privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாமீனவர் சுட்டுக்கொலை: இத்தாலியின் திமிர்த்தனம்! இந்தியாவின் அடிமைத்தனம்!!

மீனவர் சுட்டுக்கொலை: இத்தாலியின் திமிர்த்தனம்! இந்தியாவின் அடிமைத்தனம்!!

-

மீனவர் கொலைகேரளத்தின் கொல்லம் மீன்பிடி துறைமுகம் அருகே, இந்திய கடல் எல்லைக்குட்பட்ட அரபிக் கடல்பகுதியில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, “என்ரிகா லாக்ஸி” என்ற இத்தாலி நாட்டு எண்ணெய்ச் சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெலஸ்டின், அஜீஸ்பிங்கு ஆகிய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொடுஞ்செயலுக்காக கொலைகாரர்களைக் கைது செய்து தண்டிக்கவும், கொல்லப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு அக்கப்பல் நிர்வாகத்திடம் நிவாரணம் பெறவும், மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்காத இந்திய அரசு, ஏகாதிபத்தியவாதிகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.

இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இத்துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதால், கடலோரக் காவற்படை அந்தக் கப்பலை கொச்சி துறைமுகத்துக்குக் கொண்டுவந்து, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்ய முயன்ற போது, எச்சரிக்கை செய்தபோதிலும் விலகிச் செல்லாமல் தங்கள் கப்பலை நோக்கி படகு வந்ததால், கடற்கொள்ளையர்கள் என்று கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அக்கப்பலின் தலைமை மாலுமி நியாயவாதம் பேசி கைது நடவடிக்கையைத் தட்டிக் கழித்துள்ளார்.  ஆனால், கப்பலிலிருந்து பைனாகுலர் மூலம் பார்த்தாலே படகில் வருவது மீனவர்களா, அல்லது கடற்கொள்ளையர்களா என்பது தெரிந்துவிடும்.

மேலும், இது எச்சரிக்கைக்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல என்பதை மீனவர்களின் படகில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு பாய்ந்திருப்பதே நிரூபித்துக் காட்டுகிறது. சர்வதேசக் கடல் எல்லையில்தான் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகப் புளுகி, இந்தியச் சட்டத்துக்கு நாங்கள் கட்டுப்பட முடியாது என்று அந்த இத்தாலிக் கப்பலின் தலைமை மாலுமி திமிராகக் கூறியுள்ளார். இவற்றை  நிராகரித்து உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, இந்திய அரசு பணிந்து போய் அக்கப்பலின் பாதுகாப்புப் படைச் சிப்பாய்கள் இருவர் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்தது.

இத்தாலிய தூதரக அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 நாட்களுக்குப் பின்னர்தான், கொலைகாரர்களான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே என்ற இரண்டு பாதுகாப்புப்படை சிப்பாய்களைச் சரணடையுமாறு கேரள போலீசு கோரியது. ஆனாலும்,கெடு முடிந்து 8 மணிநேரத்துக்குப் பின்னர்தான் அவர்களை அக்கப்பலின் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தும்போது இத்தாலிய தூதரக தலைமை அதிகாரியும் பாதுகாப்பு அதிகாரியும் உடன் இருப்பதற்கும் இந்தியா ஒப்புக் கொண்டது. கொச்சி அருகே மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் விருந்தினர் மாளிகையில் வைத்து ராஜமரியாதையுடன் ‘விசாரணை’ நடந்துள்ளது. அதன் பின்னரே அவர்கள் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி டெல்லி வந்த இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு இந்த விவகாரத்தால் பாதிக்கப்படக் கூடாது என்றும், அந்நிய மண்ணில் எங்கள் நாட்டினர் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டால், இத்தாலிய சட்டப்படிதான் விசாரிக்க முடியும் என்றும் எச்சரித்தார். இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், குண்டுகள் முதலானவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தவும் இத்தாலி ஒத்துழைக்கவில்லை. அக்கப்பல் அதிகாரிகள் அவற்றை ஒரு அறையில் வைத்துப் பூட்டி, இத்தாலிய அதிகாரிகளிடம் அல்லது சர்வதேசிய புலனாய்வு அமைப்பினரிடம் மட்டுமே அவற்றை ஒப்படைக்க முடியும் என்று திமிராகக் கூறிவிட்டனர். நீண்ட இழுபறிக்குப் பின்னரே, இந்திய மற்றும் இத்தாலிய அதிகாரிகள் சேர்ந்து விசாரணைக்காக அத்துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டால், உடனடியாகக் கைது செய்யும் இந்திய அரசு, ஏகாதிபத்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் கொலைக்குற்றங்களில் ஈடுபட்டால்கூட கைது செய்து தண்டிக்க முன்வராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய சட்டப்படியே இச்சம்பவத்துக்குத் தீர்வு காணப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ள போதிலும், அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் அடிமையை விஞ்சும் விசுவாசத்துடன் இந்த விவகாரத்தை நீர்த்துப் போக வைக்கும் திசையில்தான் உள்ளன.

