ந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பாக அனைத்து கட்சியினருடன் இணைந்து சேத்துப்பட்டு பகுதியிலுள்ள பெரியார் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சாதி மதத்தின் பெயரால், விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பலை எதிர்த்து பார்ப்பனிய பாசிசத்திற்கெதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பாக சேத்துபட்டு பகுதியில் பேசிய தோழர் கரிகாலன், ”ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டம், பெரியாரின் சட்ட எரிப்பு போராட்டம் போன்றவற்றை சுட்டிக்காட்டி சுயமாரியாதையாக வாழ்வதற்கு சட்டமே தடையானாலும் அதை உடைப்பதுதான் பெரியாரின் போர்க்குணம். அதைப்போல பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் வாழ்வதற்கு இந்த அரசமைப்பு முறையே எதிராக இருக்கிறது அதனை மாற்றியமைப்போம்” என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து முழக்கங்கள் இடப்பட்டன.

  • விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
  • சாதிவெறி வன்முறைக்கும்
    மதவெறி வன்முறைக்கும் காரணமான
    ஆர்எஸ்எஸ் பிஜேபி பயங்கரவாதிகளை
    விரட்டியடிப்போம்
  • காவி பயங்கரவாத கும்பலை
    விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
  • சாதி அடையாளம் தூக்கியெறிவொம்
  • சமத்துவ சிந்தனையை பரவலாக்குவோம்.
  • பெரியாரை துணை கொள்வோம்
  • மதவெறியர்களை களத்தில் வெல்வோம்

போன்ற முழக்கங்கள் தோழர்களால் முழங்கப்பட்டன.

பெரியாரின் பிறந்தநாள் விழா சேத்துப்பட்டு பகுதியின் உழைக்கும் மக்களின் மத்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தோழர்கள் சோமு, வில்சன் ஆகியோர் பார்ப்பனிய பாசிசத்திற்கெதிராக மக்கள் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர். சாதி மதவெறிக்கு எதிராக முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

  • தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம் – சென்னை

– அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு

தீபாவளி தேவையா ? தந்தை பெரியார்

யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்

தமிழக இளைஞர்களின் வழிகாட்டி தந்தை பெரியார்

குழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்

5 மறுமொழிகள்

  1. திராவிடமே ஒரு மோசடி. அதில் 2018ல் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர்’ என்று போராடுவார்களாம், இதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.

    ஈ வெ ரா கொள்கைகள் எட்டாத UPலியே ‘ஒரு தலித்’ முதல் அமைச்சர் ஆகிவிட்டார். இங்கே ‘ஈ வெ ரா’ மண் என்று சொல்லிக்கொண்டே ‘தலித்துகள்’ நிலைமை என்ன ?

  2. பெரியார் பார்ப்பனியத்துக்கு எதிராக , அனைத்து சமூக மக்களும் சமத்துவமாகவும் சுயமரியாதையோடும் வாழ உழைத்தவர்.
    உ.பி.யில் மாயாவதி முதல்வராக வருவதற்கு அவரின் முன்னோடி கன்சிராம் தான் காரணம்.
    இங்கே இருப்பவர்கள் கன்சிராம் போன்றவர்களா?

  3. யாருங்க அந்த உழைக்கும் மக்கள்? ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன்.

    • உன்னைப்போல் திமிர் புடிச்ச மிடில் கிளாசையும் அதுக்கு மேல கொழுப்பெடுத்த பணக்கார கிளாசையும், எல்லாத்தியும் மேய்க்கும் யூத கூட்ட்டதையும் தாங்கும் மக்கள் மகனே. பிரமிடின் அத்திபாரம் மகனே. அத்திபாரம் கொந்தளிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க