privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்லீனா மணிமேகலை பிடிபட்டார்!

லீனா மணிமேகலை பிடிபட்டார்!

-

காலச்சுவடு ஜூன் – 2012 இதழில் அதன் ஆசிரியர் கண்ணன் பத்தியொன்றில் லீனா மணிமேகலையைப் பற்றி “புரட்சித் தலைவி” எனும் தலைப்பில் எழுதியிருக்கிறார். முதலில் அதை படியுங்கள்,

______________________________________________

புரட்சித் தலைவி

டாடா ஸ்டீல் நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களுக்கு ஆதிவாசிகளிடமிருந்து பல இடங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.

1907இல் சாக்சி – காலிமட் பகுதியில் 24 கிராமங்கள் அழிக்கப்பட்டு ஜாம்ஷெட்பூர் நகரமும் டாடா ஸ்டீல் தொழிற்கூடமும் உருவாயின. தற்போது ஒரிசா மாநிலத்தில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் கலிங்கா நகரில் ஏற்பட இருக்கும் இரும்புத் தொழிற்கூடத் திட்டமும் ஜார்கண்ட் மாநிலத்தில் சாரைக் கேலா – கார்சாவான் மாவட்டத்தில் டொண்டோபாசியில் ஏற்பட இருக்கும் டாடா ஸ்டீலின் கிரீன்பீல்ட்ஸ் திட்டமும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் மாவட்டத்தில் டாடா ஸ்டீல் தொழிற்கூடத் திட்டமும் ஆதிவாசிகளால் வன்மையாக எதிர்க்கப்படுகின்றன.

டாடா போன்ற ஒரு கார்ப்போரேட் நிறுவனம் இவ்வாறு எதிர்ப்புகளைச் சந்திக்கும்போது, எதிர்ப்பின் காரணங்களை, மக்கள் பிரச்சினைகளை, அவர்கள் வாழ்வாதாரங்கள், வசிப்பிடங்கள் அழிக்கப்படுவதைக் கருதுவதில்லை. மாறாகத் தனது பிம்பம் போராட்டங்களால் சிதைக்கப்படுவதைப் பற்றிக் கவலை கொள்கிறது. தேசத்திற்குச் சேவைசெய்யும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, உயரிய மதிப்பீடுகளைப் பின்பற்றும் நிறுவனம் டாடா என்ற காலங்காலமாக உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் மாசுபடுவதைத் தவிர்க்க விரும்புகிறது. இதற்குச் சிறந்த வழிமுறை விளம்பரப் படங்களைத் தயாரிப்பது. இதில் இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று, நடுத்தர வர்க்கத்திடம் டாடா நிறுவனம் பற்றிய உன்னதக் கருத்தாக்கத்தைக் கட்டமைப்பது. இரண்டு, விளம்பரங்கள் வழி ஊடகங்களுக்குப் பெருந்தொகையைக் கொடுத்து போராட்டங்கள் செய்தியாகாமல் தடுப்பது. விளம்பரம் கையூட்டாக மாறும் சாகசம். மேற்படி ஆதிவாசியின் போராட்டங்களுக்கு எதிர்வினையாகப் பல விளம்பரங்களை டாடா நிறுவனம் தயாரிக்க முடிவுசெய்து அப்பணியை ஒகில்வி & மாத்தர் என்ற 120 நாடுகளில் அலுவலகங்களுடைய பன்னாட்டு விளம்பர நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அவர்கள் தயாரித்த விளம்பரங்களில் ஒன்றின் தலைப்பு ‘தேஜஸ்வினி.’ ஆதிவாசிப் பெண்களின் முன்னேற்றத்திற்காக டாடா ஸ்டீல் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட அமைப்பு ‘தேஜஸ்வினி’. பிரகாசம் அல்லது ஒளிமயம் என்று பொருள்.

2006 ஜனவரி 2இல் கலிங்க நகரில் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய ஆதிவாசிகள் 14 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். 31 பேர் படுகாயமடைந்தனர். டாடாவின் கூலிப்படையும் போராடிய ஆதிவாசிகளைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட நான்கு உடல்களின் கைகள் மணிகட்டிற்கு மேல் வெட்டப்பட்டு இருந்தன. இந்தியாவின் கார்ப்பொரேட் – அதிகார வர்க்க – ஊடக ஊடாடல் பற்றிப் பல புரிதல்களை நமக்குத் தந்த அரிய ஆவணம் நீரா ராடியா ஒலிப்பதிவுகள். இதில் பத்திரிகையாளர் வீர் சிங்வியிடம் டாடாவின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகப் பணிபுரிந்த ராடியா, கலிங்க நகர் ‘மாவோயிஸ்டுக’ளுக்கு எதிரான தனது போராட்டம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆதிவாசிகளின் எதிர்ப்பை மாவோயிஸ்டு பிரச்சினையுடன் இணைத்திட ஊடகங்கள் வழி டாடா ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டதற்கு இது சான்றாகிறது. கலிங்க நகரில் போராடும் மக்கள் துணை ராணுவத்தினர் மீது மக்கள் சில கற்களை வீசியதும் அவர்கள் அம்மக்களின் தானியங்களை அழித்து, பாத்திரங்களை உடைத்து, நீரில் மண்ணெண்ணெயைக் கலந்த அராஜகத்தையும் இந்த ஒளிப்பதிவில் பாருங்கள்

ஆதிவாசிகளுக்கு எதிரான தனது வன்செயல்பாடுகள் ஊடகங்கள் வழி வெளிக்குத் தெரியாமல் டாடா தடுத்து நிறுத்தினாலும் மக்கள் தாங்களே எடுத்த பதிவுகளை you-tube இல் பகிரங்கப்படுத்தினார்கள். அப்பதிவுகளை ( http://www.youtube.com/samadrusti ) இங்கே காணலாம்.

ஆதிவாசிகளின் வாழ்விடங்களை அழிக்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வரும் டாடா ஸ்டீல் தன்மீதான கறையை நீக்க உருவாக்கிய ஆதிவாசிப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்தான் ‘தேஜஸ்வினி.’ தேஜஸ்வினி எனும் விளம்பரப் படம் அத்திட்டத்தின் சிறப்பை முன்னிறுத்துவதாக உள்ளது. அன்றாட வேலைகளிலும் நடனமாடியும் ‘சாதாரண’மாக வாழ்ந்த ஆதிவாசிப் பெண் ஒருவர் டாடா ஸ்டீலில் சேர்ந்த பிறகு பேண்ட் சட்டை அணிந்து, ஸ்கூட்டர் ஓட்டி, வாகன ஓட்டுநராகி வாழ்க்கையில் முன்னேறிச் சமூகத்தின் மதிப்பைப் பெறுவதாக விளம்பரக் ‘கதை’ அமைந்துள்ளது. டாடா ஸ்டீல் ஆதிவாசிப் பெண்ணுக்கு உதவுவதாக மட்டும் காட்டுவது இன்று ‘சரியான அரசியல்’ அல்ல. ஆதிவாசிப் பெண்ணும் டாடாவுக்குப் பங்களிப்பதாகக் காட்ட வேண்டும். ஆகவே விளம்பரக் கதையின்படி இந்தப் பெண்ணிடமிருந்து டாடா ஸ்டீலும் கற்றுக்கொள்கிறது. அது ‘துணிச்ச’லைக் கற்கிறது. இது விளம்பரம்.

டாடாவிடம் ஆதிவாசிகளின் வாழ்க்கை முறையை, அவர்களின் சுற்றுச்சூழலை அழிக்கும் பலப்பல திட்டங்கள். அத்திட்டங்களின் ரத்தக் கறையை மூடிமறைக்க ‘தேஜஸ்வினி’ என்று ஒரு நலத்திட்டம். அந்நலத்திட்டத்திற்கு ஒரு விளம்பரம். இந்த விளம்பரத்தைச் ‘சரியான அரசியல்’ கூறுகளுடன் இயக்கப் பொருத்தமான நபராக யார் இருக்க முடியும்? களப் பணியாளர், போராளி, பெண்ணியவாதி போன்ற பிம்பங்களை உடைய ஒருவர்தான் சரியான தேர்வாக இருக்கும். அத்தோடு நாய் விற்ற காசு குரைக்காது என்ற நெஞ்சுறுதி கொண்டவராகவும் இருக்க வேண்டும். டாடா ஸ்டீலும் ஒகில்வியும் சரியான நபரைத் தேர்வுசெய்தன. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர், இடதுசாரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆவணப்பட இயக்குநர், கிட்டத்தட்ட நக்சலைட் லீனா மணிமேகலை. இவ்விளம்பரப் படத்தை இங்கே பார்த்து ரசிக்கலாம். (இத்தகவலை கேம்பெயின் இந்தியாவும் உறுதி செய்திருக்கிறது -வினவு)

‘ஆதிவாசிப் பெண்களை மேம்படுத்தும் நிறுவனம் டாடா’ என்று காட்டிடும் இந்தப் பிரச்சாரப்படத்தை இயக்கிட எத்தனை லட்சம் கிடைத்தது லீனா?

இது வெறும் விளம்பரம்தானே என்று நீங்கள் நினைக்கலாம். விளம்பரத்தின் கடைசி வாசகம் இது: “இது விளம்பரம் அல்ல, வாழ்க்கை.”

– நன்றி காலச்சுவடு
_____________________________________

படித்து விட்டீர்களா?

லீனா-மணிமேகலை
லீனா மணிமேகலை

சீமாட்டி லீனா மணிமேகலை மார்க்சியத்தையும், மார்க்சிய ஆசான்களையும், பொதுவில் அனைத்து வகை அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடும் போராளிகளையும், மக்களையும் கொச்சைப்படுத்தி எழுதிய கவிஜைகளை அம்பலப்படுத்தியும், அவரது “செங்கடல்” படப்படிப்பின் போது உதவி இயக்குநர் தீபக்கை, ஷோபா சக்தியை வைத்து அடித்து அவமானப்படுத்தியதை உலகறியச் செய்தும், பின்னர் லீனாவுக்காக அ.மார்க்ஸ் ஏற்பாடு செய்த கூட்டத்தில் எமது தோழர்கள் கேள்வி கேட்டதால் வெளியேற்றப்பட்டது குறித்தும் வினவில் எழுதியிருக்கிறோம்.

எனினும் ஒரு சில ‘அறிவாளிகள்’, ‘நடுநிலையாளர்கள்’ லீனாவுக்காக நீர்த்துப் போன வார்த்தைகளால் வக்காலத்து வாங்கி வந்தனர். அது குறித்தும் வினவில் நீண்ட விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. சீமாட்டியின் பெண்ணுரிமை போராளி வேடத்தில் இத்தகைய சிரிப்பு போலீஸ்கள் அடித்துச் செல்லப்பட்டது ஆச்சரியமல்ல. இத்தனைக்கும் அவர் சில ஆவணப்படங்கள் எடுத்தார், சில கவிதைகள் எழுதியிருக்கிறார், ஆபத்தில்லாத முறையில் சில பல குட்டி ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருக்கிறார், அந்த பங்கேற்றலில் தனது பங்கை அதிகமாக காட்டி ஏமாற்றியிருக்கிறார் (இது அவரது சக பெண் கவிஞர்களது குற்றச்சாட்டு), ஈழத்தமிழர்களை காசு வாங்கி ஏமாற்றியிருக்கிறார் (இதுவும் ஏமாந்த ஈழத்தமிழர்களின் குற்றச்சாட்டு) தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு உயரம் குறைந்த இடமென்றாலும் பரவாயில்லை என்று முயற்சி செய்திருக்கிறார்…. இவைதான் இந்த சீமாட்டியின் ஆளுமை அடையாளங்கள்.

இவற்றினைச் சுருக்கிப் பார்த்தால் காரியவாதமும், பிழைப்புவாதமும், சுயநலவாதமும், விளம்பரவாதமும்தான் சீமாட்டியின் சாரம். இந்தப் பிழைப்பினை வெற்றிகரமாக ஓட்டவே அவர் முற்போக்கு விசயங்கள் கொண்ட, குறிப்பாக பெண்ணுரிமை போராளியாக, அதுவும் கவிதைகள் எனும் சுலபமான வழி மூலம் முன்னிறுத்திக் கொண்டார். எனினும் அந்த முன்னிறுத்தலிலேயே அவரது உட்கிடக்கை அதாவது மேட்டிமைத்தனம் கலந்த மனித குல விரோதம் வெளிப்பட்டிருக்கிறது என்பதுதான் சீமாட்டி எழுதிய கவிதைகள் குறித்த எமது விமரிசனம். இரண்டும் வேறு வேறு அல்ல, ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்தாம்.

அதற்கு வலு சேர்க்கும் விதமாகவே லீனாவின் இந்த தேஜஸ்வினி எனும் கார்ப்பரேட் கைக்கூலித்தனம் வெளிப்பட்டிருக்கிறது. தேஜஸ்வினி என்றால் ஒளிமயமாம். இந்த ஒளிமயத்தின் உதவியால் சீமாட்டியின் இருண்ட பக்கம் தாரை தப்பட்டைகளுடன் தெரிய வந்திருக்கிறது.

லீனா-மணிமேகலை-காலச்சுவடு-
நன்றி காலச்சுவடு

பழங்குடி மக்களை அப்புறப்படுத்தி, சில பல இலட்சங்களை வாங்கிக் கொண்டு டாடாவின் பாகாசுர சுரண்டலுக்கு ஒரு மனித நேய முகமூடியை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்கு ஒரு பாசிச மனம் வேண்டும். அந்த வகையில் சீமாட்டி தான் ஒரு பாசிஸ்ட் என்பதை உலகறியச் செய்திருக்கிறார். தண்டகராண்யாவிலும், ஒரிசாவிலும், ஜார்க்கண்டிலும் கொல்லப்படும் ஒவ்வொரு ஆதிவாதி மக்களின் இரத்தத்தை குடிக்கும் நரவெறிக்கும் சீமாட்டியின் நடத்தைக்கும் வேறுபாடில்லை.

அவரது கவிமனமும், பெண்ணுரிமை போராளி துடிப்பும், ஆவணப்பட அனுபவமும் ஒன்று சேர்ந்து டாடவின் தேஜஸ்வினி விளம்பர படையெடுப்பிற்கு பயன்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முற்போக்கு வேடதாரியாக அறியப்பட்ட ஒருவர், டாடாவை எதிர்க்கும் முற்போக்கு சக்திகளை வேரறுக்கப் பயன்படுகிறார் என்றால் இந்த இழிவினை என்னவென்று அழைப்பது?

இதில் சீமாட்டி லீனாவின் ஞான குரு அய்யா அ.மார்க்ஸ் சட்டீஸ்கரெல்லாம் போய் வந்தவர், இனி என்ன சொல்லி நியாயப்படுத்துவார்? தொழில் வேறு, கொள்கை வேறு என்று சப்பைக் கட்டு கட்டுவாரா? முடியாது என்றால் லீனாவின் வேடத்தை அம்பலப்படுத்திய எமது தோழர்களை வெளியேற்றினாரே அதற்கு என்ன பதில்? தொழிலும், கலை மனமும் இறுதியில் பழங்குடி மக்களை கொன்று போடுவதற்குத்தானே பயன்படுகிறது? அறிவாளிகளின் அந்தரங்கம் மட்டுமல்ல அவர்களது வெளிப்படையான வாழ்க்கையே இப்படித்தான் ஒரு நாள் நாறியே தீரும். போக, லீனாவுக்காக சப்பைக்கட்டு கட்டிய காணாமல் போன ‘முற்போக்காளர்கள்’, கொட்டை போட்ட ‘பெருச்சாளிகள்’ , போலி கம்யூனிஸ்டு ‘தோழர்கள்’ மற்றும் பெயர் தெரியாத ‘இலக்கியவாதிகள்’ அனைவரும் இப்போது என்ன சொல்வார்கள? ஒன்றும் சொல்லவோ, செய்யவோ முடியவில்லை என்றால் டாடாவின் கைக்கூலி லீனா மணிமேகலையின் அல்லக்கைகள் என்று வரலாற்றில் அழைக்கப்படுவீர்கள். சீமாட்டி நடத்தும் கேளிக்கை விருந்துகளில் கலந்து கொண்டு டாடாவின் காசை குடித்தவர்கள் என்றும் அழைக்கப்படலாம். மொத்தத்தில் அல்லக்கை பட்டம் உறுதி. முடிவு செய்யுங்கள்.

காலச்சுவடு இந்த அம்பலப்படுத்தலை உலகறியச் செய்ததன் காரணம் என்ன? சீமாட்டி லீனா, அறிஞரய்யா அ.மார்க்ஸ் அணியைச் சேர்ந்தவர். அ.மார்க்ஸ் கும்பலுக்கும், காலச்சுவடுக்கும் ஒத்துக் கொள்ளாது. இதில் பெரிய கொள்கை பிரச்சினை எதுவும் இல்லை என்பதோடு எல்லா அறிஞர்கள், இலக்கியவாதிகளிடம் நீக்கமற நிரம்பியிருக்கும் ஈகோ ஃபேக்டரிதான் மூலம். ஆனால் அதற்கு கொள்கை என்ற பெயரில் ஏதாவது சப்பைக் கட்டு கட்டுவார்கள். எனினும் இதில் அ.மார்க்ஸ் அணி காலச்சுவடு அணியிடம் நிறையவே தோற்றிருக்கிறது. அ.மார்க்ஸின் வலது கை, இடது கை என்று அறியப்பட்ட இரவிக்குமார், பொ.வேல்சாமி போன்றோரே காலச்சுவடு அணியில் சேர்ந்து விட்ட பிறகு அறிஞர் சில சில்லறைகளை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறார்.

