திருப்பூரை அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா, வயது 28. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவர் கார்த்திகேயன் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர்களுக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் கிருத்திகா இரண்டாவது முறையாக கருவுற்றுள்ளார். தமிழகத்தில் சமீபமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்சப் போன்ற ஊடகங்களில் பரவி வரும் ’இயற்கை வாழ்வியல்’ குறித்து இத்தம்பதியினருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது.

திருப்பூர் கிருத்திகா மரணம்
கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியினர்

இந்நிலையில் கார்த்திகேயனின் நண்பர் பிரவீன், தனது மனைவிக்கு இயற்கையான முறையில் மருத்துவ உதவி இன்றி வீட்டிலேயே சுக பிரசவம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். தனது மனைவிக்கு மட்டுமின்றி தனக்குத் தெரிந்த வேறு சிலருக்கும் வீட்டிலேயே இயற்கை முறையில் சுக பிரசவம் மேற்கொள்ள தான் உதவியதாகவும் தெரிவித்துள்ளார். கிருத்திகாவுக்கும் இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் செய்து கொள்ள தான் உதவுவதாக முன்வந்துள்ளார். ஏற்கனவே ’இயற்கை’ முறைகளின் மேல் ஆர்வம் கொண்ட கார்த்திகேயனுக்கு அவரது நண்பரின் ஆலோசனைகள் ஆர்வமேற்படுத்தியுள்ளன. அதைத் தொடர்ந்து தாங்களும் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்வதாக  கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இயற்கை முறையிலான பிரசவம் குறித்து யூ-டியூப் இணையதளத்தில் ஏராளமான வீடியோக்களைப் பார்த்து தங்களைத் ‘தயார்படுத்தி’க் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் தங்களது முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது உடனடியாக கார்த்திகேயன் தனது நண்பரான பிரவீன் – லாவண்யா தம்பதியரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு கார்த்திகேயன், அவரின் தாயார் காந்திமதி மற்றும் பிரவீன் – லாவண்யா தம்பதி சேர்ந்து கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த கிருத்திகாவுக்கு நஞ்சுக் கொடி வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு நிமிடங்களில் கிருத்திகா மயக்கமடைந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கிருத்திகாவை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போனார்.

இது போன்ற கோமாளித்தனங்கள் திருப்பூருக்குப் புதிதல்ல. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருப்பூர் முத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்கிற ’இயற்கை’ ஆர்வக்கோளாறு நபர் இதே போல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். தற்செயலாக அந்தப் பிரசவத்தில் தாய்க்கும் சேய்க்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், இவ்வாறு பிரசவம் நடந்துள்ளதை அறிந்த அரசு மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சதீசின் வீட்டிற்குச் சென்று குழந்தைக்கு தடுப்பூசி போட முயற்சித்துள்ளனர். இதற்கு சதீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும், மருத்துவர்கள் அவரது குடும்பத்திற்கு எடுத்துச் சொல்லி தடுப்பூசி போட்டுச் சென்றுள்ளனர்.

இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கினர் ஹீலர் பாஸ்கரும் பாரி சாலனும். ஆங்கில மருத்துவ சதி, அமெரிக்க சதி போன்ற இத்தியாதிகளோடு இரண்டு அவுன்ஸ் இலுமினாட்டி சதியையும் போட்டுக் குலுக்கி இருவரும் வீடியோக்களை வெளியிட்டனர். நவீன அலோபதி மருத்துவமே கொடூர வில்லன் போலச் சித்தரித்த இவர்கள், குழந்தை பெற்றுக் கொள்வதும், அதை எப்படிப் பெற்றுக் கொள்வது, எப்படி வளர்ப்பது என்றெல்லாம் தீர்மானிப்பதும் தனிமனித சுதந்திரம் என வியாக்கியானம் செய்திருந்தனர்.

தற்போது அந்த ‘தனிமனித சுதந்திரம்’ கிருத்திகா என்கிற பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது. அறிவியலுக்கு முரணான வழியில் மக்களுக்கு வழிகாட்டியதற்கும் அதன் மூலம் ஒரு உயிரைப் பறித்ததற்கும் இவ்விரு முட்டாள்களின் மேலும் வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும். ஒரு புது விதமான ’டிரெண்ட்’ தற்போது பரவி வருகிறது. சாதி அடிப்படையிலான தமிழ் தேசியம், கொஞ்சம் நம்மாழ்வார் மற்றும் இயற்கை வேளாண்மை, சிறுதானிய உணவு, பழந்தமிழர் பண்பாட்டு பகுமானங்கள், அறைகுறையான சூழலியல் புரிதல், குலப்பட்டம் மற்றும் குலதெய்வம், பழைய நிலபிரபுத்துவ குடும்ப உறவுகளைப் புனிதப்படுத்தல் (தாய்மாமன் சடங்கு இத்தியாதி), பசுமை விகடன்.. என்கிற இந்த களேபரமான கூட்டணியோடு இலுமினாட்டி சதி மற்றும் ஆங்கில மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கையும் கை மருத்துவத்தின் மீதான காதலும் சேர்த்து மொத்தமாக டப்பாவில் போட்டு குலுக்கி யூ-டியூப் வீடியோக்களாக இறக்குகின்றனர்.

இந்த மோஸ்தரில் ஹீலர் பாஸ்கர் முதலில் ’பிரபலமானார்’; அடுத்து பாரி சாலன். நவீன மருத்துவம் கார்ப்பரேட்மயமாகவும் ஏகபோகமாகவும் மாறி வருவது; இதன் விளைவாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அது எட்டாக்கனி ஆகி வருவது ஒருபுறமும், நவீன சமூகத்தில் உருவாகும் புதுப்புது வியாதிகள் இன்னொரு புறமும் மக்களை அச்சுறுத்துகின்றன. இது உண்மையின் ஒரு பகுதி – இதே உண்மையின் இன்னொரு பகுதி நவீன மருத்துவமே விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்பதாகும். ஆனால், இலுமினாட்டி பிரச்சாரகர்கள் உண்மையின் முதற்பகுதியை மட்டும் கத்தரித்து எடுத்துக் கொண்டு அதனோடு சதிக் கோட்பாடுகளைக் கலந்து கடை விரிக்கும் போது படித்த இளைஞர்களே கூட அதற்கு பலியாகிப் போகின்றனர்.

இந்த சிக்கலுக்குத் தீர்வு அரசின் சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையாகவும், அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு நவீன மருத்துவத்திலேயே இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யப் போராடுவது என்பதாகவும்தான் இருக்க வேண்டும். மாறாக, மக்களை விஞ்ஞானமல்லாத மருத்துவ முறைகளுக்குள் நெட்டித் தள்ளி சாகடிப்பது தீர்வல்ல. பாரி – ஹீலர் வகையறாக்கள் இதில் இரண்டாவதைச் செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் மருத்துவத்துறை கார்ப்பரேட்மயமாவதற்கு எதிராக மக்கள் போராடுவதைத் தடுத்து மடைமாற்றி அவ்வாறு கார்ப்பரேட்மயமாகும் போக்கை நிலைநிறுத்த துணை போகின்றனர். இப்படி மக்களை சுடுகாட்டுக்கு அனுப்பும் பாதைக்கு ‘தற்சார்பு’ பொருளாதார முறை என்கிற அலட்டலான பெயரையும் சூட்டியுள்ளனர்.

