அந்த ஆண்டுகளை மறக்க முடியுமா? 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பு. 2002-ம் ஆண்டில் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டதாக ஒரு பொய்யைச் சொல்லி பிரதானக் கட்சியாக வளர்ந்தது பாரதிய ஜனதா. குஜராத்திலோ வரலாற்றில் முதன்முறையாக இந்துக்கள் பழிதீர்த்தார்கள் என்று பெருமையைக் கிளப்பி இந்தி மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து இறுதியில் 2014-ல் மோடி பிரதமரானார்.
மற்ற ஓட்டுக் கட்சிகள் கூட பெயரளவுக்காவது சமூக நீதி, பொருளாதாரப் பிரச்சினைகள், இலவசங்கள் பற்றிப் பேசுகின்றன. பா.ஜ.க மட்டும்தான் பார்ப்பனிய இந்து மத வெறியை மூலதனமாக வைத்து அரசியல் கட்சியை நடத்துகின்றது. நாட்டு மக்களையும் குறிப்பிடத்தக்க அளவில் மதவெறியூட்டி அணிதிரட்டியிருக்கிறது.
பாபர் மசூதி இடிப்பு சரிதான் என்று மறைமுகமாக தீர்ப்புக் கூறியது அலகாபாத் உயர்நீதி மன்றம். இப்போது வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்திருக்கிறது. உடனே ரத யாத்திரையை ஆரம்பித்து விட்டார்கள், இந்து மதவெறி அமைப்பினர். எதிர்க்கும் தமிழகத்தை, ஏன் இங்கு மட்டும் என்று கேட்கின்றன ஊடகங்கள்!
குஜராத்தில் கொல்லப்பட்ட முசுலீம்களுக்காக களத்தில் இறங்கினார் தீஸ்தா சேதல்வாத். மோடி செய்த குற்றத்திற்கு ஆதாரத்தோடு நீதித்துறையில் படியேறிய அவரை எவ்வளவு வதை செய்ய முடியுமோ அவ்வளவு செய்தனர்.
குண்டுவெடிப்புகள் சிலவற்றை நடத்திய அசீமானந்தா, பிரக்யா சிங் போன்றவர்கள் மீதான வழக்குகள் தற்போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக மாறிவிட்டன. குற்றத்தை நிரூபிக்கப் போராடிய அரசு வழக்கறிஞர்களை மாற்றினர். சொராபுதீன் கொலை வழக்கில் அமித்ஷாவை ஆஜராகச் சொன்ன நீதிபதி லோயா, பிறகு மர்ம மரணம்! நீதிபதி சதாசிவத்திற்கோ கேரள கவர்னர் பதவி!
மோடி பிரதமரான 2014-ம் ஆண்டில் ”வளர்ச்சியை வைத்து மையப் பிரச்சாரம் என்றால் மாநில அளவில் சாதி-மதவெறிதான் தீர்மானித்தது. உ.பியில் கலவரம் செய்து புகழ் பெற்ற யோகி ஆதித்யநாத் தற்போதைய முதலமைச்சர்.
தற்போது பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி மூலம் மக்களிடம் கெட்ட பெயரை ஈட்டியிருக்கும் மோடி அரசு, மீண்டும் இந்துமதவெறியை கையில் எடுத்திருக்கிறது.
உலகமயத்தின் சுரண்டலுக்கு பார்ப்பனியமே பாதுகாப்பு என்பதாக சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. பார்ப்பனிய பாசிசம் இந்த நாட்டிற்கு எத்தகைய ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை நினைவுபடுத்துகிறது இந்தத் தொகுப்பு!
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் ! – புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- பாபர் மசூதி இடிப்பு : என் பெயரைத் துறந்த நாள் ! – எஸ்.என்.எம். அப்தி, பத்திரிகையாளர்.
- இசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதிய ஜனதாவின் அழைப்பு!
- பார்ப்பன பாசிசத்தின் செயல் தந்திரம்!
- அயோத்தி: முசுலீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க! – தலைமை பூசாரி பேட்டி
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானந்தாவின் ஆதாரம்!!
- பாகிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்!
- இந்துமதவெறியின் பிடியிலிருந்து குமரியை மீட்பது எப்போது?
- உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !
- உ.பி. கலவரத்தில் முசுலீம்கள் இல்லை – ஒரு சீக்கியப் பெண்
- ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்!
- தீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்!
- கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்
- விசுவ இந்து பரிசத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் !
பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
_____________
முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்