டாடாவிடம் காசு வாங்கியதை அம்பலப்படுத்தியிருக்கும் காலச்சுவடு கண்ணன் தனது முகத்தையும் கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் ஆகப் பிற்போக்கான தினமலரிடம் இருந்து இதுவரை காலச்சவடு பெற்ற உதவித் தொகை மட்டும் போற்றத் தக்கதா? இல்லை  ஸ்ரீராம் சிட் பண்ட்டின் பணம் மட்டும் புனிதமானதா? சீமாட்டி டாடாவிடம் பெரிய தொகை வாங்கினார், நாங்கள் சிறிய தொகை என்றெல்லாம் சமாளிக்க முடியாது. தொகை அல்ல பிரச்சினை, தொகையின் பின்னே உள்ள ‘அறம்’தான் முக்கியம்.

ஆளும் வர்க்கங்களின் ஊழல், முதலாளிகளுக்கிடையே உள்ள போட்டியினால் வரும் என்பதற்கு நீரா ராடியா விவாகாரம் ஒரு சான்று. டாடவைப் போட்டுக் கொடுக்க விரும்பிய போட்டி முதலாளிகளின் கைங்கரியத்தால் அந்த ஊழல் வெளிவந்திருக்கிறது. அது போல இலக்கியவாதிகளின் கைக்கூலித்தனத்தையும் அவர்களுக்கிடையே நிலவும் இத்தகைய போட்டிகள்தான் வெளிக் கொண்டு வருகிறது. ஒருவேளை அ.மார்க்ஸ் அணிக்கும், காலச்சுவடுக்கும் தோழமையான உறவிருந்தால் சீமாட்டியின் இந்த ஊழல் வெளிவந்திருக்காது. அதே நேரம் இலக்கியவாதிகள், அறிஞர் பெருமக்கள் எவரும் எப்போதும் ஓரணியாக இருப்பது ‘இயற்கை’க்கு விரோதமானது. முதலாளிகளுக்கும் அதே விதிதான்.

எது எப்படியோ இனி சீமாட்டியை நாம்  கார்ப்பரேட் கைக்கூலி என்று அழைப்பதோடு கூடுதலாக பெண்ணுரிமைப் போராளி   என்றும் அழைத்துக் கொள்ளலாம்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. இதில் பெரிய கொள்கை பிரச்சினை எதுவும் இல்லை என்பதோடு எல்லா அறிஞர்கள், இலக்கியவாதிகளிடம் நீக்கமற நிரம்பியிருக்கும் ஈகோ ஃபேக்டரிதான் மூலம்.///ஓ…அப்ப வினவுக்கு ஈகோவே கிடையாது போலிருக்கு….அடடா

    • முற்போக்கு கம்பெனி என்று சொல்லிக்கொண்டு கார்ப்பரேட் கம்பெனிக்கு கைக்கூலி வேலை செய்யும் லீனா மேடத்தை டர்ராக்கி தொங்க விட்டிருக்கும் பதிவில் வந்து அமார்க்ஸ் மாதிரி சம்பந்தமற்ற பிரச்சினையை ஏன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

      நீரா ராடியா மாதிரி லீனா மேடமும் டாட்டாவுக்கு புரோக்கர் வேலை செய்திருப்பது இப்போது தமிழகம் முழுவதும் நாறி நாற்றமெடுத்துக்கொண்டிருக்கிறது, அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன இந்தியன் ?

  2. இதனால உலகத்தில் உள்ள அனைவருக்கும் சொல்வது என்னவனில்நான் சொல்வது மட்டுமே 100% சரி, இந்த உலகத்தில்நான் மட்டுமேநல்லவன் மற்ற அனைவெரும் கெட்டவர்கள்..

    இப்படிக்கு,

    ரொம்பநல்லவன்,
    வினவு

    • அட விடு மச்சி ஒனக்கு சப்போர்ட் பன்ன நான் இருக்கேன்ல?

      இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பதென்னவென்றால், கர்நாடக சட்டசபையில் பிட்டு ஓட்டிய பி.ஜே.பிகாரர்களும், குஜராத் சட்டசபையில் குஜாலா படம் பார்த்த பி.ஜே.பிகாரர்களும், மேலும் பல்வேறு கள்ளத் தொடுப்புகளை வைத்துக் கொண்டு சந்நியாசிகளாய்த் திரியும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளும் – சரி சரி – கூடவே நம்ம பைய்யாவும் “ரெம்ப நல்லவய்ங்க”.

      இந்த சப்போர்ட் போதுமா பைய்யா?

      • அன்னே மக்கு மன்னாரன்னே…உங்க அறிவும் தெளிவும் வினவின் சிஸ்யபிள்ளை என்பதினை தெளிவாகக்காட்டிக்கொடுக்கிறது…இந்த சன்னியாசிகளுக்கெல்லாம் சன்னியாசி நித்திக்கு ஆதாரவா 5 கட்டுரை எழுதுனது நாங்களா இல்ல வினவா?

        தம்பி நித்திக்கு பிடிவாரண்ட் 2 தடவ கொடுத்ததே பிஜேபி தான் மக்மன்..

        அவன் ஒரு போலீன்னு தெரிந்ததும் அவன் எதித்ததே உன்மையான இந்துக்கள் தான்..

        எங்கள வெறுப்பேத்துரதுக்காக வினவில் 5 கட்டுரைகள் அவனுக்கு ஆதரவாக…அப்பவேநான் கமெண்ட் போட்டேன் ..பாரு அவன் மதுரைய விட்டு எப்படி ஓடுரான் என்று…

        • அய்யய்யோ அப்ப “இடி”யூரப்பவுக்கு பயந்துதான் நித்தி மதுரையே வந்தாரா… நித்தி கட்டுரையை பற்றிய “கருத்தில்” இருந்தே தெரியும் மக்கு மன்னாரு தி கிரேட்டு ப்ப்ப்ப்பீயானு…. அது சரி ரொம்ப நாளா ஆளையே காணல எங்க பெல்லாரி டூரா?

          • கருப்பன், காலையிலெ எழுந்து பேப்பர் படி, இப்ப அங்க எடி இல்ல சதானந்த கவுடரு காரு…முந்தானேத்து காலையிலநித்தி யோட ஆசிரமத்திற்க்கு சீல் வைத்து விட்டுநித்தியை இன்னும் இரண்டே நாளீல் பிடிப்போம் என்று சொன்னது சாத்சாத் கர்னாடக முதல்வரே…

            • அது சரிண்ணே, நித்திமேல கம்ப்ளைண்ட் குடுத்து இத்தினி நாளா உங்க கவுடா எந்த ” ஆணியை” புடுங்கிகிட்டு இருந்தாரூ… எனி ஸ்டார்ட்டிங் பபிராப்ளம்…

              • இந்தக்கரப்பானுக்கு ஆதியிலிருந்து விளக்கினாலும் புரியாது…நித்திமேல கம்ப்ளைண்ட் குடுத்து 3நாளுக்கு முன்…காரணம் – ஆர்த்தி ராவ் என்னும் நித்தியின் எக்ஸ் சிஸ்யகோடி ஒன்று ஒரு கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நித்தி தம்மை பலமுறை சீரழித்ததாக பேட்டி கொடுத்தாள், அதற்கு விளக்கும் கொடுக்க நம்ம போலி சாமி பெங்களூர் போய் ஒரு பிரஸ் மீட் அரேஞ் செய்தார், அதில் ஒரு கன்னடா பிரஸ் காரன் நித்திக்கெதிராக பேசிநித்தியை வெறுப்பேத்த அதுக்கு நித்தி தனது சிஸ்யகோடிகளை வைத்து அவனைத் தாக்க…..ஆரம்பித்து விட்டது பிரச்சனை…னித்தி மேல பிடிவாரண்ட் போட்டு 2நாளுளே தல சரண்டர் ஆயிடுத்து…

                • அண்ணே ப்பிய்யாண்ணே… அப்படினா மூனு நாளைக்கு முன்னாடிதான் நித்தி போலி சாமியார். ஆக இந்த ரெண்டு வருசமா உங்க கருத்துபடியும் உங்க கவுடா கருத்துபடியும் ” அவரு ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு” அதான் இதுவரை எந்த “ஆக்க்ஷனும்” எடுக்கல…… சூப்பரு……முதல்ல போய் உங்களுக்கு இருக்கும் செலக்டிவு என்னமோ அம்முனீசியாவாமே அதுக்கு போயி மதுர ஆதினத்துகிட்ட துன்னூரு வாங்கிக்கங்க…..

        • ப்பியானே அப்படியே ஊத்தவாய் சங்கரனுக்கும் ஒரு வாரண்ட் குடுக்க சொல்லுங்கனே? ஆனா டம்மியால்ல….

        • அறிவாளிப் பையா, நித்தி தொடர்பதிவை நித்திக்கு ஆதரவானது என்று புரிந்து கொண்ட இரண்டாவது ஜீவனை இன்று தான் சந்திக்கிறேன்.

          அது சரி, யாரு அந்த முதல் ஜீவன் என்று கேட்கிறீர்களா? அதை மிஸ்டர் குயாதியிடம் கேட்டால் சொல்வார் 😉

          அது கிடக்கட்டும்,

          நித்திக்கு பிடிவாரண்டு கொடுத்ததுக்கு வேற காரணம். பிட்டு படத்தை டைரக்டா தராம நக்கீரன்ட்ட காசு குடுத்து வாங்க வச்சிட்டானேன்ற கடுப்பு. ஏன்னா, உங்க ஆர்.எஸ்.எஸ் ஆளுங்க பிட்டு படம் பாக்கறதுல கொலை வெறியனுகளாச்சே.

      • விடுங்க மன்னாரு ப்பியாவின் யோக்கியதைதான் நாறு நாறுனு நாறுதே அப்புறம் என்ன இவரு வினவுவுக்கு சர்ட்டிபிகேட் கொடுக்குறாராம். அய்யோ அய்யோ?

    • உங்க பிரச்சினை என்னன்னே புரியல பைய்யா, நீங்க கட்டுரையை படிச்சீங்களா இல்லையா படிக்கலைனா நானே சொல்லிடறேன் நம்ம லீனா மேடம் இருக்காக இல்லையா, அதான் பெண்ணுரிமை போராளி அவங்க என்ன செஞ்சிருக்காங்கன்னா கஞ்சா கடத்தி சொத்து சேர்த்த, ஊர்த்தாலியை அறுத்த, இந்திய அரசின் பொதுத்துறையில் (VSNL ல்) திருடிய, 2G ல் கொள்ளையடித்த ஊரறிந்த திருடனான, கொள்ளைக்காரனான டாடாவுக்கு புரோக்கர் வேலை செஞ்சிருக்காக, அதாவது அந்த அயோக்கியனை பற்றி ஏழை எளிய மக்களிடம் சென்று யோக்கியன்னு சொல்றாங்க. இதைப்பற்றி உங்களுடைய கருத்து என்னன்னு சொல்லுங்க ?

  3. வினவு தோழர்களுக்கு,

    பரபரப்புக்காக பத்திரிகை தலைப்பு மாதிரி நீங்கள் பெயர் சூட்டும் போதே லீனா மணிமேகலை மீதான உங்கள் வன்மம் தெரிகிறது.பெண் நுகர்வுப்பொருளாகவும்,ஆண் ஒரே நேரத்தில் 20 பேரை எம்பிக் குதித்து உதைத்து விடுவதாகவும் உள்ள இந்திய சினிமாவுக்கு மாற்றாகவும் வினவு சிந்தனைகளுடன் இணைந்து பயணம் செய்கிற மாதிரியான மாற்று இந்திய சினிமாவின் தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் லீனா மணிமேகலை.உங்கள் எழுத்தின் முரண் வியப்பையே தருகிறது.

    • இந்த பிரதிநிதி பிரதிநிதி ன்னு சொல்றீங்களே. அவங்கள அவங்களே தேர்ந்தெடுப்பாங்களா எப்படி

    • முடியலங்க ராஜ நடராஜன்.

      கொலைகார டாடாவிடம் கைக்காசு பெற்று பாதிக்கபட்ட மக்களுக்கு எதிராக படம் எடுத்து எல்லாவிதமான மாற்று, முற்போக்கு சிந்தனைகளையும் தனக்கு இல்லவே இல்லை என்று அவரே ஒப்புக்கொண்ட பின்னரும் எப்படி உங்களால இப்படி பேச முடியுது?

      வினவு தலைப்பில் வன்மம் என்று உடனடியாக தீர்ப்பு கொடுக்க முடிந்த உங்களால் காலச்சுவடும்-வினவும் லீனாவின மீது வைத்திருக்கும் விமர்சனத்தைப் பற்றி வாயைக்கூட திறக்கமுடியமால் போனதேன்?

      வாங்குன காசுக்கு மேல கூவுறாண்டான்னு கேள்விப்பட்டிருக்கோம், இப்படி காசே வாங்காமல் கூவும் உங்களைப்போன்றோறின் செயலை எப்படி விளங்கிக்கொள்வது?

    • உங்களின் புரிதல்படியே லீனா மணிமேகலை மாற்று சினிமாவின் பிரதிநிதி இல்லை என்பதைத்தான் கட்டுரை அம்பலப்படுத்துகிறது. டாடவின் பழங்குடி மக்களுக்கு எதிரான போரில் காசு வாங்கிக் கொண்டு கார்ப்பரேட் சேவகம் புரியும் சீமாட்டியை நீங்கள் இன்னமும் போராளி என்று நம்புவது ஏன்? நீங்கள்தான் விளக்க வேண்டும். எங்கள் எழுத்தில் எந்த முரணும் இல்லை. உங்களது விமரிசனத்தில்தான் அந்த முரண்பாடு பிரம்மாண்டமாக இருக்கிறது. இதை இன்னமும் ‘பெண்’ மீதான கரிசனம் என்று சுருக்குவது எந்த விதத்திலும் நியாயமில்லை. லீனா மணிமேகலை பிடிபட்டார் என்ற தலைப்பிற்கு பதில் பழங்குடி பெண்களை கலையால் கொல்லும் லீனா மணிமேகலை என்றோ கார்ப்பரேட் கைக்கூலி என்றோ கூட வைத்திருக்கலாம். அல்லது லீனாவின் இந்த அடியாள் சேவையை என்ன பெயரிட்டு அழைக்கலாம் என்று நீங்கள்தான் சொல்லுங்களேன்?

    • @ ராஜ நடராஜன்

      ////பரபரப்புக்காக பத்திரிகை தலைப்பு மாதிரி நீங்கள் பெயர் சூட்டும் போதே லீனா மணிமேகலை மீதான உங்கள் வன்மம் தெரிகிறது.///

      கார்ப்பரேட் கம்பெனிக்கு கைக்கூலி வேலை செய்கிற பேர்வழிகளை பற்றி எழுதும் போது, அந்த மதிப்புக்குறியவரின் குடும்ப பெயர் மற்றும் குலப் பெயர்களை எல்லாம் வரிசைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா ? செய்யுறது புரோக்கர் வேலை அதுக்கு தலைப்பு மட்டும் டீசண்டா இருக்கனுமாம். வெளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் !

      மன்மோகன், மாண்டேக்சிங், பிரணாப், ப.சி போன்றவர்கள் மீதெல்லாம் நமக்கெப்படி தனிப்பட்ட வன்மம் இல்லையோ அதே போல புரோக்கர் மேடம் லீனா மீதும் புரட்சியாளர்களுக்கு தனிப்பட்ட பிரச்சினை இல்லை என்பது கூடவா உங்களுக்கு தெரியாது ராஜ நடராஜன் ?

    • ////பெண் நுகர்வுப்பொருளாகவும்,ஆண் ஒரே நேரத்தில் 20 பேரை எம்பிக் குதித்து உதைத்து விடுவதாகவும் உள்ள இந்திய சினிமாவுக்கு மாற்றாகவும் வினவு சிந்தனைகளுடன் இணைந்து பயணம் செய்கிற மாதிரியான மாற்று இந்திய சினிமாவின் தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் லீனா மணிமேகலை.உங்கள் எழுத்தின் முரண் வியப்பையே தருகிறது.////

      நல்ல காமெடி. உலகமகா கொள்ளைக்காரன் டாடாவுக்காக படம் எடுத்து மக்களை ஏய்த்து முட்டாள் ஆக்குவது தான் மாற்று சினிமாவா ? உங்களைப்போன்று அப்பாவித்தனமாக இருந்தால் லீனா மேடம் தன்னை தமிழகத்தின் சமிரா மஹ்மல்பஃப் என்று கூட சொல்லிக்கொள்வார். என்ன செய்ய எல்லாம் தமிழகத்தின் தலை எழுத்து !

    • ராஜ நடராஜன் லீனாவுக்காக நீங்கள் வக்காலத்து வாங்குவது பிரச்சனையில்லை ஆனால் இந்திய சினிமாவை ஒப்பிட்டு மாற்று தமிழ் சினிமா பிரதிந்திணு சொன்னீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க நீங்க…. உங்களுக்கு சினிமாண்ணா என்னணு தெரியுமா?

  4. அந்த டாடாவுக்கான படத்தில் ஒரு பழங்குடியினப் பெண்ணை லீணா இப்படி பேச வைத்திருப்பார். நாங்க எல்லாம் முன்னாடி சேல கட்டிக்கிட்டு இருந்தோம். டாடா வந்தப்புறம் எங்களுக்கு கோட் சூட் தான் உடை. (என்ன ஒரு வில்லத்தனமான முற்போக்கு)
    சிபிஎம் நண்பர்கள் யாரும் இதற்கு வக்காலாத்து வாங்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேற்கு வங்கத்தில் டாடாவுக்கு பாய் விரித்தவர்கள் தண்டகாரண்யாவில் லீணாவுக்கு சாமரம் வீசத் தயங்குவார்களா என்ன ?
    லீணா தான் இந்தப் படத்தை இயக்குவதற்காக டாடா நிறுவன நிர்வாகத்திடம் முற்போக்கு அது இது என வழிந்த சுய அனுபவத்தை வெளியிட அவரது நண்பர்கள் யாராவது முன்வந்தால் சிறப்பாக இருக்கும்.

