், கேஷ்த்தியா சாதியைச் சேர்ந்தவர். இந்த சாதியும் ஆதிக்க சாதிதான் என்றாலும் பார்ப்பனர்களை விட கீழ்தான் என்பதை விளக்கத் தேவையில்லை.

விடுமுறைக்காக பெற்றோர் வீடு வந்த நிருபமா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக போலீசுக்கு தகவல் வருகிறது. பின்னர் சவப்பரிசோதனை அறிக்கையின் படி அவள் தலையணையால் மூச்சுத்திணற கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கூடவே அவள் மூன்று மாத கர்ப்பிணி என்ற விசயமும் தெரிய வருகிறது. ஒருவேளை அவள் கர்ப்பமில்லாமல் இருந்திருந்தால் இந்தக் கொலை கொஞ்சம் தள்ளிப் போயிருக்கலாம்.

பார்ப்பனப் பெண்ணின் வயிற்றில் தரமற்ற சாதியின்  கரு உருவாயிருப்பதை அந்த பார்ப்பன வெறியர்கள் விரும்பவில்லை. கொல்லப்படுவதற்கு முன்னர் அவள் தனது காதலனுடன் தொலைபேசியில் அழுது அரற்றியிருக்கிறாள். செய்வதறியாத ரஞ்சனும் கதறி அழுதிருக்கிறான். பின்னர் சகோதரர்களும் அவர்களது நண்பர்களும் நிருபமாவை கொன்றிருக்கலாம். தற்போது நிருபமாவின் தாயார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

___________________________________________

வட இந்தியாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே சாதியின் ‘கௌரவத்திற்காக’ இப்படி இளம் காதலர்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். இந்தி பேசும் மாநிலங்களில் இந்த சாதிவெறிக் கௌரவத்தின் வீச்சு அதிகம். ஆண்டு தோறும் ஹானர் கில்லிங் எனப்படும் இந்த கௌரவக் கொலைகள் அதிகரித்தே வருகின்றன. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லை.

வேலை வாய்ப்பும், நகரமயமாக்கமும், படிப்பும் எல்லாம் சேர்ந்து ஆணும், பெண்ணும் பழகுவதற்கு நிறைய வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறது. அவ்வகையில் பார்ப்பன இந்து மதம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை இந்த புதிய தலைமுறையினர் காதலின் மூலம் மீறுகின்றனர். அந்த மீறலின் அளவுக்கேற்ப காதலர்கள் தண்டிக்கப்படுகின்றனர்.

முக்கியமாக பெண் ‘உயர்ந்த’ சாதியாகவும், ஆண் ‘தாழ்ந்த’ சாதியாகவும் இருந்தால் இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கண்டிப்பாக வன்முறையை மேற்கொள்கின்றன. பண்டைய இனக்குழுக்களின் கௌரவமாக பெண்ணைக் கருதுவதும், அவளது இரத்தத்தில் வேற்று இனம் கலந்து விடக்கூடாது என்ற ஆதிகாலக் காட்டுமிராண்டித்தனமும் இன்றும் தொடர்கிறது.

நிருபமா பேஸ்புக்கில் தனது அரசியல் கருத்துக்களையும், தனிப்பட்ட விசயங்களையும் பகிர்ந்து வந்தாள். ஊடக படிப்பு படிக்கும் போதே வேலைக்கு தெரிவு செய்யப்பட்டாள். குடும்பத்திலும் படித்தவர்கள்தான் இருக்கிறார்கள். அதில் ஒரு சகோதரர் உயிரியில் தொடர்பான முனைவர் ஆய்வு செய்து வந்தார். எனினும் இந்த படிப்பும், நவீன தொழில்நுட்பங்களும் என்ன மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது?

இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள இந்த ஆதிக்கசாதியினரின் அணிவகுப்பில்தான் பாரதிய ஜனதா தனது வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறது. காதலர் தினத்திற்கு இந்துமதவெறியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், காதலித்த ‘குற்றத்திற்காக’ காதலர்கள் கொலை செய்யப்படுவதும் வேறு வேறல்ல.

நிருபமா கொலை செய்யப்பட்டாலும் அவளது தந்தை வங்கி மேலாளராக பணியாற்றுபவர், தொலைக்காட்சி நேர்காணலில் சாதி மாறி காதலிப்பது தவறு என்று பச்சையாக பேசுகிறார். இத்தகைய பார்ப்பன ‘மேல்சாதி’ வெறியர்கள்தான் அதிகார வலைப்பின்னலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால் அன்றாட அரசியல் நடவடிக்கைகளில் இவர்கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை எப்படி நடத்துவார்கள்?

இளைய சமூகம் இணையம், செல்பேசி, ஷாப்பிங்மால் என்பதை மட்டும் நாகரிகத்தின் அளவுகோலாக வைத்து சாரமற்ற ஜடங்களாக உலாவருகிறது. அதனாலேயே காதலிப்பதில் இருக்கும் கவர்ச்சி அதற்கு தடையாக இருக்கும் பார்ப்பனிய சாதியமைப்பின் இழிவை எதிர்ப்பதில் இருப்பதில்லை. நிருபமாவிற்கும், ஆஷாவுக்கும் அத்தகைய பார்வை கொண்ட நட்பு வட்டம் இருந்திருந்தால் இந்தப் பாதக கொலைகளை தடுத்தி நிறுத்தியிருக்கலாம். ஆனால் இல்லையே?

பதிவுலகில் சாதியை வலிந்து எழுதுவதாக வினவின் மேல் சினம் கொள்ளும் கனவான்களின் கவனத்திற்கு இந்த செய்திகளை காணிக்கையாக்குகிறோம்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் !

41

vote-012சென்னைக் கேளம்பாக்கம் அருகிலுள்ள தையூர் எஸ்.எம்.கே. போம்ரா கல்லூரி மாணவி அனித்ரா விடுதியறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இம்மாணவியை சக மாணவர் ஒருவருடன் பேசியதற்காக அபராதம் விதித்தும் மிக இழிவான வசைமொழிகளால் திட்டியும் தற்கொலைக்குத் தூண்டியது கல்லூரி நிர்வாகமே. மாணவர்களின் புகாரை அடுத்து கல்லூரி சேர்மன் தலைமறைவாகியிருக்கிறார். இதற்கு மேல் அனித்ராவின் மரணத்தைக் குறித்து விரிவாக எழுத நான் புலனாய்வுப் பத்திரிகையாளனும் இல்லை, சம்பவம் நடந்த தமிழகத்திலும் வசிக்கவில்லை. இது குறித்த எனது சிந்தனைகளை மட்டும் இப்பதிவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மாணவர்களும் மாணவிகளும் பேசிக் கொள்ளக் கூடாது என்கிற தலிபானியச் சட்டம் இந்த ஒரு கல்லூரியில் மட்டும் இருப்பதில்லை. சுயநிதி இருபாலர் கல்லூரிகள் அனைத்திலும் இது எழுதப்படாத விதியாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொடூரத்தின் உச்சமாக அனித்ரா படித்த கல்லூரி சிசி டிவி கேமெராக்களை நிறுவி மாணவர்களைக் கண்காணித்திருக்கிறது. எதற்காக இப்படி ஒரு விதி என்று கேட்டால் “பெற்றவர்கள் பிள்ளைகளைப் படிக்கத்தான் அனுப்புகிறார்கள். அவர்களுடைய கல்வி சிறப்பாக அமைய நாங்கள் சில விஷயங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம்தான்” என்று பெற்றோர்கள் மீது மிகுந்த அக்கறையுள்ளது போலப் பேசுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

புரையோடிப் போன சாதியக் கண்ணோட்டம் இன்னமும் பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது. இதைக் கொண்டே இவர்களது கல்லூரிகளைப் பெற்றோரிடையெ சந்தைப் படுத்துவதுதான் சுயநிதி இருபாலர் கல்லூரிகளின் நோக்கம். இந்தக் கல்லூரியில் சேர்ந்தாலே உங்கள் மகன் அல்லது மகள் அதிக மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றுவிடுவார்கள் என்பதான மாயையையும் இவர்கள் உருவாக்கத் தவறுவதில்லை. இது ஒன்றும் இவர்கள் உழைத்து உருவாக்குகிற நற்பெயர் அல்ல.

தத்தமது கல்லூரிகளில் நூறு சதவிகிதத் தேர்ச்சியைக் காட்டுவதற்காக தேர்வில் தோல்வியடையும் சாத்தியமுள்ள மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் செய்கிற அக்கிரமமும் இது போன்ற பல சுயநிதிக் கல்லூரிகளில் நடைபெறுகிறது. தோல்வியடைய வாய்ப்பில்லாத அல்லது தோல்வியடையும் சாத்தியம் குறைவாக உள்ள மாணவர்களை மட்டும் தேர்வெழுத அனுமதிப்பதன் வாயிலாக நூறு விழுக்காடுகளோ அல்லது இவர்கள் எதிர்பார்க்கிற தேர்ச்சி விழுக்காடுகளோ எவ்வித முயற்சியுமில்லாமல் தானாகவே வந்துவிடும். இதனால் ஆசிரியர்கள் செய்கிற முயற்சிகளை நான் குறை சொல்லுகிறேன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஆசிரியர்கள் அளிக்கிற மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் நிர்வாகம் செய்கிற இழிவான செயல் இது.

சுயநிதிக் கல்லூரிகள் பலவற்றிலும் ஒரு அம்சம் தவாறாமல் இடம்பெற்றிருக்கும். வாராந்திரத் தேர்வுகள். மாணவர் சேர்க்கையின் போது மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் சிரமப் படாமல் இருப்பதற்காக ஒரு பயிற்சிக்காக நடத்தப்படும் தேர்வுகளே இவை என்று சொல்லப்பட்டாலும், இத்தேர்வுகளுக்கான அசல் நோக்கம் என்பது வேறு. மாணவர்களில் தேர்ச்சியடையக் கூடிய மாணவன் யார் தோல்வியடையும் சாத்தியமுள்ள மாணவன் யார் என்பதைக் கண்டறியவே இந்த வாராந்திரத் தேர்வுகள்.

பல்கலைக்கழகத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகளைப் (ஹால் டிக்கெட்) பிணையாக வைத்துக் கொண்டு பணம் பறிக்கிற கயமையையும் பல சுயநிதிக் கல்லூரிகள் செய்து வருகின்றன. ப்ரேக்கேஜ் கட்டணம் என்று ஒரு வசூலிப்பார்கள். ஆய்வகங்களைப் பயன்படுத்துகிற வேதியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவு மாணவர்களிடம் இக்கட்டணத்தை வசூலிப்பதிலாவது ஓரளவு நியாயம் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆய்வகங்களை எட்டிக் கூடப் பார்க்காத வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் மாணவர்களிடமும் இதே கட்டணத்தை அடாவடியாக வசூலித்தது நான் படித்த கல்லூரி (பொன்னையா ராமஜெயம் கல்லூரி. இப்போது PRIST (நிகர்நிலை) பல்கலைக் கழகமாக இருந்து தனது நிகர்நிலைத் தகுதிப்பாட்டை இழந்திருக்கிறது).

இவையல்லாமல் மாணவர் சேர்க்கையின் போதே பெற்றோர்களிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகிறார்கள். என் மகனோ மகளோ அரசியல் செயல்பாடுகல் எதிலும் பங்கெடுக்க மாட்டார்கள், கல்லூரியைக் குறித்து ஊடகங்களுக்கு எவ்விதத் தகவல்களையும் கொடுக்க மாட்டார்கள் என்பவை உள்ளிட்ட கூறுகளைக் கொண்ட ஒப்பந்தம் அது. இது போன்ற ஒப்பந்தங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்து தெரியாவில்லை. ஆனால் உளவியல் ரீதியாக மாணவர்களை, நம் பெற்றோரின் குடுமியை அவர்கள் கையில் கொடுத்திருக்கிறோம் என்ற அச்சுறுத்தலிலேயே வைத்திருக்கும் ஏற்பாடுதான் இது.

சுயநிதிக் கல்லூரிகள் எதிலும் மாணவர் தலைவர்களுக்கான தேர்தல்கள் எதுவும் நடைபெறுவதில்லை. எப்படித் தனியார் தொழிற்சாலைகள் தொழிற் சங்கம் அமைப்பதை எதிர்க்கின்றனவோ அவ்வாறே சுயநிதிக் கல்லூரிகளும் மாணவர் பேரவை அமைப்பதை அனுமதிப்பதில்லை. பேருக்கு ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண்கள் வாங்கக் கூடிய மாணவர்களாகப் பார்த்து வகுப்புத் தலைவராகவும் துணைத் தலைவராகவும் நியமனம் செய்து கல்லூரி மாணவர் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொள்வார்கள். நானும் அப்படி ஒரு செமஸ்டருக்குத் தலைவனாக இருந்து தொலைத்திருக்கிறேன். அந்தப் பதவியிலிருப்பவர்கள் நிர்வாகத்திற்குக் கங்காணிகளாக இருக்க வேண்டும் என்பது வாய்மொழியாகக் கூடச் சொல்லப் படாத விதி. படித்த காலத்தில் பாவம் புண்ணியம் என்பன போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருந்ததால் சக மாணவர்கள் எவரையும் நான் காட்டிக் கொடுத்ததில்லை.

என்ன விதிமீறல் நடக்கும் எதைக் கொண்டு அபராதம் விதிக்கலாம் என்று காத்திருந்து அபராதம் விதிப்பார்களோ என்ற அச்சத்துடனேயே மாணவர்கள் இருக்க வேண்டியிருக்கும். கல்லூரி விதிகளை ஒரு புத்தகமாக அச்சடித்துத் தருவார்கள். அதில் இருப்பவை அனைத்தும் எல்லா கல்லூரிகளிலும் பின்பற்றப் படுகிற பொதுவான மற்றும் பார்வைக்கு நியாயமாகப் படுகிற விதிகள்தான். ஆனால் அபராதம் போடுவது, பெற்றோரை வரவழைப்பது போன்ற விஷயங்கள் பெரும்பாலான சமயங்களில் அந்தப் புத்தகத்தில் சொல்லப் படாத ஒரு செயலுக்காகவே நடைபெறும். இந்த புத்தகத்தில் இல்லாத சட்ட விதிகளைக் காட்டித்தான் மாணவர்களின் நியாயமான தேவைகள் அல்லது விருப்பங்கள் கூட மறுக்கப்படும். உதாரணமாக நான் படித்த கல்லூரியில் நடந்த இரு சம்பவங்களையும் அதை எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக எப்படி முறியடித்தோம் என்பதைக் குறித்து சொல்லுகிறேன்.

மூண்றாம் ஆண்டு இறுதியில் கடைசி வகுப்பு நாளில் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக என் நண்பன் தனது கேமெராவை எடுத்து வந்திருந்தான். வகுப்பறையில் நுழைந்து அடாவடியாகக் கேமெராவைப் பறித்துச் சென்றார் நிர்வாகப் பணியாளர் ஒருவர். கேமெரா எடுத்து வரக் கூடாது என்பது கல்லூரி விதிகளில் இருப்பதாகச் சொல்லிவிட்டு கேமெராவுடன் வகுப்பிலிருந்து வெளியேறிவிட்டார். ஹால் டிக்கெட் கைக்கு வராத நிலையிலும் அத்தனை மாணவர்களும் ஒற்றுமையாகக் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டோம். கல்லூரி விதிகளடங்கிய நூலில் கேமெரா கருவி குறித்த எந்த விதியும் இல்லாததைச் சுட்டிக்காட்டிய பிறகு எங்கள் தரப்பு நியாயத்தை முதல்வர் ஏற்றுக் கொண்டு கேமெரா திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்தார். முதல்வர் அறையிலேயே கொடுக்க முற்பட்ட அந்த சிப்பந்தியிடம் எங்கே இருந்து பறிமுதல் செய்தீர்களோ அங்கேயே வந்து கொடுங்கள் என்று கூறிவிட்டு வகுப்பிற்கு வந்துவிட்டோம். எங்கள் நிபந்தனை நிறைவேறியது.

சக மாணவன் ஒருவனின் தந்தை மறைந்த போது துக்கம் கேட்பதற்காகவும் உதவி செய்யவும் வகுப்பு மாணவர்கள் அனைவரும் செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டோம். வருகைப் பதிவு குறைந்து விடக் கூடாதே என்பதற்காகவே அவர்களிடம் அனுமதி கோரினோம். சூழ்நிலையின் தீவிரத்தை உணராமல் அனுமதி மறுத்தது நிர்வாகம். மாணவர்கள் அத்தனை பேரும் ஒரு நாள் வருகைப் பதிவைக் குறித்து கவலைப் படாமல் அந்த மாணவனுக்கு உதவி செய்யச் சென்றோம். மறுநாள் “எந்த சினிமாவுக்குப் போனிங்க” என்ற துறைத் தலைவரின் கேலியையும் எதிர்கொள்ள நேர்ந்த்து. மனிதாபிமானமுள்ள மற்ற பேராசிரியர்கள் அவர்களது வகுப்புகளுக்கு வருகைப் பதிவளித்தனர். இவை ஏதோ நான் தலைமை ஏற்று நடத்தியவை என்ற பெருமைக்காகச் சொல்லவில்லை. சுயநிதிக் கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் நியாயமான தேவைகளுக்குக் கூட எத்தனை போராட வேண்டியிருக்கும் என்பதை விளக்கவே இவற்றைச் சொன்னேன்.

பிள்ளைகளைச் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கப் போகும் பெற்றோர்கள் முதலில் அடகு வைப்பது தங்களினதும், பிள்ளைகளினதுமான சுயமரியாதையைத்தான். ரிட்டையர்மெண்ட்டில் வரப் போகிற பிராவிடண்ட் ஃபண்டு போல கல்வியையும் ஒரு முதலீடாகப் பார்க்கத் தொடங்கிய அல்லது பிரச்சாரம் செய்யத் தொடங்கிய காரணத்தால் தான் சுயமரியாதையை சில ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்தால் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் பெற்றோரும் மாணவர்களும். தயை கூர்ந்து பெற்றோர்களோ, மாணவப் பருவத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு சுயமரியாதையோடும் சமத்துவத்தோடும் வாழ்வதற்கான சுதந்திரத்தையாவது விட்டு வையுங்கள்.

_______________________________________________

விஜய் கோபால்சாமி

நண்பர் விஜய் கோபால்சாமி இரண்டு ஆண்டுகளாய் பதிவு எழுதி வருகிறார் இவரது வலைப்பூக்கள் http://vijaygopalswamihyd.blogspot.com மற்றும் http://vijaygopalswami.wordpress.com

________________________________________________

[பின்னூட்டமிடும் நண்பர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் படித்தவர்களாய் இருந்தால் உங்கள் கல்லூரிகளில் இருந்த இருக்கிற இது போன்ற தலிபானிய விதிகளைக் குறித்துத் தெரிவியுங்கள். நன்றி]

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மங்களூர் விபத்தும் ஏர்இந்தியாவின் சர்வாதிகாரமும் !!


vote-012இந்த பதிவை எழுதும் முன்பாக பின்னூட்டம் எழுதப் போகும் வாசகர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவெனில் சிலபல ஆயிரங்கள்  சம்பளம் பெறும் விமானப்பணியாளர்களைப் பற்றி எழுதுவதற்கு பதிலாக பஞ்சாலைத் தொழிலாளி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள தொழிற்சாலை தொழிலாளி, முறைசாராத் தொழிலாளிகளின் சிரமங்களைப்பற்றி எழுதலாமே என நீங்கள் கேட்கலாம்.

84 ஆண்டுகளுக்கு முன்பாக தொழிலாளி வர்க்கம் பல போராட்டங்களை நடத்தி, இழப்புகளை சந்தித்து, இரத்தம் சிந்தி பெற்ற “தொழிலாளர் நலச்சட்டங்கள்” என்பதும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, சங்கம் அமைத்து உரிமைகளை கோரும் உரிமை ஆகியவையும் இன்று ஏர்இந்தியா விசயத்தில் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் பரவும் அபாயம் உள்ளது என்பதால்தான் இந்த கட்டுரை எழுதப்படுகிறது என்பதை அறிந்து கொண்டு பின்னர் பின்னூட்டத்திற்கு தயாராகுங்கள்

இந்த ஏர் இந்தியா வேலைநிறுத்தம் குறித்த செய்திகள் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்தரிகையின் இணைய தளத்தில் படிக்கும் போது  பின்னூட்டங்களில் பலர் இந்த வேலை நிறுத்தம் தேவையற்றது என எழுதியிருந்தனர். அதன் நடுவில் ஒருவர் எழுதியிருந்த பின்னூட்டத்தில் “எனது தந்தை விமானியாக பணியாற்றுகிறார் – பிரச்சனையான நாணயத்தின் ஒரு பக்கத்தினை மட்டும் பார்க்காமல் அதன் மறு பக்கத்தையும் வாசகர்கள் பார்க்க வேண்டும் – எனது தந்தை எனக்கு நினைவு தெரிந்து 12 லிருந்து 14 மணி நேர பணிபுரிந்துவிட்டு திரும்பி வருவார்.  அவர்களுக்கும் யாரேனும் விடுப்பு எடுத்தால் பணிச்சுமை அதிகமாகி ஓவர்டியூட்டி என்பது வரும்- தொழில் ரீதியாக பல சிரமங்களை அடக்குமுறைகளை வீட்டில் எங்களுடன் பகிர்ந்து கொள்வார்” என எழுதப்பட்டிருந்தது.

பல வருடங்களுக்கு முன்னால் வெள்ளித்திரையில் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படத்தில் இளவரசியாக வரும் கொடுங்கோலாட்சி நாயகி ஆயிரம் பேர் தலையைச் சீவுவதாக பார்த்திருக்கிறோம்.  கடந்த 2001ம் ஆண்டு பாசிச ஜெயலலிதா முதல்வராக இருந்த போது லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களை ‘டிஸ்மிஸ்’ என்று கொத்துக் கொத்தாக கோட்டையிலிருந்து வெளியே வீசியது நினைவிருக்கலாம்.  அதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் (டி.கே.ரங்கராஜன் -எதிர்- தமிழ்நாடு அரசு என்ற வழக்கில்) அரசு ஊழியர்களுக்கு “வேலை நிறுத்த உரிமை இல்லை” என்றது.  அது ஒரு வகை நீதிமன்ற பாசிசம். (ம.க.இ.க. வின் வெளியீடாக நீதிமன்ற பாசிசம் குறித்து விரிவாக பல ஆண்டுகளுக்கு முன்னரே புத்தகமாக வெளிவந்திருக்கிறது.)