அரபிக்கடல் பகுதியில் இதுவரை சோமாலியக் கடற்கொள்ளையர்களின் தாக்குதலே நடந்திருந்தாத நிலையில், சோமாலியக் கொள்ளையர்கள் என்று தவறாகக் கணித்து இத்தாலிய வணிகக் கப்பலின் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்,  ஒருவிதப் பதற்றத்தில்தான் இத்துப்பாக்கிச் சூடு நடந்திருக்குமேயொழிய, சிங்கள ராணுவத்தைப் போல வெறிகொண்டு நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை என்றும் இந்திய ஆட்சியாளர்களின் நோக்கத்துக்கு ஏற்ப  தினமணி தலையங்கம் எழுதுகிறது.  துனா மீன்களுக்கு மிகப்பெரிய வலை விரித்திருக்கும் மீனவர்கள், வர்த்தகக் கப்பல்கள் அந்த வழியில் வரும்போது அவற்றால் தங்கள் வலைகள் சேதமடையும் என்று பயந்து, மீன்பிடி படகுகளைக் குறுக்கே கொண்டுபோய் நிறுத்தி அந்தப் பெரிய கப்பல்களை விலகிப் போகச் செய்வார்கள் என்பதால், ஒரு மீன்பிடிப் படகு தங்களை நோக்கி முன்னேறி வருகிற நிலையில், இத்தாலியக் கப்பலில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது என்று இத்தாலியக் கப்பலின் தாக்குதலுக்கு வக்காலத்து வாங்கி, மீனவர்களின் மீது பழியைப் போடுகிறது.

மீனவர் கொலைதற்போதைய இத்தாலியக் கப்பல் விவகாரம் மட்டுமல்ல; அதற்கு முன்பாக நடந்துள்ள ஏராளமான விவகாரங்களிலும் இந்திய அரசின் அடிமைத்தனமும் ஏகாதிபத்திய விசுவாசமும் நாடெங்கும் நாறிப் போயுள்ளது. 1995 டிசம்பரில் மே.வங்கத்தின் புருலியாவில் இரகசியாக ஆயுதங்களை விமானம் மூலம் இறக்கிய சர்வதேச கிரிமினல் குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரிட்டனின் பீட்டர் பிளீச் மற்றும் 5 லாட்விய நாட்டினர் கைது செய்யப்பட்ட பின்னர்,  ரஷ்ய வல்லரசு மற்றும் பிரிட்டனின் நிர்ப்பந்தங்களால் இக்குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்திய முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ், இந்தியத் தூதரகப் பெண் அதிகாரி உள்ளிட்ட பல பிரபலமான இந்தியர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டபோதும்,  அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் கிரிமினல்களைப் போல கண்காணிக்கப்பட்டபோதும்,  இந்த அவமதிப்புகளுக்கு எதிராக இந்தியா வாய் திறக்கவில்லை. இந்திய அரசு, தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை வெளிக்காட்டியிருப்பதையே, இத்தாலியக் கப்பல் விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. ஏன்யா… இரண்டு மீனவனுங்க உயிர் போச்சுனு இவ்வளவு சீண் போடுரீயே… கோவாவுலேயும், பாண்டிசேரிலேயும் வெளினாட்டு பொண்ணுங்கள நம்ம நாட்டுக்காரன் கற்ப்பழிக்கும் போது யெங்க போனே……

    கடல்ல இதெல்லாம் சாதரணமப்பா….

    • இந்தியன்!ரொம்பநல்லா இருக்கு:உங ராசிவ் இத்தாலியில் “வேலை” முடிந்தபிறகு “கணக்கு” பாத்து காசு கொடுத்திருக்கலாம்!
      தமிழ் இனத்தின் தலையை வாஙிய தறுதலைக்கு வக்காலத்து?

