ஸ்டெர்லைட் சதியை முறியடிக்க எழிலகம் வாரீர் | காணொளி

ஸ்டெர்லைட்டின் சதியை முறியடிக்க, ஸ்டெர்லைட் எங்கள் மண்ணிற்கு வேண்டாம் என தூத்துக்குடி மக்கள் மனு அளிக்க சென்னை வருகின்றனர். எழிலகத்தில் அவர்கள் மனு கொடுக்கும் நிகழ்வு - வினவு நேரலை இன்று காலை 11 மணியளவில்

சென்னை வாழ் தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களே! தமிழ்ச் சமூகமே!
ஸ்டெர்லைட் சதியை முறியடிக்க வாரீர் எழிலகத்துக்கு!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டி தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் உப்புக்குப் பெறாத அரசாணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் எளிமையாக ஒன்றுமில்லாததாக மாற்றி மீண்டும் ஆலையை திறக்க சதி செய்து வருகிறது.

இச்சதியின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மக்களிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் ஆதரவு மனுக்களைப் பெறுவதாகக் கூறி கடந்த 23.09.2018 அன்று தூத்துக்குடியில் முகாமிட்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு. அங்கு ஸ்டெர்லைட் ஆதரவு மனுக்களை போலியாக கூலிப்படைகளைக் கொண்டு கொடுக்க வைத்தது ஸ்டெர்லைட் நிர்வாகம்.

தற்போது சென்னையில் மீண்டும் மனு கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறது ஆய்வுக் குழு. இதற்காக சென்னைக்கு மனுகொடுக்க வழக்கறிஞர்களையும், கூலியாட்களையும் பணம் கொடுத்து ஸ்டெர்லைட் அழைத்து  வருகிறது.

இதனை முறியடிக்க தமிழ்ச் சமூகம் ஒன்று திரண்டு சென்னை எழிலகத்திலுள்ளா கலாஸ் மகாலுக்கு வந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை மூடுவதற்கு மனு கொடுக்குமாறு தூத்துக்குடி மக்கள் கோரியிருக்கின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக காலை 10 மணியளவில் சென்னை எழிலகத்தில் உள்ள கலாஸ் மகாலில் அனைவரும் ஒன்று திரளுவோம் ! நாசகார ஸ்டெர்லைட்டை தமிழ் மண்ணில் இருந்து விரட்டுவோம் !

இந்நிகழ்வின் நேரலை வினவு தளத்திலும், வினவு யூ-டியூப் சேனலிலும், வினவின் பக்கம் – முகநூல் பக்கத்திலும் ஒளிபரப்பப்படும்.

திமுகவின் சார்பில் தூத்துக்குடி ஸ்டெரலைட் ஆலையை மூட வலியுறுத்தி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் திமுகவினர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக்குழுவிடம் மனு அளித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அதன் காணொளி :

 

காணத்தவறாதீர்கள்!

வினவு களச் செய்தியாளர்

சந்தா செலுத்துங்கள்

ஊடகத்துறையில் அஞ்சாமல், தளராமல், அறிவார்ந்து வினவு செயல்பட நீங்களும் தோள் கொடுக்க வேண்டாமா? ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க