இருப்பினும் இன்றைய நிலையில் குஷ்பு வழக்கு, ரிலையன்ஸ் சகோதரர்களின் வழக்கு போன்ற ‘அரசியலமைப்புச் சட்டச் சிக்கலெழும்’ (Is it constitutionally important one?!..) வழக்குகளில் விரைவு தீர்ப்பு தவிர மற்றவற்றில் இல்லை என்பது உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஒரு இடுகை எழுத ஆவல் – அதை அடுத்த பதிவில் எழுதுகிறேன் – தற்போது ஏர் இந்தியா பிரச்சனைக்கு வருவோம்

அந்த நீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டி இன்று வரை தொழிற்சங்க சம்மேளனங்கள் எதுவும் மனுச்செய்யவில்லை. வேலை நிறுத்த உரிமை இல்லை என்று ஜெ உத்திரவிட்டவுடன் எதிர்ப்பு குரல் கொடுத்த தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (திமுக), அரசு ஊழியர்களுக்காக வாதாடிய ப.சிதம்பரம் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் இரண்டும் தற்போது ஆட்சியில் இருக்கின்றன. எனினும் தொழிற்தாவாச் சட்ட சரத்திற்கு (மத்திய சட்டம்) எதிராக மாநில அரசு சட்டம் கொண்டு வர முடியாது – ஜெ கொண்டுவந்தது செல்லாது என சட்டத்திருத்தம் (தேர்தல் வாக்குறுதி கொடுத்தவர்கள்) கொண்டுவர இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  விளைவு இன்று ஏர் இந்தியா சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் அரவிந்த ஜாதவ் பேனாவையே வாளாக்கி தொழிலாளர்களின் தலையை சீவிக்கொண்டிருக்கிறார்.

நடந்தது என்ன?

ஒருபுறம் இந்த விபத்து குறித்து உயிரிழப்பு குறித்து நாடே வருத்தத்தில் இருக்கும் போது மற்றொரு தடத்தில் செல்ல வேண்டிய விமானத்தை சான்றளிக்க ஏர் இந்தியா பொறியாளருக்கு பதிலாக தனியார் நிறுவன பொறியாளரை பயன்படுத்தியதை ஏர் இந்தியா ஊழியர்கள் எதிர்த்தனர்.

ஆதாரம் ( http://livestreamingx.com/air-india-strike-2010-story-behind-air-india-strike-05252583.html ).

இதை உடனடியாக பொறியாளர்கள் சங்கம் நிர்வாகத்தின் கவனத்திற்கு புகார் மனுவாக அளிக்கிறது.  ஆனால் நிர்வாகம் “எங்களிடம் தெரிவிப்பதற்கு முன்பாக செய்தி ஊடகங்களில் இந்த தகவல் எவ்வாறு வந்தது?” என கொதிக்கின்றனர்.  அதற்கு தொழிற்சங்க தரப்பிலிருந்து தொழிற்சங்க நிர்வாகி என்ற அடிப்படையில் நடந்த விபரத்தை மக்கள் அறியச் செய்ய செய்தி ஊடகங்களுக்கு தெரிவிப்பதில் தவறொன்றுமில்லை என தெரிவிக்கிறார்.  அன்று இரவே தொழிலாளர் எவரும் எந்த செய்தி ஊடகத்திற்கும் எதையும் சொல்லக்கூடாது என்ற தடை சுற்றறிக்கை போடப் படுவதுடன் தொழிற்சங்கத்தின் தலைவர்கள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

ஒருபுறம் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த விமான ஓட்டி, பணிப்பெண்கள் உள்ளிட்ட தனது சக ஊழியர்களுடன் பல உயிர்கள் மாய்க்கப்பட்டிருக்கிறது என்கிற உணர்வில் வேதனையுற்றிருந்த தொழிலாளர்களிடையே இந்த தற்காலிக வேலை நீக்க நடவடிக்கை கோபத்தை தூண்ட உடனடி வேலைநிறுத்தத்தில் சுமார் 20000 பேர் ஈடுபடுகின்றனர் (மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 32000).   ஏர் இந்தியா இரண்டு மூன்று கம்பெனிகளாக கம்பெனி சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிற மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.  தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டது என்பதுடன்- மத்திய பொதுத்துறை என்ற அடிப்படையில் முன்மாதிரி நிர்வாகியாக (model employer) செயல்பட வேண்டிய பொறுப்பும் உள்ள நிறுவனம்.

இவைகளை ஒன்றுபடுத்தி செயல்படுகிற நாசில் (நேஷ‌னல் ஏவியேஷ‌ன் கம்பெனி ஆப் இந்தியா) என்கிற நிறுவனம் சார்பில் மறுநாள் காலை மும்பாய்- மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களில் இந்த வேலை நிறுத்தம் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.  அதே சமயம் தொழிற்தாவாச் சட்டப்படி முன்னறிவிப்பு கொடுக்கப்படாத வேலைநிறுத்தம் என்ற போதிலும் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பங்கெடுத்திருப்பதால் சமரச நடவடிக்கையில் ஈடுபட மத்திய தொழிலாளர் நல ஆணையாளர் திரு முகோபாத்யாயா உடனடியாக இதை ஒரு தாவாவாக விசாரணைக்கு எடுக்கிறார்.  நீதிமன்றம் அன்றே விசாரித்து “நடைபெறும் வேலைநிறுத்தம் சட்ட விரோத வேலை நிறுத்தம், எனவே சமரச அலுவலர் முன்னிலையில் தாவாவை தீர்த்துக் கொள்ள வேண்டும்- அனைவரும் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும்” என்கிறது.

தொழிலாளர் ஆணையரும் அனைவரும் வேலைக்குச் செல்லுங்கள் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என அறிவுரை கூறியதை ஏற்று தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்கிறது.  இந்நிலையில் இரண்டு தினங்கள் அம்பானிகள், டாட்டாக்கள், அமைச்சர் பெருமக்கள், மேட்டுக் குடியினர் தவித்துப் போனதால் வேலை நிறுத்தத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் பேட்டி கொடுக்கிறார்.  உடனே ஏர் இந்தியா நிர்வாக இயக்குனர் அரவிந் ஜாதவ் தன்னுடைய பேனாவையே கூர்வாளாக மாற்றி 17 பேர்கள் பணிநீக்கம், 24 பேர்கள் தற்காலிக பணிநீக்கம் என்கிறார்.

தொழிலாளர் ஆணையர் திரு முகோபாத்யாயா வியந்து போய் “நான் சமரச நடவடிக்கை துவக்கியிருக்கும் போது ஏன் இப்படி செய்கிறார்கள்” என செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக 29 மே இந்து நாளிதழில் செய்தி வந்துள்ளது.  மறு தினத்திற்குள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் மேலும் பலர் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.  இரண்டு தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.  தொழிற்சங்க அலுவலகம் இரண்டிற்கும் சீல் வைக்கப்படுகிறது.   இங்குதான் நாம் சோனியா சாவி கொடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் மன்மோகன் அரசில் இருக்கிறோமா? அல்லது திடீரென ஹிட்லர் போன்ற சர்வாதிகார நாடாக மாறிவிட்டதா என்ற வியப்பு மேலிடுகிறது.

ஏற்கனவே தொழிலாளர் ஆணையர் தாவா நடவடிக்கை தொடங்கி விட்டதால் பழிவாங்கும் நடவடிக்கை எது மேற்கொண்டாலும் அது தொழிலாளர் விரோத நடவடிக்கை என தொழிற்தாவாச் சட்டம் வகைப்படுத்துகிறது.  மேலதிகமாக தொழிற்சங்கங்களிலிருந்து முறையாக மீண்டும் ஒரு 14 நாட்கள் முன்னறிவிப்பாக வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்கப்படுகிறது.  அந்த அறிவிப்பு தொழிலாளர் ஆணையரை சென்று சேர்ந்த நிமிடம் முதல் சமரச நடவடிக்கை துவங்கியதாகவே கொள்ள வேண்டும் என்பது சட்டத்தி்ன் நிலைப்பாடு.

தொழிலாளர் நலச்சட்டங்கள் அமுலில் இருக்கிற நிறுவனங்களில் வேலைநீக்கம் செய்வதென்றால் குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்க வேண்டும். பதில் தர சந்தர்ப்பம் தர வேண்டும். பதில் திருப்தியளிக்காவிட்டால் உள்துறை விசாரணை நடத்த வேண்டும். விசாரித்தபின் விசாரணை அலுவலர் தரும் முடிவின் மீது குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளி கருத்து தெரிவிக்க உரிமை அளிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் வேலை நீக்கம் என்ற தண்டனை தர உத்தேசித்தால் அந்த உத்தேச தண்டனை குறித்து காரணம் காட்டக் கோரும் அறிவிப்பு கொடுக்கப் பட வேண்டும். அதற்கு பதில் பெற்றபின் அதுவும் திருப்தியளிக்கவில்லை என்றால்தான் வேலை நீக்கம் செய்ய வேண்டும்.

அதுவும் பல தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தாவா நிலுவையிலிருக்கிறபோது வேலை நீக்கம் போன்ற நடவடிக்கை மேற்கொண்டால் தொழிலாளர் ஆணையரின் ஒப்புதல் பெறவேண்டும்.  இவையெல்லாம் நான் சொல்லவில்லை பல ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்ட வரலாற்றிற்கு பின்னர் இயற்றப்பட்ட 1947ம் ஆண்டு தொழிற்தாவாச்சட்டம் சொல்கிறது.  (இந்த சட்டங்கள் எவையும் எமக்கு பொருந்தக் கூடாது என இரண்டு தினங்களுக்கு ஒருமுறை கலைஞருடனும், துணை முதல்வர் ஸ்டாலினுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும் SEZ புதிய பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகள் துவங்கும் பன்னாட்டு கம்பெனிகள் கூறி வருகின்றது என்பது நிதர்சனமான உண்மை)

இது ஒருபுறமிருக்க வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கக் கூடாது என “சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும்” என எண்ணுவதைப் போன்று தொழிற்சங்க அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்துவிட்டால் தொழிலாளர்கள் அடங்கிவிடுவார்கள் என சர்வாதிகாரி அரவிந் ஜாதவ் எண்ணுவது எங்கணம் என்பது நமக்கு புரியவில்லை.  இந்திய தொழிற்சங்க சட்டத்தில் அங்கீகாரம் என்பதற்கு தொழிலாளர் ஆணையர் தலையிட்டு தொழிற்சங்கங்களுக்கிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை தொழிலாளர்கள் தேர்வு செய்யும் தொழிற்சங்கத்திற்கு நிர்வாக அங்கீகாரம் வழங்கலாம் என்றுள்ளது.

ஒரு தொழிற்சங்கத்திற்கு பதிவு செய்யும் அதிகாரம் படைத்த தொழிலாளர் துணை ஆணையர் அந்த பதிவை ரத்து செய்ய முழு உரிமை உள்ளது என்ற போதிலும் இரண்டு மாத முன்னறிவிப்பு கொடுத்து அதன் மீது பதில் பெற்றபின்னர்தான் காரண காரியங்களை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும் என தொழிற்சங்க சட்டம் கூறுகிறது.  அதேபோல் அளிக்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமெனில் முன்னறிவிப்பு கொடுத்து சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளாமல் இது போன்ற சர்வாதிகாரப் போக்கினை அனுமதித்தால் நாளை எந்த தொழிற்சாலையிலும் தொழிற்சங்கங்களே இருக்காது.  தொழிற்சங்கங்களே இருக்கக் கூடாது, அரசுத் துறையே இருக்கக் கூடாது, எல்லாம் தனியார் மயமாக வேண்டும், தனது குறையை முறையிடும் வாய்ப்பு தொழிலாளிக்கு இருக்கக் கூடாது என்ற மறு காலனியாதிக்க நடவடிக்கைகளின் மறுபதிப்புத்தான் அரசுத்துறையான ஏர் இந்தியாவில் இன்று அரங்கேறியிருக்கிறது.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் சுமார் 32000 பேர் பணிபுரியும் ஏர் இந்தியாவில் 14 தொழிற்சங்கங்கள் இருக்கிறதாம்.  இது போல் ஆலைகள் தோறும் பணிப்பிரிவு, அரசியல் சார்பு வாரியாக தொழிலாளர்கள் பிளவுபட்டு நிற்பதுதான் இது போன்ற சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு துணைபோகும் விதமாக அமைந்துவிடுகிறது.  இந்த செய்தியின்மீது தொழிற்சங்க தலைவர்களின் கண்டன அறிக்கைகள் கூட இல்லையென்பது வேதனையான ஒன்று.  இந்திய தொழிலாளி வர்க்கம் ஓட்டுக் கட்சி அரசியல் சார்புத்தன்மையை விட்டு வெளியேறி புரட்சிகர இயக்கங்களின் தலைமையில் ஒரு ஆலைக்கு ஒரு தொழிற்சங்கம் என்று ஒன்றுபடுவதே இன்றைய காலத்தின் கட்டாயம்.

ஏர்இந்தியா போன்ற மேல்தட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கே கதி இதுதானென்றால் மற்ற சாதாரண நிறுவனங்களின் நிலைமை பற்றி விரித்துரைக்கத் தேவையில்லை. மங்களூர் விபத்தின் உண்மையை உலகுக்கு சொன்னார்கள் என்ற காரணத்திற்காகவே இந்த சர்வாதிகார பணிநீக்கம் நடக்கிறது. இதை எதிர்த்து ஏர் இந்தியா ஊழியர்கள் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. நாட்டிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் மறுகாலனியாக்க கொடுமையை முறியடிக்க ஒன்றிணைந்து போராடினால்தான் இந்த போக்கை முறியடிக்க முடியும். அந்த அரசியலை இந்திய தொழிலாளி வர்க்கம் என்று கையிலெடுக்கப் போகிறது?

___________________________________________

– சித்திரகுப்தன்.

___________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பாலாவின் ‘ஈழம் ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு – அறிமுகம்

12

vote-012இனப்படுகொலை வரலாற்றில் தமிழன் பெயரும் இடம்பெறும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சம உரிமையும், சக வாழ்வும் கேட்டுப் போராடிய ஈழத் தமிழினத்துக்கு ஆயுதவழிப் போராட்டம் என்பது வேறு வழியற்ற இறுதித் தேர்வு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் காரணம் அல்ல, அவர்கள் விளைவுகள். ஒடுக்குமுறைக்கு எதிரான விளைவுகள். அந்த உரிமைச் சமரின் பின்னுள்ள நியாயங்களை உலகம் புரிந்துகொள்ளும் முன்னரே நந்திக்கடலோரம் போராட்டம் முடித்து வைக்கப்பட்டுவிட்டது. பொருளாதார அதிகாரத்தை மைய அச்சாகக் கொண்டு கட்டமைக்கப்படும் நவீன பொருளாதாரத்தில் அனைத்துமே சந்தையாகத்தான் பார்க்கப்படுகின்றது. சந்தை வியாபாரத்துக்கு எப்போதுமே கூச்சல்கள் பிடிப்பது இல்லை. எதிர்ப்பியக்கங்களின் போராட்டங்கள் அற்ற சந்தைதான் நிறுவனங்களுக்குத் தேவை. தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டப் பின்னரான இலங்கை இப்போது எதிர்ப்புகளும், கூச்சல்களும் அற்ற அமைதியான சந்தையாக இருக்கிறது. அதனால்தான் இந்திய பெரு முதலாளிகள் இலங்கையை நோக்கி படை எடுக்கின்றனர்.

ஈழ யுத்தத்தை நடத்தியதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்தது என்றால், அதை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய சாத்தியம் தமிழ்நாட்டுக்கே இருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய அரசியல் மற்றும் மக்கள் செல்வாக்கு இருந்தது. ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே ஈழத்தின் இன அழிப்பை தங்களின் சுய லாபங்களுக்கு மடைமாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். இத்தகைய கையாலாகத்தனத்தை அம்பலப்படுத்துவதில் தொடங்குகின்றன பாலாவின் கார்ட்டூன்கள். தமிழக அரசியல்வாதிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் இருந்த பச்சை சந்தர்ப்பவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் இந்த கார்ட்டூன் கோடுகள் தோலுரிக்கின்றன.

‘ஈழம் என்னும் ஆன்மாவை மரணமடைய வைத்தது இவர்தான்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த மக்கள் படுகொலையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள், எழுத்தாளர்கள்  எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கை நனைத்துள்ளனர். மக்களின் மறதியால் யாவற்றையும் கடந்து சென்றுவிடலாம் என நினைக்கும் இந்த நேர்மையற்றவர்களை மக்களின் முன்பு அம்பலப்படுத்த இத்தைய தொகுப்புகள் உதவக் கூடியவை. எழுத்துக்களால் அல்லாது கோடுகளால் ஒரு குறிப்பான பிரச்னையை அணுகும் முதல் தமிழ் தொகுப்பு என்ற அடிப்படையில் இது கூடுதல் கவனம் பெறக் கூடியது. பாலாவின் ‘ஈழம்: ஆன்மாவின் மரணம்’ என்ற இந்த தொகுப்பின் அறிமுக மற்றும் விமர்சனக் கூட்டம் வெள்ளி 11 -6-10 அன்று மாலை 6 மணிக்கு இக்ஸா மையத்தில் (கன்னிமரா நூலகம் எதிரே, 107 பாந்தியன் சாலை, சென்னை-8) நடைபெறவிருக்கிறது. அனைவரும் பங்கேற்கும்படி அன்போடு அழைக்கிறோம்!

வரவேற்புரை – வெங்கட பிரகாஷ்
கருத்துரை – தமிழருவி மணியன், பாமரன், வீர சந்தானம், இயக்குனர் ராம்
நன்றியுரை – ப்ரியா, கீற்று.காம்

(மின்னஞ்சலில் செய்தி/படங்கள் அனுப்பிய நண்பருக்கு நன்றி)

vote-012

தொடர்புடைய பதிவுகள்

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!


vote-012அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை – நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவையும் உடனே தூக்கில் போடச்சொல்லி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திலிருந்து அத்வானி, ஜோஷி முதலான சங்கப்பரிவாரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு – தன்னுடைய தங்கையை காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞனையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொன்ற தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு உச்சநீதி மன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து. இத்தீர்ப்புகளுக்கிடையில் இழையோடும் ஒற்றுமை, இந்நாட்டின் நீதித்துறை, அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பொதுக்கருத்து ஆகியவையனைத்தையும் ஆளுகின்ற பொது உளவியலை, பளிச்சென்று காட்டுகிறது.

மும்பைத் தாக்குதல் வழக்கில், கசாபுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. “தானே முன்வந்து முஜாகிதீன் படையில் இணைந்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டது, சதித் திட்டம் தீட்டியது, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தது, அப்பாவிகளைக் கொலை செய்தது ஆகிய குற்றங்களை கசாப் இழைத்திருப்பதாகவும், அவன் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதால், தூக்கு தண்டனை விதிப்பதாகவும்” அத்தீர்ப்பு கூறுகிறது.

அஜ்மல் கசாப் செய்த கொலைகளுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் மறுக்க முடியாத வீடியோ ஆதாரங்கள் இருப்பதைப் போலவே, கசாப் போன்ற கருவிகள் உருவாகக் காரணமாக இருக்கும் புறவயமான அரசியல் சூழ்நிலைகளுக்கும் மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 80-களில் பாகிஸ்தானில் அமெரிக்கா உருவாக்கிய இசுலாமியத் தீவிரவாதம், அதே காலகட்டத்தில் இந்தியாவில் தலைவிரித்தாடிய பார்ப்பன பாசிசம், இந்திய அரசு காஷ்மீரில் நடத்தும் இராணுவ ஒடுக்குமுறை, தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக இளைஞர்களை இசுலாமியத் தீவிரவாதத்துக்கு ஆட்படுத்தி இந்தியாவின் மீது ஏவிவிடும் பாகிஸ்தான் உளவுத்துறையின் நடவடிக்கைகள் – என்ற இந்த அரசியல் பின்புலத்தில் அகப்பட்டுக்கொண்ட பாகிஸ்தானின் ஏதோ ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் – அஜ்மல் கசாப். அவன் இசுலாமியத் தீவிரவாதத்தின் கையில் அகப்பட்ட இன்னொரு கருவி.

எந்தக் குற்றங்களுக்காக கசாப்பைத் தூக்குமேடைக்கு அனுப்பவேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறதோ, அந்தக் குற்றத்தின் மூலவர்களான பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கும், தாஜ் பாலஸ் மீதான தாக்குதலைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்த இந்தியத் தரகு முதலாளிகளும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானையும் உள்ளடக்கிய தெற்காசிய சுதந்திர வர்த்தக வலையம்தான் இந்திய ஆளும் வர்க்கங்களின் கனவு என்பதால், பாகிஸ்தான் அரசு மனம் திருந்திவிடும் என்று மன்மோகன் சிங் நம்புகிறார். கசாப் மனம் திருந்த வாய்ப்பே இல்லை என்று மரணதண்டனை விதிக்கிறது நீதிமன்றம்.

கசாபுக்குத் தூக்கு என்று தீர்ப்பு வந்தவுடனேயே, “அப்சல் குருவையும் உடனே தூக்கிலிடு” என்று பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியது. இந்து தேசவெறிப் பொதுக்கருத்தை அரவணைத்துக் கொள்வதற்காக, உடனே அதனை வழிமொழிந்தார், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங். மன்மோகன் சிங்கோ ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று வழுக்கினார். அப்சல் குரு வழக்கில் சட்டம் தன் கடமையை எப்படிச் செய்தது?

ஆகஸ்டு, 2005-இல் அப்சல் குருவின் மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதி மன்றம், போலீசு சமர்ப்பித்த அப்சல் குருவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாகவே ஏற்க முடியாது என்பதையும், குற்றவாளிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டது. எனினும், “மரண தண்டனை விதிக்கப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும்” என்று கூறி அப்சல் குருவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

எந்த வாக்குமூலத்தை டெல்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் நிராகரித்தனவோ, (பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில்தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தோம் என்று அப்சல் குரு ஒப்புக் கொண்டதாக போலீசு தாக்கல் செய்த வாக்குமூலம்) அதையே அசைக்கமுடியாத ஆதாரமாகக் காட்டி, 5 இலட்சம் துருப்புகளை எல்லையில் கொண்டு போ நிறுத்தி, டிசம்பர் 2001-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போர் ஆயத்தங்களைச் செய்தது பாரதிய ஜனதா அரசு. நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்ற பெயரில் சங்கப்பரிவாரம் நடத்திய இந்தக் கபட நாடகத்தில், நாடாளுமன்றத்துக்குக் காவல் நின்ற பாதுகாப்புப் படையினர் பலர் கொல்லப்பட்டது மட்டுமின்றி, உறைபனிக் குளிரில் நோக்கமின்றி நிறுத்தப்பட்ட பல இராணுவச் சிப்பாய்கள் மன அழுத்தத்தால் தற்கொலையும் செய்து கொண்டனர். நூறு கோடி மக்களை ஏமாற்றி, துணைக்கண்டத்தையே ஒரு அணு ஆயுதப்போரின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்திய ‘நாடாளுமன்றத் தாக்குதல்’ என்ற மோசடி நாடகத்தை அம்பலப்படுத்துவதற்கு காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான ஓட்டுக்கட்சிகள் யாரும் இன்று வரை தயாராக இல்லை. இதனை அம்பலப்படுத்தக்கூடிய ஒரே நேரடி சாட்சியை ஒழித்துக் கட்டுவதற்காக, “அப்சல் குருவை உடனே தூக்கிலிட வேண்டும்” என்று இந்து தேசத்தின் ‘மனச்சாட்சி’யின் பெயரால் மிரட்டு கிறது, பாரதிய ஜனதா.