  5. “இவற்றினைச் சுருக்கிப் பார்த்தால் காரியவாதமும், பிழைப்புவாதமும், சுயநலவாதமும், விளம்பரவாதமும்தான் சீமாட்டியின் சாரம்.”

    லீனா மட்டுமல்ல, இவரைப் போல பல ‘இலக்கியவாதிகள்’ இருக்கத்தான் செய்கிறார்கள். நடைமுறையில் எந்த மாற்றத்தையும் கொண்டவராத இத்தகைய முற்போக்காளர்களை அம்பலப்படுத்தி தனிமைப் படுத்தினால் மட்டுமே சமூக மாற்றம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்.

  6. லீனா வுக்கும்,வினவுக்கும் உள்ள பகையை தீர்த்துக்கொள்ள இந்த கட்டுரை வினவுக்கு உதவலாம். இதில் மார்க்சை கொசைப்படுத்தவேண்டிய அவசியம் என்ன வந்தது? இன்றளவும் தமிழகத்தில் மனித உரிமை மீறப்படும் இடங்களிலெல்லாம் தலையீடு செய்கின்ற மனித உரிமைப்போராளி அவர் . காலச்சுவடுக்கு எதிராக இயங்கிய மார்க்ஸ் ,காலச்சுவடுக்கு வேலை செய்யப்போனால் அதை விமர்சியுங்கள். அது தான் சரியானது. ரவிக்குமார் போன்றவர்கள் மார்க்சுக்கு முற்றிலும் எதிரான அரசியல் நிலைப்பாடு எடுத்தவர். நிறப்பிரிகை நின்று நீண்ட காலத்திற்கு பிறகே ரவி காலச்சுவடில் தஞ்சமடைந்தார்.

    • முன்பு வினவில் லீனாவை விமர்சனம் செய்ததற்காக அ.மார்க்ஸ் தலைமையில் கூட்டம் போட்டு திட்டியதை வசதியாக மறந்துவிட்டீர்களே மேகவண்ணன், ஆ.மார்க்ஸ் தாங்கிப்பிடித்த மாபெரும் போராளி இப்போது டாடாவின் கைக்கூலி என்று ஆன பின்பு நீங்கள் லீனாவையல்லவா ”ஏன் ஆ.மார்க்சை கொச்சைபடுத்திவிட்டாய்” என்று கேட்டிருக்க வேண்டும். அட்ரஸ் தெரியாமல் இப்பக்கம் வந்துவிட்டீர்களோ 🙂

      அது எப்படித்தான் கட்டுரயில் மையப்பொருளுக்கு பதில் சொல்ல வக்கற்று போய் சுத்தி சுத்தி துழவுகின்றன்றோ தெரியவில்லை. இவர்களைத்தான் கட்டுரை #ஒன்றும் சொல்லவோ, செய்யவோ முடியவில்லை என்றால் டாடாவின் கைக்கூலி லீனா மணிமேகலையின் அல்லக்கைகள் என்று வரலாற்றில் அழைக்கப்படுவீர்கள்# என்று சொல்கிறதோ?

      • மையத்த விட்டு விளிம்புக்கு ஓடுறதும் தும்ப விட்டுட்டு வாலப் பிடிக்குறதும்தான அவிங்க தத்துவம்(பின்நவீனத்துவம்)

    • ///இதில் மார்க்சை கொசைப்படுத்தவேண்டிய அவசியம் என்ன வந்தது ?//

      அமார்க்சை பற்றி என்ன கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது ? ஊர் உலகத்திலுள்ள மனித உரிமை மீறல்களில் எல்லாம் தலையிடும் அறிவாளி அவர்களே, தனது லாப வெறிக்காக மனித உரிமைகளை மீறும் டாடாவுக்கு புரோக்கர் வேலை செய்வதன் மூலம் மனித உரிமைகளை கொல்லும் லீனா மேடம் உங்களுக்கு அருகில் இருந்தும் அதைப் பற்றி பேசாமல் வாயை மூடிக்கொண்டிருக்கிறீர்களே ஏன் ? அப்படியானால் நீங்களும் அதை ஆதரிக்கிறீர்களா ? நீங்கள் ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்பதை வாயைத் திறந்தால் தானே தெரியும் எனவே மவுனம் சாதிக்காமல் வாயை திறந்து பேசுங்கள் என்று தானே கேட்கப்பட்டுளது. இந்த கேள்வியில் ஏதாவது தவறு இருக்கு ?

    • பூதக்கண்ணாடி போட்டு இந்த கட்டுரையின் “நோக்கத்தை” கண்டுபிடிச்ச நீங்க ஏன் உங்க மார்க்சு செய்யும் “அரசியல்” வேலைகளையும் அலசக்கூடாது…….

  7. //சீமாட்டி லீனா மணிமேகலை மார்க்சியத்தையும், மார்க்சிய ஆசான்களையும், பொதுவில் அனைத்து வகை அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடும் போராளிகளையும், மக்களையும் கொச்சைப்படுத்தி எழுதிய கவிஜைகளை//

    அடேங்கப்பா…லீனா எழுதினா மட்டும் ‘இவிங்க ஆசானை’ கொச்சை படுத்திட்டாங்களாம் . வினவு எழுதினா மட்டும் கவுஜையா? ஹா…ஹா…

    • சீனு,என்ன இது கமெண்டு ஒன்னுமே புரியல? ஒண்ணு லீனா எழுதுனது சரின்னு சொல்லனும் இல்லேன்னா வின்வு எழுதுனது தப்புன்னு சொல்லனும், அட்லீசுடு கட்டுரைக்கு சம்பந்தத்தோடவாவது கருதுத சொல்லனும், எதுவுமே இல்லாம இப்படி எழுதுனா எப்படி?

      • புரியலையா? கட்டுரைக்கு சம்பந்தம் இல்லையா? நான் எடுத்து போட்டது கட்டுரையிலிருந்து தானே? அதை எழுதியது வினவு தானே?

        நான் எழுதினது கட்டுரைக்கு சம்பந்தமானது தான். லேனாக்கு புரியலைன்னா நான் என்ன பன்ன முடியும்? டியுசனா எடுக்க முடியும்?

        • நான் எடுத்து போட்டது கட்டுரையிலிருந்து தானே? அதை எழுதியது வினவு தானே?///

          அது தெரியுது, அது உம்ம கமெண்டுகிடையாது, அதுக்கு மேல ஒன்னு எழுதியிருக்கீறில்ல, அதுதான் கமெண்டு, அதுதான் புரியலேங்கறேன்.

          லீனா எழுதியிருப்பது ஆசான்களையும், போராளிகளையும், மக்களையும் கேவலப்படுத்தலையின்னு சொல்றீங்களா? அந்த ஆண்குறி கவுஜயை சரிதான்னு ஒத்துக்கிறீங்களா? அதுதானே பொருள்ள பின்னூட்டமா இருக்கும். அதவிட்டுப்போட்டு லீனா எழுதுனா கவுஜயா வினவு எழுதுனா கவுஜயான்னா இதுக்கு என்ன பொருள்னு புரிஞ்சுக்க? அதான் கேட்டேன்

          இந்த சின்ன விசயத்தையே தெளிவா சொல்ல முடியாத உங்ககிட்ட டியூசன் படிச்சா வெளங்குனாப்புலதான்

        • யாருக்குமே புரியல, சத்தியமா உங்களுக்கும் கூட புரிஞ்சிருக்காது.
          எதிர்க்கனும்னு முடிவு பன்னிட்டு இறங்கினா அங்க தர்க்கம் இருக்காது குருட்டுத்தனம் தான் இருக்கும், இது அறிவியல். உங்ககிட்ட அந்த குருட்டுத்தனம் மட்டும் தான் இருக்கு.

    • நீங்க எப்பயுமே இப்படி தானா சீனு ? நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு உங்களுக்காவது புரியுதா ? புரிஞ்சா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.

        • நாம ஒன்னு கேட்டா அதுக்கு சம்பந்தமே இல்லாம இவரு ஒன்னு சொல்லுவாரு பாருங்க அது உங்களுக்கு இங்க புரியாது வீட்டுக்கு போனாதான் புரியும்.

          எதிர்க்க வேண்டும் என்று இறங்கிவிட்டால் குருட்டுத்தனம் மட்டுமல்ல மேற்கண்டவாறு சம்பந்தமற்ற முறையில் பேசுவதும் நடக்கும் சீனு இப்போ அதை தான் செய்து கொண்டிருக்கிறார், இல்லையா சீனு ?

            • உள்ளேன் ஐயா என்று நிரூபிக்கிறீங்க சீனு, உங்களுடைய சுய ஒப்புதலுக்கு மிக்க நன்றி, எனவே இத்துடன் இந்த பதிவில் உங்களோடு உரையாடுவதை நிறுத்திக்கொள்கிறேன். அடுத்து வரவிருக்கும் பல பதிவுகளையும் இதே போல அர்த்தமற்ற முறையில் எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே வருவீர்கள் அல்லவா அப்போது சந்திப்போம்.

              • சீனுவே லீனா இப்படி லொம்பட பட்டிரிச்சேனு பீதியில ஏதாவது எழுதினா அதுக்கு போயீ அம்பேத்தும், லேனாவும் ஏன் பதில் போடுறீங்க…..

  8. ஆகா சூப்பர் எத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு அருமையான ஆதாரம் கிடைத்து இருக்கிறது
    லீணாவை நோக்கி எழுப்பப்பட்ட வன்மம் நிறைந்த கேள்விகளுக்கு வினவை நோக்கி இன்னமும் கேள்வி எழுப்பி கொண்டிருப்பவர்கள் மண்ணோடு மண்ணாகி விட்டார்கள்

    வினவு ஆணாதிக்க திமிரோடு கேட்டு இருந்தாலும் அதெல்லாம் இந்த விளம்பர படத்தை எடுத்து விட்டதினால் காற்றோடு கலந்து விட்டது .

    எப்பவுமே நாங்கள் முற்போக்கு முற்போக்கு வாதிகளே என வினவு நிரூபித்து இருக்கிறது

    வாழ்க உங்கள் பெண்ணியம் வாழ்க மார்க்சியம் வாழ்க வினவியம்

    • தியாகு என்ன உளரல் இது? லீனா ஒரு டுப்பாக்கூர் என்பதற்கு ஆதாரமா? அது தெரியாமல்தான் ”லீனாவை செருப்பால் அடிக்க வேண்டும்” என்று இமெயில் செய்தீர்களா?

      நீங்கள் பின்னூட்ட ஆள்மாறாட்டம் செய்து மாட்டிக்கொண்டதை அம்பலப்படுத்தியதால் வினவு மீது கோபம் இருக்கலாம், ஆனால் அந்த கோவத்தை காலை பல் துலக்குவது முதல் உங்கள் அனைத்தையும் செயல்களையும் தீர்மானிக்கும் அளவுக்கான வெறுப்பாக நீங்கள் மாற்றியிருப்பது ஒரு மனநிலை பிறழ்ந்த செயல்.

      நீங்கள் தொடர்ச்சியாக செய்து வரும் கோயபல்சு பிரச்சாரம் தெரிந்திருந்தும் வினவு உங்களை இங்கே தடை செய்யாமல் அனுமதித்து வருகிறது என்பதை மறந்து விட்டீர்களா? குறைந்தபட்சம் வயதுக்கு தக்கவாறு ஒரு வளர்ந்த பிள்ளையாக நடந்து கொள்ளுங்கள்.

      இத்தனை நாளாக நீங்கள் தூக்கிக் கொஞ்சிய லீனா மணிமேகலை ஒரு கைக்கூலி என்று அம்பலப்பட்டிருக்கிறது. இத்தனை நாளாக ஒரு கைக்கூலிக்கு சொம்படித்திருக்கிறோமே என்று வெட்கப்படுங்கள். அதுவே உங்களை நல்ல வழிக்கு திருப்பும் துவக்கமாக அமையட்டும்.

      • //நீங்கள் தொடர்ச்சியாக செய்து வரும் கோயபல்சு பிரச்சாரம் தெரிந்திருந்தும் வினவு உங்களை இங்கே தடை செய்யாமல் அனுமதித்து வருகிறது என்பதை மறந்து விட்டீர்களா? குறைந்தபட்சம் வயதுக்கு தக்கவாறு ஒரு வளர்ந்த பிள்ளையாக நடந்து கொள்ளுங்கள்/
        எனது முன்னாள் நண்பரே இத்தனை ஆண்டுகள் பழகியும் இப்படி என்னை தப்பா புரிஞ்சிட்டீங்களே சரி நீங்க எப்பவுமே இப்படித்தான்

        லீணா ஒரு முதலாளித்துவ கைக்கூலியாகவே இருக்கட்டடும் அதன் எதிர்வினையாக வினவு செய்தது சரி என மட்டும் சொல்லாதீர்கள்

        சரி விடுங்கள் அதென்ன நண்பா கோயபல்ஸ் பிரசாரம்

        முடியல முடியல முடியல

    • //வன்மம் நிறைந்த கேள்விகளுக்கு //

      தியாகுருவே, செருப்பாலடிப்பதை விட கவிதைக்குப் பொருள் கேட்பது வன்மம் நிறைந்தது என்று இந்த பாலகர்களுக்குத் தெரியாது மன்னித்து விட்டுவிடுங்கள்.

      லீணா போன்ற பழங்குடியின புரட்சிப் போராளியைப் பற்றி இவர்களுக்கென்ன தெரியும்? எந்தப் புரட்சியாய் இருந்தாலும் அதன் கொ.ப.சேவான நீங்களே லீணாவின் பழங்குடிப் புரட்சி பற்றியும் இந்த சிறுவர்களுக்குப் பாடம் நடத்துங்களேன்.

      • //கவிதைக்குப் பொருள் கேட்பது வன்மம் நிறைந்தது// மன்னாரு அண்ணே எப்படி எல்லாம் பொருள் கேட்கலாம் என்பது உங்க கிட்ட கத்துகிடனும்

        என்ன செய்வது நானும் கொஞ்சநாள் உங்க கூட சுத்திய தோசம் செருப்பால் அடிக்க சொன்னது

        • மலரினும் மெல்லிய இதயம் கொண்ட கவிஞர் பெருந்தகை தியாகுருவே,

          படைப்பில் உள்ளதற்குத் தானே பொருள் கேட்க முடியும் என்று நம்பும் இந்தப் பேதைகளை மன்னித்தருள்வீர்.

          மார்க்ஸ் உள்ளிட்ட மார்க்சிய ஆசான்களை ஆண்குறி என்று விளித்த கவிதை பற்றி பண்புப் பெட்டகமான நீங்கள் எப்படி சந்தேகம் கேட்டிருப்பீர்கள்? இதோ சில உதாரணங்கள், இதைப் படித்தாவது வினவு கும்பல் திருந்தட்டும் –

          1) மாதர்குல மாணிக்கமே, உமது கவிதையின் தீர்க்கதரிசனங்களின் படி 2012 டிசம்பரில் உலகம் அழிந்து போக்குமா?

          2) மங்கையர் குல திலகமே, உங்கள் கவிதையில் மறைபொருளாய் வந்து போகும் பரலோக ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை விளக்கிச் சொல்வீரா?

          அந்தக் கவிதைக்கு இது போன்ற இலக்கியநயமான சந்தேகங்களைத் தானே நீங்கள் கேட்டிருப்பீர்கள் தியாகுருவே?

          அப்புறம் அந்த தேஜஸ்வினி பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே? உடனே சர்வீஸ் எங்கே என்று தேடாதீர்கள், தேஜஸ்வினி என்பது டாடாவின் முகமூடி என்று கட்டுரை சொல்கிறது.

          ஜெய் தியாகு, ஜெய் சங்கர் சிங், ஜெய் CWP.

    • தியாகு, லீனா மேடம் மாற்று சினிமா எடுக்கக்கூடியவர் என்று மேலே ஒருவர் கூறியுள்ளார் அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன ? லீனா இவ்வாறு நடந்துகொள்வதை எவ்வாறு பார்ப்பது ? அதாவது ஒரு பக்கம் முற்போக்கு, பெண்ணியம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இன்னொரு பக்கம் கார்ப்பரேட் கம்பெனிக்கு படம் எடுப்பதை எப்படி பார்ப்பது. அதாவது மார்க்சிய கண்ணோட்டத்தில் இதை எப்படி பார்க்க வேண்டும் ?

  9. வினவுக்கு ஓர் வேண்டுகோள்

    கம்யுனிச சித்தாதங்களை வெளியிடும் நல்லதொரு இணைப்பாகும். இதை மனதார வரவேற்கிறேன்.
    கருத்துக்களை பதிவு செய்ய disqus.com தளத்தின் disqus plugin யை wordpress blogல் இணைக்கவும்.
    இந்த plugin மற்ற வலைதளங்கள் facebook,google plus,myspace,orkut,openid என பல சமுகத்தை
    இணைக்கிறது. கருத்துக்கள் உடனடியாக பகிரவும் மிகவும் உதவியாக உள்ளது.

    மேலும் தகவல்களுக்கு disqus.com தளத்தை பார்வையிடவும்.

