பாஜகவிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவோம் ! அருள்மொழி உரை | காணொளி

இப்படிபட்ட கொடூர மனம் படைத்த குற்றவாளிகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றி, அமைதியான நாடாக, வன்முறையற்ற சமுதாயமாக பாதுகாப்பான ஒரு இடமாக மாறுவதற்கு யார் முன்வர முடியும்?

“வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க….. ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 26, 2018 அன்று சென்னையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர். இக்கருத்தரங்கில் திராவிடர் கழகத்தின் தோழர் அருள்மொழி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசுகையில்,

“இந்தியாவ காப்பாத்தனும்னு இப்பதான் நாம் முடிவெடுத்திருக்கோம். அதுக்குள்ளவே அவங்க அவ்வளவு ஆட்டம் காட்டிடாங்க. இந்தியாவ யார்கிட்ட இருந்து காப்பாத்துறது? இதான் இங்க பிரச்சனை. அல்லது, எங்க முறையிட்டு காப்பத்துறது?

ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி… இந்த நாட்டின் ஆளும் கட்சியின் தேசிய தலைவருக்கு சம்மன் அனுப்புகிறார். தண்டனை கொடுக்கவில்லை. வழக்கு விசாரணை முடியல. சம்மன் அனுப்பினார். சம்மன் அனுப்பினா என்ன பண்ணனும்.. கோர்ட்டுக்கு வரனும்… யார் வருவாங்க.. சாதாரண குடிமக்கள் வருவாங்க. இவங்க எல்லாம் அப்படி இல்ல. அவர் வர்ல.  வராததால் அந்த நீதிபதி கொஞ்சம் கடுமையா , நான் டிரையலை நடத்தி முடிக்க போறேன். நீங்க வர்லன்னா வாரண்ட் போட்டுடுவேன். இதை சொல்லுவதற்கு ஒரு நீதிபதிக்கு அதிகாரம் இருக்கு   என்று அவர் நம்பியது சட்டம். அப்படி நம்பியதற்கு அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது இந்த நாட்டின் நிலமை.

கொலை செய்வது, குண்டு வைப்பது. எத்தனை விதமான வன்முறையில்  நடவடிக்கையில் ஈடுபட்டது யார்? சாமியார் அசீமானந்தா. சாமியார் என்றால் சாதாரண  சாமியார் இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய அமைப்பான வனவாசி கல்யாண் என்ற அமைப்பின் தலைவர். பழங்குடி மக்களை தாய் மதம் திரும்புவது என்ற பெயரில் கர்வாப்சி செய்ய ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுவதற்கான அதிகாரம் பெற்ற அசீமானந்தா.. வெளிப்படையாக வாக்குமூலம், பேட்டிகள் கொடுத்தார். பத்திரிக்கைகளில் வந்தது.

மாலேகான் முதல் ஹைதராபாத் குண்டு வெடிப்பு வரை எப்படி திட்டமிடப் பட்டது. ரயில்ல வெடிச்சதே ஒரு குண்டு. அந்த ரயில்ல வெடிச்ச குண்டை வச்சி படமே எடுத்துட்டாங்க. இந்த கூட்டத்திற்கு பயிற்சியும் கொடுத்து, வெடிகுண்டுகள் வழங்கியது புரோகித் என்ற ராணுவ அதிகாரி. இது சம்பந்தபட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி ஒருவர் கொஞ்சம் கடுமையா இருந்ததால அவருக்கு நடப்பது மரணம்.

படிக்க:
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா ?
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !

இதனுடைய இன்னொரு குண்டு வெடிப்பு நடந்த ஹைதராபாத் வழக்குல அந்த அசீமானந்தா உட்பட அத்தனை பேரையும் விடுதலை செய்த நீதிபதி, ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார்.  அந்த நீதிபதி ராஜேந்திரன் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டார். உலகில் இப்படி ஒரு வெட்கக்கேடானா ஜனநாயகமா இது? உலகத்துல எந்த நாட்டுலயாவது  நடக்குமா? ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மிக முக்கியாக குண்டு வெடிப்பு வழக்கில் இருக்கும் அத்தனை பேரையும் விடுதலை செய்கிறார் என்று சொன்னால் இதைவிட இந்த நாட்டில் ஜனநாயகப் படுகொலை நடப்பதற்கோ, பேசுவதற்கோ வேறு மிச்சம் இருக்கா?

இப்ப யார் யார் எல்லாம் ராணுவத்துல பதவியில இருப்பாங்கன்னு யோசிச்சி பாருங்க. ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்ல பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் தான் ராணுவத்தில் இருப்பார்கள். நம்ம ஊரில் ஒரு கலவரம் என்றால் ராணுவம் வரும். அப்ப என்ன நடக்கும்?

பா.ஜ.க. கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜிக்கே பாதுகாப்பு இல்லை.  ஒரு இந்து-முசுலிம் தம்பதியினருக்கு  பாஸ்போர்ட் மறுக்கப்படுகிறது. இதற்காக அந்தப் பெண் சுஸ்மாவிற்கு கடிதம் எழுதுகிறார். உடனடியாக பாஸ்போர்ட் மறுத்த அந்த அதிகாரி மாற்றப்படுகிறார். அனுமதி வழங்க உத்தரவிடுகிறார். இந்த சம்பவத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் சுஷ்மா போடுகிறார். அதை கண்டித்து ஒரு லட்சம் பேர் தகாத வார்த்தைகளில் திட்டுகிறார்கள். இதை எந்த அமைச்சர்களும் கேட்கவில்லை என்று சுஷ்மா சொல்லும் போதுதான் ராஜ்நாத் சிங் இதனை கண்டிக்கிறேன் என்று அறிக்கை விடுகிறார்.

தன் சொந்தக் கட்சியில் உள்ள ஒரு பெண்ணுக்கு இதுதான் கதி என்றால், கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டத்தில் ஆச்சரியமில்லை. இப்படிபட்ட கொடூர மனம் படைத்த குற்றவாளிகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றி, அமைதியான நாடாக, வன்முறையற்ற சமுதாயமாக பாதுகாப்பான ஒரு இடமாக மாறுவதற்கு யார் முன்வர முடியும்? இந்த உயிர்களை காக்க வேண்டும் என்று அக்கறை கொண்ட பெண்கள், ஆண்களுடைய போர்களால் அழிந்து போன பெண்கள், அந்த போர்களின் அழிவின் விளைவுகளை எல்லாம் தாங்குகின்ற பெண்கள்… அவர்கள் தான் இன்றைக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்”

தோழர் அருள்மொழியின் முழுமையான பேச்சு காணொளி:

பாருங்கள் ! பகிருங்கள் !