பாபர் மசூதியை இடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அத்வானி, ஜோஷி, வினய் கட்யார் போன்ற சதிகாரர்கள் அனைவரையும் விடுவித்து, 2003-இல் பைசாபாத் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தற்போது ஆமோதித்திருக்கிறது அலகாபாத் உயர்நீதி மன்றம். 1992 முதலே மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகள் திட்டமிட்டே ஒரு நீதிமன்றத்திலிருந்து இன்னொரு நீதிமன்றத்துக்குப் பந்தாடப்பட்டன. வழக்கை விசாரிக்கும் புலனாவுத் துறைகள் மாற்றப்பட்டன. அத்வானி வகையறாவை தப்ப வைக்கும் நோக்கத்துடன், தொழில்நுட்பத் தவறுகள் திட்டமிட்டே இழைக்கப்பட்டன.

இந்த 17 ஆண்டுகளில் டில்லியிலும் உ.பி.யிலும் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., காங்., ஐ.முன்னணி, முலாயம், மாயாவதி ஆகிய அனைவரும் அத்வானி உள்ளிட்ட சங்கப்பரிவாரத் தலைவர்களை விடுவிப்பதற்கு உதவியிருக்கின்றனர். இவை அனைத்தின் இறுதி விளைவுதான் தற்போதைய தீர்ப்பு.

பாபர் மசூதி இடிப்பு என்பது, மும்பை தாஜ் பேலஸ் மீதான தாக்குதலைப் போல இரகசியச் சதித்திட்டம் தீட்டி, திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.  வரலாற்றுப் புரட்டுகளையும் பொய்களையும் அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன பாசிசக் கும்பல் நாடு முழுவதும் திட்டமிட்டே அரங்கேற்றிய ஒரு அரசியல் சதியின் இறுதிக் காட்சிதான் பாபர் மசூதி இடிப்பு. அது இறுதிக் காட்சியும் அல்ல என்பதை அதனைத் தொடர்ந்து வந்த மும்பை, குஜராத் படுகொலைகள் நிரூபித்தன. ரைஷ்டாக் தீவைப்பில் தொடங்கி, ஆக்கிரமிப்புகள், யூதப் படுகொலைகள் போன்ற பல சதிகளுக்கும் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருந்தது ஹிட்லரின் நாஜிசம். அந்த அரசியலை விட்டுவிட்டு, யூதப் படுகொலையை மட்டும் சதித்திட்டமாக யாரும் சித்தரிப்பதில்லை. ஆனால், இந்து தேசியம் எனும் பாசிச கிரிமினல் அரசியலைச் சட்டபூர்வமானதாக அங்கீகரித்துக்கொண்டு, மசூதி இடிப்பை மட்டும் தனியொரு சதித் திட்டமாகக் காட்டும் பித்தலாட்டம்தான் அயோத்தி வழக்கு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டுக்கட்சிகள், ஊடகங்கள், அதிகார வர்க்கம், நீதித்துறை போன்ற இந்திய ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களாலும் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் இந்தப் பித்தலாட்டம், அதன் தர்க்க ரீதியான முடிவை எட்டியிருக்கிறது.

1983 வரை உள்ளூரிலேயே விலைபோகாமலிருந்த ஒரு பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கி, ரத யாத்திரை நடத்தி நாடு முழுவதையும் ரத்தக் களறியாக்கி, பின்னர் 1992-இல் மசூதியை இடிப்பை முன் நின்று நடத்திய அத்வானி உள்ளிட்ட படுகொலை நாயகர்கள் சதி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்து மதவெறியின் காலாட்படையாக செயல்பட்ட ஊர்பேர் தெரியாத சில ‘அஜ்மல் கசாப்’கள்தான், மசூதி இடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றவாளிகளாக தற்போது வழக்கில் எஞ்சியிருக்கின்றனர். மசூதி இடிப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் நேரடிப் பாத்திரம் பற்றியும், உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் மறைமுகப் பாத்திரம் பற்றியும் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கை ஆதாரங்களுடன் விவரித்த போதிலும், அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாகச் செயல்பட்ட அஞ்சு குப்தா சாட்சியமளித்த போதிலும், காங்கிரசு அரசு அசைந்து கொடுக்கவில்லை. அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தற்போதைய தீர்ப்பின் மீதும் மேற்கூறிய உண்மைகள் எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை. ஏனென்றால், இந்திய ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் இந்த ‘பேலூர் தூண்களுக்கு’ அடியில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு இடைவெளி இருக்கிறது. அதனுள் ஒரு காகிதத்தைப் போல நுழைந்து வெளியே வருகிறது இந்து மனச்சாட்சி.

தன்னுடைய தங்கையைக் காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞன் பிரபு, அவனது தந்தை மற்றும் வீட்டிலிருந்த இரு குழந்தைகளை வெட்டிக் கொலை செய்த தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் (டிசம்பர் 2009), “தவறானதாக இருந்தபோதிலும், இயல்பான சாதி உணர்வுக்குத்தான் தீபக் பலியாகியிருக்கிறான் எனும்போது, அவனைத் தூக்கிலிடுவது நியாயம் ஆகாது. சாதி, மத மறுப்பு திருமணம் போன்ற சமூகப் பிரச்சினைகள் தொடர்பான குற்றங்கள் இழைக்கப்படும்போது, அவை எவ்வளவுதான் நியாயமற்றவையாக இருந்தபோதிலும், குற்றவாளியின் உளவியலைக் கணக்கில் கொள்ளவேண்டியிருக்கிறது” என்று கூறியிருக்கிறது.

சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவின் மரணதண்டனையை நியாயப்படுத்த, பாதிக்கப்பட்ட தேசத்தின் மனோநிலையைத் துணைக்கழைத்த உச்சநீதிமன்றம், பார்ப்பன சாதி வெறியனைக் காப்பாற்ற விழையும்போது, குற்றவாளியின் மனோநிலையைப் பரிசீலிக்கச் சொல்கிறது. இதே அளவுகோலின் படி அஜ்மல் கசாபின் உளவியலைப் பரிசீலித்தால், குஜராத் முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவதைக் கண்டு இசுலாமியத் தீவிரவாதத்துக்கு பலியான அந்த இளைஞனின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்யவேண்டியிருக்கும். எனினும் நீதிமன்றம் அப்படிச் சிந்திக்கவில்லை. சிந்திப்பதில்லை.

வெவ்வேறு வழக்குகள்.. வெவ்வேறு நீதிமன்றங்கள்… ஆனாலும் அவற்றின் தீர்ப்புகளை ஆளுகின்ற உளவியல், ஆதிக்க சாதி இந்து மனத்திலிருந்தே பிறக்கிறது. இந்திய அரசியல் சட்டம், இந்தியக் குற்றவியில் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம்… எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன – காகிதத்தில்.

இந்திய நீதித்துறையின் இதயத்தை இந்து மனச்சாட்சி தான் வழி நடத்துகிறது.

**********************************************************************************

புதிய ஜனநாயகம் ஜூன் 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

52


பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டுள்ள அப்சல் குருவைத் தூக்கில் போடுமாறு இந்துமதவெறியர்கள் உள்ளிட்ட ‘தேசபக்தர்கள்’ அடிக்கடி கூப்பாடு போடுகின்றனர். அப்சல் குருவைத் தூக்கில் போட்டால்தான் பா.ஜ.க மற்றும் அன்றைய அரசாங்க சதிகள் மறைக்கப்படும் என்பதால் அவர்களும் ஊடகங்களும் இதை வலியுறுத்துகின்றனர். அப்சல்குருவைத் தண்டிக்க போதிய முகாந்திரங்கள் இல்லையென்றாலும் தேசத்தின் பொதுப்புத்தியை கணக்கில் கொண்டு இந்த தண்டனை வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

கசாப்புக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் நடந்து ஒரு வருடத்திற்குள்ளேயே இந்த வழக்கு முடிந்திருக்கிறது. கசாப்பும் மற்றைய பயங்கரவாதிகளுடன் சுமார் 150 பேரை கொலை செய்திருக்கின்றனர். இதையும் தேசத்தின் மனசாட்சி வரவேற்கவே செய்கிறது.

ஆனால் போபால்?

1984 டிசம்பர் 2 நள்ளிரவு மற்றும் டிசம்பர் 3 அதிகாலையில் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு எனும் அமெரிக்க ஆலையில் மீதைல் ஐசோயனைடு எனும் நச்சுவாயு வெளியேறி 15,000 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அடுத்து வந்த வருடங்களில் இன்னும் சில ஆயிரம் பேர் இறக்க, பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

டிசம்பர் 4இல் யூனியன் கார்பைடு தலைவரான வாரென் ஆண்டர்சன் கைது செய்யப்படுகிறான். 2000 டாலர் ஜாமீன் கட்டிவிட்டு மீண்டும் இந்தியா வருவதாக பொய்யுரைத்த ஆண்டர்சன் உடன் அமெரிக்கா சென்று இன்றுவரை வழக்கிற்காக வரவில்லை. ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும், அமெரிக்கா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. செப்டம்டர் 11இல் நடந்த உலக வர்த்தக மையத் தாக்குதலில் இறந்தவர்களை விட போபாலில் கொல்லப்பட்டவர்கள் பல மடங்கு அதிகம். பின்லேடனுக்காக முழு ஆப்கானையும், பாக்கையும் குண்டுகளால் சல்லடை போட்டு தேடும் அமெரிக்கா ஆண்டர்சனை பயங்கரவாதியாக கருதவில்லை. இந்தியாவும் அப்படி வலியுறுத்துவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பாமர இந்திய மக்கள்தானே?

1989இல் இந்திய அரசு நீதிமன்றத்திற்கு வெளியே யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் சமாதானம் செய்து கொண்டது. அதில் கார்பைடு நிறுவனம் அளித்த பிச்சை நிவாரணத் தொகை வெறும் 43 கோடி டாலர் மட்டுமே. கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை தோராயமாக வகுத்துப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் இந்திய ரூபாய் கூட கிடைக்காது. சமீபத்தில் சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட துணை இராணுவ வீரர்களுக்கு மொத்தமாக கிடைத்த தொகை மட்டும் தலா 75 இலட்சம் ரூபாயைத் தாண்டும். காரணம் அந்த வீரர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக போர் புரிகிறார்கள். போபாலிலோ ஒரு பன்னாட்டு நிறுவனம் கொலை செய்திருக்கிறது. இப்போது நிவாரணத் தொகையின் அரசியலை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த பிச்சை நிவாரணத் தொகை கூட முழுமையாக வழங்கப்படவில்லை என்பது வேறு விசயம். அந்த அளவு அரசு எந்திரம் இதை பாராமுகமாக கருதுகிறது.

வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே 1994இல் யூனியன் கார்பைடு நிறுவனம் தனது பங்குகளை மெக்லாய்ட் ரஸ்ஸல் நிறுவனத்திடம் விற்பதற்கு இந்திய அரசு அனுமதித்திருக்கிறது. எப்படியும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வர்த்தக சாம்ராஜ்ஜியம் விழக்கூடாது என்று இந்த பச்சைத் துரோகம் அரசால் செய்யப்பட்டது.

1999இல் யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவிலிருந்த டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. டோ நிறுவனமோ போபால் விசவாயு கொலைக்காக தமது நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று சொல்லிவிட்டது. பொறுப்பு ஏற்க வேண்டிய யூனியன் கார்பைடு நிறுவனமே இனி இல்லை என்று காட்டுவதற்கு இந்த அழுகுணி ஆட்டம் நடத்தப்பட்டது.

இன்றும் போபால் நகரில் இந்த படுகொலையின் பாதிப்புகள் அழுத்தமான தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றது. போபாலின் மண்ணிலும், நீரிலும் பாதரசத்தின் அளவு வழக்கத்தை விட 60 இலட்சம் மடங்கு அதிகம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நச்சு சூழலோடுதான் போபால் மக்கள் இன்னமும் வாழ்கிறார்கள்.

1999ஆம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அந்நிறுவனம் இந்தியாவில் நடந்த விபத்திற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அடித்துக் கூறிவிட்டது. 2002 இல் ஆண்டர்சனுக்கு இந்திய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தாலும், அந்த அயோக்கியனை அமெரிக்காவில் காணவில்லை என்று அமெரிக்க அரசு பச்சையாக புளுகியது. ஆனால் அவன் நியூயார்க் நகரில் இருப்பதை ஒரு பிரிட்டீஷ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. ஒரு முதலாளியையும், ஒரு முதலாளித்துவ நிறுவனத்தையும் காப்பாற்றுவது எப்படியெல்லாம் நடந்திருக்கிறது பாருங்கள்.

கொல்லப்பட்ட உயிர்களுக்கு உரிய நிவாரணம் தராத நிலையில் போபாலில் உள்ள ஆலையை சுத்தப்படுத்தலாம் என அமெரிக்க நீதிமன்றம் டோ கெமிக்கல்சுக்கு அனுமதியளித்தது. அந்த ஆலையை சுத்தப்படுத்தி ரியல் எஸ்டேட்டுக்கு விற்றுவிட்டால் பணமாவது கிடைக்குமே என்று அந்த கொலைகாரர்கள் யோசித்திருக்கலாம். எழவு வீட்டிலும் வந்தவரை ஆதாயம்தானே?

பிறகு அந்த 43 கோடி நிவாரணத்தொகையை வைத்திருந்த இந்திய ரிசர்வ் வங்கி அதற்கு வட்டியாக 15 கோடி டாலரைச் சேர்த்து வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மொத்த குடும்பத்தினரையும் இழந்து ஒரு சிலர் மட்டும் நடைப்பிணமாக வாழும் நிலையில் இந்த பிச்சைக்காசு எம்மாத்திரம்? மட்டுமல்ல இதுவும் கூட இன்னமும் முழுமையாக வழங்கப்படவில்லை. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை இன்னமும் முழுமையாக தயாரிக்கப்படவில்லையாம்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வந்திருக்கிறது. ஆலையில் பணியாற்றிய இந்திய உயர் அதிகாரிகள் எட்டு பேருக்கு போனால் போகிறது என்று இரண்டு வருடம் சிறைத்தண்டனை அளித்திருக்கிறார்கள். ஆண்டர்சனும், டோ கெமிக்கல்சிடம் ஒளிந்திருக்கும் யூனியன் கார்பைடு நிறுவனும் இதை கோக் குடித்தவாறு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இரசித்திருப்பார்கள். எய்தவன் இறுமாந்திருக்க அம்புகளுக்கு மட்டும் அதுவும் ஒரு கொசுக்கடித் தண்டனை.

இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். சட்டம், நீதி, நிவாரணம் என்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு முதலாளிகள் தாம் நடத்தியிருக்கும் பச்சையான படுகொலையை 26 ஆண்டுகளாக நாசுக்காக நீர்த்துப் போக செய்திருக்கிறார்கள். இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள், இருநாட்டு அரசாங்கங்கள் இணைந்து நடத்தியிருக்கும் இந்த ஏமாற்று வேலையை வைத்தாவது முதலாளித்துவம் என்றால் அது பயங்கரவாதம்தான் என்பதை நாம் உணரவேண்டும். அப்போதுதான் இன்னமும் பரிதாபமாய் போபால் படுகொலைக்காக உயிரற்ற குரலில் போராடி வரும் அந்த பாமர மக்களது நீதியின் பக்கம் நாமும் இணைய முடியும்.

ஆண்டர்சனைத் தூக்கில் போடுவதோடு அமெரிக்க அரசை பயங்கரவாத அரசாக அறிவிக்க வேண்டும். அமெரிக்க அரசுக்கு ஒத்தூதிய இந்திய அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளும் தண்டிக்கப்படவேண்டும். இவையெல்லாம் இன்று நடக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். எனினும் அந்த எளிய மக்களால், ஒரு நாள் இந்த அரசை தூக்கியெறியும் புரட்சி ஒன்று நடக்கும் போது இந்தக் குற்றங்களுக்கு வட்டியும் முதலுமாய் தண்டனை வழங்கப்படும். தாமதமான நீதி அப்போது மட்டுமே கணக்கு தீர்க்கப்படும். தீர்ப்போம்!!

ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு! EXCLUSIVE

40

vote-012ஜெகத் கஸ்பர் ராஜ் என்னும் பாதிரி இந்திய, இலங்கை அரசுகளின் உளவாளியாகப் பயன்பட்டுள்ளார் என்று ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தி வினவிலும் புதிய கலாச்சாரத்திலும் சில கட்டுரைகள் வந்துள்ளன. புலிகள் இருந்த போது புலிகளை வைத்து கல்லாக் கட்டியவர் புலிகளுக்குப் பின்னர் புலத்து தமிழர்களை குறி வைத்தார். வினவு அம்பலப்படுத்தியதும் பல ஈழ ஆதரவாளர்கள் இந்த உளவாளியை விட்டு ஒதுங்கினார். புலத்து மக்களின் பாக்கெட்டுகளை குறி வைத்த ஜெகத் கஸ்பருக்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லாமல் போக இப்போது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த பேரினவாத ராஜபக்சேவிடமே மீள் கட்டுமான ப்ராஜெக்டைப் போட ரெடியாகிவிட்டார்….. உளவாளிகள் எப்போதும் தங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதில்லை. என்றாலும் சூழலும் காலமும் கனியும் போது உண்மை முகத்தை விரும்பியே வெளிப்படுத்துவார்கள். ஜெகத் இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.

சென்ற வருடம் கொடூரமான இன அழிப்புப் போர் ஈழத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போது இந்தப் பாதிரியால் ” இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள் ” என்ற  ஸ்லோகனோடு கார்த்திக் சிதம்பரம், ஜெகத் கஸ்பர் ராஜ் ஆகியோரால் துவங்கப்பட்டதுதான் “நாம்” என்னும் அமைப்பு. ஒரு தன்னார்வ நிறுவனமாக பதியப்பட்டுள்ள இந்த நிறுவனம், எழுபதாயிரம் மக்களைக் கொன்றொழித்த கொலைகார ராஜபட்சேவுக்கும் கொலைக்குத் துணைபோன போர் வெறி இந்தியாவுக்கும் ஒரு கோரிக்கை வைத்துள்ளது . நாம் அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிகை இதுதான்,

“இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் புனர்வாழ்வு (Rehabitation) பொருண்மிய மேம்பாடு (Economic Development) அரசியற் தீர்வு (Political Settlement) நீதியிலமைந்த இணக்கப்பாடு (Justice based Reconciliation) நான்கையும் ‘ நாம்’ அமைப்பு வலியுறுத்துகிறது.உடனடித் தேவை புனர்வாழ்வு என வரையறுக்கிறோம். அதே வேளை இந்திய மக்கள்- குறிப்பாக நல்லுள்ளம் கொண்ட தமிழக மக்கள் புனர்வாழ்வு முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ள கட்டமைப்பு செய்யப்பட்ட நிறுவன ஒழுங்கு (Stuctural Mechanism) இல்லாதிருப்பது பெரும் குறையாயுள்ளது. இக்குறையை நிவர்த்தி செய்ய ‘தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய -இலங்கை கூட்டமைப்பு (தமிழில் இருப்பதற்கும் ஆங்கிலத்தில் இருப்பதற்குமான வார்த்தை வித்தியாசத்தையும் கவனியுங்கள்)’ ( Indo-Lanka joint mechanism for Rehabilitation & Reconstruction) என்ற உயர்நிலை அமைப்பினை பரிந்துரைக்கிறோம்.”

“இருநாடுகளின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள், தமிழக முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்சமயத் தலைவர்கள், ரோட்டரி-லயன்ஸ் போன்ற சமூக அமைப்புகள் மற்றும் தொழில் -வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொண்டதாக இந்த அமைப்பு உருவாக்கப்படலாம். எதிர்வரும் ஜுன் 08 ம் திகதி இலங்கை அதிபர் திரு. மகிந்த ராஜபக்சே புது டில்லி வருவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தருணம மேற் சொன்ன பரிந்துரையை இந்தியப் பிரதமர் முன்வைத்து செயல்வடிவம் பெறச் செய்திட வேண்டுகிறோம். உடனடி புனர்வாழ்வு தேவைகள் என்னவென்பதை பல்வேறு தன்னார்வ அமைப்புக்கள் அடையாளப்படுத்தியுள்ளன. அவற்றினடிப்படையில் உடனடிப் பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் பொருண்மிய மேம்பாட்டு திட்டங்களாக விரிவு செய்யப்படலாம். இதற்கென மத்திய மாநில அரசுகள் ஆதார நிதியொன்றை அறிவிப்பதையும் தமிழுலகம் காலம் கருதிய நற்செயலாய் வரவேற்கும் புனர் வாழ்வு- பொருண்மிய மேம்பாட்டு திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதே வேளை நீதியான அரசியற் தீர்வு தான் நிரந்தர அமைதிக்கு வழி என்பதையும் வலியுறுத்துகிறோம்.”

“தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய -இலங்கை கூட்டமைப்பு” (Indo-Lanka joint mechanism for Rehabilitation & Reconstruction) என்பதுதான் ஃபாதர் போட்டிருக்கும் மெகா ப்ராஜெக்ட்… இதில் விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், ஏசியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் சசிகுமார், டெக்கான் குரோனிக்கல் பத்திரிகையின் சென்னைப் பொறுப்பாளர் பகவான் சிங் என பெரிய ப்ராஜெக்டுக்காக பெரிய மனிதர்கள் கைகோர்த்திருக்கிறார்கள். ஆக இந்த பெரிய மனிதர்கள் யார் என்பதையும் பார்த்து விடுவோம்.

பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்

அதற்கு முன்னால் இது தொடர்பாக சென்னையில் நாம் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசிய முன்னாள் பேராசிரியரும், புலி ஆதரவாளரும், இந்நாளில் கருணாநிதி ஆதரவாளருமான  சுப.வீரபாண்டியன் பேசும் போது “இத்திட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால் உள்ளூர் அரசியலை பேசக் கூடாது” என்றார். அதாவது புலிகளை காட்டிக் கொடுத்து கழுத்தறுத்த சந்தர்ப்பவாதிகளைப் பற்றி பேசினால் எல்லாமே குழம்பி விடும் என்கிறார். மேலதிகமாக இதில் கருணாநிதி பெயர் கெட்டு விடக் கூடாது என்கிற கவலை பேராசிரியருக்கு உண்டு… ஆனால் உள்ளூர் அரசியலைப் பேசாமல் உலக அரசியலைப் பேச முடியாது என்பதாலும் மிக ஆபத்தான ஒரு ஒப்பந்தத்தை ஜெகத் துவக்கி வைப்பதாலும் மக்களிடம் இதை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாலும் தொடர்ந்து சுட்டிக்காட்டி எழுதுகிறோம்.