அறிவியலற்ற விஞ்ஞானமல்லாத ஹீலர் – பாரி வகை பித்தலாட்டங்களை யூ-டியூபில் ரசிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது. ஆனால் அவர்கள் சொல்லும் வாழ்வியல் நடைமுறையில் இறங்குவதற்கு ஒரு விதமான முரட்டு முட்டாள்தனம் தேவை. அவ்வாறானவர்கள் கொங்கு பகுதியில் கணிசமாக இருக்கிறார்கள் என்பதையே கிருத்திகாவின் மரணம் உணர்த்தியுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் பாரி சாலனும் ஹீலர் பாஸ்கருமே கூட கோவையைச் சேர்ந்தவர்கள் தாம். கோவையைச் சுற்றி அனேகமாக இந்தியாவில் உள்ள அனைத்து கார்ப்பரேட் சாமியார்களுக்கும் கிளைகள் உண்டு. ஜக்கி, அமிர்தானந்தமயி, மனவளக் கலை வேதாத்ரி போன்றோரின் தலைமையகமே கோவைதான்.

திருப்பூர் கிருத்திகா மரணம்
பித்தலாட்ட ஹீலரும், பாரிசாலனும்

மூட நம்பிக்கைகளுக்கு கொங்கு பகுதியில் ஒரு கொழுத்த சந்தை உண்டு. அது அ.தி.மு.க / பா.ஜ.க ஆதரவு மனநிலையாகட்டும், ஈமு கோழி வகை ரெண்டாம் நம்பர் பிசினஸ் ஆகட்டும், கார்ப்பரேட் சாமியார்கள் ஆகட்டும், இயற்கை வாழ்வியல் ஆர்வக்கோளாறுகள் ஆகட்டும், அனைத்தையும் பரிசோதித்துப் பார்க்க தயாராக இருக்கும் மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினர் கோவையில் அதிகம். மிகப் பிற்போக்கான  நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் திடீர் பணக்காரர்கள் நிறைந்த பகுதி என்பதால் ஹீலர் வகையறாக்கள் கடை விரிக்க ஏதுவாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களின் மூலம் இவ்வாறான அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகளையும், சதிக் கோட்பாடுகளையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எடுக்காது. ஏனெனில், மக்கள் அறியாமை இருளில் மூழ்கிக் கிடப்பது ஆளும் வர்க்கத்துக்கு ஆதாயமானதுதானே. கிருத்திகாவைப் போன்ற ஓரிரு உயிர்கள் அதற்காக கொடுக்கத்தக்க விலை என்பதே ஆளும் வர்க்கத்தின் கணக்காக இருக்க முடியும். எனவே ஹீலர் வகையறாக்களை ஒரு கட்டம் வரை வளர அனுமதிப்பார்கள்; தங்களாலேயே தாங்க முடியாத நியூசென்ஸ் கேசாக மாறும்வரை விட்டு வைத்து விட்டு, தங்கள் மார்பிலேயே பாயும்போது நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்தியாவிலேயே குழந்தை இறப்பு தடுப்பு விகிதத்தில் கேரளத்திற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் தமிழகம் இருப்பதும், இங்கு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினை நாட்டிலேயே குறைவாக இருப்பதும் நவீன மருத்துவத்தால்தான் சாத்தியாமானதே தவிர பாட்டி வைத்தியத்தால் அல்ல. மக்கள் இதை உணர்ந்து கொண்டு அறிவியலுக்குப் புறம்பான வைத்திய முறைகளையும், அதை முன்வைக்கும் அறிவுக்குப் பொருந்தாத இலுமினாட்டி சதிக் கோட்பாடுகளையும் புறம் தள்ளுவதோடு நவீன மருத்துவம் எல்லோருக்கும் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு மருத்துவமனை கட்டமைப்பு மக்களுக்கானதாக நீடிக்கவும் போராட முன்வர வேண்டும்.

– சாக்கியன்

பாகம் 2: பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

50 மறுமொழிகள்

 1. சொன்னால் கோபப்படுவார்கள்! தினமும் காலையில் தொலைக்காட்சியில் தோன்றி ” அகத்திக் கீரை நல்லது! அலோ வேரா நல்லது!” என்று ஊருக்கு உபதேசம் செய்த தமிழ்ப் பிரபலம் ஒருவர் அதிக வயதாகும் முன்பே சிறுநீரகம் இரண்டும் முற்றும் செயலிழக்க, நவீன மருத்துவத்தை நாடினார்! ( அப்போது கையில் காசில்லாமல் வேறு போனது இன்னொரு கொடுமை!)

  சினிமா விரும்பி

   • சொல்கிறவர்கள் எல்லாம் அதை கடைபிடிப்பரவர்கள் இல்லை. இன்று வரை கண் பார்வையை அறுவைசிகிச்சை இல்லாமல் அலோபதி மருத்துவத்தால் சரி செய்ய முடியாது, நீரிழிவு (சர்க்கரை) நோய் குணப்படுத்த முடியாது. ஆனால் நான் எனது கண்பார்வையை அறுவைசிகிச்சை இல்லாமல் அலோபதி மருந்து எடுக்காமல் சரி செய்துஉள்ளேன், எனது பெரியப்பா மருந்து இல்லாமல் நீரிழிவு நோயை குணப்படுத்தி இருக்கிறார். அதே போல் நீரிழிவு நோய்க்கு அலோபதி மருந்து எடுத்து குணப்படுத்திய ஒருவரையாவது உங்களால் காட்ட முடியுமா? நிச்சயம் முடியாது, ஏன் அவர் இப்போது உயிருடன் இருக்கமாட்டார்.

    • Vinuvin intha katturai membokkaanathu,,, neengal sonnathu sari healer baskar solvathu sila karuthukkal etrukkollaathathaaga irukkalaam,,, aaanaal marabu maruthuvathai muzhuvathumaaga purakkanikka mudiyaathu,,,, enakku therinthu en maamanaarukku neerizhivu vundu aanaal avar marunthu ethuvum eduthukolvathillai,,, iyarkai unavugalaye kadipidikkiraar,,, nalla aarokyathudan ullaar,,,
     Vinavu puratchiyodu pesum etharthathai purinthukollaathu veruppai umizhum

  • சொல்கிறவர்கள் எல்லாம் அதை கடைபிடிப்பரவர்கள் இல்லை. இன்று வரை கண் பார்வையை அறுவைசிகிச்சை இல்லாமல் அலோபதி மருத்துவத்தால் சரி செய்ய முடியாது, நீரிழிவு (சர்க்கரை) நோய் குணப்படுத்த முடியாது. ஆனால் நான் எனது கண்பார்வையை அறுவைசிகிச்சை இல்லாமல் அலோபதி மருந்து எடுக்காமல் சரி செய்துஉள்ளேன், எனது பெரியப்பா மருந்து இல்லாமல் நீரிழிவு நோயை குணப்படுத்தி இருக்கிறார். அதே போல் நீரிழிவு நோய்க்கு அலோபதி மருந்து எடுத்து குணப்படுத்திய ஒருவரையாவது உங்களால் காட்ட முடியுமா? நிச்சயம் முடியாது, ஏன் அவர் இப்போது உயிருடன் இருக்கமாட்டார்.