    • //ஏன்யா… இரண்டு மீனவனுங்க உயிர் போச்சுனு இவ்வளவு சீண் போடுரீயே… கோவாவுலேயும், பாண்டிசேரிலேயும் வெளினாட்டு பொண்ணுங்கள நம்ம நாட்டுக்காரன் கற்ப்பழிக்கும் போது யெங்க போனே……

      கடல்ல இதெல்லாம் சாதரணமப்பா….

      //

      நீங்கள் உண்மையான இந்தியன் என்பதை நிறுபித்துவிட்டீர்கள்

  2. இறந்து போன மீனவர்களுக்கு முறையே 3,1 கோடிநட்ட ஈடு கொடுத்தால் இத்தாலிநாட்டுக் கப்பல் அங்கிருந்து போகலாம் என்று கேரள உயர்நீதிமன்றம்

    உத்தரவு இட்டுள்ள்தே அது வழக்கை ஊத்தி மூடும் முயற்சி தானா? இந்தியன் இத்தாலியில் கொலை செய்தால் இந்திய சட்டப்படி விசாரிக்கக் கோரலாமா? இத்தாலிய தூதரக அதிகாரி இந்தியாவும் இத்தாலியும் இணைந்து கொள்ளையர்களை அடக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் கொலையை திசை திருப்ப முயற்சி செய்கிறான். இந்தியா ஒரு சுயசட்டம் உள்ளநாடு கிடையாதா? இந்திய மககள் பாதுகாப்பு இல்லாத அனாதைகள்தானா?

  3. மானமில்லா அரசியல்வாதிகள் மானமுள்ள இந்தியர்களை குழி தோண்டி புதைத்து வருகின்றனர்…..

  4. பிராமீன் பொன்ற கதைகளை எழுதுபவர்கள் மீனவர் படும் பாட்டைப்பற்றி எழுதலாம்…

    நம் மக்களுக்கு நம் கடலிலேயே பாதுகாப்பில்லையா? என்ன கொடுமை…

    • பார்ப்பானை எதாச்சும் சொன்னா கோவம் வருதோ? ஆத்திரக்காரணுக்கு புத்திதானே மட்டு, பார்வையுமா மட்டு?? இதே பதிவுக்கு கீழே தொடர்புடைய பதிவுகள் பகுதியில வினவில் வெளியான மீனவர் வாழ்க்கையை பற்றிய பதிவுகளின் சுட்டிகள் இருக்கே, அதை பார்க்காமல் என்ன இது வெட்டிப்பேச்சு?

      • மன்னிக்கவும்…கண்டிப்பாகப் படிக்கிறேன்…

        பார்ப்பான் மட்டும் அல்ல…எந்த ஜாதியைப்பொதுமைப்படுத்தினாலும் இப்படித்தான் பின்னூட்டம் இடுவேன்…

        • ஆக, கத்தி எவன் வச்சிருந்தாலும் நம்ம ‘வீரன்’ அவனை கைது செய்து தூக்கிலிட்டு விடுவார்… அது ரவுடியாக இருந்தாலும் சரி, டாக்டராக இருந்தாலும் சரி…!!! சூப்பர் கண்ணோட்டமய்யா உமது ….!!!

            • சுப்ரமணிக்கு ஒரு தகவல்….
              நீங்க ஒரு தகிடு தித்தம் ஆளுன்னு எப்போ தெரிஞ்சிதோ, அப்பா இருந்து நான் உங்களுக்கு பதில் கமெண்ட்டு போடுவதையே நிறுத்திட்டேன்.

              • cha,

                enakku romba varutham.neenga ippo pinnootam podalana,yen gadi enna aagum.soru,thanni eranguma? thookam varuma,ippadi enna punpadithiteengale,indha sogathula iruntha naan eppaid meela poren? sari vidunga,engirunthalum vaazhga.

          • கத்தி வெச்சிருந்தா இல்ல…
            குத்தினா…

            பொன்ராஜ் – புன்ராஜ்…

            பிறப்பின் அடிப்படையில் யாரைப்பொதுமைப்படுத்தினாலும் அது பார்ப்பனீயம் தான்…

            அதை பிராமனன் செய்தாலும் கம்யூனிச்ட் செய்தாலும் இல்ல மற்ற பொட்டையர்கள் செய்தாலும் தப்பு தான்…

            • அதென்ன பொட்டையர்கள் ? ‘பொட்டை’ (பெண்மை) என்பது இழிவா? பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பாக்காத மூஞ்சிய காட்டுங்க சார்.