  10. வினவு தோழர்களுக்கு! எனது முந்தைய பின்னூட்டத்திற்கு உங்கள் மறுமொழியின் சாரம் என்னவென்று பார்க்க வந்தேன்.லீனா மணிமேகலை ஒரு பெண் என்ற கரிசனை என்பதை விட நீங்கள் பறைசாற்றிக்கொள்வதாக எனக்கு புலப்படும் சிந்தனைகள் சார்ந்த, மக்கள் பிரச்சினைகள் சார்ந்த இந்திய சினிமாக்கள் வியாபார அணுகுமுறைகள் இல்லாமல் பல பொது ஊடகங்களுக்கும் மக்களின் பார்வைக்கும் தெரியாத படி உள்ளன.அதனை தேடவும்,உங்கள் சிந்தனைகளோடு பயணம் செய்கிறதா அல்லது முரண்படுகிறதா என்பதை முதலில் கண்டறியுங்கள்.பின் சந்தர்ப்பம் கிடைக்கும் கணங்களில் மீண்டும் விவாதிப்போம்.நன்றி.

    • ராஜ நடராஜன், நீங்கள் ஏதோ விமரிசனத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் அது என்ன விமரிசனம் என்பதை பலமுறை படித்தும் பிடிபடவில்லை. உங்கள் கருத்தை கொஞ்சம் எளிமையாக என்னவென்று சொல்ல முடியுமா?

  11. இக்கட்டுரையில் அறிவுத்துறையினர் பற்றிய இளக்காரம் தேவையற்றது. அ. மார்க்ஸ் கும்பல் போன்ற வார்த்தைகளும் தேவையா என்று பரிசீலிக்க வேண்டுகிறேன். ஓர் அடக்குமுறை காலத்தில் அறிவுத்துறையினர் பணி புரட்சிகர இயக்கங்களுக்கு மிகவும் இன்றியமையாதது. மாவோயிஸ்ட்களின் நியாயத்தை ஊடகங்களில் எந்த மாவோயிச்டும் வந்து சொல்வதில்லை. டெஹெலகா பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள் போன்றோரே ஆங்கில ஊடகங்களில் வந்து உரைக்கின்றனர். 9 மணி ஆங்கில செய்திகள் பார்ப்பவராக இருந்தால் இந்த உண்மையை நீங்கள் அறிவீர்கள். ப.சிதம்பரம், மாவோயிஸ்ட்களுக்கு எதிரான அரசின் போராட்டத்துக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை அறிவுத்துறையினரே என்று குறிப்பிட்டுள்ளது முக்கியமானது. புதிய ஜனநாயகத்தில் இது குறித்து ஓர் கட்டுரையும் வந்தது. மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அவருக்கு இருக்கின்ற அனுபவத்தை வைத்து பார்க்கும் போதும், அவருடைய பொதுவான செயல்பாடுகள், எழுத்துக்களை வைத்துப் பார்க்கும் போதும் அவர் ம.க.இ.க அரசியலுக்கு தீங்கானவர் போன்று தெரியவில்லை. லீனா மணிமேகலை, ஈழப் பிரச்சினை போன்ற விஷயங்களில் அ. மார்க்ஸ் நம்மோடு முரண்படலாம். இந்துத்துவ எதிர்ப்பு, மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஈடுபடுவது போன்றவற்றையே அவருடைய முதன்மை பணிகளென அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அ.மார்க்ஸ் இப்போதெல்லாம் பின்னவீனத்துவம் பேசுவது இல்லை என்று தெரிகிறது. கண்டிப்பான ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனை மோசமானவன் என்று முடிவெடுத்து விட்டால் பின்னர் அவர் முடிவை எப்போதும் மாற்றிக் கொள்ளாதது போல உள்ளது அ.மார்க்சுக்கும், காலச்சுவடு கண்ணனுக்கும் வித்தியாசம் இல்லை என்று வினவு உரைப்பது.

    • மனித உரிமைக்கான அமைப்புகளை நிறுவி மக்கள் மத்தியில் வளர்க்க மாவோயிஸ்டுகள் திட்டமிடாது இதுபோன்ற நபர்களிடம் தங்களது வேலையை தீர்மானகரமற்ற முறையில் கையளித்து விடுகிறார்கள். சமயங்களில் அரசியலின்மை வருவதற்கு காரணமாகவும் இத்தனி நபர்கள் இருந்து வருகிறார்கள். சில அறிவுஜீவிகள் நரோத்னிய பார்வையில் மாவோயிஸ்டுகளைப் புரிந்துகொண்டு உண்மை அறியும் குழுவாக செயல்படுவது தெரிந்தும் மாவோயிஸ்டுகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
      சில விசயங்களில் முற்போக்கானவர் சில விசயங்களில் முரண்படுபவர் பல விசயங்களில் ஒன்றுபடுகிறார் என்ற பார்வை கோணலானது. இரண்டு பிரச்சினைகளில் எப்படி முரண்படுகிறார் என்பது பல விசயங்களுக்கும் பொருந்துவதாகவும் அதாவது ஒன்றில் லீணா விசயத்தில் தனிநபரின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிய மிகை உணர்ச்சியும், மற்றொன்றில் ஆளும்வர்க்கத்தின் பார்வையும் கிடைத்த பிறகு அவரை ஆதரிக்கவோ அல்லது அம்பலப்படுத்தாமல் இருப்பதோ மகா பாவம்.
      சமீக காலமாக இனி தத்துவங்களது, அமைப்புகளது காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக துனிசிய, எகிப்து புரட்சிகளைப் பார்த்து சொல்லி வருகிறார் மார்க்சு. இது மாற்றம்தான் தனக்கு பிடித்த முறையில் சூழலை வெட்டித் தைப்பதில் மார்க்சுக்கு நிகர் அவரே. கண்ணனோ அல்லது அ.மார்க்சோ இருவரும் மாறுகிறார்கள். இன்னமும் ஆளும்வர்க்கத்துக்கு அந்நியோன்யமாய்.

      • //இரண்டு பிரச்சினைகளில் எப்படி முரண்படுகிறார் என்பது பல விசயங்களுக்கும் பொருந்துவதாகவும் அதாவது ஒன்றில் லீணா விசயத்தில் தனிநபரின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிய மிகை உணர்ச்சியும், மற்றொன்றில் ஆளும்வர்க்கத்தின் பார்வையும் கிடைத்த பிறகு அவரை ஆதரிக்கவோ அல்லது அம்பலப்படுத்தாமல் இருப்பதோ மகா பாவம்.// கர்த்தராகிய ஏசு பாவத்தை மன்னிப்பாராக ஆமென்

      • காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவக் எனும் இலக்கிய திறனாய்வாளர் குறிப்பிடும் கருத்து ஒன்று முக்கியமானது. காலனிய பிரிட்டிஷ் அரசின் கல்வி கொள்கை இந்திய நடுத்தர வர்க்கத்திடம் ஆங்கில கலாச்சார மதிப்பீடுகள் குறித்து உயர் எண்ணத்தை உருவாக்கி சிந்தனையில் ஆங்கில கலாச்சாரம் குறித்து ஒரு மோகத்தை வளர்க்க பயன்பட்டது. இந்தியாவில் கற்று தரப்படும் ஆங்கில இலக்கியங்கள் மிகவும் சுலபமாக, தம்மையறியாமல் (insidious ) காலனிய நோக்கத்திற்கு தம்மை ஒப்புக்கொடுக்க மக்களை தயார்படுத்துகின்றன என்கிறார். அதிலும் குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டைய ஆங்கில இலக்கியங்கள் ஏகாதிபத்தியத்தின் வெளிப்படையான கலாச்சார பிரதிநிதித்துவம் என்கிறார்.

        இந்த உண்மையோடு பொருந்துகின்ற ஒன்றை நம் தமிழ் சூழலிலும் பார்க்க இயலுகிறது, க.ந.சு, சு.ரா, அசோகமித்திரன், ஜெயமோகன், நாசில் நாடன் போன்றோர் பார்ப்பன, சைவ வேளாள உளவியலுக்கு மக்களை ஆட்படுத்தும் பணியை தமது இலக்கியங்களினூடாக செய்து வருகிறார்கள். இவர்களுக்கு மாற்றான ஒரு மரபை பிரமிள் முதற்கொண்டு இன்றைய தலித் எழுத்தாளர்களிடம் காண இயலும். இது குறித்து விரிவாக யாரேனும் பேசியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. எனினும் இது குறித்த உணர்வு நமக்கு இருப்பது நல்லது. காலச்சுவடும் அ.மார்க்சும் ஒன்று என்று பேசுவதில் அந்த உணர்வு வெளிப்படவில்லை என்றே கருதுகிறேன்.

        மனித உரிமை அமைப்புகளை மாவோயிஸ்ட்கள் கட்டாதது அவர்கள் தவறாக இருக்கலாம். ஆனால் அருந்ததிராயிலிருந்து டேஹெல்கா பத்திரிக்கையாளர்கள் வரை அறிவுத்துறையினர் மாவோயிஸ்ட்களை ஆதரிப்பது அவர்கள் செய்த தவறு அல்ல. மட்டையடியாக ஒன்றை புரிந்து கொள்வது சுலபம். என்னோடு உடன்படாதவன் எல்லோரும் எனது எதிரிகளே என்ற பிரகடனம் வெறும் கிளர்ச்சியை மட்டுமே அளிக்கும். இது தான் கோணலும், கோளாறும் கொண்ட பார்வை.

        • மட்டையடியாக யாரையும் எதிரியாக யாரும் வரையறுத்த்தாக தெரியவில்லை. அப்படி இருப்பதாக நீங்கள் கருதினால் மேற்கோள் காட்டி ஆதாரத்துடன் முன்வைத்தால் விவாதிப்பது சுலபமாக இருக்கும். அக மன எழுச்சியின்பாற் பட்டு இப்படி எழுதி இருக்க மாட்டீர்கள் எனக் கருதுகிறேன்.

    • /////இக்கட்டுரையில் அறிவுத்துறையினர் பற்றிய இளக்காரம் தேவையற்றது.
      அ. மார்க்ஸ் கும்பல் போன்ற வார்த்தைகளும் தேவையா என்று பரிசீலிக்க வேண்டுகிறேன்./////

      நண்பர் சுகதேவ் அவர்களுக்கு,
      இக்கட்டுரையில் அறிவுத்துறையினர் என்று நீங்கள் குறிப்பிடுவது யாரை ?
      அமார்க்சை இக்கட்டுரை இழிவு செய்யவில்லை மாறாக கோந்து போட்டு ஒட்ட வைத்துக்கொண்டதை போல தனது வாயை இறுக்கமூடிக்கொண்டிருக்கும் அமார்க்ஸ் அவர்களிடம் வாயைத்திறந்து பதிலளிக்குமாறு தான் கோரியிருக்கிறது. ஆனால் நீங்கள் வினவு ஏதோ அவரை இளக்காரம் செய்ததாக கூறுகிறீர்கள், சரி அப்படியே கூட இருக்கட்டும் அவருடைய மவுனத்தை இளக்காரம் செய்தால் கூட என்ன தவறு ?

      அறிவாளிகள் என்று சொல்லிக்கொண்டு ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்த பலரை மாமேதை மார்க்ஸ் தனது எள்ளலும் கிண்டலும் கலந்த எழுத்தால் குத்திக்கிழித்திருக்கிறார். எனவே போலி அறிவாளிகளை கிண்டல் செய்வது தவறே இல்லை !

      லீனா பாட்டாளி வர்க்க ஆசான்கள் மீதும் கழிந்து வைத்த போது அதை ம.க.இ.க கண்டித்தது அப்போது தனது சீஷ்யைக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்த இந்த அறிவாளி இன்று லீனா தரகு முதலாளி டாடாவுக்கு புரோக்கர் வேலை செய்ததை பற்றி வாயைத் திறக்காமல் மவுனம் சாதிப்பது ஏன் ? இவர் தான் அறிவாளியா ?

      நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது அமார்க்ஸ் மற்றும் லீனா கோஷ்டியிடம் தான்.

      ////அ. மார்க்ஸ் கும்பல் போன்ற வார்த்தைகளும் தேவையா என்று பரிசீலிக்க வேண்டுகிறேன்.///

      மேலும் இது கும்பல் தானே, கோஷ்டிகள் தானே ? அமைப்பாக இல்லாத அமைப்பை மறுக்கும் கலவைவாத கோஷ்டிகளை கும்பல் என்று தானே கூற முடியும் ?

      அமார்க்ஸ் பற்றி இந்த பதிவில் கீழ்கண்டவாறு மட்டுமே எழுதப்பட்டுள்ளது இதில் எதை தவறு என்கிறீர்கள் சுகதேவ் ?

      //இதில் சீமாட்டி லீனாவின் ஞான குரு அய்யா அ.மார்க்ஸ் சட்டீஸ்கரெல்லாம் போய் வந்தவர், இனி என்ன சொல்லி நியாயப்படுத்துவார்? தொழில் வேறு, கொளகை வேறு என்று சப்பைக் கட்டு கட்டுவாரா? முடியாது என்றால் லீனாவின் வேடத்தை அம்பலப்படுத்திய எமது தோழர்களை வெளியேற்றினாரே அதற்கு என்ன பதில்? தொழிலும், கலை மனமும் இறுதியில் பழங்குடி மக்களை கொன்று போடுவதற்குத்தானே பயன்படுகிறது? அறிவாளிகளின் அந்தரங்கம் மட்டுமல்ல அவர்களது வெளிப்படையான வாழ்க்கையே இப்படித்தான் ஒரு நாள் நாறியே தீரும்.

      காலச்சுவடு இந்த அம்பலப்படுத்தலை உலகறியச் செய்ததன் காரணம் என்ன? சீமாட்டி லீனா, அறிஞரய்யா அ.மார்க்ஸ் அணியைச் சேர்ந்தவர். அ.மார்க்ஸ் கும்பலுக்கும், காலச்சுவடுக்கும் ஒத்துக் கொள்ளாது. இதில் பெரிய கொள்கை பிரச்சினை எதுவும் இல்லை என்பதோடு எல்லா அறிஞர்கள், இலக்கியவாதிகளிடம் நீக்கமற நிரம்பியிருக்கும் ஈகோ ஃபேக்டரிதான் மூலம். ஆனால் அதற்கு கொள்கை என்ற பெயரில் ஏதாவது சப்பைக் கட்டு கட்டுவார்கள். எனினும் இதில் அ.மார்க்ஸ் அணி காலச்சுவடு அணியிடம் நிறையவே தோற்றிருக்கிறது. அ.மார்க்ஸின் வலது கை, இடது கை என்று அறியப்பட்ட இரவிக்குமார், பொ.வேல்சாமி போன்றோரே காலச்சுவடு அணியில் சேர்ந்து விட்ட பிறகு அறிஞர் சில சில்லறைகளை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறார்.

      ஒருவேளை அ.மார்க்ஸ் அணிக்கும், காலச்சுவடுக்கும் தோழமையான உறவிருந்தால் சீமாட்டியின் இந்த ஊழல் வெளிவந்திருக்காது. அதே நேரம் இலக்கியவாதிகள், அறிஞர் பெருமக்கள் எவரும் எப்போதும் ஓரணியாக இருப்பது ‘இயற்கை’க்கு விரோதமானது. முதலாளிகளுக்கும் அதே விதிதான்.//

    • ////ஓர் அடக்குமுறை காலத்தில் அறிவுத்துறையினர் பணி புரட்சிகர இயக்கங்களுக்கு மிகவும் இன்றியமையாதது. மாவோயிஸ்ட்களின் நியாயத்தை ஊடகங்களில் எந்த மாவோயிச்டும் வந்து சொல்வதில்லை. டெஹெலகா பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள் போன்றோரே ஆங்கில ஊடகங்களில் வந்து உரைக்கின்றனர். 9 மணி ஆங்கில செய்திகள் பார்ப்பவராக இருந்தால் இந்த உண்மையை நீங்கள் அறிவீர்கள். ப.சிதம்பரம், மாவோயிஸ்ட்களுக்கு எதிரான அரசின் போராட்டத்துக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை அறிவுத்துறையினரே என்று குறிப்பிட்டுள்ளது முக்கியமானது.////

      அருந்ததிராய் போன்ற அறிவாளிகளுடன் இவரை ஒப்பிடாதீர்கள் சுகதேவ். அமார்க்சை ஒரு முதலாளித்துவ அறிவாளி என்று கூட சொல்ல முடியாது. அவர்களிடமுள்ள ஒழுங்கும் நேர்மையும் கூட இவரிடம் இல்லை. இவரை ஒரு கட்டுப்பாடற்ற யுப்பி அறிவாளி என்று வேண்டுமானால் சொல்லலாம். அடக்குமுறை காலத்தில் இவர் நக்சல்பாரிகளுக்காக பேசுவார் என்று எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை இப்போதே கனித்து கூறுவதற்கு முன்னால் நிகழ்காலத்தில் பழங்குடிகளை வேட்டையாடி அவர்களுடைய நிலங்களை ஆக்கிரமித்து கைப்பற்றும் டாடாவுக்கெதிராக இந்த அறிவாளி வாயைத்திறக்காதது ஏன் என்பதை பற்றி தான் நீங்கள் முதலில் கூற வேண்டும்.

    • /////மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அவருக்கு இருக்கின்ற அனுபவத்தை வைத்து பார்க்கும் போதும், அவருடைய பொதுவான செயல்பாடுகள், எழுத்துக்களை வைத்துப் பார்க்கும் போதும் அவர் ம.க.இ.க அரசியலுக்கு தீங்கானவர் போன்று தெரியவில்லை./////

      ம.க.இ.க வின் அரசியல் மார்க்சியம் லெனினியம். அமார்க்ஸ் ஒரு மார்க்சிய விரோதி. மார்க்சியத்திற்கு எதிரான சித்தாந்ததை முன் வைப்பவர். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அமார்க்சிடமே கேட்டுப்பாருங்கள்.