 2. பாரிசாலன் என்ற மென்டல் மற்றும் அவரது இலுமினாட்டி கப்சாவையும் விரிவாக பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

 3. அந்த கால பாட்டி வைத்தியம் இன்று எடுபடாது விரிவான விளக்கம் தேவை

 4. இயற்கை முறையில் பிரசவம் என்பது ஆபத்து தான். அதற்காக இயற்கை முறை வைத்திதியத்தை குறை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

  • Sariyaaga sollamudiyaathu,, alopathi maruthuvathil hypothyroidirku vaazhnaal muzhuvathum marunthu eduthhukkondaagavendum endru aangila maruthuvargal kooruvaargal,,,, homeopathy il muzhuvathumaaga kunapadutha mudiyum naan homeopathyil treatment eduthu kondirukkiren

 5. உயிரிழப்புகள் எல்லா மருத்துவ வழிமுறைகளிலும் இயல்பானதுதான். ஆங்கில மருத்துவம் அரசு அங்கீகாரத்தோடு இயங்குவதால் அதில் நிகழும் தவறுகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை. எத்தனை பேர் பிரசவத்தின்போது அரசு மருத்துவமனைகளில் இறந்து போகின்றனர்.

  இப்போது நிகழ்ந்த சம்பவம் ஆர்வக் கோளாறினால் தவறாக முயற்சி செய்யப்பட்டதால் வந்த வினை. அதைக் காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக மாற்று மருத்துவ முறைகளையே குற்றம் சுமத்துவது நேர்மையாகாது.

  • கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு, எந்த இடத்தில் இந்தக் கட்டுரை மாற்று மருத்துவத்தை மொத்தமாக புறக்கணித்திருக்கிறது என்பதை குறிப்பிட முடியுமா அனீஸ், kumar, தமிழன்?

  • Sariyaaga koorineergal,, ithu nadunilai thavariya,, pizhayaana katturai

   Idathusaari eppozhuthume marabai ethirkkave seigirathu,, vinavu athan kazhuthai nerikka paarkkirathu,,,, enakku therintha nanbar oruvar healer baskar ayya avargalin thodarbil Ulla healergalin alosanayodu,,, alopathy maruthuvargalin checkup mattum seithukondu aangila marunthugalai payanpaduthaamal antha maathirayil kidaikkum oottachathulla iyarkai unavugalaye than manaivikku koduthu,,,,, prasavam mattum hospital lil seithaar avarukku suga prasame aanathu (suga prasavam intha kaalathil aboorvam)
   Irantha pennin kanavar youtube videomattum paarthu thakka aalosanayo ,,Thunayo ethuvum indri seithathu thavaru
   Atharkkaaga ivargal solvathu muzhuvathum thavaru endru koorivida mudiyaathu,,,,, intha katturayil aangila maruthuvathil thavare illaathathupol ullathu vinavin oruthalai batchame,,,,, ivargal yen aangila maruthuvathai vittu marabu maruthuvathirku selgiraargal endru oru idathilum illai,,,,
   Mothathi inthakkatturai oru araivekkaattuthanamaanathu
   Vinavin mozhiyil solla vendumaanaal innum azhuthammaana veruppoda solla vendiyirukkum,,,,, naan veruppai thavirkkiren

 6. ஊடகங்கள் எதுவும் இந்த சம்பவத்தில் நேரடி குற்றவாளிகளான ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் பற்றி எதுவும் சொல்லவில்லை.இந்த கட்டுரை audio வடிவில் வந்தால் இன்னும் நிறைய பேர சென்றடையும்.

  • ஹீலர் பாஸ்கர் குற்றவாளி என்று எதை வைத்து கூறுகிறது

 7. எனக்குத் தெரிந்து சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உடல் எடையைக் குறைக்க யாரோ சொன்னதைக் கேட்டு அருகம் புல் சாற்றைக் குடித்த திருச்சி பெல் ஊழியர் ஒருவர் மாண்டே போனார். தொலைக்காட்சி முதல் சமூக ஊடகங்கள் வரை சமையல் கலை நிகழ்ச்சிகளும் ஆரோக்கிய ஆலோசனைகளும் எங்கும் விரவியுள்ளன. இதைப் பார்க்கின்ற மக்கள் பெரிதும் குழம்பிப் போய் கோக்கு மாக்காய் நடந்து கொள்வதும் கண்டதைத் திண்று திக்கு முக்காடி நிற்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டன. ஆங்கில மருத்துவமோ மாற்று மருத்துவமோ அதை முறையாகக் கற்றவர்கள் கையாள்வதே சாலச் சிறந்தது. அதில் பாதிப்புகள் வருவதையும் கை வைத்தியம் பார்த்து பாதிப்புகள் வருவதையும் சமன் படுத்திப் பார்ப்பது தவறானது. கிருத்திகா மரணம் கை வைத்தியத்தால் நிகழ்ந்தது. இந்த கை வைத்தியத்தைத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே இனி இது போன்ற கை வைத்திய நடவடிக்கைகளை ஓரளவேனும் குறைக்க உதவும். அறிவியல் துணை கொண்டு நிரூபிக்கப்படாத எதுவும் ஆபத்தானதே!

 8. All alternative medicine not wrong all allopathy medicines is not right.Select according to your disease.Science and Nature is like a coin both sides important.Everyone have knowledge and intellect think and act.Get the fruitful benefit from each side of the coin.

 9. All alternative medicine not wrong all allopathy medicines is not right.Select according to your disease.Science and Nature is like a coin both sides important.Everyone have knowledge and intellect think and act.Get the fruitful benefit from each side of the coin.

 10. ஹீலர் பாஸ்கரையும் பாரிசாலனையும் எதிர்த்து எழுதப்பட்ட கட்டுரை போல் தெரிகிறது, பாஸ்கர் தன உரையில் ஆபத்தான மற்றும் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனையை நாடவே சொல்லியுள்ளார், நடுநிலை தவறிய கட்டுரையாகவே நான் கருதுகிறேன், ஏற்கனவே பிரசவம் பார்த்த அனுபவம் இருந்தாலும் அதை செய்தது கூடாது, அதற்க்கு பாஸ்கரா பாரிசாலனோ காரணம் அல்ல.

  மேலும் இன்றைய அல்லோபதியில் பல மூடத்தனங்கள் உள்ளது, உதாரணமாக ரத்தத்தில் சக்கரை அளவு, ரத்த அழுத்தம்,

  சிறுநீர் சோத்தனி பெரிய முட்டாள்தனம், உடலுக்கு தேவை இல்லாத பொருள் தான் சிறுநீர், அதை என் சோதனை செய்யவேண்டும், சோதனை செய்து அதெல்லாம் உடம்பில் இருக்கிறது என்று எப்படி சொல்லமுடியும் ?

