ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடங்கி போலீசின் அடக்குமுறை ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. தூத்துக்குடியில் அப்பாவி மக்களை சுட்டது யார் ? சுடச் சொன்னது யார் ? என்ற கேள்விக்கு இன்றுவரை அரசு தரப்பிலிருந்து பதிலில்லை.

பழியை மக்கள் அதிகாரத்தின் மீது போட்டு தனது கையிலுள்ள ரத்தக்கறையை மறைக்கப் பார்க்கின்றன போலீசும், மத்திய மாநில அரசுகளும். தமிழகத்தில் எங்கெங்கினும் போலீசின் குண்டாந்தடி ஆட்சியே நடைபெற்று வருகிறது. இது வெறுமனே தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தோடு முடிந்துவிடவில்லை.

எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டங்களையும், கோவை தண்ணீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு தாரைவார்த்ததற்கு எதிரான போராட்டங்களையும் முளையிலேயே கிள்ளி எரிந்துவிடத் துடிக்கிறது அடிமை எடப்பாடி அரசு. பொதுமக்கள் மீதும், மக்களோடு உடன்நின்று போராடும் இயக்கங்கள் மீதும் ஏவல் நாயாக பாய்ந்து குதறுகிறது போலீசு.

காஞ்சிபுரம் முதல் சேலம் வரையிலான வழித்தடத்தில் ‘8’ என்று கூறினாலே கைது செய்து சிறையிலடைக்கிறது போலீசு கும்பல். சூயஸ் குடிநீர் திட்டத்தின் ஒப்பந்த நகலைக் கேட்டதற்கு உடனடி கைது நடவடிக்கை.

சந்தேகமின்றி கூறலாம். தமிழகத்தில் போலீசின் காட்டு தர்பார்தான் நடந்து வருகிறது.

பாருங்கள், பகிருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க