    • ////அ.மார்க்ஸ் இப்போதெல்லாம் பின்னவீனத்துவம் பேசுவது இல்லை என்று தெரிகிறது. கண்டிப்பான ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனை மோசமானவன் என்று முடிவெடுத்து விட்டால் பின்னர் அவர் முடிவை எப்போதும் மாற்றிக் கொள்ளாதது போல உள்ளது அ.மார்க்சுக்கும், காலச்சுவடு கண்ணனுக்கும் வித்தியாசம் இல்லை என்று வினவு உரைப்பது.////

      இப்போதல்ல எப்போதுமே அவர் பின்னவீனத்துவம் பேசியதில்லை ஏனெனில் பின்னவீனத்துவம் பின்பற்ற முடியாத ஒன்று !

      இரண்டுமே இரண்டு ஈகோ கோஷ்டிகள் என்பதை தவிர வேறு என்ன வேறுபாடு என்று தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் நீங்களே கூறுங்களேன் கண்ணனுக்கும் அமார்க்சுக்கும் என்ன வித்தியாசம் என்று.

      • நண்பரே
        அ.மார்க்சுக்காக நான் இங்கு வாதாட வரவில்லை. உங்கள் பதிலடிகளில் நீங்கள் புதிதாக எதுவும் சொன்னது போல தெரியவில்லை. ஆனால் பல பதிவிட்டு ஒரு பாவனையை அளித்திருக்கிறீர்கள். ஒரு சிறு சந்தேகம் மட்டும் எழுகிறது உங்கள் பதில்களின் மூலமாக. ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதும் கட்டுரையிலும் கும்பல் என்கிறோம்: அ.மார்க்ஸ் ஐயும் கும்பல் என்கிறோம். இது தான் புரியவில்லை. அப்படியானால் அ.மார்க்ஸ் ஒரு பகை சக்தியா?

        • நீங்கள் கூறிய ஒவ்வொன்றுக்கும் பதிலளித்திருக்கிறேன் சுகதேவ், அவை உங்களுக்கு நிறைவளிக்கவில்லை என்றால் கேள்விகளை இங்கே வையுங்கள் பேசுவோம்.

          • நீங்கள் செய்வது ஒரு character assassination . அதற்கு என்னை துணைக்கு அழைக்கிறீர்கள். மறைந்த தீபன் போன்ற தோழர்கள் கண்ணியமானவர்கள். அவருடன் சேர்ந்து அ. மார்க்ஸ் குழுவினருடன் நான் விவாதத்தில் ஈடுபட்டுள்ளேன். உங்களுக்கு அது புரிய போவதில்லை. உங்களுடன் பேசுவது வீண். கன்னா பின்னா என்று பேசுவதில் உங்களுக்கு ஒரு pleasure கிடைக்கிறது எண்டுு நினைக்கிறேன். நான் எனது கருத்துக்களை இரண்டு பதிலுரைகளில் தெரிவித்துள்ளேன். அது யுப்பி அல்ல . யப்பி என்று உச்சரிக்க வேண்டும் . ஆனால் அது கூட தெரியவில்லை . ஆனால் ஆங்கிலத்தில் வார்த்தைகளை போட்டு பெரிய அறிவாளி என்று பெயர் எடுக்க வேண்டும் என்ற மலிவான விளம்பர மோகமே உங்களை வாட்டுகிறது . ஒரு அறிவார்ந்த சபையில் அவன், இவன் என்று பேச முடியுமா ? மோடியை கூட அப்படி அழைக்க முடியாது. எவ்வளவு உயர்ந்த நோக்கங்கள் கொண்டிருப்பினும் ஒரு கொலையை நாம் நியாயப்படுத்த முடியாது. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் உங்கள் வார்த்தைகளில் ஒன்றையாவது தெரிவிக்க முடியுமா ?

            • சுகதேவ் என்னென்னமோ பேசுகிறீர்கள், எதற்கு இவ்வளவு பதட்டம் ? நிதானமாக பேசுவோமே. முதலாவதாக அ.மார்க்சுடன் விவாதத்தில் ஈடுப்பட்டுள்ளதாக கூறியுள்ளீர்கள். அவருடன் நீங்கள் என்ன விவாதித்தீர்கள் என்று தெரியவில்லை. அவரைப் பற்றி பொதுவாக அறிந்தவர்கள் இவ்வாறு கூறினால் கூட பரவாயில்லை ஆனால் நீங்களோ அவரிடம் விவாதித்த நபர். அவரிடம் விவாதித்த பிறகும் கூட அவருடைய அரசியலை ம.க.இ.க அரசியலுக்கு ஆதரவானது என்று மதிப்பிட்டிருக்கிறீர்கள் என்றால் அவரைப் பற்றி நீங்கள் இன்னும் அன்னா ஆவன்னாவை கூட தெரிந்துகொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

              அ.மார்க்சின் அரசியல் ம.க.இ.க வின் அரசியலுக்கு ஆதரவானது என்று கூறியுள்ளர்கள் எப்படி என்றும் விளக்குங்களேன்.

              ////அது யுப்பி அல்ல. யப்பி என்று உச்சரிக்க வேண்டும். ஆனால் அது கூட தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் வார்த்தைகளை போட்டு பெரிய அறிவாளி என்று பெயர் எடுக்க வேண்டும் என்ற மலிவான விளம்பர மோகமே உங்களை வாட்டுகிறது////

              எனது இத்தனை பின்னூட்டங்களிலும் ஒரே ஒரு ஆங்கில வார்த்தையை தான் சுகதேவ் பயன்படுத்தியுள்ளேன். ஆனால் நீங்கள் பாருங்கள் character assassination, pleasure என்று ஒரே பின்னூட்டத்தில் இரண்டு வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளீர்கள். உன்னால் ஒரு வார்த்தையை கூட ஒழுங்காக உச்சரிக்கத்தெரியல என்று மட்டம் தட்டுகிறீர்கள். கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள நாங்கள் எல்லாம் அ.மார்க்சை போன்ற அறிவாளிகளாகவா இருக்க முடியும் ?

              ////எவ்வளவு உயர்ந்த நோக்கங்கள் கொண்டிருப்பினும் ஒரு கொலையை நாம் நியாயப்படுத்த முடியாது.////

              எதற்காக இந்த கேள்வியை இங்கே கேட்டிருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. எனினும் பரவாயில்லை.நான் முடியும் என்கிறேன். முடியாது என்றால் ஏன் முடியாது என்று சொல்லுங்கள்.

              ///ஒரு அறிவார்ந்த சபையில் அவன், இவன் என்று பேச முடியுமா ? மோடியை கூட அப்படி அழைக்க முடியாது.///

              எதற்காக இந்த கேள்வியை இங்கே கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இங்கு யாரையும் நான் அவன் இவன் என்று விளிக்கவில்லை. அறிவார்ந்த சபை என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் நீயா நானா நிகழ்ச்சியையா ? ம.க.இ.க பொதுக்கூட்டங்களில் எல்லாம் மோடி தொகாடியா போன்ற பார்ப்பன பயங்கரவாதிகளை எல்லாம் அவன் இவன் என்று தான் பேசுவார்கள்.

              மக்கள் விரோதிகளுக்கும் பாசிஸ்டுகளுக்கு கூட மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே ஏன் என்று விளக்க முடியுமா ?

              ///ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் உங்கள் வார்த்தைகளில் ஒன்றையாவது தெரிவிக்க முடியுமா ?///

              எதற்காக இந்த கேள்வியை இங்கே கேட்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை.

              • சுகதேவ், அம்பேத்

                இருவரும் தனிப்பட்ட வாதங்களில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசுவதை தவிர்த்து விட்டு மையப் பொருள் நோக்கி விவாதிக்கலாமே? சுகதேவ தனது வாதத்தில் அ.மார்சை கொஞ்சம் விமரிசனங்கள் இருந்தாலும் நட்பு சக்தியாக அணுகலாமே என்கிறார். அதை அம்பேத் மறுக்கிறார். இது குறித்து மட்டும் விவாதிப்பதை விட்டு தனிப்பட் முறையில் பொருளற்ற விசயங்கள் குறித்து விவாதிப்பதை தவிர்த்தல் நலம். தோழர்கள் விவாதிக்கும் போது பேசு பொருளை வைத்துக் கொண்டு மட்டும் விவாதிப்பது பயனுள்ளது. பேசும் நபர் குறித்த பிரச்சினையாக அது மாறிவிடக்கூடாது. நன்றி.

                தோழர் சுகதேவ் நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதும் பொருத்தமான தருணத்திலும் பதிலளிக்கிறோம். மார்க்சிய சித்தாந்தம், அதன் கட்சி அமைப்பு முறை, ரசிய புரட்சி, சீன புரட்சி என்று எதையுமே அ.மார்க்ஸ் ஏற்கவில்லை மட்டுமல்ல எதிர்க்கவும் செய்கிறார்.. கம்யூனிசமே மிகப்பெரும் வன்முறை தத்துவம், அமைப்பு என்பதுதான் அவரது நிலை. இது குறித்து எண்ணற்ற நூல்களிலும், கட்டுரைகளிலும் விரிவாகவே எழுதியுள்ளார். தற்போது அமெரிக்காவில் வால் வீதி போராட்டத்தை பற்றி அவர் எழுதும் போதும் தனது கம்யூனிச எதிர்ப்பு நிலை குறித்து பெருமை பட்டுக் கொள்கிறார். இது குறித்து விரிவாக பின்னர் எழுதுகிறோம்.

            • அ.மார்க்சு நம்மிருவரையும் பல முறை விவாதிக்க மறுத்து திட்டி அனுப்பி இருக்கிறார். தீபன் போன்றவர்களையும் இவ்வாறு திட்டி அனுப்பியதை நாமிருவரும் கண்கூடாக பார்த்திருக்கிறோம். கேரக்டர் அசாசினேசனுக்கு பதிலாக கேரக்டர் டெவலப்மெண்ட ஏன் கையில எடுத்திருக்கீங்க சுகதேவ்.

        • // அ.மார்க்ஸ் ஒரு பகை சக்தியா?//

          ட்ராஸ்கி போன்ற மார்க்சியத்தை புரட்டும் துரோகிகளின் அனுபொவத்திர்கு பிறகும் இப்படி கேட்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

  12. நல்லது, தாங்கள் லீனா மணிமேகலை அவர்களை தொடர்பு கொண்டு அவரின் கருத்தை கேட்டு அதனையும் பதிவு செய்து இருக்கலாம். ஏன் செய்ய மனம் இல்லை?

    • உங்கள் கேள்வி என்னவென்று புரியவில்லை. லீனா இந்த வேலையை டாடாவுக்காக செய்திருக்கிறார் என்பதை ஒகில்வி தளத்திலேயும், கேம்பையின் தளத்திலும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மற்றும் டாடாவின் நோக்கம், தேஜஸ்வினி என்ற பெயரில் அக்குழுமம் எடுக்கும் விளம்பரப்படையெடுப்பு எல்லாமே பகிரங்கம்தானே? இதில் யாரிடம் என்னவென்று கருத்து கேட்கவேண்டிய அவசியம் என்ன? ஈராக்மீது அமெரிக்கா படையெடுத்ததை நாம் கண்டிக்க வேண்டுமென்றால் ஜார்ஜ் புஷ்ஷிடம் கருத்து கேட்க வேண்டுமா என்ன? அது வேறு, இது வேறு இல்லை.

      • >> அவரின் கருத்தை கேட்டு அதனையும் பதிவு செய்து இருக்கலாம்

        அவரின் புரிதலையும் உங்களின் வாசகர்களுக்கு, தோழர்களுக்கு சொல்ல.

        >>ஈராக்மீது அமெரிக்கா படையெடுத்ததை நாம் கண்டிக்க வேண்டுமென்றால் ஜார்ஜ் புஷ்ஷிடம் கருத்து கேட்க வேண்டுமா என்ன?

        கண்டியுங்கள். ஆனால் அவன் என்ன சொல்கிறான் என்கின்ற ஒரு செய்தியையும் தாருங்கள். அதை தருவீர்கள் தானே?, அதில் உள்ள குறைகளையும் ஆராய்வீர்கள் தானே? அதை தான் சொல்கிறேன்.

    • இந்த மாசம் புதிய ஜனநாயகத்துல பன்னாட்டு கம்பெனிகளுக்கு வேலை செஞ்ச நாலு புரோக்கர்களை பற்றி கூட தான் வந்திருக்கு அதுக்காக அந்த புரோக்கர்களுக்கெல்லாம் போனைப்போட்டு ஐய்யா நீங்க எல்லாம் அப்படியான்னு கேட்டுக்கிட்டு இருக்க முடியுமா ?

      அது ஒரு பக்கம் இருக்கட்டும். பதிவில் கைக்கூலித்தனத்திற்கு ஆதாரமாக காணொளி இணைக்கப்பட்டுள்ளத, அதை பார்த்த பிறகும் அது உண்மையான்னு ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல என்று பின்னூட்டம் போட எப்படித்தான் முடியுதோ ?

    • சீமாட்டிகள் பின்னூட்டமிடவும் தராதரம் தேவைப்படுமல்லவா ? அது பற்றி என்ன கருதுகிறீர்கள்

  13. வினவு எமக்கு ஒரு சந்தேகம்? நான் லீனா அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்காதீர்.

    நீங்கள் வினவு நண்பர்கள் அனனவரும் செய்யும் தொழில் (பணம் சம்பாதிக்க) பற்றி இங்கே ஏன் வெளியிட வில்லை? வினவே ஒரு முகமுடி தானே?

    2G ஊழல் வெளிவந்ததால் ஒரு புதிய திராவிட தலைவர் கிடைத்துள்ளார் தமிழகத்துக்கு. வேறு ஒன்றும் நடக்கவில்லை நடக்க போவதும் இல்லை. இன்று இந்த தலைவர் தமிழகத்தில் வீர உரை ஒன்றை தந்துள்ளார் என்பது ஒரு சில மணி துளிகளுக்கு முன் வந்த செய்தி. கலைஞர், எனக்கு பின்பு தி. மு.க வை வழி நடத்த ஒரு மாபெரும் தம்பி கிடைத்து விட்டான், நான் இக்கணமே இறக்கவும் தயார் என்று உருகி உள்ளார்.

    நச்சு மரத்தின் வேர்கள் இங்கே மிக மிக ஆழமாக சென்று கொண்டு உள்ளன. ஆனால் நீங்கள் இங்கே ஒரு இலை ஒட்டு இலை என்று சந்தோஷ பட்டு கொண்டு உள்ளீர்கள்.

    • சுகன், கம்யூனிஸ்டுகளாகிய எங்கள் வாழ்க்கை திறந்த புத்தகம். வினவு தோழர்களும், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளில் உள்ள தோழர்களும் எங்களது அமைப்பு விதித்திருக்கும் தகுதி, கடமையின் படியே வாழ்கிறோம். பாட்டாளி வர்க்க பண்பாட்டு நெறிமுறை என்ற புத்தகத்தில் எமது தோழர்கள் எப்படி சொந்த வாழ்க்கையை அதாவது வேலை, திருமணம், குடும்பம், குழந்தை முதலியவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படியே வாழ்கிறோம். வினவே ஒரு முகமூடி என்று நீங்கள் சொல்வதன் பொருள் தெரியவில்லை. வினவோடு தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், அலுவலக முகவரி என்று வெளிப்படையாகத்தான் செயல்படுகிறோம்.

      அடுத்து இந்த உலகத்தில் யார்தான் யோக்கியன் என்று சலித்துக் கொள்வதன் மூலம் அநீதிகளை ஏற்றுக் கொண்டு சமரசப்படுத்தி வாழ்வதை உங்கள் விளக்கம் நியாயப்படுத்துகிறது. லீனா மணிமேகலைக்காக நீங்கள் அப்படி ஒரு சலுகையை அளிக்க விரும்புகிறீர்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய டாடாவின் ஆதிவாசி மக்களை அழிக்கும் திட்டத்திற்கு தேவைப்படும் மனித நேய முகமூடி வேலையை லீனா செய்திருக்கிறார்.ராசா வேறு, லீனா வேறு இல்லை. நிதானமாக யோசித்துப் பாருங்கள். சமரசமில்லாமல் இந்த உலகில் வாழ்பவர்களை சந்திக்க வேண்டுமென்றால் நேரில் எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள், விவாதிக்கலாம். நன்றி

      • //வினவே ஒரு முகமூடி என்று நீங்கள் சொல்வதன் பொருள் தெரியவில்லை.//
        யார் இந்த பதிலை அளித்த தோழர் என்று பெயர் வெளியிடலாமே? அதை தான் வினவு என்கின்ற முகமுடி என்று சொன்னேன். மற்றபடி உங்களின் வாழ்க்கை, உங்களின் செயலில் நம்பிக்கை இல்லையெனில் இங்கு எனக்கு என்ன வேலை.

        எனக்குள்ள ஒரே வருத்தம், பல சமயங்களில் நீங்களே கேள்வியும் கேட்டு, பதிலும் அளித்து திருப்தி பட்டு கொள்வது தான்.

        //அடுத்து இந்த உலகத்தில் யார்தான் யோக்கியன் என்று சலித்துக் கொள்வதன் மூலம் அநீதிகளை ஏற்றுக் கொண்டு சமரசப்படுத்தி வாழ்வதை உங்கள் விளக்கம் நியாயப்படுத்துகிறது. லீனா மணிமேகலைக்காக நீங்கள் அப்படி ஒரு சலுகையை அளிக்க விரும்புகிறீர்கள்.//

        எனது எண்ணம் அதுவல்ல. எனக்கு அவருக்கு வக்காலத்து வாங்க வேண்டும் என்ற தேவை இல்லை.