 11. கிறுக்கு சாக்கியன் அவர்களே,
  கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு?
  ஹுலர் பாஸ்கர் காணொளிகள் ஒன்றாவது முழுவதும் கண்டதுண்டா?
  அடிப்படை அறிவு கூட இல்லாத உன்போன்ற முட்டாள்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் புரியாது.
  அந்த பெண் இறந்தது நிச்சயம் ஒரு தெளிவில்லாத போக்கால்தான். அனுபவம் இல்லாமல் செய்யவேண்டாம் என்று பாஸ்கர் அவரது காணொளிகளில் தெளிவாக கூறியிருப்பார். முறையான பயிற்சியும் தேவை‌.

  ஆர்வமிகுதியில் செய்தது இவர்கள் தவறு.

  எல்லா வசதியும் இருக்க மருத்துவமனைகளில் எத்தனை எத்தனை பேர் உயிர்போகிறது.?
  அன்னைக்கெல்லாம் எங்கடா போற லூசு பயலே.

  அதென்ன டிசம்பர் 21 சதீஸ் என்றவரும் இதேபோல் முயன்று “தற்செயலாக” குழந்தை நல்லபடியாக பெற்றெடுத்தனர்-னு எழுதி இருக்க?
  அவங்க எல்லாம் புரிஞ்சி, தெரிஞ்சி பன்னிருக்காங்க.
  கையில பேனா கிடைச்சிட்டா என்ன வேணும்னாலும் எழுதலாம், அத எல்லோரும் நம்புவாங்க-னு நினைக்காத‌. உன்னைப்போன்ற ஊடக முட்டாள்களை முதலில் அழிக்கனும் ‌.

  ஹுலர் பாஸ்கர் கடைய விரிக்கிறாரா?
  அவரோட 5 நாள் வகுப்பைத்தவிர(சோறு, தங்குமிடம் & சில பொருட்களுக்காக) வேறு எதற்குமே பணமே வாங்காமதான்டா சேவை பன்றாரு ‌.

  அல்லோபதி பின்னாடி போய் நீ மட்டும் சாவு. ஏன் திருந்திகொண்டிருக்க மக்கள குழப்புற?
  கண்டிப்பா இதனால பாதிக்கப்பட்ட கார்ப்பரேட் கிட்ட வாங்கிதிங்கிறவனாதான் நீ இருப்ப!

  எவனோ அரைகுறையா தெரிஞ்சிகிட்டு, முன்னெச்சரிக்கை இல்லாம தவறு செய்ததால் ஒட்டுமொத்தமாக அனைத்துமே என் தவறு என்பதுபோல் பிதற்றுவது உன் அறியாமை சாக்கியா‌.
  மண்டைல மூளை-னு ஏதாவது இருந்தா யோசி‌.

  இயற்கையே சாலச்சிறந்தது‌.

  • திருKanagaraj Ponnappan அவர்களே முதலில் மரியாதையாக எழுத கற்றுக்கொள்ளுங்கள்.மரியாதையே இல்லாமல் மற்றவர்களை ஒருமையில் விழிப்பது அநாகரிகமான போக்கு.நாகரீககமாக எழுதுங்கள் பின் கட்டுரையை விமர்சனம் செய்யுங்கள்.

 12. இந்த இடத்தில் வேதாத்ரி மகரிஷி பெயர் தேவையற்றது எனக் கருதுகிறேன்.
  ஜக்கி வாசுதேவ் என்று எழுதும்போதே ஒப்பீட்டிற்கு மகரிஷி பெயரையும் சேர்த்து எழுதுவது அவரைப் பற்றி அறியாமல் தாழ்வு படுத்துவது போல் உணர்கிறேன்.

 13. Your doing business they are saying about our independence, we are still live like a slaves if I do any thing I want to get permission from someone, for example

  If I want to learn
  If I want to business
  If I want saving my money
  If I want to spending my money
  If I getting marrage
  If I gave birth to a child

  I want to get more procedure and permission from someone.

  In hellopathy itself more people are die kindly refer the law

  Drugs and cosmetics act _ schedule J

  You also understand which on is..
  மூட நம்பிக்கைகளுக்கு கொங்கு பகுதியில் ஒரு கொழுத்த சந்தை உண்டு

 14. திருKanagaraj Ponnappan அவர்களே முதலில் மரியாதையாக எழுத கற்றுக்கொள்ளுங்கள்.மரியாதையே இல்லாமல் மற்றவர்களை ஒருமையில் விழிப்பது அநாகரிகமான போக்கு.நாகரீககமாக எழுதுங்கள் பின் கட்டுரையை விமர்சனம் செய்யுங்கள்.

 15. அலோபதி மருத்துவ முறை யின் கார்ப்பரேட் கொள்ளை, பேராசை, ஊழல்கள், பணம்பண்ணும் பேராசை… என்பதற்கு எதிராக பிரச்சாரம் தேவை தான். இயற்கைக்கு திரும்புகிறேன் என்று மனிதன் கற்காலத்திற்கு திரும்ப கூடாது. மாற்று மருத்துவ முறைகள் பிரச்ச்சாரம் செய்யும் பொழுது கவனம், பொறுப்பும் வேண்டும். பாட்டி வைத்தியம், கை வைத்தியம், மூலிகை வைத்தியம் என்பன தவறாக யாரும் எப்படியும் பயன்படுத்தலாம் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. எடுத்து காட்டாக முடக்கத்தான் கீரையை மூட்டு வலிக்கு பயன்படுத்தும் பொழுது குழம்பில் சேர்ந்து ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் அது நோயை அதிகம் கிளறிவிடும், தொடர்ந்து இரண்டு நாட்கள் முடக்கத்தான் குழம்பு சாப்பிட வேண்டும்.
  சிறு காயம், தலை வலி, உடல் வலி போன்றவைகளுக்கு சுய வைத்தியம் பார்ப்பது போல் அதிகப்படியான சுரம், தொடர்ந்த பேதி, பிரசவம், பெருங்காயங்களுக்கு சுயவைத்தியம் பார்ப்பது முட்டாள்தனம். இவை அறிவியலோ, அனுபவமோ, மாற்று வைத்தியமோ கிடையாது.
  இயற்கை வைத்தியம், மாற்று வைத்தியம் என்ற பெயரில் முற்றிலும் அலோபதி வைத்தியமே கூடாது என்பது தவறானது. மனித குல மருத்துவ வரலாற்றில் அலோபதி முறைக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதை நாம், குறிப்பாக மாற்று மருத்துவ முறைகளின் மருத்துவர்கள், சுய பரிசோதகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!( நான் சிறு வயதிலிருந்து இருக்கும் சைனஸ்-ஒற்றை தலைவலிக்கும், தற்போதைய தூக்கமின்மைக்கு, பதட்டத்திற்கு அலோபதி முறை உள்ளீட்ட அனைத்து மாற்று மருத்துவ முறைகளை பயன்படுத்தி உள்ளேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு உண்டு…)

 16. ஆளும் வர்கத்துக்கு ஆதாயம் ஆனது தானே என்று குறிப்பிட்டு உள்ளீர்களே… அவர்கள் யார் !?

  Corporate என்ற வார்த்தை பயன்படுத்தினால் அது சரி.. secret society என்று கூறினால் அது தவறு..

