ந்துத்துவ ஆட்டு மந்தைக் கூட்டம் சுதந்திர தினம், குடியரசு தினத்தை கொண்டாடுகிறதோ இல்லையோ, அந்த தினத்தை வைத்து வெறுப்பரசியலை எப்படி வளர்க்கலாம் என்பதை ஒரு திட்டமாகவே வைத்திருக்கிறது.

கடந்துபோன குடியரசு தினத்தன்று கேரள முசுலீம் மாணவர்கள் இசுலாமிய கொடியேந்தியபடி, வந்தே மாதரம் பாட மறுத்து குடியரசு தினத்தை புறக்கணித்ததாக ட்விட்டர் வலைதளத்தில் படத்துடன் ஒரு பதிவு வைரலானது. இந்துத்துவ ஆட்டு மந்தை கூட்டம் இதை வைரலாக்கியது.

சபரிமலை விவகாரத்தை வைத்து இந்துத்துவ வெறியை வளர்க்க நினைத்த கும்பலின் கனவு பொய்த்துப் போன நிலையில், ‘கேரள முசுலீம்கள் இசுலாமிய கொடியை ஏந்துவதும் குடியரசு தினத்தை புறக்கணிப்பதும் வியப்பானது இல்லை’ என பேசி, பொதுவான இந்துக்களிடையே வெறுப்புணர்வை தூண்ட முயற்சிக்கிறது.

உண்மையில், கேரள முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தார்களா? அவர்கள் கையில் இருப்பது இசுலாமிய கொடியா? இந்தக் கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறது ஆல்ட்நியூஸ் இணையதளம்.

இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி 2013-ம் ஆண்டு நடத்திய கட்சி பேரணியில் எடுக்கப்பட்ட படம் அது. அந்தப் படம் அக்கட்சியின் முகநூல் பக்கத்தில் அப்போது வெளியானது. அதோடு, படத்தில் உள்ள குழந்தைகள் பிடித்திருப்பது, முசுலீம் லீக் கட்சியின் கொடியை.

போட்டோஷாப் புகழ் சங்கிகள் 2014-ம் ஆண்டு முதல், அதாவது மோடியை அரியணை ஏற்ற நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்தப் படத்தை அவ்வப்போது பகிர்ந்து, ‘இசுலாமிய கொடியை உயர்த்திப் பிடித்து, சுதந்திர தினத்தை புறக்கணித்த இசுலாமியர்கள்’ என திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

2014-ம் ஆண்டு ’சங்குநாத்’ என்ற சங்கி, முசுலீம் லீக் கட்சியின் அதே பேரணியில் எடுக்கப்பட்ட மற்றொரு படத்தை பகிர்ந்து அதிர்ச்சியளிப்பதாக புருவம் உயர்த்துகிறார். இன்னொரு சங்கி 2017-ம் ஆண்டு சுதந்திர தினத்தில் அதே படத்தை பகிர்ந்திருக்கிறது. இப்போது அதே படம் குடியரசு தினத்தன்று பகிரப்பட்டிருக்கிறது.

படிக்க:
வந்தே மாதரமும் – தேசபக்தி வெங்காயமும் !!
மத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் !

இப்படிப்பட்ட போட்டோஷாப் படங்களுடன் வெறுப்புணர்வை தூண்டுவதே ஆட்டு மந்தை காவி ட்ரோல் படையின் பிரதான வேலை. அந்த வகையில் மோடி ட்ரோல் படை உலகத்துக்கே முன்னோடி. இந்த கும்பலை தோலுரிக்கவென்றே ஆல்ட்நியூஸ் போன்ற இணையதளங்கள் செயல்படுகின்றன. தன்னை எதிர்ப்பவர்களை விடுமா, இந்த காவி கும்பல்? ஆல்ட்நியூஸ் இணையதளத்தின் ஆசிரியரை கொல்வோம் என மிரட்டல் விடுத்திருக்கிறது ட்ரோல் கும்பல்.

எதிர்த்தால் வழக்கு; உண்மையைச் சொன்னால் கொலை… இதுதான் காவி ஆட்சி!


அனிதா
நன்றி: ஆல்ட்நியூஸ்


இதையும் பாருங்க…

தேசிய கீதம் போட்டாச்சு எழுந்து நில்லுடா ! – ம.க.இ.க.  பாடல் !