னடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் டெல்டா நகரப் பள்ளியில் கடந்த செப்டம்பர் 8, 2018 அன்று வான்கூவர் மலையாளி சமாஜம் சார்பாக ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக வான்கூவர் நகர இந்திய தூதரகத்தின் இணை அதிகாரி வெங்கடாச்சலம் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ”பன்முக இந்தியாவிற்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின்” (ஐ.ஏ.பி.ஐ – IAPI) நிறுவனர்களில் ஒருவரான குர்பிரீத் சிங் உரையாற்றுகையில், தூதரக இணை அதிகாரி வெங்கடாச்சலம் குறுக்கிட்டு அவரது பேச்சை இடையிலேயே தடுத்து நிறுத்தினார்.

கனடாவிற்கான இந்திய தூதரக ‘எடப்பாடி’ எச்.வெங்கடாசலம்.

குர்பிரீத் சிங் உள்ளிட்ட ஐ.ஏ.பி.ஐ. செயற்பாட்டாளர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தங்களது ஆதரவையும், தங்களது ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பெறப்பட்ட 1,375 டாலர் வெள்ள நிவாரண நிதியையும் அளிக்கவே இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

வான்கூவர் மலையாளி சமாஜத்தின் நிறுவனர் சாஹிப் மீரா, குர்பிரீத் சிங்கை உரையாற்ற அழைத்தார். குர்பிரீத்சிங், பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்களை ஒரே மேடையில் நடத்தி மத நல்லிணக்கத்தை செயல்படுத்தியமைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து தமது உரையைத் தொடங்கினார்.

மேலும், மத்தியில் ஆளும் காவி அரசு இந்தியாவின் மதச்சார்பின்மையை சீர்குலைத்து அதன் பன்முகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி வருவதாகவும், இந்துத்துவ சக்திகளால் பன்முக இந்தியா எனும் கருத்தாக்கமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த இடத்தில் இந்திய தூதரக அதிகாரி வெங்கடாச்சலம் இடைமறித்து, அவர் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். ஆனால் குர்பிரீத் சிங்கோ தமது மனதில் உள்ளதைத் தாம் பேசுவதாகக் கூறினார்.

கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான இந்திய விடுதலைப் போரின் வரலாற்றில் போர்க்குணம் ததும்பும் அத்தியாயத்தைக் கொண்டது கெதார் இயக்கம். அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய இந்தியர்களால் தொடங்கப்பட்டு, இந்தியாவில், குறிப்பாக பஞ்சாபில் பற்றிப் பரவிய மதச்சார்பற்ற, நாட்டு விடுதலைக்கான இயக்கம்தான் கெதார் இயக்கம்.

அதனைத் தொடர்ந்து, குர்பிரீத்சிங் பேசுவதை நிறுத்தவில்லையெனில் தாம் அங்கிருந்து வெளியேறப் போவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மிரட்டியுள்ளார் வெங்கடாச்சலம்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெங்கடாச்சலத்தை சமாதானப்படுத்தியிருக்கின்றனர். குர்பிரீத் சிங்கின் மைக் அணைக்கப்பட்டது. அதனைத் தொடந்து ஐ.ஏ.பி.ஐ. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய முடிவெடுத்தனர். வெளியே செல்லும் முன்னர், கேரள வெள்ள நிவாரண நிதியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றனர்.

ஐ.ஏ.பி.ஐ. அமைப்பு, இந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக வளர்ந்து வரும் தாக்குதல்களுக்கு மாற்றாக ஒரு சுதந்திரமான, மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட அமைப்பு. கேரள மக்களின் மாட்டுக்கறி உண்ணும் பழக்கத்தையும், சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்வது குறித்த பிரச்சினையையும் கேரள வெள்ளத்தோடு தொடர்புபடுத்துவதை இவ்வமைப்பு சமீபத்தில் கடுமையாக கண்டித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமது இந்து ராஷ்டிரக் கருத்தாக்கத்துக்கும், பாசிச நடவடிக்கைகளுக்கும் எதிரான கருத்தாக்கங்களைக் கொண்டவர்களைக் கைது செய்தல், தீவிரவாதி முத்திரை குத்துதல், பொய் வழக்குகள் போடுதல், சனாதன் சன்ஸ்தா போன்ற அமைப்புகள் மூலம் கொலை செய்தல் என கருத்துரிமையை ஒடுக்கி வருகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

இந்தியாவில் தனது ஆட்சியதிகாரம் இல்லாத மாநிலங்களில் தமிழகத்தைப் போன்ற ஒரு அடிமை அரசையோ, அப்படி வாய்ப்பில்லாத இடங்களில் ஆர்.எஸ்.எஸ். கவர்னரையோ கொண்டு கருத்துரிமையைப் பறிக்கும் தமது பாசிச நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

வெளிநாடுகளில் இப்பணியை தமது அடிமைகளாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்திய தூதரக எடப்பாடிகளைக் கொண்டு செய்து வருகிறது. காவி அரசை விமர்சிக்கும் உரிமையை கனடாவிலும் கூடத் தம்மால் பறிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது. ”வெளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கட்டிய” கதைதான், இந்தியாவிற்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பட்டம்.

– வினவு செய்திப் பிரிவு.

மேலும் படிக்க :

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க