  ஆளும் வர்கம் என்ற வார்த்தை பயன்படுத்தினால் அது சரி.. இலுமினாட்டி என்று கூறினால் அது தவறு..

  PAARPANARGAL என்ற வார்த்தை பயன்படுத்தினால் அது சரி.. freemasions என்று கூறினால் அது தவறு..

  அப்படிதானே !!!!

 17. வீட்டில் நடக்கும் மற்றும் நடந்த சுகப்ரசவங்கள் பெரும்பாலும் வெற்றிகரமானவை. தேர்ந்த அனுபவமுள்ள பெண்கள் சாதரணமாக இதை நடத்துவார்கள். குழந்தை வெளிவருவது சாதாரணமாக இயல்பாக நடைபெறும்.அவர்கள் தொடக்கூட மாட்டார்கள். ஆனால் நமது பெரும்பாலான இந்திய மருத்துவமனையில் இதனை மிகவும் complicate பண்ணிவிடுகிறார்கள். மாறாக சில வளர்ந்த நாடுகளில் நமது ஊர் மருத்துவச்சிகள் போலவே அதனை இயல்பாக நாடக்க அனுமதிகிரர்கள் . இது நமது மற்ற முடநம்பிகைகள் போலன்று சரியானதே. மிக சொற்பமான நமது மருத்துவர்களும் இதை பயிற்சி செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் இங்கு பணம் பறிப்பது மட்டும் இன்றி தேவையற்ற மருந்துகளாளும், அறுவைசிகிசையளும் குழந்தைகள் குறைபாடோடு பிறப்பது மட்டும் இன்றி உயர்களும் பறிபோகின்றன.

 18. மக்கள் இவ்வாறான வைத்திய முறைகளுக்குள் நுழைவதற்கு மூல காரணமே நவீன மருத்துவத்தில் உள்ள காேளாறுகள்தான் … !பிரசவத்திற்காக செல்பவர்களுக்கு இயற்யைான பிரசவம் நடக்கும் என்று தெரிந்த பின்னும் ” காசு சம்பாரிக்க ” சிசேரியனை செய்கிற அவலம் பரவலாக இருப்பதை மறுக்க முடியாது …! மற்ற வியாதிகளுக்கம் ஏன் சாதாரண காய்ச்சல் என்று தெரிந்த பின்னும் பணத்திற்காக அனைத்துவித பரிசாேதனைகளையும் எடுக்க கூறும் தனியார் மருத்துவ மனைகளும் ..அவற்றிற்கு ஏஜண்டாக செயல் புரிகிற சில பாெது மருத்துவமனை ஊழியர்களும் இருக்கும் வரை இது பாேன்ற அவலங்கள் நடந்தேறிக் காெண்டுதான் இருக்கும் ….
  அரசு மருத்துவமனையில் பணி செய்கிற பெரும்பாலான மருத்துவர்கள் தனியே சாெந்த கிளினிக் நடத்துவது பரவலாக இருப்பது ஏன் என்று கட்டுரையாளர் விளக்குவாரா ..? அதன் காரணத்தை உற்று நாேக்கினால் விடை கிடைக்கும் … பணத்தை அதிகளவில் மருத்துவத்திற்கு செலவழிக்க இயலாதவர்களின் பாேக்கிடம் தான் ஹீலர் ..மற்றும் பாட்டி … நாட்டு வைத்தியம் என்கிற முறைகள் என்பது தான் நிதர்சன உண்மை ..!. தரமான ..அனைவருக்கும ஒரே மாதிரியான பாகுபாடற்ற மருத்துவ வசதிகளை அரசு காெடுத்தால் ஏன் இந்த அவலம் ..? சாமானியர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர் கிடைக்குமா என்ன …?

 19. ஆங்கில மருத்துவம் என சொல்வது தவறு. அலோபதி மருத்துவம் என்பது தான் சரி. அலோபதி புதிய புதிய ஆராய்ச்சிகள் மூலம் நாளும் வளர்ந்து கொண்டிருக்கும் நவீன மருத்துவ முறை. அதனால் இதில் அனைத்து நோய்களுக்கும் இப்போதைக்கு தீர்வு இல்லை. ஆனால் இது தான் முறையான நவீன மருத்துவ முறை. இந்த முறையில் சிகிச்சையளிக்கும் சில எம்பிபிஎஸ் மருத்துவர்களின் தரமின்மையும் பண வேட்கையும் இம்முறை மீது மக்களுக்கு அவநம்பிக்கையும் அவமரியாதையும் கொள்ளச்செய்கிறது. தமிழகம் அறிவு வறுமைக்கும் அரைகுறை அறிவுக்கும் பேர் போன மாநிலம். அதனால் தான் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத அரசியல்வாதிகள் இங்கு ஆதிக்கம் செய்ய முடிகிறது. சமச்சீர் கல்வி போன்ற அரைகுறை கோமாளித்தனங்கள் பாராட்டப்படுகின்றன. காலையில் படிக்கப்படும் தமிழ் நாளேடுகளை பாருங்கள். கொச்சையான நடையில் அரசியல் மற்றும் சினிமா செய்திகளே மிகுதி. துறைசார் வல்லுனர்களால் செறிவான நடையில் எழுதப்படும் கட்டுரைகள் ஒன்றைக்கூட காண முடியாது. தினமணியில் வரும் கட்டுரைகள் என்பவற்றை படிக்காமலே இருந்துவிடலாம். பெரும்பாலும் பத்தாம்பசலித்தனமானவை. அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்ப முறை இருந்தது. அதனால் சண்டை சச்சரவு இல்லை. இப்போது தனி குடும்பம் இருக்கிறது அதனால் சண்டை சச்சரவு இருக்கிறது என்பது மாதிரியான பத்தாம்பசலித்தனமான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளே மிகுதி. இந்தக் கட்டுரைகளை எழுதுபவர்கள் பெரும்பாலும் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர்களாகவோ அல்லது பேராசிரியர்களாகவோ இருப்பவர்கள். இவர்கள் எழுதும் எல்லா கட்டுரைகளும் சொல்லி வைத்த மாதிரி கடைசியில் அறிவுரைகளோடு தான் முடியும். உதையை வீரையன் என்பவர் எதைப் பற்றி வேண்டுமானாலும் கட்டுரை எழுதி கருத்தும் கடைசியில் அறிவுரையும் சொல்லக்கூடியவர். படிக்காத மேதை என்னும் இரு வார்த்தைகளுக்கு இங்கு நான் மவுசு அதிகம். படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்னும் பழமொழி இங்கு தான் உண்டு. இப்படிப்பட்ட அறிவு வறுமை கொண்ட சூழ்நிலையில் பாரம்பரியம், பண்பாடு, இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்னும் பெயர்களில் மாட்டை பிடிப்பது, ஆட்டை பிடிப்பது, சுய வைத்தியம், சொந்தமாக பிரசவம் பார்த்துக் கொள்ளல், சொந்தமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளல் ஆகியன நடக்கத்தான் செய்யும்.

 20. பாரிசலானை ஏன் கைது செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. ஈ வெ ரா வை தோலுரித்ததற்கா ?