              ‘பிராமீன்’ கதை தன்னை ‘பிராமீனாக’ நினைத்துக் கொள்பவனைக் கண்டிக்கிறது. பார்ப்பானாகவே பிறந்திருந்தாலும் தன்னை சாதியற்றவனாக நினைத்துக் கொள்பவனுக்கு அதில் என்ன பிரச்சினை?

              • Enakku romba pudicha kadai,eppadi aazh manasu veruppai common senseu nenaikkira groupunnu neengale suya niroopanam panniteenga,indha kadhaikku competitionna adhu kalaingar thiraikadhai ezhudhi ramanarayanan direct panra padam thaan.

              • வணக்கம் பொலி பகுத்தறிவாளரே….

                “பிராமீனாக நினைத்த்துக்கொள்பவனை” – இந்த உட்டாலக்கிடி எல்லாம் இங்க வேனாம்…

                பொட்டை – கொழைத்தனம் என்பது வழக்குத்தமிழ்…நான் இந்த வார்த்தைக்கு பதில் கொழைத்தனம் என்ற வார்த்தையை உபயோகித்திருக்கலாம்…

                தமிழகத்தில் பலர்…சமூக சீர்கேட்டிற்க்கும் ஜாதி வெறி கொடுமைக்கும் பொறுப்பேற்காமல் பிராமனர் பின்னல் ஒளிந்து கொள்ளும் ‘கொழைகளாகவே’ உள்ளனர்…

                • //சமூக சீர்கேட்டிற்க்கும் ஜாதி வெறி கொடுமைக்கும் பொறுப்பேற்காமல் பிராமனர் பின்னல் ஒளிந்து கொள்ளும் ‘கொழைகளாகவே’ உள்ளனர்…//

                  சாதி என்பது யாரால், யாரின் நன்மைக்காக, எப்போது உருவாக்கபப் பட்டது என்று சொன்னால் தேவலை? அந்த கட்டமைப்பு இப்போது யாருக்கு பயன் படுகிறது என்று அனைவருக்கும் தெரியும். அந்த கட்டமைப்பை உருவாக்கியவனுக்கும், அதனால் பலன் அடைந்து கொண்டு இருப்பவனுக்கும் ‘சாதி’ ஒழிப்பை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது.

                • //பிறப்பின் அடிப்படையில் யாரைப்பொதுமைப்படுத்தினாலும் அது பார்ப்பனீயம் தான்…//

                  வீரன் — மோரன்

                  இது ஒன்றும் வினவின் கடைசி கட்டுரை அல்லவே. பார்ப்போம். உங்களது என்ன ஓட்டம் சாதி ஒழிப்பு பற்றியா, அல்லது வேறு எதாவதா என்று தெரியாமலா போய்விடும்.

              • இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன்…

                இந்த பிரமீன் கதையை இப்படி மாற்றிப்பாருங்கள்….

                மீன் = புழு, கரப்பான் பூச்சி ரோச்ட் (சீனக்காரனுக்கு இது சாதாரன உனவு)
                மாமி / மாமா = எதோ ஒரு ஆதிக்க ஜாதியைச்சேர்ந்தவர்…

                ஆனால்..இங்குள்ள பல போலிகள் (போலி சாமியார் போலவே போலி பகுத்தறிவாளர், போலி கம்யூனிச்ட், போலி ஜாதி மறுப்பாளர்…) ஜாதியை ஒழிக்கிறேன், என்று 10 பைசா பெறாத வாதங்களை வைத்தே வாதிடுவர்…

                இவர்கள் இதில் ‘அற்புத சுகம்’ காணுவதில் வியப்பில்லை…

            • தப்பு செஞ்சவனை விட, தப்பு செய்ய தூண்டினவனுக்கு தான் அதிக தண்டனையாம்… இந்திய அரசியல் சட்டம் சொல்லுது….!!! வரனாசிரமம், நான்கு வர்ணம், இந்து மதம்… இதெல்லாம் இல்லாம இருந்தா எதுக்கு கம்யுனிஸ்ட் அதை பத்தி பேச போறான்?

              • உங்களது லாஜிக் அப்படியே புல்லரிக்கிறது…
                பிராமனர்களால் அறிவு சாரா மூடநம்பிக்கைப்பழக்கத்தினால் இருன்டநம் சமூகம் இன்று பிராமன எதிர்ப்பாளர்களின் அறிவு சாரா வாதங்களினால் இருன்டுள்ளது…

                இப்படி ஜாதியை ஒழிக்கவே முடியாது…

                //தப்பு செஞ்சவனை விட, தப்பு செய்ய தூண்டினவனுக்கு தான் அதிக தண்டனையாம்… இந்திய அரசியல் சட்டம் சொல்லுது//

                அது என்ன சட்டம்? கொஞ்சம் சொல்லுங்கள்? இ.பி.கோ ??