        நமது எதிர்ப்பு, ராசாவை எப்படி ஒரு பெரிய திராவிட தலைவராக மாற்றி உள்ளதோ, (நீங்கள் என்னுடைய கணிப்பில் இங்கு வேறுபடலாம், ஆனால் காலம் எது உண்மை என்று நமக்கு காட்டத்தான் போகிறது), அதுபோல லீனா அவர்களையும் ஆக்கிவிட கூடாது

        //சமரசமில்லாமல் இந்த உலகில் வாழ்பவர்களை சந்திக்க வேண்டுமென்றால் நேரில் எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள், விவாதிக்கலாம். நன்றி//

        தங்கள் அழைப்புக்கு நன்றி.

        நான் கம்னிஸ்ட் இல்லை, இருந்தாலும் ஜீவா அவர்களை நெஞ்சில் நிறுத்தி வாழும் எனக்கு உங்களை சந்திப்பதில் ஒரு தடங்களும் இல்லை. ஆகவே கண்டிப்பாக வருவேன்.

    • இணையத்தில் உங்கள் ஐடி உங்களுக்கு ஒரு முகமூடி. கம்யூனிஸ்டுகளுக்கு வினவு முகவரி. முகமூடிகளால் தன்னை மறைக்க நினைப்பது போலி அறிவுஜீவித்தனம். லீணா என்ற பெயரை வைத்துக் கொள்வது முகம் என்றால் பெண்ணியவாதி அதன் முகவரி என்றால் டாடாவுக்கு படம் எடுத்த்து பெண்ணியவாதி என்ற முகவரியில் இல்லையா. இப்படி கேவலமான முகமூடிகளால் சாயம் அடிக்கப்பட்ட முதலாளித்து சேவைக்கு வக்கலாத்து வாங்குவதற்கு கொஞ்சம் மனதிட்பம் வேண்டும்தான்
      நச்சுவேர்களை அரித்துத் தின்னும் அமைப்பில் ஒட்டு இலைகள் பதியன்களாக மாறி புதிய மரங்களாக தளிர்ப்பதுதானே இயற்கை அறிவியல்.

      • நல்லது, தங்களின் கருத்துக்கு நன்றி. லீனா அவரின் இந்த செயல் பற்றி தனது வலைபூவில் எழுதியுள்ளார், நான் அவருக்காக எழுத தேவையில்லை.

  14. வினவு தோழர்களுக்கு !

    இங்கு பின்னோட்டம் விடும் பிரகஸ்பதி வேறு யாரும் அல்ல , பாரிஸ் இல் வாழும் யாழ்பாணம் , வட்டுகோட்டையை சேர்ந்த சுகன் என்பவரே . இலங்கை அரசின் ஹெலிகளிலும் , ராணுவ

    விமானங்களிலும் பறந்தபடி தலித்தியத்தை முக மூடியாக பாவித்தபடி, இலங்கை அரசுக்கு முண்டு கொடுப்பவர் . சோபாசக்தி போன்றவர்களை போல பொய் தலித்திய முக மூடி அணிந்த மேல்சாதி கனவான் இவர் .

    இவரும் இவரை சேர்ந்த கும்பலும் ஆனா. மார்க்சை மிக விரைவில் யாழ்பாணம் அனுப்ப போகிறார்கள் . அவர் அங்கு தனது மார்சிச எதிர்ப்பு வேலையே மேற்கொள்வார் . இந்த ஆனா . மார்சினால் அரசியல் ரீதியாக சிதைக்கபட்டவர்கள் பலர் . ஆனா . மார்சினால் தத்துவ கொலை செய்ய வெளியிடப்பட்ட நிறபிரிகயினால் சிதைக்கபட்ட முன்னாள் முற்போக்கு சக்திகள் பலர் .

    லீனாவின் அங்கிடுதத்தி வேலைகளுக்கு நியாயம் கர்பிப்பதன் மூலம், தமது சுத்து மாத்துகளையும், உழைக்காமல் அரச மானியத்தில் வாழும் தந்திரங்களையும் , INGO பணத்தில் உலகம் சுற்றி பார்ப்பதையும்

    நியாயப்படுத்துவதற்கே. பெண்ணிலை வாதி லீனாவின் மேற்படி நண்ன்பர் சிகன் எவ்வளவு சீதனம் வாங்கி திருமணம் செய்தார் என்ன்பதும் ஊருக்கு தெர்யும் .

    • தங்களின் புரிதல் மிக தவறானது நண்பரே.

      பெயரை வைத்து என்னை இவர்தான் என்று முடிவு பண்ணி, குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கி மகிழ்வது ஏனோ? இது தமிழன் என்கின்ற இனத்தின் ஈச குணம். நீங்கள் என்ன செய்வீர்?

      நான் என்னை பற்றி பீற்றி கொள்ள விரும்பவில்லை. இருந்தாலும் சிலவற்றை சொல்ல வேண்டியது எனது கடமை.

      நான் தமிழகத்து தமிழன். நான் கம்யூனிஸ்டு அல்ல, ஆனால் வாழ்கை முறையில் அவர்களுக்கு ஓன்று சளைத்தவன் அல்ல.

      நீங்கள் சொல்லிய குற்றசாட்டுகளை எனது பிணம் கூட செய்யாது.

      • சளைத்தவன் இல்லை என்று நீங்களே சொல்வதால் கேட்கிறேன். அந்த செயல்பாடுகளை விழுமியங்களை பட்டியலிட்டால் ஒப்பிட்டு உய்த்துணர உதவுமே ஐயன்மீர்.

        • அதை நானாக செய்ய விரும்பவில்லை. ஒருநாள் உங்கள் வினவு தோழர்களே உங்களுக்கு விளக்குவார்கள்.

      • சரி , நீங்கள் அந்த சுகன் இல்லை என்றே வைத்துகொள்வோம் . ஆனாலும் நான் இதில் தலித்தியம் கதைத்தபடி , ஆனா மார்சுக்கு குடைபிடித்தபடி லீனா மணிமேகலைக்கு விளக்கு பிடிக்கும் சுகன் என்ற பிரகஸ்பதியை பற்றி எழுதியதில் எந்த தவறும் இல்லை . வினவு , லீனா M மீது வைத்துள்ள விமர்சனத்தை சாட்டாக வைத்து கொண்டு, சுகனும், புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தபடி , ஆனா மார்சின் கழிவறை காவலர்களும் வினாவு மீதும் , அனைத்து மார்சிச லெனினியர்கள் மீதும் அவதூறை அள்ளி வீசுகிறார்கள், வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல …

        • //சரி , நீங்கள் அந்த சுகன் இல்லை என்றே வைத்துகொள்வோம். //
          நண்பரே,என்ன வைத்து கொள்வோம். அது தான் உண்மை.

          நீங்கள் அந்த சுகன் பற்றியும் சந்தேகபடுங்கள், இந்த சுகன் பற்றியும் சந்தேக படுங்கள். அண்ணல் உண்மை என்ன என்று அறியவும் முற்படுங்கள்.

          சந்தேகம் உங்கள் மனதில் இருக்கட்டும், உங்கள் செயல் அதில் உள்ள உண்மையை அறிய முயலட்டும். தெளிவு கிடைத்தவுடன் அதனை தாங்கள் மற்றவருடன் பகிரிந்து கொள்ளுங்கள் அதுதான் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது.

          என்னுடைய சந்தேகம், என்னை தாங்கள் புரிந்த மாதிரி, அந்த சுகன்னையும் தாங்கள் தவறாக ஏன் புரிந்திருக்க கூடாது?

          • ///என்னுடைய சந்தேகம், என்னை தாங்கள் புரிந்த மாதிரி, அந்த சுகன்னையும் தாங்கள் தவறாக ஏன் புரிந்திருக்க கூடாது?///

            சுகனை பற்றி ராஜமோகன் கூறுவது முற்றிலும் சரியானது. அவர் இன்னொரு சோபா சக்தி. அ.மார்க்ஸ் கோஷ்டி, மார்க்சிய எதிர்ப்பாளர்.

            நீங்கள் பிரான்ஸ் சுகனா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் சுகன் அது இப்போது இங்கே தேவையற்றது. லீனா மேடம் செய்த புரோக்கர் வேலையை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள். அதைப்பற்றி தான் நாம் இங்கு விவாதிக்க வேண்டும் அது தான் இங்கு விவாதப்பொருள், எனவே அதை பற்றி பேசுவோமா ?

      • நீங்கள் பேசிக்கொள்வதைப் பார்த்தால் நூல் உலகம் சுகனை நிச்சாமம் சுகனுடன் குழப்பிக்கொண்டது போலத் தெரிகிறது

  15. பாவம் சுகன் என்ற நீங்கள் ,

    எந்த நியாய தர்மத்துக்கும் கக்கூஸ் பேப்பருக்கு தரும் மரியாதையைத்தான் இவர்கள் தருவார்கள் என்பது தெரியாமல் வாதாடி கொண்டு இருக்கிறீர்கள்
    என்னமோ இவர்கள் தொடர்ச்சியாக லீணா மணிமேகலையை பற்றி எழுதினால் அவர் ஆ./ராசா அளவுக்கு பெரிய தலைவராகி விடுவாரெண்டெல்லாம் அடிச்சு விடுறீங்க.

    இது மட்டுமல்ல ஏற்கனவே இவர்கள் லீணா மணிமேகலையை பற்றி எழுதிய அனைத்து பதிவுகளையும் படித்து விட்டு மேலும் உண்மை தமிழன் போன்றோர் எழுதிய பதிவுகளையும் படித்து விட்டு வந்தீர்கள் என்றால் இந்த கட்டுரைக்கு உங்களுக்கு விளக்கம் கிடைக்கும் .

    மற்றபடி சொல்வதற்கு ஏதுமில்லை – சுவற்றோடு மண்டையை போட்டு முட்டிக்காதீங்க

    இரவு வணக்கம்

    • தோ பாருடா நல்லவரை, தியாகு ஐடியில வந்து அதிமான்ட நல்லவனா பேசிட்டு வேறு பேருல வந்து அசிங்கமா திட்டுன அயோக்கியப் பயலே, எதுக்கு இங்க வந்து இப்படி வேசங்கட்டி ஆடுற? ஓடிப்போயிரு

  16. உண்மை தமிழன் பதிவில் இருந்து

    http://truetamilans.blogspot.com/2010/04/blog-post_17.html#ixzz1xn8cV73k

    //பேசிய இந்தத் தோழராவது சரியாகப் பேசியிருக்கலாம். இந்து மக்கள் கட்சியை எதிர்த்தும், குஜராத்தில் முஸ்லீம் பெண்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் பேசியவர் சட்டென்று டிராக் மாற்றி லீனாவிடம் ஒரு கேள்வி கேட்பதாகச் சொல்லி ஒரு ‘நயமான, நாகரிமான’ கேள்வியை எழுப்ப.. அதைக் கேட்டு சட்டென்று உஷ்ணமான லீனா ஏதோ சொல்லிக் கொண்டே முன்னால் வர.. ஆதரவுக் கூட்டமும் அவர்களை நெருக்க.. அமர்ந்திருந்த ஒட்டு மொத்தத் தோழர்களின் கூட்டமும் மேடைக்கு ஓடியது..

    அப்புறம் நடந்ததெல்லாம் தூர்தர்ஷன்ல வர்ற டிவி சீரியல் மாதிரிதான். கேமிராவை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திட்டு கேமிராமேன் தூங்கப் போயிருவாரு.. வசனம் பேச வேண்டியவங்களெல்லாம் கேமிரா முன்னாடி வந்து பேசிட்டுப் போயிருவாங்க.. ‘டாக்கிங் போர்ஷன் முடிஞ்சிருச்சு’ன்னு கேமிராமேன்கிட்ட வந்து சொன்ன பின்னாடி கேமிராமேன் எந்திரிச்சு வந்து கேமிராவை ஆஃப் பண்ணிட்டு ஸ்டேண்டை ரிமூவ் பண்ணிட்டு அப்புறமா குளோஸப் ஷாட் எடுக்கத் தொடங்குவாரு..

    இதே மாதிரிதான்..! அதுவரைக்கும் வாட்ச் பண்ணிக்கிட்டிருந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் “கூட்டத்தை முடிங்க.. பெர்மிஷன் சஸ்பெண்டட்.. ஆல் ஆப் கெட் அவுட்..” என்றபடியே உள்ளே வந்து வரிசை, வரிசையாக இருப்பவர்கள் எழுப்பிவிட்டவர், தைரியமாக கூட்டத்துக்குள் புகுந்து இரு தரப்பினருக்கும் நடுவில் நின்று கொண்டார்.

    //

    நயமான, நாகரிமான’ கேள்வியை எழுப்ப. என்ன கேள்வின்னா என்ன வென மண்டையை பிச்சுக்காதீங்க நெம்ப அசிங்கமான கேள்வி அது அதுக்கு பிராய சித்தமாக இப்ப ஆதாரம் தேடி தேடி கண்டு பிடிக்கிறாங்க

    • அயோக்கியப் பயலே, நிப்பாட்டு, கூட்டத்துக்கு போன எனக்கு தெரியாதா? உன் அனுபவத்தை சொல்லுன்னு பகிரங்கமா மைக்குல கேட்டாங்க, அதை இதே வினவுலயும் இதத்தான் கேட்டோம் எழுதிட்டாங்க.

      போன் ஒயர் பிரிஞ்சு ஒரு வாரம் ஆச்சு நீ பொத்திட்டு போ

    • நல்லா கேட்டுக்க தியாகு, உன்னை இந்த பதிவுலகில ஒரு சொறிநாய் கூட சிண்டுவதில்லை. நீ ஒரு அட்ரஸ் இல்லாத கோமாளி, பர்மனென்டு காமெடி பீசு கொஞ்ச நாள் மகஇகவுக்கு சொம்படிச்ச, அப்புறம் வினவுல உனக்கு ஆப்பு வச்சப்புறம் லீனாவுல ஆரம்பிச்சு போற வரவனுகெலெலாம் சொம்படிக்குற. சுய சிந்தனைக் கூட இல்லாத தற்குறி நீ. உனக்கெல்லாம் பின்னூட்டம் போட வினவுல எடம் கொடுக்குறாங்க பாரு அந்த தோழர்களை சொல்லனும்.

      வெட்டிப்பய வெட்டிப்பய இவனையெல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சு நான் கூட தோழர்னு கூப்பிட்டிருக்கேன் பாரு, சை வாந்தி வாந்தியா வருது

    • நல்ல லிங்கு குடுத்தடா கோமாளி, அந்த உனாதானா பதிவு பின்னூட்டத்துல தோழர்கள் லீனாவின் சொம்புகளுக்கு கொடுத்த அடியுல சொம்புகள் நல்லா நெளிஞ்சு போச்சு.. சபாசுடா கோமாளி. வெறி குட் லிங்

    • தன்னைப் புணர்ந்த கம்யூனிச ஆண்குறிகளைப் பற்றி கவிதை எழுதிய கவிதாயினியிடம் சரிங்க உங்களை புணர்ந்த கம்யூனிச ஆண்குறிகளைப் பற்றி இங்க விலாவாரியா சொல்லுங்கன்னு கேட்டதெல்லாம் ஒரு தப்புன்னு ஒரே ரிக்கார்டை ரெண்டு வருசமா தேய்க்கும் இந்த அயோக்கிய கோமாளி தியாகுவுக்கு எப்பதான் சூடு சுரணை வரும். ஏன்னா ரெண்டு வருசமா பல பேரு காறித்துப்பியும் வரமாட்டேங்குதேன்னு கேக்குறேன்

      • அவதானி, ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்?

        எங்கள் தியாகுருவைப் பாருங்கள். அவரும் ஒரு ‘கம்யூனிஸ்டு’ தான் ஆனால், செருப்பாலடித்தாலும் கோபித்துக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப வந்து மூஞ்சியை நீட்டுவார். தோழர் இயேசுவுக்குப் பின் செருப்படிக்கு மறுகன்னம் காட்டும் ஒரே தோழர் எமது தியாகுரு தான்.

        அரசியல் நேர்மை என்றால் என்னவென்று எங்கள் தியாகுருவைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள். இந்தப் பதிவில் கூட மேன்மைமிகு ஸ்ரீமதி லீணாவின் பாதம் நக்கித் தின்னும் கைக்கூலித்தனம் பற்றி ஆதாரபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது – ஆனால், அதைப் பற்றி தன்னுடலில் இருக்கும் ஒரு துவாரத்தைக் கூட திறவாமல் ‘விவாதம்’ நடத்துகிறார். அதற்குப் பெயர் தான் அரசியல் நேர்மை. CWP பிராண்டு ‘கம்யூனிசம்’.

        அது என்ன CWP என்று அனேகருக்கு சந்தேகம் இருக்கலாம், படைப்பில் இருந்து சந்தேகம் கேட்க வேண்டுமென்றால் படைப்பில் இல்லாதவொன்றைக் கேட்க வேண்டுமென்கிற உயரிய இலக்கிய கோட்பாடுகள் கொண்ட உன்னதக் கட்சி தான் CWP. திருவாளர் குயாதியைக் கேட்டீர்களென்றால், சுசி என்கிற பிய்ந்த செருப்பிலிருந்து அறுந்து விழுந்த மொக்கை பீஸு என்று மரியாதையின்றி சொல்வார்.