  இயற்க்கை வைத்தியம் தவறு என்றால் எந்த ‘மிருகங்களும்’ பிரசவிக்க இயலாது. மனிதர்களின் உடல் அமைப்பிற்கும், விலங்குகளின் உடல் அமைப்பிற்கும் வேறுபாடுகள் இருக்கலாம்.

  ஆனால் இயற்க்கை வைத்தியம் தவறு என்று சொல்லுதல் ஆகாது

 21. அர்த்தமற்ற கட்டுரைக்கு விவாதமே தேவையில்லை.
  வேதாத்திரி மகரிஷியின் சேவைகளை புரிந்து/தெரிந்து கொள்ள முடியாத ஒருவர், கோவை/கொங்கு மக்களை புறம் பேசுபவர், கண்டிப்பாக பெரும் முதலாளிகளின் அம்சமாகவே தெரிகிறார்

 22. கட்டுரையாளர் ஹீலர் பாஸ்கரின் மற்றும் பாரிசாலனின் காணொளிகளை முழுமையாக காணவில்லை என்பது நன்றாக புலனாகிறது.
  முதலாவதாக ஹீலர் பாஸ்கர் சொல்வது இயற்கை வைத்தியம் அல்ல. நம் பாரம்பரிய மருத்துவமும் அல்ல.
  மருந்தில்லா மருத்துவம் என்பதே ஹீலர் பாஸ்கர் சொல்வது.
  மேலும் பாரிசாலன் மருத்துவம் குறித்து அதிகம் பேசியதில்லை.
  தடுப்பூசிகளின் பின் உள்ள சர்வ தேச சதி வலைப்பின்னல் குறித்து கேள்வி
  எழுப்பப்பட்ட போதுகூட பாரிசாலன் ,இது குறித்து தனக்கு அதிகம் தெரியாது என்றும் ஹீலர் பாஸ்கர் தான் அதிகம் மருத்துவ உலகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். அவருக்கு தான் அதற்காக நன்றி சொல்வதாகவும் பதிவு செய்தார் .

  பாரிசாலன் தமிழ் தேசீய சிந்தனையையே முன்னிறுத்துகிறவர்.
  மேலும் , ஹீலர் பாஸ்கரை அவருடைய மருத்துவத்துறை விழிப்புணர்வு பணிக்காக பாராட்டிய பாரிசாலனே,
  சீமான் மற்றும் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த ஹீலர் பாஸ்கரின் நிலைப்பாட்டை கடுமையாக விமரிசனம் செய்திருந்தார்.
  இந்த வேளையில், இன்னொரு கருத்தையும் இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

  “பதிமூன்று பேரின் ரத்த உறவுகளின் வழி வந்த சுமார் ஆறாயிரம் பேர் இந்த உலகை தங்களின் மித மிஞ்சிய பண பலத்தால் ஆட்டி படைக்கின்றனர்.
  இவர்களே இல்லுமினாட்டிகள்.
  இவர்களின் கட்டளையை நிறைவேற்றுபவர்கள் பிரீ மஷனரிகள்.
  இந்த பெருவணிக கும்பலை அல்லது இல்லுமினாட்டிகளை கட்டுப்படுத்துவது பிரிட்டிஷ் மகாராணி.” இதுவே ஹீலர் பாஸ்கர் கூறவரும் கருத்தின் சுருக்கம். .

  இதில் கட்டுரையாளர் சொல்வதுபோல் நம்பமுடியாத கட்டுக்கதை எங்கே இருக்கிறது?
  ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலனின் அனைத்து கருத்துக்களுடனும் முழுமையாக நான் உடன்படவில்லை.
  நான் முரண்படும் நிலைப்பாடுகளும் அவர்கள் இருவரிடமும் உண்டு.
  “எதற்குமே போராடாதே அதற்கு பதில் உன்னை தடை செய்திருக்கும் அந்த
  செயலை நீயே செய் . (உ –ம் ஜல்லி கட்டு போராட்டம்) என்கிறார் ஹீலர் பாஸ்கர்.
  இதில் எனக்கு உடன்பாடில்லை.

  அதைப்போலவே தந்தை பெரியார் குறித்த மற்றும் பெண்விடுதலை குறித்த பாரிசாலனின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லை.

 23. அம்மன் கோவில் திருவிழாக்களில் வெறும் வேப்பிலையை மட்டும் உடையாக அணிந்துகொண்டு பெண்கள் தீச்சட்டி தூக்கி கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது பக்தியின் பெயரால் நடைபெறும் அநாகரீகத்தின் உச்சம் என்று கருதிய சிலர் அத்தகு நிலைக்கு எதிராக போராட முனைந்தனர்.
  அத்தகைய போராட்டக்காரர்களுள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் , வள்ளலாரின் சமய நெறி பற்றாளரும் ஒன்றாக கைகோர்த்து இருந்தனர்.

  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தீவிர அசைவ பிரியர் என்பது அவர் கவிதைகள் மற்றும் அவரோடு அக்காலத்தில் பழகியவர்கள் மூலம் அனைவரும் அறிந்ததே.
  மேலும் பாரதிதாசன் ஒரு கடவுள் மறுப்பாளர்.
  மேற்கண்ட இரண்டு பண்புகளுக்கும் நேரெதிரானவர் வள்ளலாரின் பற்றாளர்.
  ஆனால் அவர்கள் இருவரும் ஒரு பொது நோக்கத்தில் ஓன்று பட்ட காரணத்தாலேயே போராட்ட களத்தில் கைகோர்த்தனர்.

  வினவு தளத்திற்கும் , ம.க .இ .க விற்கும் என்னுடைய வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் மேற்கண்ட நிலைப்பாடே.

  நீங்களும் பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டலையே சாடுகிறீர்கள்.
  நீங்கள் பன்னாட்டு முதலாளிகள் என்று சொல்வதை அவர்கள் இல்லுமினாட்டிகள் என்கிறார்கள்.

  உப்பு கொண்டும் நிலக்கரி கொண்டும் பல் துலக்குவதை கிண்டல் செய்த (இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ) பற்பசை விளம்பரங்கள்
  உங்க டூத் பேஸ்ட் –ல் உப்பிருக்கா? என்று இப்போதைய விளம்பரங்களில்மக்களை மூளைச்சலவை செய்வதேன் ?
  இந்த கேள்வியைத்தானே ஹீலர் பாஸ்கர் முன்வைத்தார்?

  இதில் பித்தலாட்டம் எங்கு உள்ளது ?
  பன்னாட்டு பற்பசை நிறுவனத்திடமா ?
  ஹீலர் பாஸ்கர் இடமா?

  அனைத்து விஷயங்களிலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் வினவு ஏன்
  பாரிசாலன் மற்றும் ஹீலர் பாஸ்கரை கடுமையாக தாக்கவேண்டும் ?
  விடையளிக்குமா வினவு என்பதே என் வினா ?

  பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின்
  கூட்டு ஐக்கியம் தான் உலகில் என்று பெரியண்ணன் வேலை பார்க்கிறது என்பதை வினவு மறுக்குமா?
  சோவியத் ஒன்றியம் உடைந்த போது,
  கவிஞர் மு.மேத்தா தன் கவிதை ஒன்றில்,
  இதுவரை
  உலகை நிலை
  நிறுத்திக்கொண்டிருந்த
  தராசு தட்டின்
  எடை கல் ஓன்று நொறுங்கியதால்
  அதிகார லாபம் அடைந்தவர் யாரோ?
  அவசர லாபம் அடைந்தவர் யாரோ ?
  என்று எழுதியிருப்பார்.
  கவிஞர் மு.மேத்தாவின் கூற்று ப்படி,

  அமெரிக்கா என்ற ஒற்றை தலைமையின் அதிகார நர்த்தனம் தானே
  இன்று உலகில் நடை பெறுகிறது ?
  இதை வேறு வார்த்தைகளில் சொன்னால் பித்தலாட்டமா ?
  (பிரிட்டிஷ் மகாராணி – – – இல்லுமினாட்டிகள் – – – பிரீ மசனோரிகள்)
  (அமெரிக்கா என்ற நாடே இங்கிலாந்து இல் இருந்து குடியேறியவர்களின் தொகுதிதான் )
  மாறுபட்ட வார்த்தைகளை பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள் .

  சரியான எதிர்வாதம் செய்யுங்கள் .
  தமிழ் ஈழம் அழிக்கப்பட்ட காரணம் என்ன ?
  முரண்பட்டு நிற்கும் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தமிழ் ஈழத்தை அழிக்க மட்டும்
  ஒன்றிணைந்தது எப்படி ?

  திரைமறைவில் ஒன்றிணைத்த சக்தி எது ?

  அந்த சக்திக்கு என்ன பெயர் இட்டு அழைக்கலாம் ?
  புவிசார் அரசியல் என்றா ?
  சர்வதேச வல்லரசு சக்திகள் என்றா ?
  பன்னாட்டு நிறுவனங்களின் தரகு தலைவர்களை கொண்ட பொம்மை அரசாங்கங்கள் என்றா ?

  இன்று வெள்ளிக்கிழமை என்றால் தான் ஒப்புக்கொள்வீர்களா ?
  நேற்று வியாழக்கிழமை என்றாலோ, நாளை சனிக்கிழமை என்றாலோ
  சண்டை செய்வீர்களோ ?
  வினவிடம் இருந்து விளக்கம் எதிர்பார்க்கும்,
  – தமிழ்மைந்தன் சரவணன்

 24. ஒரு மருத்துவ முறையை ஆர்வ கோளாறினால் வல்லுநர் கண்காணிப்பு இல்லாமல் சுயமாக முயட்சி செய்து வீபரீதத்தில் முடிந்தததுக்கு இவர்களை கைது செய் என்று சொல்வது எப்படி பொருந்தும்?. இயறகை மருத்துவ முறையே தவறு என்று கட்டுரையாளர் சொல்ல வருகிறாரா?.

  இயறகை மருத்துவ முறையை பின்பற்ற ஒரு புகழ் பெற்ற கோவை மருத்துவரிடம் சென்று அவருடைய பக்குவமற்ற அணுகுமுறையால் நான் பாதிக்க பட்டேன் . அவர் கூறிய அருகம்புல் வைத்தியத்தால் இரத்த அழுத்தம் அதிகமாகி பின்னர் ஒரு அல்லோபதி டாக்டர் தான் குணப்படுத்தினார். அதனால்இயறக்கை முறையே தவறு என்றாகி விடுமா?.. .

  ஒரு கட்டத்தில் அந்த அல்லோ டாக்ட்டரும் ஒரு பணம் பிடுங்கியாய் மாறினார் . அருகில் இருந்த மெடிக்கல் கடையில் இருப்பவர்கள் கூட அவரைப்பற்றி இலைமறை காயாக எச்சரிக்கை செய்தனர். புதிய மருந்தை சோதித்து பார்ப்பார் என்று எல்லாம் கூறினார்கள்.

  இறுதியில் என்னை வாட்டி வதக்கிய மன அழுத்த நோய் ஒரு மாற்று மருத்துவத்தில் தான் முற்றிலும் குணமானது . அல்லோ முறையில் அதிகமான பக்க விளைவுகளால் அவதிப்பட நேர்ந்தது . உடனே அல்லோ முறையினை தவறு என்று கூறிவிட முடியுமா?

  ஒவ்வொரு வைத்ய முறையிலும் சாதக பாதகங்கள் இருக்கின்றன. அதனை கையாளும் வைத்தியர்களும் இயல்புகளில் வேறுபடுகின்றனர் . இல்லுமினாட்டி , அது இது என்று பேசுவது சற்றே மிகையானதாக இருக்கலாம் . ஆனால் மாற்று மருத்துவத்தை மக்களிடையே பரவுவதை தடுக்க இந்தியாவில் ஒரு லாபி கும்பலே செயல்படுகிறது என்று ஒரு உயர் போலீஸ் அதிகாரியே கூறி இருக்கிறார்.

  ஹீலர் பாஸ்கரையும் , பாரி சாதனையும் யாரும் அப்படியே நம்ப வேண்டும் என்பதில்லை . ஆய்வு செய்து வேண்டியதை எடுத்துக்கொள்வதால் தவறு ஏதும் இல்லையே?

  Siva

 25. கொங்கு பகுதியினர் திடீர் பணக்காரர்களா கட்டுரையாளரே??? கொங்கு பகுதி மக்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள்…. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் வரிகட்டி வாழவைப்பவர்கள்…. தமிழகத்தின் வரி வருவாய் எந்த மண்டலத்தை சார்ந்து உள்ளது என தீர விசாரித்து கட்டுரையில் வார்த்தைகளை கோரும்…..

  • Saravanakumar கொங்கு மக்கள் அனைவரையும் திடீர் பணக்காரர்களாகிவிட்டதாக வினவு கட்டுரையாளர் கூறவில்லை.ஆனால் தமிழகத்தில் எங்குமே இல்லாத “ஈமுகோழி வளர்ப்பு” என்று ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்ற முடிந்தது என்பது ஒரு உதாரணம்.மேலும் பெரும்பான்மை கார்ப்பரேட் சாமியார்களின் தலைமையகம் மட்டுமல்லாமல் நம்பும் ஏமாளிமக்களும் கொங்கு பகுதியில்தான் ஒப்பீட்டளவில் அதிகம் என்பதையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவும்.
   ஆனால் கொங்கு மண்டல மக்களின் மகத்தான சாதனைகளை குறிப்பாக 2001ல் கோவையில் ‘மறுகாலணிய எதிர்ப்பு’ மாநாடு மூலம் நடத்தியது வினவு சார்ந்த அமைப்புகள் தான் என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.மேலும் தஞ்சையில் பத்து வருடங்களுக்கு முன்பு ம.க.இ.க நடத்திய மாநாட்டில் கொங்கு மண்டல மன்னன் தீரன் சின்னமலையின் வீரவிடுதலை போராட்டவரலாற்றை விளக்கியது டன் அதன் இன்றைய தேவையையும் உணர்த்தினர்.அத்துடன் கோவை மாநாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கொங்கு பகுதிகளில் இரும்பை உருக்கி ஆயுதமும் கருவிகளும் செய்யப்பட்டதை விரிவாக விளக்கினர்.அதே சமயத்தில் கொங்கு மண்டல சிறுதொழில் முன்னேற்றத்தையும் இந்த உலகமயம் மறுகாலணியம் எவ்வாறு அழிக்கிறது என்பதையும் முன்னரே உணர்த்திணார்கள்.அன்றே மேற்க்கண்ட அமைப்புகள் எச்சரிக்கை செய்தனர்.இன்று சிறுகுறுந்தொழில்களை மோடி சர்க்கார் முடித்து வைத்ததை நாம் அனைவரும் அறிவோம்.