இனி ப்ராஜெட் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ள பெரிய மனிதர்களைப் பார்ப்போம்.

ஜெகத் கஸ்பர் ராஜ் ( பச்சைத் தமிழன்)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து வருமானம் ஈட்டும் பாதிரித் தொழிலுக்கு வந்தவர். பங்குப் பாதிரியாராய் இருந்த இடத்தில் இந்து, கிறிஸ்தவர் மோதல் வெடிக்க அங்கிருந்து செழிப்பான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். அந்தத் தொடர்புகள் மூலம் பிலிப்பைன்சில் இருக்கிற வெரித்தாஸ் வானொலிக்குச் (சி.ஐ.ஏ கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம்) சென்றவர் அந்த தொடர்புகள் மூலம்  புலிகள் அமைபிற்குள் தந்திரமாக நுழைந்தார். போருக்குப் பின்னர் நடேசன் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதில் தனது பங்கை இவரே உளறி வைத்து வினவு அதை அம்பலப்படுத்திய போது அருட்தந்தை இருட் தந்தையானார்.

ஆனாலும் விட்ட பாடில்லை, போராளிகளின் வீரமரணங்களை நினவு கூறும் நவம்பர் 27 மாவீரர் தினத்தன்று “நாம்” அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான (ப.சிதம்பரத்தின் மகன்) கார்த்தி சிதம்பரத்தின் மனைவியான ஸ்ரீநிதி சிதம்பரத்தின் பரத நாட்டியத்தை அரங்கேற்றி கொல்லபப்ட்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுதான் ஈழ மக்களுக்கு பாதிரி காட்டிய பாசத்துக்கு எடுத்துக்காட்டு. ஊரே சிரித்த சிரிப்பில் இனி இந்த கடை கல்லா கட்டாது என்பதால் ஈழ ஆதரவுக் கடையை மூடி விட்டு இப்போது நேரடியாக ராஜபக்சேவிடமே ப்ராஜெக்டுக்கு தனது டில்லி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். விரைவில் இவரது வித விதமான விஸ்வரூபங்களைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

இதற்கு முன்னர் பத்திரிகையாளர்களை ஏமாற்றி இவர் செய்த “மௌனத்தின் வலி” நூலையும் அதன் அரசியல் அயோக்கியத்தனத்தையும்  வினவு அம்பலப்படுத்திய போது தவறை உணர்ந்த ஊடகவியலாளர்கள் இந்தப் பாதிரியை விட்டு ஒதுங்கினார்கள். நன்றி கெட்ட நாய், வீட்டுக்காரன் மீதே பாய்கிற மாதிரி உடனே பத்திரிகையாளர்கள் மீதே பாயந்தார் இந்தப் பாதிரி…. உஷாரானவர்கள் அந்தப் பக்கம் மறுபடியும் எட்டிக் கூட பார்க்கவில்லை. எல்லாப் பழியையும் பத்திரிகையாளார்கள் மீது போட்டு விட்டு வழக்கம் போல தப்பிக்கப் பார்த்தார் பாதிரி.

சசிகுமார் ( மலையாளி)

தென்னிந்தியாவில் சன் டிவிக்கு இணையான வரலாற்றைக் கொண்ட மலையாள சேனலான் ஏஷியா நெட் தொலைக்காட்சியைத் துவங்கியவர்களில் ஒருவர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய என்.ஜீ.ஓ நெட்வொர்க்கைக் கொண்டவர். தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் மூலம் கிடைத்த முற்போக்கு முகமூடியை இன்று வரைத் தாங்கிக் கொண்டிருப்பவர். இப்போது ஏஷியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் என்கிற ஊடகவியளார்களுக்கான உயர் கல்வி மையத்தின் பொறுப்பாளராக இருக்கிறார். இந்தியா, இலங்கை நாடுகளில் உள்ள பெரும் பண்ணை வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஏஷியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் நிறுவனம் சசிகுமாருக்குக் சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால் அங்கே ஏமாந்து போவீர்கள்.

அது இலங்கை அரசின் கொள்கை வகுப்பாளனும் ராஜபட்சே கும்பலின் நெருங்கிய சகாவுமான இந்து ராமுக்குச் சொந்தமானது. சசிகுமார் இந்து ராமின் ஒர்க்கிங் பார்ட்டனர். இந்து ராம், சசிகுமார், இவர்களோடு சேர்ந்துதான் ஜெகத் கஸ்பார் ஈழ மக்களுக்கான ப்ராஜக்ட்டைப் போட்டிருக்கிறார். இந்து ராமின் ஏஷியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் இலங்கையில் இருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களுக்கு ஸ்பெஷல் ஸ்காலர்ஷிப் பெற்றுக் கொடுக்கிறது என்பதாகவும் சொல்கிறார்கள். சசுகுமாரின் மனைவிதான் tulika என்றொரு குழந்தைகளுக்கான பதிப்பகத்தை நடத்துகிறார். கணவரைப் போல பணம் கறக்கும் தன்னார்க் குழுக்களின் பிதாமகள் என்றே இவரைச் சொல்லலாம். பார்ப்பன எலைட் பெண்களால் நடத்தப்படும் பான்யன் என்னும் அமைப்பில் சசிகுமாரின் மனைவிக்கும் பங்குண்டு. பான்யன் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற ப்ராஜெக்ட்டை ஈழத்திற்கு விரிவு படுத்தும் நோக்கோடு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பகவான் சிங் ( தெலுங்கர்)

தமிழகத்தின் பல புலி ஆதரவாளர்கள் புலத்து மக்களின் பணத்தில் குளித்தது போலவே புலத்து மக்களால் அழைக்கப்பட்டு விருந்து வைக்கைப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 2008 புலிகள் ஆதரவு ஊடக அமைப்பு ஒன்று பிரிட்டனில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட பகவான் சிங் ஈழம் உருவாக்கப்பட்டு விட்டது என்றே பேசினார். பின்னர் 2009- ஜனவரியில் கிளிநொச்சி வீழ்ந்த போது சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதர் அம்சாவின் விருந்தினராக கொழும்பு சென்றார். நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்து விருந்துண்ட பகவான் சிங் சென்னை திரும்பிய பின்னர்தான் இவர் பொறுப்பேற்றிருக்கும் சென்னைப் பதிப்பு டெக்கான் குரோனிக்கலில் இலங்கை அரசின் ஆதரவுக் கருத்துக்கள் தொடர்ந்து வந்தன.

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனின் நேர்காணலை எடுத்த பகவான் சிங் அதை வெளியிடாமல் பதிலுக்கு சிறப்புப் பேட்டியாக கருணாவின் பேட்டியை வெளியிட்டது அப்போது அம்பலமானது. அப்போது குமுதம், ஜூனியர் விகடன், தினமலர் இதழ்கள் கூட கருணாவின் பேட்டியை தர்மசங்கடமான அந்தச் சூழலில் வெளியிட்டன. பின்னர் பத்திரிகையாளர்கள் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். போருக்கு எதிராகப் போராடிய பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு போரைத் தொடுத்த இலங்கை அரசின் சென்னைத் தூதர் அம்சாவிடமே போரை நிறுத்தும் படி மனுக் கொடுக்க வைத்த பகவான் சிங் இப்போது உளவாளி ஜெகத் கஸ்பாரோடு சேர்ந்து ராஜபக்சேவிடமே மனுக் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறார்.

ரவிக்குமார் ( பச்சைத் தமிழர்)

இவர் தலித்துக்களின் தத்துவாசிரியன் ரேஞ்சுக்கு புகழப்பட்டார். ஆனால் அதெல்லாம் பழைய கதை. இப்போது பவர் புரோக்கிங், ரியல் எஸ்டேட் என வளர்ந்திருக்கிறார். கும்பகோணத்திற்கு பக்கத்தில் பிரமாண்டமான மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறாராம், இந்த பழைய பின் நவீன – தலித் தத்துவாசியிரியர். தனது பிழைப்புவாத அரசியலுக்கு ஏற்றவாறு தான் எழுதும் ஊடகங்களையும் பயன்படுத்திக் கொள்வது இவரது சிறப்பு.

ஜூனியர் விகடனில் இவர் எழுதும் கட்டுரைகள் இவருக்கே இவர் போட்டுக் கொள்ளும் சலாம் வகை. என்றாலும் இங்கே கவனிக்கத் தக்கது இந்தியா வரும் திரு.ராஜபட்சேவை வலியுறுத்தி இந்தோ, லங்கா மீள்கட்டுமானக் கூட்டமைப்பைக் கோரும் ரவிக்குமார் ஒரு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. கட்சியின் தலைவர் திருமாவளவன். எம்.எல்.ஏ ரவிக்குமாரோ ராஜபக்சேவிடம் கூட்டமைப்பைக் கோருகிறார். திருமாவளவனோ இனவெறியன் ராஜபக்சே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். இதுதான் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் உறுமல் யோக்கியதை….

ஏ.எஸ் பன்னீர் செல்வம் (பச்சைத் தமிழர்)

கருணாநிதியின் விசுவாசி, சமூக நீதி, திராவிட இயக்க ப்ரியம் எல்லாம் இவருக்கு உண்டு என்றாலும் பார்ப்பனரல்லாத முற்போக்குவாதிகளின் சந்தர்ப்பவாதமே இவரது எழுத்துக்கள். ஈழ விவாகரம் கருணாநிதிக்கு எதிராக திரும்புகிறதே என்று அதிகம் வருத்தபப்ட்டவர்களில் இவரும் ஒருவர். சென்னை பெசண்ட்நகரில் இந்து ராமைப்போல இவரும் panos south asia  என்றொரு ஊடகக் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுவும் மிகப்பெரிய அளவில் பெலோஷிப் பெறுகிற நிறுவனம்தான்.

இந்த ஐவர் கூட்டணியோடு காங்கிரஸ், திமுக மத்திய மாநில அமைச்சர்களும் மெகாப்ராஜெக்டில் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

இனக்கொலைக்கு எதிரனவாரா? ஜெகத் கஸ்பார்?

போர்ச் சூழலின் போது வருமானம் ஈட்டும் நல்வாய்ப்பாக அமைந்த இலங்கைத் தூதரகத்தை பலரும் அப்போது பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு கிறிஸ்தவப்பாதிரி என்னும் போர்வையில் உலவும் ஜெகத் கூட பயன்படுத்திக் கொண்டார். ஆனால் சென்னை மயிலை பேராயர் சின்னப்பா? அவர்தான் “மௌனத்தின் வலி” நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் மக்களைக் கொன்ற ராஜபக்சேவை கடவுள் மன்னிக்கவே மாட்டார் என்று சாபம் விட்டவர் ஆயிற்றே? இவர் எப்படி சென்னையில் உள்ள இலங்கைத் தூதகரத்தோடு நெருக்கம் பேணுவார் என்று நினைக்கிறீர்கள்?

கொலைகார ராஜபக்சேவை மன்னிப்பதல்ல…. ராஜபக்சேவின் மயிரைக் கூட கர்த்தர் கழட்ட மாட்டார் என்பது தெரிந்ததனாலோ என்னவோ, இலங்கைத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தியை சென்னை மயிலை பேராயர் சின்னப்பா சந்தித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பான செய்தியை இலங்கைத் தூதரகத்தின் இதழாக வந்து கொண்டிருக்கும் நீரிணை இதழில் இலங்கைத் தூதரகமே பதிவு செய்திருக்கிறது. தாய் எட்டடி பாய்ந்தால் அதன் கள்ளக் குட்டி பதினாறடி பாய்கிறது. பிஷப் இலங்கைத் தூதரைப் பார்தார் ஃபாதரோ ராஜபக்சேவையே பார்க்கக் கிளம்பிவிட்டார்.

ஒவ்வொரு பேரழிவுமே இவர்களுக்கு நல்வாய்ப்புதான்…

இனக்கொலைக்கு எதிரான இந்தியர்கள் என்ற பெயரில் அமைப்பை வைத்துக் கொண்டு இனக்கொலை செய்த ராஜபட்சேவிடமே மீள் கட்டமைப்பின் பெயரால் நிதி வாங்கப் போகும் ஜெகத் கும்பலின் நோக்கம் இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?  நிதி ப்ராஜெக்ட், தன்னார்வக் குழுக்கள், நிவாரணப் பணிகள், இதெல்லாம் இவரது வருமானத்திற்கான ஒப்பந்தங்கள் என்பதற்கப்பால் நம்மிடம் எஞ்சியிருப்பது ஒரே ஒரு கேள்விதான்……. இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் iifa திரைப்பட விழாவிற்கு சென்று வந்த இந்தி நடிகர்களுக்கு தென்னிந்தியாவில் தடை? அவர்கள் துரோகிகள்… சல்மான்கானோ, ஷாருக்கானோ செய்தால் அது துரோகம். அதையே ஒரு பச்சைத் தமிழன் செய்தால் அது என்ன தமிழ் தேசிய இறையாண்மையா?

பிபாஷா பாசுவோ, ஜான் ஆப்ரஹாமோ, சல்மான்கானோ சென்றது ஒரு திரைப்பட விழாவுக்காக. ஒரு இனம் என்ற வகையில் நம்மைப் போன்ற உணர்வு ரீதியான பிணைப்போ, புரிதலோ ஈழம் குறித்து இல்லாதவர்கள். இந்த நடிகர்கள் செல்வதால் ஏற்படுவதோ கலாசார சீரழிவு மட்டும்தான். ஆனால் அதை விட பல மடங்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காரியத்தைச் செய்யத் துணிந்து விட்டார்கள் பாதிரி தலைமியில் உள்ள கூட்டணியனர்.

இது iifa விழாவை விட ஆபத்தானது. மலையாளியான சசிகுமாரும், தெலுங்கரான பகவான் சிங்கும், பச்சைத் தமிழர்கள் ரவிக்குமாரும், ஜெகத்தும், பன்னீர் செல்வமும் இணைந்து செயலபடுத்தப் போகும் இந்த இந்தோ இலங்கை ப்ராஜெக்ட் எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை அரசியல் ரீதியாக அழிப்பதற்கு இந்தியா இலங்கை அரசுகள் கூட்டாக தயாரித்துக் கொடுத்த திட்டம் என்றே தோன்றுகிறது. போருக்குப் பின்னர் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் ராம் என்ற ராஜபட்சே இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு அல்லக்கையை வியந்து போற்றி ஒரு போராளியாக உருவாக்கியதும் இதே ஜெகத்கஸ்பர்தான். நக்கீரன் பத்திரிகை அதற்கான பின் தளமாக இருந்தது.

யார் இந்த பத்திரிகையாளர் பாண்டியன்?

இலங்கை என்று ‘கேணல்’ ராமைச் சந்தித்து நக்கீரனில் செய்தியாக வந்த இவர் யார்? திருப்பூரில் ஒரு பனியன் வியாபாரியாக இருந்தவர், நகைமுகன் என்ற சிவசேனா இந்து வெறியனுக்காக தமிழா, தமிழா, என்றொரு இதழை இவர் நடத்தியிருக்கிறார். நகைமுகனைப் பற்றி எல்லா தமிழக இயக்கங்களுக்குமே தெரியும். இப்போது நகைமுகன், அர்ஜூன் சம்பத், பாண்டியன், பாலகுரு, என புதுக்கூட்டணி. ஒரு காலத்தில் வாடகை கொடுக்கக் கூட வழியில்லாத  இந்த பாண்டியன் நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்து நக்கீரன் இதழில் முழுப் பக்க விளம்பரங்களைக் கொடுக்கிறார். பிரமாண்ட செலவில் பாலகுரு பல கூட்டங்களை நடத்துகிறார். இவர்களின் தலைமைக் குருவாக உருவாகி நிற்பவர்தான் ஜெகத் கஸ்பார் ராஜ்.

ஈழ மக்களின் இன்றைய தேவை

புலிகளின் போராட்ட வழிமுறையும் புலிகளின் அரசியலுமே அவர்களை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது. மக்களை பார்வையாளர்களாக மட்டுமே நிறுத்தி மக்களை நம்பாத புலிகள் இந்திய, மேற்குலக அரசுகளையும் தமிழக புலி ஆதரவாளர்களையுமே நம்பியிருந்தனர். தமிழக மக்களின் ஆதரவையோ, ஈழ மக்களின் ஆதரவையோ ஒருங்கிணைத்து பேரினவாதத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டத்தை கட்டியமைக்காத புலிகள் இப்போது தாமும் அழிந்து மக்களையும் நடுச் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

நிலம், உயிர், என எல்லாவற்றையும் இழந்து சுவாசிப்பதற்குக் கூட திராணியற்று பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு ஈழ மக்கள் ஆளாகி மடிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையான ஈழ ஆதரவாளர்களைக்  கண்டு கொள்ளாத புலிகள், உளவாளிகளோடுதான் எப்போதும் உறவு கொண்டிருக்கிறார்கள் என்பதும் இப்போது புரிகிறது.  பெரும் அவலச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கும் ஈழ மக்களின் இன்றைய தேவை அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இந்திய பெரு நிறுவனங்களின் சந்தை வாய்ப்புகளுக்காக இலங்கை திறந்து விடப்பட்டுள்ளது. மன்னாரின் எண்ணைய் வளமும், திருகோணமலைத் துறைமுகமும், வடக்குக் கிழக்கின் பல்லுயிர்ச் சூழலும் தனியார் நிறுவனங்களில் கழுகுக் கணகளில் பட்டு அபகரிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. இந்திய கட்டுமான நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இது வரை நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இலங்கை அரசோடு செய்து முடித்து விட்டன.

முதலீட்டிற்கு உகந்த சூழல் இலங்கையில் நிலவுகிறது என்பதுதான் ராஜபக்சே சொல்லும் செய்தி….. ஆமாம் கை, கால்கள் இழந்து மௌனிகளாக்கப்ப்ட்டுவிட்ட மக்களின் கல்லறைகளின் மீது கட்டிடம் கட்ட படையெடுக்கக் காத்திருக்கிறது பன்னாட்டு நிறுவனங்கள்….. அரசியல் ரீதியாக பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாத்து இனி எப்போதும் அரசியல் ரீதியாக ஈழ மக்களை எழும்ப விடாமல் அடித்துப் புதை குழியில் தள்ள கூடவே படையெடுக்கிறது தன்னார்வ நிறுவனங்கள்.

மறுக்கப்பட்ட சிவில் உரிமைகளை நாங்களே வழங்குவோம் என்று சொல்கிற தன்னார்வக் குழுக்கள் புதிதாக சொல்கிற வார்த்தை ” மீள் கட்டுமானம்” ஆமாம்  இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின் அமெரிக்கா கட்டமைத்த பயங்கரவாத கதையாடலோடு துவங்கிய ஈராக், ஆப்கான் யுத்தத்தின் பின்னர் அவர்கள் அடுத்து சொன்னதுதான் இந்த ”மீள்கட்டுமானம்”.

முதலில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று மக்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் அழித்தார்கள். பின்னர் மீள்கட்டுமானம் என்று அழித்ததை மீண்டும் கட்டுகிறார்கள். அழிப்பின் போது ஆயுத வியாபாரம்… மீளக்கட்டும் போது ஒட்டு மொத்த இடங்களையுமே கைப்பற்றிக் கொள்வது………ஆக ஒவ்வொரு பேரழிவும் ஒரு நல் வாய்ப்பாக இவர்களுக்கு வாய்த்து விடுகிறது… பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல ஜெகத் கஸ்பருக்கும்தான்……..

பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கான சொர்க்கம் இலங்கை என்று சொல்லியே உலக நாடுகளை ஏமாற்றி பல்லாயிரம் மக்களை கொன்றொழித்தது இலங்கை.

நிவாரணம் உள்ளிட்ட மக்களின் சிவில் சமூக உரிமைகளை தன்னார்வக் குழுக்கள் வழங்கினால் இனி எப்போதும் அவர்களால் மீளவே முடியாது. மாறாக அவர்களிடமிருந்து பறிக்கபப்ட்ட நிலங்களை அவர்களிடம் மீள ஒப்படைப்பதும் உழைப்பிற்கான உத்திரவாதத்தை வழங்குவதோடு சிவில் உரிமைகளைப் முழுமையாக வழங்கி, இராணுவக் கண்காணிப்பை நீக்கினாலே தங்களுக்கான மீள் கட்டுமானத்தை சில ஆண்டுகளில் அவர்கள் செய்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் விவசாயிகள், மீனவர்கள், இன்னபிற உழைக்கும் மக்கள்.

சாம்பலில் இருந்து மீண்டெழுவதை அவர்களுக்கு ஜெகத் கும்பல் மட்டுமல்ல வேறெந்த தன்னார்வக குழுக்களும்  கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. மாறாக பாதிரி தலைமையில் அணிவகுத்திருக்கும் இந்தக் கும்பல் ஈழமக்களை அரசியல் ரீதியில் காயடிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே பாதிரி கஸ்பரை இனியும் துரோகி என்று அழைப்பது பொருத்தமற்றது. அவர் ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு. எச்சரிக்கையாக இருங்கள்!

____________________________________________

– புதூர் ராசவேல்

_______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

முடித்துக் கொள்ளலாம். முடிவு நியாயமாக இருந்தால்…!!

126

vote-012முடித்துக் கொள்ளலாம்தான் – முடிவு நியாயமானதாக இருந்தால். தவறிழைத்தவர் உண்மையிலேயே மனம் வருந்தியிருந்தால்.

ஆனால் முல்லையின் துணைவர் முகில் எழுதிய பதிவை முன்வைத்து முடித்துக் கொள்ள சிலர் துடிக்கிறார்கள்.

முகிலின் கடிதம் வெளிப்படுத்தும் வேதனையையும் சங்கடத்தையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். குறிப்பாக வினவு எழுதியுள்ள பதிவில், நர்சிம்மின் எழுத்தை “வன்புணர்ச்சி” என்ற சொல்லால் குறித்திருப்பதை “கொச்சைப்படுத்தியிருப்பதாக” அவர் குறிப்பிட்டிருக்கிறார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண்ணோ அவரது குடும்பத்தினரோ அதை வெளியில் கூறுவதற்குக் கூசும் துயரத்தின் வெளிப்பாடே அவரது கூற்று என்றே நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

இந்தப் புரிதல் எங்களுக்கு இருந்ததனால்தான் எமது பதிவை வலையேற்றுவதற்கு முன் அதனை முல்லைக்கு அனுப்பி, அவரது ஒப்புதல் பெற்று அதன் பின்னரே பிரசுரித்தோம். பிரச்சினையை மிகைப்படுத்திக் கூறி பரபரப்பு உண்டாக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல “ரேப்” என்ற அந்தச் சொல்.