        தியாகுருவின் அரசியல் சாநக்கியத்தனத்தைப் பார்த்தாவது நீங்கள் திருந்துங்கள். லீணாவை செருப்பால் அடிக்க வேண்டுமென்று தனிமடலில் பொங்கி விட்டு பொது இடத்தில் கேள்வி கேட்டதே தப்பு என்பது தான் சாநக்கியதனம் – அல்லது காரல்மார்ஸ் பெயரில் அவதூறும் தியாகு எனும் பெயரில் சொரிதலும் செய்வது கூட சாநக்கியத்தனம் தான்.

  17. ராஜ நடராஜன்னு ஒருத்தர் கமெண்டு போட்டார் இப்படி

    //பரபரப்புக்காக பத்திரிகை தலைப்பு மாதிரி நீங்கள் பெயர் சூட்டும் போதே லீனா மணிமேகலை மீதான உங்கள் வன்மம் தெரிகிறது.பெண் நுகர்வுப்பொருளாகவும்,ஆண் ஒரே நேரத்தில் 20 பேரை எம்பிக் குதித்து உதைத்து விடுவதாகவும் உள்ள இந்திய சினிமாவுக்கு மாற்றாகவும் வினவு சிந்தனைகளுடன் இணைந்து பயணம் செய்கிற மாதிரியான மாற்று இந்திய சினிமாவின் தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் லீனா மணிமேகலை.உங்கள் எழுத்தின் முரண் வியப்பையே தருகிறது.//

    அவரையும் சொம்படிக்கிறேன்னு சொல்லிட்டானுக

    சோ சொம்படிக்கிற , அல்ல கை போன்ற அரசியல் விவாத கலைச்சொற்களை நீக்கி விட்டால் இவர்களுக்கு விவாதிக்க ஒன்றுமிருக்காது 🙂

    • எலேய் கோமாளி, நீயும் சரி, அந்த ராச நடராசனும் சரி, லீனா டாடாகிட்ட துட்டு வாங்கி மக்களுக்கும் தான் இதுநாள் வரை பேசிய கொள்கைக்கும் துரோகம் இழைத்ததை பற்றி ஒரு வார்த்தை பேசல.

      பதிவுலயே எழுதியிருக்குற படி, இந்த நேரத்துலகூட ஒரு இழி செயலை கண்டிக்க துப்பில்லாதவனெல்லாம் மேடம் லீனா மணிமேகலை புளிச் புளிச்சுனு எச்சி துப்புற பித்தளை சொம்புதான்

  18. Capitalism : A Ghost Story – Arundhati Roy.

    ///Armed with their billions, these NGOs have waded into the world, turning potential revolutionaries into salaried activists, funding artists, intellectuals and filmmakers, gently luring them away from radical confrontation, ushering them in the direction of multi-culturalism, gender, community development—the discourse couched in the language of identity politics and human rights.///

    ///Though the Tatas have been involved with corporate philanthropy for almost a hundred years now, endowing scholarships and running some excellent educational institutes and hospitals, Indian corporations have only recently been invited into the Star Chamber, the Camera stellata, the brightly lit world of global corporate government, deadly for its adversaries, but otherwise so artful that you barely know it’s there.///

  19. ஒரு தவறை நீங்கள் ஒத்து கொள்கறீர்களா? என்கே கோவம் உள்ளதோ அங்கே சிந்தனை இல்லாமல் போகும். காரல்மார்ஸ், லெனின், கம்யூனிஸ்ட் என்று அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டு தான் அடங்குவீர்கள்.

    • நீங்க தான் ரொம்ப கோவமா இருக்கீங்க சுகன். உங்களுக்கு தான் ஏதோ பிரச்சினை. லீனா செயல்பட்டது தவறு என்று நீங்களே கூறியுள்ளீர்கள் மேற்கொண்டு இந்த விககாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.

  20. அறங்காவலர் காசு கண்ணன் ஒரன் பாமுவின் நாவலுக்கு அல்ஜிரியா அரசுவிடமும் ‘சோபியின் உலகம்’ நாவலுக்கு 130000 நோர்வே அரசிடமும் பில் போட்ட கதை தெரியுமா? இப்போ பெருமாள் முருகன், சலபதி, அதியமான், நஞ்சுண்டான், ஸ்டாலின் ராஜாங்கம் என சகட்டு மேணிக்கு எல்லாருக்கும் இரண்டு ப்ரொஜெக்ட்.

  21. சுக்தேவ்,

    நுணுக்கமான ஆங்கில உச்சரிப்பைக் கூட கவனித்து திருத்தும் உங்கள் புலமை என்னை பிரமிக்க வைக்கிறது. மேலே உங்களுடன் உரையாட முன்வந்த தோழருக்கு உங்கள் அளவுக்கு ஆங்கிலப் புலமை இல்லை தான். ஆனால், அவரிடம் வேறு ஒன்று இருக்கிறது – அது என்னவென்று இறுதியில் சொல்கிறேன்.

    நீங்கள் மையமாக முன்வைப்பது என்ன? அ.மார்க்ஸை கட்டுரை விமர்சித்திருக்கும் முறை உங்களுக்கு ஒவ்வாததாக இருப்பதாக கருதுகிறீர்கள் அல்லவா? அறிவுத் துறையினர் பற்றிய இளக்காரமான வார்த்தைப் பிரயோகங்கள் உங்களுக்கு மனவலியை உண்டாக்குகிறதல்லவா?

    நல்லது சுகதேவ். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன், பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்து பல லட்சக்கணக்கான மக்களை சொந்த நாட்டிலேயே உலவ விட்டுள்ள இரத்த வெறி பிடித்த ஸ்தாபனமான டாடா கம்பெனியிடம் கைக்கூலி பெற்று அவனது சமூக விரோதச் செயல்களுக்கு முட்டுக் கொடுத்துள்ளார் லீணா மணிமேகலை.

    யார் இந்த லீணா மணிமேகலை? பின்னவீனத்துவ அறிவுஜீவியான அ.மார்க்ஸ் போன்றவர்களால் பெண்ணுரிமைப் போராளி என்று விதந்தோதப்படுபவர். அவரது சீடர் என்றும் இலக்கிய வட்டாரத்தில் அறியப்படுபவர்.

    நீங்கள் அறிவுத்துறையைச் சேர்ந்தவர் என்று விளிக்கும் அ.மார்க்ஸ், உண்மையிலேயே அறிவு நாணயம் கொண்டவராயிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? மக்களைக் கொன்ற ரத்தக் காசை வாங்கக் கூடாது என்று லீணாவுக்கு வழிகாட்டியிருக்கலாம். அல்லது, அவரது கவனத்திற்கு வராமல் லீணா இந்த வேலையைச் செய்திருந்தால் அதை பகிரங்கமாகக் கண்டித்திருக்கலாம்.

    தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போல் ‘உண்மையறியும்’ அறிக்கைகளை ஊடக வெளிச்சத்துக்கிடையே சமர்பிப்பவர் அல்லவா? உள்நாட்டில் லட்சக்கணக்கில் அகதிகளாய் அலையும் மக்கள் தங்கள் வாழ்விடத்தில் வாழ்வதற்கான உரிமையை மனித உரிமை கணக்கில் அவர் சேர்க்கவில்லையா என்ன. அதைத் தானே கட்டுரை கேள்விக்குட்படுத்துகிறது? சரி உங்கள் பிரச்சினை ‘இளக்காரமான வார்த்தைப்’ பிரயோகம் அல்லவா?

    மார்க்ஸ் பிறந்தார் படித்திருப்பீர்கள் தானே சுக்தேவ்? அதில் அற்பவாத அறிவுஜீவிகளை மார்க்ஸ் (தமிழ்நாட்டு அ.மார்க்ஸ் அல்ல) விமர்சிக்கும் முறையைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும். கார்ல் மார்க்சின் பல்வேறு நூல்களில் அறிவுத்துறை அற்பர்களைக் குறித்து அவர் எழுதியதன் தொனி எப்படியிருந்தது என்று நினைவிலிருக்கிறதா?

    எங்கள் ஆசான்களை லீணா இழிவு படுத்திப் பேசியதைக் கண்டித்ததற்கு கூட்டம் போட்டு ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு துடிதுடித்துப் போன அ.மார்க்ஸ், இன்றைக்கு ஆழ்ந்திருக்கும் மௌனத்தின் பெயர் என்னவென்று எமக்குத் தெரியவில்லை – உங்களுக்குத் தெரியுமா?

    மக்கள் விரோதிகளோடும் கார்ப்பரேட் கொலை வெறியர்களோடும் So called அறிவுத்துறையினர் கள்ளக் கூட்டு கட்டும் துரோகத்தனத்தைப் பற்றி நினைக்கும் போது உங்கள் மனம் என்னவிதமான உணர்ச்சி கொள்ளும் சுகதேவ்? எமக்கு ஆத்திரம் பற்றியெறிகிறது. சிதறிய அந்த ரத்தத் துளிகள் எம் கண்கள் முன்னே வந்து போகிறது. எமது வாசகர்களுக்கு எமது கருத்தையும் அதனூடாய் இந்த துரோகத்தின் ஆழத்தையும் உணர்த்த எந்த வார்த்தைகள் தேவையோ அந்த வார்த்தைகளையே கட்டுரையாளர் பயன்படுத்தியிருக்கிறார்.

    சரி அது இருக்கட்டும் சுக்தேவ், உங்களிடம் நட்பு ரீதியிலும் தோழமை ரீதியிலும் உரையாட முன்வந்த தோழர் அம்பேதிடம் நீங்கள் காட்டிய மதிப்பு என்ன? ஆங்கிலத்தில் வார்த்தைகளைப் போட்டு அறிவார்ந்தவர் என்கிற பெயரெடுக்கத் துடிப்பவர் என்று சொல்கிறீர்கள். மலிவான விளம்பர மோகம் கொண்டவர் என்று முத்திரை குத்துகிறீர்கள். ஒரு சாதாரண வார்த்தை – யுப்பியோ யப்பியோ டப்பியோ – என்னவாக இருந்தால் என்ன? அ.மார்க்சின் போலித்தனமான அறிவுஜீவித்தனத்தை இடித்துறைக்க அவர் பயன்படுத்தியிருக்கிறார்?

    உங்களுக்கு அது பயன்படுத்தப்பட்டதில் அரசியல் ரீதியிலான மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவித்திருக்கலாம் – ஆனால் என்ன செய்தீர்கள்? உங்களோடு உரையாடும் ஒருவரின் கருத்தை மறுக்காமல் அவரை இழிவு படுத்துகிறீர்கள். உண்மையில் இதற்குத் தேவை என்ன?

    மக்கள் விரோதிகளை நாம் கையாளும் விதம் இது தான். Period. இது கர்நாடக சங்கீதம் இசைக்கும் சங்கீத அகாடமி சபா அல்ல – பறையொலிக்கும் சேரி. இங்கே இப்படித்தான் இருக்கும் . நம்மிடம் இந்தளவுக்குத் தான் ‘தரம்’ இருக்கும். அதற்காக நாம் பெருமைப்படலாமே அன்றி வெட்கப்படுவதற்கு என்ன தேவை இருக்கிறது?

    என்ன கேட்டீர்கள்? இதை ஒரு டி.வி பேட்டியில் சொல்ல முடியுமா என்றா?

    அந்தக் கேள்வி இன்னமும் எஞ்சி இருக்கிறதா என்ன?

    • தோழர் மன்னார்,

      லீனா மணிமேகலையை வினவு அம்பலப்படுத்தியதையும், அ. மார்க்சிடம் பதில் கோரியதையும் நான் ஆதரிக்கிறேன். அதன் பிறகு கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் மீதே என் எதிர் கருத்தை தெரிவித்தேன். தோழர் அம்பேத் எனது பின்னூட்ட கருத்துக்களை பிய்த்து போட்டு தினமலரின் டவுட் தனபாலு போல ஒவ்வொன்றிலும் ஒரு கேள்வியை தொங்க விட்டுள்ளார். குறிப்பாக அவர் வாதங்களின் தொனி என்பது இப்படி இருக்கிறது. நான் பின் நவீனத்துவம் என்றால், அவர் என்ன பின் நவீனத்துவம்? என்று கேட்பது, நான் அரசியல் என்றால், அவர் என்ன அரசியல் ? என்று கேட்பதாக உள்ளது. யப்பி என்று நான் அவரை திருத்தியது தோழர் அம்பேத்தையும், இந்த விவாதத்தை கவனித்து கொண்டிருக்கும் தோழர்களையும் புண்படுத்தி உள்ளதை அறிகிறேன். அதனை தவறு என உணர்ந்து என்னை திருத்தி கொள்கிறேன். விமர்சனங்கள் கடுமையாக இருப்பது பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை. என்னுடைய பதிலடிகளும் எப்போதும் கடுமையாகவே இருக்கும். ஆனால் ‘லீனா கழிந்தது’ என்கிறார் அம்பேத். நம்மிடம் ஒருவன் ‘குடித்து’ விட்டு பேசினால் நாமும் ‘குடித்து’ விட்டு தான் பேச வேண்டுமா?
      வினவு தனது பதிலில் அ மா பற்றி விரிவாக எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார். அ மா போன்றவர்கள் தமது எழுத்தின் மூலமாகவே அதிகம் அறியபடுபவர்கள். எனவே அவரை படித்து விமர்சிப்பதையும், நிராகரிபதையுமே நான் விரும்புகிறேன். அதனால் தான் ‘அ மா கும்பல்’ போன்ற வார்த்தைகள் மீது எனது அதிருப்தியை வெளிப்படுத்தினேன். மேலும் தமிழ் இலக்கியத்தில் பார்ப்பன சைவ வேளாள கூட்டணி இன்று ஆட்சி செலுத்துகிறது. இதற்கு எதிர் தரப்பில் அ மா போன்றவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் வினாவை துவேசத்துடன் எதிர்ப்பது போலவே அ மா வையும் ஜெமோ வகையறா எதிர்க்கிறார்கள். சுஜாதா பற்றி எழுத முனைந்ததற்காக உயிர்மையில் அ மா எழுதும் வாய்ப்பு பரி போனது. பெரியாரை பார்ப்பன சேவை மனப்பான்மையுடன் சிவகாமியின் புதிய கோடாங்கி இழிவுபடுத்திய போது அவர் அங்கிருந்து வெளியேறினார். ஈகோ பாக்டரி என்று இதனை குறிப்பிட முடியாது என்கிறேன். இது அ மாவுக்கு வக்காலத்து வாங்கும் வாதமல்ல. ஆனால் நமது விமர்சனம் ஒரு பிரச்சினையின் nuances ஐ கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜ் பாணியில் பேசுவதில் இருக்கும் சிக்கல்களை உணர்த்துவதே எனது முதல் இரண்டு பின்னூட்டங்களின் சாரம். விவாதத்தில் எனது தவறை சுட்டிக்காட்டிய தோழர் வினவு மற்றும் தோழர் மன்னார் ஆகியோரின் கருத்துக்களை மதிக்கிறேன். தோழர் அம்பேத்தை நேரில் சந்திக்க நேர்ந்தால் கைகுலுக்கவே விரும்புகிறேன். அரசியல் உறவின் முக்கியத்துவத்தை பணியிடத்திலும் உணர்ந்தவன் என்ற முறையில் இதனை தெரிவிக்கிறேன்.

  22. “ஆனால் அந்த பின்னூட்டங்கள். அதை தமிழ் உளவியலை அறியநினைப்பவர்கள் கண்டிப்பாக வாசிக்கவேண்டும். என்னென்ன வசைகள். எத்தனை வன்மம். பெரும்பாலும் புனைபெயர்களில். மாறிமாறி கடித்துக்கிழித்துக்குதறி….

    தமிழில் இந்த அளவுக்கு கீழ்த்தரமான வன்மம் வேறெங்காவது வெளிப்படுகிறதா என்றே ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களெல்லாம் யார்? என்ன வகையான மனநிறைவை இதிலிருந்து பெறுகிறார்கள்? என்னென்ன வகையான பாவனைகள், பிரமைகள். புரட்சியின் உச்சியில் நின்று அடுத்தக்கணம் போர்க்களத்தில் உயிர்துறக்கப்போகிறவர்களைப்போல. சமூகப்புரட்சிக்காக தெருவிலே வியர்வை சிந்துபவர்களைப்போல.

    ஆனால் இவர்களுக்கு தங்களைத்தவிர பிற அனைவருமே போலிகள் ‘சொம்புகள்’. தாங்கள் என்ன, தான் மட்டுமே. ஒரு தற்காலிக தேவைக்காக நான்குபேர் சேர்ந்து கொள்கிறார்கள். அந்த புரட்சிகர சுயபாவனை என்பது முழுக்கமுழுக்க பிறரை வரைமுறையில்லாமல் வசைபாடுவதற்கான ஒரு சாக்கு மட்டுமே. அந்த ‘பிறர்’ சொல்வதற்கும் தாங்கள் சொல்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது கூட இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.”

    http://www.jeyamohan.in/?p=28057

    • சீனு

      எப்பெல்லாம் வினவுல உருப்படியா எதாவது நடக்குதோ அப்பெல்லாம் சுமோவுக்கு வயிரு புடுங்கி வினவு மேல விழுந்து புடுங்கும் என்பது வரலாறு. இன்னிக்கு வினவு மேல பாஞ்சிருக்குன்னா சமீபத்துல வினவு எழுதிய வழக்கு எண் சினிமா விமரிசனத்தை பார்த்து வயிறெறிஞ்சு போயிருக்கும் போல அதனாலத்தான் இப்படி ஒரு அஜென்டா,

      ஜெமோவுக்குத்தான் அஜென்டா பிரச்சனை, எதாச்சும் சொல்லலேன்னா கார்த்தால பிரசவம் ஆகாது, உமக்கென்னய்யா வந்தது? நீர் இத்தனை நாளாய் இங்கே இருப்பவர்தானே, இந்த பதிவு பின்னூட்டத்துல இருப்பதெல்லாம் ஒரு வசவா? எத்தனையோ பதிவுல இரத்த ஆறு ஓடியிருக்கு, இங்க ஒரு தீசலான ஓழுகுலுக்குக்கூட வழியில்ல.