 26. சரவணன், உங்கள் வாதம் சரியானது. முடிவு தவறானதாகப்படுகிறது.

  முதலில் ஹீலர் பாஸ்கரைப் பற்றிப் பார்ப்போம். அவரது கூற்றிலிருந்து, இல்லுமினாட்டிகள் இந்த உலகைக் கட்டுப்படுத்துகிறார்கள். எந்தப் பொருளை விற்க வேண்டுமோ அதை விற்க முற்படுகிறார்கள். எந்த மருந்தை விற்க வேண்டுமோ அதற்கான வியாதியை உண்டுபண்ணி விற்கிறார்கள். ஒரு நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். அதாவது மத்தியில் மோடியாகட்டும் மாநிலத்தில் ஜெயலலிதா, எடப்பாடியாகட்டும் அனைத்தையும் அவர்களே முடிவு செய்கிறார்கள். காலையில் எழுந்ததும் எந்த பேஸ்டை வைத்து பல் துலக்க வேண்டும் என்பது தொடங்கி அனைத்திலும் இல்லுமினாட்டிகளே நுழைகிறார்கள். ஆகையால் இயற்கையோடு வாழ கற்றுக்கொள்வோம் என அறிவுறுத்துகிறார்.

  ஹீலர் பாஸ்கரின் கூட்டத்திற்கு சென்றால் மிகவும் எளிமையாக, மேடையில் சம்மனம் போட்டு உட்கார்ந்து கொண்டு நிதானமாக உரையாற்றுகிறார். ஒவ்வொரு கூட்டத்திற்கும் 500, 1000 பேர் என்று கூடுகிறார்கள். அனைவரையும் அவரது பேச்சு ஈர்க்கிறது. ஏனெனில், இந்த சமூகத்தின் (முதலாளித்துவ) அவலங்களுக்கு, ஒரு மாற்று கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள். அதாவது, காசு உள்ளவனுக்கே கல்வி, மருத்துவம் என்பதை உணருகிறார்கள். ஆதலால், இயற்கையை நோக்கித் திரும்பும் ஹீலர் பாஸ்கரின் பேச்சு ஈர்க்கிறது.

  இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்றால், தனிநபர் ஒழுக்கம் பற்றி பேசி ஆன்மீகத்தில் முடிக்கிறார். அதாவது, எதற்கும் போராடக் கூடாது. உன்னளவில் ஒழுக்கமாக இருந்துகொள். அந்நியப் பொருட்களை வாங்காதே, இல்லுமினாட்டிகள் ஒழிந்துவிடுவார்கள் என்கிறார். இதுவே ஒரு இல்லுமினாட்டி சதிபோல் (அவர்களது கூற்றில்) இருக்கிறதல்லவா?

 27. ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த இவ்விரு முட்டாள்களை கைது செய்ய வேண்டும் என்கிறீர்கள்.
  இப்படியான பிரசவம் பார்க்க அவர்கள் வலியுறுத்தினார்களா?
  அல்லது வீட்டில் பிரசவம் நிகழ்வது குற்றமா?
  50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வீட்டில்தானே நிகழ்ந்தது. அதை காட்டுமிராண்டித் தனம் என்றும், அறிவியலுக்கு புறம்பானது என்றும் எப்படி கூற முடியும்?
  நவீன மருத்துவமே விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க பட்டது என்கிறீர்கள். அக்குபங்சர் போன்ற மரபுவழி மருத்துவ முறைகளில் நோய் முற்றிலும் குணமாகிறது. ஆனால் அறிவியல் பூர்வமாக எப்படி என நிரூபிக்க முடியவில்லை. எனவே அம்மருத்துவ முறை முட்டாள்தனமானது என கருத முடியுமா?
  இயற்கையின் புதிர்கள் அத்தனையும் அறிவியல் அவிழ்த்துவிட்டதா என்ன?
  அறிவியலற்ற பித்தலாட்டங்களை நம்ப முரட்டு முட்டாள் தனம் தேவை என்கிறீர்கள்.
  பரிசோதனை எனும் பெயரில் புதுப்புது நிரந்தர நோயாளிகளை ( சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு….) உருவாக்கி அவற்றை குணப்படுத்த முடியாது, உயிர் வாழும் வரை இரசாயன மாத்திரைகள்தான் தீர்வு என்று வணிக பித்தலாட்டம் நடத்தும் அலோபதி விஞ்ஞானபூர்வமானதா?
  அறிவியலுக்கு புறம்பான சதிக் கோட்பாடுகளை அரசு தடுக்க வேண்டும் எனில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் schedule J – ஐ முறையாக செயல்படுத்தினால் போதும்.
  அலோபதி மருத்துவர்கள் அத்தனை பேரும் மரபுவழி மருத்துவத்துக்கு திரும்புவர்! அல்லது வேறு துறைக்கு செல்வர்!
  ஹீலரும், பாரியும் சொல்வதை விடுங்கள். அலோபதியின் புகழ் வாய்ந்த ஐரோப்பிய மருத்துவர்களும், இங்குள்ள பஸ்லூர் ரஹ்மான், பி.எம்.ஹெக்டே போன்றவர்களும் அந்த மருத்துவத் துறையை கழுவி ஊற்றுவதை you tube – ல் பாருங்கள்.
  சதீசின் குடும்பத்தார்க்கு அரசு இழைத்த அட்டூழியத்தை பாஸ்கர் ஊதிப் பெரிதாக்கினார் என்கிறீர்கள். அனுபவமின்மை மற்றும் ஆர்வக்கோளாறினால் நிகழ்ந்த இந்த மரணத்தை அரசை வுட நீங்கள் ஏன் ஊதிப் பெரிதாக்குகிறீர்கள். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நவீன வசதிகளோடு இருப்பினும் இத்தகைய மரணங்கள் நிகழ்வதை எப்படி எடுத்துக் கொள்வது?
  கடந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாழ 2000 குழந்தைகள் தமிழகத்தில் வீட்டில் பிறந்துள்ளன .
  இப்படியான நிகழ்வுகள் கூடாது என்பதுதான் அரசின், ஆளும் வர்க்கத்தின், அலோபதியின் விருப்பம்.அவர்களது வியாபாரம் படுத்து விடும் அல்லவா?

 28. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
  அற்றது போற்றி உணின்.
  (குறள் 942: மருந்து அதிகாரம்)

  மருந்தென வேண்டாவாம் – மருந்தென்று ஒன்றும் ஒருவருக்கு வேண்டாவாம்
  யாக்கைக்கு – உடம்புக்கு
  அருந்தியது – அவர் முன்பு உண்ட உணவு
  அற்றது போற்றி – செரித்தமையின் தன்மையை அறிந்து
  உணின் – அதற்கேற்றார்போல் அவர் உண்டால்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க