டெல்லியிலுள்ள ரோஹிங்கியா ஏதிலிகள் முகாம்  கடந்த ஏப்ரல் 15, 2018 அன்று தீக்கிரையானது.  கடந்த ஆறு ஆண்டுகளில் அம்முகாமில் தீப்பிடிப்பது இது நான்காவது முறையாகும்.

மியான்மரில் ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிரான இனஅழிப்பு உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து சுமார் 40,000 ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

டெல்லியின்  கலிண்டி கன்ஞ் (Kalindi Kunj) பகுதியில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம்களின் அகதிகள் முகாம் உள்ளது. குடிசை வீடுகளைக் கொண்ட இம்முகாமில் குழந்தைகள் உட்பட சுமார் 226 ரோஹிங்கியா அகதிகள் தங்கியிருந்தனர்.

கடந்த ஞாயிரன்று அதிகாலை பிடித்த தீ இரண்டு மணி நேரத்திற்குள்ளாக மொத்த குடிசை வீடுகளையும், அவர்களது சொற்ப உடமைகளையும் எரித்து சாம்பலாக்கிவிட்டது. இதில் யாரும் காயமடையாமல் தப்பிவிட்டனர்.  ஆனால், அவர்களது ஐ.நா. அகதிகள் ஆவணங்கள், அடையாள அட்டைகள் அனைத்தும் தீக்கிரையாகிவிட்டன.

தன்னார்வத் தொண்டு நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகக் கூடாரத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. ஆனால் அவர்கள் அதிலிருந்து மீள்வது மிகக் கடினம்.

முதலில் முகாமில் எப்படி தீப்பிடித்தது என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு இந்து மதவெறியனின் ட்விட்டர் முகவரியிலிருந்து ”பயங்கரவாதிகளின்” முகாமை எரித்ததற்கு பெறுப்பேற்று பதிவு வெளியிடப்பட்டது. மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் இதுகுறித்து விசாரிக்குமாறு டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன் பின் அந்த டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டது.

தீப்பிடித்ததற்கான காரணம் குறித்தும், டிவிட்டர் பதிவைக் குறித்தும் டெல்லி காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. தாங்கள் தாக்குதல் இலக்காக இருப்பது குறித்து அம்மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

தீப்பிடித்து முற்றிலும் சாம்பலான புது டில்லி ரோஹிங்கியா ஏதிலிகள் முகாம்.

தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ள ரோஹிங்கியா மக்கள்.

தன்களது முகாம் தீப்பிடித்து எரியும் புகைப்படத்தை தனது கைபேசியில் காட்டுகிறார் ஒருவர்.

இடிபாடுகளில் தங்களது உடமைகள் ஏதாவது மிஞ்சியிருக்கிறதா என்று தேடும் சிறுமிகள்.

மொத்த முகாமிலும் அவரது உடைமைகளில் பாதி எரிந்த இந்த காகிதத்தை மட்டுமே இவரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

முகாமில் இருந்த வீடுகள் பெரும்பாலும் மரக்கட்டைகளின் மீது பாலித்தீன் மற்றும் தார்பாயினால் வேயப்பட்டிருந்தன. அதனால் தான் முழு முகாமும் சிறிது நேரத்தில் சாம்பலாகியது.

ஆலம், வயது 26 – தன்னுடைய வீடு தீக்கு இரையான பிறது புதிய இடத்தில் முகாம் அமைக்கிறார்.

முகம்மது சலீம் உல்லா, வயது 35-நால்வர் கொண்ட தனது குடுபத்திற்கு உணவளித்த முகாமில் இருந்த தனது கடையை இழந்துள்ளார்.

தற்காலிக கொட்டகை அமைக்க பொருட்களை சேகரிக்கும் ஆண்கள்.

தொய்பா பேகம், வயது 55- நெருப்பின் அதிர்ச்சி இன்னும் இவரது மனதை விட்டு நீங்கவில்லை.

ஜோஹூரா கூட்டன், வயது 65 – எரிந்து போன முகாமை மனம் தளர்ந்து பார்க்கிறார்.

தனது வாழ்க்கையை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருப்பதை முகம்மது ஆஷாக் ரகுமானால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அப்துல்லா, வயது 65 – முகாமின் வயதான மனிதர். இத்துயரமான வேளையில் தன்னால் இயன்ற உதவிகளை செய்கிறார்.

அப்துல் முத்தாலிப், வயது 57 – தனது கடைசி மகனுக்கு உணவூட்டுகிறார்.

புது கொட்டகைகைகளை அமைக்க ஆணும் பெண்ணுமாக சேர்ந்து கடினமாக உழைக்கிறார்கள்.

போதுமான கொட்டகைகள் முகாமில் இல்லை. அதானால் தமது குடும்பத்தினருக்கு தற்காலிக தங்குமிடம் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.

முகாமில் பிறந்த ரோஹிங்கியா சிறுவன், சிறு விளையாட்டு வண்டியில் கற்களை கொண்டு சென்று தங்குமிடம் அமைக்கும் தனது தந்தைக்கு  உதவுகிறான்.

முகாமின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் தமது பெற்றோருக்கு உதவுகின்றனர்.

தற்காலிக தங்குமிடத்தில் குழந்தை தூங்கவைத்துவிட்டு உணவு சமைக்கிறார் ஒரு தாய்.

தங்களது வாழ்க்கையை மீண்டும் முதலிலிருந்து துவங்க வேண்டியிருப்பதால் முகாமில் உள்ள அனைவருமே மிகுந்த வருத்தம், மனச்சோர்வுடன் இருக்கின்றனர்.

– வினவு செய்திப் பிரிவு
நன்றி : அவுட்லுக்
மேலும் : Police probe Twitter claim over fire at Rohingya camp in Delhi