      இந்த வன்முறை, ம*று, மட்டை பத்தியெல்லாம் சொல்ல ஜெமோவுக்கு என்ன தகுதியிருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க, இருக்கறவன் செத்தவன் எல்லாருக்கு மேலயும் அந்தாளுக்கு இருக்குற காண்டு இணையத் தெருக்களிலெல்லாம் சிரிப்பா சிரிப்பது தெரியாதா? என்னிக்கு எவனை மட்டம் தட்டலாம்னு டைம்டேபிள் போட்டு எழுதிட்டிருக்குற இன்ஸ்டிட்டியூசியனலைசுடு சைக்கோ கேசு அது.

      இப்ப விக்குற 500 பொஸ்தகத்துக்கே இத்தனை காண்டுன்னா ஒரு நூறு இருநூறு கூடிப்போச்சுன்னா என்ன ஆவாருன்னு நினைச்சுப்பாருங்க 🙂

      எப்படியோ, இந்தாளுக்கு வயிறு எரியிராப்புல ஒன்னு நடந்தா பலநூறு பேருக்கு வயிறு குளிர்ந்திருக்கும்னு அர்த்தம், அந்த வகையில சுனா மானா கெட்ட சுயமோகனையும், கடமையுணர்ச்சி தவறாமல் லிக்கு போட்ட என் அன்பிற்கினிய சீனுவாகிய உங்களுக்கும், நன்றியோ நன்றி.

      இன்னிக்கு நைட்டு உன் புண்ணியத்துல சந்தோசமா தூங்குவேன்யா

      • yaaruyya indha aalu (avadhaani) kastam.. poi thanni kudipppa… ithana verupunarchiya vechutttukuttu andha aalu epdi vaazhararoo…vinavu boss, inime andha aalu comment kodukkum podhu jillunu edhavadhu saptituttu comment adikkum [padi arivuruthavum
        jai shri nithyanadaya namaha!!

    • சீனு, உங்களுக்கு ‘கூரிய அறிவு, நுட்பமான திறன், ஆழமான இலக்கிய அறிதல்’ இல்லையென்பது இதிலிருந்து தெரிகிறது.ஜெயமோகன் இங்கே குறிப்பிட்டிருப்பதில் ஒரு மறை பொருள் சிறை வைக்கப்பட்டிருக்கிறது. ஜெயமோகன் தனது தளத்தில் இடையில் கொஞ்ச காலம் பின்னூட்ட பெட்டியை திற்ந்திருந்தார். பின்னர் மூடி விட்டார். ஆதீன அந்தஸ்தை இழிவு படுத்தும் வண்ணம் வரும் மறுமொழிகளை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இது அவரது நுட்பமான ஜனநாயக உணர்வு சார்ந்தது. இதை வினவு மட்டும் குறிப்பாக பிடித்து வெளியே கொண்டு வந்திருந்தது. மேலும் வினவில் மட்டும்தான் முழு ஜனநாயகத்துடன் பின்னூட்டங்கள் வருகின்றன. வினவை திட்டி வரும் பின்னூட்டங்களும் ஜாலியாக அனுமதிக்கப்படுகின்றன. ஆதினத்தின் ஜனநாயகத்தை இதனுடன் ஒப்பிட்டு பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆக தனது ஜனநாயக மறுப்பை எப்படி நியாயப்படுத்தலாம் என்று ஜெயமோகன் நிறைய யோசித்திருப்பார் போலும். ஏற்கனவே எங்களை வசவு தளம் என்று சொன்னவருக்கு, மறுமொழிகளும் வசை என்று சொல்வதற்கு பெரிய ஆராய்ச்சி தேவையில்லையே!

      அடுத்து ஜெயமோகன் எவ்வளவுதான் இப்படி திரித்தாலும் உங்களைப் போன்ற ஜெயமோகனது தீவிர பக்தர்கள் வினவை படிக்காமல் இருக்க முடியவில்லையே? அது ஏன்? ஆக வெளியே என்னதான் சீன் போட்டாலும் உள்ளுக்குள்ளே வினவின் வீரியம் உங்களுக்கு தெரியாமலே வேலை செய்கிறது. அதே நேரம் அறிவு அப்படி சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது உணர்ச்சி வினவை எப்படி ஏற்கலாம் என்று அலைபாய்கிறது. இந்த அலைபாய்ச்சலுக்கு கொஞ்ச நேரம் போதையூட்டும் ஜெயமோகன்கள் அதை எப்போதும் செய்து கொண்டிருக்க முடியாது.

      ஆனாலும் இதை உங்கள் அறிவு ஏற்றாலும், ஆசை ஏற்காது. ஆனாலும் ஆசையால் ஊருக்கு போய்ச்சேர முடியாது. இறுதியில்………

    • உங்களைப் போன்று அர்த்தமற்ற முறையில் உளறி வைப்பவர்களையும், கம்யூனிச தலைவர்களைப் பற்றிய பொய்களையும் பொய்யான புள்ளி விவரங்களால் முதலாளிகளை பற்றி நல்ல முறையிலும் எழுதி வரும் அதியமான் போன்றவர்களையும் ஜனநாயக உணர்வோடு வினவு அனுமதித்துக்கொண்டிருக்கும் போது ஜனநாயகத்தின் வாசனையையே அறிந்திராத பின்னூட்ட பெட்டியை மூடி வைத்திருக்கும் எழுத்தாளருக்கு வினவில் ஜனநாயகப்பூர்வமாக நடைபெறும் விவாதத்தால் தனது ஜனநாயகமற்றதன்மை அம்பலமாகும் போது உடம்பெல்லாம் எரியத்தானே செய்யும் ? இங்கு நடக்கும் விவாதத்தை கண்டு முகத்தை சுழிக்கும் ஜெயமோகனைப் போல மற்றவர்களின் முகத்தை பஞ்சராக்கியவர்கள் யாராவது உண்டா ? அவரை விட சக எழுத்தாளர்களை மட்டமாகவும், கேவலமாகவும் எழுதியவர்கள் யாராவது உண்டா ?

      ஒட்டுமொத்தமாகவே இந்த உலகம் (இந்த பிரச்சினைகள் விவாதங்கள்) தனக்கு அப்பாற்பட்டது என்கிறார் அப்படியென்றால் திருவணந்தபுரத்திலிருந்து எதற்காக இவ்வளவு மெனக்கெட்டு எழுத வேண்டும் ? காரணம் இங்கு நடைபெறும் விவாதத்தை அவரால் துளியும் சகித்துக்கொள்ள முடியவில்லை, எனவே தான் பொங்கி எழுந்திருக்கிறார். லீனா செய்த கைக்கூலித்தனத்தை பற்றி தான் விவாதம். அது சரியா தப்பா என்று எந்த கருத்தையும் சொல்லாத ஜெமோ அந்த செயலை வினவு அம்பலப்படுத்தியதையும் அதற்கு லீனா சப்பைக்கட்டு கட்டியதையும் குறிப்பிட்டு அந்த கட்டுரைகளும் அதற்களித்துள்ள பதிலும் எனக்கு எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை என்கிறார். ஆர்வத்தை உருவாக்க இது என்ன நாவலா ? கார்ப்பரேட் கம்பெனிக்கு புரோக்கர் வேலை செய்ததை பற்றி கேட்டால் அதில் தனக்கொன்றும் ஆர்வம் இல்லை என்கிறார் என்றால் இவர் டாடாவை ஆதரிக்கிறார் என்று அர்த்தம். அதைவெளிப்படையாக சொல்லாமல் விவாதத்தரத்தை சாடுவதன் மூலம் தனது அதிருப்தியை கொட்டியுள்ளார். எனவே புரோக்கர் லீனாவை போல இந்த எழுத்தாளனும் நாளைக்கு டாடாவுக்காக ஒரு நாவலை எழுதலாம்.

      இப்படி தனது ஜனநாயகமின்மையும் கார்ப்பரேட்டுக்கெதிரான விவாதமும் தான் ஜெமோவை வெறி கொள்ளவைத்திருக்கிறது.

  23. //ஆங்கிலத்தில் வார்த்தைகளைப் போட்டு அறிவார்ந்தவர் என்கிற பெயரெடுக்கத் துடிப்பவர் என்று சொல்கிறீர்கள். மலிவான விளம்பர மோகம் கொண்டவர் என்று முத்திரை குத்துகிறீர்கள். ஒரு சாதாரண வார்த்தை – யுப்பியோ யப்பியோ டப்பியோ – என்னவாக இருந்தால் என்ன? அ.மார்க்சின் போலித்தனமான அறிவுஜீவித்தனத்தை இடித்துறைக்க அவர் பயன்படுத்தியிருக்கிறார்?//

    அதென்னய்யா உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம்
    இங்கீலீஸ் தெரியலைன்னா வந்து வரிசைல நிக்கனும் சும்மா ரீல் விடப்படாது
    எனக்கும் இங்கீலீஸ் தெரியாது அம்பேத்துக்கும் தெரியாது ஜாலி ஜாலி

  24. @yuvakrishna எழுதிய பதிவில் (http://www.luckylookonline.com/2012/06/blog-post_16.html) நான் போட்ட கமென்ட். Pls RT

    திமுக தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின், திமுகவின் பொருளாளர் பதவி மட்டுமின்றி ஒரு விளம்பரப் பட இயக்குனராகவும் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தனது ஓராண்டு சாதனைகள் என்று விளம்பரப் படம் எடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறது. அதற்காக ஓகில்வி & மாதர் (ஓ & எம்) நிறுவனத்தை அணுகுகின்றது. அவர்களும் அதனை இயக்கும் வாய்ப்பை ஸ்டாலினைக் கூப்பிட்டு கொடுக்கின்றார்கள்.

    அந்த நிறுவனம் அளிக்கும் வாய்ப்பை ஸ்டாலினால் மறுக்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம். அப்படி மறுத்தால் ‘திமுகவில் ஜனநாயகம்’ மாதிரி ஆர்ட் படங்கள் எடுத்து காலத்தை ஓட்ட வேண்டியதுதான். நல்லதோ, கெட்டதோ உலகமயமாக்கல் சூழலில் ஸ்டாலின் போன்றோர் வாய்ப்புகளை தவறவிட விரும்புவதில்லை. இதற்காக ஸ்டாலின் அயோக்கியர் என்று பொருளல்ல. வாய்ப்புகளுக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் ஏங்கும் அல்பஜீவிதான்.

    தாம் பிரச்சாரம் செய்யும் விஷயத்திற்கும், தனது கட்சிக்கும் எதிராக இருக்கும் ஒரு கட்சியின் பொய்களை பட்டியலிட்டு விளம்பரப் படம் எடுப்பது என்பது ஒரு ‘சாதாரண லவுகீக செயல்” என்பதை புரிந்துகொள்ளாதவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கக்கூடும்?

    இதுபோன்றுதான் நாம் விஷயங்களை புரிந்துகொள்ளவேண்டும் என்று லக்கிலுக் விரும்புகின்றார். ஏனெனில் அவர் உடன்பருப்பு மட்டுமல்ல, தனக்குத் தெரிந்தவர்கள் என்றால் மட்டும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்னும் அறத்தின் அடிப்படையில் செயல்படுபவர். மேலும் பேசப்படும் விஷயத்தை விடவும் குற்றம் சுமத்தும் நபரை பற்றி பேசுவதே தனது முதன்மையான பணியாக கருதி செயல்படுபவர்

    • மேற்கண்ட அதே பதிவில் போட்ட பின்னூட்டம்

      நமது நாட்டின் பொதுச் சொத்துக்களையும், கனிம வளங்களையும், இயற்கைச் செல்வங்களையும் தட்டிக்கேட்பதற்கு ஆளின்றி கொள்ளையடித்துச் செல்லும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக போராடி வரும் பழங்குடி மக்களை நயவஞ்சகமான முறையில் ஏமாற்றி டாடாவுக்கு மாமா வேலை செய்து நத்திப்பிழைக்கும் லீனாவின் கைக்கூலித்தனத்திற்கு தத்துவ விளக்கமளித்திருக்கும் லக்கிலுக் போன்றோர் தேர்ந்த பிழைப்புவாதிகளாகவும், காரியவாதிகளாகவும் இருப்பதில் நமக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை, இந்த சமூகத்திற்கும் கூட பிரச்சினை இல்லை என்று கருதுகிறேன்.

      ஆனால் நாலு காசுக்காக உலகமயமாக்கல் சூழலில் யாரிடமும், டாடாவிடமோ நித்தியானந்தாவிடமோ கூட நத்திப்பிழைப்பதில் தவறொன்றுமில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அறிவிக்கும் லக்கிலுக் தன்னைப் போலதான் இந்த சமூகமும் பிழைப்புவாத சமூகமாக இருக்கிறது என்று தனது கேடுகெட்ட வாழ்க்கையை நியாயப்படுத்த ஒட்டுமொத்த சமூகத்தையும் துணைக்கழைத்துக்கொள்வதுடன் மற்றவர்களையும் தன்னைப்போன்ற பிழைப்புவாதிகளாக மாற்ற முயற்சிப்பது தான் அயோக்கியத்தனம், பிரச்சினைக்குரியது.

      உலகமயமாக்கல் சூழலில் வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்று அறிவுறை கூறும் லக்கி போன்றவர்களும் அந்த அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் நல்லொழுக்க சீடர்களும் மக்களுக்கு சில விசயங்களை தெளிவுபடுத்திவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

      நமது நாட்டின் நீர் ஆதாரத்தை கொள்ளையிடும் கொலைகார கோக்கிற்கும், போபாலில் இருபத்தாயிரத்திற்கும் அதிகமானவர்களை படுகொலை செய்த யூனியன் கார்பைடுக்கும் அதே போல பாசிச மோடிக்கும் ராஜபக்சேவுக்கும் கூட கொள்கை கோட்பாடு லொட்டு லொசுக்கை எல்லாம் பார்க்க முடியாத உலகமய சூழலில் விளம்பரப் படம் எடுத்துத் தருவீர்களா என்பதையும் தெளிவுபடுத்திவிட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      லக்கி எழுதியுள்ள இந்த பதிவை யாரும் லீனாவுக்கு ஆதரவாக எழுதப்பட்டது என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். புரோக்கர் லீனா மாட்டிக்கொண்ட தருணத்தை பயன்படுத்திக்கொண்டு லக்கி தனது பிழைப்புவாதத்தை கடைவிரித்து நியாயப்படுத்துவதற்காகவே இதை எழுதியுள்ளார்.

      தான் பிழைப்புவாதியாக இருப்பதாலும், இருக்க விரும்புவதாலும் ஒட்டு மொத்த சமூகத்தையும் பிழைப்புவாதச் சமூகம் என்று கூறி தனது காரியவாத வாழ்க்கைக்கு நியாயம் கற்பித்துக்கொள்ளும் முயற்சியே இது.

      நீங்கள் லீனாவை விட சிறந்த பிழைப்புவாதியாக இருந்துகொள்ளுங்கள் லக்கி ஆனால் மற்றவர்களையும் உங்களைப்போன்ற பிழைப்புவாதிகளாக வாழ வேண்டும் என்று வலியுறுத்தாதீர்கள்.

      எழுத்தாளராகிவிட்ட உங்களைப் போன்றவர்கள் மக்களிடம் உள்ள தவறுகளை விமர்சித்து சரியானதை சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக பிழைப்புவாதத்திற்கு ஒரு புதிய நியாயத்தையும், தத்துவ அடிப்படையையும் உருவாக்கி மக்களை மேலும் மேலும் பிழைப்புவாதச் சகதிக்குள் மூழ்கடிப்பது சரியா ?

      உங்களைப் போன்ற ’எழுத்தாளர்கள்’ மக்களுக்கு எவ்வளவு தவறான பாதைகளை காட்டினாலும், ஊழல்படுத்தினாலும், நாங்கள் அவர்களை சரியான பாதைக்கு அழைத்து வருவோம்.

      உழைக்கும் மக்கள் அனைவருக்கும் ஓர் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை பெற்றுத்தர நாங்கள் போராடுகிறோம். அத்தகைய போராட்டத்தில் மக்களிடமுள்ள பிழைப்புவாதங்களையும் எதிர்கொள்ளத் தான் செய்கிறோம் ஆனால் அவற்றை நேர்மறையில் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் போது மக்கள் அதை வெட்கமற்ற முறையில் ’எழுத்தாளர்களை’ போல நியாயப்படுத்தாமல் குற்றவுணர்வுடன் தலைகுனிகிறார்கள்.

      பெரும்பாண்மை மக்கள் தவறு என்று ஒன்றை உணர்ந்துவிட்டாலே அதை ஒழித்துக்கட்டுவதற்கான வழியும் பிறந்துவிடுகிறது.

      இந்த பிழைப்புவாத பொழிப்புரையை அங்கீகரிக்காமல் சமூக பொறுப்புணர்வோடு கண்டித்த வவ்வால், அகிடி சித்தர், ஆகாயப்பறவை போன்ற தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  25. உண்மையாக உழைத்து உயர முடியாதவர்கள்,உண்மையாக வாழ உறுதிப் பிடிப்பு இல்லாதவர்கள் போலித் தனம் நாடுபவர்கள் பண வெறி பிடித்தவர்கள் மக்களை காட்டிக் கொடுத்து வாழ்வார்கள்.அவர்களிடம் அறம் எதிர் பார்க்க முடியாது. சமுதாயத்தின் புல்லுருவிகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க