பண்டிட் குயின் திரைப்படத்தில் வரும் கொடூரமான அந்தக் காட்சியைப் போன்ற ஒன்றை மனத்திரையில் ஒடவிட்டு, அது ஒரு பெண்ணுக்குத் தோற்றுவிக்கும் துன்பத்தை எண்ணி, ரசித்து எழுதப்பட்டதுதான் நர்சிம்மின் புனைவு. பணத்திமிர், பார்ப்பன சாதித்திமிர் போன்றவையெல்லாம் வினவின் புனைவுகள் அல்ல. நாங்கள் சாதி பிளவை உறுவாக்கவும் இல்லை அது நர்சிம்மின் எழுத்துக்குள் புழுத்து நெளிகின்றது, அவருக்கு கிடைக்கும் ஆதரவில் தனித்து தெரிகின்றது.

சந்தனமுல்லை என்ற பதிவருடன் வினவு கொண்டிருக்கும் நட்புக்காகவோ, அல்லது நர்சிம் என்பவர் மீதான பகைமைக்காகவோ எங்கள் பதிவு எழுதப்படவில்லை என்பதை முகில் புரிந்து கொள்வார் என்றே நம்புகிறோம். இந்த விவகாரம் எழும்புவதற்கு முன் நர்சிம் என்பவர் யார் என்றே எங்களுக்குத் தெரியாது என்பதே உண்மை.

நடுவீதியில் ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறையில் யாரேனும் ஒரு கயவன் ஈடுபடும்போது, நேர்மையான எந்த மனிதனும் என்ன செய்வானோ, செய்ய வேண்டுமோ அதைத்தான் நாங்கள் செய்தோம். அந்தப் பெண்ணின் பெயர் சந்தன முல்லை, அவரது கணவர் முகில் என்பதெல்லாம் அப்புறம் தெரியவரும் விவரங்கள். அவ்வளவுதான். நண்பர் முகில் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம்.

முகில் எழுதிய பதிவுக்கு பின்னூட்டமிட்டிருக்கும் பலர், “ஒரு பெண்ணின் நலனில் கணவனைத் தவிர வேறு யார் அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கமுடியும்?” என்ற பாணியில் எழுதியிருக்கிறார்கள். புரியாமல் எழுதியிருந்தால் இது அசட்டுத்தனம். புரிந்து எழுதியதாகவே தெரிவதால் இது விசமத்தனம்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட பெண்களும் சரி, அவளது குடும்பத்தினரும் சரி அதனை வெளியில் சொல்வதற்கே தயங்குகின்றனர். குடும்பத்தின் கவுரவம் மற்றும் பெண்ணின் எதிர்காலம் கருதி மறைக்கவும் விரும்புகின்றனர். இந்தச் சந்தில் ஒளிந்து கொண்டுதான் பல ஆணாதிக்கப் பெருச்சாளிகள் அடிபடாமல் தப்புகின்றன. மறப்பதற்கோ, மன்னிப்பதற்கோ நண்பர் முகில் தனது சொந்தக் காரணங்களையும் அளவுகோல்களையும் வைத்திருக்கலாம். அவற்றில் முகிலும் முல்லையும் ஒன்றுபடலாம் அல்லது வேறுபடலாம். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் அவர்களுக்கிடையில் ஒத்த கருத்து வரவேண்டும் என்பதே நம்முடைய விருப்பம்.

ஆனால், அந்த அளவில் மட்டுமே இது அவர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை. மற்றப்படி “திரௌபதியை துச்சாதனன் துகிலுரிந்தான். பிறகு திரௌபதியிடமோ தருமனிடமோ மன்னிப்பு கேட்டு விட்டான். அவையோரே கலைந்து செல்லுங்கள். மகாபாரதம் முடிந்தது” என்று பஞ்சாயத்து செய்ய முனைபவர்கள் துச்சாதனனை விடக் கொடிய அயோக்கியர்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது அதுதான்.

“வினவு என்ன பதிவுலகின் நாட்டாமையா?” என்று குமுறுபவர்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது இதைத்தான்: இந்த பாரதக் கதையை வினவு தொடங்கி வைக்கவில்லை. அதே நேரத்தில், “இது பாஞ்சாலியின் பாடு அல்லது தருமனின் பாடு.. நமக்கென்ன” என்று அவையில் நெடுமரமாய் சமைந்திருக்கவும் எங்களால் முடியாது. அவமானப் படுத்தப்பட்டிருப்பது சபையோராகிய நாம் அனைவரும்தான்.

ஏனென்றால் இந்தப் பிரச்சினையில் அநாகரிகங்களின் அத்தனை வகைகளையும் பார்த்து விட்டோம். தொடங்கி வைத்த நர்சிம், அதற்கு விசிலடித்து கைதட்டி பின்னூட்டமிட்டவர்கள், பின்னர் டிவிட்டரில் முல்லையைப் பற்றி அவதூறு செய்தவர்கள், ஒரு பக்கம் முல்லையிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டே இன்னொரு பக்கம் வினவின் பதிவுக்கு மைனஸ் ஓட்டு போட்டவர்கள் வரிசையில் கடைசியாக பைத்தியக்காரனையும் வினவையும் தாக்குவது போலக் காட்டிக் கொண்டு நர்சிம்முக்கு முட்டுக் கொடுக்க தனது புலனாய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தார் சுகுணா திவாகர். அதுதான் ஆபாசத்தின் உச்சம். அநாகரிகத்தின் எல்லை. ஐந்தாம்படை வேலைக்கு இலக்கணம்.

இந்த இடத்தில் தோழர் ரயாகரனை ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தம். அவருடன் கடுமையான கருத்துப் போராட்டத்தை வினவு ஏற்கெனவே நடத்தியிருக்கிறது என்ற போதிலும், ஆணாதிக்க எதிர்ப்பு என்ற நியாயத்துக்காக தானே முன்வந்து அவர் தோழமைக் கரம் நீட்டியிருக்கிறார். இதற்குப் பெயர்தான் தோழமை உறவு. தனது தனிப்பட்ட வன்மத்தைத் தீர்த்துக் கொள்ள எதிரிகளுக்கு ஐந்தாம்படை வேலை பார்ப்பவர்கள் நட்பு பற்றியோ, தோழமை பற்றியோ பேசும் அருகதை அற்றவர்கள்.

இன்று, “பூக்காரிகளுக்கும் சுய மரியாதை உண்டு என்ற முல்லையின் பதிவுக்கு தமிழ்மணத்தில் மைனஸ் ஓட்டு குத்தித் தள்ளுகிறார்கள் சில ஐந்தாம்படைப் பேர்வழிகள். இவர்கள் சிறுபான்மை என்றாலும் இதுவும் பதிவுலக நாகரிகத்தின் இலட்சணம்தான்.

நர்சிம்மை முல்லை கேலி செய்தார். நர்சிம் எதிர் வினையாற்றினார் என்று இன்னமும் சிலர் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச்சு அசலாக இதுதான் மகாபாரதக் கதை. “இந்திரப்பிரஸ்தத்தின் அரன்மணையில் துரியோதனனைக் கேலி செய்து திரௌபதி சிரித்தாள்; பதிலுக்குப் பழிவாங்க துரியோதனன் அவளைத் துகிலுரிந்தான்” என்ற துவாபர யுகத்தின் நியாயம் இந்தக் கலியுகத்துக்கும் பொருந்தும் என்றால், வேறு வழியில்லை – யுத்தம்தான் முடிவு.

கலியுகம் பிறந்து விட்டது உண்மையானால், பெண்ணுரிமை, சமத்துவம் போன்ற சொற்களிலாவது பதிவுலகத்துக்கு நம்பிக்கை இருக்குமானால், நாம் நாகரிகமான தீர்வுகளைப் பற்றி யோசிக்கலாம்.

“முல்லையையோ முகிலையோ நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்க தயார்” என்று கூறியிருக்கிறார் நர்சிம். நல்லது. சந்திக்கட்டும். ஆனால் ஒரு இனிய மாலை நேரத்தில் சரவணபவனிலோ அல்லது எதாவது ஒரு காபி ஹவுஸிலோ சந்தித்து டிபனுக்கும் காப்பிக்கும் இடையிலான இடைவெளியில் நாசூக்காக “சாரி” சொல்லி முடித்துக் கொள்ளும் பிரச்சினை அல்ல இது.

முல்லையையும் முகிலையும் நம்மையும் நர்சிம் சந்திக்கும் இடம் பதிவர் சந்திப்பாக இருக்க வேண்டும். பெண் பதிவர்கள் உள்ளிட்ட எல்லாப் பதிவர்களின் முன்னிலையில், இந்த விவாதத்தில் பங்கு பெற்ற எல்லா பதிவர்கள் மற்றும் வாசகர்கள் முன்னிலையில், உண்மைத் தமிழர் உள்ளிட்ட எல்லாத் தமிழர்களின் முன்னிலையில், நர்சிம், கார்க்கி முதலானோரும் தங்களது மன்னிப்பை வெளியிடட்டும். கள்ள உறவு கதை கட்டிப் பரப்பிய பெருமக்களும் தங்கள் முகத்தை அங்கே காட்டட்டும். முகத்தை வெளிக்காட்டும் தேவை இல்லாததால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

இது வினவின் நாட்டாமைத்தனம் அல்ல, நாகரிகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை மட்டுமே. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை உண்மைத்தமிழனே முன்நின்று செய்யட்டும். நாங்கள் ஓரமாக நின்று கொள்கிறோம்.

எழுத்தில் கம்பீரமாக உலவும் ஆணாதிக்கவாதிகள் தமது முகத்தைக் காட்டுவதற்கு வெட்கப்படத் தேவையில்லையே! என்றைக்கு வைத்துக் கொள்ளலாம், எங்கு வைத்துக் கொள்ளலாம் சொல்லுங்கள்.

சும்மா வெக்கப்படாதீங்க சார்! வாங்க!

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இணைப்புகள்

நர்சிமின் பூக்காரி பதிவு

புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

4


புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. கொலைகார போலீசைப் பாதுகாக்கும் சித்திரவதைத் தடுப்பு மசோதா!
  2. நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி!
  3. அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஒரிசா மக்களின் கலகம்
  4. நச்சுவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் பலி!
    முதலாளித்துவ பயங்கரவாதக் கொடூரம்!!
  5. தரகு முதலாளிகள் தயாரித்து வழங்கும் “வளர்ச்சி வேட்டு”!
  6. மாவோயிஸ்டு வேட்டையா? பழங்குடி வேட்டையா?
  7. “நீங்கள் எங்களோடு இல்லையென்றால்…” அறிவுத்துறையினருக்கு எதிராக ப.சி.யின் பகிரங்க மிரட்டல்
  8. “மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி, இயற்கை வளங்களைச் சூறையாடுவது உலகெங்கும் புரட்சியைப் பெற்றெடுக்கிறது!”
    – நிகரகுவா நாட்டு மனித உரிமைப் போராளி பியாங்கா ஜாக்கருடன் ஒரு நேர்காணல்.
  9. தனியார் நகரங்கள்: நவீன சமஸ்தானங்கள்!
  10. சட்டபூர்வமானது கல்விக் கட்டணக் கொள்ளை
  11. சாதி கௌரவக் கொலைகள்: கேலிக்கூத்தானது இந்தியக் ‘குடியரசு’
  12. ஜாட் சாதிவெறித் தீயில் கருகிப் போன தாழ்த்தப்பட்டோர் வாழ்வு
  13. பா.ம.க. இராமதாசின் சமூக நீதி பாரீர்!
  14. அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு: இந்து பயங்கரவாதத்துக்கு இன்னுமொரு சான்று
  15. காட்டுவேட்டை: அம்பலமானது இந்திய அரசின் பித்தலாட்டம்!

புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 7 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சுகுணா திவாகர்: பொறுக்கி நர்சிமின் புதிய அடியாள் !!

101

vote-012நர்சிம்மைக் கண்டித்து வினவு தளத்தில் வெளிவந்த பதிவை பைத்தியக்காரன் என்ற பெயரில் எழுதும் சிவராமன் தான் எழுதியிருக்கிறார் என்றும், அவர் வினவுக்கு எழுதி அனுப்பிய பிரதியை எடிட் செய்து வெளியிட்டிருப்பதாகவும், இதையும் வினவில் வந்துள்ள கட்டுரையையும் வாசகர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறி சுகுணா திவாகர் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

“நண்பனைப் போல எப்படி நடிக்கிறீர்கள் சிவராமன்” என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள பதிவில், வினவு தளத்தையும் விமரிசித்திருக்கிறார். ஆணாதிக்கத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் நடந்த அறமற்ற செயல் குறித்து எழுதுவதற்காகத்தான் இந்தப் பதிவு என்றும் பதிவுக்கான நோக்கத்தை குறிப்பிட்டிருக்கிறார். பச்சைப் பார்ப்பனியத்தைக் கடைப்பிடித்து வரும் ஒருவரிடம் (சிவராமனிடம்) பார்ப்பன எதிர்ப்பு குறித்து பதிவு வாங்கி அதையும் வினவு பெயரில் வெளியிட வெட்கமாக இல்லையா என்றும் கேட்டிருக்கிறார்.

சிவராமன் எழுதிய பதிவு தனக்கு எப்படி எப்படி கிடைத்தது என்பது தேவையில்லை என்றும், தேவையானால் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறவேண்டாம். அதை நாங்களே கூறுகிறோம்.

இந்த விவகாரம் குறித்து எழுத வேண்டும் என்று நாங்கள் எண்ணும் பொழுதே பல வலையுலக நண்பர்களும் தொலைபேசியில் அழைத்து எழுதச்சொல்லி வலியுறுத்தினார்கள். நாங்களும் பலரைத் தொடர்பு கொண்டோம். அவர்களில் தோழர் பைத்தியக்காரனும் ஒருவர். நர்சிம் உள்ளிட்ட நபர்களைப் பற்றி தனக்குத் தெரியும் என்றும் சொல்லப்போனால் நர்சிம் தனது நண்பர் என்றும் அவர் தனக்கு கடனுதவி செய்திருக்கிறார் என்றும் இருந்தபோதிலும், இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டித்தாக வேண்டும் என்பதால், தான் ஒரு பதிவு எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அதை வினவில் வெளியிட்டால் பரவலாகப் போய்ச்சேரும் என்பதால், அதனைக் கோரிப்பெற்றோம். அதை திருத்தங்கள், சேர்க்கைகள் செய்வதற்கு அவர் ஒப்புதல் தந்தார்.

தேவையற்றவை, பொருத்தமற்றவை என்று நாங்கள் கருதியவற்றை எடிட் செய்தோம். அவர் அனுப்பிய பதிவின் அளவு சுமார் 1945 சொற்கள். அதில் அவர் சுகுணா திவாகர் பற்றி எழுதியுள்ள பகுதி உட்பட பலவற்றை எடிட் செய்திருக்கறோம். வேறு சிலர் தந்த தகவல்களையும் சேர்த்திருக்கிறோம். அந்தக் கட்டுரைக்கான தரவுகளைப் பலர் கொடுத்திருந்தாலும் கட்டுரை வினவினுடையதுதான். இவ்வாறு வினவு வெளியிட்டுள்ள கட்டுரையின் அளவு 3456 சொற்கள். எனவே இரண்டும் ஒன்றுதான் என்று கூறுவது உண்மையல்ல.

மேற்கூறிய பதிவை தனது மின் அஞ்சல் முகவரியிலிருந்துதான் சிவராமன் எங்களுக்கு அனுப்பியிருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தனது மின் அஞ்சல் முகவரியின் பாஸ் வேர்டை சிவராமன் கொடுத்திருக்கிறார். தற்போது வினவில் இந்தக் கட்டுரை வெளிவந்தவுடன் சிவராமனுக்கு அந்த நண்பர் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறார். வாசகம் இதுதான். “உங்களுடனான நட்பை இத்துடன் முறித்துக் கொள்கிறேன். நரசிம்முக்கு நீங்கள் செய்தது பச்சைத் துரோகம்”.

இப்படியாக சிவராமனின் “துரோகத்தை” இடித்துரைத்த நண்பர், மின் அஞ்சல் பெட்டியிலிருந்து அவர் எழுதி வினவுக்கு அனுப்பியிருந்த கட்டுரையை சுகுணா திவாகருக்கு கொடுத்து, நரசிம்மைக் காப்பாற்றுவதற்காக சுகுணா திவாகரைத் தட்டி விட்டிருக்கிறார். தன்னைப் பற்றி சிவராமன் எழுதியிருப்பதைப் படித்தவுடனே அறம் கொன்ற சீற்றம் அவரை ஆட்கொண்டு விட்டதா, அல்லது நர்சிம்மை எழுதியதால் வந்த கோபமா, அவருடைய உள் விவகாரம் நமக்குத் தெரியாது. மாபெரும் ஊழலைக் கண்டு பிடித்து வினவை அம்பலப்படுத்தி விட்டதைப் போல எழுதியிருக்கிறார் சுகுணா திவாகர்.

அந்த நண்பர், சிவராமனின் கட்டுரையை சுகுணா திவாகருக்கு கொடுத்ததன் நோக்கம் நர்சிம்மை காப்பாற்றுவது. நர்சிம்முக்கு எதிராக எழுதியவர்களை காரெக்டர் அசாசினேசன் செய்வது அதற்கு ஒரு சிறந்த வழி. அந்த வேலையை தான் செய்வதை விட ‘பெண் விடுதலைப் போராளி’யாகிய சுகுணா திவாகர் செய்வது பொருத்தம் என்று கருதி இந்த அடியாள் வேலையை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார். சுகுணா திவாகர் ஒப்படைக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்து விட்டார்.

சந்தன முல்லையைப் பற்றி நர்சிம் எழுதி வெளியிட்டது முதன்மையான பிரச்சினை இல்லை. தன்னைப் பற்றி சிவராமன் எழுதி வெளியிடாத தகவல்தான் (அதாவது வினவால் எடிட் செய்யப்பட்டது)  அவருக்கு முக்கியப் பிரச்சினை. அதில் சிவராமன் சுகுணா திவாகரைப் பற்றி கூறியது உண்மையா, பொய்யா என்பது பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை. ஏனென்றால் அது வினவினால் எடிட் செய்யப்பட்டுவிட்டது. வெளியிடப்படாத ஒரு விசயம்,

தனிப்பட்ட முறையில் இரு நபர்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்படுபவை ஆயிரம் இருக்கும். அவை சரியாகவோ தவறாகவோ மிகையாகவோ இருக்கலாம். எழுத்தில் என்ன வெளிவந்தது என்பதுதான் வாசகனைச் சென்று அடைந்திருப்பது. அதுதான் வெளியிடப்பட்ட கருத்து. ஒரு கட்டுரையின் மூலத்தைக் கூட ஒரு எழுத்தாளன் தானே எடிட் செய்துதான் வெளியிடுகிறான். “இதோ பார் எடிட் செய்யப்படாத மூலக்கட்டுரை” என்று எந்த யோக்கியனும் புலனாய்வு செய்து வெளியிடுவதில்லை. அதனை எந்த வாசகனும் மதிப்பதும் இல்லை.

சுகுணா திவாகர் என்ன சொல்ல வருகிறார்? தன்னைப் பற்றி சிவராமன் சொன்னது பொய் என்று கூரை மீது ஏறி எதற்கு கூவுகிறார்? சுகுணா திவாகர் கூறுவது போல சிவராமன் தனிப்பட்ட வாழ்க்கையில் பார்ப்பனியத்தை ‘கைவிடாத’ நபராகவே இருக்கட்டும். அவர் நர்சிம்மை பற்றி சொன்னது உண்மையா இல்லையா? அவர் நர்சிம்மிடம் கடன் வாங்கியிருந்தாலும் நர்சிம் அவருக்கு தனிப்பட்ட நண்பராக இருந்தாலும், நட்பு முறியும் என்று தெரிந்த போதும் அவர் வெளிப்படையாக நர்சிம்மை எதிர்த்து அவருடைய கட்டுரையிலேயே “காறித் துப்புகிறேன்” என்று பின்னூட்டம் போட்டார்.

வினவு கட்டுரை நீ எழுதியதா என்ற கேள்விக்கு “நான் எழுதினாலும் வரிக்கு வரி அப்படித்தான் எழுதுவேன்” என்று தனி பதிவே போட்டார். தன்னோடும் ஜ்யவரோம் சுந்தரோடும் சாதி அடிப்படையிலும் உறவு கொண்டாட நர்சிம் முயல்வதாகவும் வெளிப்படையாக எழுதி நர்சிம்மை அம்பலப் படுத்தியிருக்கிறார் சிவராமன். இவையனைத்தும் வலைப்பூக்களில் காணக் கிடக்கின்றன.

சுகுணா திவாகர் கூறுவதைப் போல சிவராமன் இன்னமும் பார்ப்பானாகவே இருந்தாலும், சாதி அடிப்படையில் நர்சிம்மை ஆதரிக்காமல் சொந்த சாதிக்கு துரோகம் இழைத்திருக்கிறார் என்பதே இச்சம்பவத்தில் நடந்திருக்கிறது.

ஜெயேந்திரனை சங்கரராமன் என்கிற பார்ப்பனர் அம்பலப்படுத்தியபோது, “நாங்கள் ஜெயேந்திரரை ஆதரிப்பவர்கள் இல்லை. இருந்தாலும் சங்கரராமன் பெரிய யோக்கியனா?” என்று ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்தப் பிரச்சாரத்தை நடத்தியவர்கள் ஜெயேந்திரனின் அல்லக்கைகள். ஜெயேந்திரனின் கிரிமினல் வேலைகளை நேரடியாக அம்பலப்படுத்த முடியாத போது, அவரைத் தப்ப வைப்பதற்கான குறுக்கு வழி, குற்றம் சாட்டுபவன் மீது சேறு வாரி இரைப்பதுதான் என்று புரிந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட பிரச்சாரம் அது. அதே வேலையைத்தான் சுகுணா திவாகர் இப்போது செய்கிறார்.

இதுதான் புதிய பார்ப்பனியம்.

சிவராமன் உண்மையிலேயே பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை, சொந்த வாழ்க்கையில் எதையும் கடைப்பிடிக்க வில்லை என்ற விமரிசனங்களையெல்லாம், நட்புடன் பழகும்போது அவரிடம் நேரில் சொல்லியிருக்கவேண்டும். கண்டித்திருக்க வேண்டும். தன்னைப் பற்றி சொன்னவுடன் “நீ பத்தினியா?” என்று லாவணி பாடுவது குழாயடிச் சண்டையைக் காட்டிலும் தரம் தாழ்ந்த அணுகுமுறை.

நர்சிம்மின் ஆணாதிக்கத் திமிரையும் வக்கிரத்தையும் எதிர்த்து பல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சொந்த வாழ்க்கையில் எப்படி என்று ஆராய்ச்சி செய்து, யார் யார் நர்சிம்மை விமரிசிக்கலாம் என்று தீர்ப்பு வழங்குவாரா சுகுணா திவாகர்?  “லீனாவின் கவிதையை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள், மாறுபடுபவர்களும் இருக்கிறார்கள், வேறுபடுபவர்களும் இருக்கிறார்கள். கருத்துரிமைதான் பிரச்சினை” என்று லீனாவுக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசிய அதே நாக்குதானே பேசுகிறது? அங்கே பேசியவர்கள் எல்லாம் பெண் விடுதலைப் போராளிகளா என்று உரசிப் பார்த்து தான் மேடையேற்றினீர்களா?

