சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்திற்காக எடப்பாடி அரசு மக்களின் நிலத்தை கையகப்படுத்தி வருகிறது. தமது நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

பசுமை வழிச்சாலைக்கு எதிராக யார் பேசினாலும், அவர்களைக் கைது செய்து பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைக்கும் எடப்பாடி அரசு, தமது நிலத்தைக் கையகப்படுத்த முனைந்த போலீசிடம் வாக்குவாதம் செய்த மூதாட்டி உண்ணாமலை அவர்களைக் கைது செய்தது போலீசு.

தமது உழைப்பால் உருவாக்கப்பட்டதுதான் அந்த நிலம் என்றும், தமது பேரன் பேத்திகளுக்கு இருக்கும் ஒரே ஆதாரமே அந்த நிலம்தான் என்றும், அதனை எடுத்தால் தமக்கு வாழ்வதற்கான வழி வேறு ஏதுமில்லை என்றும் கூறுகிறார் மூதாட்டி உண்ணாமலை.

பாருங்கள் பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க