                இன்றுள்ள ஆதிக்க ஜாதிக்காரர்களை ஜாதி கொடுமை செய்யத்தூண்டும் ஜாதியைக்கண்டுபிடித்த எம லோகத்தில் உள்ள முதல் பிராமனும்…பிராமனர் இல்லாத ஊரில்…மற்ற ஊர்களில் இருந்த்து ஆதிக்க ஜாதியைச்சேர்ந்த்த கை சூப்பும் அப்பாவிகளின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து கொடுமை செய்யும் பிராமனர்களும் வன்மையாகக்கன்டிக்கப்பட / தன்டிக்கப்பட வேண்டியவர்கள்!!!

                • டபாய்க்கிறதெல்லாம் இருக்கட்டும் பாஸ்… இன்னும் இந்த கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே… // (பிறப்பின் அடிப்படையில் மனிதனை கூறுபோடும்) சாதியை யார் கண்டுபிடிச்சா? தமிழரின் வாழ்வில் சாதி பிராமணர்களுக்கு முன்பாகவே இருந்தது என்று நீங்கள் புளுகுவீரானால் அதற்கு தகுந்த ஆதரங்களை காட்டி விளக்கலாமே? //

                    • நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்துகொள்கிறேன். அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம். இந்த கேள்வி இன்னும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறது. // (பிறப்பின் அடிப்படையில் மனிதனை கூறுபோடும்) சாதியை யார் கண்டுபிடிச்சா? தமிழரின் வாழ்வில் சாதி பிராமணர்களுக்கு முன்பாகவே இருந்தது என்று நீங்கள் புளுகுவீரானால் அதற்கு தகுந்த ஆதரங்களை காட்டி விளக்கலாமே? //

                  • சாதிகளை, பேதங்களை எதன் அடிப்படையிலும் தன்னிச்சையாக உருவாக்கும் வலிமை எண்ணிக்கையில் குறைந்த பிராமணர்களுக்கு இருந்ததில்லை.

                    பழைய மனுதர்மச் சட்டங்களாக இருந்தாலும், இன்றைய மனித தர்மச் சட்டங்களாக இருந்தாலும்

                    ஏட்டளவில் இல்லாமல் செயல்படுத்தப் படுவதும், புறக்கணிக்கப் படுவதும் அந்தந்தக் கால ஆட்சியாளர்களின், அதிகார இயந்திரத்தின், சமூகத்தின் ஆதிக்க வலிமையுள்ளோரின் கூட்டுமுயற்சியும், முனைப்பும், ’சாதக/பாதகமான’ பலாபலன்களை நோக்குதலும் இல்லாமல் சாத்தியமில்லை.

                    • // (பிறப்பின் அடிப்படையில் மனிதனை கூறுபோடும்) சாதியை யார் கண்டுபிடிச்சா? தமிழரின் வாழ்வில் சாதி பிராமணர்களுக்கு முன்பாகவே இருந்தது என்று நீங்கள் புளுகுவீரானால் அதற்கு தகுந்த ஆதரங்களை காட்டி விளக்கலாமே? //

                      எனக்கு சத்தியமாகத்தெரியாது…
                      ஆனால் பிராமனர்களால் மட்டுமே அதை செயல் படுத்தியிருக்க முடியாது…

                      மேலும்…செத்த பாம்பை அடிப்பது வெட்டிபவேலை…

                      அற்புத சுகம் பெற வேண்டுமானால் அப்படி செய்யலாம்….

                    • //நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்துகொள்கிறேன். அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம்//

                      அவர் அவர் யார் என்று அவர் அவர் தானே முடிவு செய்து இருக்கவேண்டும்…

                      எவனோ சொன்னான்னு கேட்டா?

                      தனி மனிதனுக்கு மூளையே இல்லை என்றால் நீங்கள் சொல்வதில் எதோ அர்த்தம் இருக்கல்லாம்…

                      மனுன்னு ஒத்தன் சொன்னானாம் அதை மனம் முட்டாள் மன்னனும் மக்களும் கேட்டார்களாம்…

Leave a Reply to ம பொன்ராஜ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க