சிவராமன் போன்ற நயவஞ்சகர்களிடம் நாங்கள் ஏமாந்துபோவதாக எச்சரித்திருக்கிறார் சுகுணா திவாகர். நன்றி. அந்த ‘நயவஞ்சகரிடம்’ ஏமாந்து நர்சிம்மைப் பற்றி என்ன தவறாக எழுதிவிட்டோம்? ஏன் சுகுணா திவாகர் துடிக்கிறார்? அந்த விசயத்தை அவர் சொல்லட்டும். “நர்சிமிக்கு நீங்கள் செய்தது பச்சைத் துரோகம்” என்று சொல்லித்தான் தோழர் சிவராமனது மடல் அவரது நண்பர் மூலம் சுகுணாவுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. இன்வெஸ்டிகேஷனது நோக்கமே நர்சிம் என்ற பொறுக்கியைக் காப்பாற்றுவது என்ற பிறகு நடிப்பு எதற்கு?

மற்றப்படி ம.க.இ.க என்ற அமைப்பின் தோழர்கள் பின்பற்றும் ஒழுக்க நெறிகளுக்கு சிவராமன் போன்றோரால் நேரக்கூடிய ‘ஆபத்து’ பற்றி ம.க.இ.க தோழர்கள் பார்த்துக் கொள்வார்கள். ம.க.இ.க வினரை பழமைவாதிகள், ஒழுக்கவாதிகள் என்று என்று எள்ளி நகையாடும் கலகக்காரர்கள் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

இறுதியாக ஒரு விசயம். சுகுணா திவாகரைப் பற்றி சிவராமன் எழுதியது பொய்யே ஆனாலும், அது வினவு தளத்துடன் நடைபெற்ற ஒரு தனிப்பட்ட கடிதப் பரிவர்த்தனை. அதனை வெளியிட்டு வினவு தளத்தை ‘அம்பலப்படுத்தியிருக்கிறார்’ சுகுணா திவாகர் என்கிற ரீ.சிவகுமார்.  அவர் ஆனந்த விகடனில் வேலை பார்க்கிறார்.  பல விதமான ஊழல்கள், முறைகேடுகள் பற்றிய செய்திகள் ஆனந்த விகடனுக்கு வந்தாலும், எவற்றை வெளியிடலாம், எவற்றை வெளியிட வேண்டாம் என்பதை ஆனந்த விகடன் ஆசிரியர் குழு முடிவு செய்யும். மக்களுக்குத் தெரிந்தே தீரவேண்டிய பல அநீதிகள் ஆனந்த விகடன் நிர்வாகத்தின் நலன் காரணமாகவோ அல்லது போதிய ஆதாரமல்ல என்ற காரணத்தினாலோ அவ்வாறு தணிக்கை செய்யப்பட்டிருக்கும்.

தன்னைப் பற்றி சிவராமன் எழுதியதை வெளியிட்டிருக்கும் சுகுணா திவாகர், ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்ட அத்தகைய தகவல்களையும்  தன்னுடைய தளத்தில் வெளியிடுவாரா? அவருடைய தனிப்பட்ட கவுரவப் பிரச்சினையைக் காட்டிலும் சமூகப் பிரச்சினைகள் பெரிதென்று அவருக்கு தெரியாதா என்ன? அல்லது இது நர்சிம்முக்கு மட்டும் செய்யப்படும் உதவியா?

அவரே பதில் சொன்னாலும் சரி. அல்லது அவரது ‘பத்திரிகை அறம்’ குறித்து ஆனந்த விகடன் நிர்வாகத்திடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இணைப்புகள்

  1. நர்சிமின் பூக்காரி பதிவு

பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்?

328

vote-012வலையுலகில் ஒரு வன்புணர்ச்சி நடந்தேறியிருக்கிறது. சந்தனமுல்லை என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவரை பார்ப்பன சாதியைச் சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் (PDF) கொடூரமாக பாலியல் வன்முறை (RAPE) செய்திருக்கிறார்.

முதலில் அது தொடர்பான பிரச்சினையை சுருக்கமாகப் பார்க்கலாம். பதிவர் ஆதிமூலக் கிருஷ்ணன் என்பவர் இந்த நர்சிமிடம் ஒரு நேர்காணலை (PDF) எடுத்து வெளியிட்டார். அந்த நேர்காணலில் ஆ.விகடன் பாணியில் மரண மொக்கை கருத்துக்களை அதுவும் தன்னை முன்னிறுத்தி நர்சிம் பேசியிருப்பார். இந்த நேர்காணலை அதற்கே உரிய அற்பத்தனத்தை போட்டுடைத்து பெண் பதிவர் மயில் என்பவர் நகைச்சுவையாக ஒரு பதிவு (ZIP) வெளியிடுகிறார். அதில் பதிவர் சந்தனமுல்லை பின்னூட்டமிடுகிறார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த நர்சிம்பூக்காரி (PDF) என்ற கதையை வெளியிடுகிறார். அதில் சந்தனமுல்லையை எவ்வ்வளவு கீழ்த்தரமாக குறிப்பிட முடியுமோ அவ்வளவு குதறியிருக்கிறார். அதன் பி.டி.எஃப்பை இணைப்பில் படித்தால் நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.

பார்ப்பனியத் திமிர் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் இல்லை என எளிமைப் படுத்தி இந்தச் சம்பவத்தை குறுக்கிவிட முடியாது.  இப்படியொரு கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் பதிவர் நர்சிம்மை என்ன செய்யலாம் என்று பார்ப்பதற்கு முன்னர் இது தொடர்பான இன்னொரு கேள்விக்கு விடை தேடுவது நம் புரிதலுக்கு வழிவகுக்கும்.

ஏன் செய்யவேண்டும்?’

இந்த இரண்டாவது கேள்விக்கு முதலில் விடை தேடுவோம். இதற்கு சில பழைய கணக்குகளை தூசி தட்ட வேண்டியிருக்கிறது. பல பதிவர்களும் குறிப்பிடுவது போல் இது ‘ஒரு இடுகை’ சார்ந்த பிரச்னை இல்லை. கிட்டத்தட்ட 18 மாத ஆணாதிக்க பகை. நரித்தனத்துடன் வஞ்சம் தீர்க்கும் பார்ப்பனியத்தின் விஷத்துக்கு பல நூறாண்டு கால வரலாறு உண்டு, எனில் பதிவுலகில் அதற்கான பல மாத வரலாறு உண்டு.

பழைய கணக்கு

‘நான் கடவுள்’ திரைப்படம் வெளிவந்த நேரம். பல ஆண் பதிவர்கள், இந்தப் படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று விமர்சனம் எழுதியிருந்தார்கள். இன்று வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம் தரப்பில் நியாயம் இருப்பதாக பேசும் வடகரை வேலன் உட்பட பலரும் இந்த வகையான கருத்தையே முன் வைத்தார்கள். அப்போது சந்தனமுல்லையும், ராப்பும் (வெட்டி ஆபிசர் என்ற பெயரில் வலைத்தளம் நடத்திய பெண் பதிவர். இப்போது வலையுலகில் அவர் எழுதுவதில்லை) “இது அபத்தமான கருத்து. பிரசவ வேதனையையே அனுபவித்து கடந்து செல்லும் துணிவு பெண்களுக்கு உண்டு. அப்படியிருக்க ஒரு படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று தடுக்க நீங்கள் யார்? அப்படத்தில் பெண்களே நடிக்கவில்லையா?” என்ற பொருள் பட எதிர்வினை புரிந்தார்கள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண் பதிவர்களுக்கு சந்தனமுல்லை – ராப் மீது வெறுப்பு படிய ஆரம்பித்தது. இந்த வகையான ஆண்கள், தங்கள் வீட்டு பெண்களை வேலைக்கு அனுப்புவார்கள் – அனுப்புகிறார்கள். அதையே சுதந்திரம் என்றும் அறிவிக்கிறார்கள். ஆனால், இந்த சுதந்திரத்தை அவர்கள் அனுமதித்ததே ஏடிஎம் மிஷினாக மட்டுமே பெண்களை பார்க்கும் பார்வைதான். பொருளாதார ரீதியாக தாங்கள் உயர பெண்களை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த நினைக்கிறார்கள். இதைத் தாண்டி பெண்கள் வேறு எந்த விதமான உரிமைகளையும் கேட்டு விடக் கூடாது என்பதோடு ஒரு சுயேச்சையான சமூக ஆளுமையாக தலையெடுக்கக் கூடாது என்பதில் 24 மணி நேரமும் கவனமாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பார்வை கொண்ட ஆண்களுக்கு சந்தனமுல்லை – ராப் ஆகியோரின் எதிர்வினை எந்தளவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த புள்ளியிலிருந்து அவர்களின் ஆழ்மனதில் இவர்கள் இருவர் மீதும் வெறுப்பு படிய ஆரம்பித்தது என்று கொள்ளலாம். இந்த ஆண் பதிவர்கள் அனைவரும் பிறப்பால் பார்ப்பனர்கள் அல்ல. ஆனால், பார்ப்பனர்களுக்கு மட்டுமே அறிவு உண்டு என்பதை ஆழ்மனதில் ஏற்று மனு தர்மத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள். அதனால் ஆணாதிக்கத்தை இயல்பாக எழுத்திலும் சிந்தனையிலும் வரித்தவர்கள்.

கார்க்கி ராப்சந்தனமுல்லை

முன்னணி படைத் தளபதியாக இப்போது நர்சிம்மை ஆதரிக்கும் கார்க்கி பவா (வினவில் எழுதும் தோழர் கார்க்கி அல்ல ),  முன்பு ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். இப்போது சென்னையில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக அறிகிறோம். தனது வலைத் தளத்தில் தன் அக்கா மகன் குறித்து அவ்வப்போது இடுகைகள் எழுதுவார். அந்தச் சிறுவன் சிரித்தாலும் பதிவு. அழுதாலும் பதிவு. கிண்டல் அடித்தாலும் பதிவு என்று எழுதும் இந்த கார்க்கி –

தன் மகள் பப்புவின் வளர்ச்சி குறித்து பொது வெளியில் பகிர்ந்து கொள்ளும் சந்தனமுல்லையின் பதிவுகளை உண்மையில் ஆதரிக்க வேண்டுமல்லவா? ஆனால், எதிர்க்கிறார். என்ன காரணம்?

கார்க்கியின் ‘சாளரம்’ வலைத் தளத்தை ஒன்றிரண்டு முறை பார்வையிட்டாலே எந்தளவு ஆணாதிக்கத் திமிருடன் அவர் எழுதுகிறார் என்பதை உணரலாம். காமம் சார்ந்த பார்வையோடு, ஒரு போகப்பொருளாக அன்றி வேறு எப்படியும் அவர் பெண்களை அணுகுவதில்லை. இந்த கார்க்கியும் – வெளிநாட்டில் வசிக்கும் ராப்பும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தார்கள். கார்க்கி தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தி எழுதுவதை, ராப் கண்டித்தார். உடனே கார்க்கி, ‘ராப்’ என தலைப்பிட்டு எவ்வளவு மோசமாக முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பெண்களை இழிவுப்படுத்தி ஒரு இடுகையை எழுதினார். இதற்கு எதிர் வினையாக ராப், ஒரு இடுகையை பதிவிட்டார். அதில் எந்த வாசகமும் இடம் பெறவில்லை. ஒரேயொரு குப்பைத் தொட்டியின் படம். அதில் கார் கீயை தூக்கிப் போடுகிறார்கள். இடுகையே அவ்வளவுதான்.

இதற்கு ‘சபாஷ்… கலக்கிட்ட… சரியான எதிர்வினை’ என்று பொருள் தரும் மறுமொழியை சந்தனமுல்லை எழுதினார். சந்தனமுல்லை மீது கார்க்கி கொள்ளும் கோபத்துக்கு அடிப்படை இந்த மறுமொழிதான். அதனால்தான் இப்போது ‘மயில் (விஜி) தளத்தில் சந்தனமுல்லையின் மறுமொழி கண்டிக்கத்தக்கது’ என கார்க்கி கூச்சலிடுகிறார். உண்மையில் அந்த பழைய மறுமொழியை மனதில் வைத்துத்தான் இப்போது லபோ திபோ என உறுமுகிறார். சந்தனமுல்லை அன்று சொன்னதை, இப்போது வினவு மேலும் அழுத்தமாகச்  சொல்கிறது,“ராப் எழுதிய குப்பைத் தொட்டி பதிவிற்கு பொருத்தமாக அதில் புரண்டு நெளியக்கூடிய ஆண்வெறித் திமிரான விலங்குதான் இந்த கார்க்கி”

ஆணாதிக்க பதிவர்கள்

புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் சில ஆண் பதிவர்கள் வல்லவர்கள். ‘ஆபரேஷன் சல்மா’ மூலம் பார்ப்பன ஜெயராமனின் முகத்திரையை கிழித்த பதிவர் பாலபாரதிக்கும், மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் சென்ஷிக்கும் இது தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரியும். அவற்றை இவர்கள் இருவரும் எப்போது பொது வெளியில் வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அவர்கள் இது குறித்து மௌனம் காப்பது இந்த ஆணாதிக்க வெறியர்களைக் காப்பாற்றுவதற்கும், இவர்களால் கடித்துக் குதறப்படும் பெண்பதிவர்கள் பதிவுலகை விட்டு ஓடுவதற்கும்தான் துணை புரியும் என்பதை அவர்களுக்கு தோழமையுடன் சுட்டிக் காட்டுகிறோம்.

மேலே குறிப்பிட்ட ஆண்வெறி ஜொள்ளு பார்ட்டிகளின் நடவடிக்கைகள் அரசல் புரசலாக சந்தனமுல்லைக்கு  தெரியும். அதனாலேயே புதிதாக எழுதவரும் பெண் பதிவர்களிடம் சீனியர் என்ற முறையில் இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வார். இதை அறிந்த அந்த பதிவர்களுக்கு சந்தனமுல்லை மீது கோபமும் ஆத்திரமும் எப்போதும் உண்டு. அதனால்தான் இந்தக் கழிசடைகள் பொறுக்கி நர்சிம்மை ஆவேசத்துடன் ஆதரிக்கின்றன.  கடந்த ஓராண்டில் மட்டுமே ராப் – ‘சோம்பேறி’ உட்பட பல பெண் பதிவர்கள், எழுதுவதை நிறுத்தி, வலையுலகை விட்டே ஒதுங்கியிருக்கிறார்களே… அதற்கு என்ன காரணம்? சுரணையுள்ள ஒவ்வொரு பதிவரும் இதற்கு விடையளிக்க வேண்டும்.

யார் இந்த நர்சிம்?

பிறப்பால் மட்டுமல்ல, சிந்தனையாலும் கடைந்தெடுத்த பார்ப்பனர். இவரது தந்தையார், பிராமண சங்கத்தின் (தாம்ப்ராஸ்) உயர் பொறுப்பில் இருப்பதாக அறிகிறோம். பன்னாட்டு நிறுவம் ஒன்றின் உயரதிகாரியாக பணிபுரியும் நர்சிம், வலைத் தளத்தில் எழுத வந்த புதிதில் யாரும் இவரை சீண்டவில்லை. மறுமொழியும், ஹிட்ஸும் குறைச்சலாக பெற்ற இவர், பிரபல பதிவர்களின் வலைத் தளத்துக்கு சென்று தானாக மறுமொழி இடுவார். எனது வலைத் தளத்துக்கு வாருங்கள் என்று கெஞ்சுவார். அந்த வகையில் ஒவ்வொரு இடுகையை தான் எழுதியதும், சந்தனமுல்லைக்கு லிங்க் அனுப்பியிருக்கிறார். ஆனால், சந்தனமுல்லை அதை கண்டுகொள்ளவில்லை என்பது நர்சிமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில்தான் பிரபல பதிவர்களின் அன்பைப் பெற்றால், தன் கடையும் பிரபலமாகும் என்று திட்டமிட்ட நர்சிம், யார் யார் பிரபலமானவர்கள் என லிஸ்ட் எடுத்திருக்கிறார். அதில் தன் சாதியை சேர்ந்த ஜ்யோவ்ராம் சுந்தர், பைத்தியக்காரன் ஆகியோரையும் (இவர்கள் பார்ப்பனியத்தை ஏற்காதவர்கள் என்றாலும்), தன் சாதியாக இல்லாவிட்டாலும் வருணாசிரமத்தை ஏற்கக் கூடிய பிற ஆதிக்க சாதியை சேர்ந்த பதிவர்களையும் அணுகி நட்பு பாராட்டி தானாகவே சீடனாகி இருக்கிறார். நன்றாக கவனித்தால் தனது ‘குரு’வாக எந்த பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களையும் தலித்துகளையும் இவர் ஏற்கவில்லை என்பது புரியும். அதுமட்டுமல்ல, எந்த பெண் எழுத்தாளரையும் குறைந்த பட்சம் வழிகாட்டியாகக் கூட நர்சிம் ஏற்றதில்லை. அறிவு ஆண்களுக்கு மட்டுமே – அதுவும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே – சொந்தம் என்பதில் அவ்வளவு நம்பிக்கை!

பணத்தை தின்று, பணத்தில் மலம் துடைத்து, பணத்தில் குளிக்கும் அளவுக்கு செல்வந்தராக இருக்கும் நர்சிம், பணத்தாலேயே தனது ‘குரு’க்களை மகிழ்வித்திருக்கிறார். ஒரு பியர் வாங்கிக் கொடுத்தாலே ‘இவர் மிகச்சிறந்த இலக்கியவாதி’ என்று அறிவிக்கும் சாருநிவேதிதா, ‘தனது சீடர்’ என மனமுவந்து நர்சிம்மை அறிவிக்கவும், தனது வலைத்தளத்தில் இவருக்கு லிங்க் தரவும் என்ன காரணம்? கள்ளநோட்டிலும் புன்னகைக்கும் காந்திதானே? இந்த இடத்தில் சாருநிவேதிதாவின் இப்போதைய மனைவியும், நர்சிம்மும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இன்று நர்சிம்முக்கு ஆதரவு தரும் யுவகிருஷ்ணா, அதிஷா, இரும்புத்திரை… ஆகியோர் சாருநிவேதிதாவின் அபிமானிகள் என்ற காரணத்திற்காகவே நர்சிம்மை வெட்கம், நேர்மை, சுரணையின்றி ஆதரிக்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் சாதியை பார்க்கிறீர்கள்… நர்சிம்மின் எழுத்துக்களை வாசித்திருக்கிறீர்களா? என்ற கேள்வியை அவரது ஆண்வெறி ஆதரவாளர்கள் எழுப்பலாம்.

நல்லது, நர்சிம்மின் எழுத்துக்கள் எப்படிப்பட்டவை? பொது புத்தியில் உறைந்து போன விஷயங்களை மூன்றாம் தர எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார் போல எழுதுவதை தவிர வேறென்ன செய்திருக்கிறார்? இதையும் அவர் திருடித்தான் செய்திருக்கிறார். “பழைய புத்தகக் கடையில் கிடைக்கும் பேப்பரை பார்த்து காப்பி அடிப்பதாக”, பதிவர் மயில் கிண்டலடித்ததற்கு காரணம் இதுதான். இந்த ‘உண்மை’யை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது யார் தெரியுமா? இப்போது நர்சிம்மை ஆதரிக்கும் ‘முற்போக்கு’ பதிவரான லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணாதான்.

ஒருமுறை நர்சிம் ஒரு கதையை எழுதியிருந்தார். அந்தக் கதை மின்னஞ்சலில் வலம் வரும் ஒரு ஆங்கிலக் கதையின் அப்பட்டமான காப்பி என்ற உண்மையை லக்கிலுக் போட்டு உடைத்தார். உடனே என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்? அந்த இடுகையையே தன் தளத்திலிருந்து நர்சிம் தூக்கிவிட்டார்! இப்படித்தான் நர்சிம் கதைகளை எழுதுகிறார். பழைய குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களில் வெளிவந்த ஒருபக்க, இருபக்க கதைகளை டிங்கரிங் செய்து புனைவாக்குவதுதான் அவர் வேலை.

கம்பரையும், வள்ளுவரையும், குறுந்தொகையையும் தன் தளத்தில் எழுதும் இந்த நர்சிம், ஒருபோதும் எந்த அறிஞரின் விளக்கவுரையிலிருந்து தான் எடுத்திருக்கிறோம் என்று சொல்லியதில்லை. வார்த்தை மாறாமல் அந்த விளக்கவுரையை டைப் செய்து தன் தளத்தில் வெளியிடுவது மட்டுமே இவரது வேலை. இந்த உழைப்புக்கு கிடைத்த பட்டம்தான் ‘கார்ப்பரேட் கம்பர்!’ வாங்கிய காசுக்கு மேல் கூவுவது என்பது இதுதான். கம்பனை இதற்கு மேல் இழிவுபடுத்துவதற்கு ஒன்றுமில்லை என்பது தமிழறிஞர்களுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.

எந்தவொரு பொதுப் பிரச்னை குறித்தாவது எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா? ஈழப் பிரச்னை தொடர்பாக ‘சோ’த்தனமாக ‘தினமலரை’ காப்பியடித்து ஒரு இடுகையை எழுதப் போக, பெயரிலி என்ற பதிவர் வெளுத்து வாங்க, ‘ஐயனே என்னை மன்னித்துவிடுங்கள்’ என சரண்டர் ஆன கதை அனைவருக்கும் தெரிந்ததுதானே? நித்தியானந்தா அம்பலப்பட்ட போது, பிரேமானந்தாவையும் உடன் இணைத்து பதிவு எழுதியவர், ஜெயேந்திரனை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ‘அவாள்’ பாசம். நித்தியானந்தரின் இணையதள பி.ஆர்.ஓ.வாக செயல்பட்ட சாருநிவேதிதாவையாவது கண்டித்தாரா என்றால் அதுவும் இல்லை. இதில் மக்கள் இந்த சாமியார்களை நம்பி ஏமாறக்கூடாது என்று அட்வைசு வேறு. சாருவை நம்பி பல வாசகர்கள் நித்தியிடம் ஏமாந்தது எல்லாம் இந்த கார்ப்பரேட் கம்பனின் கணக்கில் வராது போல.

ஆக எந்த பொதுப்பிரச்சினைக்கும் ஆவேசமோ, கோபமோ வராத டிப்பிக்கல் நடுத்தர வர்க்க, அதுவும் சென்னைப் பார்ப்பானின் சபா டைப் ஜிகினா அறிவாளிதான் இந்த நர்சிம். வங்கியிலோ, எல்.ஐ.சியிலோ, இல்லை ஐ.டி துறையிலோ வேலை செய்யும் பார்ப்பனர்களின் பொது அரட்டைப் பண்பைத் தாண்டி நர்சிமிடம் எந்த வெங்காயமுமில்லை. இப்படிப்பட்ட அக்மார்க் சுயநலவாதிதான் இன்று தன்னை கேலிசெய்தார் என்பதற்காக ஒரு பெண்ணை எழுத்தில் கடித்துக் குதறியிருக்கிறார். இப்படிப்பட்ட ஆண்வெறியனின் இரண்டரைக் கதைகளையும், ஒன்னேமுக்கால் கவிதைகளையும் வெளியிட்டதற்கு ஆ.விகடன்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆனால், சந்தனமுல்லை தொடர்ந்து பொதுப் பிரச்னைகள் சார்ந்து எழுதிவருகிறார். ஏப்ரல் மாத ‘உன்னதம்’ இதழில் ‘தெலுங்கானா’ பிரச்னை குறித்து ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’யில் வந்த கட்டுரையை தமிழாக்கம் செய்தவர்,  மே மாத ‘உன்னதம்’ இதழில் ‘தலித்துகள் ஏன் நீதிபதியாக வரமுடியவில்லை?’ என்ற கட்டுரையை தமிழாக்கம் செய்திருக்கிறார். தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தின் வழியே சமூக பிரச்னைகளை ஆராய்கிறார். வினவில் கூட மகளிர் தினப்பதிவுகளில் எழுதியதோடு மற்ற பெண் பதிவர்களின் கட்டுரைகளை உற்சாகத்துடன் ஆதரித்தார். வினவு போன்ற இடதுசாரி ‘தீவிரவாதி’களை ஆதரிப்பதற்கு கூட பயப்படும் சில ஆண் பதிவர்களின் சூழலில் இதுவே பெரிய கலக நடவடிக்கையில்லையா?   தண்ணீர் தினத்தை முன்னிட்டு ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ நூலை வெகு அழகாக சென்னை கூவம் நதிக்கரையோர அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு சந்தனமுல்லை எழுதிய இடுகைக்கு சமமான இடுகையை எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா?

நர்சிம்மின் எந்த இடுகையிலும் சந்தனமுல்லை மறுமொழிகள் இட்டதில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது. தன்னை மீறி ஒரு பெண்பதிவர் பிரபலமடைவதும், சொல்லப் போனால் வினவு போன்றவர்கள் சந்தன முல்லைக்கு பின்னூட்டமிடுவதும், தனது தளத்தில் எழுதவைப்பதும், நர்சிம் என்ற அப்துல்கலாம் மரண மொக்கைக்கு இதுவரை வினவு பின்னூட்டம் போடாததும் கூட இந்த பார்ப்பன ஆண்வெறி பதிவருக்கு ஆத்திரத்தை உருவாக்கியிருக்கும். என்றால் இவர் சந்தன முல்லையை வேறு எப்படி எதிர் கொள்ள முடியும்?

குட் டச் பேட் டச்

தன்னைத்தானே நேசிக்கும், தன் அழகை மட்டுமே ஆராதிக்கும், தன் எழுத்தை தானே வழிபடும் சுயமோகியாக நர்சிம் இருப்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம், ‘குட் டச் பேட் டச்’ நிகழ்வு. பதிவுலகம் சார்பில் நடந்த சமூக நிகழ்வில் இதுவும் ஒன்று. கிழக்கு மொட்டை மாடியில் டாக்டர்களான ருத்ரனும், ஷாலினியும் பங்கேற்ற அந்த நிகழ்வுக்கு முழுக்க முழுக்க அடித்தளமிட்டவர் பதிவர் தீபா. சிறுமிகள் மீது நிகழும் வன்கொடுமைகளை கண்டித்து தீபா ஒரு பதிவு எழுத, இது குறித்து அரங்கக் கூட்டம் நடத்தலாம் என பதிவர்கள் மறுமொழியில் சொல்ல… அப்படித்தான் இக்கூட்டம் அரங்கேறியது. பெண் பதிவர்கள்தான் இதற்கான முயற்சியில் இறங்கினார்கள். ஆனால், அப்போது இவர்களுடன் நட்பு பாராட்டிய நர்சிம், தானும் உதவுவதாக சொல்லி களத்தில் இறங்கினார். அவ்வளவுதான். வந்தது வினை. டாக்டர் ருத்ரனுக்கு அழைப்பு செல்லவே இல்லை. அந்தப் பொறுப்பை ஏற்ற நர்சிம், டாக்டரை தொடர்பு கொள்ளவேயில்லை. பதிவுகளில் வந்த அறிவிப்பை பார்த்துவிட்டு டாக்டர் போட்ட பின்னூட்டம் இன்றும் நினைவில் இருக்கிறது. “யாரும் என்னை முறைப்படி தொடர்பு கொண்டு தேதியை சொல்லவில்லை. இருந்தாலும் பதிவர்களுக்காக நிகழ்ச்சிக்கு வருகிறேன்” என்று பொருள்பட எழுதினார். இதற்கு அடுத்து நடந்த க்ளைமாக்ஸ்தான் முக்கியம்.

இந்நிகழ்வு குறித்து ‘ஜூனியர் விகடனில்’ செய்தி வெளியிட்ட ரமேஷ் வைத்யா, இந்நிகழ்வு நடக்க முழுக்க முழுக்க நர்சிம்தான் காரணம் என கூலிங் க்ளாஸ் அணிந்த நர்சிம்மின் புகைப்படத்துடன் எழுதியிருந்தார். பிரமாதமாக ஏதோ தானே உழைத்து நிகழ்ச்சியை நடத்தியதுபோல் நர்சிம்மும் பேட்டியளித்திருந்தார். இப்படி பார்ப்பன ஊடகங்களில் அவாள்களுக்கு மட்டுமே ஒளிவட்டம் போடப்படும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ‘ஜூ.வி’ வெளிவந்ததும் வழக்கம்போல் ‘நன்றி ஜூ.வி’ என இடுகை எழுதிய நர்சிம், மறுமொழியில் பல பதிவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தீபாதான் காரணம் என்று சொன்னதும், அந்த இடுகையையே தூக்கிவிட்டார். ஆக, தான் அம்பலமாகாத இடுகைகளை மட்டுமே நர்சிம் தன் வலைத்தளத்தில் வைத்திருக்கிறார். திருட்டுக் குற்றம் வெளிப்பட்ட இடுகைகளை சத்தமில்லாமல் தூக்கிவிடுவார்.

இந்த நிகழ்வில் சமூகப் பொறுப்புணர்வுள்ள சந்தனமுல்லை தன்னாலான உதவிகளை தீபாவுக்கு செய்தார். எதுவும் செய்யாமல், ஆனால், எல்லாம் தன்னால்தான் என்று சீன் காட்டும் நர்சிம்மை நண்பனாகக் கூட இதன் பிறகு சந்தனமுல்லை மதிக்கவில்லை. ஆக, சந்தனமுல்லை மீது நர்சிம் ஆத்திரப்பட இதுமாதிரியான பல திருட்டுகளே காரணம். அறிவுச்சரக்கும் சமூக அக்கறையும் இல்லாமல் ஆதிக்க சக்திகளின் பலத்தில் தானும் ஒரு எழுத்தாளராக வலம் வரவேண்டுமென்ற ஒற்றைக் குறிக்கோளைத் தவிர இவருக்கு எந்த கொள்கையும், வெங்காயமும் இல்லை.

இந்த அரங்கக் கூட்டம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு தன் வலைத்தளத்தில் பாலபாரதி ஒரு மின்னஞ்சலை வெளியிட்டார். அது ஒரு பெண் பதிவர் அவருக்கு அனுப்பிய பர்சனல் கடிதம். தனக்கு செக்ஸ் டார்ச்சர் தரும் திருமணமான ஒரு ஆண் பதிவரால் தன் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெயர் குறிப்பிடாமல் பாலபாரதி இந்த மின்னஞ்சலை வெளியிட்டார். அத்துடன் தக்க சமயத்தில் அந்த ஆண் பதிவர் யார் என்று அம்பலப்படுத்துவேன் என்றார். இன்றுவரை பாலபாரதி அந்த ஆண் பதிவரை அம்பலப்படுத்தவில்லை. ஒருவேளை தக்க சமயம் இன்னும் வரவில்லை போல! ஆனால் பாலபாரதி அவர்களே அதை இனியும் வெளியிடவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆண் வெறி விலங்குகள் இன்னும் ஆடுவார்கள் என்பதை மட்டும் இங்கே என்பதை நட்புடன் சுட்டிக் காட்டுகிறோம்.

தீபாநர்சிம்நகைச்சுவைமயில்

கலாய்த்தல் அல்லது ஒரு பதிவுக்கு நகைச்சுவையாக எதிர் பதிவு எழுதுவது என்பது பதிவுலகில் சகஜம். கண்ணுக்கு தெரிந்த உதாரணம் குசும்பன். நகைச்சுவை என்ற லேபிளின் கீழ், குசும்பன் எது செய்தாலும் பதிவர்கள் அனைவரும் மறுமொழியில் தங்கள் சந்தோஷத்தை தெரிவிப்பார்கள். உண்மையில் எந்தவொரு பிரச்னையையும் நீர்த்துப் போக செய்வதில் இதுமாதிரியான ‘குசும்பு’ பதிவுகளே முன்னிலை வகிக்கின்றன. அரசர்களின், ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் அவையில், அவர்களை மகிழ்விக்க கோமாளிகள் நியமிக்கப்படுவார்கள். மக்களின் பிரச்னைகள் அல்லது போராட்டங்கள் அரசரின் செவியை ‘எட்டாதபடி’ கண்ணும் கருத்துமாக கோமாளி செயல்படுவான். இதன்மூலம் அரசர் மக்கள் பிரச்சினைகளுக்காக எப்போதும் காது திறந்திருப்பார் என்று பொருளல்ல. ஆனால் எப்போதும் அரசனை பிரச்சினைகளின்றி மகிழவைப்பதே கோமாளியின் வேலை. பதிவுலக அரசர்களை அப்படி மகிழ்விக்கும் திருத்தொண்டைத்தான் பதிவர் குசும்பன் என்ற அரசவைக் கோமாளி செய்து வருகிறார்.

இப்போது கூட நர்சிம் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம் ‘பதிவுலகிற்கு நாட்டாமைகள் தேவை’ என்று ஒரு பதிவை குசும்பன் வெளியிட்டிருக்கிறார். அப்பட்டமாக ஒரு பாலியல் வன்முறை நடக்கும் போது கூட அதை கேலியாகப் பார்க்கும் நகைச்சுவை உணர்வு இந்த உலகில் குசும்பனுக்கு மட்டுமே உண்டு. நர்சிம்மையோ அல்லது அவரது ஆணாதிக்கவெறி ஆதரவாளர்களையோ பார்த்து மட்டுமல்ல உங்களைப் பார்த்தும் ஆத்திரம் வருகிறது குசும்பன். முடிந்தால் கொஞ்சம் வெட்கப்படுங்கள். உங்களது பதிவுலக சேவையின் பரிணாம வளர்ச்சி இப்போதுதான் பொருத்தமாக வந்திருக்கிறது.

‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்’ என்று பெயர் வாங்கத் துடிக்கும் நர்சிம், அவ்வப்போது இதுமாதிரியான நகைச்சுவை இடுகைகளை எழுத முயன்றிருக்கிறார். உரையாடல் அமைப்பு சார்பில் சிறுகதைப் பட்டறை நடத்தப்பட்டபோது அது தொடர்பாக ஒரு ‘காமெடி’ இடுகையை நர்சிம் எழுதியது ஒரு உதாரணம். எப்படியாவது பதிவுலகில் பெயர் பெற்ற வழிமுறைகளுடன் தானும் ஒரு பிரபல பதிவராக மாறவேண்டும் என்பதின் மலிவான முயற்சிகள்தான் இவை.

ஆனால் இவர் நகைச்சுவையாக எழுத முயன்றது போன்று முன்பு தீபாவும், இப்போது மயிலும் செய்தபோது நர்சிம் துள்ளி குதித்து விஷத்தை கக்குகிறார். தீபா விஷயத்தில் என்ன நடந்தது?

சுயமோகியான நர்சிம், தனக்கு வந்ததாக ஒரு வாசகர் கடிதத்தை தன் தளத்தில் பிரசுரித்தார். அதில் அவரை இந்திரன், சந்திரன் என்றெல்லாம் புகழப்பட்டிருந்தது. உண்மையிலேயே அப்படியொரு வாசகர் கடிதம் வந்ததா இல்லையா என்பது வேறு விஷயம். படு மொக்கை இடுகைகளை எழுதும் நர்சிம்மையும் மதித்து பாராட்டும் மொக்கைகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

நர்சிம்மின் இந்த வாசகர் கடிதத்தை கிண்டல் செய்து தீபா ஒரு இடுகையை எழுதினார். அந்த இடுகையில் சந்தனமுல்லை மறுமொழி எழுதினார். இப்போது நர்சிம்மை ஆதரிக்கிறார்களே… அவர்களேதான் அப்போதும் தீபாவுக்கு எதிராக பொங்கி எழுந்தார்கள். சந்தனமுல்லைதான் இதற்கெல்லாம் காரணம் என டார்கெட் செய்தார்கள். வலையுலகமே இரண்டு பட்டது.

இந்த பழைய வரலாறுதான் இப்போதும் நடந்திருக்கிறது. ஆதிமூல கிருஷ்ணன் என்ற பதிவர், நர்சிமை பேட்டியெடுத்து வெளியிட்டார். அதில் ஆ.விகடன் பாணியில் தன்னை முன்னிறுத்தி மரண மொக்கை கருத்துக்களை நர்சிம் வீசியிருந்தார். அதை கிண்டல் செய்து பதிவர் மயில் ஒரு பதிவு வெளியிட அதில் சந்தனை முல்லை பின்னூட்டம் போட இதுதான் நர்சிம் வெறி கொண்ட பின்னணி.

அப்போது நர்சிம்முக்கு வந்த வாசகர் கடிதம். இப்போது நர்சிம் அளித்த பேட்டி. இரண்டு இடங்களிலும் நர்சிம்மை கிண்டல் செய்தவர்கள் பெண் பதிவர்கள். இரண்டிலும் அந்த கிண்டலை ஆதரித்து மறுமொழி எழுதியவர் சந்தனமுல்லை.

ஒருவேளை இருமுறையும் நர்சிம்மை கலாய்த்தது ஆண் பதிவர்களாக இருந்தால், கோமாளியான குசும்பனே இதை செய்திருந்தால், என்ன நடந்திருக்கும்? நர்சிம் இதேபோல் பார்ப்பன விஷத்தை கக்குவாரா? நர்சிம்மை ஆதரிக்கும் பதிவர்கள் இதேபோல் எதிர்வினை புரிவார்களா? கலாய்த்தல் என்பதும், கிண்டல் என்பதும் ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா? பெண்கள் அப்படி செய்யக் கூடாதா? இப்போது அந்த பெண்பதிவர்கள் செய்த கிண்டலை சீரியஸாகவே வினவு ஆமோதிக்கிறது.

ஆதிமூலகிருஷ்ணன் எடுத்த நர்சிம்மின் பேட்டியை கிண்டல் அடித்து மயில் எழுதிய இடுகையை வரிக்கு வரி ஆமோதிக்கிறோம். திருஞான சம்பந்தன் போல குழந்தையாக இருக்கும் போதே ஞானப்பால் குடித்த மேதையாக தன்னைக் கருதிக் கொள்ளும் நர்சிமை, மிகச்சரியான முறையில் பதிவர் மயில் நகைச்சுவை பாணியில் எழுதியிருக்கிறார். அதை வரிக்கு வரி நாங்கள் பாராட்டுகிறோம். பழைய புத்தகக் கடையிலிருந்து திருடித்தான் நர்சிம் பதிவு எழுதுகிறார் என்பது நகைச்சுவை மட்டுமல்ல, உண்மையும் கூட. இதை சந்தனமுல்லை ஆமோதித்து மறுமொழி எழுதியதில் என்ன தவறு இருக்கிறது?

குசும்பன் செய்தால் அதை பாராட்டுவீர்கள், முல்லையும், மயிலும் செய்தால் கடித்து குதறுவீர்களா? ஏன் வினவைக்கூட கிண்டலாகவும், வன்மத்துடனும் சிலர் பதிவாகவும், இங்கே பின்னூட்டமாகவும் எழுதுகிறார்கள். இதற்காக என்றைக்காவது நாங்கள் கோபப்பட்டிருக்கிறோமா? இவ்வளவிற்கும் நாங்கள் நர்சிமைப் போலவோ, அவரது ஆதரவாளர்களைப் போலவோ மரணமொக்கைகளை எழுதுவதில்லை. அதுவும் நாங்களெல்லாம் பதிவுலகில், ஊடகங்களில் மாபெரும் எழுத்தாளராக பவனி வரவேண்டும் என்ற பச்சையான சுயநலத்திற்காக எழுதவில்லை. அத்தனையும் மக்களுக்கான நோக்கில் எழுதுகிறோம். அப்படியெனில் எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்க வேண்டும்? வரவில்லை என்றால் அது நடைமுறையில் பதிவுலகில் ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற பொறுப்புதான் அப்படி வழிநடத்துகிறது. அற்பவாதியும், பொதுநலவாதியும் இப்படித்தான் வேறுபடுகிறார்கள்.

விதூஷ்டி.ஆர்.அசோக்

எந்தளவுக்கு நர்சிம்மும் அவரது ஆதரவாளர்களும் பார்ப்பன வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் டி.ஆர்.அசோக். இவர் பதிவர் சங்கம் குறித்து ஒரு இடுகை எழுதினார். அதில் சங்கத்தின் முதல் பெஞ்சில் இருப்பவர்களெல்லாம் பார்ப்பனர்களாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பின்னூட்டமிட்ட விதூஷ் (வித்யா) என்ற பெண்பதிவருக்கு பதிலளிக்கும் போது நீங்கள் அழகாக அடக்கமாக இருக்கிறீர்கள் என்று பதிலளித்திருந்தார். உடனே நர்சிம் சாமியாடினார் பாருங்கள்… அடேங்கப்பா நினைத்தாலே புல்லரிக்கிறது. ‘ஒரு பெண்ணை ஈவ்டீசிங் செய்வதற்கு சமம்… இப்படியெல்லாம் ஆண்கள் இருந்தால் எப்படி பெண்கள் எழுத வருவார்கள்…’ என்றெல்லாம் கேள்வி கேட்டார். மறுமொழியிலும் பலர் நர்சிம்மை ஆதரித்து, டி.ஆர்.அசோக்கை எதிர்த்து எழுதினார்கள். உண்மையில் பார்ப்பனர்களை கேள்வி கேட்ட அசோக்கை வஞ்சம் தீர்க்கவே நர்சிம் இதை எழுதினார் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஏனெனில் இப்போது சந்தனமுல்லையை குறிவைத்து எழுத்தில் வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம்மின் செயல் எப்படிப்பட்டது? இதை ஆராய வேண்டிய அவசியமே இல்லை. விதூஷ் என்கிற வித்யா ஒரு பார்ப்பனப் பெண். அவரது அழகை வர்ணித்த டி.ஆர்.அசோக் பார்ப்பனரல்லாதவர். பார்ப்பன பெண்ணை வேறொரு சாதி ஆண் எப்படி ரசிக்கலாம் என்ற பார்ப்பன இளைஞனின் சுயசாதிக் கோபம் அதுவும் நாயகிகளைக் காப்பாற்றும் எம்.ஜி.ஆர் டைப் ஹீரோயிசம்தான் நர்சிம்மிடம் அப்போது வெளிப்பட்டது.  மற்றபடி பெண்களை காப்பாற்றும் எந்த புண்ணாக்கு செயலும் இதில் இல்லை. ஒருவேளை டி.ஆர்.அசோக் பார்ப்பனராக இருந்திருந்தால், நர்சிம் இந்த ‘கமெண்ட்டை’ ரசித்திருப்பார்.

சந்தனமுல்லை மிக பிற்பட்ட வகுப்பை சேர்ந்த பெண். அதனால் நர்சிம் துணிந்து அவரை எழுத்தில் குதறியிருக்கிறார். யாரும் அவரை கேள்வி கேட்டமாட்டார்கள் என்ற நம்பிக்கை. நூற்றாண்டுகளாக பார்ப்பனர்களின் இந்த நம்பிக்கைதானே சமுதாய ‘இயல்பாக’ இருக்கிறது. அதனால்தானே பெண்ணாக இருந்தும் இன்னொரு பெண்ணை தரம் தாழ்த்தி நர்சிம் எழுதியதை இதே விதூஷ் ஆதரிக்கிறார்? சனிக்கிழமை மாலையே விதூஷ் ‘பொழுதுபோகலைனா…’ என இடுகை எழுத வேறென்ன காரணம் இருக்கமுடியும்?

நர்சிம் செய்த வன்புணர்ச்சி

சந்தனமுல்லை மீது இந்தளவுக்கு கீழ்த்தரமான வசவுகளை நர்சிம் பயன்படுத்தக் காரணம், ஆண் என்ற வெறியும், ஆதிக்க சாதிக்காரன் என்ற ஆணவமும்தான். இத்துடன் முதுகெலும்போடு சந்தனமுல்லை நிமிர்ந்து நிற்பது நர்சிம்முக்கு வயிற்றெரிச்சலை கிளப்பியிருக்கிறது. அதனால்தான் சந்தனமுல்லையை குறிவைத்து நர்சிம் எழுதிய ‘பூக்காரி’ என்ற படுமட்டமான செக்ஸ் கதையில் இந்த //நம்ம வளர்ப்பு வேற மாப்ள.//  சொற்பிரயோகம் வருகிறது.

என்ன சொல்ல வருகிறார் நர்சிம்? தன் குலம் பார்ப்பனக் குலம்… தன் வளர்ப்பு மேம்பட்ட வளர்ப்பு  என்பதுதான் இதன் பொருள்.

” இவ பஜாரி முண்டைப்பா…அவ காரியம் ஆகணும்னா எவனையும் ஊ.. துபத்தி வாங்கி கும்புடுற கொலமகளப்பா..ஒக்காலி நல்ல மாடுன்னா உள்ளூர்ல விலபோகும்..இவ பவுசு தெரியாத வெளிநாட்டுப் பயலுகலோட தொடுப்பு வச்சு சம்பாதிக்கிற தொழில்காரிய என்னாண்டு சொல்லச் சொல்ற?” இதற்கு என்ன பொருள்?

” “அப்பிடித்தான் மாப்ள ஒதுங்கிப்பேனேன்.. தேவிடியா கைய்யி சும்மா இருக்குமா, அரிக்குது போல..கையக்காட்டுறா, கண்ணக்காட்டுறா.. ஒக்காலி ரோட்டுல விட்டுத்திருப்புனா சரியாப் போகும்” இதன் பொருள் என்ன?

இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்தபோது அதை எதிர்த்து பார்ப்பன வன்மத்துடன் குரல் கொடுத்த சத்தியமூர்த்தி ஐயரின் இருபத்தியோராம் நூற்றாண்டு குரல்தான் நர்சிமினுடையது. ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களோ இல்லை பதிவர்களோ அடக்க ஒடுக்கமாக இருப்பதைத்தான் இந்த வெறியர்கள் விரும்புவார்கள். வெள்ளையும் சொள்ளையுமாக ஹீரோ போல உலா வருவதையும், ஓசிக்காசுக்காக ஹீரோ என மொக்கைகள் உசுப்பேத்தி விடுவதையும் ரசித்து வாழும் நர்சிம் போன்ற அற்பங்களை இந்த பெண்கள் போட்டுடைத்தால் என்ன நடக்கும்? அதுதான் நர்சிமின் ஆண்குறித் திமிர் வெறி.

நர்சிமின் அசிங்கமான கொடுரமான முகம் இப்படி வெளிப்பட்டாலும் அதை ஜவ்வாது பூசி மறைப்பதற்கு சில பதிவர்கள் வெட்கமின்றி முயல்கிறார்கள். அவர்களெல்லாம் யாரென்று நர்சிமின் பின்னூட்டத்தில் பார்க்கலாம். இவர்களுக்குள்ளும் அப்பட்டமான ஆணாதிக்க வெறி மறைந்திருக்கிறது. இருப்பினும் அதை சற்றே நாசுக்காக மயில், முல்லையின் வினைக்கான எதிர்வினைதான் நர்சிமின் பூக்காரி என்று முட்டுகொடுக்க முயல்கிறார்கள். ஆனால் இந்த அற்பங்கள் முல்லை எழுதியது என்ன, நர்சிம் எழுதியது என்ன என்று தெரியாமலா பேசுகிறார்கள்? இல்லை தெரிந்தே ஊளையிடுகிறார்கள்.

“நர்சிமின் மேல் யாராவது அதுவும் ஒரு பெண் கைவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?” என்பதே இவர்களது எச்சரிக்கை. இவர்களது கருத்துதான் பொதுவில் செல்வாக்குடன் இருக்கிறது. இந்த செல்வாக்கில் சிக்குண்ட அப்பாவிப் பதிவர்களைப் பார்த்து கேட்கிறோம். முல்லை எழுதியதில் கருத்து வேறுபாடு என்றிருந்தால் அதை வெளிப்படையாக தெரிவித்து அதைக் கண்டிக்கிறேன் என்று எழுதுவதை யார் தடுத்தது? ஆனால் முல்லை எழுதியதால் அவரது கையை உடைப்பதோடு, அவரது ஆளுமையையும் கடித்துக் குதறுவேன் என்று நர்சிமை எழுத வைத்தது எது? அந்த வினைக்கு இதுதான் எதிர்வினை என்றால் நர்சிமின் வினைக்கு நாங்கள் எங்கள் வினையாக அவரை பாலியல் வன்முறை செய்த குற்றவாளி என்று ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறோம். பத்துவருட சிறைதண்டனை வழங்கப்படவேண்டுமென்று கோருகிறோம். உங்கள் பதில் என்ன? வினையின் விளைவுதான் இந்த எதிர்வினை என்று ஜல்லியடிக்கும் ‘நடுநிலைமையாளர்கள்’ அத்தனை பேரும் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.

நித்தியானந்தா பிரச்சினையில் சாருவை அம்பலப்படுத்தி வினவு எழுதிய கட்டுரையின் பின்னூட்டத்தில் ரியல் என்கவுண்டர் என்ற தோழர் சாரு அபிமானிகளாக லக்கிலுக், அதிஷா, நர்சிம், கேபிள் சங்கர் முதலானோர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்ட போது பதிவர் தண்டோரா துள்ளிக் குதித்தார். “எப்படி சக பதிவர்களை தாக்கி எழுதலாம்” என்று “வினவு என்னும் பிடுங்கிகள்” என்பதாய் பதிவு போட்டார். சகபதிவர்கள் ‘தாக்கப்படுவதை’க் கண்டு பொங்கியெழுந்த பதிவர்கள் பத்துப்பேர் தண்டோரா கட்டுரைக்கு ஓட்டு போட்டு ஜல்லியடித்தார்கள். பதிவர்களின் மீது இவ்வ்வளு பாசம் வைத்திருக்கும் இந்த வேடதாரிகள் இப்போது எங்கே போனார்கள்? அதுவும் எழுத்தால் ஒரு பெண்பதிவர் வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையே?

இதுவரை மாதவராஜ், காமராஜ், செந்தழல்ரவி, தீபா, மலர்வனம், முகுந்த அம்மா ஆகியோர்தான் நர்சிமைக் கண்டித்து பதிவிட்டிருக்கிறார்கள். சில பதிவர்கள் பின்னூட்டத்தில் கண்டித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர பெரும்பான்மையினர் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள் இல்லையென்றால் நர்சிமிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். “பர்தா நற்குடி” பிரச்சினையில் இந்துப் பெண்களின் மானம் கப்பலேற்றப்பட்டதாக பொங்கி எழுந்த இந்துப்பதிவர்கள் இப்போது ஒரு ‘இந்து’ பெண் பதிவர் மீது நடத்தப்பட்டிருக்கும் கொடூரத்தைக் கண்டு மேல் கீழ் வாய்மூடி இருப்பதற்கு காரணமென்ன? ஏனெனில் முல்லையின் மானத்தை விட ஒரு பாப்பானின் மானம் பெரிதல்லவா? ஆக இங்கும் இந்துப் பதிவுலகம் அப்படியேதான் செயல்படுகிறது.

பதிவுலக வரலாற்றிலேயே இல்லாத அளவு ஏன் போலி டோண்டு பிரச்சினையை தூக்கிச் சாப்பிடும் அளவு உள்ள இந்த நர்சிமின் வெறியை ஆதரிப்பவர்கள்தான் கடும் விமரிசனத்திற்குறியவர்கள். நர்சிம் ஒன்றும் முகமூடி அணிந்த அனானி அல்ல. எவ்வளவு திமிர் இருந்தால் பூக்காரி இடுகையை புனைவு என்ற வகையில் தைரியமாக வெளியிட்டு விட்டு இப்போது அந்த இடுகையைத் தூக்கிவிட்டு பதிவுலகை விட்டு தற்காலிகமாக விலகுகிறேன் என்றெல்லாம் சீன் போட்டு ஏதோ அவர்தான் இப்போது பாதிக்கப்பட்ட அப்பாவி போல நடிக்க முடியும்? இந்த தைரியம் – இல்லை வெறி கொண்ட திமிரின் அடிப்படை அவரது செயலை – இல்லை வன்மத்தை நடுநிலைமை என்ற பெயரில் நியாயப்படுத்தும் பதிவர்களிடம்தான் குடி கொண்டிருக்கிறது. இல்லை, அதற்கும் நர்சிம் வாங்கிக் கொடுத்த காஸ்ட்லியான பீரும், ஃபாரின் சரக்கும்தான் காரணமோ தெரியவில்லை. அ.மார்க்சின் சீடப்பிள்ளை கூட இதுவரை வாய் திறக்காததற்கு இந்த நன்றிக் கடன்தான் காரணமோ புரியவில்லை.

சீமாட்டி லீனா விவகாரத்தை நர்சிமின் கொடுரத்தோடு இணை வைத்து வினவு மீது சிலர் இப்போது வன்மம் தீர்க்க முனையலாம். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம். லீனா பிரச்சினையில் எங்களை ஆதரித்த பதிவர்கள் கூட இப்போது நர்சிமுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். லீனாவை ஆதரித்தவர்கள் இப்போது எங்களை ஆதரிக்கலாம். ஆனால் இந்த எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவம் எங்களுடையதல்ல என்பதை மட்டும் குறிப்பிடுகிறோம். லீனா புனைவு என்ற பெயரில் ஒடுக்கப்படும் மக்களை, அவர்களது விடுதலையை, இயக்கங்களை, தலைவர்களை காறி உமிழ்ந்திருந்தார். அது குறித்து வெளிப்படையான விமரிசனத்தை வினவிலும், நேரிலும், தெரிவித்தோம். புனைவு என்ற பெயரில் அழுகுணி ஆட்டம் ஆடவில்லை. நர்சிமின் முதுகிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு லீனா ஆதரவாளர்கள் வினவை முத்திரை குத்த முயன்றால் அதுவும் நல்லதுதான். ஏனெனில் லீனாவும், நர்சிமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வாசகர்கள் உணர இது ஒரு அரிய வாய்ப்பு.

தமிழ்மணத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கின்றோம். இதுநாள் வரை இப்படி ஒரு கோரிக்கை வைக்கும்படியான சூழ்நிலை வருமென்று நாங்களே எதிர்பார்த்ததில்லை. பதிவுலகில் வலது, இடது,முற்போக்கு, பிற்போக்கு என்று எல்லாமும் இடம் பெறுவதுதான் ஜனநாயகம். அதை நாங்கள் மதிக்கிறோம். அதனால்தான் எங்களைத் திட்டுவதையே அல்லது வினவை தடை செய்யவேண்டுமென்றும், கைது செய்ய வேண்டும் என்றும் கூப்பாடு போடும் ஜந்துக்களைக்கூட நாங்கள் தடை செய்யவேண்டுமென்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் நர்சிம் இழைத்திருப்பது கருத்து வேறுபாடு பற்றிய பிரச்சினை அல்ல. ஒரு அப்பட்டமான பாலியல் வன்முறை. அதற்கு அந்த எழுத்தே சான்று. இத்தகைய நபர்களை தமிழ்மணத்திலிருந்து அறிவிப்பு செய்து தூக்குவதே பெண் பதிவர்களுக்கு செய்யக்கூடிய உதவியாக, நம்பிக்கையாக, ஆதரவாக, நீதியாக இருக்கும். இதை மற்ற பதிவர்களும், வாசகர்களும் ஆதரிக்க வேண்டுமென்று கோருகிறோம்.

பெண் பதிவர்களில் சிலர் கூட நர்சிமை ஆதரிக்கும் அவலமான நிலையும் இருக்கிறது. சிலர் கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிக்கவும் கூடும். சிலர் யாரையும் விரோதித்துக் கொள்ளக்கூடாது என்று குழம்புகிறார்கள். சிலர் இந்த அநீதியை அப்பட்டமாக கண்டித்திருக்கிறார்கள். ஆனால் பெண்பதிவர்கள் அனைவரும் இந்த பிரச்சினையை ஒரு பரபரப்பான பதிவரசியல் பிரச்சினையாக பார்க்காமல் பொதுவெளியில் பெண் இயங்கும் போது ஆணாதிக்கம் போடும் தடைகள் என்பதை உணரவேண்டும். இல்லையேல் ஆயுசுக்கும் யாருக்கும் நோகாமல் மொக்கைகளையும், கும்மிகளையும் போட முடியும். காத்திரமான சமூக, அரசியல் பிரச்சினைகள் குறித்து வாயைத் திறக்க முடியாது. சந்தன முல்லை உறுதியாக இருக்கிறார். அந்த உறுதியை எங்களால் மட்டுமல்ல எல்லா பெண் பதிவர்களாலும், மற்ற பதிவர்கள், வாசகர்களாலும் பலப்படுத்த வேண்டும். இல்லையேல் முல்லை இல்லை. பெண் பதிவர்களின்றி பதிவுலகமும் இல்லை.

இனி பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு சில ஆலோசனைகள்:

1) ஏற்கனவே சொன்னது போல தமிழ்மணத்திற்கு மட்டுமல்ல தமிழிஷ் போன்ற திரட்டிகளிலிருந்து நர்சிம் மற்றும் ‘சாளரம்’ கார்க்கியை விலக்குவதை எல்லாரும் கோரலாம்.

2) இத்தகைய நபர்களை தனிமைப் படுத்தி ஒதுக்குவதன் மூலம்தான் அவர்களுக்குரிய பாடத்தை  கற்பிக்க முடியும் என்பதால் சுரணையுள்ள ஒவ்வொரு பதிவரும் நர்சிமோடு நட்பிருந்தால் அதை முறித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கலாம்.

3) நர்சிமின் அலுவலத்தில் வேலை செய்யும் பெண்களிடம் இந்த ஆணாதிக்க வெறியரின் இழி செயலை நேரில் சென்று விளக்கலாம்.

4) நர்சிமின் வீட்டிற்கு சுரணையுள்ள பதிவர்கள் ஒன்று சேர்ந்து நீதி கேட்க போகலாம். அண்டை வீட்டாரிடம் இந்த செயலுக்கு நியாயம் கேட்கலாம்.

இதற்குள் நர்சிம் மன்னிப்பு கேட்டார் என்றால் என்ன செய்வது? பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகள் மன்னிப்பு கேட்டால் சட்டமும், நீதியும் கணக்கில் கொள்ளாது. நாமும் கொள்ள வேண்டியதில்லை. தனது இமேஜை தூக்கி நிறுத்த, தனது ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ள நர்சீம் இப்போதே இந்த முயற்சியைத் துவக்கி விட்டார்.

ஆனால் நடந்திருப்பது ஒரு பாலியல் வன்முறை. தேவை நமது தண்டனை. ஆதரவு தாருங்கள்! இந்தப் போராட்டத்திற்கு தோள் கொடுங்கள்!!

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இணைப்புகள்

  1. ஆதி – நர்சிம் பேட்டி
  2. மயிலின் பதிவு
  3. நர்சிமின் பூக்காரி பதிவு

கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!

12

vote-012கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள பிளாச்சிமடா கிராமத்தில் அமைந்துள்ள கோக் ஆலையை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நடத்திவரும் போராட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் அப்போராட்டத்தில் தற்பொழுது முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

பிளாச்சிமடா பஞ்சாயத்து ஒன்றியத்தைச் சேர்ந்த மக்கள் விடாப்படியாக நடத்திவரும் போராட்டத்தின் காரணமாக, கேரள மாநில அரசு, கோக் ஆலைக்கு எதிராக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்வதற்காக ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழுவொன்றைச் சில மாதங்களுக்கு முன் அமைத்தது. அந்நிபுணர் குழு, கோக் ஆலையின் செயல்பட்டால் அப்பகுதியின் நிலத்தடி நீர் வற்றிப் போனதையும், அவ்வாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளால் நிலத்தடி நீரும் நிலமும் மாசடைந்து போனதையும் தற்பொழுது உறுதி செய்திருப்பதோடு, இதற்காக கோக் நிர்வாகம் அப்பகுதி மக்களுக்கு 200 கோடி ரூபாய் நட்ட ஈடாக வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. மேலும், அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொகை நட்ட ஈடாக வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யவும் அதிகாரமிக்க கமிட்டியொன்றை அரசு அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

கேரள மாநிலத்தின் நெற்களஞ்சியமாக அறியப்படுவது பாலக்காடு மாவட்டம். பிளாச்சிமடா கிராமம் அமைந்துள்ள சித்தூர் வட்டம் நெற்களஞ்சியத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயரெடுத்த பகுதி. நெல், தென்னை, கடலை, பருத்தி, கரும்பு, வாழை, மிளகு, கேழ்வரகு, மா, ஆரஞ்சு, ஏலக்காய், ரப்பர் மற்றும் காய்கனிகள் என முப்போகம் விளைந்த பிளாச்சிமடா பகுதி, கோக் ஆலை பிளாச்சிமடாவில் இயங்க ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே பாலைவனம் போலாகிப் போனது. கோக், ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 இலட்சம் லிட்டர் நீரை உறிஞ்சி எடுத்ததாலும், தனது ஆலைக் கழிவுகளை வயல்வெளியிலேயே கொட்டியதாலும் ஏற்பட்ட நிலைமை இது.

ஆலைக்கு நிலத்தை விற்ற பண்ணையாரிடம் கூலி வேலை செய்து வந்த பழனி, ஒரே வரியில் இந்த அவலநிலைமையை விளக்குகிறார். “அன்று ஒரு ரூபாய் சம்பளம். சோற்றுக்கும் பஞ்சமில்லை; நல்ல தண்ணீருக்கும் அன்று பஞ்சமில்லை. இன்று பண்ணையார் கொடுத்த 5 செண்டு நிலமிருக்கிறது. ஆனால், கிணற்றில் தண்ணீர் இல்லை.” கோக் ஆலைக்கு அருகில் 4 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஷாகுல் அமீது 2002-க்குப் பிறகு தன்னால் விவசாயமே செய்ய முடியவில்லை என்கிறார். நான் 20 பேருக்கு வேலை கொடுத்தேன். இன்று மகனுடைய சம்பளத்தில்தான் தனது வயிற்றை கழிவிக் கொண்டிருப்பதாகப் பொருமுகிறார், அவர்.

நீர் வளமிக்க பிளாச்சிமடா கிராமத்தின் மக்கள் கோக் ஆலையின் வருகைக்குப் பின்னர், தங்களது தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கே லாரித் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோக் ஆலையால் மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரைத் துணிகளைத் துவைப்பதற்குக்கூடப் பயன்படுத்த முடியாது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். கோக் ஆலையால் இப்படி மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரையும், நிலத்தையும் மீண்டும் தூய்மைப்படுத்துவதற்கும், கோக் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கும் இந்த 200 கோடி ரூபாய் போதுமானதா எனக் கேட்க வேண்டிய நேரத்தில், கோக் ஆலையோ தனக்குத் தண்டனை அளிக்க இந்த நிபுணர் கமிட்டிக்கு அதிகாரம் கிடையாது எனக் கொக்கரிக்கிறது. நிபுணர் குழு விசாரணைக்கு அழைத்தபொழுது, அதற்கு உடன்படவும் மறுத்து வந்தது, கோக் நிர்வாகம். அரசு அமைத்த நிபுணர் குழுவின் உத்தரவைக் கழிப்பறைக் காகிதம் போல் தூக்கி வீசுவது, அரசின் அதிகாரத்திற்கே சவால் விடுவதற்குச் சமமானது என்ற போதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசும் கேரள மாநில சி.பி.எம். அரசாங்கம் கோக்கின் இந்தத் திமிருக்கு எதிராக அடக்கியே வாசிக்கிறது.

இடதுசாரிக் கூட்டணியின் கையில் அதிகாரம் இருந்தால், பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்டத்திற்கு ஆப்பு வைத்துவிடுவோம் என சி.பி.எம். உதார்விட்டு வருவதைப் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. இதோ, கேரள மாநில அதிகாரம் இடதுசாரிக் கூட்டணியின் கையில்தான் இருக்கிறது. அக்கூட்டணி ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருந்தால், “உடனடியாக 200 கோடி ரூபாய் பணத்தை அரசு கஜானாவில் கட்டச் சொல்லி கோக்கிற்கு உத்தரவிட்டிருக்கலாம். அப்படிக் கட்டத் தவறினால், கேரளாவிலுள்ள கோக்கின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்” என ஒரு வார்த்தைக்காகவாவது மிரட்டல் விட்டிருக்கலாம். நிபுணர் குழுவின் பரிந்துரையையொட்டி கோக் நிர்வாகத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத சி.பி.எம். கூட்டணி ஆட்சி, ஒப்புக்குச் சப்பாணியாக, அதே பாலக்காடு மாவட்டத்தில் இயங்கிவரும் பெப்சி ஆலை நிர்வாகத்திடம், “இனி, 7 இலட்சம் லிட்டர் நீருக்குப் பதிலாக, 2.34 இலட்சம் நீரைத்தான் நிலத்தடியிலிருந்து எடுத்துப் பயன்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைக் கேட்டு பெப்சி நிர்வாகம் ஆடிப் போய்விடும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? பிளாச்சிமடாவில் உள்ள கோக் ஆலைகூட ஒவ்வொரு நாளும் 5 இலட்சம் லிட்டர் நீரைத்தான் நிலத்தடியில் இருந்து எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என அரசிடம் அனுமதி பெற்றிருந்தது. ஆனால், கோக் நிர்வாகமோ ஒவ்வொரு நாளும் 15 இலட்சம் லிட்டருக்கும் மேலாக நீரை உறிஞ்சி எடுத்துப் பயன்படுத்தி வந்தது. கடந்த பத்தாண்டுகளில் இந்தத் தண்ணீர் திருட்டுக்காக கோக் நிர்வாகம் ஒருமுறையேனும் தண்டிக்கப்பட்டதுண்டா?

பிளாச்சிமடா மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த இந்த வெற்றியைச் செயல்படுத்த வேண்டும் என்றால்கூட, கோக்கிற்கு எதிராக நடந்துவரும் இப்போராட்டத்தை இன்னும் தீவிரமாக நடத்த வேண்டியிருக்கும். ஏனென்றால், கோக்கின் பண பலமும் அரசியல் செல்வாக்கும் பாதாளம் வரை பாயக்கூடியது. இதற்கு ஆதாரமாக கடந்த பத்தாண்டுகளில் நடந்த பல சம்பவங்களை உதாரணமாகக் காட்டலாம்.

கோக்கின் செயல்பாடுகளால் நிலத்தடி நீர் மாசடைவதைக் கண்ட பிளாச்சிமடா பஞ்சாயத்து ஒன்றியம், கோக்கின் ஆலை செயல்படுவதற்குத் தடை விதித்தது; கேரள மாநில அரசைக் கொண்டே இந்தத் தடையை உடைத்தெறிந்தது, கோக். இதற்கடுத்து, 34 ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயி எந்தளவிற்கு நீரைப் பயன்படுத்துவரோ, அதே அளவு நீரைத்தான் கோக் ஆலையும் பயன்படுத்த வேண்டும் என கேரள உயர்நீதி மன்றத்தின் மூலம் ஒரு தீர்ப்பைப் பெற்றனர், பிளாச்சிமடா மக்கள். இதனையும் கேரள உயர்நீதி மன்றத்தைப் பயன்படுத்தியே உடைத்தது, கோக். பிளாச்சிமடா மக்கள் குடிதண்ணீருக்காகக் குடத்தைத் தூக்கிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தபொழுதுதான், இப்படிபட்ட தீர்ப்புகளையும், அரசாணையையும் கோக் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பிரச்சினை பற்றி தலையங்கம் எழுதியுள்ள “எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி” என்ற ஆங்கில வார இதழ், “பிளாச்சிமடா மக்கள் கடந்த பத்தாண்டுகளாக சட்டபூர்வமாகப் போராடி இந்த வெற்றியை ஈட்டியுள்ளனர். இது நடைமுறைக்கு வரவில்லையென்றால், நீதியைப் பெறுவதற்கு ஜனநாயகத்திற்குப் புறம்பான வழிகளில் மக்கள் போராடத் தொடங்கி விடுவார்கள்” என ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளது.

இந்த வரிகளைத் தோலுரித்தால், இந்திய ‘ஜனநாயகமும்’, அதன் ஆட்சியாளர்களும், ஓட்டுக் கட்சிகளும் எந்தளவிற்குப் பன்னாட்டு நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கும் ஏவல் நாய்களாக நடந்து வருகிறார்கள் என்பது அம்பலமாகும். ஆனாலும் என்ன செய்வது? எத்தனை முறை குச்சியை வைத்துக் கட்டினாலும், நாய் வாலை நிமிர்த்திவிட முடியாதே!

_______________________________________________

புதிய ஜனநாயகம் – மே 2010
_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்